டுவிட்டர் மொக்கைஸ்!

என் மேல்
உனக்கு கோபம்
என்றாலும் மகிழ்ச்சி
கோபம் இல்லைனா
இரட்டை மகிழ்ச்சி!

0*0

என்னவளுடன் பேசும் போது
நாள் முழுவதும் நொடியாச்சு
காத்திருக்கும் பொழுது
கணப்பொழுதும் யுகம் ஆச்சு
ஐன்ஸ்டீன் அனுபவசாலி தான்!

0*0

அட இன்னும் காணாமே
எனும் போது லப்டப்,
தொடர் பூகம்பமாய்
நெஞ்சுக்குள்!என்னவளுக்கு
துயில் இன்னும்
கலையவில்லையோ
எனக்கு இன்னும்
விக்கலே வரல!

0*0

எல்லா வண்ண
மலர்களும்
உன் முன்னால்
அழகில்லை,
உன் தலைப்பின்னல்
ஏறிய பின் தான் அழகு!

0*0

அழகிகள் சிறுபான்மையினர்
என் நெஞ்சில் என்னவளுக்கு
நூறு சதவிகிதம் இடஒதுக்கீடு

0*0

இசைப்பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!


****************


எனது டுவிட்டர் ஐடி

www.twitter.com/mokkaiwriter

(இவ்ளோ மொக்கைக்கு அப்புறமும் யாராவது சேருவாங்க!?)

அறிவை வளர்க்க ஒரு திருவிழா!

படிக்கும் காலத்திலேயே ஆங்கில புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தின் மீதும் எனக்கு பற்று அதிகம், புத்தகம் வாங்கியவுடம் முதலில் தமிழ் உரைநடையில் இருக்கும் உரையாடல் வடிவ பாடம், அறிவியலில் இயற்பியல் தவிர்த்து இரண்டு பாடங்களும் படித்து விடுவேன். வரலாறு, புவியியல் சொல்லவே வேண்டியதில்லை அப்படியே முன்னாடியே கொஞ்சம் படிப்பதனால் என்னால் நல்ல மதிப்பெண்கள் படிக்கும் வரை எடுக்க முடிந்தது, ஆங்கிலம் மட்டுமே கொஞ்சம் கசப்பான பாடம், அதையும் தமிழில் எழுதி வைத்து படித்தாவது தேர்ச்சி அடைந்து விடுவேன்!

இதுவல்லாது புத்தகத்தின் மீது மேலும் ஆசையை தூண்ட வைத்ததது அம்புலிமாமா, பூந்தளிர், சிறுவர்மலர்!. ஒன்பதாவதுடன் படிப்பை நிறுத்திய பிறகு வேலைக்கு போனேன், அங்கே வந்த வருமானம் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என அடுத்த கட்ட வாசகத்துக்கு மாற்றியது, ஆனந்தவிகடன், குமுதத்தில் இருந்த ஒரு பக்க கதைகள், சிறுகதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது, கிரைம்நாவலில் ஆரம்பித்து ராஜேஸ்குமார், பி.கே.பி, சுபா என பயணித்து பாலகுமாரன், சுஜாதா என நிறுத்தியது! சுஜாதா பாதித்த அளவு பாலகுமாரன் பாதிக்கவில்லை, சிறுவயதில் இருந்தே நாத்திகன் என்பது காரணமாக இருக்கலாம்!


புத்தக வடிவில் இல்லாவிட்டாலும், என்னை follow செய்யும் நண்பர்களின் ப்லாக்கை நான் follow செய்து படித்து வருகிறேன்!, வீட்டில் கிடைக்கும் நேரங்களில் பத்து பத்து பக்கமாக எதாவது ஒரு புத்தகம் வாசிக்கபட்டு தான் வருகிறது, ஆனாலும் நண்பர்களின் வாசிப்பனுபவம் முன்னால் நானெல்லாம் தூசிக்கு தான் சமம்! சக வலைப்பதிவர் லேகா, புத்த்கத்திலேயே விழித்து, புத்தகத்திலேயே உண்டு, புத்தகத்திலேயே உறங்கி புத்தகத்திலேயே வாழ்பவர். ஜ்வோய்ராம் சுந்தர், செல்வேந்திரன், வெயிலான், வடகரைவேலன், பரிசல், கும்க்கி என நான் பார்த்து ஆச்சர்யபடும் புத்தகப்புழுக்கள் நிறைய! என்னை முதன் முறை பார்க்க வந்தது போது கும்க்கி ஒரு மூட்டை நிறைய புத்தகம் கொண்டு வந்தார்! என் மூஞ்சை பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு புத்தகம் கூட தரவில்லை!

