வார்ம் ஹோல் - என் தியரி

வார்ம் ஹோல் சாத்தியமா? அதன் லாஜிக் என்ன? அதன் தியரி என்ன? அப்படின்னு நானே யோசிச்சேன். இதை பற்றி டெக்னிக்கலா தெரிந்தவர்கள் முற்றிலும் மறுக்கலாம். ஆனாலும் என்ன சாத்தியகூறு இருக்குன்னு யோசிச்சிகிறது என் இயல்பா ஆகிருச்சு

பிரபஞ்ச தொடக்கத்தின் முதல் மின் அணு, அதன் கூட்டு இப்படி குவார்க், எலக்ட்ரான், புரோட்டான் ஒருவாகி, அது கூட்டு சேர்ந்து தனிமம் உருவாகி, உலோகம் உருவாகி, உலகம் உருவாகி.. இப்படி ஆகி ஆகின்னு நிறைய இருக்கு

ஈர்ப்பால் நிறைந்த கோள்கள் சுற்றியே வாயுகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட அஸ்ட்மோபியர்க்கு மேலே சென்ற பிறகு அதை வெற்றிடம் எங்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. இதற்கு மேல் இந்த அணுவை பிரிக்கமுடியல, அதனால இதுக்கு டார்க் மேட்டர்னு பேர் வச்சிருவோம்னு சொல்லி விட்டாங்க, ஆனால் அதுவும் மின் அணு தான்.மின் அணுக்கள் ஒற்றினைவதும், பின் அழிவதும் பெரு வெடிப்பின் ஒரு ஆதாரம். அந்த டார்க் மேட்டர் மீது காமா கதிர்கள் போன்றவை மோதும் போது மிக வேகமாக ஒன்றினைய வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் ஒன்றை ஒன்றை இணைத்து கொள்ளும் டார்க் மேட்டர் அதை சுற்றி உண்மையிலயே வெற்றிடத்தை உருவாக்கும் இல்லையா

இதற்கு உதாரணம், பூமியில் வெயில் நேரத்தில் திடீரென்று காற்று சுழல் பார்த்ததுண்டா? அதன் காரணம் அதிக வெயிலின் காரணமாக காற்று மூலகூறுகள் உடைந்து(எடை குறைந்து) வேகமாக மேலே செல்லும். அந்த இடத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பு அருகில் இருந்து வரும் காற்றே சுழலை உருவாக்குகிறது.

சரி டார்க் மேட்டர் இணையும் போது சுழலை தானே உருவாக்க முடியும் என்பது தானே லாஜிக். நான் வெற்றிடம் என சொன்னது இங்கே தான். பிரபஞ்சத்தில் வெற்றிடம் என ஒன்று உருவாக முடியாது. டார்க் மேட்டர் வேகமாக இணையும் போது இடத்தையும் சேர்த்தே சுருக்கும். சாதாரணமாக 100 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய இடத்தை சுருக்கி 1 கிலோ மீட்டர் ஆக்கும்.

அப்படி உருவான வார்ம் ஹோல் வழியாக பயணிக்கும் பொழுது நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத தூரத்தை வெகு சீக்கிரமாக அடைய முடியும். இது முழுக்க முழுக்க இதற்கு சாத்தியகூறுகள் உள்ளன என நானே உருவாக்கிய தியரி. சரியா தப்பான்னு தெரியல. விவாதிக்கலாம் வாங்க

விவாதம் - பெரியாரிஸ்டுகள்

நேற்றைய விவாதத்தில் இரண்டு அதிர்ச்சியான கருத்துகளை எதிர்கொண்டேன். அது பற்றிய விவாதத்திற்காக

“பெரியாருக்கு மேல் சிந்திக்க முடியுமா?, பெரியாருக்கும் மேம்பட்ட சிந்தனையை சொல்லுங்கள் பார்ப்போம்”

நேற்றைய பெரியார் பக்தர்கள் பதிவில் ஒருவரின் கமெண்ட்.
இதை புனிதபடுத்துதல் என எடுத்துக்கொள்வதா அல்லது எனக்கு சுய அறிவு இல்லை. அதனால் பெரியார் தாண்டி என்னால் சிந்திக்க முடியாது என எடுத்துக்கொள்வதா? இத்தனைக்கும் அந்த பதிவில் பெரியாரின் கருத்தியல்களை பெரியாரிஸ்டுகள் சரியா கொண்டு செல்லவில்லை. பெரியாரின் கருத்தியில்கள் அடுத்த படிக்கு நகர்த்த வேண்டும் என்று தான் எழுதியிருந்தேன்.

