உலக பொருளாதாரம்!

சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக்ஸ் என்பதை வைத்தே கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் எப்படி டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய்க்கு வரும்னு உளரினாங்களோ அப்படி தான், ட்ரம்பிற்கும் விளம்பரம் செய்தார்கள்
மெக்ஸிகோவுக்கும், வட அமெரிக்காவுக்கும் குறுக்கே சுவர் கட்டுவேன் என்றது. பல முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை மாற்றியது, உலக நாடுகளை வம்பிழுத்து கொண்டே இருந்தது போன்றவவை நிச்சயம் தங்கம் விலை உயர்ந்தும்னு என்னை போல் பொருளாதாரத்தை கவனித்து கொண்டுயிருப்பவர்களுக்கு தெரியும்.
இந்திய பொருளாதாரம் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கையில் இருந்தாக நினைத்து கொண்டியிருக்கிறார்கள் அநேக பாஜகவினர், அது உண்மையில் கார்ப்ட்ரேட் கையில் இருக்கிறது. பாஜக தலைவர்கள் அறிக்கை விடுவார்களே தவிர அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தீர்மானிப்பது கார்ப்ட்ரேட் கம்பெனிகள் தான்.
போக அமெரிக்கா நம்மிடம் ஈரானில் கச்சா எண்ணைய் வாங்கக்கூடாது என சொன்னதற்கு மோடி தலை ஆட்டியது இந்திய பண மதிப்பை மேலும் மேலும் ஆழமாக குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.
வலதுசாரி சிந்தனை என்பது தனிமனித துதியை ஆதரிப்பது. முதலாளித்துவ சித்தாந்தத்தை பின்பற்றுவது. நல்லா கவனிங்க, டீவி விவாவத்தில் வலதுசாரி ஆதரவாளர் எல்லாரும் பாஜகவுக்கு ஆதரவா தான் பேசுவாங்க,அவர்களுக்கு அடிமட்ட மக்கள் மேல் துளியளவும் அக்கறை இல்லை

நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...

நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு

சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்தார்கள், அதற்கு காரணம் அதில் இரண்டு வங்கி நட்டத்தில் இயங்கியது. அதிலானென்ன தப்புன்னு கேட்கலாம். விவரம் புரிந்தவர்களுக்கு தெரியும், இந்திய அளவில் அதனால் எத்தனை வேலை இழப்புகள் ஏற்படும்னு

சமீபத்தில் அரசு பொது நிறுவனமான BSNL சம்பளம் கொடுக்க காசில்லாமல் நின்றது, அந்த சமயத்தில் தான் பொது வெளியில் தெரிய வந்தது, BSNL போல் சுமார் 8 அரசு பொது நிறுவனங்கள் வரை சம்பளம் கொடுக்க காசு இல்லாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது என்பது.

நேற்று வந்த செய்தி BSNL தனது பணியாளர்கள் 54000 பேரை கட்டாய ஒய்வு கொடுத்து வெளியே அனுப்புகிறது. அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியை பெற நடையா நடக்கனும், ஏன்னா போலியோ செட்டுமருந்து வாங்கவே கஜானாவில் காசு இல்லை.

பிறகு எப்படி விவசாயிகளுக்கு மட்டும் மோடி வருடம் 2000 ரூபாய் தரப்போறார். அது மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக செய்யும் மோசடி என்பதை அறியாதவனும், மோடியின் மலம் கூட உண்ண தகுந்தது என் நம்பிக்கொண்டிருக்கும் சங்கி மட்டுமே அதிலும் ராமர் கோயில் வந்தால் இந்தியா வல்லரசாகி விடும் என சத்தியம் செய்பவன் மட்டுமே அதை நம்புவான்

