மதமும் - பாலியல் தேர்வும்!

சமீபத்தில் அமெரிக்காவில் குடும்ப சம்மத்துடன் ஓரினைசேர்க்கை விருப்ப ஆண்கள் இருவர் வைதீக!? முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.
சில வீரதீர புஜபல பராக்கிரம ஆண்மகன்கள் அவர்கள் புகைபடத்தை வெளியிட்டுனர் கேவலமான சில வசனத்துடன். சில மத அடைப்படைவாதிகள் அவர்கள் சமூகவீரோதிகள் எனவும் வாழ தகுதியற்றவர்கள் என்றும் பதிவிட்டு இருந்தனர்.

ஒரு மனிதனுக்கு யாரை பிடிக்கவேண்டும் என்பது அவனது உரிமை. ஆனால் ஓரிணைச்சேர்க்கை விருப்பம் ஒரு குறைபாடாகவே சமூகம் பார்க்கிறது. தன்பால் ஈர்ப்பு ஆணுக்கு- ஆண் குறைபாடகவும். எதிர்பால் ஈர்ப்பு ஆணுக்கு-பெண் சரியானதாகவும் சமூகம் நினைக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒன்றின் மேல் ஈர்ப்பு இல்லையென்றால் அதை குறைபாடாக நினைக்க வேண்டியதில்லை. எனக்கு கூடத்தான் உலகின் பெரும்பாலோர்க்கு பிடித்த காபி,டீ பிடிக்காது. அதையும் குறைபாடு என்பீர்களா?

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஓரினைசேர்க்கைக்கு இருக்கும் தடையை  நீக்ககோரி ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி இவ்வாறு கூறுகிறார்.

உலகின் எந்த மதமும் ஓரினைசேர்க்கையை ஆதரிக்கவில்லை அதனால் தடையை நீக்க்முடியாது.

பாலியல் தேர்வுக்கு ஏன் மதம் தலைப்பில் வந்தது என்பதற்கான அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். ஒருதனி மனிதனின் உரிமைகள் மதத்தின் பேரால் மறுக்கப்படுகிறது. ஆம் அனைத்து மதத்திலும் ஓரினைசேர்க்கை மறுக்கப்பட்டுளது தான். அப்படியானால் அந்த மதம் உருவான காலத்திலும் ஓரினைசேர்க்கை இருந்தது என்பது உண்மையாகிறது தானே. ஆனால் வரலாறு பெரும்பான்மை மத தொடக்கத்தின் முன்னரே ஓரினைசேர்க்கை ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்று என்கிறது.

கிரேக்க நாகரீகத்தில் பெண், குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே, அவனது சந்தோசங்களை மற்றொரு ஆணுடன் பகிர்ந்து கொள்வதை பெருமையாக கருதினான். மாவீரன் என்று அழைக்கப்படும் அலக்ஸாண்டர் மற்றும் அவரது குரு அரிஸ்டாட்டில் முதற்கொண்டு ஓரினைசேர்க்கை பிரியர்கள் தான்.

ஓரினைசேர்க்கைக்கும் பரிணாமத்தின் இயற்கை தேர்வுக்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் பரிமாணம் என்று வந்துவிட்டாலே மதவாதிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இப்பொழுது இருப்பது போல் உள்ளது உள்ளபடியே.
நாம் பரிணாமனத்தின் பல சான்றுகளை எடுத்து வைத்தாலும் இப்போது இருக்கும் குரங்கு ஏன் குட்டைபாவாடை போடல என்பார்கள்.

