தீடீர் பதிவர் சந்திப்பு!

இடம்:சென்னை

ஒரு இனிய விடுமுறை தினம்!(வேலைக்கு போறவங்களுக்கு)

கலந்து கொண்டவர்கள்!

ராகவன் நைஜிரியா
நட்புடன் ஜமால்
ரம்யா
லவ்டேல் மேடி
தமிழரசி
ஆதிமூல கிருஷ்ணன்
அப்துல்லா
வால்பையன்

**************************

ரம்யா: வாங்க வாங்க! எல்லாரும் வாங்க,

வால்பையன்:வந்தோம் தகமிதிதோம் தித்தோம்!

அப்துல்லா:நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா வால்!

ஆதி:என் அடுத்த குறும்படம் கூட மியூசிக்கல் சப்ஜெக்ட் தான்!

ரம்யா:ஆதி போன படம் பார்த்து சுழுக்குன கழுத்து இன்னும் சரியாகலையே! அதுக்குள்ள இன்னொன்னா!

ஆதி:இந்த படம் உலகத்தரத்துல எடுக்குறோம், முழு செலவும் அப்துல்லா அண்ணன் ஏத்துகிறேன்னு சொல்லிட்டார்!

அப்துல்லா:அமெரிக்கா விசா வாங்கி கொடுத்தா ஏத்துக்கிறேன்னு சொன்னேன்! அதை மறந்துட்டிங்களே!

ஆதி:அதெல்லாம் கிடைக்கும் அப்துல்லா! நீங்க நம்பி பைனான்ஸ் பண்ணுங்க! ஹாலிவுட்ல இருந்து உங்களுக்கு தானா விசா வரும்!

மேடி:நீங்க மட்டுமே நடிப்பிங்களா!?

ஆதி:ஆமா ஏன்!

மேடி:வீட்ல குழந்தைங்க இல்லாத நேரத்துல பாக்கனும் அதான்!

வால்:உங்களுக்கு சான்ஸ் வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க மேடி

மேடி:சிலிண்டர் மண்டையா! நீ பேசாதா, ஈரோட்ல இருந்து ஒரு டீ கூட வாங்கி தராம கூட்டியாந்துட்ட!

ரம்யா:அடடே நானும் மறந்துட்டேன் பாருங்க! வாங்க சாப்பிடலாம்!

ஜமால்:இடம் சிறுசா இருக்கே! நான் முதல்ல உட்காந்துகிடட்டுமா!?

வால்:சரி வாங்க நாம எல்லாம் எதாவது ஹோட்டலுக்கு போலாம்!

தமிழ்:ஏன்

வால்:ஜமால் உட்கார்ந்தா நமக்கு எங்க மிச்சம் இருக்கப்போவுது!

ரம்யா:நானே நிறையா செஞ்சிருக்கேன்பா!

வால்:நீங்களேவா, அப்ப ஆதி அண்ணனுக்கு முதல்ல கொடுங்க, அவருக்கு தான் சோதனை எலியா இருந்து நிறையா எக்ஸ்பீரியன்ஸ்

ராகவன்:புதுசா கேமரா வாங்கியிருக்கேன், வாங்க எல்லோரும் போட்டோ எடுத்துக்கலாம்!

ஆதி:வாங்க வாங்க எல்லோரும் போட்டோ எடுத்துக்கலாம்!

அப்துல்லா:இவரு என்ன கேமரான்னா முன்னாடி போய் நிக்கிறாரு!

ராகவன்:ஜமால் நீங்க இன்னும் ஒட்டி வாங்க, பிரேமுகுள்ளயே வர மாட்டிகிறிங்க

வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா தான் வேணும், இந்த சின்ன கேமராவெல்லாம் பத்தாது!


********************

வால்:ரைட்டு எல்லாரும் திருப்தியா சாப்டாச்சு!

தமிழ்:நிலவொளியில் மலர்ந்த மலர்களை போலமைந்தது சந்திப்பு!

மேடி:ரிப்பீட்டே

ஜமால்:ரசித்த வரிகள்

வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,

மேடி:டே வடசட்டி மண்டையா! உனக்கு ரசிக்க தெரியலைனா விட வேண்டியது தானே!

ராகவன்:இப்படிதான் நைஜீரியாவுல ஒருதடவை!

அப்துல்லா:ரைட்டு நண்பர்களே நான் கிளம்புறேன்!

ராகவன்:சரி சரி சொல்லல உட்காருங்க!

ஜமால்:உக்காரு மாப்ளே, நீ எங்க போவேன்னு எனக்கு தெரியாதா!?

ரம்யா:சாப்பாடு எப்படியிருந்ததுன்னு சொல்லவேயில்ல!

மேடி:அருமையா இருந்தது அக்கா! ஏன் கேக்குறிங்க

ரம்யா:இப்ப தான் புதுசா செஞ்சேன், இனிமே தான் நான் சாப்பிடனும் அதான் கேட்டேன்!

தமிழ்:இன்னைக்கு எல்லாருமே எலியா!?

அப்துல்லா:ரசத்துல கூட கத்திரிக்கா கிடந்ததே!

ரம்யா:புக்குல போட்டிருந்தா மாதிரி தான் செஞ்சேன்

அப்துல்லா:கொண்டாங்க புக்கை

ரம்யா:இந்தாங்க

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ், என்னாங்க இது ஏழாம் பத்துக்கு அப்புறம் பத்தாம் பக்கம் இருக்கு, மிழகு ரசத்தையும், கத்திரிக்கா சாம்பாரையும் கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!

தமிழ்:எங்க கொண்டாங்க பார்க்கலாம், .... அய்யய்யோ

அப்துல்லா:என்னங்க ஆச்சு

தமிழ்:நல்லவேளை பத்தாம் பக்கம் இருந்துச்சு, அடுத்த பக்கத்துல பாருங்க, அவசர பசை செய்வது எப்படின்னு குறிப்பு இருக்கு!

அப்துல்லா:நல்லவேளை தப்பிச்சோம்

மேடி:இந்த டிபன்பாக்ஸ் மண்டைய சமையல் பண்ணும் போது போன் பண்ணி குழப்பிருப்பான்,

அப்துல்லா:உங்க ஊர்காரரையே இப்படி திட்டுருங்களே, கல்யாணத்துக்கு வராம போயிரப்போறாரு

மேடி:இந்த அண்டாவாயன் வரலைனா சந்தோஷம் தான், பத்தாள் சோறும், ரெண்டு பாட்டில் ஃபுல்லும் மிச்சம்!

ரம்யா:சரி விடுங்கப்பா, நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்திருக்குறதை பார்த்தா எனக்கு ஒரு ஐடியா வருது!

