குவியல்!..(30.07.09)

சென்ற வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாடிய அன்பு அண்ணன் ஜமால் அவர்களுக்கும், கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கும் தனிப்பதிவாக போட்டு வாழ்த்து சொல்லமுடியவில்லை!
வாரஇறுதி விடுமுறை நாட்கள் சதி செய்துவிட்டது! அதனால் இங்கேயே அவர்களுக்கு வாழ்த்து சொல்லிகிறேன்! அட்வான்ஸ் வாழ்த்தாக நாளை(31.07.09) பிறந்தநாள் கொண்டாடப்போகும் சித்தர் லதானத்திற்கும் கூடி வாழ்த்துரைப்போம்!

*****************************
இனி ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்!
இந்த வாரம் glass house-the good mother

தலைப்பை பார்த்தவுடன் செண்டிமென்டல் டச்சிங் படமுன்னு கணக்கு போட்டா நீங்க தோத்துத்டிங்கன்னு அர்த்தம்! படம் பக்கா சஸ்பென்ஸ் திரில்லர்!
கதைக்கு முன்னால் சில விசயம்!
படத்தில் மொத்தம் எட்டே கேரக்டர்! அதில் ஓரிரு காட்சிகளில் வருபவர் நான்கு பேர்!
ஒரு பெரிய வீட்டில் மொத்த படமும், கைதேர்த்த இயக்குனர் என்றால் இரண்டே நாளில் படத்தை எடுத்திருப்பார்!

வீட்டில் விடுதி போல் குழந்தைகளை பாதுகாக்கும் வேலை பார்ப்பவர்கள் ஈவும், ரேமாண்டும்
அந்த வீட்டில் புதிதாக வரும் அபே மற்றும் ஈதனை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு, இரண்டு நாளில் ஈதன் பயங்கர நோய்வாய் படுகிறான்! ஈவ் அருகிலேயே இருந்து பார்த்து கொள்கிறாள்! ஒரு பாசமிகு தாயைப்போல் நடந்து கொள்கிறாளே என்று நினைத்தால் விழுகிறது பேரிடி!, ஈவ் அவனுக்கு தினமும் உணவில் விசம் கலந்து கொடுப்பதை கண்டுபிடிக்கிறாள் அபே!

சிறுவயதில் இறந்த போன தனது மகன் டேவிட்டை சரியாக கவனிக்க முடியாமல் பேரண்டிங் பிரஷ்சரால் பாதிக்கப்பட்டவள் ஈவ்! அங்கு வரும் சிறுவர்களுக்கு உணவில் விசம் கலந்து படுக்கையில் இருக்கும் போது நன்றாக கவனித்து கொள்கிறாள், அவர்கள் எழுத்து விட்டால் கவனிக்க முடியாதோ என்ற எண்ணத்தில் தினமும் உணவில் விசம்! அபேவுக்கு தெரிந்தவுடன் படம் ராக்கெட் வேகம்!

இயல்பான திரைக்கதை, அபேவாக நடித்த சிறுமியின் சிறப்பான நடிப்பு நம்மை படத்தில் கட்டிப் போட்டு விடுகிறது!


**************************

சமீபத்தில் நண்பர் ஸ்ரீதர் எழுதியிருந்த இந்த பதிவைப்பார்த்து நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள்! என்ன இப்படி எழுதியிருக்கார் நீங்க பார்க்கலையா? எதுவும் சொல்ல்லையா என்று?, எனக்கு சொல்ல ஒன்றுமில்லை காரணம் ஸ்ரீதர் பொய்யாக எதுவும் எழுதவில்லை பின் என்ன நான் சொல்வது மேலும் ஸ்ரீதர் பட்டதெல்லாம் சும்மா ஒரு பார்ட் தான்! எழுத்தாளார் வாமு.கோமுவெல்லாம் பாவம் வாராவாரம் படுகிறார்!

என்னை பற்றி ஸ்ரீதர் சொல்லியதால் நானும் ஸ்ரீதரை பற்றி ஒன்று!
ஸ்ரீதர் மூஞ்சியை பார்த்து யாரும் பச்சபுள்ளைன்னு நினைச்சிகாதிங்க, அவர் மதுரையில் பிரபல நாட்டாமை!. நசுங்காத சொம்பும், ஆலமரமும் இல்லாமல் பல பஞ்சாயத்துகளை தாடியை தடவி கொண்டே தீர்ப்பு சொல்லுவார்! போன வருடம் மைனர் “குஞ்சை” சுட்டது கூட அவர்தான்!

****************************

பதிவின் கீழ் நமது பெயர் அழகாக தெரிவது எப்படின்னு சிலர் கேட்டிருந்தார்கள்!
இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்து அதில் போட்டிருகும் படி தொடருங்கள், உங்கள் பதிவின் கீழேயும் அழகான கையெழுத்து தயார்!

***************************

கவிதை வேற சொல்லனுமா!

ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்குமான
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா!

குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து!

