பரிணாமம் - கோரை பல்

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

பரிணாமம் உண்மை என்பதற்கு சமகாலத்தில் நம் கண் முன் இருக்கும் முக்கியான ஆதாரம் கோரை பற்கள். அவைகள் வேட்டையாடும் பாலூட்டி வகைகளில் காணப்படும். மனிதனுக்கு மறைந்து விட்டாலும் அசைவ விரும்பிகள் கோரை பல் இருந்தற்கான தடயத்தை காட்டுவார்கள். அவர்களே மதம் தொடர்ப்பான கேள்விகளுக்கு பரிணாமம் பொய். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பார்கள்.

விலங்குகளில் இரண்டு வரை உள்ளன, ஒன்று வேட்டையாடுபவை, இன்னொன்று வேட்டையாடப்படுபவை. வேட்டையாடும் விலங்குகளுக்கு கோரை பற்கள் ஒரு ஆதாரம் என்றால் இன்னொரு ஆதாரம் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியை பார்க்கும் தன்மை. இது வேட்டையாடும் விலங்குகளுக்கு இரை இருக்கும் தூரத்தை சரியாக கணக்கிட உதவுகிறது. அப்படி வேட்டையாடும் விலங்குகளில் மனிதனும் ஒருவன். அவனுக்கும் இரண்டு கண்களில் ஒரு காட்சியை தான் பார்க்க முடியும்.நமக்கு பல் வரிசையில் மேல் நடுவில் இருக்கும் இரண்டு பல் எலி பல் போன்று இருக்கும். அதற்கு இரு புறமும் ஒவ்வொரு பல். அதற்கு அடுத்து இருப்பது தான் கோரைபல். வேட்டையாடும் விலங்குகள் இரையை குத்தி கிழிக்க கோரைபல் உதவுகிறது. பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் ஹோமோ எரக்ஸ்டஸ் காலத்தில் இருந்தே கல், கம்பு போன்ற ஆயுதங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான்.

பல ஆயிரம் வருடங்களாக நாயும், பூனையும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டாலும் தன் எதிர்ப்பை காட்ட தனக்கு பெரிய பல் இருப்பதாக உறுமி காட்டுகிறது. மறைந்து தாக்க பழகிய மனிதனுக்கு அந்த தேவையும் இல்லை. இரையை குத்தி கிழிக்க ஆயுதங்கள் செய்துகொண்டான். மெல்வதற்கு மட்டுமே பற்கள் போதும் என்ற நிலை வந்த பிறகு அவனது கோரை சிறிது சிறிதாக மறையதொடக்கியது. அதாவது அதன் நீளம் குறைய தொடங்கியது. ஹோமோ எரக்டஸ் காலத்து மண்டையோடுகளில் அந்த பற்கள் தற்பொழுது இருக்கும் அளவை விட பெரிதாக இருந்தது பரிணாமத்திற்கு முக்கிய .சாட்சி.


நாய், பூனைகள் வேட்டையாடுவதை நிறுத்திவிட்டால், அதற்கு உணவு இருக்கும் இடத்திலே கிடைக்கும் பட்சத்தில் அதற்கும் கோரை பற்கள் மறைய தொடங்கலாம். அதற்கு ஆகும் காலத்தை விட நம் கண் முன் இன்னொரு விலங்கு அதன் கோரை பற்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கியிருக்கிறது. கரடி இனத்தை சேர்ந்த கோலோ கரடி தான் அது.