ராகவன்:என்னம்மா தங்கச்சி

ரம்யா:கிரிக்கெட் மாதிரி பதிவர்கள் சேர்ந்து ஒரு புட்பால் மேட்ச் ஆடலாமா?

வால்:அம்மணி ஏற்கனவே மேடிகிட்ட வாங்குன அடி இன்னும் ஆறல, அதுகுள்ள புட்பாலா, யாராவது புத்தூர் செலவு ஏத்துகிறா மாதிரி இருந்தா நான் கிரவுண்டுக்கு வர்றேன்!

மேடி:டே தார்டின் மண்டையா, உன் மண்டை தாண்டா எங்களுக்கு புட்பாலே, நீ இல்லாம எப்படிடா விளையாடுறது!

ராகவன்:இந்த தடவையும் நான் தான் அம்பயரா?

தமிழ்:வயசான காலத்துல ஏன் கஷ்டம்னு நினைச்சிருப்பாங்க!

ராகவன்:எனக்கா வயசாயிருச்சு! என்னை கிரிக்கெட் ஆட விட்டிருந்தா 50 கோல் அடிச்சிருப்பேன்!

ஜமால்:கிழிஞ்சது போ! சார் கோல் போடுறது டென்னிஸ்ல!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நீங்கெல்லாம் தெரிஞ்சிகிட்டே தான் பேசுரிங்களா?

ஆதி:விளையாட்டை மையமா வச்சு ஒரு குறும்படம் எடுக்கலாம்!

தமிழ்:இவரு அடங்க மாட்டாரு, இவரு தங்கமணிக்கு போன் பண்ணி இவரு நிறைய பேசுறாருன்னு சொல்லுங்க யாராவது

ஆதி:தங்கமணின்னவுடனே ஞாபகம் வருது, வரும்போது மறக்காம இதயம் நல்லெண்ணை வாங்கிட்டு வர சொன்னா!

ராகவன்:சரி எல்லோரும் கிளம்புவோம், அடுத்த சந்திப்பில் பேசுவோம்!**********************

டிஸ்கி:
கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
ஸ்மெலி போட்டு போவார்!

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

நான் அனுப்புற எஸ்.எம்.எஸ் சை படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)

************************

பெஸ்டு கண்ணா பெஸ்டு
குங்குமம் இந்த வாரம்

என் அப்பன் மனுசனே இல்ல
அவர் ஒரு ஆப்ரிக்கன் கரடி
“குமுறுகிறார் சிம்பு”

நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
“விஜய் காமெடி பேட்டி”

வீரப்பனை சுட்டது நான் தான்
“கேப்டன் விஜயகாந்த் ஆவேசம்”

”மீனாவுக்கு மகனாக நடிக்கிறார் ரஜினி”

அக்தர் என்னை பாலால் அடிக்கிறார்
“அழுகிறார் கங்குலி”

மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்

வாங்கிவிட்டீர்களா!?

************************

டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?

டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்

குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்

************************

பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு

வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா

பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா

வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்

பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு

வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

**********************

இதை தமிங்கிலீஷில் எழுதி அதை தமிழில் மொழி பெயர்க்க வாய்ப்பளித்த மைத்தீஷ் அவர்களுக்கு நன்றி

புதிர்போட்டி!

படத்தை பெரிதாக்கி பார்க்கவும்!
குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்தால் போதுமானது!
நன்றி:பாலசந்தர்

குவியல்!.(25.08.09)

என்பால் அன்பு கொண்டு, எனக்கு நண்பர்கள் மாறி மாறி வழங்கிய விருதுகளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது! தனிபதிவாக இடலாம், ஆனால் நமக்கு நாமே பட்டம் கொடுத்து கொள்வது போல் ஃபீல் பண்ணியதால் போடவில்லை, தயவுசெய்து எனக்கு விருதளித்த நண்பர்கள் மன்னிக்கவும், மேலும் இந்த விருதுகளை பிரித்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது நான் இல்லாததால் ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்!

***********************

மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து, நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்ததும்!, உங்கள் ப்ளாக் ஐடியை என் மெயிலுக்கு அனுப்பலாம்!

arunero@gmail.com

************************

தமிழோவியாங்கிற பேர்ல ஒருத்தர் எனக்கு பாலோயராக வந்தார், நம்ம பெரியார் புகழ்பரப்பி தமிழ் ஓவியான்னு நினைச்சிகிட்டு போனா, அவரு ஸ்பிலிட் பர்சனால்டியா மாறி, கோவிகண்னன், தமிழோவியா, தமிழச்சின்னு பெரிய பிரபலங்கள் பேரை வச்சிகிட்டு நிக்கிறாரு, தீடிரென்று ரெண்டு நாளைக்கு முன்னாடி என்பேரையும் அவுங்களோட சேர்த்து அவுங்க புகழுக்கு களங்கம் பண்ணிட்டாரு! போலி தமிழோவியா அண்ணே, நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!

***************************

நண்பர் திரவியநடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி தனியாக ஒரு வலைப்பூ எழுதுகிறார்! நாம் அனைவரும் நுகர்வோர் என்பதால் நிச்சயமாக பயன்படும் என்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! உங்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்!

அவரது ப்ளாக்

****************************

நமது வலையுலக நண்பர்கள் சிலர், அவர்களது வலைப்பூவிற்கு வருகை தரும் நண்பர்கள் களைப்பாய் இருந்தால் அவர்களை குஷிபடுத்தும் நோக்கில் அவர்களது ப்ளாக்கில் ரேடியோவை இணைத்திருக்கிறார்கள்! அவைகளெல்லாம் சொந்தமாக கணிணி வைத்து வீட்டிலேயே மேய்ந்து(நான் அலுவலகத்தில் மேய்கிறேன்) கொண்டிருப்பவர்களுக்கு சரியாக இருக்கும்! இங்கே தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!
என் நெட்டை பிடுங்கும் முன் பெரியமனது பண்ணி அதை எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!

***************************

மதுரையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் ஸ்ரீயும், கார்த்திகைப்பாண்டியனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள், புத்தகத்திற்காக இல்லையென்றாலும் காந்திராஜன் அவர்களின் இந்தியமரபு ஓவிய மீட்டெடுப்பு பணிக்கு ஒரு எட்டு போய் வரலாம்! அருகில் இருக்கும் நண்பர்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்!

***************************

கவிதைக்கு பதிலா ஒரு சிந்தனை!
(பெண்கள் அடிக்க வராதிங்க)

பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?

நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!

