முகம் காட்டாத முண்டங்களுக்கு ஒரு வேண்டுகோள்

நான் பிளாக் எழுத வந்தது முதல் இதுவரை எங்கேயும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை.
டோண்டுவுக்கும் கோவி கண்ணனுக்கும் நடந்த சண்டையில் நான் டோண்டுவுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக எனது பின்னூட்டத்தில் என் குடும்பத்தை பற்றி அசிங்கமாக திட்டி எழுதியிருக்கிறார்கள்.

சுஜாதாவின் மறைவை பற்றி பதிவு போட்டால் பார்ப்பானுக்கு ஆதரவா என்று கேள்வி.
சுஜாதாவை எனக்கு ஒரு எழுத்தாளராகவே தெரியும். எழுத்தை படிக்க எழுதியவன் என்ன ஜாதி என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பார்ப்பானுக்கு எதிரி என்றால் நீங்கள் வேறு எதோ ஒரு ஜாதிக்கு ஆதரவாளன் என்று அர்த்தம். நான் எல்லா சாதிக்கும் எதிரி, இதை என் பதிவில் பல முறை குறிப்பிட்டுள்ளேன்.

உண்மையான ஆண்மகனுக்கு அழகு நேருக்கு நேர் கருத்து மோதல் தான், இல்லை குஸ்தி தான் போட வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார். பின்னூட்டத்தில் அனானி பெயரில் குடும்பத்தை இழுப்பது மனித பிறவிக்கு அழகல்ல.

நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். டோண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்.
டோண்டு என்ற மனிதனுக்கு என்றுமே நான் ஆதரவாளன் தான். அவருடைய கொள்கைகளுக்கு அல்ல.

அதேபோல் நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதற்காக உங்களை என் நண்பர்களாக ஏற்று கொள்ள முடியாது. நீங்கள் மனிதநேயம் இல்லாதவராய் இருக்கிறீர்கள்.

டோண்டு பார்பானாய் இருப்பது அவர் தவறல்ல.
நான் இந்தியன்
நான் தமிழன்
போன்ற உணர்வு போல் அவருக்கு நான் பார்பான்.
இதை எதிர்ப்பது உங்களுக்கு வேறு வேலை இல்லை என்று காட்டுகிறது.

கருத்து மோதலுக்கு நான் என்றுமே தயார்
குஸ்திக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம்.
சனி ஞாயிறு எனக்கு லீவ் தான்

தமிழ் ஒரு நல்ல பின்நவீன புனைவு எழுத்தாளரை இழந்துவிட்டது.

எழுத்தாளர் சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் ரங்கராஜன் காலமானார்.

இவரின் கொலையுதிர்காலம் நாவலை தொடங்கிய கணத்தில் இருந்து முடியும் வரை சாப்பாடு மறந்து படித்திருக்கிறேன்.

"என் இனிய இயந்திரா" இன்று படித்தாலும் புதிய மற்றும் எதிர் காலத்திலும் அது புதிதாகவே இருக்கும்.

அவரின் கற்றதும் பெற்றதும் மறக்க முடியாதது.
அவரின் ஏன், எதற்கு,எப்படி அனைத்து பள்ளிகளிலும் பாட திட்டமாக கொண்டுவர வேண்டியது.

பல இலக்கிய தரம் வாய்ந்த படைப்புகளை கொடுத்த சுஜாதாவை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது

உருவ வழிபாடு இல்லாத மதத்திற்கு பிரார்த்தனை கூட்டம் தேவையா?

உருவ வழிபாடு இல்லாத மதத்தை சேர்ந்தவர்கள், ஒன்றாக இணைந்து பிரார்த்திக்க எதாவது ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். இதில் நன்றாக அனைவரும் அறிந்தது கிறிஸ்தவமும், இஸ்லாமும்.

இஸ்லாம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.நிறைய இஸ்லாம் நண்பர்கள் இருந்தாலும் அவர்களும் என்னை அங்கெ ஒருநாளும் அழைத்து சென்றதில்லை. கிறிஸ்தவ நண்பர்களோடு அவர்களின் பிரார்த்தனை கூடத்திற்கு சென்றிருக்கிறேன்.