கரடி வகைகள் அனைத்தும் வேட்டையாடும் விலங்கு தான். அதன் கண் அமைப்பு மற்றும் கோரை பல் அதை உறுதி செய்கிறது. ஆனால் சீனா பகுதிகளில் வாழ்ந்த கோலா கரடி தன்னை காப்பாற்றிக்கொள்ள மூங்கில் மரத்தில் தஞ்சம் புகுந்தது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அதன் மூங்கில் குருத்துகளை உணவாக எடுத்துக்கொண்டது. தற்சமயம் கோலா கரடி முழுக்க முழுக்க மூங்கில் குருத்துகளை மட்டுமே சாப்பிடும் சைவ பட்சிணி. ஆனாலும் கோலோ கரடிக்கு கோரை பற்கள் உள்ளன. கோலா கரடி சைவமாக மாறி சில நூறு அல்லது ஆயிரம் வருடங்கள் இருக்கும் எங்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் கண்டெடுக்கப்பட்ட கோலா கரடி படிமங்கள் தற்பொழுது இருப்பதை விட கோரை பற்கள் பெரிய அளவில் உள்ளன. இன்னும் சில ஆயிரம் வருடங்களில் கோலா கரடி மனிதனை போலவே தன் கோரை பற்களை இழந்து விடும்.மனிதனுக்கு கோரை பற்கள் இல்லை. அவனது உணவு சைவமே என்பது சைவ பிரியர்கள் செய்யும் தற்காப்பு வாதம். மனிதன் தன் அறிவு திறனால் வேலையை சுலமாக்கிக்கொள்ளவும், தனக்கு காயம் ஏற்படாமல் காத்துக்கொள்ளவும் தான் ஆயுதம் செய்தான். கோரைபற்களின் தேவையின்மை அதை மறைய வைத்தது. இது பரிணாமத்திற்கு ஒரு சான்றே ஒழிய மனிதர்கள் சைவ பிராணிகள் என்று அர்த்தமல்ல.

மனிதர்களின் இந்த அறிவு வளர்ச்சிக்கு காரணம், சைவம், அசைவம் இரண்டையும் சரி விகிதத்தில் எடுத்துக்கொண்டதே. ஆராய்ச்சி குறிப்புகள் விவசாயம் கண்டுபிடுத்து 12000 வருடங்கள் தான் இருக்கும் எங்கிறது. மனிதனின் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியும் அந்த காலகட்டத்தில் தான் ஆரம்பிக்கிறது. இந்த உலகத்தை சுற்றி நன்றாக பாருங்கள். சைவம் மட்டுமே சாப்பிடும் விலங்கு அப்படியே இருக்கிறது. அசைவம் மட்டுமே சாப்பிடும் விலங்கும் அப்படியே இருக்கிறது. மனிதன் தவிர்த்து அசைவமும், சைவமும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ளும் விலங்குகள் குரங்கு, நாய், பூனை மனிதனின் பழக்கத்தை எளிதல் புரிந்துக்கொள்ளும் அவளுக்கு அறிவு பெற்றுள்ளது. குரங்குகள் ஆயுதங்கள் பயன்படுத்துகின்றன, தமக்குள் மொழியை உருவாக்கிக்கொண்டன

கோரை பற்களை இழந்தாலும் நம் மூளை வளர்ச்சிக்கு தேவையான புரதம் மாமிசத்தில் உள்ளது என்பது நம் கண் முன்னால் காண்கிறோம். அசைவம் தவிர்ப்பது நம்மை நாமே அறிவுபூர்வமாக மந்தமாக்கிக்கொள்வது. அசைவம்னா மாமிசம் தான் சாப்பிடமும்னு இல்ல. முட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மீன் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையை மாற்றி அமைத்து உங்களை நீங்களே பலவீனம் ஆக்கிக்கொள்ளாதீர்கள்

குவியல் (25.05.17)

Banyan என்றால் ஆங்கிலத்தில் ஆலமரம் என்று அர்த்தம். உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் பிரபலமான பான்யன் பெயரே பனியன் என்று நிலைத்து விட்டது என்று சில தகவல்களில் எழுத ஆசை தான். ஆனா இது நானா ஜிந்தித்தது. ஜெராக்ஸ், பிஸ்லரி வாட்டர் மாதிரி இதுவும் இருக்கலாம்னு

பிஸ்லரி வாட்டர் இப்ப வருதான்னு தெரியல. மினரல் வாட்டருக்கு அந்த பெயர் நிலைக்க காரணம் அந்த கம்பெனி பெயர் தான். இன்னொரு விசயம் கவனிச்சிங்கலா, அந்த மினரல் வாட்டல் பாட்டலில் இப்பல்லாம் பேக்டு ட்ரிங்க் வாட்டர்னு தான் எழுதுவாங்க. உண்மை தான். ஆற்று தண்ணி பிடிச்சு வச்சா அதில் ஆறு நாளில் புழு வரும். கேன் வாட்டரில் வராது. அவ்ளோ ஏன். வீட்டில் மீன் தொட்டி இருந்தா அதை மினரல் வாட்டரில் விட்டு பாருங்களேன்.

