இன்று என் மகளுக்கு பிறந்தநாள்

வெட்ட ஆயத்தாயிருக்கிறது கேக்
தேவதையும் வெட்ட தயார்வெட்டியாயிற்றுஎங்க ஓனர் கார்த்திக் வாங்கி கொடுத்த பரிசுதேவதைக்கு கேக் படையல்இது தான் சாப்பிட்ட தெம்பு
(ஸ்பூன் சண்டைக்கு வருபவர்கள் வரலாம்)என் அம்மாவுடன்தலையில் தெரிகிறதா snow spray
குறைவாக அடித்ததால் கோபம் போலிருக்குஇப்போ சந்தோசத்தை பாருங்கஉங்கள் வாழ்த்துகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம்.
தேவதையிடம் சேர்க்கப்படும்

அணு மின்சாரத்துக்கு ஒரு புத்திசாலியின் ஆதரவு!!

எனது அலுவலகம் இருக்கும் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும்
டாஸ்மாக் கடையில் எனக்கு குடிக்க பிடிக்காது, அன்பு தொல்லைகளே அதற்கு காரணம். கொஞ்சம் தண்ணி, கொஞ்சம் சிப்ஸ் என்று நம் டேபிளில் இருக்கும் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள்.

ஒரு சாயங்கால வேளையில் இதமான குளிரில் கொஞ்சம் குடிக்கலாம் என்று தோன்றியது, நண்பர்களை அழைக்க என்னிடம் தொலைபேசி இல்லை. அந்த தொல்லை தொலைந்து விட்டது, வேறு வழியின்றி அந்த கடைக்கு சென்றேன், இம்மாதிரியான கடைகளில் இன்னொரு பிரச்சனை நாம் கேட்பது கிடைக்காது, அவர்கள் கொடுப்பதை நாம் வாங்கி கொள்ளவேண்டும்.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இங்கேயே செல்வோம் என்று கிடைத்ததை வாங்கி உள்ளே சென்றேன், ஆச்சரியமான காட்சியாக உள்ளே ஒருவரும் இல்லை.
சந்தோசமாக அமர்ந்தேன், பார்மேனிடம் ஆர்டர் செய்தால் மேலும் மனஉளைச்சல். பழவகைகள் கிடையாது. ஜில்லென்று தண்ணீர் பாட்டில் கிடையாது. வேறு வழியின்றி தண்ணீர் பாக்கெட்டுகள் இரண்டு ஆர்டர் செய்து உட்கார்த்தேன்.

நான் எப்போதும் மிகவும் ரசித்து, ருசித்து குடிக்கும் பழக்கம் உடையவன். மிகவும் மெதுவாக குடித்து கொண்டிருந்தேன், ஒரு பெக் அடித்து விட்டு அடுத்து என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், "தம்பி" என்று ஒரு குரல், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என்னருகில் நின்றார். கொஞ்சம் தண்ணி தற்ரிங்களா என்று பவ்யமாக கேட்டார்.

முதியவரின் தோற்றம் அவர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர் என்று அப்பட்டமாக காட்டியது, பாதி தண்ணீர் பாக்கெட்டும் காலியாக இருந்ததால் அவரிடம் கொடுத்தேன், பாட்டிலை திறந்த அவர் அதில் பாதியை ஒரு டம்ளரில் ஊற்றினார், அதில் கொஞ்சம் தண்ணீர். பாட்டிலில் இருந்த மீதி சரக்கில் கொஞ்சம் தண்ணீர், டம்ளரில் இருந்ததை மிக சாதரணமாக குடித்து கீழே வைத்தார். அதை பார்க்கும் பொது என்னையறியாமல் எனக்கு முகச்சுளிப்பு ஏற்பட்டது.

ஏன் பெரியவரே தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் குடிக்கலாமே என்றேன். என்னை தீர்க்கமாக பார்த்து கொண்டே பீடியை ஆழமாக உறிஞ்சினார். எனக்கு அப்போதே தெரிந்து விட்டது இங்கே ஒரு சொற்பொழிவு நடக்கப்போகிறது என்று.