1. முதல் நாலு ரவுண்டு அடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு ஐந்தாவது ரவுண்டில்,போன வருச மேட்டரை இழுத்து நான் பண்ணது தப்பு தாண்டான்னு சீன் போடுவது ஏன்?

2.குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?

3.என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!

4.எப்போ ஆஃப்பாயில் போட்டாலும், ஸாரி மச்சி சரக்கு மாத்தி அடிச்சிட்டேன் என்றோ, மச்சி இந்த கடையில டூப்ளிகேட் சரக்குடா, இனிமே இங்க வரக்கூடாதுன்னு நீ மட்டும் சீன் போடுவது ஏன்?

5.அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!

6.தண்ணிய போட்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம, கொஞ்சம் மப்பு ஏறுனவுடன் பார் சப்ளையருகெல்லாம் சரக்கு வாங்கி தர்ற வள்ளல் ஆகிறுருயே எப்படி?

7.அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?

8.சாதரணமா நாய் குழைச்சாலே அடுத்த தெருவில முட்டிட்டு ஓடுவ! ஆனா சரக்க போட்டா மட்டும் பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!

9.புதுசா கூட சரக்கடிக்கிறவங்கிட்ட ஒரு ஃபுல்ல ரெண்டு ரவுண்டுல அடிப்பேன்ன்னு டரியலாக்கிட்டு, ஒரு ஃபுல் கிங்பிஷ்ஷர் பீர்ன்னு ஆர்டர் கொடுக்க எப்படிடா தைரியம் வருது!

10.மப்புல வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணும் போது வீட்டுக்கு பத்தடி தூரத்துல எல்லா மப்பும் காணாம போயி, மச்சி இப்படியே நீ அப்பீட்டு ஆகிகன்னு ஃப்ரெண்டை எப்படிடா உன்னால துரத்த முடியுது!

11.நீ சரக்கடிச்சேன்னு ஊருகெல்லாம் காட்டுறதுக்கு நைட்டு போனை போட்டு எல்லாத்து வயித்துலயும் நெருப்ப பத்த வைக்கிறியே ஏன் இப்படி?


டிஸ்கி:பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!

களையெடுத்தல்!





பாலா நாளைக்கு ஆபிஸ்ல ஆடிடிங், நீ பாட்டுக்கு அசால்டா இருக்கே!

அதை பத்தி தான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கேன் திலகா!

மாட்டுனா ரெண்டு பேர்த்துக்கும் தான் வேலை போகும்!

சில்லி மாதிரி பேசாதே! நாம பேங்க் ஸ்டாஃப்ஸ், அப்படி சும்மாவெல்லாம் வேலையிலிருந்து தூக்க முடியாது!

நீங்க பண்ண காரியத்துக்கு ஜெயில்ல கூட போடலாம்!

முதல்ல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம், என்ன செய்யலாம்னு நாளைக்கு சொல்றேன்!

***

மிஸ்.திலகா நீங்களும், பாலாவும் சேர்ந்து அப்ரூவல் கொடுத்த லோன்ல ஏழு பேர் இதுவரைக்கும் பத்து பைசா கூட திரும்பி வரல! நீங்க என்ன ஆக்‌ஷன் எடுத்திங்க!

இல்ல சார், பாலா தான் ஃபீல்டு வொர்க் பார்க்கிறார்,

பாருங்க ஆபிஸ் அத்தாரிட்டிகிட்ட தான் நான் கேள்வி கேட்க முடியும், அதுவும் நீங்க அங்க கேட்காம விட்ட கேள்வி தான்!

ஆமா சார், பிராசச்சிங் போய்கிட்டு இருக்கு!

இல்ல திலகா நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறிங்க!

சார், நான் ஒன்னும் செய்யல சார்!

நீங்க வேலைக்கு சேர்ந்து மூனு வருசத்துல இந்த மாதிரி ரிமார்க் வந்ததில்ல, இப்போ என்னாச்சு!

................

உங்க மெளனத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியும் திலகா! இது பாலாவோட நீங்க செஞ்ச பிராடு தான்!

சார்! என் குடும்பத்த பத்தி உங்களுக்கே தெரியும்! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல சார்!

உங்க குடும்ப கதை எனக்கு தேவையில்ல! இதுக்கு ஆக்‌ஷன் எடுத்தா நீங்க ரெண்டுபேரும் ஜெயிலுக்கு போகவேண்டி வரும்!

என்னை மன்னிச்சிருங்க சார், என் மேல எந்த தப்பும்மில்ல சார்!

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! இதை வராக்கடனா நான் சைன் பண்ணனும்,
உங்க கண்ணிருக்காக இல்ல வேற ஒரு காரணத்துக்காக!

...............

நான் ஹோட்டல் உட்லேண்ட்ஸ்ல தான் ரூம் போட்டிருக்கேன்! அங்க வந்துருங்க கணக்க முடிச்சிக்கலாம்!

சார்! நீங்க எனக்கு அப்பா மாதிரி!

ஸாரி திலகா! உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு!

சார்! நான் மேலதிகாரிகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்!