சுயசொறிதல் போதும்!, ஆனாலும் எதுக்கு இதுன்னு சொல்லனும்ல, எனக்கு கொஞ்சமேனும் அறிவு இருக்குன்னு யாராவது நம்பக்கூடும் எனில் அது அனைத்தும் புத்தகத்தின் ஆரம்பக்கட்ட உந்துதல் தான்!(நான் புத்தகத்தை மட்டுமே நம்புவதில்லை)

எங்கள் ஊரில் இந்த வருட புத்தகதிருவிழா ஆரம்பிக்க இருக்கிறது! வழக்கம் போலவே ஆர்வமுள்ள மற்றும் இனிமேல் ஆர்வம் பொங்க போகிற நண்பர்கள் மறக்காமல் வந்து பயனடைய வேண்டும் என்பது எங்கள் ஆசை!, உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் பொருளாதார செல்வங்கள் மதிப்பிழந்து போய்விடலாம், அறிவு செல்வம் என்றும் அழியாதது!, உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஈரோடு வலைப்பதிவர் நண்பர்கள்!


சிறப்பு அழைப்பாளர்கள்(பேச்சாளர்கள்) பற்றி அறிய!


கடைகள் இருக்கும் இடம் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி அறிய
(கடை எண்ணில் மவுஸை வைத்தால் உரிமையாளர் பெயர் தெரியும்)குழுமமாக வர இருக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் ”தங்க” அறை வசதி ஏற்பாடு செய்து வைக்க ஏதுவாக இருக்கும்!

பரிணாமம் - முட்டையா? கோழியா?

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

********

கடந்த வாரம் உலகளாவிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வந்தது, அது பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு கேள்விக்கான விடை, கோழியிலிருந்து முட்டை வந்ததா?, முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்வியே அது, நான் சிறு வயதிலேயே தர்க்க ரீதியாக அது கோழி தான் என்று விவாதித்தாலும், கடந்த வாரம் வந்த ஆராய்ச்சியின் முடிவு விஞ்ஞான ரீதியாக அதை உறுதி செய்துவிட்டது, ஆனாலும் சில நண்பர்கள் அதை தர்க்க ரீதியாக ஏற்க மறுக்கிறார்கள், கோழி தான் முதல் என்றால் அது படைப்புவாத கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறார்கள், இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்கிறார்கள்!, கடவுளையே நோண்டி நொங்கெடுக்கும் போது கோழியை மட்டும் விட்டு வைக்கலாமா!?

ஊர் வாயை அடைக்கனும் என்றால், ஊருக்கு என்ன வாயா இருக்கு என்று கேட்பது போலத்தான் கோழி என்றால் நேரடியாக கோழியை விவாதத்துக்கு எடுத்து கொள்வது, கோழி என்றால் முதல் முட்டையிட்ட உரியினம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும், அது பறவையாகவும் இருக்கலாம், பல்லி போன்ற ஊர்வனவையாகவும் இருக்கலாம், மீனாகவும் இருக்கலாம், அல்லது விதையை உற்பத்தி செய்த தாவரமாகவும் இருக்கலாம், சென்ற பதிவிலேயே தாவர விதைக்கும், முட்டைக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள் பற்றி எழுதினேன், சரி இங்கே தாவரம் எதுக்கு என்கிறீர்களா!? அது தான் நான் பத்து வருடம் முன்னால் செய்த விவாதமே!


ஒருசெல் உயிரினங்கள் தனது பிரதியை நகலெடுத்து இனப்பெருக்கம் செய்தன, அவைகளின் வாழ வேண்டிய நிர்பந்தம், அவைகளை பல செல் உயிரினங்களாக மாற்றியது. அவைகளுக்கு இனபெருக்கம் அப்பொழுதும் தேவைபட்டது, சில தாவரங்கள் வேர் வழியாகவே தனது பிரதியை நகலெடுத்தன! கிழங்கு வகைகளை நாம் உணவாக உட்கொண்டாலும் அவை சற்றே தடித்த வேர் தான் என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன், அதில் ஏற்பட்ட மாற்றம் மூடிய வேர்கள் கடலை போன்ற விதைகளை உருவாக்கியது, அவைகளை அப்படியே விட்டுவிட்டாலும் அருகில் அந்த வேர் மூலம் அடுத்த கடலை செடி வந்துவிடும்!


அடுத்த வானம் பார்த்த விதைகளை உருவாக்கும் முயற்சி ஆரம்பித்தது, அதன் காரணம் ஒரே இடத்தில் அருகருகில் முளைக்கும் செடிகளுக்கு தேவையான ஊட்டசத்து கிடைப்பதில்லை, அப்படியே வானம் பார்த்த விதைகளை உருவாக்க நினைத்தாலும் இன்னும் அதில் முழுபரிணாமம் அடையாத செடிகள் தான் ரோஜா, மல்லிகை போன்ற செடிகள், நன்றாக பார்த்துள்ளீர்களா!? அந்த பூக்களில் விதைகள் உருவாகாது, ஆனால் கனகாம்பரம், சூரியகாந்தி போன்ற பூக்கள் காய்க்காமலேயே தனக்குள் விதைகளை உருவாக்கி கொள்கிறது. முன்னரே சொன்னது தான் காய்கள் அனைத்தும் மூடப்பட்ட விதைகளே அதை தாவர முட்டைகள் என்று அழைக்கலாம்!  
தனது உடலிலேயே தனது கருவை முழு காலமும் வளர்க்க முடியாத உடல் வளர்ச்சியை தான் ஆரம்ப கட்ட உயிரினங்கள் பெற்றிருந்தன!, சில உயிரினங்கள் அப்படியே முட்டையிலும் கூட முழு வளர்ச்சி அடைய முடியாதவைகளாக இருக்கின்றன, அது முட்டையின் மீதான தவறல்ல, அந்த உயிரினத்திற்கு முழு வளர்ச்சியடைய இன்னும் அதிக காலம் தேவைப்படுவதே, அதற்கு உதாரணங்களாக லார்வா புழுக்களை காட்டலாம், எறும்பு, தேனி, பட்டாம்பூச்சியில் ஆரம்பித்து பரிணாமத்தின் அடுத்த உதாரணமான தவளையும் காட்டலாம்!.