"தம்பி உன்னையை மாறி தான் நானும் குடிச்சிக்கிட்டு இருந்தேன்.
ஆனா இந்த தண்ணியை ஊத்தி குடிக்கிறதுக்கு ராவாவே குடிச்சிரலாம்ன்னு தோனுச்சு, ஆனா குடிக்கவே முடியாதுன்னு இந்த தண்ணியை ஊத்திகிட்டேன்"

"என்னங்க கேட்டவுடனே கொடுத்ததுக்கு நக்கலா"

"அட உங்களை சொல்லல தம்பி. இந்த தண்ணியோட தரத்தை சொல்றேன்"

"ஒ, அத சொல்றிங்களா, என்னங்க பண்றது நாற்பது பைசா தண்ணீக்கு ரெண்டு ரூபா வாங்குறாங்க"

"அட காசு போனா பரவாயில்ல தம்பி, இந்த சக்கையை குடிச்சு எங்க சொரணை இருக்க போதுன்னு சொன்னேன்"

"சக்கையா"

"ஆமா, மழை தண்ணீ எவ்வளவு ருசியா இருக்கு, அது தானே ஆத்துல வருது, அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உறிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க."

"கரண்ட உறிஞ்சுராங்க்களா."

"ஆமா தம்பி உங்களுக்கு தெரியாது.
இந்த அணுகுண்டு மின்சாரம்ன்னு பேப்பர்ல போடுறாங்கல்ல அது வந்தா தான் இந்த தண்ணிக்கு விடிவு காலம் பொறக்கும்."

"அது உண்மையிலேயே அணுகுண்டு மின்சாரம் தான், அது வந்தா நமக்கு சாவு மணி தான் அடிக்கும்."

"நீங்க படிச்சு என்னத்த கண்டிங்க, டெல்லில இருக்குற பெரியவங்கல்லாம் அது தெரியாமலா அதை செய்ய சொல்றாங்க."

"ஆனா விஞ்ஞானிகளே அது வேண்டாம்னு சொல்றாங்களே."

"அவனுங்க காசு வாங்கிருப்பாங்க தம்பி."

"ஏன், அரசியல்வாதிகள் காசு வாங்கிருக்க மாட்டாங்களா, அமெரிக்காகிட்டருந்து"

"தம்பி, நீங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறிங்க, உங்க அரை பாக்கெட் தண்ணிக்கு வேணா ஒரு ரூபா கொடுத்துறேன், இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க, வரட்டுமா."என்ன கொடும சார் இது...........

கூடுதுறை மற்றும் உண்மைத்தமிழன் பதிவுகளுக்கு பதில்!

கூடுதுறையின் பதிவு

நம்புவர்கள் நம்பட்டும் நீங்கள் தள்ளியே இருங்கள் என்பது என்ன மாதிரியான பதில் என்று எனக்கு தெரியவில்லை.

//ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் உண்மைதான்...நீ எனப்பா ஏமாற்றும் ஜோதிடரிடம் போகிறாய்? நல்ல ஜோதிடர் அறிந்து அவரிடம் செல்...//

இது அதுக்கு மேலே பெரிய காமெடி. எனது பதிவில் ஜோசியக்காரர்கள் பொய் என்று சொல்லவில்லை, ஜோதிடமே பொய் என்று தான் சொல்கிறேன். தனிப்பட்ட முறையில் சுப்பையா வாத்தியார் ஒரு நல்ல மனிதராக இருப்பார். அவர் கொள்கை வேறு என்பதற்காக அவர் நல்ல மனிதர் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது .

//எந்த தொழிலாவது ஏமாற்றுக்காரர்கள் இல்லாதது என உள்ளது என்று கூறுங்கள்//

ஜோதிடத்தை ஒரு தொழிலாக நான் குறிப்பிட வில்லை, என்னுடையது மாற்றி ஆராச்சி கண்ணோட்டம், அதாவது உங்களின் நம்பிக்கையின் மேல் எனக்கேர்ப்பட்ட சந்தேகத்திற்கு நான் எதிர்ப்பார்ப்பது விளக்கவுரை, நம்ம உண்மைத்தமிழன் போல

//நீங்கள் போலி ஜோதிடரை அடையாளம் காட்டுங்கள்...அது நியாயம்... ஜோதிடமே தவறு எனச் சொல்லுவதில் என்ன நியாயம் உள்ளது...//