மீன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும், வாள மீன் இருக்குங்கிறான், சுறா மீன் இருக்குங்கிறான். ஜாமின் மட்டும் இல்லையாம். எந்த வித விசாரணையும் இல்லாமல் பராமரிப்பு செலவு அதிகமாகுதுன்னு வைகோன்னு ஜாமின் கொடுத்துருக்கு நீதிமன்றம். இந்தியாவில் தண்டனை கைதிகளை விட விசாரணை கைதிகள் தான் அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதில் பலர் ஜாமின் எடுக்க முடியாதவர்கள், அவர்களை பரமாரிக்க மட்டும் அரசிடம் பணம் இருக்கா?

அரசா, அது சரத்குமார் நடிச்ச படம் தானே என்று கேட்கிறார்கள் தமிழ்நாட்டில். இல்லைங்க இந்த கல்வி கொள்கைகள்லாம் மாத்துறாங்களே, நல்லா தானே செயல்படுது என்றால். அட கிறுக்கா கிறுக்கா, மத்திய அரசின் ஆட்டலுக்கு ஆடும் கூட்டத்தை பொம்மைன்னு தான் சொல்லனும். அரசுன்னு சொல்றன்னு சண்டைக்கு வர்றாங்க.

சண்டைன்னு சொன்னதும் ஞாபகம் வருது. ராஜிவ் நினைவு நாள் அன்று நான் போட்ட பதிவுக்கு உளுந்தம்பருப்புகள் சுடு எண்ணையில் விழந்த கடுகாய் வெடித்தார்கள். வழக்கம் போல ங்கோத்தா, ங்கொம்மா தான். இதனால் தான் நான் ரசிகன், தொண்டன், பக்தன் மூவரையும் ஒரே கேட்டகிரியில் வச்சிருக்கேன். ரஜினியை திட்டினா புரட்சி வெடிக்குமாம்

புரட்சி என்ற வார்த்தையும் அர்த்தமும் தமிழ்நாட்டில் கேவலபட்டதை விட வேறு எங்கேயும் ச்சீ பட்ருக்காது

ஒரு ஜோசியகார நண்பரின் பதிவில், சார் டெல்மீ சார், ப்ளீஸ் டெல்மீ சார்னு பலர் கெஞ்சுவதை பார்த்து நாமும் ஜோசியகாரர் ஆகலாமான்னு எண்ணம் வந்தது. யோசிச்சு பார்த்தேன், அதான் தினம் பத்து நாய்க்கு பிஸ்கெட் போடுறமே, இது வேற எதுக்குன்னு எண்ணத்தை கைவிட்டேன்

எல்லோர் வாழ்விலும்
மீட்டிடமுடியா பக்கங்கள்
நிறைய உண்டு
எழுதிட முடியா
பக்கங்கள்
என எதுமில்லை!


ஆன்மிகம்!

ரொம்ப நாளாவே இதை பற்றி எழுத சொல்லி யாராவது கேள்வி கேட்பாங்கன்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். சமீபத்தில் தான் ஒருவர் ஆன்மிக குருகள் பற்றி எழுதசொல்லி கேட்டார். நான் படித்த பழைய ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொண்டவர்களே சமகாலத்தில் எழுத்தாளர் ஏகாம்பரம், கவிஞர் காத்தவராயன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டது தான் இருக்கிறார்கள். இதே சமகாலத்தில் சுவாமி, சத்குரு, பரமஹம்சர், பாபா என பட்டம் சூட்டிக்கொண்டவர்கள் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை.