அங்கே எனக்கு சில முரண்பாடுகள் தெரிந்தன. பல நாட்களாக நெருடி கொண்டிருந்த சந்தேகங்களை இங்கே பதிலுக்காக வைக்கிறேன்.

எல்லா பிரார்த்தனை கூட்டத்திலும் ஒரு பிரசங்கி இருக்கிறார். அவரே அங்கே மையமாக இருக்கிறார். அவரின் பிரசங்கத்தை கேட்க வந்த கூட்டம் விளிம்பு நிலை மனிதர்களாக உள்ளனர்.
பிரசங்கத்தை கேட்க மட்டுமே அவர்களின் உரிமை. அது அவர்களின் கடமையும் கூட என்று சொல்லபடுகிறது. பிரசங்கி உண்மையை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் கேட்பவர் நம்பித்தான் ஆகவேண்டும். சந்தேகமோ எதிர்கேள்வியோ கேட்க முடியாது.
என்னை மாதிரி ஆட்களை அழைத்து சொல்கிறவர்கள் தான் பாவம். தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பொசுக் பொசுக் என்று எழுந்து கேள்வி கேட்பேன்.

புத்தகத்தை தவிர உங்கள் கடவுளை நிருபிக்க வேறு ஏதும் உள்ளதா? என்று.
பதில் என்னை அழைத்து சென்ற நண்பனுக்கு கிடைக்கும். என்னுடன் இனி சேரவேண்டாம் என்று.

என்னுடைய சந்தேகம் மனிதர்கள் கடவுளை பார்க்க ஏன் இந்த மாதிரி ப்ரோகர்கள் தேவைபடுகிறார்கள்.எல்லா மதத்திலும்!
இந்துவில் அர்ச்சகர்கள். கிறித்துவத்தில் பாதிரியார்கள், இஸ்லாத்தில் அஜ்ரத்துகள்.

பின்நவீனத்தை கண்டு பயம் ஏன்?


நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் நான் தீவிர குறுநாவல் ரசிகனாயிருந்தேன்.
ராஜேஷ்குமார், பட்டுகோட்டை பிரபாகர், சுபா இவர்கள் பெயர் தெரிந்தாலே வாங்கி விடுவேன்.
நாளடைவில் யதார்த்த புனைவுகள் எனக்கு சலிப்பை தந்தன.
க்ரைம் நாவல்களில் குற்றவாளி ஒரு நாவலில் மஞ்ச சட்டை போட்டு மீசையுடன் கொலை செய்தான் என்றால், அடுத்த நாவலில் சிகப்பு சட்டை மீசையில்லாமல் கொலை செய்கிறான். அந்நாளில் பின்நவீனம் என்றால் என்னவென்று தெரியாமலேயே அதை படித்திருக்கிறேன். ஆர்னிகா நாசரின் புனைவுகள் இயல்பு மீறிய கற்பனைகள் இவை தான் பின்நவீனம் என்று பின் நாளில் தெரிந்து கொண்டேன்.

ஆர்னிகா நாசரின் புனைவுகள் அமானுஷ்ய வகையை சார்ந்தது. இருந்தால் என்ன கடவுளை நம்பாத நான்! ஆவியை மட்டும் நம்ப போகிறேனா என்ன!
வேறு ஒரு எழுத்தாளர் இந்திரா என்று ஆரம்பிக்கும் அவரது பெயர், அவரும் நிறைய புனைவுகள் எழுதினாலும், அவரடையது சித்தர்களை சுற்றியே வரும். அதனால் அம்மாதிரியான புனைவுகளை படிப்பதில்லை.

M.G.சுரேசின் சில புத்தகங்கள் சிறந்த இயல்பு மீறிய கற்பனை புனைவு.
"சிலந்தி" மற்றும் "யுரேகா என்றொரு நகரம்" போன்றவை என்னை பொறுத்தவரை யதார்த்த புனைவுகளே.

பின்நவீனத்தை புத்தகங்களில் தேடும் போது நிறைய குழப்பங்கள் ஏற்படும். நம் கண்ணோட்டத்தை பொறுத்து அவை மாறுபடும்.

சினிமாவில் சொல்கிறேன்.