மீண்டும் மீண்டும் வா!.......

1980 ஏப்ரல் நான்காம் தேதி, காலை ஒன்பது மணி!


குமாரும், மணியும் அந்த தோப்பின் நடுப்பகுதியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர், மாமரம், நாவல்பழமரம், சப்போட்டா மரம் என மரங்களாக குவிந்து சிறிய காடு போல் காட்சியளித்தது அந்த தோப்பு, குமாரின் அப்பாவுக்கு சொந்தமான தோப்பென்றாலும் மணியின் தந்தையும், குமாரின் தந்தையும் இணைபிரியாத நண்பர்களாக இருந்த காரணத்தினால் அதை யார் பயன்படுத்துவது என்ற பாகுபாடு அவர்களுக்குள் இல்லை! குமாரும், மணியும் விடுமுறை தினங்களில் விளையாடுவது தோப்பில் தான், தற்போது இருவரும் அறிவியல் இளங்கலை படித்து கொண்டிருந்தாலும் தம் பால்ய காலத்தை நினைவு கூறவே அடிக்கடி இவர்கள் தோப்புக்கு வருவது சகஜம்!

அவர்களுக்கு அருகில் தீடிரென்று பேரொளியுடன் ஒரு சத்தம். அருகில் செல்ல பயப்பட்டாலும் சூழ்ந்திருந்த புகை அடங்கும் வரை காத்திருந்தனர், சிறிய கார் போன்ற வாஸ்து ஒன்று கண்ணில் பட்டது! ஒரு ஆள் அமரக்கூடிய அளவில் இருக்கையும் அதில் இருந்தது. இருவரும் அருகில் சென்றனர்! இருக்கையின் மேல் ஒரு கவர்! ஆர்வத்துடம் இருவரும் எடுத்து பிரித்தனர், அதில் எழுதியிருந்தது! “இது தான் உலகின் முதல் கால இயந்திரம்” என்று.

2009 ஆகஸ்ட் 21 காலை ஒன்பது மணி!

குமார் 29 வருசமா கஷ்டப்பட்டு இத கொஞ்சம் ரெடி பண்ணிட்டோம், மெக்கானில் ஒர்க் எல்லாம் முடிஞ்சது, ஆனா இந்த சாஃப்ட்வேர் தான் சரியா செட்டாக மாட்டிங்குது! நீ எழுதுன கோடுல எதோ எர்ரர் இருக்கு என்றான் மணி!

ஒன்னுக்கு நாலு வாட்டி செக் பண்ணிட்டேன் குமார், சாஃப்ட்வேருக்கு இதுல பெருசா வேலையில்லை! இதுல எலக்ட்ரான் பவரை சரியா இஞ்சின் யூஸ் பண்ணுதான்னு செக் பண்ற வேலை தான் இதுக்கு! ஸ்பீடை முன்னாடியே செட் பண்ற மாதிரி வருசத்தை செட் பண்ணி வச்சிட்டா இது ஆட்டோமேடிக்கா எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா மாறி ஒளியை விட வேகமா பயணம் பண்ண ஆரம்பிச்சிரும்! எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! நீ கவலைப்படாதே! இது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுன்னா இந்த உலகத்துலயே பெரிய பணக்காரங்க நாம தான்!

சரி 2010 ஏப்ரல் நாலாம் தேதிக்கு செட் பண்ணி வை நாம அதே நேரத்துல இங்க வெயிட் பண்ணலாம்! எதுக்கும் அதோட இருக்கையில இது தான் உலகின் முதல் கால இயந்திரம்னு எழுதி வை ஏன்னா நாம இதை பார்க்கும் போதும் அப்படி ஒரு கவர் இருந்தது, அதனால தான் இது ஒரு கால இயந்திரம்னு நம்மலால கண்டுபிடிக்க முடிஞ்சது, ஒருவேளை இங்கே நம்மை தவிர வேறு யார் பார்த்தாலும் நாம என்ன செஞ்சிகிட்டு இருந்தோம்னு புரிஞ்சிக்குவாங்க! நாம இல்லாட்டியும் நம்ம பேர் வரலாற்றுல இருக்கும்!குமார் வேகமாக தட்டச்சிட ஆரம்பித்தான்! input என்று டைப் அடிக்கும் போது இன்னுக்கும் புட்டுக்கும் இடையில் அவனை அறியாமல் விழுந்த சிறிய ஸ்பேஸை அவன் கவனிக்கவில்லை!
கடைசியாக எண்டர் தடியதும் அந்த காரின் மீதிருந்து ஒருவித ஒளி கிளம்பியது! தீடிரென்று அது ஆட ஆரம்பித்தது உள்ளிருந்த மானிட்டரில் கோட் செய்திருந்த வருடம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது! கணப்பொழுதில் கண்ணிலிருந்து மறைந்தது!

அதன் பயணம் 1980 ஏப்ரல் நான்காம் தேதி காலை ஒன்பது மணியை நோக்கி!

மீண்டும் மீண்டும் வா!...

ஆன்மீகம்! எதிர்வினை 2..
//PITTHAN said...
ஆர்யா, சுமாரிய, எகிப்த் மற்றும் சிந்து நகரிங்களின் வரலாறு நன்கு படிக்கவும்.
ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்.//

முதல் பாகத்தில் நான் குழுத்தலைவர் தகுந்த மரியாதையுடன் புதைக்கபடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பித்தன் அவர்கள் இம்மாதிரி பின்னூட்டம் இட்டிருக்கிறார், இதில் உள்ள முரண்பாடுகளை பாருங்கள்,

”ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்”

ஹிந்து மதத்தின் முதல் கடவுள் யாரால் தீர்மானிக்கப்பட்டது!
அதன் பிறகு கிளை கிளையாக வந்த கடவுள் வாரிசுகள் ஏன் ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டது! ராமனின் வாரிசுகள் வரலாறு எங்கே? சிவனுக்கு மகன் முருகன் தெரியும், ரெண்டு பொண்டாட்டி முருகனுக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் எங்கே?, சரி அதை கூட விடுங்கள்.
ஆர்யா, சுமாரிய, எகிப்த் மற்றும் சிந்து நகரிங்களின் வரலாறு படிக்க சொல்லியிருக்கிறார்! இந்தியாவின் ஆதி வரலாறான சிந்து நாகரீகத்தில் இந்துமுறை வழிபாடி இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை! ஆர்ய வரலாறு இந்தியாவிற்கு வந்த வந்தேறிகள் என்பதே! ஆக இந்தியாவில் தனிகடவுள் அல்லது குடும்பகடவுள் வழிபாடு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை!