அக்கவுண்ட்ல இருக்குற ஓட்டைய மறைக்க என் மேல பழி போடுறேன்னு சொல்லுவேன்!
என் சர்வீஸ் உன் வயசு ஞாபகம் வச்சுக்கோ!

நீங்க வற்புறுத்துனா நான் தற்கொலை பண்ணிக்குவேன்!

இன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருக்கே! நாளைக்கு யோசிச்சு பதில் சொல்லு! இப்ப நீ போலாம்!

**************************

இப்போ ஏன் அழுகுற திலகா!

உங்களுக்கு கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லையா பாலா! உங்களை காதலிச்ச பாவத்துக்கு இப்போ நான் கத்தி மேல நிக்கிறேன்!

தோ பார் நான் ஒன்னும் வேணும்முன்னு செய்யல! பணம் திரும்ப வந்துரும்னு நினைச்சேன், ஆனா இப்படி ஆகும்னு யார் கண்டா!

நீங்க அசால்டா சொல்லிட்டிங்க, இப்போ மாட்டிகிட்டு முழிக்கிறது யாரு!?

கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு! இத சரிகட்ட ஒரே வழி தான் இருக்கு! கனவு மாதிரி நினைச்சி ஒருதடவை ஹோட்டலுக்கு போயிட்டு வந்துரு!

தூ..............

திலகா!... திலகா!..

******************************

நீ ஹோட்டலுக்கு வருவேன்னு தெரியும் திலகா! என்ன முடிவு பண்ண!

நான் என் வேலையை ராஜினாமா பண்றேன் சார்!

பண்ணிட்டு!

நான் அந்த நாயக் காதலிச்சது உண்மை, அவன் நீட்ன இடத்துல கையெழுத்து போட்டது உண்மை, அதுக்கான தண்டனைய நான் அனுபவிக்க தயார்!

திலகா! நீ அந்த உண்மைய புரிஞ்சிக்கனும்னு தான் நேத்து அப்படி பேசினேன்! ஏற்கனவே இந்த மாதிரி பண்ணி மாற்றலாகி வந்தவன் தான் அந்த பாலா! இங்க வந்து உன்னை கைகுள்ள போட்டுகிட்டான் தெரிஞ்ச பிறகு நாங்க சேர்ந்து நடத்திய நாடகம் இது! நீ வாழ வேண்டிய பொண்ணு, இனிமே இந்த மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்காத!

சார்! அப்போ நான்!

நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்! போலிஸ் பாலாவை நேத்து நைட்டே அரெஸ்ட் பண்ணி கூட்டி போயாச்சு! உன் பேர் இதுல வராது! இனிமே ஒழுங்க நடந்துக்கோ! யூ மே கோ நெள!

****************************

டிஸ்கி:அது என்னமோ தெரியல காட்சிகளை விவரிக்குறதுன்னா எனக்கு கசப்பா இருக்கு! இந்த மாதிரி உரையாடல்ல கதை சொல்றதுக்கு தான் பிடிச்சிருக்கு!

குவியல்!..(14.07.09)

வாழ்த்துக்களோடு ஆரம்பிப்பது தானே முறை, பதிவர் அன்பு அண்ணன் அப்துல்லா பாடிய பாடலை ஒரு சைட்டில் பாராட்டி எழுதியுள்ளார்கள், அவர்களின் காதுகளை பற்றிய ஆராய்ச்சியை பிறகு வைத்து கொள்ளலாம், முதலில் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
செய்தி:
Kadhal Oru Pallikkoodam---
Vocals: M.M. Abdullah & Chorus
Lyrics: Viveka

You need to relish this song for two things – the grin-worthy lyrics and the way the guitar and trumpet come together to bolster the native rhythms! Abdullah sounds easy on the ears. The song could find immediate resonance in the minds of the college-going kids, though the tune sounds maddeningly familiar!


***********************************

பதிவர் ச்சின்னபையன், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கிறார்,
நண்பர் விக்னேஷ்வரன் எடுத்த பேட்டியில் நான் சந்திக்க விரும்பும் நபராக அவரைக் குறிப்பிட்டதை அறிந்து எனக்கு தரிசனம் தர சம்மதித்துள்ளார், வரும் ஞாயிறு கோவையில்.
திருப்பூர் அன்பர்கள் சிரமம் பார்க்கலாம் விடுமுறையை கோவையில் கழிக்க வருமாறு கேட்டு கொள்கிறேன். அண்ணாச்சி இருக்காக, மாப்பிளை சஞ்சய் இருக்காக மற்றும் நம் உறவினர்கள்(மருதமலையில) எல்லாம் இருக்காக, வந்துடுங்க நண்பர்களே!

***********************************

சென்ற குவியலிலேயே குறிப்பிட்டிருந்தேன், குறுக்க பேசும் பழக்கம் எனக்குண்டு என்று, அது வேறு சிலருக்கும் இருப்பதை அறிந்து அது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கையில் பல உண்மைகள் வெளிவந்தது, இந்த பழக்கம் எனக்கு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே உங்களை சுற்றி நண்பர்கள் அமர்ந்து உங்கள் பேட்சை கேட்டு கொண்டிருப்பார்களா? அப்ப உங்களுக்கும் இருக்கு.
கிசுகிசு பாணியில் யார்யாருக்கு இருக்குன்னு சொல்லிடுறேன்.