யதார்த்த புனைவுகளை சினிமாவாக எடுத்து கொண்டிருந்த அந்த காலத்தில், மக்களும் சினிமாவின் மேல் சலிப்பு கொண்டனர், அங்கே ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.
திடீரென்று முளைத்தாற்போல் ஸ்பீல்பெர்க் E.T என்ற படத்தை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து ALIEN, TERMINATOR, PREDATOR வெளி வந்தது. இயல்பு மீறிய கற்பனை என்றால் என்னவென்று இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கற்பனைகெட்டாத விஷயங்களை சொல்லும் பொழுது, அதில் ஈடுபாடு அதிகமாகிறது.
BACK TO THE FUTURE என்ற படமும் பின்நவீனத்தில் நல்ல மைல் கல். அந்த படத்தில் காட்டப்படும் காரில் மேல்நோக்கி திறக்கும் மாதிரியான கதவுகள் வடிவமைக்க பட்டிருக்கும். அந்த படம் வெளிவந்த பொழுது அம்மாதிரியான கதவுகள் கார்களில் உபயோகபடுத்த படவில்லை. பிறகு அம்மாதிரியான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இயல்பு மீறிய கற்பனைகள் சில நேரங்களில் விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்கிறது.
என்னை பொறுத்தவரை பின்நவீனம் விஞ்ஞானம் மற்றும் கலை ,இலக்கியத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி

பின்னோக்கி ஏன்? கொஞ்சம் முன்னோக்கி பார்ப்போமே!

ஆள்காட்டி விரலிலிருந்து மெல்லிய வெளிச்சம் வந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் அளவுக்கு அதில் சிறிய அதிர்வும் இருந்தது.
அந்த விரலை காதின் அருகில் வைத்தான்.

"சொல்லுடா"
"எப்போ"
"விடுமுறை ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்களே இருகின்றன. அதன் பிறகு தொடர்ச்சியாக ஆறு மாதம் விடுமுறை, அதற்குள் என்ன அவசரம்."
"சரி"
"இன்று இரவு செக்டார் நான்கில் உன்னை சந்திக்கிறேன்"

சிறிது நிறம் மாறியிருந்த அவனது விரல் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியது.

செக்டார் நான்கு.
கால் சட்டையும் மேல் சட்டையும் ஒன்றாக இணைந்த உடை அணிந்திருந்த அவன் கதவை திறந்தான்.

"நீ இன்னமும் உனது சீருடையை கூட மாற்ற வில்லையா? அதற்குள் என்ன அவசரம்.
நமது மேலதிகாரிகளுக்கு தெரிந்தால். கிரகம் கடத்தபடுவோம் என்று உனக்கு தெரியாதா?"

அவன் பேச தொடங்கினான்.
இன்று எனது சுரங்கம் தோண்டும் பணியின் போது ஒரு பெட்டியை கண்டெடுத்தேன்.
அதில் பண்டைய மனிதர்கள் உபயோகபடுத்திய குறுந்தட்டுகள் கிடைத்தன.

என்ன சொல்கிறாய் அது இயங்குமா?

இல்லை அதை இயக்க ஒரு கருவியும் கிடைத்தது. அது பண்டைய கால மின்சார முறையில் இருந்தது. அதை சூரிய சக்தியில் இயங்கும்படி மாற்றியமைத்து விட்டேன்.

சரி இதில் என்ன இருக்கிறது அதை உன் மேலதிகாரிகளிடம் குடுத்து விட வேண்டியது தானே.

இல்லை அதில் நம் அரசாங்கத்தையே புரட்டி போடும் சில விசயங்கள் உள்ளன.
அதை பார்த்தால் நீ அதிர்ச்சியாகி விடுவாய்.

"என்ன சொல்கிறாய்?"

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் தான் இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருந்தோம்.சகல திறமையும் படைத்தவர்களாக நாம் இருந்திருக்கிறோம்.

"அப்படியா"

இன்னும் கேட்டால் மூர்ச்சையாகி விடுவாய்.

என்ன?

இப்பொழுது நம்மை அடிமையாக வைத்திருக்கும் இவர்கள், அப்பொழுது பேச கூட தெரியாமல் இருந்திருக்கிறார்கள், நாம் அவர்களை கூண்டில் அடைத்து நமது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டியிருக்கிறோம்.

