உடனடி நடவடிக்கை எடுத்த விகடன்!!

சென்ற வாரத்தில் ஆனந்தவிகடனுக்கு நான் பகிரங்க கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே!
அதற்கு மின்னல் வேகத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இந்த வாரம் விகடன் வாங்க காசு கொடுத்தவுடன் அவர்கள் புத்தகதிற்கு முன் 14 ருபாய் மதிப்புள்ள 150 கிராம் எடையுள்ள விவெல் ஆயுர்வேதிக் சோப்பு ஒன்றை கொடுத்தார்கள்,
அப்போதே தெரிந்துவிட்டது, நமது குரல் விகடன் வரை ஒலித்துவிட்டது என்று, அந்த அதிர்ச்சியிலிருந்தே வெளி வராத எனக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி.

சனிக்கிழமை காலை, தெரியாத ஒரு புதிய எண்ணிலிருந்து போன்,
யாரென்று கேட்டால் விகடன் குழுமம் என்றார்கள், முதலில் நம் வலையுலகில் யாரோ செய்யும் குறும்பு என சிறிது நேரம் குழம்பி விட்டேன். ஆனாலும் அவர் சீரியசாக பேசிய விதம் இது கண்டிப்பாக விகடனிலிருந்து தான் என ஊர்ஜிதம் செய்தது.

ஈரோடு மாவட்ட நிருபர் தான் என்னிடம் பேசினார். நேரில் வந்திக்க வருவதாகவும் கூறினார்.
நானும் அந்த நேரத்தில் வெளியே செல்ல இருந்ததால் ஒரு பொது இடத்தில் சந்திப்பதாக கூறினேன். அவரும் ஒரு இடத்தை சொல்லி வர சொல்லிவிட்டார்.

மிக அன்பாக உபசரித்தார்.
நான் எழுதிய கடிதம் அவருக்கு அப்படியே மின்அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் போல,
நான் எழுதியிருந்ததில் சில நியாயமான கருத்துகள் இருந்ததாக கூறினார்.
சென்ற முறை சோப்பு இலவசமாக தரும் பொழுது சோப்பு கம்பெனியை சேர்ந்தவர்கள் செய்த குளறுபடியே யாருக்கும் சோப்பு சென்றடையாத காரணம் என விளக்கினார்.

விகடன் குழுமம், வாசகர்களுக்கு முதல் மரியாதை தருவதாகவும், நடந்த தவறுக்கு மேல் தலைமை முதல் அனைவரும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். எனக்காக அங்கிருந்து கொரியர் மூலம் வரவழைத்த ஆனந்தவிகடனை என்னிடம் கொடுத்தார். நான் காசு கொடுக்க பர்ஸை எடுக்கும் போது, இது உங்களுக்காக இலவசமாக அனுப்பப்பட்டது என்று காசு வாங்க மறுத்து விட்டார்.

இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்த விகடன் குழுமதிற்கு நன்றி,

ப்ளாக் என்னும் ஊடகம் இந்த அளவுக்கு பயன் தரும் வகையில் அமைந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது, நண்பர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், பெரு ஊடகங்கள் நம்மை கவனித்து கொண்டே தான் இருக்கிறது, கவரும் எழுத்துகள் அச்சில் ஏற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது, சிறிதும் களைப்படையாமல் நண்பர்கள் உங்கள் படைப்புகளை எழுதி கொண்டே இருங்கள்.

கன்னியாகுமரியில் வால்பையன்!!

நாகர்கோயிலுக்கு அருகே வள்ளீயூர் என்ற இடத்தில் ரயில் சிறிது நேரம் நின்றது, அங்கே எடுத்த புகைப்படம். (புகை எங்கேன்னு கேக்குரிங்களா, ஒரு கை பின்னாடி இருக்கு பாருங்க)
காந்தி மண்டபத்தில்(தலைக்கு பின்னால் எதாவது ஒளிவட்டம் தெரியுதா)
அய்யன்(அந்த அய்ய(ர்)ன் இல்லை) வள்ளுவனின் சிலைக்கு முன்னால்
இந்த குதிரை என்னை விட அழகா இருக்கா?நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இது இருக்கு, அதன் அழகை கெடுக்கும் விதத்தில் அரசியல்வியாதிகள் எப்படி கொடி கட்டி வச்சிருக்கு பாருங்க!
பகலின் முடிவும், இரவின் ஆரம்பமும், குமரியில் காண வேண்டிய அற்புத காட்சிசுனாமி நினைவு சின்னம் முன்னால்.(காலையிலேயே போஸ்ட் பண்ணிரலாம்னு நினைச்சேன் ப்ச்ச் முடியல)இங்கே சென்று வர எனக்கு 10 பைசா செலவில்லை, அத்தனையும் என் பாஸ் செலவு. கையை ஆட்டிகிட்டு போனது தான் என் வேலை

அனைத்து போட்டோக்களும் அவர் எடுத்ததே!

பின்குறிப்பு: இந்த படங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் என்னை கலாய்க்கலாம்,
சிறந்த கலாய்ப்புக்கு 50 பின்னூட்டங்களும், மொக்கைக்கு 25-ம் கிடைக்கும்

பின்பின் குறிப்பு: அங்கு நடந்த மீனவர் ஜார்ஜுடன் நடந்த சந்திப்பு அடுத்த பதிவில்

ஆனந்தவிகடனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!

மறுபடியும் பகிரங்க கடிதம் சீஸன் ஆரம்பிச்சிருச்சான்னு பார்க்காதிங்க!
இது ரெண்டு வாரமா மனசுகுள்ள குடைஞ்சிகிட்டு இருக்குற கேள்விகள்!

12 வருடமாக காசு கொடுத்து ஆனந்தவிகடன் வாங்கும் வாசகன் என்ற முறையில் அதனை விமர்சிப்பதற்கும், சில கேள்விகளை முன் வைப்பதற்கும் எனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறேன். இதனை அவர்களுக்கே கடிதம் மூலம் கேட்டிருக்கலாம், ஆனால் அது அவர்களுடைய தலைமை வரை செல்லுமா எனும் சந்தேகத்திலேயே பதிவாக இடுகிறேன்.

இலவசம் என்ற வார்த்தையே மனிதனை அடிமைப்படுத்தும் ஒரு கருவி என நினைப்பவன் நான். ஆனால் இந்த விசயத்தில் தான் அவர்களுது தரம் அவர்களின் பேப்பர் தரத்தை விட கீழே போனது வருத்தம் தரும் செய்தி.

புதிய வடிவில் 5 ரூபாய் விலையேற்றி வந்திருந்த ஆனந்தவிகடன் எனக்கு புதிதாக எந்த அனுபவத்தையும் தரவில்லை என்பதே உண்மை! இன்பாக்ஸ் என்ற பெயரில் கிசு கிசு போன்ற செய்திகளையும், புதிய எலக்ட்ரானிக் பொருள்களை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில் என்னை போன்ற நடுத்தரத்துக்கும் கீழே இருப்பவர்களின் வயிற்றீல் அடுப்பு பற்றவைப்பதில் அப்படி என்ன ஆசையோ! சரி அப்படியே நடுத்தர வர்கத்துகு உதவியாக இருந்தாலும் ஏற்கனவே வாங்கிய பொருள்களை என்ன செய்வதாம்!

நான் கொடுக்கும் 15 ரூபாயும் அவர்களின் பொக்கிஷமாக வரும், சிறு புத்தகத்திற்கே. இன்றைய பிரச்சனைகளுக்கு அன்றைய தலைவர்களின் தீர்வு என்னவாக இருந்தது, சிறிதும் குணத்தை மாற்றி கொள்ளாத இயற்கை பேரழிவில் அதேபோல் குணத்தை மாற்றி கொள்ளாத அரசியல்வாதிகளின் மெத்தனம் போன்றவை என்னை போல் அரசியலின் புதிய பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.


இந்த பதிவிற்கு இவைகள் மட்டுமே காரணமல்ல! அவர்களின் சில அலட்சிய போக்கை சுட்டி காட்டவே இந்த பதிவு. இம்மாதிரியான புதிய வடிவு புத்தகம் வரும் பொழுது, முன் அட்டையில் பாடல் வரிகளின் எழுத்துகளை சிதறி போட்டு சரியான வார்த்தையை கண்டுபிடிக்க சொல்வார்கள், பொதுவாக நான் பாடல்களை பெரிதாக கவனிப்பவனில்லை என்றாலும், “கண்கள் இரண்டால்” என்ற பாடல் வரி எனக்கு கண்டுபிடிக்க மிக எளிதாக இருந்தது. எப்போதும் ஏமாறாமல் இருக்க நான் என்ன இயந்திரமா? ஒரு குறுந்தகவலுக்கு 3 ரூபாய் வீதம் இரண்டு குறுந்தகவல் அனுப்பினேன். 50 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்யப்படும் என மறுநாள் ஒரு குறுந்தகவல் வந்தது. இன்று வரை ஒரு ருபாய்க்கு கூட டாக்டைம் வரவில்லை.

பிறகு ஒருமுறை ஒரு கூப்பன் உரசினால் ஒரு சின்ன சோப்பு இலவசம், கடைக்காரரிடம் கேட்டேன். புத்தகம் மட்டும் தான் வந்தது சோப்பு வரவில்லை என்றார். அன்றும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் குளிக்கவில்லை!

மாஸ்டர் பீஸ், ஏர்செல் சிம் இலவசம் தான்! எப்போதும் வியாழக்கிழமை மதியம் சாப்பாட்டிற்கு போகும் போது வாங்கி விடுவேன், அன்று போகும் போது கடையின் வெளியே புத்தகம் இல்லை, சில நாட்களில் அம்மாதிரி நடப்பது உண்டு, புத்தகம் வரவில்லை போல என்று வீட்டிற்க்கு போய்விட்டேன். மறுபடியும் நான்கு மணிக்கு வந்து கேட்டால் புத்தகம் தீர்ந்து விட்டதாம். ஒவ்வொருவரும் நான்கு புத்தகங்கள் வாங்கி சென்றிருக்கிறார்கள். ஈரோடு முழுவதும் சுத்தி பார்த்தேன். எங்கேயும் இல்லை!

கடைசியாக அந்த கடைக்காரரிடமே எனக்கு புத்தகம் மட்டும் தான் வேண்டும், அதை மட்டும் யாராவது கொடுத்தால் வாங்கி வையுங்கள் என்றேன்.

அது இருக்குதே என்றார்.