எனக்கும், யானையை அடக்கும் வங்கிகாரருக்கும் முதல் பத்து நிமிசம் சைலண்ட் மியூசிக் தான், அதன் பிறகு டி.டீ.எஸ். டால்பி சவுண்ட் தான்,

கொட்டுகாரர் போனில் தான் பேசி கொண்டிருக்கிறார், ஆனால் அவருக்கும் அந்த பழக்கம் உண்டுன்னு தெரியுது,

சீனியர் நிருபரான இரவுநேர தொல்லைபேசி பதிவருக்கும் இந்த பழக்கம் உண்டு, ஆனால் சுதி ஏற ஏற சவுண்டு குறையும்.

மேலே இருக்குறவங்க பூரா துறை சார்ந்து பேசுறோம்னு மொக்கை போடுறவங்க, இனி பேசி கொண்டே இருந்தாலும் சுவாரஷ்யமாக பேசுபவர்கள் பற்றி

ஈரோடு போட்டோகாரர் இதில் முதலிடம், சிறப்பு: நமக்கு போரடிக்கிற மாதிரி தெரிந்தால் டாபிக்கை மாற்றுவது,

வேட்டைகாரர் தான் இதில் டாப்ரேங்க், சுருக்கமாக சொல்வதென்றால் வீட்டில் இருந்து வரும்போது காதோடு மட்டும் வா! வாய் வீட்டிலேயே இருக்கட்டும் என்பாராம்

*****************************************

உங்கள் உடன் இருப்பவர் காதலிக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதோ டிப்ஸ்:

காதல் பாடல்களாக அதிக சத்தத்தில் கேட்டு கொண்டிருப்பார்!

சிலசமயம் உணர்ச்சி வேகத்தில் கூடவே பாடுவார்!

இசையை மட்டும் நாம் கேட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது, பாடல் வரிகளை மனப்பாடம் செய்ய ஒரே பாடலை திரும்ப போட்டு நமக்கு இனிமா கொடுப்பார்!

எதாவது புதிதாக செய்ய வேண்டும் என ஆர்வத்திலேயே இருப்பார்!

பைக், மற்றும் உடையில் சில சில மாற்றங்கள் அடிக்கடி நடக்கும்!

சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்பார்!


உண்மையில் காதலிப்பதை விட அவுங்க கூட இருக்குறது பேஜார் தான் இல்லையா!?

கொஞ்சநாளா எனக்கு அப்படி தான் இருக்குது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

**************************

கவுஜ போடனும்ல!
இந்த வாரமும் அனுஜன்யா தான்

இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!

அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்

டாடாவிலும் டோயோட்டாவிலும்
நிதமும் சுற்றிய
அதிர்ஷ்டசாலி நண்பன்.

அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்

சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே

இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை

மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

ஏற்றத்தாழ்வற்ற போதையுலகம்!

டிஸ்கி:இதற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமுண்டு என்று நினைப்பவர்கள், ஃபுல் பாட்டிலோடு என்னை அணுகவும்.

*************************

அன்புள்ள வால்,

உங்களுடன் குடிப்பதற்கோ அல்லது சந்திப்பதற்கோ முன்பு நான் ஒரு ஒரு சராசரி குடிகாரன். என்றைய தினம் டாஸ்மாக் பாரில் உங்களை சந்தித்தேனோ, என்று உங்களுடன் குடித்தேனோ, அன்றிலிருந்து எதைக் குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ”ரெட் லேபிள்”, ”ப்ளாக் டாக்” போன்ற சரக்குகளைக் குடிக்க நேர்ந்தது நீங்கள் அறிமுகப் படுத்தியதற்குப் பின்புதான்.”குடிச்சிகோவாரம்” சந்திப்பில் நீங்கள் குடித்த சரக்கை பார்த்த பிறகுதான். என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் ஒரு legend!?(ங்கொய்யால). சும்மா சொல்லவில்லை. உங்கள் அனைத்துச் சரக்குகளையும் (பட்டசாராயம் நீங்கலாக - அந்த சரக்கை ஒரு மடக்கு குடித்ததோடு சரி; முழுமையாகப் குடிக்க இன்னும் சற்று லோக்கல்சரக்கு குடிக்க வேண்டும்) குடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

இப்படி இருக்கையில், இன்று மாயக்கா பாரில் சில குடிகாரர்களை பார்க்க நேர்ந்தது. உங்கள் குடியைப் பற்றி விமர்சனம் செய்த சல்பேட்டாக்கள் அவை. அவைகளைப் பார்த்தது முதல் உங்களிடம் பேச வேண்டும் என்று ஒரு எண்ணம்.