அப்பொழுது அவர்கள் பெயர் "சிம்பன்ஷியாம்"

இவனுக்கு கண்கள் சொருகியது.

புதிரில் கலைந்த கனவுகள் அல்லது ஒரு வார்த்தையின் கதை

இரவுகளில் எனக்கு தூக்கம் வருவதில்லை, அரை மயக்க நிலையிலேயே காலம் கழிக்கிறேன், முழுதாய் தூங்கியதால் இழந்தவை பல, பல

இரவு தூங்கினால் பல புதிர்களால் நான் அவதியுருகிறேன், பதில் சொல்ல முடியாத ஒவ்வொரு புதிருக்கும் என் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக நான் இழக்க வேண்டும்.
இதை நான் சொல்லும்போது கூட என்னிடம் உடல் இல்லை. முழுவதுமாய் இழந்து விட்டேன்.
வெறும் வார்த்தை மட்டுமே மிச்சம் உள்ளது.

இருந்தாலும் என் உடலை நான் மீட்க வேண்டும். இந்த எண்ணம் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டது. அது இருந்தால் கொஞ்சம் உதவியாய் இருக்கும். முதலில் அதை தேடிகண்டு பிடிக்கவேண்டும். மூன்றாம் உலகில், மூன்றாம் நாட்டில், மூன்றாம் நகரில் வசிக்கும் குறிசொல்லும் ஒத்தை கொம்பு வைத்தியன் (உண்மையிலேயே அவனுக்கு தலையில் கொம்புண்டு) என் எண்ணம் முயல் வடிவ மேககூட்டத்தில் ஒளிந்திருப்பதாக சொன்னான்,

ஏழாம் கிரகத்தின் மூன்றாம் பெரிய துணைகோளுக்கு பின்னால் ஒளிந்திருந்த முயல்வடிவ மேககூட்டத்தை கண்டுபிடித்தேன்.மேகத்துக்குள் ஒளிந்திருந்த என் எண்ணம் என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிகொண்டது.இருவரும் சேர்ந்து புதிர் கடவுளிடம் எங்கள் உடலை கேட்பதற்கு புறப்பட்டோம்.

ஆட்டுதலை மனிதர்கள் வாயிர்காவலில் பிரமாண்ட கதவை திறக்க உள்ளே நுழைந்தோம். சற்றே நீள துதிக்கை மூக்கொடு அமர்ந்திருந்தான் புதிர் கடவுள். அவன் துதிக்கையாலேயே பழங்களை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.

எங்களை பார்த்ததும் அவனுக்கு புரிந்துவிட்டது, ஒரே ஒரு நிபந்தனையின் கீழ் எங்கள் உடலை திருப்பி தர ஒத்துகொண்டான், வேறு ஒன்றுமில்லை அவன் போடும் புதிருக்கு நாங்கள் விடை சொல்லவேண்டும் (என்ன கொடுமை சார் இது! ) நாங்களும் ஒத்துகொண்டோம்.

"சொன்னவன் சொன்னவுடன் மறைந்து விட்டான்.
கேட்டவன் கேட்ட பின்னும் இருக்கிறான். அவர்கள் யார் என்றான்."

நான் சொன்னேன், "சொன்னவன் நான் தான் வார்த்தை, நான் ஒலியாய் இருக்கிறேன், சொன்னவுடன் பொருள்களால் கிரகிக்கப்பட்டு மறைந்துவிடுகிறேன் என்றேன்".

கேட்டவன் நான் தான், எண்ணம், "நான் கேட்ட பின்னும் மறையாமல், அந்த வார்த்தைகளிலுள்ள உண்மை, பொய்களை ஆராய்கிறேன். என் எண்ணம் அதை சேமிப்பில் வைக்கிறது. அதனால் நான் இருக்கிறேன் என்றான் எண்ணம்."

பதிலில் மகிழ்ந்த புதிர் கடவுள் எங்கள் உடலை எங்களுக்கே திருப்பி தர ஒத்துகொண்டார்.
பிறகு எங்களுக்கு விருந்து படைக்கப்பட்டது, விருந்தில் அனைவரும் மது அருந்தினோம்.
அப்பொழுது நான் கேட்டேன்.எங்கள் பதில் சரியென்று எப்படி சொல்கிறீர்கள் என்று.
என்ன தவறென்று அவர் கேட்டார்.