***********************

//Eswari said...
அரசாங்கம் ஏன் கோவில் கட்டனும் அதனை பராமரிக்கணும்??//

தமிழ்கத்தை தவிர வேறெங்கும் கோவில்களை அரசு எடுத்து நடத்துவது போல் தெரியவில்லை, அதுவும் ஹிந்து கோவில்களை மட்டும் நடத்துகிறது! காரணம் மிக எளிது, தமிழ்கத்திற்கு இரண்டு பெரும் வருமானம். ஒன்று டாஸ்மாக் இன்னொன்று கோவில்

//மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், இடையில் வந்தவை,வருபவை, மாறக்கூடியவை/மாறுகின்றவை, பின் மறைந்து போயீ விடுபவை.அதை ஆன்மீகத்தோடு சேர்த்து குழப்பிக்காதிங்க.//

ஆன்மீகத்தை எவ்வாறு இதிலிருந்து பிரிக்கிறீர்கள் என தெரியவில்லை! ஒருகாலத்தில் தீவிர ஆன்மீகமாக இருந்தவை தான் இன்று மூடநம்பிக்கை, இன்றும் ஆன்மீகம் மூடநம்பிக்கைகளின் கூட்டாஞ்சோறாக தான் இருக்கிறது! ஆன்மீகம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! அதுவும் இடையில் வந்தது தான்.

*******************

//பீர் | Peer said...

வால், நீங்க சொல்லியிருக்கிற ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராம்கி மற்றும் சிந்து சமவெளி, யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்தவர்கள் பற்றியெல்லாம் எங்கெருந்து தெரிஞ்சுக்கிட்டீங்க? நெப்போலியனா சொல்லிக்கொடுத்தாரு?
ஐயா, இவங்க தனக்குத் தெரிஞ்சத ஆதாரத்தோட சொல்றாங்க. உங்கட்ட கேட்டா கூகில்ல தேடிப்பாக்க சொல்லுவீங்க அவ்வளவுதான்.
வரலாறு முக்கியம் வால்...//


சரிங்க பீர், நான் ஒரு ஆதாரமும் காட்டலை விடுங்க! இத்தனைக்கும் நான் காட்டிய உதாரணங்கள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடயதே! எனக்காக நாத்திகம் பேச ஒரு ஆதாரமும் காட்டவில்லை, இருந்தாலும் பரவாயில்லை இனி நான் ஒரு ஆதாரமும் காட்டலை, நீங்க ஒரே ஒருக்கா கடவுளை காட்டுங்க ப்ளீஸ்!


//பீர் | Peer said...
பயம்;
கடவுளை நம்புகிறவர்களுக்கு மரணபயம் இல்லை. மரணத்திற்கு பிறகான பயம்.
நினைவிருக்கட்டும்.
கடவுள் மறுப்பாளர்களுக்கு என்ன பயம் என்று, நீங்க தான் சொல்லணும்.//

பிறப்பிற்கு முன்னால் நீங்கள் என்னவாக இருந்தீர்கள், அப்போது இப்போது ஆகப்போகும் நிலையை நினைத்து பயப்பட்டீர்களா!? சந்தோசப்பட்டீர்களா? இப்போது மட்டும் என்ன பயம்!?
அங்கே பெண்களும், மதுவும் கிடைக்காது என்றா!? நரகத்தில் எண்ணை சட்டியில் போட்டு வறுப்பார்கள் என்றா!? இதுவரை எப்போதாவது அப்படி வறுபட்டவர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளாரா!? அல்லது சொர்க்கம் எப்படியிருக்கும், இதே போன்று உருண்டையாகவா?
பூமிக்கும் சொர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்று உங்கள் வேதநூலில் உள்ளது!

கடவுள் மறுப்பாளன் ஏன் பயப்படணும், எதற்கு பயப்படணும்!?


//மதம் மாறியவர்களின் உண்மைதன்மையை இதே நம்பிக்கை அடிப்படையில் பார்க்கலாமா? //
கிட்டதட்ட அப்படித்தான். என் தாய் இவளில்லை என்ற உண்மை தெரிந்தபிறகு மாறுவது, வளர்ப்பு தாயைவிட்டு விட்டு.//

அதாவது இதுவரை இருந்த மதம் வளர்ப்பு தாய் அப்படி தானே!
என்ன ஆதாரத்தின் அடிப்படையில் என தெரிந்து கொள்ளலாமா!?
எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லையென்றாலும் நான் இம்மாதிரி பதிவிட காரணமே ஒருசில மதவெறியர்களால்(நீங்கள் அல்ல) தான்! சிலருக்கு ரஜினி பிடிக்கும், சிலருக்கு கமல் பிடிக்கும் அதை என்றாவது நான் கேள்வி கேட்டிருக்கிறேனா!? ஏனென்றால் அதனால் உயிரிழப்புகள் மிக மிக குறைவு!
ஆனால் மதம் மற்றும் கடவுளால்!?

*******************************

//சந்ரு said...

இந்து சமயத்தைப் பொறுத்தவரை. பல கடவுளர்கள். இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவதாரமே. எதற்காக அவதாரங்கள் எடுக்கப்பட்டன. உலகத்திலே அட்டூழியங்களும், கொடுமைகளுக்கு இடம் பெறுகின்றபோது. மக்களை அல்லது அட்டூழியங்களிலே ஈடுபடுகின்றவரை நல்வளிப்படுத்துவதே இந்து மத கடவுளர்களின் அவதாரங்களின் நோக்கமாகும். இறைவன் என்பவன் ஒருவனே. அவனை பல அவதாரங்கலிலே காண்பது இந்து மதம்.//

நல்வழிபடுத்தவே அவதாரம் எனில் இங்கே எது நல்வழி, எது கெட்ட வழி என்ற வாதம் பிறக்கிறது! சரி எடுத்த அவதாரம் வந்த வேலையை ஏன் முழுதாக செய்யவில்லை! மாறி மாறி அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன!? கடவுளாலே கட்டுபடுத்த முடியாத விசயங்கள் உள்ளனவா!? அப்படியானல் கடவுளையும் கட்டுபடுத்த ஒருவர் இருக்கிறாரா? அவர் யார்!?
இந்துமதத்தில் ஒரே கடவுள் தான் பல அவதாரம் என்றால் சிவனும், பார்வதியும், பிள்ளையாரும், முருகனும் ஒன்றா!?