உங்கள் மேல் அவதூறு சொல்ல நினைப்பவர்கள் பலர். காரணம் எனக்குத் தெரியாது. ”விஷேசத்திற்கு குடிப்பவர்கள்” என்று தாங்களே சொல்லி விட்டீர்கள். எனவே அவர்களைப் பற்றி நான் சொல்ல எதுவுமே இல்லை. நீங்கள் காசு கொடுத்து வாங்காமல், ஃபாரின் சரக்கு குடிக்காமல் பிதற்றுகிறீர்கள் என்ற அவர்களது முட்டாள்தனமான உளறல் என்னை இந்த மெயில் அனுப்ப வைத்து விட்டது. அவர்கள் கிடக்கிறார்கள் பரதேசிகள்.

என்னைப் பொறுத்த வரையில், லோக்கல் சரக்கு மற்றும் ஃபாரின் சரக்கில் எனது ஆசான், எனது குரு நீங்கள்தான். பொதுவாகவே குடிகாரனுக்கு ஒரு மனோபாவம் உண்டு. யாரவது குடிகாரனிடம் போய் பேசி கொண்டிருப்பது. ஆனால் நான் அப்படி அல்ல. உங்களை மிதிக்கிறேன் ஸாரி மதிக்கிறேன். உங்கள் நட்பை மதிக்கிறேன். காரணம், நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய சரக்கு. அது போலிகளற்ற, எப்போதும் ஒரே மாதிரி போதை தருகின்ற சரக்கு. எந்தவிதமான வேறுபாடும் அற்ற ஒரு உயர்ந்த சரக்கு. அத்தகைய ஒரு சரக்கை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது வணக்கங்கள்.

எனவே, குடிகார பாதையில் பட்டையை அடித்து கொண்டு பயணம் செய்யும் உங்கள் குடிபிரதாபத்தை விமர்சனம் செய்யும் பரதேசிகளை சட்டை செய்யாமல் நீங்கள் சொல்லியது போல் இந்த ஆசாமிகளுக்கு வாங்கி கொடுக்க எந்த விதமான தேவைகளும் இல்லாமல் உங்கள் சரக்கை அடியுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புமிகு,

கூஜாஷ்.


*************************

காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!

ஜெயா டீவீயில் டோண்டு ராகவன்!

பிரபல பதிவர் டோண்டு ராகவனின் நேர்காணல் இன்று ஜெயா டீவியில் ஒளிப்பரப்பானது!
நாம் இயங்கி கொண்டிருக்கும் வலைப்பூ பற்றியும் அவரது மொழி பெயர்ப்பு தொழில் பற்றியும் தகவல்களை பறிமாறி கொண்டார்! பார்க்காதவர்களுக்கு சில முக்கிய தகவல்கள் மட்டும்!


ப்ளாக் என்பது இலவ்ச சேவை, ஆனாலும் தானாக அழிய வாய்ப்பில்லை என்றார்!(கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால் என்றார்) போன மாதம் பத்து பேருக்கும் மேல் ப்ளாக்கை தொலைத்து தேடியதை குறிப்படவில்லை!. நாம் பயன்படுத்தும் ஸ்கிரிப்டுகள் சில சமயம் எமனாக வாய்ப்புண்டு

2 வருடமாக் ப்ளாக்கில் இயங்குபவர்களுக்கு போலி டோண்டு விவகாரம் என்னவாயிற்று என்று பல குழப்பம் இருந்தது. அதில் ஒரு முடிச்சை அவிழ்த்தார். கம்ப்ளைண்ட் கொடுக்க செல்லும் போது உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்றார்களாம், ஆள் பற்றாகுறை தான் காரணம் என்றார். எனகென்னவோ விட்டமின் “ப” விளையாடியிருக்கும் என்று தோன்றுகிறது!
ஜங்க் மெயில்கள் பற்றி சொன்னார் அது நமக்கு தெரியும் என்பதால் ”ஸ்கிப்பிங்” விளையாடுவோம்!

மொழி பெயர்ப்பில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன. அதற்கு பயன்படும் மென்பொருள் பற்றிய கேள்வியில் சிரிக்காமல் பல ஜோக்குகள் அடித்து சென்றார். முதலில் அறிமுகப்படுத்தியது ”CAT” என்னும் மென்பொருள், அது ஏற்கனவே ஆங்கிலத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தி நான் பார்த்திருக்கிறேன், அடுத்து சொன்னது ”மிஷின் ஓரியண்டடு” என்றார், பெயர் உச்சரிப்பு எனக்கு சரியாக தெரியவில்லை. அது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும்.

”lost in sight, lost in mind” என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும் போது அது இன்விசிபுல் இடியட் என்று மொழி பெயர்த்ததாக கூறினார், சரியான அர்த்தம் நீண்ட நாள் பார்க்காததால் மறந்துவிட்டேன். ஒருமுறை தேர்வு எழுதும் அறையில் கேள்வி தாள் கொடுத்த ஆசிரியர், தாளை பார்த்து ”unknown person prepare the question” என்று சொல்ல அனைவரும் ”கொல்” என சிரித்ததாக கூறினார். அவரு தந்தையிடம் அதை கூறியபோது, ஆசிரியரை கிண்டல் செய்யும் அளவுக்கு திமிரா என்று கண்டித்ததாகவும், அதற்கு சரியான வார்த்தை "unknowing person prepare the question" என்று சொல்ல வேண்டும் என்றும் சொல்லியுள்ளார். டோண்டு அவரது அப்பா தயாரிப்பு. விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என்ற பழமொழி ஞாபகம் வந்தது!

