திருப்பமுடியாதவை! (irreversible)


எனக்கு நேர்த்தியாக சினிமா விமர்சனம் சொல்ல வராது!

ஏற்கனவே இந்த படத்தை பற்றி சித்தார்த் அவர்கள் நேர்த்தியாக விமர்சித்ரிப்பதால் அதனுடைய லிங்கையும் இங்கே தருகிறேன். அதில் விடுபட்டவைகளை எங்கே என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன், சிலவற்றை அங்கிருந்து எடுத்திருப்பதால் அவருக்கு நன்றியையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

மோனிகாவை உங்களுக்கு தெரியுமா? மேட்ரிக்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பார்.
ஹாலிவுட் நடிகைகளில் என்னை கவர்தவர்களுள் இவரும் ஒருவர். இவருக்காக தான் இந்த படத்தை பார்க்கவே அமர்ந்தேன், ஆனால் வித்தியாசமான திரைக்கதையில் இயக்குனர் மனதை ஆக்கிரமித்து விட்டார்.


பின்நவீனம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மரபுகளை கட்டுடைத்தல் என்ற பொதுவான பதில் வரும், புரியாமல் விழிப்பவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம்.

சரி! மரபு எது? அதை எவ்வாறு அடையாளம் காணுவது?
சுலபமான பதில் இயல்பே மரபு!
எது மரபை கட்டுடைத்தல்?
இயல்பை மீறுவதே மரபை கட்டுடைத்தல்.


இதுவரைக்கும் படத்தை பற்றி எதுவுமே சொல்லலையோ!
இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது?

படத்தின் ஆரம்ப காட்சியே கதையின் இறுதி காட்சி!
லாஜிக்குடன் ஒன்றி படத்துடன் கலந்து மூளைசலவையாகி வெளிவரும் வேலையெல்லாம் இங்கே கிடையாது, கலைத்து போட்ட சீட்டுகட்டிலிருந்து ஒவொன்றாக எடுத்து உங்கள் கண்முன் காட்டி பத்து சீட்டு காட்டிய பின் முதலில் என்ன காட்டினேன். என்று கேட்கும் விளையாட்டு போல் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லா காட்சிகளையும் உங்கள் மூளையில் சேமித்து வைக்கவேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது,

மறந்து விட்டீர்களேயானால்! எந்த லூசு பையன்டா படம் எடுத்தது என்பீர்கள்?
என் வேலையை குறைக்க சித்தார்த் வலையிலிருந்து சில, வண்ணம் மாறியிருப்பது அவரிடம் விடுபட்டு என்னால் எழுதப்பட்டவை.

காட்சி 1: மார்க்கஸும் பியேரியும் போலீஸால் ஒரு இரவு விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர்.

காட்சி 2: மார்க்கஸும் பியேரியும் இரவு விடுதியில் டெனியா என்ற ஒருவனை கொடூரமாக கொல்கின்றனர்.

மேலே சொன்ன காட்சிக்கு முன் ஒரு டாக்சியில் அவர்கள் அந்த இரவு விடுதியை தெருத்தெருவாக தேடுவார்கள். டாக்சியில் மார்க்கஸும் பியேரியும் மட்டுமே இருப்பார்கள், ட்ரைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.

மார்க்கஸும் பியேரியும் ஒரு இரவு விடுதியின் பெயரை சொல்லி அங்கே போகும் படி ட்ரைவரை விரட்டுகிறார்கள், ட்ரைவர் இடம் தெரியாது என்று சொல்ல, கோபத்தில் ட்ரைவரை அடித்து போட்டு அந்த டாக்சியை எடுத்து சொல்வார்கள்.

இரண்டு நண்பர்களின் உதவியுடன் தெருத்தெருவாக இருக்கும் விபச்சாரிகளிடம் எல்லாம் ஒரு பெயரை சொல்லி கேட்டு, அவனை தெரியுமா என்று கேட்பார்கள், கடைசியாக ஒரு பெண் அவனை டெனியா என்று கேட்டால் தான் தெரியும், என்றும் அவனை ஒரு குறிப்பிட்ட இரவு விடுதியில் பார்க்கலாம் என்பாள்.