//எதற்காக இரண்டு பொண்டாட்டி இந்துக் கடவுளர்களுக்கு வந்தது என்பதை ஆராய்ந்து விட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். இந்துக்களைப் பொறுத்தவரை இந்துமத தத்துவங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன அதனை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இந்து மத கடவுளர்களுக்கு இரண்டு பொண்டாட்டி வந்ததற்கு எதற்காக வந்தது என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை படிக்கவேண்டும்.//


ரெண்டு பொண்டாட்டி கட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்குன்னு சொன்னது நீங்க தான்!,
அதுக்கு நான் வரலாற்றை வேற படிக்கணுமா!? அப்படி காரணமாக திருமணம் செய்து கொண்டாலும் வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஆகாதாமே, ஏன்? வள்ளியும், தெய்வானையும் ஏன் குழந்தைகளே பெத்து கொள்ளவில்லை முருகண் வேறு எதாவது சைடில் செட்டப் சஎய்து போய்விட்டாரா!? அதற்கெல்லாம் இருந்த வரலாறு ஏன் அதன் பின் இல்லை!?

****************************

இதே பெருசா போச்சு!
மந்திரனின் கேள்விகளுக்கு பதில் அடுத்த பதிவில் பார்ப்போம்!

****************************

செத்த கடவுள்!...

செத்த கடவுள்!

லட்சோபலட்ச வருடங்கள்
தாவாகட்டையில் கைவைத்து
சும்மா தான் இருந்தேன்
பொழுது போகாமல்
வானத்தை படைத்தேன்
பூமியை படைத்தேன்
காடு,மலைகள் என கடைவிரித்தேன்
அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.


***********************
கடவுளுக்கே காசுகொடுத்தவன்!

பெருமாள்கோவில்
முருகன்கோவில்
சிவன்கோவில்
எல்லா கோவிலும் சுத்தியாயிற்று
உண்டியல் இல்லாத
கோவில்கள் இல்லை
ஆயிரத்தை நூறாக்கி
ஓட்டையில் போட்டாச்சு
பூசாரி சொன்னார்
காணிக்கை கடவுளுக்காம்
அப்போ நான் யார்!?

செத்துப்போன தருணங்கள்!
வட்டமாக முடியப்போன
கோடொன்று
வளைந்து வளைந்து
ஆரம்பத்தின்
முடிவைத் தேடியது
என் பாதத்திற்கடியில்
ஒளிந்திருந்த முடிவு
ஆரம்பித்தது


*************************செத்துப்போன தருணங்களில்
உயிர்தெழ ஆசையில்லை
நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது

குவியல்!..(13.08.09)

சென்ற ஞாயிற்றுகிழமை பிறந்த நாள் கண்ட சகோதரி பூர்ணிமாசரண் அவர்களுக்கு தனியாக வாழ்த்து சொல்ல நினைத்தேன்! காரணம் அவர் எனக்காக தனிப்பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்! விடுமுறை தினத்தில் அவருக்கு பிறந்த நாள் வந்ததால் முடியவில்லை!
சகோதரரிக்கு உங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!

*******************

இப்பதவி எழுதி கொண்டிருக்கும் நேரம் சரியாக 314 பாலோயர்ஸை அடைந்திருக்கிறேன்!
ரீடரில் 456 நண்பர்கள், 314+456=770 நண்பர்கள் நான் எழுதும் மொக்கையை தவறாது படிக்கிறார்கள் எனும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது! உங்கள் அன்பு ஒன்றே என்னை இங்கே நிறுத்தி வைத்திருக்கிறது! மேலும் ஒரு செய்தி, எனக்கு யார் பாலோயராக இருந்தாலும் உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்! ஆரம்பத்தில் சிலர் ப்ளாக் ஆரம்பிக்காமல் இருந்து பிற்பாடு ஆரம்பித்தவர்களை நான் தொடர முடியாமல் இருக்கலாம்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்! பின்னூட்டத்தில் சொல்ல சங்கடமாக இருந்தால் எனது மெயிலுக்கு உங்கள் ப்ளாக் ஐடியை அனுப்புங்கள்! arunero@gmail.com

********************

சகோதரர் சகப்பதிவர் சிங்கை நாதன் அவர்களது அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் பணத்தை திரட்ட நண்பர் நர்சிம் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்! நண்பர்கள் தங்களால ஆன உதவியை செய்து சிங்கை நாதன் மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்!

நர்சிம் அவர்களின் பதிவு!


வங்கி கணக்கு விபரம்
ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

***************************

இந்த வாரம் சினிமா இல்லை!

***************************

கவிதை மாதிரி ஒண்ணு!

ஒன்னிலிருந்து முப்பது வரை!

ஒண்ணாம்தேதி
சம்பளம்
பார்ட்டி
வாடகை
கரண்ட்பில்லு
ஸ்கூல் பீஸு
மளிகை
அரிசி
கேஸ் சிலிண்டர்
நெப்போலியன்
லெக் பீஸு
பில்டர் கிங்ஸ்
பிரியாணி
கடன்
மானிட்டர்
வறுத்த கல்ல
துண்டு பீடி!

வெளியேறிய கவிதைகள்!


என்னை சுற்றி

ஆயிரமாயிரம் வண்டுகள்
என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை தின்று கொண்டிருந்தது!
மரணம் என்னை விட்டு
விலகி ஓடியது
நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!**************************

கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தலை, தொடையருகில்
நின்று சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு கண்ணீர்
மார்போடு சாய நினைத்து
தொலைவில் உருண்டோடியது!

சாதிபுத்தி!

சென்ற குவியலில் வந்திருக்கும் ஒரு சர்ச்சைகுறிய பின்னூட்டம் தான் இந்த பதிவிற்கு காரணம்!
இந்த பதிவை எழுத தூண்டிய அண்ணன் டக்ளஸ் அவர்களுக்கு நன்றி!

*********************

//கும்க்கி said...

ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம். உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.
அது அவர்களுக்கே உரிய அம்சம்.//

இந்த பின்னுட்டத்திற்கு நான் எதுவும் மறுப்பு சொல்லவில்லை என்பது டக்ளஸின் வாதம், அதற்கு காரணமான இன்னோரு பின்னூட்டத்தையும் சபைக்கு கொண்டு வருகிறார்!

அந்த பின்னூட்டம்!

//வால்பையன் said...
மற்றோரு வேண்டுகோள்!
உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!//


இது தான் அந்த பின்னூட்டம்! உயர்சாதியினர் என்று தம்மை அழைத்து கொள்ளும் சிலர் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது! யாரும் அதை கேட்பதாக தெரியவில்லை! ஆனால் எப்போதும் பார்ப்பனீய எதிர்ப்பை காட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள்! அதனால் எனது கருத்துகள் விரிவாக!