என்னிடம் தொடர்சியாக வாதிடும் சில நண்பர்களிடம் மாற்றங்களை உணர்கிறேன். இந்துமத நண்பர்கள் “இது தான் கடவுள்னு ஏன் சொல்ற, நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு” என ஒதுக்கி கொள்கிறனர். எனது கிறிஸ்துவ நண்பன் ஒருபடி மேலே போய், உலகம் கடவுளால் தான் படைக்கப்பட்டது. பைபிளில் இருக்கும் ஆதாம், ஏவாள் தான் நீ சொல்லும் ஆரம்ப நுண்ணுயிர்கள். அவை தான் பரிணமிச்சு நம்மை மாதிரி ஆனது, இப்போதான் யாரோ அதை மனிதர்கள்னு மாத்திட்டாங்க என்கிறான் :) . இந்த பதிவுக்கு வரும் பெரும்பான்மை எதிர்ப்பில் இருந்து தெரியும். யார் என்னும் பழமைவாதத்தை பிடித்து தொங்குகிறார்கள் என்று :)

ஜுராஸிக்பார்க் படத்தில் வயதான விஞ்ஞானி-ரிச்சர்ட் அண்டன்ப்ரோ(ஸ்பீல்பெர்க்கின் ET படத்திற்கு கிடைக்கவேண்டிய ஆஸ்கார்களை தான் இயக்கிய காந்தி படத்திற்கு அள்ளியவர்) சொல்லுவார். இங்கே எந்த பிரச்சனையும் வராது ஏனென்றால் இங்கே இருக்கும் டைனோசர்கள் அனைத்தும் பெண்பாலாகவே படைத்திருக்கிறோம் என்று. ஆனால் காட்டிற்குள் முட்டை கண்டுபிடிப்பார்கள். ஆப்பிரிக்க தவளை இனம் ஒன்று தேவையான பொழுது பால் மாறும் என்று நாயகன் கூறுவான்.

ஆப்பிரிக்க தவளை மட்டுமல்ல, அம்மாதிரியான இருபால் உயிரிகள் உலகில் நிறைய உண்டு. ஒரே உடம்பில் ஆண், பெண் இரண்டு உறுப்புகளையும் கொண்ட மனிதர்கள் பிறந்ததுண்டு. ஆண்ட்ரோஜோன், ஈஸ்ரோஜோன் சுரப்பு குறைப்பாட்டால் பெண்களுக்கு மீசை முளைப்பதையும், ஆண்களுக்கு மார்பகங்கள் பெரியாவதையும் பார்த்திருக்கிறோம்.

கடவுள் அனைத்தும் ஜோடி ஜோடியாக படைத்தான் என்ற மதவாதத்தின் அடிபடை கூற்றை உடைக்கக்கூடியது இருபால் உயிர்கள். இந்தோசினியாவில் வாழும் கொமோடோ டிராகன் என்ற பல்லியினம் ஆண் துணை இல்லாமலேயே முட்டையிடும். ஆணின் குரோம்சோம்களுக்கு பதில் பெண் முட்டையே தனது குரோம்சோம்களை இரட்டிப்பாக்கி விடும். ஆகவே முட்டையில் இருந்து வரும் குட்டிகள் அனைத்தும் ஆண்களாகவே இருக்கும்.

மனித இனத்திலும் ஆண் துணையில்லாமல் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவள் உடலில் இருக்கும் அணுவை கொண்டே குளோனிங் மூலம் மற்றொரு உயிரை படைக்கமுடியும். இதுவல்லாது ஆப்பிரிக்க தவளையை போல் தன் தேவையின் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் மீன் இனம் ஒன்று உண்டு. Finding Nimo படத்தில் வரும் மீன் தான் அது. அதை பார்த்ததில்லை என்றால் trisha Brest tatto என கூகுளிட்டு பார்க்கனும்.

மண்புழு ஒரு இருபாலின உயிரி. தன் உடம்பிலேயே விந்தையும், கருமுட்டையும் கொண்டுள்ளது. இருபாலின உயிர்களில் விநோதமானது கடல் நத்தைகளில் ஒருவகை. அவற்றின் உடலில் முன்னும் பின்னும் பாலின உறுப்புகள் இருக்கின்றன. சுமார் பத்து நத்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோர்த்து பின் வட்டமாக இணைந்து உடலுறது கொள்ளும்.