தனது உடலுகுள்ளாகவே முழு வளர்ச்சியும் கொடுக்க முடிந்த உயிரினம் பாலூட்டியாக மாறியது, தனது வாரிசுகள் தனியாக உணவை தேடும் வரை அதை பாதுகாப்பது பெரும்பாலும் அனைத்து உயிர்களுக்கும் உள்ளன, ஆயினும் பாலூட்டியாக இருப்பது அதிகபட்ச பாதுகாப்பு எனவே பரிணாமம் பாலை சுரக்க வைத்தது, அவை இருபாலருக்கும் பொதுவானது என்பதால் தான் ஆண்களுக்கும் முலைகாம்பு உள்ளது, அதற்கான சுரப்பிகள் தேவையான அளவு சுரப்பதில்லை ஆண்களுக்கு, பாலூட்டியாக ஒரு பறவை மாறியதற்கான உலகம் முழுவதும் ஒப்புகொண்ட ஆதாரம் ப்ளாட்டிபஸ், அது அடிப்படையில் வாத்து குடும்பத்தை சேர்ந்தது!


தொடரும்!

நான் ஏன் நாத்திகனானேன்! - தொடர்ச்சி
கேள்வி கேட்பது தான் எல்லா பதில்களுக்கும் ஆரம்பம்!. தெரியாதது, புரியாதது என பலவகை விசயங்கள் முடிவில் அனைத்தும் கடவுள் செயல் என கைவிடப்படுகின்றன! மனித நாகரிகம் ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது, சிந்து சமவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம், மாயன், இன்கா என அனைத்தும் ஆறாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதே! ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் படிமங்கள் லட்சகணக்கான வருடங்களாக மனிதனின் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது, ஆனால் இவைகள் இல்லாமல் இன்று மனிதனை பற்றி அறிவியல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!ஒவியகலை, கட்டிடக்கலைக்கு முன்னோடி போர்கலை அதை மனிதன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதே பழகிவிட்டான், கூட்டம் கூட்டமாக வாழப்பழகிய மனிதன் தனக்கென ஒரு நகரத்தை உருவாக்கினான், கிடைத்திருக்கும் நாகரிக படிமங்கள் அவனது காலனி வாழ்க்கைக்கு ஆதாரம், அவைகளின் வளர்ச்சி கட்டிடகலை வளர்ச்சியாக முன்னேறியது, பிரமிக்கவைக்கும் பிரமீடுகள், ஒவ்வொரு நாகரிகத்திற்கும் தனிபட்ட அடையாள கட்டிடங்கள் என மனித நாகரிகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் கி.பி 1600 வரை மனிதன் அறிவியலில் பல விசயங்கள் புரியாமல் தான் இருந்தான். 2000 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டையானது, பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!ஆனால் அறிவியல் தாகம் நின்றுவிடவில்லை, எதையும் கேள்வி கேட்டு கொண்டே தான் இருந்தது, முயற்சியில் மனம் தளராத சிலரால் சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு, சூரியனின் ஆற்றலில் பிரமித்து பூமியிலும் ஆற்றலை உருவாக்க நினைத்தார்கள், யோசித்து பாருங்கள் 5000 வருட மனித நாகரிகத்தில் மின்சாரம், கடைசி 400 வருடங்களுக்குள் தான் கண்டுபிடிக்கப்பட்டது, ஏதேன் தோட்டத்தில் மனிதனை படைத்த கடவுள் அப்போதே ஏன் அவனுக்கு அனைத்து அறிவுகளையும் கொடுக்கவில்லை, ”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!


இந்த உலகில் இருக்கும் அதிகாரமுள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, சீக்கியம், பெளத்தம், சமணம் மதங்களிடயே கொள்கை முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் பல உண்டு, ஆனால் அனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா!? இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!


பூமியில் உயிரினத்தின் பரிணாமத்திற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன, மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து பின் பிரிந்து சென்றான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது, மனித இனத்திற்குள்ளாகவே தோற்ற பிரிவு! ஒரு தாய்மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகள் அதை நிருபிக்கும். கடவுளின் இருப்பு எங்கேயும் இல்லை, கடவுள் என்ற ஒன்று உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையும் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலிருந்தே தெரிகிறது, ஆனாலும் மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது, ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!, 4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்! அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!

ஆகையால் நான் நாத்தியகானவே இருக்கிறேன்!