**********************

பார்பனர்களுகென்று தனியாக சாதி புத்தி இருக்கும் என்று எவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை! இந்தியா முழுவதும் ஏற்றுகொள்ளப்பட்ட இந்து என்ற மதத்தையும் அதன் வேதத்தையும் நம்பி அதை கடைபடித்து வாழ்ந்து கொண்டிருப்பது பார்பன சமூகம்! பார்பனர்களை எதிர்ப்பவர்கள் ஏன் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை! புத்தகத்தை நம்பி கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் தானே அவர்கள்! அவர்களுக்கு எவ்வாறு பிறப்பிலேயே அறிவு காது வழியாக ஒழுகும்!ஒருவருடைய அறிவை தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கடந்து வந்த சூழலும், அவர்களது கற்கும் ஆர்வமும் தானே! இது அனைவருக்கும் பொது தானே!கடவுள் பயத்தில் இருந்த மக்களை தனக்கு கீழ் பயன்படுத்தி கொண்ட ஆதிக்க பார்ப்பனர்கள் இருந்தது உண்மை தான்! அதை தான் அப்போதே பெரியார் என்ற மனிதர் சிதையில் இட்டு பொசுக்கிவிட்டாரே! இன்னும் இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை கையாள்வது பார்ப்பனர்கள் மட்டுமே என்று எவ்வாறு நம்புகிறீகள்! சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் காட்டுகத்தல் கத்தி கொண்டிருகிறேன், நீங்கள் சாதிபுத்தி என்ற பெயரில் அவர்களை சொறித்துவிட்டு கொண்டு தான் இருக்கிறீர்கள்!

உங்கள் பேச்சுக்கே வருவோம்! அப்படி பார்ப்பனியர்களுக்கு சாதி புத்தி இருக்குமானால் அதே போல், ஒவ்வோரு சாதியினருக்கும் சாதிபுத்தி இருக்குமல்லாவா!, நான் பார்பனன் அதனால் புரோகிதம் செய்கிறேன் என்று சொல்லுவதை போல, ஒவ்வொரு சாதியினரும் அவர்களது புத்திகேற்ற குலதொழிலை செய்வதா! வர்ணாசிரம் என்று அழைக்கப்படும் குலதொழிலை எதிர்த்தது இதற்காகவா!

சாதி ஒழியாமல் எங்கிருந்து சமத்துவம் பிறக்கும்!
தமது வாரிசுகளுக்கு பார்பனர்கள் என்ற சாதியை அறிமுகபடுத்தி வைக்கும் போதே அவர்கள் தாம் என்ன சாதி என்பார்களே! என்ன சொல்வீர்கள், நாமும் ஆதிக்கசாதி என்றா! இல்லை நாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவீர்களா!? நீங்கள் சாதி ஒழிக்க பாடுபடாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றி சாதியை வளர்த்து விடாதீர்கள்!

**********************
என் கண்ணை திறந்துவிட்ட டக்ளஸ் அண்ணனுக்கு மீண்டும் ஒருக்கா நன்றி!

ஆன்மீகபயணத்தின் எதிர்வினை!

பலர் நண்பர்கள் சாட்டில் கேட்டு கொண்டே தான் இருந்தார்கள், உங்கள் ஸ்டைல் பதிவுகளை கொஞ்சநாளாக காணோமே என்று, என்ன செய்ய சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும், கடந்த மூன்று மாதகாலமாக தமிழ் வலையுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களை நான் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்!, சிறந்த வாத திறமை உள்ளவர்களாகவும், சிறந்த வாசிப்பனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், சரியோ, தவறோ அவர்களது திறமையை வெளிகாட்ட ஒரு களம் தேவைபடுகிறது, அது என் வலையாகத்தான் இருக்கட்டுமே!

***************************

//மந்திரன் said...

இதற்க்கு யாரும் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ..
அகஸ்த்தியர் ஒரு சித்தர் . அவர் என்ன கஞ்சா குடித்துவிட்டுத்தான் மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்தாரா ? அழியும் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டு பிடித்த சித்தர்கள் , தன உடலை இப்படி கெடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது என் திமையான கருத்து .
மற்றப்படி இப்போது நான் தான் கடவுள் , நான் தான் சிவன் , விஷ்ணு , இயேசு என்று சொல்லி கொள்ளும் எந்த நாயும் சித்தர்களோ , உத்தமர்களோ இல்லை ..அதில் உங்களோடு உடன் படுகிறேன்..//


அகத்தியர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையென்பதால் அதை பற்றி ஒன்றும் கூறயியலாது, ஆனால் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டுபிடித்தவர்கள் தங்கள் உடலை கெடுத்து கொள்வார்களா என்ற கேள்விக்கு நடைமுறை வாழ்க்கையே பதில் சொல்லும், என் வீட்டு அருகில் ஒரு டாக்டர் குடித்தே இறந்து போனார்! சித்தர்கள் என்று இன்று சொல்லிகொள்பவர்கள் நான் பார்த்து இப்படி தான் இருக்கிறார்கள்! கற்பனையில் மக்கள் மனதில் இருக்கும் 200 வருடமாக வாழும் சித்தர், தீடிரென வானில் கிளம்பும் சித்தர், பலவருடங்களாக சோறு தன்ணி இல்லாமல் இருக்கும் சித்தர் என பலருண்டு! ஆனா ஆளாத்தான் காட்டமாட்டாங்க!

ராமகிருஷ்ண பரமஹம்சர் புக்கா புடிப்பார் பலருக்கு தெரியும், விவேகானந்தரும் புக்கா பிடிப்பார் எத்தனை பேருக்கு தெரியும், ராம்கி கேன்சரால் தான் இறந்தார் என கூட வரலாறு இருக்கிறது!
மேட்டர் என்னான்னா இவர்க்ளெல்லாம் கடவுளை பார்த்தவர்கள், எனக்கு தெரிந்து கடவுளை நேரில் பார்த்தகாக சொல்வர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள், சந்தேகமிருந்தால் மனநல மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள்

*****************

// Eswari said...

அக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா எல்லா மன்னர்களும், பெரிய பெரிய கோவில்கள் கட்டியும் அதன் பராமரிப்புக்காக பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றார்கள்?

இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?

முழுதும் தெரிந்தவன்/புரிந்தவன் எதுவும் கேட்க மாட்டன்.
ஒன்றும் தெரியாதவனும் எதுவும் பேச மாட்டன்
ஆன்மிகத்தை பற்றி அரைகுறையா தெரிஞ்சவன் தான் எல்லாம் தெரிஞ்சவன் போல இப்படி உளருவான். //


இதற்கு நான் கொஞ்சம் விரிவாக பதிலளிக்க வேண்டியுள்ளதால் தயவுசெய்து முழுதாக படித்துவிட்டு சந்தேகங்களை கேட்கவும்!