10 ருபாய் வாங்கி கொண்டு புத்தகம் மட்டும் கொடுத்தார்!(ஆக சிம் 5 ருபாய்)

இதே போல் திருப்பூர், கோவை, மதுரையிலும் நடந்திருக்கிறது.
சில இடங்களில் புத்தகம் 60, 70 ருபாய்க்கு விற்பனையானதாக தகவல்.

ஒரு வாசகனை போய் சேர முடியாத இணைப்புகள், கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? ஏன் இந்த இணைப்பை பற்றி முன் வார விகடனில் சொல்லவில்லை. இம்மாதிரியான இணைப்புகள் கொடுக்கும் பொழுது அதிக புத்தகங்கள் வெளியிட்டு இருக்கலாமே! தொடர்ச்சியாக வாங்கும் வாசகனுக்கும், இணைப்புகளை மட்டும் வாங்கும் வாசகனுக்கும் வேறுபாடுகளை எப்படி காண்பீர்கள். சந்தாதாரர்களுக்கு இணைப்புகளை அனுப்புவீர்களா? ஆன்லைனில் பணம் கட்டி படிப்பவர்களுக்கு!

நிறைய கேள்விகள் இருக்கிறது?

நான் பேப்பரின் தரத்தை விட கட்டுரைகளின் தரத்தை மட்டும் பார்ப்பதால் அது வேண்டாம்!என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!

நான் ஜிமெயிலை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் யாஹுவை ஓரம்கட்டி வைத்து விட்டேன்.
பழைய நண்பர்கள் எப்போதாவது அதற்கு மெயில் அனுப்புவார்கள். அதனால் அதை வாரம் ஒரு தரம் திறந்து பார்ப்பேன், இன்றும் திறந்து பார்த்தேன். அதிர்ந்தேன்

PAYMENT APPROVAL MESSAGE FROM THE NOKIA ONLINE
FORM NO.: CN503/09
PAYMENTNO.:NK-A56-001
REF NO.: NK-774036-001
_____________________________________________________
Congratulations:
You are welcome to NOKIA ONLINE END OF YEAR PROMO Dispatch UNIT; we are pleased to be at your service. NOKIA PROMO GROUP is regulated and Stipulated by the Financial Service Authority (FSA).The financial institutions that govern all financial activities in the United Kingdom .
This office has been Notified of your claims on the NOKIA N' SERIES ONLINE PROMOTION of the won prize of £450,000 GBP (FOUR THOUSAND FIVE HUNDRED THOUSAND GREAT BRITAIN POUNDS) in our National lottery. This means that you have been officially cleared for payment by the Verifications Department at the headquarters of the NOKIA N' SERIES ONLINE PROMOTION.
The original copy of your winning certificate, together with a covering document (Money Laundering protection and Letter of Affidavit for Claims) from the British Government stating that the money was obtained legally through the NOKIA N' SERIES ONLINE PROMOTION will be sent to you along with our gift items.
DELIVERY OPTIONS/CHOOSE 1-3
PLEASE INDICATE THE COURIER SERVICE CONVINIENT AND THAT WILL BE AFFORDABLE BY YOU. INSTRUCTIONS ON HOW THE PAYMENT WOULD BE MADE WILL BE SENT TO YOU AFTER YOU HAVE CHOSEN FROM THE DELIVERY OPTIONS BELOW.
NOTE: THIS IS A SPECIAL DELIVERY THAT NEEDS AN URGENT REMITTANCE TO YOU WITHOUT ANY DELAY OF ANY SORT, SO BE AWARE THAT; ANY OF THE DELIVERY OPTION CHOOSED BY YOU, THE CHARGES MUST ALSO BE PAID BY YOU BEFORE YOUR CHOOSEN COURIER CHOICE CAN EFFECT THE DELIVERY OF YOUR WON CHEQUE/CHECK OF £450,000 POUNDS STERLINGS AND YOUR ATTACHED NOKIA N93i SERIES CAN BE DELIVERED TO YOU IN YOUR DESIGNATED ADDRESS GIVEN IN YOUR CLAIMS FORM.
THE NOKIA PHONE AND THE WON CASH PRIZE WILL BE DELIVERED TO YOU AS SOON AS YOU REMIT THE COURIER DELIVERY FEE TO US.
The options, together with their associated conditions are presented below; Indicate your choice for further details on our courier charges is to be paid:
DHL
DHL UK Home
48 hours delivery
DELIVERY CHARGES: £665GBP
FEDEX
FedEx Express   Logo
72hours Delivery
DELIVERY CHARGES: £550GBP
UPS
UPS
84 hours Delivery
DELIVERY CHARGES: £420GBP
Note: The charges cannot be deducted from your winnings, and also the charges are to be handled by you. This is in accordance with section 13(1)(n) of the National Gambling Act as adopted in 1993 and amended on 3RD July 1996 by the constitutional assembly. This is to protect winners and to avoid misappropriation of funds and win Situations. Also all charges are to be paid before delivery.
Please respond to this email by making a selection from the three options above. Also attach a scanned copy of either your driver's license, international passport (photo page) or any other legally identifying document.
Send your response to indicate your option within the next 24hrs, in order for us to send you the payment instructions in our next e-mail. because you only have 7 working days to claim this Cheque and after this period, your cash prize will be deemed to have been forfeited by you and will be reused in the drawings of the next edition of the lottery.
FILL BELOW, YOUR POSTAL ADDRESS DETAILS COMPLETELY AND ALSO INDICATE YOUR COURIER OPTION:
Full Name: _________________________________________
Delivery Address: _____________________________________________________
Telephone Number: _________________
You’re Courier Option Choice: ________________
DECLEARATION: I................................................................. Hereby confirm that all the information given above and attached copies of Identification is to the best of my Knowledge and is true and correct. Any tempering or falsification of the above data renders this claim invalid and void.
Date____
Regards,
Mr Mark Cole
Fiduciary/ Agent.
World Nokia Promotion
Tel +44-704-570-1978
இது தான் வந்திருந்த மெயில்,
என்ன சொல்றாங்கன்னு தெரியலை
ஆனா எனக்கு சொம்பு தர ரெடியா இருக்காங்க்கன்னு மட்டும் தெளிவா தெரியுது, இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்!

பா.ஜ.க

துணிகளை அடுக்கி கொண்டிருந்தவன் திடீரென ஆவேசமாக எல்லாவற்றையும் கலைத்தான்.
முக்கியமான எதையோ தொலைத்த பதட்டம் அவன் முகத்தில் தெரிந்தது. அடுக்கி வைத்திருந்த துணிகளை வீசியவன், படுக்கைகளையும் கலைத்தான். இம்மாதிரியான செய்கைகளை யாருமே இவனிடம் பார்த்ததில்லை. பொருமையின் சிகரமாகவே என்றும் இருப்பவன் இன்று பதட்டத்தின் எல்லையாகவே மாறினான்.

குமாருக்கும் ஆச்சர்யம் தான். இத்தனை வருடமாக ஒரே அறையில் தங்கியவன் என்ற முறையில், இப்படி ஒரு நடத்தையை அவனிடம் பார்த்ததில்லை. இருப்பினும் அவனுடய சொந்த விசயத்தில் தலையிடுவதில்லை என்பதால் அமைதியாகவே இருந்தான். அவன் அமைதியை குழைக்கும் வகையில் அந்த குரல்!

கொஞ்சம் எந்திரியேன், உன் படுக்கையில் பார்க்கனும்

என்னத்த தேடுற, சொன்னால் நானும் தேடுவேன்ல

வேண்டாம், நானே பாத்துக்கிறேன்

குமார் கண் முன்னே அவனது படுக்கை கற்பழிக்கப்பட்டது ஸாரி கலைக்கப்பட்டது.

குமாருக்கு லேசாக கோபம் வந்தது, சொன்னால் நாமும் கூட சேர்ந்து தேடலாமே என்று தோன்றியது. ஒருவேளை அவன் நம்மை சந்தேகப்படுகிறானோ என்று விபரீதமாக யோசிக்க துவங்கினான்.

அதை நிருபிக்கும் வகையில் ”குமார், கொஞ்சம் உன் பெட்டியை திறயேன் என்றான்” இவன்.

குமாருக்கு கோபம் தலைக்கேறியது.

என்னை சந்தேக்கபடுறியா?

இல்லைடா அது தெரியாம கூட வந்துருக்கும்

வற்றதுக்கு அது என்ன எலியாடா! இது டூ மச்சுரா

நீ, திற நான் எதையும் கலைக்க மாட்டேன்

குமார் சாவியை தூக்கி எறிந்தான்

பெட்டியை திறந்து எதையும் கலைக்காமல் பார்த்தவன், லேசாக தலையை தூக்கி விட்டத்தை பார்த்து யோசித்தான்.

படாரென்று எழுந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.

சுற்றும் முற்றும் தேடிவன் அந்த மூலையில் சில துணிகளுடன் அதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் அதை நோக்கி ஓடினான்.

அந்த அறை நண்பர்களுக்கு நன்றி சொலி விட்டு தன் அறைக்கு திரும்பினான்.

என்னாத்தடா அப்படி தேடின என்றான் குமார்!

இவன் அதை காட்ட , குமாருக்கு சரியான கோபம்

ஏண்டா இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம்

இல்லைடா, எங்கிட்ட இது ஒண்ணு தான் இருக்குஅவன் தொலைத்தது என்ன?
தலைப்பின் காரணம் என்ன?

கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்

உடன் பிற(வா)ந்த சகோதரிகள்

நம்மூர் அரசியல்வாதிகளிடம் ட்ரைனிங் எடுத்தவர்கள்

திருமண அழைப்பிதழ்

எனதன்பு நண்பர்களுக்கு,

வரும் 30.11.2008 ஞாயிற்று கிழமை எனது தம்பிக்கு மதுரையில் திருமணம்.
விடாது பெய்த மழையினால் நிரைய நண்பர்களுக்கு நேரில் அழைப்பிதழ் தர முடியவில்லை, மன்னிக்கவும்.

நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வந்து வாழ்த்துமாறு கேட்டு கொள்கிறேன்.

மதுரை வில்லாபுரத்தில் மீனாட்சி நகரில் சங்கரநாராயணன், சரோஜினி அம்மாள் திருமண மண்டபத்தில் கல்யாணம். நீங்கள் வில்லாபுரம் பழைய மது தியேட்டர் அதுவே இப்போ புது வெற்றி தியேட்டர் என்று கேட்டு வந்தால் போதும், உங்களை அழைக்க நானே வந்து விடுவேன்.

எனது அலைபேசி எண் 9994500540

நேரமிருப்பின் வந்து வாழ்த்துமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

நன்றிமெளனமும் ஒரு மொழி தான்!!

சிறகில்லாமல் பறந்தோம்!
உலகு மொத்தமும் துறந்தோம்!