காவலர்களின் விசாரணை முடிந்து பியேர்ஸ் வெளியே வருவான். ஏற்கனே விசாரணை முடிந்த மார்க்கஸ் சோகத்துடன் வெளியே நின்று கொண்டிருப்பான். இரண்டு பேர் அவனிடம் வந்து, அவனை எங்களுக்கு தெரியும் அவனை என் நண்பன் பார்த்திருக்கிறான் என்பான்..

காட்சி 3: அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து கற்பழிக்கப்படுகிறாள்.
(அப்போது பின்னாலிருந்து ஒருவன் பார்த்து விட்டு ஓடுவான்)

காட்சி 4: மார்க்கஸும், அவனது காதலியான அலெக்ஸும் இவளது நண்பனான பியரியும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் தனியாக சுரங்கப்பாதை வழியாக செல்கிறாள்.

காட்சி 5: காலை. விடிந்ததும் மாலை பார்ட்டிக்கு தேவையான எதையோ வாங்கி வர மார்க்கஸை வெளியே அனுப்புகிறாள் அலெக்ஸ். அவன் சென்றவுடன் சோதனை செய்து பார்க்கிறாள்.தான் கர்பமாக இருப்பது தெரியவர, பகல் கனவில் மிதக்கிறாள். பச்சைப்புல்வெளி. ஆங்காங்கே தண்ணீர்ரை பீச்சி அடிக்கும் குழாய். விளையாடும் குழந்தைகள் என ரம்மியமான ஓர் பூங்காவில் நிறைமாத கர்பிணியான அலெக்ஸ் கண்களை மூடியபடி ஏகாந்தமாய் படுத்திருக்கிறாள்.


மீண்டும் நான்.
படத்தில் நேர்த்தியான எடிடிங் முக்கிய பங்கு, ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் கட் எல்லாத ஷாட் பயன்படுத்த படுகிறது, அப்படி காட்சி கட் ஆனால் அதன் முந்தய காட்சிக்கு போகிறோம் என்று அர்த்தம். இது ஒரு வித்தியாசமான திரைக்கதை வடிவம்,
ஏற்கனவே ஒழுங்காக எடுத்த படத்தை பத்து துண்டுகளாக ஒட்டி மேலிருந்து கீழாக ஒட்டியிருப்பார்களோ என்று எண்ண தோன்றும், எது எப்படியோ இது ஒரு வித்தியாசமான முயற்சி

இந்த பாணியில் புனைவுகள் எழுதினால் ரசிக்கதக்கவாறு இருக்கும்.
இந்த பாணியில் புனைவுகள் உருவாக்க அய்யனார் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களை அன்போடு கேட்டுகொள்கிறேன்,
இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும்

இருந்தாக்கா அள்ளிக்கொடு!!


பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.

இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.

அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,

இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.

சென்னை சந்திப்பு..(17.08.08)


சுருக்க சொல்லுதல் உண்மையிலேயே குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பதை விட கடினமானது. அதானாலேயே அந்த சந்திப்பை பற்றி எழுத முடியவில்லை.
சரி வேற யாராவது எழுதுவாங்க, நாம போய் உள்ளேன் ஐயா போட்டு வந்துறலாம்னு பார்த்தா, எல்லாருமே நம்ம மூடுல தான் இருப்பாங்க போலிருக்கு.

சென்ற சனிக்கிழமை பரிசல் என்னை அழைத்து சென்னை செல்லலாம் என்று சொன்ன போது, உண்மையிலேயே எனக்கு செல்லும் யோசனை இல்லை. நிறைய வேலை இருக்கு என்று சொல்வதற்க்கெல்லாம் ஒன்றுமில்லை. ஏனென்றால் விடுமுறை நாட்கள் தான். உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான், அதையும் பரிசலிடம் சொல்லி விட்டேன்.

கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார். எனக்காக திருப்பூரிலேயே சென்னை வரை செல்ல பயணச்சீட்டும் எடுத்து விட்டார். வழக்கம் போல தாமதமாகவே ரயில்நிலையம் சென்றேன். எனக்காக தயாராக காத்திருந்த பரிசலும் அவரது நண்பரும் என்னை ரயிலுக்குள் தூக்கி போட்டார்கள்.