இன்று இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனம் லக்சுமி விலாஸ் வங்கியை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு நிறுவனத்தை ஒரு நிறுவனம் வாங்குவது சகஜம் தானே என்பதை ஒரு பொருளாதார நிபுணன் ஒத்துக்கொள்ள மாட்டான், பெரும் திமிங்கலம் ஒன்று எல்லா சிறு மீன்களையும் சாப்பிடுவதற்கு சமம்.காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சாத்தியமா? அதனால் தேசம் வளர்ச்சி பாதையில் செல்லுமா?
நல்ல கேள்வி தான்.. மாட்டுக்கு ஆதார் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? சாமியார்களுக்கு பென்சன் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? நல்ல கல்லூரிகளையும், சுகாதார கூடங்களையும் அமைக்காமல் ராமர் கோவில் கட்டுவது தான் தேசத்தின் வளர்ச்சியா? 3000 கோடியில் சிலை அமைப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா?

அந்த கூமுட்டைதனத்தை காங்கிரஸ் செய்யாது என நம்புவோம். ஆனால் காங்கிரஸ் யோக்கிய கட்சி இல்லையே. அதனால் தான் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக போன்றோர் காங்கிரஸையும், திமுகவை விமர்சித்துக்கொண்டு வருகிறோம், சரிப்பா காங்கிரஸ் வேண்டாம், சீமானோ, கமலோ, டிடிவியோ பிரதமர் நாற்காலியில் உட்கார முடியுமா? அவர்களுக்கு ஆதரவு என்று இந்தியா முழுக்க சில்லறைகளை சிதறவிட்டு கொண்டிருக்கிறார்களா?

நீங்கள் தான் சங்கிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறீர்கள். எங்கள் கொள்கை தான் பெருசு அதுவே உயிர் என மார் தட்டிக்கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் பெர்பெக்‌ஷனிசன் என்பது ஒரு மனநோய். சங்கிகள் கூட திருந்திவிடுவார்கள் போல., உங்கள் மனநோயை எப்படி சுகப்படுவதுன்னு எனக்கு தெரியல. நாளைக்கு நம்ம புள்ளகுட்டிங்க தெருவில் நிற்கும் போது உண்ர்வீர்களா இல்ல சீமானோ, கமலோ, டிடிவியோ உங்களுக்கு கோமணம் வாங்கி தருவார்கள் என நம்புக்கொண்டுயிருப்பீர்களா?

உங்கள் மனநோயை நீங்களே குணபடுத்திக்கொள்வது மட்டுமே ஒரே வழி. பாஜக தேசத்தை பாழ் செய்துவிட்டது, பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது. நம்மை கே.ஜி.எஃப் படத்தில் வரும் அடிமைகளை போல் நடத்த கார்ப்ரேட்டுகளை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறது. இனியும் இதன் அபாயத்தை நீங்கள் உணராமயிருந்தால். உங்கள் மனநோயை குணப்படுத்தவே முடியாமல் போகும்...

என்ன நடந்தால் நமக்கென்ன

ஒருவர் எதிர்மறையாக சிந்திப்பதை அவர் பாதுகாப்பாக கருதுவார் என்பதால் அது அவர் விரும்பம்னு விட்டலாம்., ஆனால் அந்த எதிர்மறை சிந்தனையை நம் மீது திணிக்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியும், பரிதாபமும் ஏற்படும். அவள் ஏன் அவன் கூப்டதும் போனா என்பது கூட தன்னை ஒழுக்கவாதி வட்டத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மனநிலை. போலயே சாதி வேண்டும் என்பவர்கள், மதம் வேண்டும் என்பவர்கள். கடவுள் நம்பிக்கையாளர்களை கூட விவாதத்தில் புரியவைக்க முடியும், குறைந்த பட்சம் 1%வது யோசிப்பார்கள்

ஆனால் இந்த எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் நம்மையும் சேர்த்து குழிக்குள் இழுப்பார்கள். பெரிய இவனாட்டும் எழுதுறியே நீ உலகை மாத்தியிருவா?  நீ எழுதினால்
சாதி ஒழிஞ்சிருமா?
மதம் அழிச்சிருமா?
கடவுள் இல்லைனு ஆயிருமா?
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துருவா?
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திருவா?