சந்தேகம் ஜோதிடரின் மீது அல்ல,
ஜோதிடம் என்ற கருத்தின் மீது,

அத்யாவிசய பொருள்களின் விலையேற்றத்தின் போது அனைவரும் யூகவநிகம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள், அது மட்டும் காரணமல்ல என்று யூகவநிகத்தின் மூலம் பயனடைகிறேன் என்ற முறையில் என் பக்க விளக்கத்தை அளித்திருந்தேன்

இரண்டு பாகமாக

பாகம் 1

பாகம் 2

காரணம் நம் நம்பிக்கையின் மீதோ அல்லது கொள்கையின் மீது கேள்விகள் வைக்கப்படும் போது அதை விளக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. நம்பினால் நம்பு நம்பாவிட்டால் போ என்பது சரியான பதில் அல்ல,

ஏனென்றால் நான் வைத்திருக்கும் கேள்விகள் பொதுவான அடிப்படை ஜோதிடத்தின் மீது சாதாரண மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், படி தெரியும் என்றால் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் படிக்கிறேன்.

//ஊருக்கு இரண்டு போலி மருந்துவர் பிடிபட்டால் இனி மருத்துவமே தவறு.. இனி யாரும் மருத்துவம் பார்க்கவேண்டாம் எனச் சொல்வீர்களா....//

இம்மாதிரியான உதாரணங்கள் சரியான பொருளை தராது.
பொருள் சம்பந்த பட்டவைகளில் போலிகள் கண்டுபிடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே, நீங்களே சொல்லி விட்டீர்கள் ஜோதிடம் நம்பிக்கை சார்ந்தது, அதை வாதத்தின் மூலம் தான் நிரூபிக்க வேண்டும்

//ராமர், கிருஷ்ணர்,காந்தி,யேசு, நபிகள்,புத்தர்,ஆதிசங்கரன்,ராமனுஜர் இந்த பூமியில்தான் ராவணனன்,கம்சன்,கோட்சே,துரியோதனன்,ஹிட்லர்,கோயபல்ஸ்,எனக்கெட்டவர்களும் பிறக்கிறார்கள்//

நீங்களும் நானும் கூட இங்கே தான் பிறந்தோம்.
அவன் செய்தது சரி இல்லை தவறு என்று நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது.
அனைத்து வில்லன்களின் வில்லத்தனத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.
ராவணன் ஒரு மிகசிறந்த சிவா பக்தன் என்று உங்களுக்கு தெரியும். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து வெறியன் என்று நாடே அறியும். (உங்கள் பதிவில் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்கிறீர்கள்)

//உங்களுக்கு விருப்பம் இல்லையா.. விட்டுவிடுங்கள்....மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்//

இந்த சமுதாயத்தில் அனைத்தையும் கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விஷயத்தை காரணம் இல்லாமல் நீங்களும் நம்ப மாட்டீர்கள். அந்த காரணம் என்னவென்றாவது சொல்லுங்கள், இல்லையென்றால் காரணம் தெரியவில்லை என்று சொல்லுங்கள்.

இது எங்க ஏரியா உள்ள வாராதே போன்ற பதில்கள் உங்கள் பக்க நம்பகத்தன்மையை குறைக்கும்
*****************************************************

அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவுகள் கொஞ்சம் சுயபட்ச்சாதாபத்தோடு இருக்கும், ஆனால் இந்த பதிவு அநியாத்துக்கு, அவர் வாழ்வில் அவருக்கு ஏற்ப்பட்ட அனைத்து தோல்விகளையும் கடைசியாக அவரது வலைப்பூ திறக்காததற்கும் அவரது கெட்ட நேரமே காரணம் என்று முடித்திருக்கிறார்.

அதற்கு ஒரு பின்னூட்டம் அதைவிட காமெடி அண்ணன் கூடுதுறையுடது

உலகிலேயே நான் மட்டும் தான் கஷ்டப்படுகிறேன், என் கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது. போன்ற வார்த்தைகள் மிக காமெடியானவை, நீங்க எந்த அளவுக்கு உங்களையே சுற்றி சுற்றி பார்க்கிறீர்கள் என்பதற்கு அதுவே சான்று. மேலும் உங்களின் தன்னம்பிக்கை குறைவு இதில் அப்பட்டமாக தெரிகிறது.