சிறுது நேரம் பேச்சு, சிறுது நேரம் மௌனம், அப்புறம் தூக்கம்.
வந்து விட்டது சென்னை, நேராக ரமேஷ் வைத்யா அவர்களின் வீடு,
அன்பான உபசரிப்பு, சூடான காப்பி, கொஞ்சம் பேச்சு, கிளம்பி விட்டோம் சமத்துவபுரத்துக்கு,

நண்பன் தியாகுவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ரொம்ப நல்லவன், அநியாயத்துக்கு எல்லோரையும் நம்புவான், அவனிடம் இரு சக்கர வாகனம் எடுத்து செல்லலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் சென்னை முன்ன மாதிரி இல்லை, பத்து மீட்டருக்கு ஒரு இடத்தில் வாகன சோதனை, நமக்கேன் இந்த சோதனை என்று நொந்து கொண்டு, நண்பனுக்கு நன்றியை மட்டும் கொடுத்து விட்டு வேறெதுவும் வாங்காமல் வந்துவிட்டேன்.

எனது நண்பர் ஒருவர் சென்னையில் காவல்துறையில் வாகன ஓட்டியாக இருக்கிறார்.(அரசியல் கருதி பெயர் வேண்டாம்), அவரிடம் கார் கிடைக்குமா என்று கோட்டோம். உடனடியாக ஒன்றை பிடித்து வந்து விட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை பயணம், வழியில் கொஞ்சம் வெஜ் பிரியாணி, நூடுல்ஸ்

சென்றதின் காரணம், அங்கொரு கிராமத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் மீனவராக இருக்கிறார், படகில் கடலுக்குள் செல்லலாம் என்று அழைத்து சென்றார். அலை அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் உள்ளே செல்ல முடியாது, காலையில் வாருங்கள் என்று கையை விரித்து விட்டார். பரிசலின் பதிவில் இருக்கும், கடற்கரையில் சிறுவர்கள், குழாயில் குளிக்கும் சிறுவன் படங்கள் அங்கே எடுக்கப்பட்டது தான்.

அங்கிரிந்து மெரீனா, நண்பருக்கு காந்தி சிலை என்று சொன்னது சரியாக புரியவில்லை போலும், எங்களை உழைப்பாளர் சிலைக்கு அழைத்து சென்று விட்டார். அங்கிருந்து மீண்டும் ஒரு ஆட்டோ காந்தி சிலைக்கு, சுற்றும் முற்றும் தேடும் வேளையிலேயே பதிவுலக சிங்கம் லக்கியும், குட்டி சிங்கம் அதிஷாவும். கை குலுக்கும் நேரத்தில் பின்னால் வெண்பூவும், அப்துல்லாவும்.


இடமிருந்து வலமாக
அப்துல்லா,வெண்பூ,பரிசல்,அதிஷா,லக்கி,வாலை ஒளித்து வைத்து கொண்ட பையன்.

உண்மையில் யாரும் வரமாட்டார்கள் சும்மா தான் திரும்ப போகிறோம் என்று தான் நினைத்தேன். இவர்களெல்லாம் வருவார்கள் என்று பரிசல் கூட என்னிடம் சொல்லவில்லை, அந்த இடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்தோம். சத்தியமாக போண்டா, பஜ்ஜி, கடலை எதுவும் எனக்கு தரப்படவில்லை, நேரமின்மை காரணமாக மற்றவர்களை அழைக்க முடியவில்லை போலும்.

அங்கிருந்து ஒரு உணவகத்திற்கு சென்றோம், அப்துல்லா சைவமாம், லக்கி குறைவாக சாப்பிட்டார், மற்ற அனைவரும் திருப்தியாக சாப்பிட்டார்களோ என்னவோ தெரியவில்லை, நான் புல் கட்டு. அன்னைக்கு அப்துல்லாவுக்கு ராசிபலனில் செலவு என்று இருந்திருக்கும் போல, பில்லு வந்தவுடன் அதை மெய்பிக்கும் வகையில் பாதியிலேயே பிடுங்கி கொண்டார்.

முடித்தவுடன் பரஸ்பர பிரியாவிடை, லக்கியும் அதிஷாவும் எங்களுக்கு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்கள்.

நாங்கள் அனைவரும் கருத்தினால் ஒன்றுபட்டோமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அன்பினால் ஒன்றுபட்டோம். ரமேஷ் வைத்யாவின் உரிமையான அன்பு, அப்துல்லா, வெண்பூவின் சகோதர அன்பு, லக்கி அதிஷாவின் தோழமை அன்பு.
அன்பிற்கு நிகரேது, இந்த உலகம் உள்ளவரை.