வேற்று மொழிகள் கற்று கொள்வது அவர்களது கலாச்சாரத்தையும், பேசுபவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள உதவும் என்றார்! அண்ணன் அப்துல்லா கடைசி பதிவில் மெக்காவில் தனது தாயாரை வீல் சேரில் அமர்த்தி தள்ளி சென்ற போது எதிரில் வந்த ஈரானிய பெண்மணி தம் அம்மாவிடம் எதோ சொன்னதாகவும், பின் தன்னை பார்த்து அழுது கொண்டே சென்றதாகவும் கூறினார், அப்துல்லா அண்ணன் ஆயிரம் கற்பனை செய்து கொண்டாலும் அந்த அம்மாவின் உணர்வுகள் அந்த மொழியில் தானே ஒளிந்திருக்கிறது!

குறையென்று பார்க்கப்போனால் டோண்டு அவர்களின் வேகமான பேச்சு! சில வாக்கியங்களை புரியாமல் விழுங்கி சென்றது! மேலும் கொஞ்சம் சுருக்கமாக பதிலலித்து கேள்வி கேட்பவருக்கு மேலும் சில கேள்விகள் கேட்க வாய்ப்பளித்திருக்கலாம்! கேள்வி கேட்பவரின் ”பல் கூச்சத்திற்கும், கடன் வாங்க கூச்சப்படுவதற்கும் உள்ள வித்தியாசம்” என்ற உதாரணம் அருமை, மொழியை இலக்கண சுத்தமாக புரிந்து கொள்ளுதல் பற்றி இந்த உதாரணத்தை கூறினார்!

கூட இருந்த அம்மணியை பற்றி நேரில் பார்த்த டோண்டு சாரே சொல்லுவார்!


(ப்ளாக்கினால் என்ன நன்மை என்ற கேள்விக்கு தென்திருப்போரைக்கு ஒருத்தர் வழி சொன்னார்!
என்று மொக்கை போட்டதையும், சீரியல் கதையை எழுதுவதால் பலருக்கு நன்மை!? என்று தனக்கு தானே கீரிடம் வைத்து கொண்டதும் வேண்டுமென்றே விடுபட்டது)

குவியல்!..(06.07.09)

முதலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தூயாவிற்கு வாழ்த்துகளோடு பதிவை ஆரம்பிப்போம்!
தல நர்சிமின் “முள்” என்ற சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில், மத்தியதர வர்க்க குடும்ப நிலையை அருமையாக ஒரு பக்கத்தில் எழுதியிருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்!
இவ்வார நட்சத்திரம் ஆருயிர் நண்பர் பரிசலுக்கும் பார்சல் வாழ்த்துக்கள்,
கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)

*********************************

பாசமிகு பதிவர் அண்ணன் ராகவன், நைஜிரியாவிலிருந்து வந்த கையோடு சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிட்டார், சென்னையில் பதிவர்களை சந்தித்து பின் மதுரை வந்து அங்கே ஒரு பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு மறுநாளே கோவை வந்து அங்கேயும் ஒரு வட்டமேசை மாநாட்டை முடித்தார், மறுநாள் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவரை தொல்லை செய்ய நான் சென்றேன். நான் சென்ற நேரம் அருமை தம்பி அரவிந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கேக்கு போச்சேன்னு வருத்தபடுபவர்கள் ஒரு டம்ப்ளர் கூலிங் வாட்டர் குடிக்கவும்!

***********************************

சனி இரவு ”ரம்”மியமான சூழலில் "black dog" ன் இனிதான சுவையில் மயங்கி சன் டீவியில் ”அசத்து போவது யாரு” பார்த்து கொண்டிருந்தேன். நண்பன் ஒருவன் உசிலம்பட்டியிலிருந்து போன் செய்தான்!. அன்னைக்கு சரக்கு ஓவரா போச்சா, இல்ல டோப்பு கண்டா அடிச்சானான்னு தெரியல! போனை காதில் கட்டியவாறு விடாமல் பேசினான். ஒரு படத்தில் வடிவேலு போனை காதில் வைத்து நா... இ.... வ.... என்று ஓரெழுத்தில் பேசுவாரே அதே போல் ஆனது என் நிலமை இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு பிறகு ”ம்” கொட்டுவதையும் நிறுத்திவிட்டேன்.
5 நிமிடம் விடாமல் பேசியவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது போல, இருக்கியாடா மாமு என்றான். இருக்கேன் என்றேன். நீ கேக்கல போல நான் என்ன சொன்னேன்னு சொல்லு என்றான். முதல்ல நீ சொல்ல வந்த மேட்டர மட்டும் நீ சொல்லு பார்க்கலாம் என்றான்.
இல்லடா,... அது வந்து..... ஹிஹிஹிஹி என்று இளித்து போனை வைத்தான்!