நாம் காதலின் இலக்கணம் என்றோம்!
நம் காதலில் தலைக்கணம் கொண்டோம்!

நீ இல்லாமல் செத்து போவேன் என்றோம்!
தடைகள் கடந்து திருமணம் செய்தோம்!

இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!

இப்பொது தோன்றுகிறது,
முதன்முறை பார்த்த போது

பேசாமலே இருந்திருக்கலாமென்று!இது சும்மா லுலுலாயி

சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்

ஈரோட்டில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு

கடந்த வாரம் சென்னை பதிவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே! அதை நமது பரிசலும் பதிவு மேல் பதிவாக போட்டு கலக்குவதும், மொத்த பதிவுலகமும் அறியும். அதை போலவே ஈரோட்டில் ஒரு சந்திப்பு நடத்துவது என்று ஈரோட்டு இலக்கியசிங்கம் நந்து அவர்கள் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அங்கிருந்து ஒரு ரிப்போர்ட்
கலந்து கொண்டவர்கள்:
நந்து f/o நிலா
கார்த்திக்(வால்பையன் பாஸ்)
வால்பையன்
கூடுதுறை
ஆர்.கே.சதீஸ்குமார்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கூட்டம் ஆரம்பிக்கிறது

கார்த்திக்: அண்ணா நீங்க உக்காந்து பேசுங்க நான் போட்டோ எடுத்துகிறேன்

நந்து: நீயும் உட்காரு கார்த்திக் அப்புறம் எடுத்துக்கலாம்

கார்த்திக்: இல்லணா, போட்டோ எடுக்குறது எனக்கு பிடிக்கும் ஆனா போட்டோ எடுக்குறது நானா இருக்கனும்.

வாலு: இந்த இடம் சரியில்லை, எதாவது நல்ல ஒயின்ஷாப்பா உட்காந்து பேசுவோமா

கூடுதுறை: ஆரம்பிச்சிடியா, கொஞ்சம் நேரம் சும்மா இரேன்யா!

சதீஷ்: உங்க ராசிக்கு நீங்க புஷ்பராக கல்லு போட்டா குடிக்காம இருப்பிங்க வால்.

வாலு: மத்த குடிகாரங்களையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்துறேன்.

வாலின் போன் அடிக்கிறது(போனில் சஞ்சய்)
சஞ்சய்: கூட்டம் எப்படி போகுது

வாலு: எங்கே போகுது, பஜனை மாதிரி இருக்குது, ஒரு சரக்கில்ல, சைடிஷ் இல்ல

சஞ்சய்: ஆரம்பிச்சிடியா, சரி நான் சொல்றது கேளு, நந்து என்ன பேசுராரோ, அதை அப்படியே எனக்கு அனுப்பீறு

வாலு: ஏன்?

சஞ்சய்: அப்போ தான்யா, அவர காலாய்ச்சி பதிவு போட முடியும்

வாலு: அது சரி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா!

புது பொண்ணு காயத்திரி ஆஜர்.

நந்து: வாம்மா காயத்திரி, என்ன விஷேசம்,

காயத்திரி: வணக்கம், வரும் டிசம்பர் நான்காம் தேதி

நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற

காயத்திரி: இல்லைனா, பழக்க தோஷம் அப்படியே வந்துருச்சு

நந்து: சரி எல்லாத்துக்கும் பத்திரிக்கை கொடுத்துரு, நாங்க வந்துருர்ரோம்

பத்திரிக்கை கொடுத்துவிட்டு காயத்திரி கிளம்புகிறார்.

கார்த்திக்கின் போன் அடிக்கிறது(போனில் பரிசல்)

பரிசல்:என்ன கார்த்திக் சந்திப்பு நல்லா போகுதா?

கார்த்திக்: நடக்குது நடக்குது

பரிசல்: நந்து எதாவது பொன்மொழி சொல்லியிருப்பாரே!

கார்த்திக்: போன தடவை என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்கா?

பரிசல்: தினம் வரும் போன் அழைப்புகளில் முப்பது சதவிகத்திற்க்கு மேல் பதிவுலக அழைப்புகள் இருந்தால் தொழிலை விட்டு விலகுகிறோம் என்று அர்த்தம்னு சொன்னாரு

கார்த்திக்: தினம் வரும் அழைப்புகளில் ஒரு அழைப்பு கூட பதிவுலகதிலிருந்து வரலைனா நாம பதிவுலகத்த விட்டு விலகி போகிறோம்னு அர்த்தம்ன்னு இப்போ சொன்னாரு!

பரிசல்: ஐயய்யோ இன்னைக்கு ஒரு போனும் வரலையே! சரி வையுங்க, முதல்ல இந்த மேட்டர பதிவா போடனும்.

போனை வைக்கிறார்.

நந்து: என்ன கார்த்தி என்ன வச்சிக்கிட்டே கலாய்கிற.

கார்த்திக்: அத விடுங்கண்ணா, என்ன போட்டோ எடுத்திங்க

நந்து: சொல்ல மறந்துட்டேன், ஆஸ்திரேலியாவுலருந்து பறவைகள் வெள்ளோடு சரனாலயம் வந்துருக்காமாம்.

வாலு: பறவைகள், ஆஸ்திரேலியாவுல கிளம்பும் போதே உங்களுக்கு தந்தி அடிச்சிருமா,

நந்து: இந்த ஆளுக்கு ஊத்தி விட்டு மட்டையாக்குங்கய்யா!

கார்த்திக்: சரிண்ணா நாம நாளைக்கே வெள்ளோடு கொளம்புவோம்,

கூடுதுறை: அப்போ ஆபிஸு

கார்த்திக்: அதல்லாம் வாலு பாத்துகுவாரு

கூடுதுறை:(மெதுவாக) பாத்துகோ சதிஷு, ஓனரு போட்டொ எடுக்க போயிடுராரு, வாலு ஒரு ப்ளாக் விடாம கும்மி அடிக்கிறாரு.

வாலு:சரிங்க வெயிலு அதிகமா இருக்கு, ஒரு பீராவது அடிச்சிகிட்டே பேசலாமே

எல்லாரும்: உங்கூட சேர்த்தா எங்களையும் வீட்டுகுள்ள விடமாட்டாங்க, நீ வேணா கிளம்பு

வாலு கிளம்ப, அதன் பிறகு கூட்டத்தில் என்ன நடந்ததுன்னு வேற யாராவது எழுதுவாங்க!


செக்ஸ் மட்டும் தான் காரணமா?

பரிசல்காரரின் செக்ஸ் தான் காரணமா? என்ற பதிவுக்கு பல்வேறான காரணங்கள் சுட்டிகாட்டி பின்னூட்டம் வந்த்தது. ஆனால் எனக்குள் இது பற்றிய கேள்வி பல வருடங்களாக ஒளித்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் கடைசியில்,இங்கே அது பற்றி என்னுடைய புரிதல்கள்.
குறையிருந்தால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்.

விலங்கியல்.

மனிதன் ஹோமோஎரக்டஸாக இருந்த காலத்திலிருந்தே அவனது உண்மையான தேவை, உணவும்,உறவும் மட்டுமே. அதாவது உயிர் வாழ உணவு, இனத்தை விருத்தி செய்ய உறவு.
இன்றய மனிதனின் மற்ற தேவைகள் எல்லாம் சுயசொறிதலே!.அன்றைய காலத்தில் உணவுக்கு எவ்வளவு கடினப்படனுமோ அதே அளவு அவனது துணையையும் பாதுகாக்க வேண்டும்.இல்லையென்றால் வேறு எவனாவது தூக்கி போய்விடுவான். குரங்கின் மீதுசெய்த ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. மற்றொன்று பெண் விலங்குகளின் குணம், பாதுகாப்பு மற்றும் சிறப்புமிக்க சந்ததியினர். அதற்க்காக ஒரு கூட்டத்தில் யார் பலம் வாய்ந்த தலைவனோ அவனையே துணையாக அடைய நினைக்கிறது.


அறிவியல்

”மனித உடற்கூறுகள்” பாடத்திட்டதில் விலங்கியல் பிரிவிலே தான் வருகிறது. பாடத்தில் இனபெருக்க உறுப்புகளை பற்றி மட்டும் சொல்லி கொடுத்தால் போது என்று இந்த சமூகம் நினைக்கிறது. செக்ஸ் பற்றிய அறியாமையும், மூடநம்பிக்கையும் இங்கேயே ஆரம்பித்து விடுகிறது. இது பற்றி நிறைய விசயங்களை விவாதிக்கலாம், ஆனால் பதிவு திசைமாறி போகும் என்பதால் வேண்டாம்.


உடலியல்

மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற ஒருவர் தோல்வி அடைய வேண்டும் என்பது தான் விதி,ஆனால் செக்ஸில் மட்டுமே இருவரும் விளையாண்டு இருவரும் வெற்றி பெறுவது என்று ஒரு சொலவடை உண்டு, இங்கே எத்தனை ஆண்கள் பெண்களுக்கும் உணர்வின் எல்லை உண்டு என்று அறிகின்றனர். ”பிரிமெச்சூர் இஜாக்குலேஷன்” என்பது ஒரு குறைபாடு,அதற்கு சிகிச்சை உண்டு என்று எத்தனை ஆண்களுக்கு தெரியும்.
அதை கூட பொறுத்து கொள்வாள் பெண், ஆனால் அவளை ஒரு இயந்திரம் போல பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்.கட்டிய மனையிவாக இருந்தாலும் அவளின் விருப்பமில்லாமல் தொடுவது வன்முறைக்கு சமமென்று எத்தனை ஆண்கள் ஒத்துகொள்கிறார்கள்.

என் துணையை தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் உரிமை என்று ஓரினசேர்க்கையாளர்கள் உரிமை கோருகிறார்கள், ஆனால் தன் கணவன் ஒரு bi-sexual என்பதை ஒரு பெண் எவ்வாறு ஏற்று கொள்ளமுடியும்.
நான் ஆண்,அதனால் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் தொடர்பு வைத்து கொள்வேன் என்று சொல்லும் ஆண்களை நீங்கள் பார்த்ததில்லையா?
பெண்களின் உடல் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு ஆணை அவள் எப்படி ஆணாக ஏற்றுகொள்வாள்.


