இந்தியாவை எரிக்கும் சாதிய தீ!

கீழே விழுந்த செல்போனை குனிந்து எடுக்க வக்கில்லாத உயர்சாதி எருமைகள், எடுத்து தராமல் சென்றதற்காக தலித் குழந்தைகள் இருவரை எரித்து கொன்றுள்ளனர்.

பேசக்கூட தெரியாத அந்த குழந்தைகளை மனிதனால் கொல்லனும்னு நினைச்சு பார்க்க முடியுமா என்பதே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மிருகத்திலும் கொடியவாக மனிதம் தன் முகத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் வாங்கி 68 வருடங்கள் ஆகிறது. அந்த சுதந்திரம் யாருக்காக வாங்கப்பட்டது என நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது.

சக மனிதனை மனிதனாக பார்க்காமல் அவனுக்கு சாதி அடையாளமிட்டு, கீழ் சாதி, உயர் சாதி என பிரிவினைகளை உண்டாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படாமல் 68 வருடங்களாக இன்றைய டிஜிட்டல் இந்தியா பயணித்து வந்துருக்கிறது.

டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்த கொடுமைகாக களத்தில் இறங்கி போராடிய மொத்த இந்தியாவும் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கு மெளனம் சாதிக்கிறது. தலித்துகளின் உயிர் என்றால் அவ்வளவு மலிவா?

இந்த சாதி சங்களுக்கும், சாதி கட்சிகளும் தங்களை முன்னேற்றிக்கொள்ளவா? அல்லது தாழ்த்தபட்ட சமூகத்தை கொன்றழிக்கவா? சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது.

தாழ்த்தபட்ட பட்ட சமூத்தை கோகுல்ராஜை கொன்ற யுவராஜ் இன்று தலைவனாக கொண்டாடப்படுகிறான். மனபிறழ்வு அடைந்தவன் கூட சக உயிர்களுக்கு மதிப்பளிப்பான். இந்த சாதி வெறியர்கள் மனிதன் என்று சொல்லவே தகுதியிழந்து நிக்கிறார்களே?

தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் முன்விரோதம் காரணமாக குற்றம் நடந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த முன் விரோதம் ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் புரையோடி போயிருக்கிறது என்பதை சிபிஐ தாக்கல் செய்யுமா?

தெருவுக்கு ஒன்றாக இருக்கும் சாதி சங்கங்களினாலும், சாதி கட்சிகளினாலும் மொத்த மனித குலத்துக்கே ஆபத்து என்பதை சிபிஐ பதிவு செய்யுமா?

சாதியம் மட்டுமே சமூகம் என்றால் மொத்த சமூகமும் எரிந்து நாசமாய் போகட்டும்..

தயாராகுங்கள், அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு!

நரேந்திரமோடி என்ற பசுதோல் போர்த்திய நரி இன்று பிரதமர் என்ற அதிகாரம் கொண்டு நாடு நாடாக சுற்றிக்கொண்டிருப்பதற்கு காரணமாக சமூக ஊடகங்களின் பங்கும் பெருமளவு உள்ளது. காங்கிரஸ் மீதான வெறுப்பின் காரணமாக பாஜக மதவாத கட்சி என தெரிந்தும் பலர் பாஜகவால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும் என நம்பினார். அவர்களது பக்கங்களில் பாஜகவுக்கு ஆதரவு பிரச்சாரமும் செய்தனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையும் மிக முக்கியமானது. அதற்கு முன் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என உளரிகொண்டிருந்த பாஜகவினர் தேர்தலின் போது நாட்டின் வளர்ச்சியே எங்களின் குறிக்கோள் என்றனர். கருப்பு பணத்தை கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் போடுவோம் என்றனர். பிரிவினைவாதம் எங்கள் நோக்கமல்ல என்றனர்.

கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு அழகிகளிடம் ஏமாந்த சோனகிரியாக இன்று பாஜகவிற்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் ஒன்று கூட பாஜகவிடம் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் சாயம் முன்னரே வெளுத்துப்போனாலும் இப்பொழுது தான் மொத்த இந்தியாவும் பாஜகவின் உண்மை முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் என் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர் என உலக நாடுகளிடம் போய் நீலிகண்ணிர் வடித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மதிப்பை சம்பாரிக்க நினைத்தார் மோடி ஆனால் நடந்து கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாதா என்ன?

உத்திரபிரதேசத்தில் மாட்டுகறி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் பேசாத நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இருந்து கண்டன அறிக்கை வருகிறது. இங்கிருந்து யாரும் போன் பண்ணி சொன்னார்களா என்ன? அதான் சமூக ஊடகத்தின் சக்தி.

பகுத்தறிவு எழுத்தாளர் கொலைக்கு எந்த ஒரு நடிவடிக்கையும் எடுக்காத நிலையில் வரிசையாக நான்கு எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை வேண்டாம் என திரும்ப கொடுத்துள்ளனர்.

இன்று மொத்த உலகமும் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்றும் பல பிற்போக்கு நாடுகளின் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களை நான் அன்றாடம் பார்த்து வருகிறோம். மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு செல்லும் பொழுது இறந்த குழந்தைக்காக உலகமே கண்ணீர் விட்டது.

இதே நிலை இப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வரலாம். மாட்டுகறி தின்பவன் பாகிஸ்தான் போ என்பது. யோகா வேண்டாம் என்றால் கடலில் விழு என்பது. மாட்டை வெட்டினால் உன்னை வெட்டுவேன் என்பது என வன்முறை தூண்டுவதும், மக்களிடயே பிரிவினையும் தூண்டுவதுமாக பாஜக தனது உண்மையான முகத்தை ரத்தம் வழியும்  கோரை பற்களுடன் காட்டிக்கொண்டிருக்கிறது.

மனசாட்சியும் மனிதநேயமும்  உள்ள எந்த மனிதமும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். நமது பிறப்பு சரித்திரம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் நம் இறப்பை சரித்திரம் பேச வைக்க முடியும். நம் எதிர்ப்பை நாம் அரசுக்கு காட்டியே ஆக வேண்டும்.

இப்பொழுது இந்தியாவிற்கு தேவை அரசியல் கட்சிகளல்ல. சுதந்திர இயக்கம்.

ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், டம்ப்ளர் போன்ற அனைத்து சமூக ஊடகங்களிலும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். பாஜக ஆதரவு மதவாதிகளை புறம்தள்ளுங்கள். இந்தியாவிற்கு தேவை சமநீதி. சம உரிமை.

என் கருத்துடன் உங்கள் கருத்தையும் எழுதி இதை பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேர்ள் பற்றி சில தகவல்கள்.

அவருக்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இட்டாலி மொழிகள் சரளாக பேசத்தெரியும்.

தனது சேவையை திருமணம் தடுக்கும் என மணம் செய்துக்கொள்ளவில்லை

சிறுவயதில் பெற்றோர்கள் மறுத்தபொழுதும் பிடிவாதமாக செவிலியாக பயிற்சி பெற்றார்.

கிரைமீன் போரின் போது நாற்பது செவிலியர்களுக்கு தலைமை தாங்கினார்

இவரதுக்கு சேவைக்காக "The Lady with the Lamp” என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டது.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தனிபட்ட முறையில் கடிதம் எழுதி ஆறுதல் சொல்லுவார்.

விக்டோரியா மகாராணி இவருக்கு ரசிகையாக இருந்தார்

செவிலயர்கள் தேவை குறித்தும் அவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்

அமெரிக்கன் பனிபோரின் போது இவர் கொடுத்த ஆலோசனைகளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

அமெரிக்காவின் முதல் செவிலிக்கு பயிற்சி கொடுத்தது இவர் தான்.

இவரது பிறந்தநாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது

!

Blog Widget by LinkWithin