இதுபோல் இன்னும் கண்டுபிடிக்காத இருபாலின உயிரிகள் நிறைய இருக்கலாம். ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போல் பல விஞ்ஞானிகள் சொல்வது கூட வேற்றுகிரகத்தில் ஆண்,பெண் தேவையற்ற உயிரினங்கள் இருக்கலாம் என்று தான். தன் தேவையின் போது அவை இனப்பெருக்கம் செய்துக்கொள்ளும்.

கடவுள் என்ற பதத்தின் மாபெரும் தோல்விக்கு முக்கிய சான்று இருபாலின உயிரிகள்!

நான்கு ஆண்டு ஆட்சியில்

ஊழியர்களின் வைப்பு நிதியில் கை வைக்கிறது புதுசேரி அரசு, திவாலாகி விட்டதா என பத்திரிக்கை செய்தி பார்த்திருக்கலாம். புதுசேரிக்கே அந்த கதின்னா தமிழ்நாட்டுக்கு.

ஜெயலலிதா பதவி ஏற்றதும் என்னுடைய “ஏன் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்” பதிவை கமெண்ட் போட்டு மேல கொண்டு வர்றாரு மாயவரத்தான். பங்காளி ராஜனுக்கு அடுத்து நான் தான் போல.

கடந்த நான்கு ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆட்சிக்கு வந்த உடன் கொண்டு வந்த அம்மா உணவகம் தான் மரணமாஸ். அதின் பின் இலவச லேப்டாப் மற்றும் இன்னபிற இலவங்கள் மட்டுமே பேசப்பட்டன, வளர்ச்சி திட்டம்னு பார்த்தா ஒரு மண்ணாகட்டியும் இல்ல.

டாஸ்மாக் மட்டுமே அரசின் வருவாயா இருக்கும் அவலம் உலகத்தில் வேற எந்த மாநிலத்துக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன். கஜானாவில் காசு இல்லாதபோது இந்தமாதிரி தொழிலாளர்களின் வைப்பு நிதியில் கைவைப்பது அரசின் வேலை தான், ஆனால் இதுவரை அரசின் கடனாக இருந்த ஒருலட்சம் கோடியை வந்த நான்கே ஆண்டில் இரண்டு லட்சம் கோடியாக மாற்றிய அரசு வருவாய்க்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றது?

மீதம் இருக்கப்போவது ஒரே வருடம். அதற்குள் நல்லபேர் வாங்க பார்க்குமா அல்லது நிதி நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டி முதலீடு எப்படி வந்தாலும் சரின்னு மீண்டும் ஒரு கோலா கம்பெனியை பெருந்துறைக்கு கொண்டுவருமா?

விசன் 2020 என்பது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் வகித்தது, அதற்காக ஒருதுறையை உருவாக்கியது ஆனால் ஒரு இலையை கூட கிள்ளிபோடவில்லை என்பது மொத்த தமிழகத்துக்கும் தெரியும்.

மக்களுக்கு திமுக மீது இருக்கும் வெறுப்பை மட்டுமே வைத்துகொண்டு மீண்டும் ஆட்சியை புடிச்சுவிடலாம் என்பதே அதிமுகவின் கனவாக இருக்கின்றது.

சிறுகட்சிகள் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்தால் நிச்சயம் அது அதிமுகவுக்கு ஆப்பாக தான் அமையும். இருக்கும் ஒரு வருடத்தாலாவது மக்களுக்கு நலதிட்டத்தில் அறிவித்து நல்லபெயர் எடுத்தால் கொஞ்சமாவது கட்சிக்கு மரியாதை இருக்கும்.

பழையபடி மமதையில் ஆடினால் எம்.ஜி.ஆர் மாதிரி தொடர்ந்து ஆட்சியை பிடிப்பது கனவாகத்தான் போகும்.

ஏன் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்?

தீர்ப்பு குறித்து பல மூத்த வழக்கறிஞர்கள் கூட மேல்முறையீடு செய்தால் விடுதலையை நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதற்கு முன் அம்மாதிரியான சம்பவம் நடந்ததில்லையாம்.