விடுபட்டவை:
நண்பர் பரிசலுடன் வந்திருந்த நண்பர் கனலி, சென்னையில் மேலும் ஒரு நண்பர் கலந்து கொண்டார், அவர் பெயர் செந்தில் இவர்கள் இருவரும் பரிசல் தனது பதிவில் சொன்ன பரிசல் குழுவில் உறுப்பினர்கள்.

குறைந்த தண்ணீரில் சரக்கடித்தல்நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். அங்கு அவர் குடிக்க அழைக்கப் படவில்லை. வேடிக்கை பார்க்க தான் சென்றிருந்தார். பார் திறந்த உடன் , அங்கு குழுமியிருந்த குடிகாரர்கள் இவரை அடையாளம் கண்டு, இவரை குடிக்குமாறு வேண்ட, சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக் கூற, குடிகாரரோ, அதிக சரக்கு குடிக்க அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் குடித்து விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் நாலு பெக் மட்டுமே அடிக்கவேண்டுமேனில், அதற்கு நான் ஒரு பீர் முழுவதும் அடித்து , பிறகு தான் சரக்கடிக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன சரக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட சரக்கை, அதுவும் குறைந்த தண்ணீரோடு அடிக்க வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த தண்ணீரில் ஒரு பெக்கினை, ஒரு குவாட்டரை, ஒரு புல்லினை அடிக்க வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த தண்ணீரில் , அடிக்க வேண்டியவைகளை எல்லாம் அடிக்க வேண்டும். போதை ஏற அடிக்க வேண்டும். எவ்வளவு குடித்தாலும் வாந்தி வராமல் இருக்கணும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! குடித்து பழகுக !! போதையுடன் திரிக !!

அன்புடன் ..... வால்பையன்

இதே மாதிரி ஏதாவது பதிவ படிச்ச மாதிரி உங்களுக்கு தோணுதா
இது ஒரு சோதனை முயற்சி தான், அண்ணன் சீனா அசைபோடுவது எனற தனது பிளாக்கில் எழுதியது போதையில் இங்கே திரிந்து விட்டது

நந்து f/o நிலா அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள நந்து F/O நிலா அவர்களுக்கு !

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் படங்கள் அரும்பாக இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் போட்டோக்கள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது போட்டோக்களை இயன்ற அளவில் பார்த்து வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)


கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது தங்களின் எப்போதோ போட்ட பழைய பதிவு ஒன்று. அதில் நீங்க ஒன்று சொல்லியிருந்தீர்கள். 30%க்கும் அதிகமாக பணி தொடர்பாகத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் தொழிலில் கவனச் சிதறல் ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த போட்டோ எடுக்கும் வேலை என்பதும் ஒரு வகையான போதை போன்றதே. எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்

ஆனால் நீங்கள் போட்டோ எடுப்பது என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்துடன் ஊர் சுற்றி அனுபவிக்க வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில் போட்டோ எடுத்தல், ப்ளிக்கரில் ஏற்றுதல் போன்ற பணிகளையும் அவ்வப்போது செய்யுங்கள்.நண்பர்களுக்கு அவ்வபோது டிப்ஸ் கொடுங்கள் . உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு கேமிரா கண்ணாயிரமாக கூட வரமுடியும். (கேமிரா கண்ணாயிரம் நம் ஊருக்கு வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

போடோகிராபி ஒரு மிரேஜ். சில பிளாக் ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு பதிவு ஹிட்டானால் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் பதிவு மொக்கையா போச்சுன்னா புது வரவுக்குப் கும்மி அடிக்க போய் விடுவார்கள். அதைப் போல போடோகிராபியிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் கேமிரா வாங்கி போட்டோ எடுக்க ஆரம்பித்த போதே தல மோஹன்தாஸ் இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் எதை போட்டோ எடுப்பது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?

2) எத்தனை பேர் நமது போட்டோவை பார்த்து என்ன சொன்னார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?

3) செயற்கை காட்சிகள் நீங்கலாக அனைத்தையும் போட்டோ எடுத்து குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

4) நண்பர்களுடன் சேர்ந்து ஆற அமர்ந்து சினிமா பார்த்து கதையடித்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?

5) எப்போதடா போட்டோ எடுக்க கேமிராவை தூக்கலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?