எங்கள் பூமியில் விவிலியம் என்ற நூல் இருக்கிறது. அதில் "ஆதியில் வார்த்தை இருந்தது, அது தேவனாய் இருந்தது" என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நான் ஒலியாய் இருக்கிறேன், சொன்னவுடன் மறைந்துவிடுகிறேன் என்று சொன்னேன், இது எவ்வாறு சாத்தியம். வார்த்தையாய் இருக்கும் கடவுளாகிய நான் எவ்வாறு மறைய முடியும் என்றேன்.

மீண்டும் எனது உடல் பிடுங்கபட்டது.

தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் ஓட்டை விழுந்து விட்டதா?

கடந்த சில நாட்களாகவே எதுவும் தோன்றவில்லை எழுதுவதற்கு. சரக்கு இருந்தால் தானே தோன்றுவதற்கு. ஆனாலும் வாசிப்பதை நிறுத்தவில்லை நான். கடந்த சில நாட்களாக வலை மற்றும் பத்திரிகைகளில் சூடான விவாதம் ஜெயமோகன் மற்றும் சாருநிவேதிதா சண்டை தான். சமகால எழுத்தாளர்களில் சாருவை நான் தெரிந்து கொண்டது குமுதத்தில் கோணல் பக்கங்கள் மூலம்.

ஜெயமோகனின் ஒரு படைப்பை கூட இதுவரை நான் படித்ததில்லை. ஆனால் சாருவின் 49 பக்க சண்டை செலவிலாத விளம்பரத்தை ஜெமொவிர்க்கு பெற்று தந்து விட்டது.
சரி என்னய்யா மேட்டர், ஒன்றுமே இல்லை, பெரிதாக சொல்லவேண்டுமென்றால் சாரு பொய் சொல்கிறார் என்ற குற்றசாட்டு. அதற்கு 49 பக்க பதில் தேவையா? சரி அப்படியே உங்களுக்குள் உள்குத்து இருந்தாலும் அதில் மற்றவரை ஏன் இழுக்க வேண்டும். M.G.சுரேஷ் உங்கள் யார் வம்புக்கு வந்தார் இப்பொழுது, ஆர்னிகா நாசர் என்ன செய்தார் உங்களை.

படைப்பு திறமை அவரவர் உரிமை, ஆர்னிகா நாசரை போல் ஒரு விஞ்ஞான புனைவு கதைகளை உங்களால் படைக்க முடியுமா! இன்றும் பழைய புத்தக கடைகளில் ஆர்னிகாவின் குறுநாவல்கள் கேட்டு வாங்க படுகின்றன. உங்கள் புதுசே தூங்கி கொண்டு தானே இருக்கிறது.

அடுத்தவர்களின் படைப்புகள் சாக்கடைகள் என்றால், உங்களுடயவைகளை எழுதியபின் நீங்கள் படிப்பதில்லையா. படித்து பாருங்கள் நீங்களே சாக்கடைக்குள் தான் உட்கார்ந்து இருப்பீர்கள்.
***************************************************
இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. பலமுறை இவ்வாறு நடந்திருக்கிறது. நானும் திருந்தியபாடில்லை.
ஒருமுறை இப்படித்தான் 93/94 இருக்கும் என்று நினைக்கிறேன் அப்பொழுது நான் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். அது ஒரு முஸ்லீம் கல்யாணம். பெண் வீட்டார்களை தனியே எடுத்து விட்டு பிறகு மாப்பிளையை படம் பிடிக்க வேண்டும். வரவேற்ப்பு ஹாலில் சில ஆண்கள் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தனர். ஒய்வு தானே என்று நானும் உள்ளே புகுந்தேன். உள்ளே அசடு போல் சற்றே குள்ள ஒருவம் ஒருவர் பார்க்க பாவமாக இருந்தார். நான் சும்மா இல்லாமல் அவரை ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். பிறகு தான் தெரிந்தது அவர்தான் கல்யாண மாப்பிள்ளை என்று. கடைசியில் அசடு நான் வழிந்தேன். இரவில் பயங்கர அட்வைஸ் வேறு.