பரிணாமம் - செக்ஸ்

குறிப்பு:பதிவிலுள்ள சில சொற்கள் உங்களுக்கு அசெளகரியத்தை அளிக்கலாம், செக்ஸ் என்பது உயிரினம் அனைத்திற்கும் பொது மற்றும் அதை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பதால் நான் இதை எழுதுகிறேன்!

ஏற்கனவே பலமுறை சொன்னது தான், பரிணாமம் பற்றிய என்னுடைய தொடர் முழுக்க முழுக்க என்னுடய புரிதல் மட்டுமே! புற உலகில் நான் பார்க்கும் விசயங்களில் பரிணாமத்திற்கான சுவடுகள் உணரப்பட்டு அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அவைகளில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை அறிவது நமது உரையாடலில் தான் இருக்கிறது!


****************

பரிணாமம் தொடரில் எனது சென்ற பதிவான இனபெருக்கம் சேப்டரில் உயிரின் மிக முக்கிய தேவை இனபெருக்கம் என்று குறிப்பிட்டிருந்தேன்! மேலும் பின்னூட்டத்தில் மனிதனை தவிர பிற விலங்குகளுக்கு ஓரினசேர்க்கை பிரியம் இருக்காது எனவும் சொல்லியிருந்தேன், ஆனால் விலங்குகளுக்கு ஓரினசேர்கையில் விரும்பம் உண்டு என்று அதற்கான சுட்டியை நண்பர் கொடுத்திருந்தார், அது பற்றி நண்பர்களிடம் விவாதித்து தொகுத்த கட்டுரை இது!


இயற்கை உயிரின இனபெருக்கத்தில் அதிகம் ஊக்கப்படுத்துவது பாலூட்டிகளை தான், அவைகளால் திறனான சந்ததியினரை உருவாக்க முடிந்ததே காரணம்!, தாவரங்கள் மற்றும் அதன் நீட்சியாக இன்னும் பல உயிரினங்கள் தனது துணையை தேர்தெடுக்க வல்லமை அற்று இருக்கின்றன!, தாவரங்களின் மகரந்தசேர்க்கை அதன் விருப்பபடி நடக்காது, மீன்களில் பல வகைகள் ஒன்று கூடி முட்டையையும், விந்தையும் பீச்சி அடித்து இனப்பெருக்கம் செய்கின்றன, ஆயிரக்கனக்கான மீன்கள் என்பதால் எந்த மீனின் விந்து எந்த முட்டையுடன் சேரும் என்பதும் தெரியாது, மேலும் நான் ஏற்கனவே சொன்னது போல், தாவரங்களுக்கு பூக்க எப்படி ஒரு காலம் இருக்கிறதோ, அதே போல் மீன்களுக்கும் இனபெருக்கத்திற்கு ஒரு காலம் இருக்கிறது!

இனப்பெருக்க காலம் பரிணாம வளர்ச்சியில் இன்னும் பல விலங்குகளுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!, ஆனால் பாலூட்டிகளில் நினைத்த மாத்திரத்தில் ஆண், பெண்ணுடன் சேர முடியாது, அங்கே பெண்ணின் தேவை பிரதானம், அவளது சம்மதத்தின் பேரில் மட்டுமே ஆண் அணுக முடியும், இவையெல்லாம் காட்டில் மட்டும் நடப்பதல்ல, ஒருகாலத்தில் காட்டி விலங்காக இருந்த நாய்கள் தற்போது தெருவில் இனபெருக்கத்திற்காக போடும் சண்டையை பார்த்திருக்கலாம்!, பலசாலியான ஒரு ஆணால் மட்டுமே ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதே இயற்கையின் நியதி!

வருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும்!, ஆனால் இனபெருக்கம் என்பது உயிரியல் உந்துசக்தி, அவற்றால் சாமனியமாக அதை அடக்க இயலாது!, ஒரு பலசாலி விலங்கு வெற்றி பெற்றால் அதற்கு அடுத்த பலசாலி விலங்கு ஒன்று அந்த கூட்டத்தில் நிச்சயம் இருக்கும், அவைகள் அதற்கு கீழ் உள்ள ஆண் விலங்குகளை தனது உடல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றன!, ஆனால் அது தொடருமா அல்லது அந்த வருடம் மட்டும் தானா என்பதே ஓரினசேர்க்கை சரியா தவறா என்பதற்கான கேள்வி!