 நான் முன்னோர்கள் எல்லார் மூடர்கள்னு சொல்லல, ஆனால் மூடதனத்தை சொல்லி கொடுத்தவர்களை தான் முன்னோர்கள் என கொண்டாடுகிறீர்கள் என சாடுகிறேன்.  ஆன்மிகத்திற்கும் மதத்திற்கும் அணுவளவும் சம்பந்தம் இல்லை. ஆன்மிகவாதிகள் உலகெங்கும் இருந்தனர், இருக்கிறார்கள். அவர்களை நம் வசதிக்கு ஏற்றார்போல் அழைத்தோம். சித்தர்கள், துறவிகள், ஜென், பைத்தியகாரன் இப்படி எந்த பேரு வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நாம் பொது பெயராக சித்தர் என்று வைத்துக்கொள்வோம்.

சித்தர்கள் பிரபஞ்சவியலில் இரட்டை தன்மையை கடந்தவர்கள்,  நல்லது/கெட்டது, இன்பம்/துன்பம் போன்ற இரட்டை தன்மைகளை சொல்றேன். ஒருவரின் தோற்றத்தை கொண்டு சித்தராக உருவகபடுத்தமுடியாது. உங்களுக்கும் அவர்களுக்கும் சின்ன வித்தியாசமே. அவர்கள் பயம் கடந்தவர்கள், நீங்கள் பயத்திலேயே வாழ்பவர்கள். மரணம் என்பதை தடுக்கமுடியாது என்பது தெரிந்தும் அதை தள்ளிப்போட மனிதன் லோல்படுவது மரண பயத்தால் தானே.

பயமே உங்களின் அனைத்து தெளிவுக்கும் தடையாக உள்ளது. உங்களுக்கு செக்ஸ் பற்றி பேச பயம், ஆம் அவளை காதலிக்கிறேன்னு சொல்ல பயம், ஆம் நான் தண்ணி அடிப்பேன்னு சொல்ல பயம்.  பேசவே பயப்படும் நீங்கள் எங்கனும் அதை அறிந்துக்கொள்ள போகிறீர்கள்.  உங்களுக்கு ஏற்கனவே உருவாக்கிக்கொண்ட மனதடைகளை உடைக்காமல் உங்களால் உண்மையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சித்தர்கள் பிரபஞ்சத்தின் பொது விதியை புரிந்தவர்கள். அது இங்கே எதுவும் நிலையில்லாதது, உங்களால் எதையும் நிலைக்க வைக்கவும் முடியாது. இந்த சூத்திரத்தை உணர்ந்தவர்களில் தமிழ் சித்தர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கடவுள் என்ற வார்த்தையை அவர்கள் தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் சொன்ன கடவுள் என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாதவர்கள். உங்களுக்குள்ளே சக்தி இருக்கு. அது குண்டிலினில் தெரியும், குஷ்பு இட்லியில் தெரியும் என்று கல்லா கட்டினார்கள். அவர்களை தான் பெரியார் கடவுளை(தவறாக சாமியென்று) கற்பித்தவன் முட்டாள் என்றார்.

கட உள் என்பது ஒரு தன்மையை/பதிலை/கருத்தை “கட”ந்து “உள்”ளே செல் என்று அர்த்தம். தொழில் மேன்பாட்டியலிளில் ஒரு சூத்திரம் உண்டு. FIVE Q என்று அதற்கு பெயர். அதாவது ஐந்து கேள்விகள். எந்த பிரச்சனைக்கும் ஐந்து கேள்வி கேள். பிரச்சனையின் வேரை அறியலாம். உதா: பொருள் ஏன் டெலிவரி ஆகல, தயாரிப்பு இல்ல. ஏன் தயாரிப்பு இல்ல. மிசின் ரிப்பேர், ஏன் மெக்கானிக் சரி செய்யல, பேஃர் பார்ட்ஸ் இல்ல. ஸ்டோர் கீப்பர் அதை பார்க்காம என்ன பண்றான்? ஆக கேள்விகள் யாரோ ஒருவரின் தவறை சரியாக சுட்டிக்காட்டுகிறது. நாம் நோகாமல் நுனிபுல் மேய்கிறோம். கண்ணுக்கு நிற்பவன் மேல் பழியை தூக்கிபோட்டு அப்போதைக்கு பிரச்சனையை முடிக்கிறோம். ஆன்மிகத்துக்கும், தொழிலுக்கும் என்னடா சம்பந்தம்னு முழிக்கிறிங்களா