6) பிளாக்குல எடுத்த படத்தையெல்லாம் போஸ்ட் செய்ய ஆவலாக இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவி்லும் நெடு நேரம் உங்களை மொட்டைமாடியில் நிலாவை(நிஜ நிலாவை உங்கள் மகளை அல்ல) போட்டோ எடுக்க காத்திருப்பதை காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் மொட்டைமாடியில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இருக்கிறது. இங்கே வேண்டாம்.)

பகல் பூராவும் நிலாவுக்கு(இப்போ உங்க பொண்ணு) செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த மொட்டைமாடியில் ஆவி போல நடனமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து சினிமா கம்பெனியில் போட்டோகிராபராக இருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கேமரா வாங்கி இன்று சினிமாவுக்கு படம் எடுக்கிறார் . ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு டிஜிடல் SLR கேமராவில் படம் எடுத்து , அடுத்த வாரமே சினிமாவில் போட்டோகிராபி ஆனார்.

போட்டோ எடுப்பதை அவ்வப்போது செய்யுங்கள். அதிகமா போட்டோ எடுப்பவர்களை சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு கேமராவும் , சில லென்சும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது சுட்டு கொண்டிருப்பவர்கள்.

போட்டோ எடுப்பதை தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது போட்டோ எடுக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் கேமிரா முன்னேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு கேமிரா திரை ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் ஏதாவது போட்டோ எடுத்து கொண்டேயிருப்பார்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்கள் படங்களை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்கள் படங்களை மற்றவர்கள் திட்ட வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது போட்டோகிராபி அவதாரம். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! போட்டோ எடுப்பதை விட போட்டோவை பார்ப்பவர்கள் அவதானிப்பவர்கள்.

விழியன் போன்றோர் மாதிரி அளவாக, செறிவாக வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்துக்கொரு முறை போட்டோ எடுக்க செல்லுங்கள்.

நந்து அண்ணா! மீண்டும் சொல்கிறேன். போட்டோகிராபி என்ற போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்ல நிலா(உங்க பொண்ணு)படங்கள் எடுத்திருப்பதை தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் போட்டோகிராபி உலகம்!

சரக்கடிப்பதை நிறுத்திவிட்டேன், நன்றி பரிசல்காரன்

இதைப் படிச்சுட்டு தமிழ்நாட்டை யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்!

என்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப டாஸ்மாக்கில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்!

நான் என் அண்ணன் ஸ்தானத்தில் மதிக்கும், பரிசல்காரன் அண்ணன் வால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்!

என் மீது அக்கறை கொண்டு என் கூட சரக்கடித்து, வாந்தியெடுத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு திரும்ப சரக்கு வாங்கி தர என்னால் முடியாது.


அவ்வப்போது மட்டும்தான் இனி சரக்கடிப்பேன் . (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒருதடவையா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த வால்பையன் கேட்கிறான்!)

இனிமேல் டாஸ்மாக் பாருக்குள் செல்வேனா என்று தெரியவில்லை

ஆனால் டாஸ்மாக் கடையை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.

அளவில்லா அன்போடு-
வால்பையன்
(arunero@gmail.com)(ஐயா.. சாமீ... தயவுசெய்து இதுக்கு மேல இருக்குற மேட்டர சீரியசா எடுத்துகாதிங்க, அது பரிசலோட பதிவில் இருந்து சுடப்பட்டது .)


உண்மையான பதில் கீழே!

இந்த பதிவை படித்ததும் சென்னையில் இருந்து டோண்டு அவர்கள் எனது அலைபேசிக்கு அழைத்தார், ஒரு தந்தையின் அக்கறையோடு என்னை கடிந்து கொண்டார்.

என் மீது இவர்கள் காட்டும் அக்கறைக்கு என் கைம்மாறு நான் திருந்துவதுதாக தான் இருக்கும். எனக்கே தெரிகிறது நான் செய்வது கொஞ்சம் ஓவர் தான் என்று. இனிய விடுமுறை நாட்களை குடும்பத்தோடு கழிக்காமல் நண்பர்களே உலகம் என்று வாழ்ந்து விட்டேன்.
எனக்கு கிடைத்ததை போல் நண்பர்கள் உங்களுக்கும் கிடைத்தால் வெகு விரைவிலேயே சட்டி தூக்குவது உறுதி, சில சம்பாசனைகளை பாருங்கள்.