சிங்ககூட்டங்களின் வாழ்க்கை சற்றே வித்தியாசமானது, பூனை குடும்பத்தில் பெரும்பாலும் அப்படி தான், இரண்டிற்கும் மேற்பட்ட பெண் சிங்கங்கள் இருக்கும் கூட்டத்தை ஒரு ஆண் சிங்கம் கட்டுபாட்டில் வைத்திருக்கும், பெண் சிங்கங்கள் வேட்டையாட ஆண் சிங்கம் முதலில் உண்டு மிச்சத்தை பெண் சிங்கங்கள் எடுத்து கொள்ளும், இனபெருக்க காலத்தில் நாடோடி சிங்கங்கள்(இவை பற்றி பின்னால்) துணையை தேடி வரும், அப்போது அதனுடம் சண்டையிட்டு அந்த ஆண் சிங்கம் வெற்றிபெற்று விட்டால் பழைய பெண் சிங்கங்கள் அதற்கே, அதன் பின் வரும் குட்டிகள் தாயின் பராமரிப்பில் இரண்டு வருடம் இருக்கும், இரண்டு வருடம் கழித்து ஆண் குட்டிகள் கூட்டத்திலிருந்து துரத்தியடிக்கபட்டு பெண் குட்டிகள் மட்டும் கூட்டத்தில் இருக்கும்! அவ்வாறு துரத்தியடிக்கபட்ட ஆண் குட்டிகள் நாடோடி சிங்கங்கள் என அழைக்கபடுகின்றன, அவைகள் குட்டியிலிருந்தே ஒன்றாக இருப்பதால் சில ஒன்றாகவே வேட்டையாடவும், பெண் வேட்டைக்கும் செல்கின்றன! அவ்வாறு செல்லும் பொழுது கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் கூட்டதலைவனுக்கு துணையாக பெண் சிங்கங்களும் களத்தில் குதிக்கும், ஏனென்றால் ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும்!, இவ்வாறு இனபெருக்க காலத்தில் தோற்ற நாடோடி சிங்கங்கள் சிலசமயம் ஓரினசேர்க்கையில் ஈடுபடலாம்!


பென்குயின்கள் பெரும்பாலும் ஓரிணை கொள்கையை கடைபிடிக்கின்றன, இனபெருக்க காலத்தில் முட்டையை ஆண் அடைகாக்க, பெண் வேட்டைக்கு சென்று தேவையான புரதத்தை உடலுக்கு ஏற்றி கொண்டு கொஞ்சம் உணவையும் வாயில் கவ்வி வரும், பொறிந்திருக்கும் குஞ்சுகளுக்கு அது உணவாக அளிக்கப்படும், மீண்டும் குஞ்சுகள் சிலகாலம் பெண் பென்குவின்கள் பாதுகாப்பில் இருக்கும், அப்பொழுது ஆண்கள் வேட்டைக்கு சென்று திரும்பும்!, எல்லாம் சரி இங்கே ஓரினசேர்க்கைக்கு என்ன வேலை என்பது தானே கேள்வி, உணவு சேகரிக்க செல்லும் பென்குயின்கள் எத்தனை உயிரோடு திரும்பும் என்பது மிக முக்கியம் தானே!, ஜோடி இழுந்த ஒரு பென்குயின், அதே போல் ஜோடி இழந்த இன்னொரு பென்குயினுடன் இணைத்து கொள்கிறது, வைஅகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும்!, அவைகளுக்குள் ஓரினசேர்க்கை இருக்குமா என்பது சரியாக தெரியவில்லை!

மற்றொரு முக்கியமான விசயம், சுயமைதுனம் செய்து கொள்ளும் அளவுக்கு கரவசதி, குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் இல்லை என்பதும் கவனிக்கபட வேண்டிய விசயம், ஆகையால் அறிவியல் கூற்றுபடி அந்த நேரத்துக்கு அவைகளின் ஓரினசேர்க்கை தவிர்க்க முடியாததாகிறது, அவ்வாறு இல்லாவிடில் அவற்றிற்கு, உடலுறவின் மீது நாட்டம் போய்விடும் என்கிறார்கள்!, இதில் குறிபிட்ட ”குரங்கினம்”, மனிதனையும் சேர்த்து தான்!

மனிதனுக்கு ஏன் உடை!வேட்டை விலங்குகள் தாக்க, இரையிடம் இரண்டு இலக்குகள் வைத்திருக்கின்றன, ஒன்று அதன் கழுத்து, அடுத்து அதன் விதைப்பை, நிமிர்ந்த நின்ற மனிதன் வசதியான கைகளால் கழுத்தை காப்பாற்றி கொள்ளலாம், ஆனால் விதைப்பையை! அதனால் அதை மறைக்கப்பழகினான், மரபு சார்ந்த விசயங்கள் தொடர்ந்து சந்ததியினருக்கும் பழகுவது போல், குழந்தைகளுக்கு மறைப்பான் அணிவிக்கப்பட்டு, பின் பெண்களுக்கும் அணிவிக்கப்பட்டது, இவை இடுப்பை மறைக்கத்தான் என்பதை நிறுபிக்க இன்றும் பல பழங்குடியினர் மார்பை மறைக்க எந்த மறைப்பானும் பயன்படுத்துவது இல்லை!

ஓரினசேர்க்கை மனிதனுக்கு தேவையா என தனிபதிவா தான் எழுதனும் போல, இது பெருசாயிருச்சு!, அதனால் இங்கே மனிதனின் உடைக்கும், ஓரினசேர்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்ற சஸ்பென்ஸோடு பதிவை முடிக்கிறேன்!

ஓரினசேர்க்கை குறித்து முன்பு நான் எழுதிய இரண்டு பதிவுகள்!