சரி ஒரு உலோகம்னு வச்சுக்குவோம், அதை “கட”ந்து ”உள்”ளே போனால் தனிமம், அதையும் கடந்தால் எலக்ட்ரான், புரோட்டான், குவார்க்ஸ். இதுவும் புரியலையா வாங்க உங்க வழிக்கே வர்றேன்.
இங்கே நான் இருக்கிறேன். என்னை கடந்து உள்ளே சென்றால் என் பெற்றோர். அவர்களை கடந்து கடந்து சென்றால் இறுதியில் இந்த உலகை படைந்தது யார் என்று கேள்வி நிற்கும். நீங்கள் அங்கேயே நிற்பீர்களானால் நீங்கள் மத வாதி. உங்களை பொறுத்தவரை இந்த உலகம் கர்த்தர் அல்லது அல்லா அல்லது பிரம்மனால் படைக்கப்பட்டது. ஆனால் ஆன்மிகம் என்பது அதையும் “கட”ந்து “உள்”ளே போ எங்கிறது.

மன தடைகளை உடைத்திருதால் மட்டுமே இதை தாண்டி உங்களால் உணர முடியும். முன் முடிவுகள் எந்த பயனும் தராது. அந்த உணர்தலில் the thing came from nothing என்பதை உணர முடியும். இதை வார்த்தையாக எளிமையாக சொல்லிவிடலாம். அந்த பிரபஞ்ச விரிதலை கற்பனையில் காணும் போதே ஆயிரம் ஆர்கஸத்துக்கு சமமான பேரின்பம் மண்டையில் உணர முடியும்.

ரகசியத்தை அறிந்த சித்தர்கள் இரண்டு தன்மையாக செயல்பட்டார்கள், பலர் எதையும் நம்மால் மாற்ற முடியாது, இந்த பிரபஞ்சம் ஒழுங்கற்ற ஒழுக்கவியல் கோட்பாட்டில் இயக்குவதால் எதையும் முழுமை பெறவைக்கவும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் தங்களை மறைத்துக்கொண்டார்கள். மீண்டும் மீண்டும் பிரபஞ்ச தோன்றலை உணர்ந்து அந்த பரவசத்தை தவமாக பெற்று அப்படியே சமாதி அடைந்தார்கள்.

சிலர் மட்டுமே மானுடவியல் சிக்கலை சரி செய்ய முடியுமா என ஆராய்ந்தார்கள். உணவே மருத்து என்பது சித்தர்கள் கொடுத்த மருத்துவ முறை. அதை கெடுத்து நாசம் பண்ணிட்டு பந்தாவுக்கு மட்டும் சித்த மருத்துவம் சிறந்ததுன்னு சொல்லிட்டு திரியுறோம் உதா:குப்பைமேனி ஒரு மூலிகை. அதன் தன்மைக்கு அது குப்பையில் வளர வேண்டும். வீட்டில் வளர்த்தால் அதெப்படி குப்பை மேனியாகும்.

எதிர்காலத்தை அறிய முற்பட்டார்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் பிறப்பு, தன்மை, உடல்வாகு கொண்டு அவர்கள் தொகுத்து, அதை சீடர்கள் மூலம் விரிவு செய்து அதற்கு சோதிடம் என்று பெயரிட்டார்கள். அதுவும் தோல்வி தான்., அவர்கள் காலத்தில் அது பயன்பட்டிருக்கலாம். சமகாலத்தில் அதன் நிகழ்தகவு காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.  தங்கத்தின் மேல் இருந்த மோகத்தை போக்க ரசவாதம் முயற்சி செய்தார்கள். அதுவும் தோல்வி தான். அவர்கள் விட்டுசென்ற இடத்தில் இருந்து மேலும் ஆராய யாரும் தயாராய் இல்லை. அதை வைத்து காசு பார்ப்பதே போதுமென்று இருக்கிறார்கள்.