இயேசுக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - கிறீஸ்தவன்
முகமதுவுக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - இஸ்லாமியன்
மகாவிரருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - ஜெயின்ஸ்
புத்தருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? -பெளத்தன்
இந்த வரிசையில் தானே இதை வைக்க முடியும்
பெரியாருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? இவர்களை பெரியார் பக்தர்கள்னு சொல்லாம பதர்கள்னு சொல்லலாமா?

அடுத்து சிலைக்கு மாலை போடும் விசயம்
அது மரியாதை செலுத்துதல், ஆனா பெரியாரே தனிமனித தொழுகையை விரும்பவில்லையே என்றால் கியூபாவில் சேவுக்கு சிலை உண்டு எங்கிறார்கள். நீ ஏண்டா தப்பு பண்ணன்னு பாஜககாரனை கேட்டா அவன் காங்கிரஸ் ஒழுங்கான்னு கேட்டானாம். அந்த கதையாவுல இருக்கு.
ஆம் நான் ஒத்துகிறேன். திராவிட கருத்தியிலில் பெரியார் தவிர்க்க முடியாத ஆளுமை. தமிழ் திராவிட மொழி தானே. தமிழை உலக அரங்கில் கொண்டு சேர்ந்த, தமிழின் தொன்மையை காட்டிய, தமிழின் இலக்கண சிறப்பை காட்டிய வள்ளுவருக்கு நீங்க மரியாதை செலுத்தி பார்த்ததே இல்லையே. அந்த ஐகான் பதவியும், சோறும் போடாதுன்னா?

பெரியாரின் சமூக கருத்தியில்கள் யாவும் சமூக செயல்களின் எதிர்வினை. அது காலம் காலமாக உலகின் அனைத்து நாடுகளின் இருந்து வருகிறது. சமணமே நாத்திக கருத்தியில் தான். ஆனாலும் சாதியும், மதமும் ஏன் இருக்கு. ஏன்னா அது 2000 வருசத்துக்கு மேல இருக்குன்னு சொல்றாங்க. நான் அதை மொன்னைவாதம் என்பேன். அது இரண்டாயிரம் வருசமா அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. ஏன் பகுத்தறிவு கடத்தப்பட வில்லை. என் குழந்தைக்கு நான் சாதிசான்றிதழ் தரல. அவளுக்கு பின் எந்த சாதியில் வந்தோம்னு அவர்களுக்கு தெரியாது. இந்த முன்னெடுப்பு செய்யல. திராவிட கிரேக்க தந்தை வைகோ பெரியாரை ராமசாமி நாயக்கர் என்கிறார்.

பெரியாரின் நாத்திகனும் சமூக பாகுபாடு எதிர்வினை தான். கடவுள் ஏன் இல்லை என்ற கருத்துக்கு பெரியாரின் பதில் இருந்தா காட்டு ஒத்துகிறேன். இப்படி ஈனபையன் எப்படி கடவுளாக இருக்க முடியும். போன்ற கருத்துகள் தான். அதனால் தான் அவரால் இந்து மதத்துக்கு இஸ்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற கருத்தை சொல்ல முடிந்தது. அவரால் அறிவியல் பூர்வமாக கடவுளை மறுக்கும் வாதத்தை வைக்க முடியவில்லை. உலகை கடவுள் படைந்தான் என்றால் கடவுளை யார் படைந்தான் என்றார். உலகம் எப்படி தோன்றியது என்பது அவருக்கே தெரியாது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்(1912) தான் பெருவெடிப்பு கொள்கையே விஞ்ஞானிகளிடம் பேசு பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெரியாரை விட மேம்பட்ட சிந்தனையை உருவாக்க முடியுமா என்றால் அது தான் இயற்கை, அது தான் நடக்கும். கருத்தியல்கள் காலத்துக்கு ஏற்றார் போல் சூழலுக்கு ஏற்றார்போல் மேம்பட வேண்டும். ஆனால் அது ராமனுக்கு மாற்றாக ராவணனை தேடுவதல்ல. அது பெரியாரின் கருத்தியலுக்கு செய்யும் துரோகம். பெரியார் ஒரு கோட்டை கட்டினார். அந்த கோட்டையை புதுபிக்காமல் உள்ளே சுகவாசம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். கோட்டை சிதிலமைடவது கூட தெரியாமல். நான் கோட்டையை புதுபிக்க சொல்கிறேன். மேம்படுத்த சொல்கிறேன். அதெல்லாம் முடியாது கோட்டை அப்படியே தான் இருக்கும்னா ஒரு நாள் அது நினைவு சின்னமா மட்டுமே இருக்கும். புதிய கருத்தியல் எதோ ஒன்னு மக்களின் புத்தியை அடையும்