உளவியல்

பேசினால் தீராத விசயமில்லை என்பதால் தான் உளவியலில் கவுன்சிலிங் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தை பொறுத்தவரை சராசரியாக பார்த்தால் வாரத்துக்கு ஒரு மணீநேரம் மனையிடம் கணவன் பேசுவது அரிது. அதே நண்பனுடன் போனில் மணிக்கணக்காக அரட்டையடிக்க தயாராக இருப்பான். நாம் பேச தெரிந்த விலங்கு ஒரு ஆணுக்கு இருக்கும் பொதுவான எதிர்பார்புகள் பெண்னுக்கும் இருக்கும். ஒரு காதலியுடன் மணிக்கணக்காக பேசும் காதலன் அதே காதலி மனைவியாக வரும் பொழுது பழய காதலுடன் பேசுவது சிப்பிக்குள் முத்து.


சமூகம்

ஒரு பெண்ணை இயல்பு மீறி நடக்க வைப்பதும் இந்த சமூகமே! அதே பெண்னை குற்ற உணர்வால் தினம் தினம் சாகடிப்பதும் இந்த சமூகமே!. சமூகத்தின் மேல் எனக்கு பயங்கரமான கோபமிருக்கிறது. அது மட்டும் திட வடிவில் கிடைத்தால் சுக்கல் சுக்கலாக உடைத்து விடுவேன்.

சமூகம் என்பது என்ன? ந்ம்மை தவிர சுற்றி உள்ள அனைத்தும் சமூகம்.
அது எப்பொது உருப்படும்? பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பழக்கம் உள்ள வரை அது உருப்படாது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று சுட்டி காட்ட ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனால் எனக்கு தெரிந்த ஒரே காரணம், நான் ஒழுக்கமானவன் என்று சுய போஸ்டரே!இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

இங்கே நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்கள் போல் நடிப்பதே அதிகம்.
இச்சமூகத்தில் பெண்ணுக்கு ஏது மதிப்பு, உரிமை,சுதந்திரம்.


ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம், இன்றிலிருந்து இருபது ஆண்டுகளூக்கு பெண் குழந்தைகளே பிறக்காது என்றால் என்ன ஆகும். ஒரு பெண்ணுக்கு மூண்று ஆண் துணை இருப்பார்கள். மறுக்கமுடியுமா உங்களால்.

*************************

இவ்விசயத்தில் குழந்தைகள் பாதிக்கபடுவது உண்மை தான், அதற்கும் இந்த சமூகம் தான் காரணம். இதை ஒரு பெரிய விசயமாக சொல்லி அந்த குழந்தையை வளர்க்க வேண்டியதில்லை என்பதே என் வாதம். ஆனாலும் எல்லா குழந்தைகளும் சமூக விரோதிகளாக வளருவதில்லை அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

26 வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண் தனது கணவரை விட்டு வேறொரு ஆணுடன் தன் குழந்தைகளுடன் இடம்பெயர்ந்தார். அந்த ஆண் அதற்கு பின் அந்த குழந்தைகளை தன் குழந்தைகளாக வளர்த்தார், படிக்க வைத்தார்,கல்யாணம் செய்து வைத்தார். இன்றும் அது தான் அவர்களது குடும்பம்.

அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை

பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.

வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே.
ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் கோவையில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஆறு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு தான் ஓவராக மட்டையானாலும் சரியாக என்னை வீட்டில் சேர்ப்பதில் பெரும்பங்கு இவருக்கு தான்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2008) பிறந்த நாள். ஈரோட்டில் இருந்தால் பார்ட்டி தர்றேன்னு தான் சொன்னார். ஆனால் என்னுடய இன்னொரு தம்பியின் திருமணதிற்க்கு அழைப்பிதல் கொடுக்க மதுரை செல்வதால் முடியவில்லை.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

போட்டோ இல்லாததால் போட முடியவில்லை

எல்லாம் முடிவுக்கு வந்தது!!

வெறும் கருத்து வேறுபாடுகளாக ஆரம்பித்தது.
எதோ இரு நாட்டுக்கு நடக்கும் போர் போல ம்ற்றவர்களால் ஆக்கபட்டது அறிந்ததே.
இந்த விவாதங்கள் எதாவது தெளிவை கொடுக்கும் என்று காத்திருந்தால், அது திசை மாறி எங்களுக்குள் பெரும் பகையை மூட்ட தெரிந்தது. நல்லவேளை கணத்தில் சுதாரித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

சில நண்பர்கள் அவர்களுடய கருத்துரிமைக்காகவும் தனியாக அவர்களது ப்ளாக்கில் இதே கருத்து வேற்றுமைகளை பற்றி எழுதிவந்தனர். அவர்களும் இது தேவையில்லாதது என்று புரிந்து நிறுத்தி கொண்டனர். ஆனாலும் பொழுது போகாத சில புல்லுருவிகள். இதை விடுவதாக இல்லை. சிறிது அணைவது போல் தோன்றினாலும். அதை ஊதி பெருசாக்குவதிலேயே பெரும் நேரத்தை செலவிட்டனர்.

எனது பதிவுகளில் ஆபாசமாக பின்னூட்டம் இடுவது, பின்னாலேயே அது அவன் தான் என்றும் பின்னூட்டம் இட்டு சண்டை முட்டி விடுவது. அதே போல் அங்கேயும் என் பெயரில் அதர்ஆப்சனில் ஆபாச பின்னூட்டம் இடுவது போன்ற இழி செயல்களை செய்து வந்தனர். ஒரே நாளில் பேசி தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை மற்றும் என்னை, அவர்களின் பிரச்சனைக்காக பலிகடாவாக ஆக்கி கொண்டார்கள்,அல்லது அவர்களின் பொழுது போக்குக்காக.

இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டி நான் லக்கியிடம் பேச விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். மறுப்பேதும் கூறாமல் உடனே பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். எங்கள் சம்பாஷனையில் எனக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.

இப்பிரச்சனைக்கு முகம் தெரியாத அனானிகள் மட்டுமில்லாமல் கூடவே இருக்கும் சில நண்பகளும் அவர்கள் பங்க்குக்கு பெட்ரோல் ஊற்றி இருக்கிறார்கள், அது அவராகத்தான் இருக்கும் என்றும், இது இவராகாத்தான் இருக்கும் என்றும் அவர்கள் யூகத்தால் பூகம்பம் வரவழைத்திருக்கிறார்கள்.

இனி அது தேவைப்படாது நண்பர்களே இனி ஏதும் பிரச்சனை என்றால் நானே பேசி தீர்த்து கொள்கிறேன். உங்கள் போதைக்கு ஊறுகாயாக எங்களை ஆக்காதீ்ர்கள்.

இதுவரை என் மேல் நம்பிக்கை கொண்டு கடைசி வரை ஆறுதல் தந்த நண்பர்களுகும், கூடவே பழகியிருந்தாலும் நீ தானா அது என்று காயப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

போதைக்காரன்களின் ஆசை

சிக்கன்
மட்டன்
ஊறுகாய்
எதை கண்டாலும்
ஆசைப்படும்
குடிகாரனின் மனது

குடிகாரனின்
நண்பனுக்கும்
ஆசை வருவதுண்டு
”சம்பளம் வந்ததும்
நண்பனுக்கு குவாட்டர்
வாங்கி கொடுக்கனும்”

இந்த எதிர்கவிதையின் மூலம் எங்கே இருக்கு என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு, பத்து பின்னூட்டங்கள் பரிசு

நண்பர் புகழனுக்கு எதிர் கவிதை எழுதுவது தான் மிகவும் சுலபம்.
அவர்கள் பலவாறு யோசித்து எழுதுவார்கள், நமக்கு ஒரே கான்செப்ட் ”சரக்கு”

எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது

போதையில் நான் .....

நீண்ட நெடிய பாட்டில்

சரக்கு இருக்கிறது

க்ளாசும் இருக்கிறது

தனி ஒருவனாக குடிக்கபோவதை நினைத்து

யாருமில்லா அறையில்

யாரை நான் கூப்பிடுவேன்!

எதை நான் கடிப்பேன்!

எங்கள் ஊர் குடிகாரர்கள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

காசில்லாத நேரத்தில் வாங்கி தந்த சரக்காக

நான் எத்தனை முறை வாங்கி தந்திருப்பேன்..!

நன்றியில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

துரோகங்கள் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

குடிக்கும் சரக்கில் போதை குறைவென்று;

சரக்கின் வாசம் என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் கொல்வேன் என்று..!

சியர்ஸ் சொல்ல யாருமில்லாவிட்டாலும்,

இதோ குடிக்க தொடங்கிவிட்டேன்!

போதையே அதிகமாக வேண்டாம்!

போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா
..?

இந்த கவிதைக்கும் இவரின் கவிதைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன

நடிகர்கள் உண்ணாவிரதம்!! 4
தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் காலையில் எழுத ஆரம்பித்தேன்.
சரியாக சத்தியராஜ் பேசிகொண்டிருக்கும் நேரம் கரண்ட் போய் விட்டது. மடிக்கணிணியில் சக்தியும் குறைவாக இருந்ததால் மேலே எந்த கருத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை.

பின் நண்பர் பரிசலிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு எதாவது முக்கிய நிகழ்வுகள் நடந்ததா என்று வினவிய போது அவர் சொன்ன செய்து பெரும் மகிழ்சியை தந்தது.சத்தியராஜ் பேசி முடித்த பிறகு ரஜினி கட்டிபிடித்து பாராட்டினாராம். 

ஒகேனக்கல் பிரச்சனையில் மோதி கொண்ட இருவர் கண்டம் தாண்டிய பிரச்சனையில் ஒன்று கூடியிரிப்பது மகிழ்ச்சி தருகிறது. இன பிரச்சனையில் மொழி சார்ந்த விசயங்களை கடந்து கர்நாடகன், தமிழன் என்றில்லாமல் இந்தியன் என்று ஏற்பட்ட உணர்வை மதிக்கிறேன்.

மனிதன் என்ற உணர்வில் நம் சுயம் அறிந்து நடக்கும் உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் போய்விடுகின்றன. சில நாடுகளில் உலகை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் இன்றளவும் உலக மனித நேய சங்கங்களினால் கண்டிக்கபட்டு வருகின்றன.

நம் இந்தியாவை பொறுத்தவை சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகள், என்னை போன்று மனித நேயத்தை மட்டும் விரும்பி இறைமறுப்பு கொள்கையுடன் வாழ்பவர்களுக்கு பேரதர்ச்சியை தருகிறது. உதாரணம் மும்மையில் ந்டக்கும் இன வெறி.

அதையும் மீறி தமிழகத்தில் இன,மொழி பேதங்களை மறந்து இந்தியன் என்று ஒன்று கூடியிருப்பது, இனி இந்தியா எதை கடை பிடிக்க வேண்டும் என்று தமிழகம் சுட்டி காட்டியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

என் அன்பு நண்பர்களுக்கு ரஜினி அதை செய்தார்,இவர் இதை செய்யவில்லை என்று சொல்வதை விட ரசிப்பு தன்மை அவர்களது தொழிலோடு நிறுத்தி கொள்வது நல்லது.