இந்த லெளதீக பொறுப்புகளுக்கு விலகி ஓடிய சித்தார்த்தன் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றான். அவனும் தோற்றன். சித்தர்களுக்கு தெரியும். இங்கே எதுவும் நிலையில்லாதது. இதுவும் தோற்றுப்போகும். ஆனாலும் மானுடவியல் மேல் இருக்கும் காதல் அவர்களை மீண்டும் மீண்டும் முயற்சிக்க செய்யும்.  என் கணிப்பு அவர்கள் மனுடவியல் சிக்கலை தீர்க்க மானுடத்தில் இருந்து தன்னை மறைத்துக்கொண்டதால் தோற்றார்கள் என்பது. ஆற்றில் இறங்காமல் நீச்சல் எப்படி கத்துக்க.

எனக்கு வலித்தால் தானே உங்கள் வலியை உணர முடியும். எனக்கு பசித்தால் தானே உங்கள் பசிய புரியமுடியும். தனி ஒருவன் தன் புலன்களையும் உணர்வுகளையும் அடக்க கற்றுக்கொள்வதால் அது எப்படி மானுட சிக்கலுக்கு சூத்திரமாகும். முதலில் உணர்வுகளை அடக்குதலே இயற்கை விதிகளுக்கு முரண் ஆனதே. இயற்கையாக வாழாதவர்கள் சித்தர்களே இல்லையே

சித்தர்களிடம் எது சரி?  எது தவறு என்று கேட்டால்
எதுவெல்லாம் பிறருக்கு தெரியக்கூடாது என மறைத்து செய்வதெல்லாம் தவறு, எவன் பார்த்தால் எனக்கென்ன என செய்வதெல்லாம் சரி என்பார்கள்.
எனக்கு மானம் தான் பெரிதென்பவனிடம் அப்புறம் ஏன் உயிரோடு பிறந்த, உடையோடு பிறந்திருக்கலாமே என்பார்கள்.

சித்தர்கள் ஒரு தன்மையை ஆக்கசக்தி என்று அடையாள படுத்தியதில்லை. தன்னையும் வணங்கசொன்னதில்லை. பிறவிகள் குறித்தோ, சொர்க்க நரகம் குறித்தோ பேசதில்லை. என் பொருளை வாங்கலைனே நீ இந்தியனே இல்லைன்னு சொல்ல மாட்டார்கள். உன் வாழ்க்கையை நீ வாழலைன்னா நீ மனிதனே இல்லை என்பார்கள். எதிலும் உங்கள் இருத்தலை உணர்ந்து வாழ சொன்னார்கள். ஜென் டீ மெடிட்டேசன் அதை தான் சொல்லியது. கஞ்சா அடிக்கிறயோ, காதலிக்கிறியோ. எதை செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய். அது தான் வாழ்வது/ மற்றதெல்லாம் இயந்திரதனமா செய்வது

வாழ்தலே ஆன்மிகம்!