உனக்கு என்ன தாண்டா பிரச்சனை? என் எழுத்து மொக்கைன்னு நினைக்கிறியா, ஆமா மொக்கை தான், எல்லாரும் 2 வரி எழுதி 200 லைக்ஸ் வாங்கினா நான் 200 வரிகள் எழுதி 2 லைக்ஸ் வாங்குவேன். 5000 ஃப்ரெண்ட்ஸ். 10000 பாலோயர்ஸ் இருக்காங்க, ஏன் அவங்கல்லாம் படிக்கலன்னு நான் கவலை படலையே, உங்கிட்டயும் வந்து ஏண்டா என் கட்டுரைய படிக்கல, ஏண்டா லைக் போடலன்னு நான் கேட்க போறதும் இல்லயே.நான் எழுதுவது ஒரு முயற்சி, ஒரு முன்னெடுப்பு. என்னால் இமயமலையை நகர்த்த முடியாது, ஆனால் அதில் இருந்து ஒரு சின்ன கல்லை உடைக்க முடியும். கண்டிப்பாக முடியும். நான் தெரியாதுன்னு சொல்லுவேன், ஏன்னா அது எனக்கு உண்மையிலயே தெரியாது., ஆனா முடியாதுனு சொல்ல மாட்டேன், ஏன்னா என்னால் கத்துக்க முடியும், உலகில் யாரோ ஒருவரால் முடிகின்ற விசயம் நிச்சயம் என்னாலும் முடியும்

நான் எழுதி விட்டு, அதன் விளைச்சலை ரசித்து அறுவடை செய்ய அமர மாட்டேன், வேற என்ன எழுதலாம்னு யோசிக்க போயிருவேன். என் எழுத்து இந்த உலகில் 0.00000001% மாற்றத்தை ஏற்படுத்தினாலும் போதும், என் பேராசை ஒன்றே ஒன்று தான், நான் இந்த பூமியை விட்டு செல்லும்  பொழுது என் வருகையை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டாம், என் வருகை ஒரு சாதாரண மனிதனை போல் மறக்கப்பட கூடாது.

நீ முடியாது முடியாதுன்னு இப்படியே உட்காந்துகிட்டு இரு. நான் உருண்டாவது நகர முயற்சிப்பேன், நகர விரும்பும் நண்பர்கள் என்னுடன் பயணிப்பார்கள். என் எழுத்து சரியோ தவறோ, உண்மையோ பொய்யோ, ஆனால் எதையுமே செய்யாமல் இருப்பதற்கு அதையாவது செய்வது தான் என் பிறப்புக்கு நான் செய்யும் மரியாதை.

எங்கே செல்கிறது உலகம்?????

ஈகோவை தமிழ்படுத்தினால் நான் என்ற அகங்காரம் என்று புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் பல மருத்துவர்கள் அதன் உண்மையான அர்த்ததை புரிந்துகொள்ளவில்லை. உலகில் எல்லா மனிதர்களுகும் ஈகோ உண்டு. நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என்பதாக காட்ட அந்த உள்ளுணர்வு தூண்டிக்கொண்டே இருக்கும். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் எனக்கு அவனை தெரியும், இவனை தெரியும் என பேசுவதை கவனித்ததுண்டா. அதுகூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என காட்டுவது தான். நான் எந்த பழக்கமும் இல்லாத ஒழுக்கவாதியா காட்டிக்கொள்வதும் ஈகோ தான்.

மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை என சொன்னது. ஈகோ என்றாலே கோவமாக புரிந்துக்கொள்வது தான். ஆனால் ஈகோ அப்படியில்லை. அதீத அன்பில், அதீத காதலும் கூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன்/ள் என காட்டிக்கொள்ள முடியும். பெரும்பாலும் ஆண்கள் உடலாலும், பணத்தாலும், போட்டியிலும் தன் ஈகோவை காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு சில ஆண்கள் மட்டுமே அன்பில் தங்கள் ஈகோவை காட்டினார்கள், ஆனால் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை அழகு படுத்தி கொள்வதிலும்,அன்பிலும், காதலிலும் மட்டுமே தங்கள் ஈகோவை காட்டினார்கள். வேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனலாம். ஆண் எங்கேயோ, யாரிம் ஈகோவின் முன் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தன் ஈகோவையை பெண்ணிடம் காட்டினாலும் அவள் மாறாக காதலையே காட்டுவாள்

நாகரிகம் வளர வளர பொருள்முதல்வாத சிந்தனையில் இருந்து மனிதன் கருத்துமுதல்வாத சிந்தனைக்கு மாறினான். மனிதர்களில் ஏற்றதாழ்வு இல்லை என்றான். வர்க்கபேதத்தை சாடினான். அன்பே பிரதானம் என வாழ நினைத்தவர்கள் கருத்தியல் சிந்தனையை ஏற்று கலை, இலக்கியம், அறிவியல் என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நம்மால் சமூகத்துக்கு எதாவது செய்ய முடியுமா என யோசித்தார்கள். தங்கள் ஈகோவை விட மறுத்த கூட்டம், சாதி, மதம், வர்க்கம் என ஏற்றதாழ்வுகளில் வன்முறையை செலுத்தி தங்கள் ஈகோக்கு தீனி போட்டது

தனக்கு சமமாக அமர்வதா என்று இம்மானுசேகரன் என்பவர் கொல்லப்பட்ட கதை உங்களுக்கு தெரியுமா? சாதியம் என்னும் ஈகோ. உன் மதம் என்ன அவ்ளோ பெருசா என நாடு முழுவதுமே சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது. அதே வக்கிர ஈகோ தான் பெண்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆப்ஃப்ட்ரால் ஒரு பொம்பள எனக்கு ஐடியா கொடுக்கிறியா என்பதில் ஆரம்பித்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்துதல் வரைக்கும் தன் ஈகோவை காட்டும் முயற்சி தான்.

நான் எழுதும் பொழுது சகமனிதனை மனிதனாக மதியுங்கள் என்று எழுதுவேன். பெண்ணை மதின்னு எழுத மாட்டேன், அனைவர்களை மனிதர்களாக பார்க்க என்னால் முடிகிறது. இங்கே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே நாம் குழந்தைகளில் இருந்தே துவங்குகிறது. அவர்களுக்கு ஏற்றதாழ்வுகளை ஊட்டி விடுகிறோம். வர்ஷாவுக்கு 7.30க்கு கிளாஸ் முடியும், பெண் குழந்தைகளை பெற்றோர் வந்து கூட்டி செல்லனும், எல்லா குழந்தைகளையும் பெற்றோர் வந்து கூட்டி செல்லனும் என்பதே சரி, இந்த குழந்தை பருவத்திலே ஆணை உயர்த்தி விட்டால் அவன் பெண்ணை வீக்கர் செக்ஸா தானே பார்ப்பான்