விவாதத்தின் கடைசியில் சொல்லிட்டார், “போடா பார்ப்பான்” :)

தீபாவளியும், பெரியார் பக்தர்களும்...


பெரியார் புரிந்துகொண்ட ஆரிய தந்திரத்தையும், பார்ப்பனிய கருத்தியலையும் ஏன் அதன் பின் வந்தவர்கள் மேலும் சரியாக பரப்பவில்லை என்பதே இன்று பாஜக, இந்துத்துவா இங்கே கோலோச்சிக்கொண்டிருக்க காரணம். பெரியாரின் திராவிட கருத்தியலை மறந்துவிட்டீர்கள். ஆனாலும் அந்த ஐகான் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் தான் உங்களை பெரியார் பக்தர்கள் என அழைக்கவேண்டியுள்ளது.
ராமாயணத்தை பெரியார் மேற்கோள் காட்டியது ராமனை கேரக்டர் அஸாசிசேசன் பண்ணுவதற்காக. ராமாயணத்திலே உள்ளது விரும்பமில்லாத பெண்ணை தொட்டால் ராவணன் தலை வெடிக்குமென்று. ஆக அவளை தொடாமல் அனுப்பிய ராவணன் நல்லவா? மனைவியை சந்தேகப்பட்ட ராமன் நல்லவா என்றார்?ராமாயணம் சீனா, இந்தோனிஷியாவில் இன்றும் சில வித்தியாசயங்களுடன் கதைகளாக உள்ளது. அது செவிவழியாக வந்து, அந்த கால அரசர்களால் பலமுறை மாற்றி புனையப்பட்ட பேண்டஸி நாவல். அக்காலத்தில் மின்னலை கடவுளின் ஆயுதம் என நம்பினார்கள், மேகத்தை கடவுளின் வாகனம் என நம்பினார்கள். கற்பனையில் புனையப்பட்டதை அந்த கிறுக்கர்கள் தான் நாங்க அப்பவே விமானம் கண்டுபிடிச்சிட்டோம்னு உளரிகிட்டு இருக்கானுங்க, நீங்க ராவணம் தமிழன்னு விழா எடுக்குறிங்க, பிறப்பால் பார்ப்பனனான ராவணனுக்கு பெரியார் விழா எடுக்க சொல்லிருப்பாருன்னு எப்படி நம்புறிங்க பெரியார் பக்தர்களே.
மகாபாரதம் என்பது பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் நடந்த போர் வரலாறு, இதுவும் இலியட், ஒடிஸி போன்ற கிரேக்க இதிகாசங்களின் செவிவழி தழுவலே. இதுவும் பலமுறை மாற்றி புனையப்பட்ட பொழுது தான் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் புகுத்தப்பட்டது. கிருஷ்ணனின் தனி சேப்டரில் மட்டுமே அவதார புருடாக்கள் வரும்.
கிருஷ்ணன் முதலில் கொன்ற கம்சன் அவனுக்கு சொந்த தாய்மாமா சத்தியபாமா கிருஷ்ணனின் முன்னால் அவதாரத்தில் மனைவி, அதே கிருஷ்ணனுக்கும் சத்தியபாமாவுக்கும் முன்னால் அவதாரத்தில் பிறந்தவன் தான் நரகாசுரன். பெண் கையால் தான் சாக வேண்டும் என வரம் வாங்கியதால் மீண்டும் பிறவி எடுத்து கொன்றதாகவும், அதனை கொண்டாடவேண்டும் என கேட்டுகொண்டதால் தீபாவளி என்பதும் மகாபாரத புருடா வரலாறு
ஆனால் வடநாட்டில் கூட இந்த கதையை நம்ப மாட்டான், அங்கே இது லஷ்மிபூஜை. மகாவீரர் மறைந்ததினம் என ஏகப்பட்ட கதைகள் உண்டு. இங்கெ இருக்கும் பாஜககாரன் எவனுக்கும் மூளை இல்லைன்னா உங்களுக்குமா இல்ல.கிருஷ்ணனின் அம்மா தேவகி, எடுத்து வளர்ந்த யசோதா தான் யாதவர். கோனார் வம்சத்தின் முப்பாட்டனேன்னு போஸ்டர் அடிக்கிறானுங்க.
ராமாயணமோ, மகாபாரதமோ அதில் இருக்கும் கதாபாத்திரங்களை நம்மவர்கள் என ஏற்றுக்கொள்வதும், அந்த புருடா புராணங்களை உண்மை என நம்புவதும் ஒன்று தான். நாம் இன்றும் படிக்கும் புறநானூறில் ஒரு அரசன் விட்ட அம்பு ஒரு மரத்தை, ஒரு மானை, ஒரு புலியை துழைத்து சென்றதாக பாடல் உண்டு, தமிழன் பொய் சொல்ல மாட்டான், அது உண்மையா தான் இருக்கும்னு நம்ப போறிங்களா? சீன யாத்திரிகர் யுவான் சுவாங் இந்தியா வந்து திரும்பிய பொழுது நெருப்பை கக்கும் ட்ராகனை பார்த்தாக பயண குறீப்பில் எழுதியுள்ளார். அதையும் நம்புவீர்களா?
எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் அதில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்த்து உண்மை அறிவதே உண்மையான பகுத்தறிவு. இன்னைக்கும் 1929ல் பெரியார் சொன்னார்னு காப்பி பேஸ்ட் உங்களிடம் இனி பகுத்தறிவு பற்றி பேசலாமானு யோசிக்கனும் போல. பெரியார் பேசிய திராவிட கருத்தியலும் மாற்றம் அடைய வேண்டியதே. மாற்றம் விரும்பாத யாவரும் பிற்போக்குவாதிகளே. நீங்கள்ளாம் உங்களை முற்போக்குவாதின்னு சொல்லாதிங்க