இதைவிட சுவாரஷ்யமான மேட்டர் ஒன்று. அப்பொழுது நான் சென்னை தாஜ் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னை விட உயர் அதிகாரிகள் நான்கு பேர் நின்று, அவர்களின் ஆண் குறியின் நீல அகலங்களை பற்றி பேசி கொண்டிருந்தனர். "என்னுடையது ஏழு. எட்டு என்று", இதை கேட்ட நான் பொத்தி கொண்டு போகாமல் ஏழு என்ன இன்சா அல்லது செண்டிமீட்டரா என்று கேட்டு தொலைத்து விட்டேன். எனக்கு அடிவிளாத குறை தான்.


மேலே உள்ள செய்திக்கும், கிழே உள்ளதுக்கும் என்ன தொடர்பு என்று இப்பொழுது தெரிந்திருக்கும். இப்படி தான் எப்பவுமே அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது.

பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?

சில நாட்களுக்கு முன்பு இது தான் உண்மை என்ற வலைப்பூவில் பெரியார் ஆதி திராவிடர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதாக எழுதியிருக்கிறார்கள்,
அதற்கு பெரியார் சொன்ன காரணம் இஸ்லாம் மதத்தில் ஜாதி அடிபடை இல்லை என்று.

ஆனால் மனிதனை நேசி என்ற வலைப்பூவில் இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு தமிழ் இஸ்லாம் வலைப்பூவில் பிறகு ஏன் பெரியார் இஸ்லாம் மதத்துக்கு திராவிடர்களை மாற சொன்னார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.

மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?

குறுந்தகவல் நகைசுவைகள் பாகம் 2

பில்லா ரீமிக்ஸ் சாங்!



மை நேம் இஸ் பில்லா
காலேஜ் எல்லாம்
நானும் பாக்காத பிகர் இல்லை!
போகாத க்ளாஸ் இல்லை அய்யா!

நல்ல பிகரை பார்த்து விட்டால்
எங்கு போனாலும் விடமாட்டேன்!
ஒட்டாமல் வரமாட்டேன் அய்யா!......

ஒரு பிகருக்கும் நான் சொந்தம் இல்லை!
மேரேஜ் மேல் நம்பிக்கை இல்லை!

விமலாவும், வித்யாவும் நேற்று
அமலாவும், அருணாவும் இன்று!

லவ்வுக்கும், லைப்ஃக்கும் நடுவே தான்
நான் செல்லும் பாதை!

சரி என்ன தவறென்ன! பிகருக்கு
எது வேண்டும் செய்வோம்!
*********************************************************

மழையின் நன்மைகள்



நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்துகிறது

உயிர் வாழ தேவையான பிராண வாயுவை அளிக்கும்
மரங்களை வளர்கிறது

பூமியை குளிர்ச்சியாக வைத்து கொள்கிறது

கடைசி ஆனால் மிக முக்கியம்

இந்திய கிரிகெட் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுகிறது!

"ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 4"

இது பற்றிய முந்தய பதிவுகள்

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

க்யூபிஷம்



ஏக காலத்தில் ஒரு பொருளை அல்லது ஒரு சம்பவத்தை பல கோணங்களில் பார்ப்பது.
இம்மாதிரியான கதைகள் "க்லைடாஸ்கோப் கதைகள்" என்று அழைக்கபடுகின்றன.

காட்சிப்பொருளுக்கான முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டு, கலைஞனின் உள் உணர்வுகளின் பிம்பத்தை உருவாக்குவது.

டாடாயிஷம்



ஓவியம் வரைதல், பின் அதை சுக்கு நூறாக கிழித்தல், பின் எப்படி இருக்கிறதோ அதே பாணியில் ஒட்டுதல். இது தான் டாடாயிசத்தின் தெளிவான விளக்கவுரை.

இதை பற்றி அவர்கள் சொல்லும்போது:
சந்தர்ப்பவாதம் உண்மையானது
திட்டமிடுதல் பொய்யானது என்று சொல்கின்றனர்.