பெண் குழந்தைகள் வெளியும் செல்லும் பொழுது உடை நேர்த்தியை கவனிக்கும் என்பதை பெற்றோர்கள் அதே கருத்தியலை ஆண் குழந்தைகளுக்கும் காட்டுகிறீர்கள். என் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் சாதி,மதம் என்ற இடத்தில் கோடுகள் தான் இருக்கும். இதனால் எதிர்காலத்தில் இடஒதுக்கிடு பெறுவதில் சிக்கல் வரும் என என் நண்பர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் சாதி,மத படிநிலைகளில் அவர்களை அமர வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு எல்லா சாதியிலும் நண்பர்கள் உண்டு என்பவன், எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் உண்டு என்பவன் உண்மையில் சமநிலையை உணரவில்லை, நண்பன் என்றால் நண்பன் மட்டுமே.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு அமைக்க தீர்மானிக்கிறீர்கள் என சிந்தித்ததுண்டா? நிம்மதியான வாழ்வா அல்லது வசதியான சொகுசான வாழ்வா? உண்மையில் சொகுசான வாழ்வுக்கு தான் அவர்களை பணம் சம்பாரிக்கும் இயந்திரமாக மாற்றிக்கொண்டியிருக்கிறீர்கள். அந்த போட்டியில் வர்க்கபேதத்தில் சிக்கி வசதி படைத்தவன் தன் ஈகோவை காட்ட வசதி இல்லாதவன் தன் ஈகோ தன்னை விட இயலாதவனிடம் போய் காட்டுவான். உண்மையில் இங்கே நடக்கும் எல்லா செயல்களும் பட்டாம்பூச்சியின் இறக்கை விளைவு தான். ”எல்லா தேவைகளுக்கு பின்னால் ஒரு காரணமும், எல்லா விளைவுக்கு பின்னால் ஒரு செயலும் இருக்கும்”

சாதிய படுகொலைகள், மதபடுகொலைகள், கூட்டுபாலியல் வன்முறைகள் அனைத்துக்கு பின்னும் பொருள்முதல்வாத கருத்தியல் சிந்தனையே உள்ளது. இது என் இடம், இது என் சொந்து, நீ என் அடிமை என்பதின் வெளிப்பாடே இத்தனை வன்முறைகளுக்கும் காரணம். நான் பிரச்சனைகளுக்கு தற்காலிய தீர்வை தேட மாட்டேன். பிரச்சனையின் அடி ஆழம் வரை யோசிப்பேன். இந்த மனிதன் வாழ ஒரே வழி பொதுயுடமை என்ற கருத்துமுதல்வாத சிந்தனை மட்டுமே

முதல் ரேங்க் எடுன்னு என படிக்க சொல்லாதீர்கள், இதில் எதுவோ இருக்கு அது என்னான்னு தெரிச்சுக்கோன்னு சொல்லுங்க.கற்பதை ஊக்கப்படுத்துங்கள் எந்த புத்தகமாக இருந்தாலும், ஒரு பூவை ரசிக்க கற்றுக்கொடுங்கள், ஓவியம் வரைய கற்றுக்கொடுங்கள், நடனம் ஆட கற்று கொடுங்கள், இயற்கையும் நாமும் வேறு வேறு அல்ல என கற்றுக்கொடுங்கள். இல்லாதவருகும், இயலாதவருக்கும் நாம் செய்வது உதவி அல்ல, அது மனிதத்தின் கடமை என கற்றுக்கொடுங்கள். நம் ஈகோவை நம்மால் ஒழிக்க முடியாது., ஆனால் நான் உன்னை விட அன்பானவன் என்பதில் கூட நம் ஈகோவை வெளிப்படுத்தலாம்

கிட்டதட்ட இரண்டரை லட்சம் வருடங்களாக இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருப்பது ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்ற மனிதர்களாகிய நாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அடுத்த பத்தாயிரம் வருடத்தில் மொத்த மனித இனமே அழித்து விடும் என்பதாகவே என் உள்ளுணர்வு உள்ளது. மனிதர்களின் போட்டி அரசியலில், வர்க்க பேதத்தில் தன் ஆழ்மன தூண்டுதலால் இந்த பூமியையும் அழிக்க போகிறோம். நம் சந்ததிக்கு கரிதுகள் மட்டுமே மிஞ்சம்.

மாறுங்கள். காதலாலும், அன்பாலும் உங்கள் ஈகோவை காட்டுங்கள்
மனிதம் வளர்ப்போம்


!

Blog Widget by LinkWithin