மனிதர்களும், பாலியல் தேர்வும்..

பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்திருக்கும் ஒரே கட்டளை தங்களது மரபணுக்களை பரப்பி எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்பதே. தாவரங்களும், சில மீன் இனங்களும் தவிர மற்ற விலங்குகள் உடலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இயற்கையாகவே நம் உடலில் இனப்பெருக்கதிற்கான உந்திசக்தி உள்ளது.

விலங்குகளை பொறுத்தவரை பெரும்பான்மைகளுக்கு துணையை தேர்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் தங்களை கம்பீரமாகவும்/அழகாகவும் காட்டிக்கொள்ளுவதன் மூலம் பெண்களை கவர பார்க்கின்றது. ஆண்களின் வீரத்தை வைத்து பெண்கள் தேர்வு செய்ய காரணம். தங்கள் குட்டிகளை எதிர்களிடம் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பு.

சில வேட்டை விலங்குகள் பருவமடைந்தவுடன் புது துணையை தேடும்போது அவர்களுக்கு ஏற்கனவே குட்டிகள் இருந்தால் கொன்றுவிடும். தனது மரபணுக்களை பரப்பவேண்டும் என்பதே இயற்கை அதற்கு அளித்திருக்கும் கட்டளை. சில புத்திசாலி விலங்குகள் பாலியல் தாராள கொள்கையின் மூலம் குட்டிகளை பராமரிக்க பல துணைகளை உருவாக்கிக்கொள்கிறது. முக்கியமாக குரங்கினங்கள்..

