டாடி, எனக்கு ஒரு டவுட்டு! 1

மாரியாத்தா சீசன் வந்துருச்சு போல, வீட்ல பேசிகிட்டு இருந்தாங்க.

மச்சான்: சமயபுரம் போனா சாமி பார்க்க ரெண்டுநாள் ஆகும் போல

மாமியார்: 20 ரூபா டிக்கெட்டிலுமா?

மச்சான்: தெரியாதா சித்தி, சீசன் டைம்ல அந்த டிக்கெட் 50 ரூபா பண்ணிடுறாங்க, ஆனா சாமிய பக்கத்துல பார்க்கலாம் இன்னும் கொஞ்சம்.

மாமியார்: எங்க தம்பி, ஒரு நிமிசம் முழுசா நின்னு அம்மாவை கும்பிட முடியல, தெரிஞ்ச ஆள் ஒருத்தர் இருந்தார் முன்ன, 100 ரூபா கொடுத்தா போதும், 5 நிமிசம் வரைக்கும் நின்னு நிதானமா கும்பிட்டு வருவேன்.

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாலும் பல்ல இறுக்க கடிச்சிகிட்டு வேண்டாமுடா வால்பையான்னு உட்காந்திருந்தேன், ஆனாலும் சும்மா இருக்குமா நம்ம வாலு

நான்: ஏங்கத்த, எனக்கு ஒரு சந்தேகம்

மாமியார்: சொல்லுங்க தம்பி.

நான்: மொத்தமா 1000 ரூபா கொடுத்து அம்மனை வீட்டுக்கே வர வச்சிட்டா என்ன?

மாமியார்: ஆஸ்பத்திரியில் இருந்துட்டு வந்தாலும் குசும்பு அடுங்குதா உங்களுக்கு.

*********

அடங்கொன்னியா! ஹாஸ்பிடல் போனா பக்திமானா வெளிய வரணும்னு எதாவது சட்டம் போட்ருக்காங்ய்களா புதுசா?

4 வாங்கிகட்டி கொண்டது:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா... காசு பணம் துட்டு மணி மணி...

உலகத்தில இருக்கிற எல்லா கோவிலிலும் இதுதான் நிலைமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு

அமுதா கிருஷ்ணா said...

சாமி கண்ண குத்த போகுது...

அமுதா கிருஷ்ணா said...

ஸ்கூல் பையன்..வட இந்திய கோயில்களுக்கு போன மாதம் போய் வந்தேன்.அங்கெல்லாம் இந்த ஸ்பெஷல் கியூ எதுவும் இல்லை..காசி உட்பட..

!

Blog Widget by LinkWithin