முன்பெல்லாம் போதுமான சாட்சிகள் இல்லைன்னு விடுதலை செய்வார்கள். மேல்முறையீட்டில் சாட்சிகள் சரியாக விசாரிக்கப்பட வில்லை என்பார்கள். அதற்கு விடுதலையை ரத்து செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் இந்த தீர்ப்பில் குளறுபடி நீதிபதி செய்தது தானே.
கணக்கில் குளறுபடி ஒரு பக்கம் இருக்கட்டும். அரசு பதவியில் இருக்கும் போது பெறப்பட்ட பரிசு பொருட்கள் வருமான கணக்கில் சேரும் என்றால் நீங்கள் லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம் அதற்கான வருமான வரி மட்டும் கட்டினால் போதும் என்றாகிவிடுமே.


இந்த தீர்ப்பே 10% வரை வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கலாம் என்ற முன்பு அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது. இனி ஏற்படும் இதே போன்ற சொத்து குவிப்பு வழக்கில் அவையெல்லாம் பரிசாக வந்தது என. குற்றவாளி சொன்னால் நீதிபதி என்ன செய்வார்?

ஒரு மோசமான முன் உதாரணமாக இந்த தீர்ப்பு இருக்கின்றது. இது படிக்காத என்னை போன்ற பாமரனுக்கு கூட தெரிகிறது. சட்டம் படித்த வழக்கறிஞர்கள் தீர்ப்பை விமர்சித்தால் வழக்கு போடுவோம் என்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவது உங்களது உரிமையாக இருக்கலாம். அதுக்காக நீங்கள் வைத்தது தான் சட்டம் என சொல்ல இது என்ன சர்வாதிகார ஆட்சியா? உங்களுக்கு வரும் ஆதாயம் குறித்து நீங்கள் தவறான தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம். இதையே எதிர்கட்சி வழக்குகளுக்கு நடக்கும் போது ஏற்றுக்கொள்வீர்களா?

உங்களுக்கு தான் சூடு,சொரணை, மானம், ரோசம், வெட்கம் எதுவுமில்லை. எங்களையும் ஏன் மனசாட்சி இல்லாமல் வாழ சொல்றிங்க?

மோடியை எதிர்ப்பவர்கள் வெளிநாடு போன்னு சொன்னா மாதிரி ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் வெளிமாநிலம் போயிடுன்னு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே!

கிறிஸ்தவம் - தெரியாத உண்மைகள்.

ஜோசப்பிற்கு ஏசுவின் தாயார் மரியாள் இரண்டாவது மனைவி.
ஏசுவிற்கு சகோதரர்கள் உண்டு ஆனால் அது ஜோசப்பிற்கு பிறந்ததா அல்லது மரியாளுக்கு பிறந்ததா என குறிப்புகள் இல்லை.
ஏசு பிறந்தது டிசம்பர் 25 என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை மேலும் கிரிகோரியன் காலண்டர் படி ஏசு கிமு ஆறாம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்பது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து.
ஏசு தனது 13 வயதிலிருந்து 30 வயது வரை எங்கிருந்தார், என்ன செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.


30 வயதில் தான் ஏசு ஞானஸ்தானம் பெற்றார். அதன் பின் 40 நாட்கள் மலையில் தியானம் செய்த ஏசுவை சாத்தான் மூன்றுமுறை சோதித்தாக கூறியுள்ளார், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை.

இந்து மதத்தின் முட்டாள்தனங்களை எதிர்த்த ராஜாராம் மோகன்ராய் போலே யூத மதத்தின் முட்டாள்தனங்களை எதிர்த்தவரே ஏசு. அவர் புதிய மதத்தை தோற்றுவிக்கவில்லை.

ஏசு சிலுவையில் அறையப்பட்ட பொழுது அவரது தந்தை ஜோசப் இல்லை. இறந்துவிட்டாரா அல்லது மரியாளை விட்டு ஓடிவிட்டாரா என்ற குறிப்புகள் இல்லை.