மனிதனின் ஆதியும் அவ்வாறே இருந்தது. பாலியல் தூண்டலே பல வன்முறைகளுக்கு காரணம். ரெட்பெல்லி ஃப்ராக் என்னும் தவளையினம் இணை சேரும் பருவத்தில் கண்ணில் படும் எதையும் புணர நினைக்கும். மனித கால்விரல்களில் கூட. சிக்கும் பெண் தவளைக்காக சண்டையிட்டு இறுதியில் பெண்ணையே கொன்று விடும். சிறு தவளை முதல் மதம் பிடிக்கும் யானை வரை காரணம் பாலியல் தூண்டலாகவே இருக்கின்றது.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் தானே உணவை உற்பத்தி செய்துக்கொள்ள ஆரம்பித்தான். அதனை நான் விவசாயம் என்கிறோம். நாடோடியாக திரிந்த மனிதன் ஒரே இடத்தில் காலணி சமூகத்தை நிறுவினான். தன் உடமை, தன் நிலம், தன் கால்நடைகள் என்ற பொருள்முதல் வாத சமூகம் உருவாகியது. அவற்றோட பெண்ணையும் தனது உடமை என அறிவித்துக்கொண்டான்..

நிலபிரபுத்துவம் உருவானது. தன்னிசையாக இயங்கும் ஆட்களை கட்டுபடுத்த ஒழுங்குவிதி கோட்பாடுகள் உருவானது. வலிமையான ஆண் பல பெண்களை விரும்பிய போது பெண்ணை கற்பு என்னும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டான். இன்றும் நாடோடிகள் சமூகத்தில் பெண்ணுக்கு இந்த பாலியல் விதிமுறைகள் இல்லை. தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் ஒரு நாடோடி குழுவினர் அந்த குடும்பத்தில் இருக்கும் மொத்த சகோதர்களையும் திருமணம்(உறவு) செய்துக்கொள்ள முடியும்.

சமூக அமைப்பில் கணவன், மனைவி முறை இனத்திற்கு செய்த நன்மை தனது சந்ததினயினரை ஆபத்திற்றியும், திறனுடனும் வளர்க்க முடிந்தது என்பதை சொல்லலாம். ஆதியில் இருந்தே அனைத்து பெண் விலங்குகளின் கோட்பாடும் அதுவே தான்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலியல் தேவையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண் ஒருமுறை கருவுற்றால் குட்டி ஈனும் வரை உடலறவு என்பது இயற்கையில் தேவையற்றாகிவிடுகிறது ஆனால் ஆண் வரிசையாக பல பெண்களுக்கு கர்ப்பம் ஊட்டமுடியும். இன்று அனைத்து விலங்குகளின் இயல்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.
சுருக்கமா சொல்லனும்னா ஆண் எப்பல்லாம் முடியுமோ அப்பல்லாம் புணர தயாரா இருப்பான், பெண் எப்பல்லாம் தேவை என நினைக்கிறாளோ அப்பல்லாம் தயாரா இருப்பாள்.ஆண் தான் பார்க்கும் அனைத்து பெண்களையும் காதலியாக்கிக்கொள்ள நினைப்பேன். பெண் இவனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பார்ப்பாள். மரியாதைகுரிய பெண்ணை சந்திக்க நேர்ந்தாலும் ஆணுக்கு 10 சதமாவது பாலியல் உணர்வு தூண்டப்படும் என அறிவியல் சொல்கிறது. சிக்மண்ட் ப்ராய்டின் ”ஈடிபஸ் காம்ப்ளஸ்” கோட்பாட்டை நினைவு கூறுகிறேன்.