சத்தியராஜ் பேசியது தமிழனாக வரிகட்டுவதால்
ரஜினி பேசியது தமிழனால் வரிகட்டுவதால்

நடிகர்கள் உண்ணாவிரதம்!! 3அழைக்கும் முன்னரே ராதாரவிக்கு பதட்டம். அவர் மன்சூர் அலிகான்.
மன்சூரின் நக்கலுக்கு தான் சரியான கைத்தட்டல். பெரிதாக உணர்சிவசப்படுவார் என ராதாரவி முன்னரே எச்சரிக்கை விடுத்ததும்,மைக்கின் முன் வந்தவுடன் பேச முடியாத ஊமை போல் நடித்து அசத்தினார். பின்னர் என் சகோதரனின் துயரத்தை பேசகூடமுடியவில்லை என்று சூடாக பேசினார். ஆவேசமாக பேச கூடாது என்ங்கிரீர்களே,பின் ஏன் சினிமாவில் கதாநாயகன், வில்லனை அடிக்க வேண்டும். ஐயா ஐயா நீங்க ரொம்ப நல்லவரு தயவுசெய்து ஹீரோயின விட்ருங்க என்று கெஞ்ச வேண்டியது தானே என்றார். பாயிண்ட் எனக்கு சரியா தான் படுது. ஒரு வில்லன் நடிகருக்கு இருக்கும் மனிதநேயம் கதாநாயகர்களுக்கு இல்லை. 

நடிகரல்லாது ஆனாலும் நடிகர்களை பாராட்ட வந்த வெள்ளையனை எல்லா நடிகர்களும் பாராட்டினர்.

அஜித் உண்மையிலேயே சாப்பிடால் வந்திருப்பார் போல,அவரால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை.

மற்றவர்கள் பேவதை காட்டிலும் ரஜினி,கமல் தங்களுக்குள் பேசி கொண்டிருப்பதே அடிக்கடி காட்டி கொண்டிருந்தார்கள்.

ரஜினி எந்திரனுக்கு தயாராகி விட்டார் போல மழுமழு என்று வளித்து கொஞ்சம் வயதை குறைத்திருந்தார்.

மனோரமா ஆச்சி காலை ஏழு மணிக்கே வந்திருந்து தன் இனத்தின் மீதுள்ள பாசத்தை காட்டியுள்ளார்.

ராதாரவி யாரையும் சூடாக பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு பயங்கர சூடாக பேசினார்.  அரிதாரம் பூசியர்கள் கூட்டத்திற்க்கு வர வேண்டாம் என்று சொன்னவர்களை சாடினார். அது யாரென்று தெரியவில்லை.  இயக்குனர்கிங்க்கே வெளிச்சம்.

பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி விளம்பரம் போட்டு உயிரை வாங்கிய சன் நிறுவனத்துக்கு திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையை தரக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மீண்டும் ராதாரவி
 இலங்கை வாழ் தமிழர்களுக்கு இன ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக ஒருவன் தூக்குமேடையிடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறான். அவனுக்காக இந்தியாவே குரல் கொடுக்கிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் சகோதரனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே குரல் கொடுக்கப்படுகிறது. அதனால் இனி அவனை ஈழதமிழன் என்று அழைக்கவேண்டாம். அவனை இலங்கை வாழ் இந்தியன் என்று அழைப்போம் என்றார்.

திருமாவளவன்
ராதாரவி சொன்னது போல் இலங்கை வாழ் தமிழர்கள் வந்தேறிகள் அல்ல!
அவர்களது பூர்வீகமே இலங்கை தான். சிங்களர் தான் வந்தேறிகள் என்றார். 

திருமா சொல்வது உண்மையென்றாலும் நமது பக்கத்து நாட்டில் கண்முன்னே நடக்கும் இன படுகொலைகளை பார்த்து கொண்டிருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு அழகல்ல

நடிகர்கள் உண்ணவிரதம் 2


சுந்தர் சி
இலங்கையில் ஒரு கதையுண்டு.  அது ஒரு காதல் கதை, ஒருநாள் ஒரு காதலர்கள் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறார்கள், யார் முதலில் சொல்வது என்பதில் காதலன் முந்துகிறான். அவனது செய்தி சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட அழைப்பு வந்திருக்கிறது, கேட்டவுடன் காதலியின் கண்ணில் நீர், உனது செய்தி என்னவென்று கேட்கிறான். அவள் சொல்கிறாள்,அடிமை ஈழத்தில் காதலர்களாக இருப்பதை விட சுதந்திர ஈழத்தில் கல்லறைகளாக இருப்பேன் என்று


அடிக்கடி விளம்பர இடைவேளை கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கிறது.
அதிலும் வரவிருக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் விளம்பரத்தை ஐம்பது தடவை பார்த்துவிட்டேன்.

விஜயகாந்த்
நடிகர் சங்கத்தில் மத்திய அரசையும்,மாநில அரசையும் கூடவே இலங்கை அரசையும் கண்டித்து பேசக்கூடாது என்று தடை விதித்து விட்டார்களாம். இருப்பினும் நான் எதிர்பார்த்ததை போலவே இந்த மேடையை பொதுகூட்ட மேடையாக பயன்படுத்தி விட்டார். பேச மட்டேன்,பேச மாட்டேன் என்று நிறையவே பேசினார்.
பேச்சின் முடிவில் மெழுகுவர்த்தி கொளுத்தும்போது கூடவே கார்த்திகும் கட்டிகொண்டது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

நடிகர் சங்கத்து பேச்சை முடித்து விட்டு விஜயகாந்த் வெளியே கிளம்பினார்(அப்போ உண்ணாவிரதம்) அங்கே தடை இருந்ததால் அரசியல் பேச முடியவில்லை என்று கூறிவிட்டு இன்றைக்கு நடக்கும் அரசாங்கம் ஈழ பிரச்சனையை சரியாக அணுகவில்லை, என்றும் ம்ற்ற விசயங்களை திசை திருப்பவே இதை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

எஸ்.ஜெ.சூர்யா
இவர் பேசியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
எதற்க்காக இலங்கை அரசை கொஞ்சவெண்டும். அவர்களுக்கு இங்கேயே ஈழமதுரை ஒன்றை தொடங்குவோம். ஈழசேலம் ஒன்றை ஆரம்பிப்போம் என்றார். குடும்பத்துக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் போதும், நம் சகோதரர்கள் இங்கே நிம்மதியாக வாழ்வார்கள், இது எனக்கும் சரியாகத் தான் படுகிறது

நடிகர்கள் மேடையில் பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே வரும் நடிகர்களிடம் பேட்டி எடுத்து அலும்பு செய்தது சன் தொலைக்காட்சி, அதான் மேடையில் பேச போகிறார்களே அதற்க்குள் என்ன அவசரம் என்று தெரியவில்லை.

நடிகர்களின் நன்கொடை அல்லாது கூடவே அவர்களின் ரசிகர்களும் நன்கொடை வழங்கியது, அவர்கள் மேல் கொஞ்சம் மரியாதை வர வைத்துள்ளது.
நடிகர்கள் உண்ணாவிரதம்!!

லேட்டாக எழுந்ததால் நான் பார்த்ததிலிருந்து ஆரம்பம்
அதிலும் என்னை கவர்ந்தவை மட்டும்

பொன்வண்ணன்

இந்தியாவிர்க்கும்,இலங்கைக்கும் கருவறை உறவு,
ஆதாம்,ஏவாள் பிறந்தகாக கருதப்படும் லெமூரீயா கண்டத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒன்றாகதான் இருந்தது. 
கனடா,லண்டன் போன்ற நாடுகளில் இலங்கை தமிழர்கள் வாழ உரிமை அளிக்கப்படுகிறது.அங்கே அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு வாழ உரிமை இல்லை.இங்கே தான் அவர்கள் அகதிகள்.

ஷாம்
இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களே எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்

நடிகர்சிவக்குமார்
 தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் உடன் வந்திருந்தார்.
அவர்கள் சார்பாக ஐந்துலட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
 பிரதமர் அனுமதியுடன் கலைஞர் மற்றும் தமிழ் தலைவர்கள் இலங்கை சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது அவரது நீண்ட நாள் கனவாக இருக்கிறது என்றார்.


மணிவண்ணன்
மற்றவர்கள் போல் அல்லாமல் இவர் சிறை சென்று திரும்பிய சீமானுக்கும், அமீருக்கும் வணக்கம் சொன்னார்.உலகில் பலநாடுகளில் மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படலாம். ஆனால் எங்கேயும் உயிர்வாழும் உரிமை மறுக்கப்படவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கு மறுக்கபடுகிறது என்றார்.

விவேக்
தமிழன் எந்த ஊருக்கு சென்றாலும் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த இடம் முன்னேற உழைக்கிறான், ஆனால் கடைசியில் அவன் தான் ஏமாற்றபடுகிறான். அதை உணர்ந்த பின் தான் போராட்டம் என்றார்.

இளவரசு
நாடெங்கும் மிருகங்களின் உரிமையை பாதுகாக்க மிருக வதை சட்டம் இருக்கிறது. ஆனால் மனித வதை சட்டம் எங்கேயும் இல்லை. மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய சபைகளே அதை கண்டு கொள்வதில்லை என்றார்.


எழுத்து பிழைகளை பொறுத்தருள்கயார் பெரியவன்!
இந்த ஒரு சாட்சியே உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
இனிமேலாவது மொக்கை சாமிகள் என்னிடம் மோதும் போது ஜாக்கிரதையாக இருங்கள்


பேரிழப்பும், பெருங்குழப்பமும்!!முதலில் மத்திய அரசுக்கு கண்டங்கள் என்று தான் தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். நமது பதிவுலக அரசியலில் ஒன்றை பிடிக்கவில்லை என்றால் மற்றொன்று பிடித்தே ஆகவேண்டிய கட்டாய சூழல். நான் இந்த,அந்த கட்சிக்கு தொண்டன் என்ற முத்திரை பிடிக்காததால் அந்த தலைப்பை தவிர்க்கிறேன்

இந்த பதிவு வாழ்வியல் மூலஆதாரங்களை பற்றியது.
என் வணிகமும் சம்பந்த பட்டிருந்தாலும் குற்றம் குற்றம் தானே.
இத்துடன் ஒரு வருட கச்சா எண்ணையின் வார சார்ட்டை இணைத்திருக்கிறேன்.சென்ற வருட மே மாதம் விற்ற விலையில் இப்போது கச்சா எண்ணெய் வியாபாரம் ஆகிகொண்டிருக்கிறது. இந்திய பண மதிப்பில் ஒரு பீப்பாயின் விலை மூவாயிரத்து ஐநூறுக்கும் கீழே. இதே விலையில் இருந்து தான் கச்சா எண்ணெய் ஆறாயிரத்துக்கு உயர்ந்தது. நஷ்டம் பொறுக்க முடியாமல் விலையேற்றிய அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விலையேற்றியது.