#ஆன்மிகம்
#வால்பையன்

வேண்டுதல்

வாங்க அய்யா, நேத்தே வருவிங்கன்னு எதிர்பார்த்தேன்னு பூசாரியை வரவேற்றார் சாமிகண்ணு. ஊரெல்லாம் சுத்தி வரனும்ல, நேத்து திண்டுக்கல்லில் தங்கிட்டேன் என்றார் பூசாரி. முதல்ல காபி தண்ணி எதாவது சாப்பிடுங்க என்ற சாமிகண்ணு ஏன் புள்ள மருது வூட்ல பால் இருக்கா என குரல் கொடுத்தார். அய்யா வந்தவுடனே காபி போட்டேனுங்க. நீங்க சாப்பாட்டுக்கு எதாச்சும் வாங்கியாங்க என பதில் வந்தது. அய்யா நீங்க காப்பி சாப்பிட்டு இப்படியா இருங்க. நான் போய் கோழி கறி வாங்கிறாரேன்,இருந்து சாப்பிட்டு தான் போகனும்.என மஞ்சபையை எடுத்துகிட்டு கிளம்பினான் சாமிகண்ணு ஏன்மா இந்த நம்பர் கொஞ்சம் போட்டு கொடேன் என எஸ் டி டி பூத் பெண்ணிடன் ஒரு நோட்டை கொடுத்தார் சாமிகண்ணு முருகா, உங்கப்பா பேசுறாரு என ஆயில்.டின் அடிக்கிகொண்டிருந்த்வனுக்கு செய்தி சொல்லப்பட்டது. சொல்லுங்கப்பா என்றான். பூசாரி ஐய்யா வந்துருக்காரு, நம்ம கொடை கொடுக்கனும். பணம் எதும் வச்சிருக்கியா அட்வான்ஸ் தாம்பா.வாங்கனும். நீங்களும் போறதில்ல. எதுக்குப்பா இன்னும்.வரி கொடுக்குறிங்க அய்யா. அது நம்ம தாத்தா கட்டின கோயில்யா, நம்ம மருவாதைய செய்யும்யா சரி எவ்ளோ வேணும் ஆயிரமாவது வேணும்யா அப்பா, நீங்க போறதேயில்ல எதுக்கு ஆயிரம். அம்புட்டு தூரம் வந்துருக்காரு, குறவா கொடுத்தா நாளைக்கு பங்காளிங்க ஒரு மாதிரி பேசுவானுங்கல்ல. நான் 600 தர்றேன் கணேசன் கிட்ட மீதி வாங்கி கொடுங்க. தேதி கேட்டு வைங்க நானே போயாறேன். மாசி கோயில் விசேசம் தான்பா, மூணு பெட்டியில் ஒரு பெட்டி நீ தூக்கனும். சரி பார்த்துகிறேன். சாயங்காலம் வரும் போது பணம் வாங்கியாறேன் முருகனுக்கு பணம் பிரச்சனை இல்ல. அவன் அத்தை பொண்ணு சித்ரா தான் பிரச்சனை. வருசா வருசம் இவன் போவதே அவளை பார்க்கத்தான் வா, தம்பி என வரவேற்ற பரமி தான் முருகனோட அத்தை. அப்பாவின்.தங்கை. பரமிக்கு மூணும் பெண்கள், முருகன் கூட பிறந்ததும் அப்படி தான். எப்போ போனாலும் சித்ராவுக்கு ஒரு சரம் ஃபேர் அன்ட் லவ்லி வாங்கிட்டு போவான் முருகன். பிரச்சனையே அதை கொடுப்பதில் தான். பரமி அத்தை கோழி பிடிக்கபோக வெங்காயம் நறுக்கினாள் சித்ரா, தோள் பையில் இருந்து கேரி பையை எடுத்து கொடுக்க போகும் நேரத்தில் அட முருகா நீயா, எப்ப வந்த என்ற குரல் கேட்டது அது முருகனின் அண்ணன்.மனைவி, இப்ப தான் மதினி வந்தேன் அண்ணன் வரலயா அவர் வந்து மட்டும் என்னாக போகுது. என்னை கோயில்கிட்ட கூட்டிட்டு போயேன் போகட்டா என்பது போல் சித்ராவிடம் சம்மதம் கேட்டான் முருகன். தலையசைப்பு கண்டதும் நடந்தார்கள். ஏன் மதினி அண்ணன் வரல வந்து மட்டும் என்னாக போகுது. அங்கயே கிடக்கட்டும் ஏன் மதினி இப்படி சொல்றிங்க உனக்கே தெரியும் கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆச்சு, என்னை தான் மலடின்னு சொல்றாங்க டாக்டர பாத்திங்களா மதினி பாத்தாச்சு, உங்கண்ணன் கஞ்சா குடிச்சே ஆண்மைய இழந்த்துட்டாராம். அவரால் புள்ள கொடுக்க முடியாதாம் என்ன மதினி இப்படி சொல்றிங்க. வேற நல்ல டாக்டரா பாருங்க. பெரிய பேப்பர்ல எழுதியே கொடுத்துட்டாங்க. வேணும்னா வீட்டுக்கு வந்து பாரு. சுத்தி முடிச்சு அனைவரும் கோயிலுக்கு வந்தனர். சாமியாடிகள் குறி சொல்லி கொண்டிருந்தார்கள். முருகன் சித்ராவை அழைத்து ஒருவர் காலில் விழுந்தான். நினைச்சது நடுக்கும்பா என குறி வந்தது சற்று நகர்ற வுடன் முருகனின் மதினி அவனை அழைத்தாள். என்ன மதினி தனியா குறி கேட்ககூடாது நீயும் வா அய்யோ நானா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க மதினி நினைச்சிட்டு போறாங்க வா அப்போதும் நினைச்சது நடக்கும் என்ற குறியே வந்தது. திருவிழா முடிந்து ஊர் திரும்ப வேண்டிய முருகன் மனம் மாறி மதினி வீட்டுக்கு ஆட்டோ பிடித்தான் சித்ராவின் வேண்டுதல் என்னவென்று தெரியவில்லை. அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள் ஆனால் மதினியின் வேண்டுதல் நிறைவேறி விட்டது. அவளுக்கு இரண்டு பசங்க இப்போ.