இது பொதுவான உணர்வும் கூட, இதே போல் உணர்வு பெண்களுக்கும் ஏற்படும். சமூக கட்டமைப்பு, ஒழுங்கவிதி இவைகளுக்குள் ஒழிந்துக்கொண்டாலும் அவர்களை ஏமாற்றிக்கொண்டோ அல்லது சமூகத்தை ஏமாற்றிக்கொண்டோ தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். crush is natural

ஆயினும் இந்த சமூக கட்டமைப்பை பாதுகாப்பதில் காதலுக்கு முக்கிய பங்குண்டு. காதல் என்பது இருபாலனரின் புரிதல் பொறுத்தது. ஒருவனுக்கு ஒருத்தி போல, ஒரே காதல் மட்டுமே என்ற புனித பட்டமெல்லாம் காதலுக்கு தேவையில்லாதது. தன் துணை தான் விரும்பும் காதலை அளிக்காத பட்சத்தில் காதல் கிடைக்கும் இடத்தில் மனித சமூகம் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.

பாலியல் என்பது மற்ற விலங்குகளுக்கு இனபெருக்க தேவைக்காக மட்டும் இருக்க, மனிதனுக்கு அது ஒரு அங்கிகாரமாகவும். தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கின்றது. காதல் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புரிதல் இருக்கின்றது. காதல் சமூகத்தில் ஒரு மதம். தன் துணையே கடவுள். தன் காதலே உலகத்தில் சிறந்தது.

காதல் மனித இனத்தின் வரமும், சாபமும்.

ஆம் இரண்டுமே!

அறிவியல் மட்டுமே விழிப்பை கொடுக்கும்

ஜோசியர்கள் வெகுநாளாக புருடா விட்டுக்கொண்டிருக்கும் காமா கதிர்கள் எவ்வாறு உருவாகிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

என்னாது சமீபத்திலா?

ஆம் சமீபத்தில் தான்..

காமா கதிர்கள் அருகில் இருக்கும் கோள்களில் சூரிய கதிர்வீச்சினால் உருவாகும் கதிர்கள் என்ற கருதுகோளை வைத்தே இவ்ளோ நாள் ஜோசியர்கள் குழப்பத்தில் இருப்பவர்களை கூட ஏமாற்றி வந்தார்கள்

சென்ற ஆகஸ்ட் மாதம் அஸ்ட்ரோபிசிக்ஸ் குழு. அந்த குழுவுக்கு இந்தியாவில் பூனேயில் கூட ஒரு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இரு நியூட்டான் வீண்மீன் ஒன்றை ஒன்று மோதி பெரும் ஒளிகற்றையை உருவாக்குவதை கண்டுபிடித்தது.

கண்டுபிடித்தது என்பது சரியான வார்த்தையா என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அந்த நிகழ்வு நடந்து 13 கோடி வருடங்கள் ஆகிறது. அந்த ஓளி நம்மை வந்தடைந்தது இப்போது எனலாம். கூடவே காமா கதிர்களையும் அவர்கள் கண்டார்கள்.

நியூட்ரான் விண்மீன் என்பது வயதான சூரியன். எரிபொருள் தீர்ந்து, வீங்கி பின் நியூட்ரான் வீண்மீனாக மாறும். அப்போது ஒரு பூமிபந்தை கால்பந்துக்குள் அடைத்து வைக்கும் நிறை இருக்கும். அப்படி இரண்டு நியூட்ரான் வீண்மீன்கள் மோதிக்கொண்டன.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் பிற கோள்கள் உருவாக காரணமே இப்படியான நியூட்ரான் வீண்மீன்கள் வெடிப்பு தான். ஹைட்ரஜனும், ஹீலியமும் ஆக இரு தனிமங்கள் மட்டுமே இருக்கும் சூரியன்கள் மோதி வெடிக்கும் பொழுது தான் மேலும் பல தனிமங்கள் உருவாகிறது.

பெருவெடிப்பு என்ற விபத்து பிரபஞ்சத்தை உருவாக்கியது. நியூட்ரான் வீண்மீன் மோதல் என்ற விபத்து மேலும் தனிமங்களை உருவாக்கியது. அப்படியே தான் நியூட்ரான் என்ற உட்கரு நியூக்கியஸ் என்ற தன்னை தானே பிரித்துக்கொள்ளும் செல்லாக விபத்தில் உருவானது தான் உயிர். கடவுள்னு யாரையாவது கும்பிட்டே ஆகனும்னா தற்செயலையும், விபத்தையும் கும்பிடுங்க

https://www.youtube.com/watch?v=qPyGvq0AVUQ

தனியார்மயம் ஒரு கவர்ச்சிபொறி!

low margin
huge turnover
high profit

போட்டி வியாபாரத்தில் இது ஒரு முக்கியமான சூத்திரம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க கண்ணன் டிபார்மெண்டல் ஸ்டோர் இருக்கு. அங்க ரெகுலரா ஷாப்பிங் போறவங்க யாராவது இருக்கிங்களா?