ஒன்று

இரண்டு

குவியல்!..(07.07.10)

இன்று தோழர் ”சிரி”ராம் அவர்களுக்கு இன்று(07.07.10)பிறந்தநாள், அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டனில் இருக்கிறார், குறைந்தது மாதத்திற்கு இரண்டு முறையாவது போனில் அழைப்பார், சிலசமயம் பாராட்டுவதற்கும், பல சமயம் திட்டுவதற்கும், நட்பு பலப்படும் போது உரிமையும் வலுப்படுவது இயற்கை தானே!, அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் விசா பிரச்சனைகளை விரிவாக எழுத இருந்தார், யாராவது கிள்ளி வைத்து எழுத வைக்கவும்!, அவரது பிறந்தநாள் வாழ்த்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! !


அவரது வலைப்பூ

ஆர்குட் தளம்!


**************

சனிக்கிழமை பெங்களுர் சென்றிருந்தேன் அலுவலக விசயமாக, நானும், இன்னொரு பெண்ணும்(யாருன்னு தெரியாதுங்க) தவிர பஸ்ஸில் யாருமே இல்லை, எங்கள் இருவருக்காக கோலார் வரை அந்த பஸ் போகுது, ரெண்டு பேருக்கும் சேர்ந்தே நூறு ருபாய் தான் டிக்கெட்! காலை 8 மணி என்றாலும் இரண்டே பேருக்காக ஒரு பஸ் என்பது கொஞ்சம் ஓவர் தானே! தமிழகத்தில் இப்படி நடந்தால் என்ன செய்திருப்பார்கள்!?

அங்கே வேலையை முடிச்சிட்டு மீண்டும் சிவாஜிநகர் வந்தேன்!, அங்கே தமிழ் தெரிந்த ஒரு கஸ்டமரிடம், எம்.ஜி.ரோடு போக வழி கேட்டேன், வெகு சிரத்தையாக! சில,பல லெஃப்டு, ரைட்டுகளை சொன்னார், நானும், அதை அப்படியே பாலோ பண்ணி போய் சேர்ந்துட்டேன், கிட்டதட்ட இரண்டரை கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்!, அங்கேயும் வேலையை முடிச்சிட்டு நடக்க சங்கடபட்டு ஒரு ஆட்டோ பிடித்தேன், ட்ரைவர் ட்வெண்டி என்றார், செவண்டி தான் எனக்கு சரியா கேக்கலையோ என மீண்டும் கேட்டேன்! அது ட்வெண்டியே தான், ஏறி அமர்ந்தால் ஒரு லெஃப்டு, ஒரு ரைட்டு, சிவாஜிநகர் வந்துருச்சு!, கடைக்காரர்கிட்ட போய், ஏன்யா என்னை இப்படி சுத்தவிட்டேன்னு கேட்டா, அவன் சொல்றான், நான் வந்தது ஒன்வேயாம்!

நடந்து போறவனுக்கு எதுக்குய்யா ஒன்வே! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

***************

எனது நண்பன் ஒருவன், ஹோட்டலில் குக்கா இருக்கான், அவனது இரு பெண் குழந்தைகள் திருச்சியில் படிக்கிறார்கள், இருவரும் முதல் ரேங்க் எடுக்கும் மாணவிகள், அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க நினைத்த பள்ளி நிர்வாகம் சாதி சான்றிதழ் கேட்கிறது, நண்பனோ சாதிசான்றிதழ் தர மறுக்கிறான்!, அது பற்றி நான் கேட்ட சந்தேகத்திற்கு நண்பர் கல்வெட்டு போட பதிவு தான் இது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது!.

நண்பன் பிறப்பால் கிறிஸ்தவன் என்பதால் அதுவே போதும் என்கிறார் வலையுலக சட்ட ஆலோசகர் திரவியநடராஜன்!, இன்னும் முழுசா தெரியல, பள்ளியில் விசாரிக்க சொல்லியிருக்கேன்!


***************

சினிமா பார்ப்பது சில வருடங்களாக வெகுவாக குறைந்து விட்டது! கிருஷ்ணமூர்த்தி சார் பரிந்துரையின் பேரில் “கடவுள்” என்ற சுஜாதாவின் புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன்(தினம் மூணு பக்கம்), அறிமுகத்தில் அனைத்து மதங்களும் அலசபட்டிருக்கிறது, பின் வேற்றுகிரகவாசிகள், ஆவி, இயல்புநிலை தாண்டிய அதிகபடியான சக்தி, கனவு நிஜமாகுதல் என பயணப்படுகிறது, விரிவா ஒரு பதிவில் அலசனும்!

****************

நிறைவேறும் நிராசைகள்!(கவிதை மாதிரி)

உமிழ்ந்த எச்சில் போல்
ஒரு பிண்டம்
எங்கேயும் பறக்க நினைக்க
கற்பனை சிறகுகள்
தரையிலேயே நிற்க நினைக்காத
தலைகன கால்கள்
அண்டத்தையும் அளக்க நினைக்கும்
எல்லையில்லாத ஆசைகள்
ஆனாலும் இன்னொரு
எச்சில் பிண்டமே
அவனுக்கு சாத்தியமாகிறது

தியானம்!