இந்த இடத்தில் நான் வாத்தியாரை பாராட்டுகிறேன்.
அவருடைய பதிவில் தன்னுடையது கடவுள் நம்பிக்கையை வளர்த்து தன்னம்பிக்கையை குறைக்கும் என்று சுயவிமர்சனம் செய்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

ஜாதகம் என்பது உளவியல் ரீதியாக சில பயன்களை தருகிறது.
உண்மைத்தமிழன் போன்று தன்னம்பிக்கை குறைவான மனிதர்கள் தான் கஷ்டமான நேரங்களில் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கிறார்கள், அம்மாதிரியான நேரங்களில் ஜோதிடரின் நம்பிக்கையான வார்த்தைகள் அந்த உயிரை காப்பாற்றினால் அந்த ஜோதிடரை ஒரு நல்ல உளவியல் மருத்துவராக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நல்ல கருத்தாடல்களுக்கு ஜோதிடம் பயன்படாமல் நான் லண்டனில் பட்டினி கிடந்தேன். பக்கத்து வீட்டில் பிட்சை எடுத்தேன் போன்ற எழுத்துக்கள் நான் பாவம் என்னை கவனி அதாவது attention seeking personalty என்னும் குழந்தைக்கு இருக்கும் ஒரு மனநிலையை காட்டுகிறது.

ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஜோதிடம் பயன்தராது என்றால் இத்துடன் எனது கேள்விகளை நிறுத்தி கொள்கிறேன். தயவுசெய்து யாரும் சுயபச்சாதாப பதிவுகளை இடாதீர்கள், இவ்வாறெல்லாம் கச்ட்பட்டேன் என்று ஆரம்பித்து ஆனால் இப்போது நல்லாஇருக்கேன் என்று படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதை போல் எழுதுங்கள்

இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல் பாகம் 2

இரண்டு,மூன்று நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் பெருத்த விவாதத்திற்குரிய விஷயம் ஜோதிடம், நண்பர் செந்தழல் ரவி சுப்பையா வாத்தியாரிடம் கேள்வி கேக்க, அவருடைய சூடான பதில்கள் மட்டுமல்லாமல் சிலருடைய பின்னூட்டங்களும் சூடாகவே இருந்தன.
நான் யார் பக்கம் என்று நண்பர்களுக்கு தெரியும், இதற்காக சில மணி நேரங்கள் செலவு செய்து இந்த பதிவை எழுதுகிறேன், இது யாருக்கும் கேட்க்கப்படும் கேள்விகள் அல்ல

வேறு எதற்கு
தலைப்பை பாருங்க தெரியும்

நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா, ரிசிகள் எழுதி வைத்துள்ளார்கள் சரி, எந்த எந்த கோள்கள் நம் மீது கதிரை பாய்ச்சும் சரி, தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை.

சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?


ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,
எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.
அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.

உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,
வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,
அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா.

ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.
ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா.

ஒரு ஆணின் பிரச்சனைக்கு அவனது தந்தையின் ஜாதகம்,சகோதரர்களின் ஜாதகமும் பார்க்கபடுகிறது, ஆனால் பெண்ணிற்கு என்ன செய்கிறார்கள். அவளது மாதவிடாய் தொடங்கும் நாளை ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா, இல்லை அவன் பிறக்கும் போதே பெருத்த ஆண்மையுடன் பிறக்கிறானா, ஒரு ஆணுக்கு இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.

ஒருவனுக்கே ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,
அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம்,

மேலும் ஆப்பு வைத்தல் தொடரலாம்!

இது எந்த தனி நபருக்கும் எழுதப்பட்ட பதிவல்ல
மொத்தமாக ஜோதிட நம்பிக்கையாளருக்கு எழுதப்பட்டது
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்

பல்லாங்குழி ,தாயம் மற்றும் பெண்ணிய நுண்ணரசியல்


பல்லாங்குழி என்ற விளையாட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்காக விளையாண்டு வந்த ஒரு பழமையான விளையாட்டு, இன்று பொழுதுபோக்கிற்கு நிறைய வந்து விட்டதால் அவைகள் மறந்து போய் விட்டன. நாளடைவில் மறைந்து போகவும் வாய்ப்புண்டு, இம்மாதிரி விளையாட்டுகளில் இருக்கும் பெண்ணிய நுண்ணரசியலை மாற்று கோணத்தில் ஆராயவே இந்த முயற்சி.