கவனித்ததுண்டா? பொருளின் மேல் MRP அச்சிடப்பட்டிருக்கும் பொருள் அனைத்தும் அங்கே விலை அதை விட குறைவாக இருக்கும். விட்டின் அருகில் இருக்கும் மளிகை கடையில் அதில் போட்டிருக்கும் விலை தான் இருக்கும்.

முதல் காரணம் பெரு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்வார்கள். அதற்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். விலை குறைவாக விற்பனை செய்வார்களே தவிர அது நட்டத்திற்கு இல்லை.

போக அவர்களிடம் வாங்கும் மளிகை பொருள்கள் அனைத்தும் விலை அதிகமாக இருக்கும், பருப்பு, சர்க்கரை போன்றவை, அதற்கு அவர்கள் வைப்பது தானே எம்.ஆர்.பி..

முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிடித்து தொங்கும் முக்கிய புள்ளி இதுதான். தனியார்மயம் மட்டுமே போட்டி வியாபாரத்தில் நுகர்வோருக்கு குறைந்தவிலையில் கொடுக்கமுடியும் என்பது. ஆனால் ஒரு பெருமுதலை குளத்தில் சிறு மீனும் இல்லாமல் அழித்து விடும் என்பது குறித்து அவர்களுக்கு அக்கறையில்லைதனியார்மயம் என்பது ஒரு கவர்சியான பொறி. ஒரு கட்டத்தில் சிறு வணிகர்கள் அழிந்து அவர்கள் மட்டுமே நிற்கும் நிலையில் அவர்கள் வைத்தது தான் விலையாக இருக்கும். மறு கேள்வி இல்லாமல் நாம் வாங்கித்தான் ஆக வேண்டும்.

பொது விநியோக திட்டம் அழியும் நாள் நாடு முழுமையான முதலாளித்துவ சிந்தனையில் இயங்குகிறது என்று அர்த்தம். அதாவது நாட்டை மக்களை ஆட்சியாளர்கள் முதலாளிகளுக்கு விற்று விட்டார்கள் என்று அர்த்தம்

ரஜினியா, கமலா?

கமலும் சரி, ரஜினியும் சரி இவருமே மேல்தட்டு வர்க்க சிந்தனை கொண்டவர்கள்.
பிச்சை எடுத்து சாப்பிடுபவன் கூட ஒரு தீப்பெட்டி வாங்கினால் அதற்கு 18 பைசா மறைமுக வரியா கொடுக்குறான், ஆனால் மேல்தட்டு வர்க்கம் நேரடியாக வருமான வரி கோடிகணக்கில் கட்டுபவர்கள்.
அவர்கள் சிந்தனை நடுத்தரவர்க்க, அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்தார பிரச்சனைகள் பற்றி சிந்திக்காது, ஏன்னா அவர்களுக்கு அது தெரியாது. அரசின் புதிய மானிய கொள்கை, விலைவாசி உயர்வு இதெல்லாம் என்னான்னு கேப்பாங்க, அதற்கான நிவாரணமும் அவர்களுக்கு தெரியாது.
காமராஜர் போன்று அடிதட்டு வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து சிந்திக்க முடிந்தது, திமுகவும், அதிமுகவும் அதன் நீட்சியாக தொடர்ந்தார்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்காக பேசுறாங்களே தவிர அவர்களுக்கும் அந்த சிந்தனை அற்றுவிட்டது