ஈஸ்வரியின் கேள்வி மன்னர் காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, ஆனால் அதற்கு முன் என்ன நடந்தது என பார்க்கலாம்! மனிதன் குழுக்கலாக இருந்த பொழுது குழுதலைவனின் உடலை பத்திரமாக புதைத்தனர், வயதானவனே குழுத்தலைவன், மற்ற விலங்குகளிடமிருந்தும், இயற்கை சீற்றங்களிலுருந்தும் தப்பித்தால் மட்டுமே வயதாகியும் வாழமுடியும், அவனது அனுபவத்தை பெற அவனை மக்கள் தலைவனாக ஏற்றுகொண்டனர், நாகரீக காலத்தில் வளர்ந்த கலைவடிவம், சிற்பம், ஓவியம் என தனது வளர்ச்சியை பெருக்கி கொண்டது, சமகாலத்தில் இருந்தது போல் அப்போதைய தலைவர்களுக்கும் சிலை செய்தார்கள், கூடவே அவர் பயன்படுத்திய பொருள், செல்லபிராணிகளுடன் சமாதி செய்தார்கள். அங்கேயிருந்த மனிதர்கள் கொஞ்சம் வரலாற்றின் மேல் அக்கறை கொண்டதால் அதன் சுவடுகளை விட்டு சென்றார்கள்!

இந்தியாவின் வரலாறு என எதை சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது!. சிந்துசமவெளி நாகரிகத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது, ஆனால் அதை வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை, அதன் பின்னர் இந்தியாவின் வரலாறு என சீனாவிலிருந்து வந்த யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்து தகவல் சேகரிப்பாளர்கள் என வெளிநாட்டவரின் செய்திகளே கடந்த கால இந்தியா, சரி அதையும் நம்பமுடியுமா என்றால் சந்தேகமே, சீன நாட்டை சேர்ந்த
யுவாங் சுவாங் நடுநிலையொடு அவரது நாட்டையும், நம்மையும் ஒப்பிட்டிருப்பார் என சொல்லமுடியாது, மேலும் அவரது பயணகுறிப்புகளில் கோட்டைவாயிலை நெருப்பு கக்கும் ட்ராகன் காத்து கொண்டிருக்கும் என எழுதியுள்ளார், அதை நம்பும் மக்களுக்கு கடவுள் என்னும் மாயையை விளக்குவது எனக்கு நானே முட்டாளாக்கி கொள்வதற்கு சமம், அதனால் நெருப்பு கக்கும் ட்ராகன் இருந்தது என நம்புபவர்கள் இத்தோடு அபீட் ஆகிக்கலாம்!

வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு என்பது ஆழநோக்கினால் தெரியும், பலகுழுக்கலாக வாழ்ந்த மனிதர்கள் தனது தலைமை என்ன சொன்னதோ அதையே பின்பற்றி வாழ்ந்தார்கள், அவர்களுக்கு பிடித்த மாதிரி கடவுளை வடிவமைத்து கொண்டார்கள், அதற்கு உதாரனம் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்களும் மதங்களும், சிலர் இயற்கையை கடவுளாக கொண்டார்கள், கடவுள் உருவமற்றவர் ஆனால் வருவார்!? என்றார்கள்!. மூடநம்பிக்கையில்லாத மதமே கிடையாது சம்பிரதாயங்கள் இல்லாமல் மதமே கிடையாது, அந்த நம்பிக்கைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால் எதாவது ஒரு புத்தகத்தில் இத்தனாம் பக்கம் இத்தனாம் அதிகாரம் என்பீர்கள், உங்களது அறிவு அந்த புத்தகத்தை தாண்டி வருவதில்லை என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்.

வாழும் நெறியை தான் சொல்லிதருகிறது என சொல்லி கொள்ளும் எல்லா மதத்திற்கும் இருண்ட பக்கம் என ஒன்று இருக்கிறது! இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுவதே பல்வேறு குழுக்கலாக இருந்து பின் ஒருசில சுயநல அல்லது பொதுநலவாதிகளால் ஒன்றினைக்கப்பட்டது, சுயநலம், பொதுநலம் இரண்டையும் குறிப்பிட காரணம் அவர்கள் என்ன நோக்கில் அதை செய்தார்கள் என தெரியாமல் போனதால். ஆதி இதிகாச,புராண, வாய்வழி கதைகளிலுருந்தே அறியப்படுவது கடவுள் என்பவர் இமயமலையில் எதோ ஒரு சிகரத்தில் தனது பரிவாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே, அல்லது கடவுள் அவதாரங்கள் வடநாட்டில் மட்டுமே தோன்றுவார்கள், எந்த ஒரு புராணகதைகளும் நேரடி இந்திய மொழியில் இல்லை என்பது மற்றொரு உதாரணம்.

மலைவாழ் மக்கள் வழிபட்ட முருகன், வடநாட்டு கடவுளுக்கு வாரிசாக போனது தென் நாடுகளில் பிரபலமாக இருந்ததே காரணமாக இருக்கும், இன்றும் வடநாடுகளில் பெரிதாக முருகனுக்கு கோவில் இல்லை என்பது அதற்கு சான்று, அதே நேரம் கிராம காவல் தெய்வங்களாக இருந்த அய்யனார், கருப்பசாமி போன்றார் வடநாட்டு கடவுளின் உறவினர் ஆகாதற்கு காரணம் அவர்கள் கிராம காவலாளியாக இருந்து உயிர் துறந்த மக்களில் ஒருவர் மேலும் அவர் கண்டிப்பாக நிலபிரபுவாகவோ, வசதியுள்ளவராகவோ, ஊர் பெரியவராகவோ, அக்கால உயர்சாதியினராகவோ இல்லை என்பதே!

ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான், தான் வாழ எதையும் இழக்க தயாராக இருக்கிறான், அவனது பயமே கடவுள் நம்பிக்கைக்கு ஆணிவேராக ஊன்றிவிட்டது, காரணம் பெரும்பாலான மதங்கள் இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு என்றும், இப்பூமியிலேயே மறுபிறவி எடுப்பாய் என்றும்(காக்கா தான், தாத்தான்னு சோறு வைக்கிறது), நம்பிக்கையை ஊட்டி வருகிறது!