தியானத்தில் ஆர்வமுள்ள ஒரு நண்பருடன் நடந்த உரையாடல் முதலில்!

0*0

அண்ணா! ஒருத்தர்கிட்ட மீடியேட்டர் ஆகனும்னு சொன்னேன், கண்டபிடி திட்டுறாரு,

அட எங்கிட்ட சொல்லியிருந்தேன்னா, நான் ஆக்கி விட்ருபேனே!

உங்களுக்கு தான் அதிலெல்லாம் நம்பிக்கையில்லையே!

பேய் மேல நம்பிக்கையில்லைனா, மீடியேட்டர் எப்படி ஆகுறதுன்னு தெரியாதாக்கும்.

எப்படின்னு சொல்லுங்கண்ணா!

முதல்ல நான் கொடுக்குற லெட்டரை ஒரு பொண்ணுகிட்ட கொண்டு போய் கொடு, அது தான் மீடியேட்டரின் பாலபாடம்!

என்னைய அடி வாங்க சொல்றிங்களா!?

என்னாங்கடா இது, பேய் கிட்டகூட பேசுவேங்குறானுங்க, பெண்ணுகிட்ட அடிவாங்க பயப்படுறானுங்க!

****

அண்ணா! புதுசா ரெய்கின்னு ஒரு யோகா இருக்காம், அதை கத்துக்கலாம்னு இருக்கேன்!

தம்பி சும்மா அதையும், இதையும் கத்துகிறதால வாழ்க்கை முழுமை அடையாது.

வேற என்னான்னா பண்றது?

you should not be a follower, be a Creator!

புரியிற மாதிரி சொல்லுங்கண்ணா!

தம்பி, நீ கத்துகுற யோகா, தியானம் எல்லாம் முன்னாடியே, இதை செஞ்சா இது நடக்கும்னு எழுதி வச்சது, அது நடக்காட்டியும், நீ நடந்ததுன்னு நம்புவ! ஏன்னா இது மாதிரி விசயங்கள் வெறும் நம்பிக்கையில் தான் கட்டமைக்கபட்டுள்ளன!

இல்லைனா நடந்துருக்கு!

அதுக்கான விளக்கம் கடைசியா சொல்றேன்!

என்னை என்ன தான் பண்ண சொல்றிங்க?

புதுசா ஒண்ணு கண்டுபிடி, மல்லாந்து படுத்துக்கிட்டு, காலை ரெண்டு காலையும் மேலே தூக்கி அப்படியே கும்பிடுற மாதிரி இறக்கி தினமும் அரைமணி நேரம் செஞ்சு உங்களுக்கு ”ஹைட்ராசில்” வராதுன்னு சொல்லு அதுக்கு வெதராசனம்னு பெயர் வை!

அடி வாங்க வச்சிருவிங்க போலயே!

நித்தியானந்தா மாதிரி உன்னைய ஒரு ராஜேஸானந்தாவா ஆக்கலாம்னு பார்த்தா விட மாட்டிகிறியே!


****

அது ஏண்டா தம்பி, குண்டிலினின்னு அசிங்கமா பேர் வச்சிருக்காங்க,

கீழே இடுப்புக்கு நடுவுல இருந்து ஒரு சக்தி கொஞ்சம் கொஞ்சமா தலைக்கு ஏத்தனும், ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் ஒரு பெயர் இருக்கு!

எல்லாரும் வாய்ல சாப்பிட்டு கீழே இறக்குவாங்க, நீங்க கீழே இருந்து மேலே ஏத்துறிங்க!
நாம் ஃப்ரெண்டிலினின்னு(front) புதுசா ஒரு தியானம் சொல்லி தருவோமா!?

அண்ணே ஆளை விடுங்க!

*****

http://krpsenthil.blogspot.com/2010/06/18_30.html

இந்த லிங்கில் இருக்கும் வீடியோ பார்த்த பிறகு வேண்டுமென்றே வம்பிழுத்து தயார் பண்ண பதிவு இது!

மூளை இரண்டு பாகங்களாக அமையபட்டிருக்கிறது, வலது, இடது என அடையாளப் படுத்தபட்டாலும் ஒவ்வொன்றிற்கும் தனிதனி வேலைகள் உண்டு!

ஞாபகம் வைத்தல், ஒன்று செய்தால் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிடும் வேலையை ஒரு பகுதி செய்கிறது, உணர்வு பூர்வமாகவும், லாஜிக்காவும் தனிதனியே செயல்பட மூளையின் இரண்டு பாகங்களும் மிக முக்கியம்!, ஆனால் மனிதர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் தியானத்தினால் கடவுளை அடைய வழி என்று மூளையின் செயல்பாட்டை செயற்கையாக தடுகிறார்கள்!, தன்னிச்சையாக தூண்டபட்ட மூளையினால் லாஜிக் பகுதி செயலிழந்து இல்லியூசன் எனப்படும் பரவசநிலை உண்மையென நம்ப வைக்கிறது!