ஏசுவை காட்டிக்கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸின் காலையும் கடைசி விருந்தின் போது கழுவியுள்ளார்.

யூதாஸின் சுவிஷேசங்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டன என்பது வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.

மூன்றாம் நாள் உயிர்ந்தெழுந்த ஏசுவை சில சீடர்கள் பார்த்ததாக சொல்லியுள்ளனரே தவிர பொதுமக்கள் யாரும் பார்க்கவில்லை.

காட்டிக்கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

இயேசு தன் வாழ்நாளில் வாழ்வியல் முறைகள் என்று எதையும் முன்வைக்கவில்லை.

நான் மீண்டும் வருவேன் என்றும் ஏசு சொன்னதில்லை.
"இயேசு வருகிறார்" ஸ்லோகம் 16 நூற்றாண்டுகளுக்கு பின்னே பிரபலம் ஆனது.

அதிக பிரிவுகள் கொண்ட மதத்தில் கிறிஸ்தவமும் ஒன்று.

பாமகவும் சாதி, அரசியலும்!

என்னிடம் கேள்வி கேட்க அன்புமணிக்கு தகுதியில்லை என்று சொன்ன ஸ்டாலினை நாம் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லாமல் பிதற்றும் மதவாதிகளை போலத்தான் பார்க்குறேன், அதே நேரம் ஸ்டாலினின் இந்த பொறுப்பதற்றதனத்தை சுட்டிக்காட்ட வேண்டிய பாமக தொண்டர்கள் மீண்டும் சாதி அரசியல் தான் செய்கிறார்கள். 

நாயுடுக்கு பதவி கொடுப்பிங்க, செட்டியாருக்கு கொடுப்பிங்க. வன்னியர்களை கண்டுக்கொள்வதில்லை என்பது அன்புமணி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தின் தேவை என்ன என்பதை நமக்கு காட்டுகிறது.  அவர்களை பொறுத்தவரை தமிழகத்தில் பெரும்பான்மையாக இருப்பது வன்னியர்களே!

ஆனால் அவர்களில் பலர் சாதியரீதியான அரசியலில் இறங்காமல் சமூகநீதிக்காக பல கட்சிகளில் இருக்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்றும் இதில் பிரதானம். கட்சிக்கு குற்றம் சுமத்துவதின் மூலம் பிரிந்து கிடக்கும் வன்னியர்களை சாதி அரசியல் செய்ய அழைப்பதே பாமகவின் நோக்கம். அதற்கு பதிலடியாக தான் வன்னியர் ஒருவரை கொண்டே அன்புமணிக்கு பதில் அளிக்க வைத்தது திமுக. அரசியலை பொறுத்தவரை ஸ்டாலின் அனுபவம் அன்புமணியின் வயது.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கார் இட ஒதுக்கீட்டை கொண்டு வரும் போதே, எப்போது எல்லோருக்கும் சமநீதி கிடைக்கிறதோ அப்போது இந்த இட ஒதுக்கீட்டிற்கு தேவையில்லையாமல் போகும் என்றார். ஆனால் ஆதிக்கசாதியினர் பிறர் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

”இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” என்பவர்களை நகர வாழ்வில் அறியாமல் பேசுகிறார்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. வாடகைக்கு வீடு-பிராமணர்கள்களுக்கு மட்டும் என்பதில் இருக்கும் பார்பனீய விசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு மட்டும் என போர்டு வைக்கலாம். பிராமணர்களுக்கு மட்டும் என்பது பிற சாதியினர் எங்களுக்கு தீட்டு, அவர்களுடம் நாங்கள் அன்னம்தண்ணி புழங்க மாட்டோம் என்று அர்த்தம்.

”யாரு சாதி பாக்குறா” வகையறாக்கள் மனதளவில் உயர்சாதிய திமிர் கொண்டவர்கள் தான். நானும் ஒரு நண்பரும் மற்றொரு நண்பரை பார்க்க போனோம்., அங்கே சாதி குறித்தான பேச்சு வந்தது. அவர் என் நண்பரிடம் சாதி கேட்டார். சொல்லியதும் பார்த்திங்களா நான் பேசிகிட்டு தானே இருக்கேன், இன்ன சாதியின்னு பேசாமலா இருக்கேன் என்னார்.