தற்பொழுது கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சிக்கு பின்னும் பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? இரண்டு காரணங்கள் இருக்கலாம், ஒன்று பெட்ரோலிய நிறுவனக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாரிக்க அரசாங்கத்தை தன் வசப்படுத்தி விலையை குறைக்காமல் வைத்திருக்கலாம். இரண்டு வரவிருக்கும் மத்திய அரசு தேர்தலில் மக்கள் தொண்டன் வேடம் போட தன் கை காசை கொடுப்பது போல் தேர்தல் நேரத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது.

அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மேல் அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மைனஸில் போய் கொண்டிருக்கிறது.

பணவீக்கத்தின் மூல காரணம் பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் என்பது பள்ளி மாணவனுக்கும் தெரியும். இவர்களுக்கு தெரியாமலா இருக்கும். வங்கியின் கையிருப்பை குறைப்பதால் பணப்புழக்கம் அதிகமாகலாம் ஆனால் பணவீக்கம் குறையுமா. பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றமே பணவீக்கத்திற்கு காரணம் என்பதை சிறு உதாரணத்துடன் சொல்ல விருப்புகிறேன்.

தக்காளியை எடுத்து கொள்வோம். ஆண்கள் தங்கமணியிடம் கேட்டு பாருங்கள் என்ன விலை இப்போது என்று. ஈரோட்டில் எடையை தவிர்த்து ஒரு தக்காளி இன்ன விலை என்று விற்று கொண்டிருக்கிறார்கள். சாமான்யனும் வாங்கி கொண்டிருந்த தக்காளிக்கு என்ன வந்தது. அதே நிலம் அதே விவசாயி ஆனால் விலை மட்டும் உயருகிறது. காரணங்கள் அகரத்தில் இருந்து பார்ப்போம்

பயிரிட விவசாயி நிலத்தை உழவேண்டும். டீசல் விலை உயர்வால் ட்ராக்டர் கூலி அதிகம். அடுத்த விதைகள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாகி விட்டதால் விதையும் விலையுயர்வு. அடுத்து உரம், தயாரிக்க ஆகும் மூலப்பொருள்கள் விலையுயர்வு. காரணம் போக்குவரத்து கட்டணம். தயாரித்த உரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கட்டணம் உயர்வு. எல்லாம் ஆகிவிட்டது, அறுவடை முடித்து மார்கெட் கொண்டுவர மீண்டும் கட்டணம் அதிகம் காரணம் அனைத்திற்கும் ஒன்று தான் பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வு.

பிரச்சனைகளை திசை திருப்பி விடுவது அரசாங்கத்திற்கு கை வந்த கலை. எனக்கு விபரம் தெரிந்த வரையில் அதில் எப்போதும் அவர்கள் தோற்றதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் பூனைக்கு யார் மணிக்கட்டுவது. அடிமட்டத்தில் இருப்பவனுக்கு பெட்ரோல் நேரடி தேவையில்லை, ஆனாலும் விலையுயர்வுக்கு காரணம் பெட்ரோல் தான் என்பதும் தெரியாது, நடுத்தர வர்க்கம் நாளை என்ற நாளில் நானும் இருக்க வேண்டும் என்ற வெறியிலே ஓடிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. பெட்ரோல் விலையேறி விட்டதா பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில் போகலாம் என்பான். மேல் தட்டுக்கு என்ன விலை விற்றாலும் கவலை இல்லை.

ஆகமொத்தம் அரசாங்கம் என்னும் அதிகாரமையத்திடம் வாழ்நாள் முழுவதும் கையேந்தி நிற்கும் விளிம்பு நிலை பிச்சைகாரர்கள்(மக்கள்) தான் நாம் போல

அன்றைய அரசியலும்! இன்றைய அரசியலும்!

பிரபஞ்சனின் சித்தன் போக்கு சிறுகதை தொகுப்பு படித்தவர்களுக்கு, மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வராது ஒருவித பரிதாப உணர்வே ஏற்படும்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே தவறு செய்ய பிறக்கவில்லை. சூழ்நிலையும் இயலாமையுமோ அவனை தவறு செய்ய தூண்டுகிறது என்று அருமையாக விவரித்திருப்பார். அதில் இருபது கதைகள் இருந்தாலும் அதில் ஒன்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.தியாகி என்ற தலைப்பில் இருக்கும் சிறுகதை அது. ஒரு சுதந்திர போராட்ட தியாகி தனது பென்ஷன் பணத்தை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக வந்திருப்பார். அதிகாரிக்கோ பெரும்குழப்பம். ஒருவேளை பைத்தியமாக இருக்குமோ என்று நினைத்து காரணத்தை விசாரிக்கிறார். அவருடைய பதில்.

ஒருவன் பணத்தை நான்கு வழிகளில் பெறலாம். ஒன்று உழைத்து சம்பாரிப்பது. என்னால் உழைக்க முடியாது, முதுமை காரணமாக வேலை செய்யும் திறனை இழந்து விட்டேன். இரண்டு திருடலாம், நான் காந்தியவாதி திருடமாட்டேன். மூன்றாவது கடன் வாங்கலாம், என்னால் கடனை திருப்பி தர முடியாது அதனால் கடன் வாங்க மாட்டேன். நான்காவது வழி தானம் பெறுதல் ஆகவே பென்ஷனை தானமாக நினைத்து பெற்றேன். இப்போது என் மகன் படிப்பை முடித்து வேலைக்கு செல்கிறான். அவன் எனக்கு ஒரு பிடி சோறு போடுவான். வாழ்வதற்குண்டான தகுதி படைத்து தானம் பெறுபவன் சண்டாளன். ஆகவே எனக்கு பென்ஷன் வேண்டாம் என்பார்.

சுதந்திர போராட்டத்திற்கு முன் என்ன தொழில் செய்தீர்கள் என்று கேட்பார்.
லட்ச லட்சமாக சம்பாரித்து கொண்டிருந்த நான் தாய் நாட்டின் மீது ஆர்வம் கொண்டு பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டு போராட்டத்தில் இறங்கினேன் என்பார். ஏன் போராட்டத்தில் இருந்து கொண்டே வியாபாரத்தையும் பார்த்திருக்கலாமே என்ற அதிகாரியின் கேள்விக்கு அவரது பதில்

நீங்கள் இளைஞர், இந்த காலத்தவர். நிகழ்கால அரசியலும், அரசியல்வாதிகளும் உங்களை இப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள். எங்கள் காலத்து அரசியல் வேறு. அரசியலுக்கு எங்கள் அர்த்தம் வேறு. அரசியல் என்றாலே ஆட்சி மாற்றம் என்பதையே குறியாக வைத்து இன்றைய அரசியல் இயங்குகிறது. எங்களுக்கும் ஆட்சி,அதிகார மாற்றம் நோக்கமாக இருந்தது. ஆனால் அது பத்தாவது நோக்கம், எங்களை பூரணப்படுத்தி கொள்வதையும், பொதுமக்களை மனதளவில் முழுமைப்படுத்துவதுமே எங்கள் முதலான அரசியல் பணியாக நினைத்தோம். அரசியலை ஒரு புனிதமான பணியாக ,தொண்டாக நாங்கள் நினைத்தோம். ஒருநாளில் இருபத்திநான்கு மணி நேரத்தையும் தேசசேவைக்காக அர்ப்பணித்தோம். தேசசேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மனிதனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்காது. ஒரு மனிதன் ஏக காலத்தில் இரண்டு மனைவிகளுடன் இல்லறம் நடத்துவது எவ்வளவு இழிவோ, நீசத்தனமோ, அந்த அளவிலும் இழியது ஒரு அரசியல்வாதி வியாபாரியாக இருப்பது என்று நாங்கள் நினைத்தோம்.

இதுதான் அந்த கதையின் சாராம்சம் மட்டுமே, இதிலேயே தேவையான கருத்துக்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு நாட்டில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் நான் வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

சினிமாவும், நானும் கூடவே வாலும்

என்னை இந்த பதிவிற்கு அழைத்த லேகாவுக்கும் கார்க்கிக்கும் நன்றி!
இதில் என்ன காமெடிஎன்றால் எந்த தொடருக்கு நம்மை அலைபார்களா என்று ஏங்கி கொண்டிருக்கிறோமோ அதில் கழட்டி விட்டு விடுவார்கள். நமக்கு தெரியாத விசயத்தில் மாட்டி விடுவது நண்பர்களுக்கு பிடித்த விஷயம். சரி சினிமா கூட தெரியாதா என்று கேட்கிறீர்களா. கடந்த மூன்று வருடத்தில் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் ஒன்றே ஒன்று.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
ஆனாலும் திருப்பரங்குன்றம் ராஜா தியேட்டரில் விக்ரம் பார்த்ததாக ஞாபகம்.
அப்போது எதுவும் உணரவில்லை.