எண்டா எவ்வளவு தண்ணி அடிக்கிற,

சும்மா தாண்டா, எதையும் முழுசா அனுபவிக்கனும்ல

இந்த காச உன் குடும்பத்துக்கு செலவு செய்யலாம்ல

அவங்களுக்கு வேணும்கிறத கொடுத்துருவனே

வேற ஏதாவது பொருள் வாங்கி போடலாம், இல்ல சேமிச்சு வைக்கலாம்.

நீ சொல்றதும் சரியாதான் படுது, மாத்திக்கிறேன்

சரி சரி என்னொரு குவாட்டர் சொல்லு.

மறுநாள் காலை(அதாவது ஞாயிறு)

அலைபேசியில் அழைத்து

எண்டா இன்னும் வரலையா?

இப்போ தாண்டா எந்திருச்சேன்.

வர்றியா

கொஞ்சம் வேலை இருக்கே

வெளிய போய் சாப்பிடாலாம்னு பார்த்தேன்

எங்கே

ஆம்பூர் பிரியாணிக்கு

அங்க மதியம் தானடா

லைட்டா சரக்கு சாப்பிட்டு தான்

இப்படி என் பொழைப்பு போச்ச்ன்னா விளங்குமா

அதனால இனிமேல் வாரம் ஒரு ஊருக்கு டூர் போட்றலாம்னு இருக்கேன்.

என்னை கண்ட்ரோல் பண்ண ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன

வெகு அவசரமாக ஒரு சம்பாசனை உங்கள் முன்

me: freeyaa
dhoniv: சொல்லுங்க தலைவா
me: yaarunnu theriyuthaa
dhoniv: தெரியலங்க
me: nalla natikkiringka athisha
dhoniv: ஐயா சத்தியமா தெரியல
me: vaalpaiyan
dhoniv: உங்க பேரு கார்த்தில
me: அது நான் இல்லை
dhoniv: ஓகே உங்க பேரு என்ன
me: என் பெயர் அருண்
dhoniv: ஓகே
Sent at 3:17 PM on Tuesday
me: ஆனா ரெண்டு பேரும் ஒரெ ஆபிஸ்
dhoniv: ஓகே
;)
me: ஆபிஸா இப்போ
dhoniv: ஆமாங்க
me: ok you carry on ur work
dhoniv: சும்மாதான் தலைவா இருக்கேன்
me: அட நம்ம செட்டு
dhoniv: ஒரு மெயிலுக்காக வெயிட்டிங்க
வந்ததும் பிஸிதான்
me: லவ்வர் கிட்ட இருந்தா?
dhoniv: தலைவா மேனஜருகிட்டருந்து
Sent at 3:23 PM on Tuesday
me: sari sari nampitten
dhoniv: ஐயா நிசமாத்தான்
மெயில்ல லவ் பண்ற அளவுக்கு இன்னும் நான் வளரல
me: அப்பொ எது வரைக்கும் வளர்திங்க
dhoniv: இன்னும் லவ் பண்ற அளவ்வுக்கே வளரல
Sent at 3:26 PM on Tuesday
me: ரொம்ப பொய் சொன்ன போஜனம் கிடைக்காது
dhoniv: தலைவா நான் ஓரளவுக்குஇல்லனாலும் சுமாரான நல்ல பையன்
me: லக்கி உங்கள பத்தி எல்லா உண்மையையும் சொல்லிட்டார்
Sent at 3:30 PM on Tuesday
me: உடனே லக்கிக்கு போன் போட்டு கேட்டர்தா
dhoniv: ஆஹா
என்னனு
me: எல்லாத்தையும் சொல்லிடிங்கலான்னு
dhoniv: ஆமாங்க நீங்க ஒரு பெரிய தில்லாலங்கடிங்க
உங்கள பத்தியும் எல்லாத்தையும் சொல்லிட்டார்
Sent at 3:34 PM on Tuesday
me: சொல்லிட்டாரா
dhoniv: ஆமாங்க
;-)
me: சரி வேறு யாருகிட்டயும் சொல்லிராதிங்க
Sent at 3:36 PM on Tuesday
dhoniv: மாட்டேன்ங்க
me: நானும் சொல்லமாட்டேன்
dhoniv: ஹிஹி
me: சீரியஸா பேசும் போது என்ன சிரிப்பு
dhoniv: அது வந்து அது வந்து
ஹிஹிஹி
me: திரும்பவும் பார்ரா

சின்ன டோண்டு அல்லது டோண்டுவில் பாதி

தலைப்பின் காரணம் இறுதியில்.