அங்கே சில,பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாலும் இங்கே தவிர்த்து சொல்கிறேன். இவர் எனக்கு பல வருடமாக நண்பர், நான் இவரிடம் ஒருநாள் கூட என்ன சாதின்னு கேட்டதில்லை. சாதி பார்க்க மாட்டேன் என்றால் என்ன சாதின்னு கேட்காமலே பழகனும். சாதி என்னான்னு கேட்டுட்டு நானும் பேசுறேன் பார்த்தியா என்பது உனக்கான மனித உரிமையை நான் உனக்கு பிச்சை போடுறேன்னு சொல்லாமல் சொல்வது. மனதளவில் நான் உயர்சாதி ஆகினும் தாழ்ந்தசாதி இருப்பதாகவும் இருப்பினும் அவர்களுடம் பேசுவதாகவும் எண்ணுவது. சந்தேகமில்லாமல் இதுவும் பார்பனீய விசம் தான் என்றேன்.

தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறை என்பது பல சாதிகளை நான்கு வகைக்குள் வகைப்படுத்தி அதன் மூலம் வழங்கிக்கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பிற்காலத்தில் கால மாற்றத்தால் சாதி பிரிவுகள் மறைந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இந்த முறை நடைமுறையில் இருந்து வருகிறது. 

ஆனால் பாமக கேட்பது சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று. அவர்கள் நிறுவ முயல்வது நாங்கள் தான் தமிழகத்தில் பெரும்பான்மை சாதிகள் என்பதே.

சமீபத்தில் நாங்கள் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்று மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக செய்து கொண்டிருப்பது என்ன? வந்த நாளில் இருந்தே மதமாற்றம், யார் எவ்ளோ குழத்தை பெத்துக்கனும். யார் என்ன சாப்பிடனும் என்பதாகவே இருக்கிறது.

ஆக சாதி அரசியல் செய்து வரும் பாமக ஆட்சியை பிடித்தால் என்ன செய்யும்? ஏற்கனவே பெரும்வாரியாக வன்னியர்கள் இருக்கும் பகுதியை பிரித்து தனி தமிழ்நாடு கேட்கிறார்கள். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் அணித்து எங்கள் பெண்கள் மயக்குகிறார்கள் என்று அவர்கள் பெண்களையே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்.

பாமக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும். என்னை போன்ற சாதி மறுப்பாள்ர்களுக்கும் சமநீதி கிடைக்குமா? நாங்கெல்லாம் சாதி பார்க்கம்மாட்டோம் என்பார்கள். அதுக்கு தான் “யாரு சார்  சாதி பாக்குறா” வின் உள்ளார்ந்த பார்பனீயதனத்தை மேல விளக்கியுள்ளேன்.

சமூகத்தில் மாற்றம் தேவை. நிச்சயமாக திமுகவும், அதிமுகவும் மட்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பது மக்களுக்கு ஆபத்து தான். அதற்காக சாதி அரசியலை கையில் எடுத்தது பேராபத்து.

எப்படி பாஜக இந்தியா இந்துக்களுக்கே என்ற விசத்தை விதைக்கிறதோ அதே போல் பாமகவும் தமிழகம் வன்னியர்களுக்கே என்ற விசத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மதகலவரத்தை உருவாக்க பாஜகவும். தமிழகத்தில் சாதிகலவரத்தை உருவாக்க பாமக தான் முக்கிய காரணமாக இருக்கும்.

சாதி அரசியலை பாமகவால் கைவிடவும் முடியாது. நான் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வழக்கம் போல் பதில் தெரியாத  மதவாதிகள் போல் இவர்களும் எதாவது உளரி சொல்வார்கள் :)

வழக்கமாக நடபப்து தானே!

!

Blog Widget by LinkWithin