இவர்கள் மரபார்ந்த யதார்த்த புனைவுகளுக்கு எதிராக புரியாத, புதிரான, அக உலகம் பற்றிய, மற்றும் தூங்கும் மனதை பற்றிய புனைவுகளை எழுதி அனைவரையும் திடுக்கிட செய்தார்கள்.

மொழியை பலவிதமாக சொட்டை தட்டி, நீட்டி, நெளித்து, வளைத்து வேறு மாதிரியான மொழியாக்கி பயன்படுத்தி காட்டினார்கள்.

"ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 3"

இது பற்றிய முந்தய இரண்டு பதிவுகள்
பாகம் 1
பாகம் 2

இம்ப்ரெனிஷம்



சம்பவங்களும், கதாபாத்திரங்களும் மரபாக உருவாக்கபடாமல், அந்த தருணத்தில் ஆசிரியனின் பார்வையில் தோன்றும் யதார்ததின்படி அமைக்க பட வேண்டும்,

இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற போதிலும் மற்ற இஷத்தில் உள்ள கொள்கைகள் இதற்கு பொருந்தும்.

எக்ஸ்பிரனிஷம்


ஒரு கலைஞன் ஓவியனாக இருக்கலாம், சிற்பியாக இருக்கலாம், எழுத்தாளனாக இருக்கலாம் ஆனால் உணர்ச்சி பெருக்குடையவனாக இருக்கவேண்டும்.

அவர்கள் திருகலான மொழிகள், குழப்பமான பொருள்கள், புற உலகம் தொடர்பான பொருள்கள் போன்றவற்றை கருப்பொருளாக கையாளுதல், அகவயமான பாதிப்புகள், கெட்ட கனவுகள் குறித்த உணர்ச்சி பெருக்கின் பாதிப்பாக அவர்களது எழுத்துக்கள் அமைந்தன.

தனிமனிதனின் மேல் பிரயோகிக்கும் வலி, அச்சுறுத்தல், பீதி போன்றவற்றை பற்றிய எழுத்துக்கள் இவற்றின் தனி தன்மைகளாக இருந்தன.

இந்திரலோகத்தில் நா.(றின) அழகப்பன்



எதோ ஒரு புண்ணியவான் ப்ரிவியு ஷோ பார்த்துவிட்டு எல்லா நண்பர்களுக்கும் படம் படு டப்பா என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்.
அதை மறுத்து கதையின் நாயகன், செய்தி தாள்களில் பயங்கர பில்டப் கொடுத்தார்,
படம் பார்த்த பின்பு தான் தெரிகிறது, புண்ணியவான் செய்த நல்ல காரியம்.

தம்பி ராமையா படத்தின் டைரக்டர், அவர் அண்ணன் ராமையா(குரு) யாரென்று தெரியவில்லை, மிக அருமையாக வந்திருக்க வேண்டிய படம், சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தால் நூறு நாள் கேரண்டி, கிரேசி மோகன் வசனம் எழுதி இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிருக்கும்,

காமெடி நடிகர்கள் கருத்து சொல்லும் ட்ரெண்ட் இது போலிருக்கு, கருத்து சொல்கிறேன் பேர்விழி என்று எல்லார் கழுத்தருத்தது தான் மிச்சம், ஒரு பாட்டு கூட என் காதில் விழவில்லை, என் காது மீது தவறா? மதுரை குரு தியேட்டர் மீது தவறா? மதுரைக்காரர்கள் என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும்.


எனக்கு எழுத்து பிழை வரும் என்பது எல்லோருக்கும் தெரியும், படத்தில் நாயகன் பள்ளி கொள்வோம் என அழைக்க, அந்த பெண் நாம் ஏன் பல்லியை கொல்லவேண்டும் என்று கேட்க கிரேசி மோகன் ஸ்டைலை காப்பி அடித்தது தெரிகிறது, என் எழுத்து பிழை பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படத்தை பார்க்கையில் மொத்தம் இரண்டு முறை சிரித்தேன்!!?. கிங்காங், எமன் வடிவேலுவிடம் நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்று கேட்கும் போதும், படத்தின் முடிவில் நாயகி ஹிந்தியில் பேசுவதும் காமெடி( இது ஒரு முழு நீள காமெடி படம் )

நல்ல A.C தியேட்டரில் படம் பார்த்தல் அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருக்கும், எதற்கும் காதில் வைத்து கொள்ள பஞ்சை எடுத்து செல்லுங்கள்.