ஆனாலும் இன்னொரு சுவாரிசயமான சம்பவம் ஞாபகம் வருகிறது.
விடுமுறைக்கு சென்னையில் உள்ள மாமா வீட்டுக்கு போயிருந்தேன்.
சினிமாவுக்கு போகலாம் என்று மாமா பையனையும் அழைத்து கொண்டு சென்றேன். செங்குன்றம் லட்சுமி தியேட்டரில் "தென்றல் சுடும்" என்ற படம். ராதிகா நடித்தது.
படம் போடும் வரை அமைதியாக இருந்த மாமா பையன் திடீரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான். அப்போது சிறுவர்கள் என்பதால் திரைக்கு முன்வரிசையில் மிக அருகில் அமர்ந்திருந்தோம். எனக்கோ காரணம் ஒன்றும் புரியவில்லை. அவனோ வீட்டுக்கு போகலாம் என்று அழுதுகொண்டிருக்கிறான். வெளியே அழைத்து வந்து என்னவென்று கேட்டால், அப்போது தான் முதன் முதலில் தியேட்டருக்கு வருகிறானாம். திரையில் அவ்வளவு பெரிய மனிதர்களை அதற்கு முன் பார்த்ததில்லையாம். இப்போது அதை சொன்னால் அவன் பொண்டாட்டி(என் தங்கை) அடிக்கவருகிறாள்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடந்த மூன்று வருடத்தில் திரையரங்கில் நான் பார்த்த சினிமா "தசாவாதாரம்"
ஏற்கனவே இதை பற்றி பலரும் எழுதி விட்டதால் நான் விமர்சனம் எழுதவில்லை.
தற்போது வந்த தகவல்படி பில்லாவுடன் சேர்த்து மூன்று வருடத்தில் இரண்டு படம் பார்த்திரிக்கிறேன்.(தெளிவா போனா தானே ஞாபம் இருக்குறதுக்கு)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

தினமும் தொலைகாட்சியில் பிட்டு பிட்டாக பார்க்கும் வழக்கமுண்டு. நகைச்சுவை படமென்றால் மட்டுமே முழுதாக பார்ப்பேன். கடைசியில் திரையரங்கு தவிர்த்து முழுதாக பார்த்த தமிழ்படம். சுப்பிரமணியபுரம். மதுரையிலிருந்து ஈரோடு வரும் போது பேருந்தில்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய உண்டு பராசக்தியிலிருந்து சுப்பிரமணியபுரம் வரை.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சினிமா நடிகர்கள் மட்டும் தான் அரசியலுக்கு தகுதியானவர்கள் என்ற மனப்போக்கு.
திரையில் செய்யும் சாகசத்தை எல்லாம் நேரிலும் செய்வார்கள் என்று நினைக்கும் மக்களின் அறியாமை. அதை வைத்து அவர்கள் செய்யும் அரசியல்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒலி அமைப்பையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் உணர்கிறேன். மிக நுட்பமாக தொழில் நுட்பத்தை பார்க்கும் நுண்ணறிவு எனக்கில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு. ஆனந்தவிகடன், குமுதம் படிப்பேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இது தலைமுறை வித்தியாசத்தில் மாறுகிறது.
முதலில் எம்.எஸ்.வியில் ஆரம்பித்து இளையராவின் ஆட்சிக்கு பிறகு நிலையான ஆட்சியை யாரும் பிடிக்கவில்லை என்பதே உண்மை. ரகுமானின் இசையில் மயங்கினாலும் ஆங்காங்கே வரும் புதிய இசையமைப்பாளர்கள் அட போட வைப்பார்கள். நல்லது தான் போட்டியில் தான் தரமான சரக்கு நமக்கு கிடைக்கும்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனது பாஸ் கார்த்திக்கின் உதவியால் பல்வேறு மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாரபட்சமின்றி எல்லா மொழி படங்களையும் பார்க்கிறேன். முக்கியமாக பிரான்ஸ்(அங்கே சென்சார் இல்லை) குறிப்பாக தாக்குபவை என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இன்னமும் என்னை தாக்குகின்றன.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் படப்பிடிப்பில் இருந்த சமயம் ஒரு நண்பரின் உதவியுடன் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக வேலை கேட்டு போயிருந்தேன். பார்த்திபன் என்ற அவரது உதவியாளர் நேர்முக தேர்வு செய்து அடுத்த படத்திற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின் ராஜிவ்மேனன் படமே எடுக்கவில்லை.
அதன் பின் சினிமா துறையில் சேர பெரிதாக சிரத்தை எடுத்து கொள்ளவில்லை. மீண்டும் செய்யும் வாய்ப்பும் இல்லை. ஆனால் குறும்படம் எடுக்கும் ஆவல் உண்டு.
தமிழ்சினிமாவில் நான் இல்லாததே அது மேம்பட நான் செய்யும் உதவி

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆட்டுமந்தை ரசிகர் கூட்டம் இருக்கும் வரை அதன் எதிர்காலத்திற்கு எந்த குறையுமில்லை. ஒருவேளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்பட்டால் கொஞ்சம் சறுக்கலாம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் இப்போதும் எனக்கு அப்படி தான் இருக்கிறது. பல தமிழ் மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும் வாய்புண்டு என்று தெரிகிறது.


இப்பதிவை தொடர நான் யாரையாவது அழைக்கவேண்டும்.
கிட்டத்தட்ட அனைவரும் எழுதி விட்டனர். அப்படி எழுத வில்லைஎன்றால் தயவு செய்து எழுதி என் மானத்தை காப்பாற்றுங்கள்.

1.தருமி

2.ஜாலிஜம்பர்

3.நல்லதந்தி

4.ஆர்.கே.சதீஷ்குமார்

5.ஜ்யோவ்ராம் சுந்தர்

மீண்டும் ஒருமுறை என் ஞாபங்களை நினைவுகூற வைத்த சகா கார்க்கிக்கும் தோழி லேகாவுக்கும் நன்றி
வால்பையனும், வாசிப்பும் பின்னே ஞானும்!!

உனக்கு என்ன தெரியும்னு எழுதுற!

ஒண்ணும் தெரியாதுங்க!

ஒண்ணும் புரியாம தெரியாம எழுதி எங்களையும் முட்டாள் ஆக்கக்கூடாது புரியுதா

சரிங்க

இனிமே எதுவும் எழுதக்கூடாது

சரிங்க, ஐயா ஒரு சந்தேகம்

என்ன

என் சம்சாரந்தான் வீட்ல சமைக்கிறாங்க

சரி

அவுங்க கேட்டரிங் காலேஜெல்லாம் போனதில்லை

அதுக்கு

ஒண்ணும் புரியாம, தெரியாம சமைக்ககூடாதுன்னு நிறுத்த சொல்லிருட்டுமா

**********************************

இணையத்தினால் நாம் பெற்றது என்னவென்றால் சொல்லோரும் சொல்வது நல்ல நண்பர்கள். ஆனால் இழப்பு,அனைவராலும் ஒத்து கொள்ளபடுவது புத்தக வாசிப்பு.
நிறைய நண்பர்கள் புத்தகம் வாசிக்க என்னை ஊக்குவிக்கிறார்கள். பின்னூட்டநாயகன் கும்கி ஒரு பை நிறைய புத்தகங்கள் எடுத்து கொண்டு என்னை தேடியே வந்துவிட்டார்.

ஆனாலும் இயற்கையின் அமைப்பில் நிறைய குறைபாடுகளும் இருக்கிறது. அது ஒருவருக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போவது. ஒருவருக்கு ரஜினி பிடித்தால் ஒருவருக்குய் கமல் பிடிக்கிறது, ஒருவருக்கு குச்சி ஐஸ் பிடித்தால் ஒருவருக்கு கப் ஐஸ் பிடிக்கிறது. எல்லோருடனும் ஒத்து போகும் இயந்திரமாக பிறக்கவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

குறுநாவல், சில பயணக்குறிப்புகள் தவிர்த்து வாழ்வியல் சார்ந்த கதைதொகுப்புகளை படிக்கும் போது, பாசமலர், பாவமன்னிப்பு படம்பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுமே அது போல் எனக்கும் வருக்கிறது. தனிமையில் இருந்தாலும் அது எனக்கு பெருத்த வெட்கத்தை வரவழைக்கிறது என்று வெக்கப்படாமல் சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல கதை நடைகள், நிகழ்வுகளில் தொகுப்புகள் படிப்பது நல்ல அனுபவமே! ஆனால் மனநிறைவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. ஒரு சிறு ஜனரஞ்சக கதை தொகுப்புகளில் திருப்பி அடைந்து விடுகிறேன். இது நுனிப்புல் மேயும் வேலை தான்.கண்டிப்பாக நண்பர்கள் சிபாரிசு செய்யும் கதைகளை படிப்பேன். ஏனென்றால் அரைகுறை தெளிவுகள் வேறொரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும்.

நான் எழுதுகிறேன் என்பதை விட கிறுக்குகிறேன், உளறுகிறேன், புலம்புகிறேன் என்பதே சரியாக இருக்கும். எழுதுவதற்கு முன் நான் எந்த ஒத்திகையும் பார்ப்பதில்லை. ஒத்திகை பார்த்து நண்பர்களிடம் சொன்னதில் ஒன்று கூட எழுத முடியவில்லை. கணினியில் அமர்ந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பதிவு செய்வது தான் என் வழக்கம். அது மாபெரும் அபந்தமாக இருந்தாலும் அது என் அறியாமையின் சுவடுகளாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

இம்மாதிரியான எழுத்துகளில் பெரும் ஆபத்து இருக்கிறது. சில உணர்பூர்வமான எழுத்துகள் உண்மை என்று நம்பப்படும் வாய்ப்புகள் அதிகம். அது மாபெரும் தவறு என்று நான் உணர்கிறேன். நண்பன் தியாகு கூட ஒவ்வொரு பதிவிற்கும் "ஏன் இப்படி உளறி கொட்டுகிறாய்" என்று அலைப்பேசியில் அழைத்து திட்டுவான்

ஆனாலும் இது வகையில் எனக்கு நன்மையே! தெரிந்தவர்களிடம் தெரியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்வார்கள். நான் அதையையே வேறு மாதிரி சொல்லி நீங்கள் தரும் சரியான கருத்துகளை புரிந்து கொள்கிறேன். என்னுடைய பதிவுகள் பல அம்மாதிரி எனக்கு சொல்லிகொடுத்தவையே. ஆனாலும் புரியாமல் எழுவது தவறு என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு என்ன சொல்லலாம்.

இயேசு சொன்னாராம், எவனொருவன் எந்த குற்றமும் செய்யவில்லையோ அவன் அவள் மீது கல்லெறியுங்கள் என்று. நான் இயேசு அல்ல, குற்றவாளி கூண்டில் நிற்கிறேன். ஆனாலும் இந்தய அரசியல் சட்டப்படி ஒரு குற்றவாளி தனக்காக வாதாட உரிமை இருக்கிறது. அதன்படி யாரொருவர் ஒன்றை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்று நம்புகிறீர்களோ, அதனை தர்க்க ரீதியாக பின்வாங்காமல் வாதம் செய்யமுடியும் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கு

வாயில் சிகரெட் பிடித்து காதில் புகைவிடும் கலையை கற்று தருவேன்.

கொஞ்சம் இங்கே வாங்களேன்!!

எனதருமை நண்பர்களுக்கு!

கடந்த திங்கள் முதல் சீனா ஐயாவின் வேண்டுகோளுகிணங்க பலரும் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வலைசரத்தில் இந்த வார ஆசிரியராக எழுதி கொண்டிருக்கிறேன். பல பணிகளுகிடையே ஐயாவின் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவும் தேவைபடுகிறது.