காலை 8 மணிக்கு அரசு மருத்துவமனை போனால் தெரியும் எத்தனை ஆயிரம் மக்கள் ஆரோக்கியதிற்கு அரசை நம்பியுள்ளார்கள் என்று, ரேசன் கடை வாசலில் நின்று பார்த்தால் தெரியும் எத்தனை ஆயிரம் மக்கள் உணவுக்கு அரசை நம்பியுள்ளார்கள் என்று. மேல்தட்டு வர்க்க மக்கள் எதேனும் அவசரத்திற்காகவது அரசு மருத்துவமனை சென்றிருப்பார்களா?
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, அவர்கள் அனைவருக்கும் அரசே உத்திரவாதம் அளிக்கமுடியாது என்பது மொன்னைவாதம், எனக்கு கிடைக்குது எவனுக்கு கிடைக்காட்டி எனக்கென்ன என்ற சுயநலம், இந்த மக்கள் தொகை என்பது ஒரு சக்தி, அதை முறையாக பயன்படுத்த தெரியாத அரசின் கொள்கை சிக்கல் உள்ளது. அவர்கள் நலன் பேணுவது கார்ப்ரேட்டுகளுக்கு மட்டுமே
அடிதட்டு மக்களை நசுக்கும் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்பது தான் இதுவரை நான் கடந்து வந்த வரலாறு. இந்தியர்களின் பொறுமை ஆட்சிகளர்களுக்கு வசதியாக இருப்பது தான் நம் சாபக்கேடு. நம் உரிமையை விட்டு கொடுத்து வாழ்வது நம்மை நாமே அடிமையாக்கிக்கொள்வதற்கு சமம். முதலில் மக்கள் செலிபிரட்டி சிண்ட்ரோமில் இருந்து வெளியே வரணும்.
விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்

ரிவர்ஸ் சைக்காலஜி!

நீங்கள் என்ன சிந்திக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்வதாக நினைக்கிறீர்களா?

இல்லை. அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்

ஒரு பழைய கதை உண்டு.

குணப்படுத்த முடியாத ஒரு நோய்க்காக ஒரு செல்வந்தன் மருத்தவரை நிறம்ப தொந்தரவு செய்வான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு மருந்து கொடுங்கள் என்பான். யோசித்த மருத்துவர் அவன் கையில் ஒரு மருத்து கொடுத்து இந்த மருத்தை சாப்பிடும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக்கூடாது என்பார்.

அங்கே குரங்குக்கு என்ன வேலை?

இதை தான் ரிவர்ஸ் சைக்காலஜி என்பர்.

உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை உங்கள் தலையில் கட்டும் விளம்பர உலகம் இந்த உத்தியை தான் வெகு காலமாக செய்து வருகிறது.

முதலில் உங்கள் மூளையில் அதுவே சரியானது என ஏற்ற வேண்டும். உதாரணம் வெள்ளையா இருந்தா தான் அழகு. வெள்ளையாக இருப்பவர் பின்னே எதிர்பாலினர் படையெடுத்து வருவார்கள்.

இனி வெள்ளையாக மாட்டுசாணியை வித்தாலும் அதை விலை கொடுத்து வாங்க தயாராய் இருப்பீர்கள்.

ஒரு காய்ச்சல் மருந்தை விற்க நடிகர் நாசர் டாக்டர் கோட் அணித்து வந்து விளம்பரம் செய்கிறார். நாசருக்கும் டாக்டர் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பரிந்துரைக்கும் மருந்துக்கு என்ன உத்திரவாதம்?போகஸ் என்ற ஆங்கிலப்படம். வில்ஸ்மித் நடித்தது. படத்தின் மையம் உங்களை என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்க வைப்பதே. ஒரே எண்ணை மீண்டும் மீண்டும் அவன் கண் முன் காட்டும் பொழுது அவன் மனதில் அந்த எண் பதிந்து விடுகிறது, அந்த எண் அவனுக்கு பரிட்சியமான ஒன்றாகிவிடுகிறது.

அந்த ப்ராண்ட் சைக்காலஜி வைத்து தான் அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. யார் வேட்பாளர் என்று உங்களுக்கு அக்கறையில்லை. அவருக்கும் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் நினைவெல்லாம் என்ன சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இன்னமும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானிப்பதாக நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் முற்றிலுமாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளீர்கள். பிறர் சொல்லும் நல்லது உங்கள் மண்டையில் ஏறவே ஏறாது

#வால்பையன்
#உளவியல்

!

Blog Widget by LinkWithin