மனம் ஒருநிலைப்படுவது தியானத்தினால் மட்டுமே என்று கூற்றை ஏற்று கொள்ளமுடியாது, எதாவது ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மற்றவற்றை ஒதுக்குவதற்கு தியானம் பயன்படுகிறது என்றால். வேறு எதையும் சிந்திக்காமல் ஒரே வேலையை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் தியானம் தானே செய்கிறார்கள்!?, மன்நிலைபாடு தியானத்தினால் கைகுடுவதில்லை என்பதை முதலில் உணருங்கள், அது உங்களது ஆர்வத்தினால் ஏற்படுகிறது, ஆர்வமுகுதியில் நீங்கள் செய்யும் வேலையை வேறு எதுவும் சாதாரணமாக தடுத்துவிட முடியாது. உதாரணம்:செக்ஸ்

நண்பர் சதீஷ், மூச்சு பயற்சி பற்றி எழுதியிருந்தார், அதில் நாட்டமுள்ள பலரும் அதை வரவேற்று ஊக்கப்படுத்தியிருந்தார்கள், ஆனால் யாருமே மாற்று கண்ணோட்டத்தில் யோசிப்பதில்லை, மண்வெட்டி எடுத்து தினமும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைப்பவனுக்கு மூச்சுப்பயிற்சியும் தெரியாது, குண்டிலினியும் தெரியாது, ஆனால் அவனை போல் ஆரோக்கியமான இயற்கை மனிதர்களை உங்களால் காட்டமுடியுமா!?

தியானம், யோகா போன்றவற்கை வெறும் உடற்பயிற்சியாக பார்ப்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை, தயவுசெய்து அவையெல்லாம் கடவுளை அடையும் வழி என்று திரிக்கும் பார்பனீய தந்திரத்துக்கு பலியாகாதீர்கள்!

இது சும்மா கொசுறு!

அன்பு தோழர் சென்ஷி அவர்களுக்கு!

அன்பு தோழர் சென்ஷி, நீங்கள் எழுதிய பதிவுக்கு பின்னூட்டம் இட்டேன், கமெண்ட் மாடுரேஷன் இருக்கும் போல, அவசரகதியாய் எதிர்வினை ஆற்ற வேண்டியிருப்பதால் இந்த குறும்பதிவு!

நாங்கள் என்னவோ புதிதாக மதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போல் பதிவு எழுதி உள்ளீர்கள்!?, ஞாபகம் இருக்கா, அரபுநாடுகளில் எங்களது ஆல் இன் ஆல் ப்ளாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதே நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும், அரபியை தாய்மொழியாக கொண்ட நாட்டில் ஒரு தமிழ் வலைப்பூ தடை செய்யபடுகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணங்கள் வேண்டும்.

ஒன்று நாங்கள் ப்ளாக்கில் அசிங்க படங்கள் பப்ளிக்காக வெளியிட்டிருக்க வேண்டும்

அல்லது

அரபு மொழியில் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக நாங்கள் செயல்பட்டிருக்க வேண்டும்!

பதிவோ தமிழில் உள்ளது, ஆனால் தடை செய்யப்பட்டுள்ளது, கருத்துகளை நேரில் எதிர்கொள்ள திராணியற்ற எதோ ஒரு மதம் பிடித்த டிச்சுவாயன் தான் அதை தடை செய்திருக்க வேண்டும்!

சரி வாங்க மேட்டருக்கு!

யார் அந்த சிவராமன் பதிவில் மைனஸ் ஓட்டு குத்தியிருந்தீர்கள், நான் பின்னூட்டத்தில் சிவராமனின் செயலை ஆதிரிக்கிறீர்களா என்ற கேட்டதற்கு வந்து பதில் சொல்கிறேன் என்றீர்கள், இப்போது வரை பதிலில்லை என்பது உங்களுக்கே தெரியும்!.

உங்களுடய நிலைப்பாடு எதையும் பகுத்தறியாமல் குருட்டுதனமாக நம்புவதாக இருக்கும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அந்த பதிவு கூட நீங்கள் எழுதியதா அல்லது பார்பனீய சிவராமன் எழுதி கொடுத்ததா என சந்தேகமாக இருக்கிறது!

நாங்கள் பதிவை நீக்கி விட தயார், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயார், அதிலுள்ள விசயங்கள் அனைத்தும் பொய் என நீங்கள் நிறுபித்தால், முடியாது என்ற பட்சத்தில் நீங்கள் இறைதூதராக நம்பி கொண்டிருக்கும் மனிதர், சாதாரண மனிதரை விட கேவலமாக வாழ்ந்து தான் இறந்தார் என்பது உண்மையாகிறது, உண்மையெனும் பட்சத்தில் அதை உரக்க சொல்லும் தைரியமும், நேர்மையும் எங்களிடம் இருக்கு!

மதம் என்னும் நோய் பிடித்தவனிடம் கொஞ்சி குழாவி கொண்டிருக்க முடியாது, அந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் முன் பகிரங்கமாக மருந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூக ஆர்வளனின் கடமை!

என்ன செய்யலாம் சொல்லுங்க தோழரே!

!

Blog Widget by LinkWithin