இது வரை அதில் எழுதிய பதிவுகள்

நான் சந்தித்த பதிவர்கள்!!


மீண்டும் ஒரு முறை!!


இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்!!


நன்றி

கடவுளும், டெர்மிநேட்டரும்
மதுரையில் வாழ்ந்தவர்களுக்கு ஆங்கில திரைப்படம் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அதிக படங்கள் திரையிட திரையரங்குகள் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கவுண்டரில் நிற்கும் பொழுது சக ரசிகனின் ஞானம் நம்மை ஆச்சரிய படுத்தும், சில அதிர்ச்சியை தரும், சிலவைகள் கோபத்தை வரவழைக்கும்.

நமது மக்கள் திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்பது உண்மையே, சில வருடங்களாக திரைப்பட அனைத்து துறை கலைஞர்களையும் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது, நடிகர்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலகம், இன்று அந்த இயக்குனர் படமென்றால் தவறாமல் பார்ப்பேன் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இது சினிமா பற்றிய பதிவு தான். ஹாலிவுட்டில் ஆரம்ப நாட்களில் நாடக பாணி படங்களே வெளிவந்தன, ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ஃபிக்சன் தொற்று வியாதியை போல் எல்லோருக்கும் பத்தியது. ஆனாலும் நிலைத்தது சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஜேம்ஸ் கேமரூன், இவரை தெரியாதவர்களுக்கும் இவரை அடையாளம் காட்ட ஒரே படம் போதும், அது டைட்டானிக்.
ஸ்பீல்பெர்க் ஏலியன்கள்(ஈ.டி, க்ளோஸ் என்கவுண்டர்) படங்களில் அவைகளை நல்ல விதமாக காட்டி அவைகளின் மேல் ஒரு மரியாதையை காட்டியிருந்தாலும். கேமரூன் தனது ஏலியன் படத்தில் அவைகளை கொடுரமாக காட்டி முரட்டியிருப்பார். அவருக்கு முதல் படம் இது இல்லை என்றாலும் ஏலியன்(ALIEN) தான் அவருக்கு பெயர் பெற்று தந்த படம். அதில் நடித்த சிக்யூரணி வீவரும் அந்த படத்தின் மூலமே புகழ் பெற்றார்.மேலுள்ளவைகள் அவரைப் பற்றிய அறிமுகம் மட்டுமே. இந்த பதிவு டெர்மினேட்டர் என்ற படத்தை பற்றி, அதன் முதல் பாகத்தை வி்ட இரண்டாம் பாகமே பரபரப்பாக பேசப் பட்டது. காரணம் அதிலிருந்த கிராபிக்ஸ் காட்சிகளும் சிறு வயது ஜான் கானராக நடித்த சிறுவனும் தான். முதல் பாகம் , இரண்டாம் பாகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் திரையிடப்பட்டது. தொடர்ச்சி விடப்படக்கூடாது என்ற எண்ணத்தில் வெளியிட்டாலும், அவர்கள் சொன்ன காரணம் படத்தில் அதி பயங்கர வன்முறை காட்சிகள் என்று. தன் கண்ணை தானே அர்னால்டு புடுங்கம் காட்சியை தவிர வேறொன்றும் அதில் பெரிதாக வன்முறை இல்லை.

படத்தின் கதை, இன்னும் சில வருடங்கள் கழித்து பூமி முழுவதும் இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் வரப்போகிறது. அப்போது அவர்களின் ஒரே எதிரி மனிதர்கள் மட்டுமே.
அப்போதும் அந்த இயந்திரங்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது நாயகன் ஜான் கானர். மனிதர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமையேற்று இரக்கமற்ற இயந்திரங்களுக்கு எதிராக போர் நடத்தி கொண்டிருப்பான். சரி இது கதை தானே இங்கே கடவுள் எங்கிருந்து வருகிறான் என்று கேட்கிறீர்களா, அது பற்றிய உரையாடலை கீழே பாருங்கள்
நண்பன்: ஒரு குழுவுக்கு தலைவனாக இருப்பதால் அவனை கடவுள் என்கிறாயா?

நான்:கடவுள் தோன்றியது அப்படி தான் என்றாலும் நான் அதை சொல்லவில்லை

நண்பன்:வேறு எப்படி?

நான்:பைபிள் படித்திருக்கிறாயா

நண்பன்:ஆம்

நான்:அதில் இறைதூதராக வரும் இயேசுவுக்கு தந்தை இல்லை தானே.

நண்பன்:ஆம்

நான்:அதனால் தான் அவரையும் கடவுளாக கிறிஸ்துவ மதம் பார்க்கிறது இல்லையா

நண்பன்:ஆம்

நான்:இந்த கதையிலும் நாயகனுக்கு தந்தை இல்லை, அப்படியானால் அவனும் கடவுள் தானே

நண்பன்:தந்தை இல்லையா? என்ன கதை விடுகிறாய்

நான்:கதையே அப்படி தான். கேள்

ஜான் கானரை அழிக்கமுடியாமல் திணறும் இயந்திரங்கள், அவன் பிறப்பதற்கு முன்னாள் சென்று அவனது அம்மாவை அழித்துவிட்டால் அவன் பிறக்க மாட்டான் என்று அவனை அளிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது, (அந்த பாத்திரத்தில் தான் அர்னால்டு நடித்திருப்பார்) இதை தெரிந்து கொண்ட ஜான் கானர் தானும் அவ்வழியே முற்காலத்திற்கு சென்று தன் தாயை காப்பாற்றுகிறார். முன்னரே குறிப்பிட்ட படி அப்போது அவர் பிறக்கவே இல்லை. அவருடைய அம்மாவுக்கும் திருமணம் ஆகவில்லை. கதையின் ஒரு கட்டத்தில் தான் எப்படியும் இறப்பது உறுதி என்று தெரிந்ததும் தன் அம்மாவுடனேயே கூடுகிறார். இறுதியில் அந்த இயந்திரத்தை அழித்து தானும் இறக்கிறார்.

நண்பன்:இதில் கடவுள் எங்கே

நான்:மடையா! ஜான் கானர் கூடியதால் அவர் அம்மாவுக்கு உருவாகும் சிசு தான் ஜான் கானர்.

நண்பன்;அவர் தான் இறந்து விடுகிறார்

நான்:பத்து மாதம் கழித்து மீண்டும் தன் தாயின் மூலமாக பிறக்கிராரே

நண்பன்:அப்படியானால்

நான்:ஜான்கானர் ஒரு சுயம்பு, தன்னை தானே உருவாக்கி கொண்டவர், அப்படியானால் கடவுள் தானே


டிஸ்கி:இந்த பதிவு கிறிஸ்தவர்களை புண்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டது அல்ல

டிஸ்கி:கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான்

டிஸ்கி:வழக்கம் போல் நான் அவனில்லை

தமிழ்மணம் தூங்குகிறதா!!பங்கு சந்தையை பற்றி ஒரு பதிவிட்டு விட்டு துறை சார்ந்த பதிவுகளில் தேடினால் இது தான் கிடைத்தது, சினிமாவும் ஒரு துறை தான் என்பதால் விட்டு விட்டார்களோ

பங்குசந்தை- ஒரு சூதாட்டம்

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பட்டிதொட்டிஎங்கும் பேசப்படும் விசயமாக மாறி விட்டது. பொதுவாக வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் வரா கடன் என்றாலும், நிதி நிறுவனக்களின் வீழ்ச்சிக்கு காரணம் பங்களில் அவர்களின் முதலீடு தான் என்பது தெரிந்த விஷயம். அவர்களின் நட்டத்தில் அமெரிக்கா பங்கெடுத்து கொள்கிறது என்பது தெரிந்து விஷயம் தான். ஆனால் தெரியாத விஷயம் அவர்கள் நட்டப்பட்ட பணம் எங்கே சென்றது.

வியாபாரம் என்பதின் பொதுவான விதி. வாங்குபவர் ஒருத்தர் விற்பவர் ஒருத்தர், ஒருவருக்கு லாபம் என்றால் ஒருவருக்கு நஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே?

அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நிதி நிறுவனக்கள் எத்தனையோ லட்சம் பேர்களை தற்கொலைக்கு தூண்டின என்று தெரியுமா, அதை சொல்வதற்கு முன் பங்கு சந்தைகளை பற்றி சில முன்னுரையும் தேவை. ஏற்கனவே பங்கு சந்தையை பற்றி அறிந்தவர்கள் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டி காட்டலாம்.

பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தமது வளர்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு அவர்களையும் பங்குதாரர்களாக மற்ற பங்குகளை வெளியிடுகிறது, உதாரணமாக ஒரு நிறுவனத்தின் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்து கொள்வோம், அதில் பாதியை பங்குகளாக வெளியிடுகிறார்கள், மீதி ஐந்தாயிரத்தை ஒரு பங்கின் மதிப்பு ஐம்பது வீதம் நூறு பேர் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

அதாவது அவர்கள் பங்கு ஒன்றின் விலை ஐம்பது என்று தீர்மானித்திருப்பார்கள். ஆனால் பங்கு வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் அதனில் சூதாட்டம் ஆரம்பித்து விடுகிறது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டு அவர்கள் அதை வெளியீட்டு விலையை விட அதிக விலைக்கு கேட்பார்கள். சரி இது நம்பிக்கையின் அடிப்படையில் தானே இங்கெ சூதாட்டம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள், அந்த நிறுவனம் இன்னும் ஆரம்பிக்கவே படவில்லை என்பது தான் உண்மை, அந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிடும் போதே அது 2011-ல் தான் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியே ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் ரிலையன்ஸ் பவர் என்னும் குறியீடு வெறும் சூதாட்டத்திற்காக பயன்பட்டது.

வெளிநாடுகளை சேர்ந்த நிதி நிறுவனக்கள் லாபம் பார்க்க வேறொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி மாயை தோற்றத்தில் அந்த பங்குகளை விலை உயர செய்து பின் உயர்ந்த விலையில் விற்க தொடங்குவார்கள். அதிக விலையில்,வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மொத்த முதலையும் இழந்து நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான். இவைகளுக்கு காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான் என்று தெரிந்தும் அதனை மாற்ற நமது அரசாங்கம் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒரு நிறுவனத்தின் வளச்சியை பொறுத்து அதன் பங்குகளின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். வளரலாம் என்ற மாயை தோற்றத்தில் விலையுயர்ந்த பங்குகள், இன்று அந்த விலைகளை மீண்டும் தொடுமா என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!


பின்னாளில் விலைபொருள்கள்(கமாடிடி) பற்றியும் எழுதுகிறேன்

!

Blog Widget by LinkWithin