ஒரு சம்பவம் அதன் பன்முக பார்வை என்பதற்கு உதாரணம். சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பாக தான் இருக்கும். அவரவர் பாணியில் இருக்கும் எழுத்துகளை படிக்கும் போது சுவையாக இருக்கிறது.அதன் காரணமாகவே ஏற்கனவே பரிசல் எங்கள் சந்திப்பு பற்றி பதிவிட்டு இருந்தாலும், என் பங்குக்கு நானும் கொஞ்சம் கொள்கிறேன் ஸாரி சொல்கிறேன்

பரிசல் ஈரோடு வருகிறேன் என்று சொன்ன போது சந்தோசமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு விருந்தோம்பலில் அனுபவம் இல்லை. யார் வந்தாலும் அவர்களை நேரடியாக சமத்துவரபுரத்துக்கு கூட்டி செல்வதே வழக்கமாக கொண்டுள்ளேன். என்னுடைய பெரும்பாலான சனி ஞாயிறுகள் அங்கே தான் கழியும்.

வந்து கொண்டிருக்கும் வழியிலே பரிசல் எனக்கு போன் செய்து தமிழ்மணத்தில் இருந்து பேசுகிறோம். உங்களை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்துள்ளோம், எழுத முடியுமா என்றார். ஏற்கனவே அடிச்ச ரெண்டு பெக் போன இடம் தெரியல. எதுவும் புரியாமல் தத்து பித்து என்று உளர ஆரம்பிக்கும் வேளையில் சிரித்து கொண்டே நான் பரிசல் பேசுகிறேன் என்று குட்டை உடைத்தார்.

பதிவர்களின் இன்னொரு விளையாட்டு பெயர் மாற்றி அறிமுகம் செய்து கொள்வது, பரிசல் தன்னை வெயிலான் என்று அறிமுகம் செய்து கொண்டார். வெயிலான் பரிசலாக, இதில் காமெடி என்னவென்றால் அவர்களுடன் வந்திருந்த நந்தகோபால் உண்மையை என்னிடம் சொல்லிவிட்டார். நானும் தெரியாதது மாதிரியே நடித்து கொண்டிருந்தேன். நான், வெண்பூ, பரிசல் மூன்று பெரும் சில நாட்களாக கும்மிகளில் கலந்து கொள்வதால் அது பற்றிய பேச்சு வரும் போது ஆள் மாறாட்ட உண்மையை ஒத்து கொண்டார்கள்.

பரிசல், லக்கிலுக் போன்றவர்கள் ஒற்றைநாடி சரீரம் என்று சொல்வார்கள், அவர்களாக சொன்னால் ஒளிய அவர்களின் வயதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைசுவையை தடவி தருகிறார் பரிசல், உடன் வந்த நண்பர்கள் கண்ணன், நந்தகோபால், வெயிலான் அனைவருக்கும் சேர்த்து அவரே பேசினார் என்றால் பாருங்களேன்.

எனக்கு மூளையில் இருக்கும் சில செல்கள் அழிந்து விட்டதால் சரியாக ஞாபக சக்தி இருப்பதில்லை, நாங்கள் எதை பற்றி பேசினோம் என்று நினைவில்லை. எப்படி வீட்டுக்கு போனேன் என்று கூட நினைவில்லை, திடீரென்று எழுந்து பார்த்தால் இருட்டி விட்டது, மீண்டும் அவர்களுக்கு போன் செய்து எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்து மீண்டும் பஜனையில் ஐக்கியமானேன். ஈரோட்டின் மூத்த பதிவர் நந்து அண்ணன் சிறப்புரை ஆத்தினார்.

வெகு சிறப்பாக சந்திப்பு நடந்தது, கூடுதுறை போன்று சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களை அழைக்க கால அவகாசம் இல்லை, அருகில் இருப்பவர்கள் தயவுசெய்து உங்களை வெளிக்காட்டி கொள்ளுங்கள். அடுத்த சந்திப்பு இதைவிட அருமையாக இருக்கவேண்டும்.

அப்புறம் என் படத்தை பரிசல் போட்டு விட்டதால் பரிசல் படத்தை போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்
படம் கீழேசொல்ல மறந்துட்டேனே நம்ம வெயிலான் பார்க்க அமுல்பேபி மாதிரி இருக்கார்.