இயக்குனருக்கு திரைக்கதை அமைப்பதில் கொஞ்சம் அனுபவம் தேவை

ஜே.ஜே சில குறிப்புகள் பக்கம் 186


(ஜே.ஜே சில குறிப்புகள் புத்தகத்தில்) ஜே ஜே அவர்கள் அவரது டைரியில் 17.4.1749 அன்று எழுதியது

மனிதராசியில் ஒரு ஜீவனக்காவது சுயவாழ்வு இல்லை. சுய சார்பு வாழ்வு இல்லை. அடுத்தவன் மீது சாய்ந்து வாழ்கிறான். அடுத்தவன் மற்றொருவன் மீது, கணவன் மனைவி மீது. மனைவி குழந்தைகள் மீது. நண்பர்கள் மீது. அரசாங்கத்தின் மீது. தத்துவங்களின் மீது. ஓயாத சாய்வு. தன் காலை முற்றாக வெட்டி கொண்ட சாய்வு. இச்சாய்வுக்கு பெயர்களே உறவுகள். பிற உயிரினங்களுக்கு இந்த தீராத சாய்வு இல்லை.

புறாக்களுக்கு மனிதனை போல் அடிமைத்தனமான சாய்வு இல்லை. அவை இறக்கைகள் கொண்டவை. ஒருநாள் இவையும் நோயுற்றோ, விபத்தில் சிக்கியோ, வயோதிகம் கவிந்ததாலோ மரணத்தின் வாயில் விழும். வெளிக்கு தெரியாமல். சுவடு தெரியாமல், ஏதும் பரபரப்பின்றிஇவை மரணங்களில் ஒடுங்கும். ஆனால் இவற்றிற்கு வாழ்வே மரணம் அல்ல. மரணம் தான் மரணம். வாழ்வு சிறகடித்து வானில் பறக்கும் வாழ்வு. மனிதனோ கணங்த்தோறும் மரித்துகொண்டிருகிறான். மரணத்திற்கு பயந்து மரித்துகொண்டிருகிறான். உறவுகள் முற்றாக கசந்த பின்னும் தற்கொலை அச்சத்தை ஊட்டுகிறது அவனுக்கு. என்ன காரணத்திற்காக அவன் இங்கு புதைபட்டு கிடக்கிறான் என்பது அவனுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை. அவனுடைய பொறிகள் சந்கிலீயல் மண்ணுடன் பினைக்கபட்டுக் கிடக்கின்றன. தேனில் கால்கள் சிக்கிகொண்ட ஈ போல் அவன் அவஸ்தை படுகிறான். இந்தநிலையில் ஈக்களுக்கு தென் உணவல்ல. எழுந்து பறப்பதே அவற்றின் ஜீவ பிரச்சினை. அதற்காகத் தங்கள் முழு பலத்தையும் அவை திரட்டுகின்றன. ஆனால் காலிலோ திட்பத்தின் விலங்கு.

ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 2

இது பற்றிய முந்தய பதிவு

நவினத்துவம்

இன்று இரண்டு விதமான விவாதங்கள் நவினமயமானவைகளாக இருகின்றன.
வாழ்க்கையை ஆய்வு செய்தல்,
வாழ்க்கையை விட்டு விலகி செல்லுதல்.

மனித மனதின் உள்ளார்ந்த வாழ்க்கையை அல்லது கனவுகளை பகுப்பாய்வு செய்வதையும், நம்பமுடியாத மாய தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்று மாய பிம்பங்கள், கனவு தோற்றங்கள் மீது கவனம் செலுத்துதல் இதில் அடங்கும்.

ஒரு காலத்தில் சரி என்று சொல்லப்பட்டவை, இன்று தவறு என்று தீர்மானிக்கபடுகிறது.
இதற்க்கு பல உதாரணகளை சொல்லலாம், பால்ய விவாகம் மற்றும் உடன் கட்டை ஏறுதல் இதில் அடங்கும்.

அடுத்த பதிவு இம்ப்ரநிஷம் (Impressionism)

!

Blog Widget by LinkWithin