இதே மாதிரியான புகார்கள் என்மீதும் உண்டு, என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறுக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.

***********************************

எழுத்தாளர் வாமு.கோமு உடன் ஞாயிறு சந்திப்பு. தான் எழுதிய “நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோம் என்று” என்ற நாவல் அச்சில் இருப்பதாக கூறினார், இம்மாத இறுதியில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்புகிறோம், புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்!(நூறு புக்காவது வித்து கொடுக்குறேன்னு சவால் விட்டிருக்கேன் மானத்த காப்பாத்துங்க)

***********************************

கவிதை மாதிரி!

ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!

நீதிமான் Vs பயில்வான்

கடந்த ஒருவார காலமாக எதிர்கட்சிகள் கூச்சல் போடும் ஒரு விசயம் இருக்கிறது, எத்தனை பேர் அதன் முக்கியத்துவம் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, உடன்பிறப்புகள் அதை பற்றி பேசப்போவதுமில்லை, பேசவும் முடியாது என்பது தெரிந்த விசயம் ஆனால் பத்திரிக்கை துறையில் இருக்கும் நண்பர்கள் கூட அதை சுட்டி காட்டாதது அதிகாரமையத்தின் மேல் உள்ள பயமா! அல்லது அதன் மேல் உள்ள பற்றுதலா!? சரி விசயத்தை சொல்லாமல் போய்கொண்டே இருந்தால் நல்லாயிருக்காது, விசயம் என்னான்ன நமது மத்திய அமைச்சர் ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியை தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க மிரட்டிய செய்தி.

”இன்வெஸ்டிகேட் ஜெர்னலிசம்” என்பது கொஞ்சம் கடினமான வேலை தான். ஆனால் சில அடிப்படை உண்மைகளை ஸ்கூல் பையன் கூட சொல்லுவான், தன்னை முரட்டிய மத்திய அமைச்சர் யார் என்று அந்த நீதிபதி சொல்லாமல் இருந்திருகலாம், ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் எந்த அமைச்சர் உறவாக இருந்தார், தொழில் முறையில் நட்பு வைதிருந்தார் என்று பார்த்தாலே தெரிந்துவிடும் அது யார் என்று.

எனது கேள்வியெல்லாம் என்னவென்றால் இவர்களது அதிகார துஷ்பிரயோகத்தின் அளவுகோல் தான் என்ன?. இவர்க்ளை மீறி எதுவுமே நடக்கக்கூடாது என்பது தானா? நமது நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது, ரோட்டில் ஒருவன் உன்னை அடித்து விட்டால் நீ திருப்பி அடிக்ககூடாது, சட்டத்தில் புகார் தான் செய்ய வேண்டும். நீயும் அடித்தால் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வகையில் இருவருக்குமே தண்டனை, யார் முதலில் அடித்தார் என்பதெல்லாம் அடுத்த பிரச்சனை. ஆக நமக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாம் போய் நிற்கவேண்டிய இடம் நீதிமன்றம், அவை தரும் தீர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கையால், ஆனால் அந்த தீர்ப்பு ஒரு தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் அப்பாவி மனிதனின் கதி?..............

கழகத்தை பொறுத்தவரை இது புதிதல்ல, இந்த ஆட்சியிலேயே ஒருமுறை தனது உறவினருக்கு சிபாரிசு செய்ததற்காக ஒரு அமைச்சர் வீடீயோவோ ஆடியோவோ ”டேப்” ஆதாரங்களுக்கு பயந்து ராஜினாமா செய்தார், ஆறு மாதத்தில் இந்த வழக்கு என்னவாயிற்று என்று தெரியாத போதும் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி, சாமான்யனுக்கு தெரியாது ஆனால் இதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது பத்திரிக்கை துறை அதுவும் செய்யவில்லையே. பின் யாரை தான் நம்புவது?

நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் மன்னன் என்று, அது புனைவோ புண்ணாக்கோ தெரியாது ஆனால் கண் முன்னால் நடந்த மூன்று கொலைகளுக்கு இன்று வரை யாருக்கும் தண்டனை தராமல் இருப்பது,
இது ஜனநாயகநாடா என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது. மக்களுக்கு மூளை சலவை செய்து கொண்டிருக்கும் கழகமும் அதன் தொண்டர்களும் என்று தான் திருந்த போகிறார்களோ தெரியவில்லை!

***********************************

இது கழகத்துக்கு எதிரான பதிவல்ல, அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!


சென்ற முறை பெண் சர்வாதிகாரி செய்த நில ஆக்கிரமிப்பு(டான்சி), தருமபுரி கல்லூரி பெண்கள் படுகொலை ஆகியவை மன்னிக்க முடியாத குற்றம் அதனால் தான், மக்களின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருந்தது, தமக்கு மாற்று சக்தி ஒன்றும் இல்லை என்ற மமதையில் ஆடி கொண்டிருப்பது உங்கள் இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதைக் காட்டுகிறது.