தலைப்பின் காரணம் கேட்கும் அன்பர்களுக்கு பரிசலுக்கு நான்கு மொழிகள் தெரியுமாம் -என்ன தலைப்பு சரி தானே

குரு-சிஷ்யன் = டோண்டு-வால்பையன்

சமீபத்தில்! அட நம்புங்க உண்மையிலேயே சமீபத்தில் தான்
சென்ற மாதம் ஆரம்பத்தில் அண்ணாச்சி ஆஸிப் மீரான் அவர்களது இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். செல்லும் வழியிலே கவனக்குறைவால் அலைபேசியை தொலைத்து விட்டேன் என்பது வேறு கதை.

யாருடைய அலைபேசி எண்ணும் என்னிடம் இல்லை. தனியாக சென்றதால் பாதுகாப்பு கருதி மடிக்கணினியை எடுத்து செல்லவில்லை. யாரை அழைப்பது? எங்கே போவது?
வலைபூ நண்பர்களை அழைக்க அவர்களுடைய பதிவில் பின்னூட்டமிடலாம். ஆனால் பதில் மரியாதை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நிறைய பேர் என்னை நேரில் பார்க்காதவர்கள். என்னை பற்றி என்ன மாதிரியான கண்ணோட்டம் வைத்திருப்பார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்.

ஆனால் சென்னையில் நான் சந்தித்து பழகிய முக்கியமானவர் டோண்டு அவர்கள்.
அவரை அழைப்பதிலும் ஒரு வசதி இருக்கிறது. அவர் எந்நேரமும் கணினி முன் அமர்ந்திருப்பவர். உடனடியான பதில் அவரிடம் இருந்து வரும். அதனால் அவருக்கு பின்னூட்டம் இட்டேன். பதிவர்களை உறவினர் போல் பார்க்கும் டோண்டு அவர்கள் அடுத்த சில வினாடிகளில், நான் கொடுத்திருந்த தற்காலிக எண்ணுக்கு என்னை தொடர்பு கொண்டார். நாளை வருவதாகவும் என்னை மண்டபத்தில் சந்திப்பதாகவும் சொன்னார்.

இதெல்லாம் முன்னுரை! இப்போ மேட்டர் என்னான்னா
பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக் அவர்கள் அவருடைய இந்த பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

///க.ர.அதியமான், உண்மைத்தமிழன் வரிசையில் வால்பையனும் டோண்டு சாரின் அதிகாரப்பூர்வமான சீடனாக உருவெடுத்திருக்கிறார். “டோண்டு சார் வந்துருவாரு, நேத்தைக்கு கூட அவருக்கு என் மொபைல் தொலைஞ்சிடுச்சின்னு பின்னூட்டம் போட்டிருக்கேன்” என்று “இயேசு வருகிறார்” பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார்.///

வசிஷ்டரரே இப்படி எழுதினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
மல்லாக்க படுத்து இது பற்றி யோசித்து கொண்டிருந்த வேளையில் அதுவும் ஒரு வகையில் உண்மை தான் என்று தோன்றியது.

நான் சேவை சம்பந்த பட்ட துறையில் இருக்கிறேன். வாடிக்கையாளர்களிடம் தினமும் தொடர்பு கொள்ளவேண்டும், புதிதாக வாடிக்கையாளர்களை உருவாக்கவேண்டும். அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கவேண்டும். என்னை போல் சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு மேலும் இது பற்றி தெரியலாம்.

டோண்டு அவர்கள் பல ஆண்டுகளாக சேவைத்துறையில் தனி ஆளாக ராஜாங்கம் நடத்துபவர். அவரின் அனுபவம் கூட என் வயது ஆகியிருக்காது என்று சொன்னால் அது மிகையல்ல. அவருடன் நான் பல கருத்துகளின் உடன்படாமல் தனிப்பட்டு நின்றாலும், அவரின் இந்த திறமைகளை நான் மதிக்கிறேன்.

வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள அவருக்கு சிஷ்யனாக இருப்பதில் எனக்கு ஒன்றும் அவமானமல்ல.

கோமண கிருஷ்ணன் போன்றவர்கள் என்னை போட்டியாக நினைக்காமல் என்னை கற்று கொள்ள அனுமதிக்கவும்.

நன்றி

!

Blog Widget by LinkWithin