பல்லாங்குழி விளையாட்டை பற்றி நண்பர் இளையகவி இங்கே விவரித்திருக்கிறார்,
அதனால் நேராக ஆராய்ச்சிக்கு போவோம்.

இந்த விளையாட்டு பெண்களுக்கு வியாபார தந்திரம் ஆண்களுக்கு சமமாக இருக்கிறது என்று நிருபிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டில் உடல் உழைப்புக்கு பெரிதாக வேலையில்லை, ஆனால் மூளைக்கு உண்டு, எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்திலிருந்து முடிவு வரை, தீர்க்கமாக எடுக்கும் முடிவுகளுக்கே வெற்றி,
இந்த விளையாட்டில் அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை."சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் எந்த தொழிலும் அனுபவத்தாலேயே வெற்றியை அடைய முடியும், அனுபத்தில் மட்டுமே நாம் எடுக்கும் முடிவுகளில் முதிர்ச்சி தெரியும். இந்த விளையாட்டு மூலம் பெண்களும் தங்களாலும் ஆண்களுக்கு நிகராக எல்லா தொழில்களிலும் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள், இன்று ஆண்களை விட பெண்களே குடும்ப பொறுப்புகளை சீராக நடத்துகிறார்கள், அது ஒரு பெரிய குழுமத்தை வழி நடத்துவதை விட கடினமானது.

***********************************

தாயம் என்ற விளையாட்டு பெண்கள் மட்டும் விளையாடும் விளையாட்டல்ல என்று மகாபாரதம் என்ற சரித்திர புனைவின் மூலம் தெரிகிறது, இந்த விளையாட்டு இன்னும் கிராம புறங்களில் விளையாடப்பட்டு வருகிறது பெண்களால்.

தாயக்கட்டைகள் என்று சொல்லப்படும் நீண்ட கனசெவ்வக உலோகத்தில் நான்கு பக்கங்கள் மையப்படுத்த பட்டிருக்கும், ஒரு பக்கம் மட்டும் எந்த குறிகளும் இல்லாமல் மற்ற பக்கங்களில் முறையே ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிகள் இருக்கும், அந்த இரண்டு கட்டைகளையும் சேர்ந்து உருட்டும் பொது கிடைக்கும் எண்களை பொறுத்து அவர்களின் ஆட்டம் இருக்கும்.

அந்த கட்டைகள் நம் கையில் இருக்கும் வரை மட்டும் தான் நமது நிலைப்பாடு, இதை கீழே உருட்டியவுடன் வரும் எண்கள் நமக்கு வாழ்வின் சாத்திய பாடுகளை சொல்லி தருகிறது, பெண்கள் அதிர்ஷ்டம் என்ற சொல்லை நம்பி இருக்க வேண்டும் என்று ஆண்களால் திணிக்க பட்ட விளையாட்டாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்,
ஏனென்றால் முயற்சிகளில் வெற்றியை விட தோல்விகளே இதில் அதிகம் கிடைக்கும்,

காரணம் இந்த விளையாட்டில் தாயம்(ஒன்று),ஐந்து,ஆறு,பன்னிரெண்டு என்ற எண்களுக்கு மட்டுமே இதில் தொடர் ஆட வாய்ப்பு, இரண்டு ,மூன்று,நான்கு என்ற எண்கள் வந்தால் நம் சுற்று முடிந்து அடுத்தவர் வாசம் ஆட்டம் போய் விடும், இதில் தொடர் ஆட்ட காரணிகளே நிறைய இருப்பது போல் தோன்றினாலும் சாத்தியப்பாடுகள் முடிவுறு காரணிகளுக்கே அதிகம்,

இருப்பினும் தன்னிடம் இருக்கும் காய்களை நகர்த்தி முடிவுக்கு செல்வதில் எடுக்கும் முயற்சிகள் அவர்களுடைய தலைமை பண்புகளை மேலும் நமக்கு உணர்த்துகிறது,
உண்மையில் நாம் உணர வேண்டியது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் பெண்களும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதே.

மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்லும் பொழுது என் மனைவி அண்டை வீட்டாரும் தாயம் விளையாடி கொண்டிருந்தார், விளையாடி விட்டு வர நேரமானதால் வந்த ஆராய்ச்சி இது

!

Blog Widget by LinkWithin