ஒரு பழமொழி உண்டு!
கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?

உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இலக்கியம்,இசக்கியம்,இயக்கியும்!

வாலு, கார்த்தி வரேன்னு சொன்னாரே! ஏன் கடைசியில வரலைன்னுட்டார்!?

கார் பார்க்க போறாங்களாமா!

அப்ப சரி! நானும் நிறைய பேர பார்த்துட்டேன்!, கார் பார்க்க போலாமா, பொண்ணு பார்க்க போலாமான்னு கேட்டா கார் பார்க்க தான் போறான்!

ப்ராக்டிகல் பிபுள்ஸ்!

எப்படி!

கார் பார்க்க போன ஓட்டி பார்க்கலாம், ஆனா.....

யோவ்!, வாலு காலையிலேயே ஆரம்பிச்சிடியா

பேசக்கூட முடியாதுன்னு சொல்லவந்தேங்க!

********************************************

சரி தல! இதுக்கு மேல நமக்கு ஆவாது, நீங்க வர்றிங்களா இல்ல இருந்து கேக்குறிங்களா!?

இருங்க கேப்போம்!

என்னத்த கேக்க, கொண்டிருக்கிறான்னு படிக்க சொன்னா கொற்றிருக்கிறான்னு படிக்கிறாங்க,
வெளியே போறவன் உள்ளே என்ன நடக்குதுன்னு முழிக்க போறான்.

தனியாவா வால்!

இல்ல ராஜாவ கூட்டிகிட்டு போறேன்! நீங்க சாப்பிடுங்க.

*********************************************

கடை எங்கிருக்குன்னு தெரியுமாடா!?

இலக்கிய கூட்டம்னால நாலு பேர் நிக்கமுடியாம தள்ளாடிகிட்டே பேசிகிட்டு இருப்பாங்க, அப்படி யாராவது நிக்கிறாங்களா பாரு, நான் கேட்டுகிறேன்.

அங்க ஒருத்தர சுத்தி பத்து பேர் நின்னு பேசிகிட்டு இருக்காங்க, நடுவுல ஒரு பெரியவர் நீ சொன்ன மாதிரி தான் நிக்கிறார்.

அவர் தாண்டா விக்கிரமாதித்தன். நான் கடவுள் படன் பார்த்தியா, அதுல நடிச்சிருக்கார்.

நீயே போய் கேளு!

சார் ஒரு சந்தேகம் கேக்குனும்.

கேளு தம்பி, சங்க இலக்கியம், நவீன இலக்கியம் எல்லாத்துலயம் விக்கிரமாதித்தன் சார் பதில் சொல்லுவாரு!

ஒரே ஒரு சந்தேகம் தான். கடை எங்க இருக்கு,

ஏ, வாய்யா, வாய்யா, உன்னை தான்யா தேடிகிட்டு இருந்தேன், வா போகலாம்.

வாடா ராஜா, போலாம்!

************************************

ஏண்டா, ஹோட்டல் வாசல்ல நின்னுட்ட!

ஆட்டோ எதாவது வருதான்னு பார்க்கலாம்.

டே! அழகர்கோவிலுக்கு ரெண்டு கிலோமீட்டர் முன்னாடி இருக்கோம், அழகர்கோவில்ல ஆட்டோ கிடையாது! பஸ் அரை மணிநேரத்துக்கு ஒண்ணுதான்!

சார்! என் வண்டிய வேணா எடுத்துட்டு போங்க!

நீங்க!?

நானும் பங்ஷனுக்கு தான் வந்திருக்கேன்!, என் பேரு விசு!

என்னை யாருன்னே உங்களுக்கு தெரியாதே!

காலையிலருந்து உங்கள பார்த்துகிட்டு தான் இருந்தேன்,நீங்க எல்லார் கூடவும் பேசிகிட்டு இருந்திங்க, நோ பிராபளம் எடுத்துட்டு போங்க!

ரொம்ப நன்றிங்க! ஆனா எனக்கு வேணாம், அய்யாவ மட்டும் கடையில இறக்கி விட்டுடுங்க நானும் என் ப்ரெண்டும் நடந்து வந்துர்றோம்

*****************************************

அய்யா, உங்களுக்கு என்ன சரக்கு வேணும்!

ஜே.டி.எஸ்!

கேட்டா செருப்பலயே அடிப்பான்! என்ன சரக்கு அடிச்சிங்க!

அது மேன்ஷன் ஹவுஸ்

டே ஒரு ஆஃப் வாங்கிட்டு அப்படியே சைடிஷ் வாங்கிட்டு வந்துரு!

*******************************************



காட்சிகளை விளக்க பிடிக்காமல் சென்ற இஅடங்களையும், செய்த காரியங்களையும் உரைநடையாகவே கொடுத்துள்ளேன், புரிஞ்சா பாருங்க, புரியாட்டி படிங்க!

மீண்டும் சந்திப்போமா!

!

Blog Widget by LinkWithin