உறக்கநிலையில் மூளை முழுதாக ஓய்வு எடுக்காமல் சிறிது விழித்திருக்கும் போது கனவு ஏற்ப்படுகிறது, கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் தான், உங்களை கேட்காமல் இயங்க ஆரம்பித்த உடலுறுப்புகள் மட்டும் தானாக இயங்கி கொண்டிருக்கும், அவைகளின் இயக்கம் நிற்கும் போது நீங்கள் நிரந்தர தூக்கத்தை அடைக்கிறீர்கள், அதன் பின் உங்கள் நினைவுகளாலோ, உங்கள் அனுபவத்தினாலோ துளி அளவும் இந்த பூமிக்கு பயனில்லை! இறப்பு என்பது உங்கள் நினைவுகளுக்கு நிரந்தர தூக்கம், அதன் பின் அவை என்றும் கிடையாது! வாழும் போது அடுத்தவருக்கு உதவியாக இருப்பதோ, உங்களலவில் சந்தோஷமாக இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன தான் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிற்கும் அதன் அரசாங்கமே கடவுள்! அவர்கள் கொடுத்தால் வரம், எடுத்தால் சாபம்!

*************************
பதிவின் நீளம் கருதி இதுடன் முடிக்கிறேன்! ஆங்கேங்கே தொடர்பற்று இருப்பதாக உணர்ந்தால் தயவுசெய்து பின்னூட்டத்தில் கேளுங்கள்,அனைத்திற்கும் நிச்சயமாக பதிலுண்டு!

உங்களது நம்பிக்கையை நியாயப்படுத்தும் கேள்விகளுக்கு எனது தரப்பு பதில்களையே தருகிறேன்! உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!

சர்தார்ஜி ஜோக்ஸ்!..

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
திட்டவதாக இருந்தால் இதை மெயிலில் எனக்கு அனுப்பிய மாதேஷ் அவர்களை திட்டுங்கள்ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!

******************************

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

*****************************************

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

************************************

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

*********************************

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

********************************

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!***************************************

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

***********************************

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்...!


நன்றி மாதேஷ் த கிரேட்

holy smoke!.. ஆன்மீகப்பயணம்

ஆன்மீகபயணமாக வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வருவது ஒன்றும் புதிதல்ல!
அவர்களது மதத்தை பரப்பவும், நம் நாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு அதை அறியவும் ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! ஆனால் உண்மையில் அவர்களது வருகை அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா!? அவர்கள் தேடி வந்ததை அடைந்தார்களா!?
என்றால் கடவுள் நம்பிக்கைக்கு என்ன பதில் வருமோ அதே தான் இதற்கும் பதில்,
“அனுபவிக்க வேண்டியது கடவுள், ஆராய வேண்டியதல்ல”

இப்படி மழுப்பிகிட்டே போகலாம்! மனச்சிதைவு குறைக்கு ஆட்பட்டவர்கள், இறரந்து போனவர்களையும், கடவுளையும் காண்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு தான் இந்த ஆன்மீக தேடலுக்கும் பயன், கொஞ்சமாவது சுயமாக சிந்தக்க தெரிந்து கேள்வி கேட்பவர்களை,
“நீ யார்” என்று உன்னையே கேட்டுப்பார், உன் வருகையின் பயன் என்ன? என்று கேனத்தனமாக எதாவது கேட்டு குழப்பி புடுவாங்க!

”நீ யார்” கேள்வி கேட்ட சாமியாரை நாம திரும்பி நீங்க யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு தெரியல, அவரு மட்டும் வருகைக்கு முன்னாடி டிக்கெடெல்லாம் ரிசர்வ் பண்ணிட்டு, சாமியாரா போய் மக்களை திருத்த போறேன்னு கங்கணம் கட்டிட்டு வந்த மாதிரியும், நாம ஏன் வந்தோம்னு மறந்துட்டா மாதிரியும் நம்மை வசியம் செய்வதில் வல்லவர்கள் இந்த கடவுள் புரோக்கர்கள்!

இவையெல்லாம் என் சொந்த கருத்துகளே இன்னும் நான் இந்த படத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை!

*******************Holy Smoke என்பது இப்படத்தின் பெயர் நாயகனை விட நாயகி உலகம் முழுவதும் அறிந்தவள் டைட்டானிக் பட நாயகி கேத் வின்ஸ்லட் தான் அவர், சுற்று பயணமாக இந்தியா வருபவள் பாபாவின் தொடுதலுக்கு பின்னர் அவர் மேல் மையல் கொண்டு பாபாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என இந்தியாவிலேயே தங்கி விடுகிறாள், அவளது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி அவளது தாயார் அவளை திரும்ப அழைத்து செல்கிறாள்!

இந்திய கலாச்சார உடையான புடவையை அணிந்து கொண்டு இந்தியா மேல் உள்ள காதல் சிறிதும் குறையாமல் இருக்கிறாள் ரூத்(கேத் வின்ஸ்லட்), அவளை கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த வாட்டர்ஸ்(ஹார்வி கேட்டல்) என்ற மனோதத்துவ டாக்டர் வருகிறார்! சில நம்பிக்கைகளை எதை வைத்தும் தகர்க்க முடியாது, அல்லது சில விசயங்களுக்கு தீர்வு வெறுமையாக தான் இருக்கும், அது தான் நடக்கும் இவள் விசயத்திலும்.

அவளை குணப்படுத்த வந்த டாக்டர் அவளது மேல் காமம் கொண்டு இவள் மேல் பைத்தியாவது வெகு பிராக்டிகலாக மனச்சிதைவை உணர்த்தும் படம், கடைசியில் நாயகனே நாம் இந்தியாவிற்கு போகலாம் என கதறும் அளவுக்கு அவள் மேல் காதல் கொள்ள வைப்பாள் ரூத்.
ஒஷோவின் ”காமத்திலிருந்து கடவுளுக்கு” புத்தகதை படித்திருப்பார் போல, கடவுளின் ஆரம்பமே காமத்திலிருந்து ஆரம்பம் என படம் முழுவதும் செய்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர்காமத்தில் கிடைக்கும் சில நொடி இன்பத்தையே உன் வாழ்நாள் முழுவதும் தருவது தான் ஆன்மீகம் என்பது ஓஷோவின் கருத்து, அதாவது சில நொடி மட்டும் என்பது சிற்றின்பம், பல நிமிடங்கள் பேரின்பம் என்ற தியரி மாதிரி, 24 மணிநேரமும் போதையில் இருப்பவனும் பேரின்பத்தில் தான் இருப்பான் போல! சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை.

படத்தை கேத்தின் நடிப்புக்காக பார்க்கலாம்!
படம், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டியது கட்டாயம்!

!

Blog Widget by LinkWithin