பரிணாமம் - விசம்

கேள்வி:
பரிணாம மாற்றத்தில் ஏன் சில உயிர்களுக்கு மட்டும் விசம் உள்ளது?

பதில்:
கேள்வியை எப்படி கேட்ருக்கனும்னா, ஏன் சில உயிர்களுக்கு மட்டும் விசம் வீரியமாக உள்ளதுன்னு கேட்ருக்கனும். ஏன்னா உடலுக்கு ஒவ்வாத விசரசாயனம் எல்லா உயிர்களிடம் உண்டு. அதன்  வீரிய தன்மை மற்றும் அதை செலுத்தும் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தான் அந்த விசத்தின் செயல்பாட்டு விளைவுகளை தீர்மானிக்கிறது.

தமிழில் நஞ்சு என்று பொது பெயரில் சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதை இரு வகைகளாக பிரித்துள்ளனர். porson & venom. பாய்ஸன் என்றால் உணவு குழாய் வழியாக எடுத்துக்கொள்ளும் பொழுது அதன் நச்சுத்தன்மை உடல் திசுக்களை அழிப்பது. வெனோம் என்பது இரத்தகுழாய் வழியாக செலுத்தும் பொழுது அது திசுக்களையும், நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது.

வெனோம் என்பது தனியாக ஒரு சுரப்பியின் மூலம் உருவாவது. அதில் இருக்கும் புரதம் மற்றும் இதர தாதுக்கள் அதை செலுத்தும் உயிரினத்தின் செரிமானத்திற்கும் பயன்படும். இன்னும் நுட்பமாக போனால் அந்த வெனோம் என்ற விசம் வேறு சில நோய்களுக்கு மருந்தாகவும் அமையும்.

வெனோம் விசம் இருக்கும் உயிரினங்கள் பெரும்பாலும் கடித்தல் மூலமாக அதை செலுத்தும், அதற்கு உதாரணம் பாம்பு மட்டும் சிலந்தி. அவையல்லாது ஸ்டிங்ரே மற்றும் ப்ளாடிபஸ் வாலில் இருக்கும் முள் அல்லது காலில் இருக்கும் முள் மூலமாக விசத்தை செலுத்தும். தேளுக்கு கொடுக்கில் விசம் இருக்கும். அந்த சுரப்பிகள் மனிதர்களுக்கு இருக்கும் தைராய்டு, பிட்யூட்ரி போலத்தான் அதன் உடலுக்கு உதவ சுரப்பது. அதன் என்சைம்கள் பிற உடலுக்கு ஆகாத வேலை செய்வதால் விசம் ஆகிறது. நம் உடல் சுரப்பியே அதிகமானால் நம் உடல் தாங்காதுவிசத்தின் பயன் தற்காப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவுதல். விசமும் மூலக்கூறு கட்டமைப்பு தான். தாவரத்தில் அரளிவிதை என அழைக்கப்படும் ஓலியாண்டர் சீட்ஸ் விசத்தன்மை உடையது. அது இரத்த அணுக்களை உறைய வைத்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும். அதற்கு மருத்தாக அட்ரோபைன் என்னும் தாவரத்தில் இருந்து எடுக்கும் விசத்தை கொடுப்பார்கள். அது இரத்தம் உறைவதை தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆனால் தனிதனியே அவை இரண்டுமே விசம் தான்.

விசம் என்பது ஆகாத கிருமி அல்லது மூலக்கூறு என எடுத்துக்கொண்டால் நம் உழில்நீரில் கூடத்தான் விசம் உள்ளது. வெனோம் என்பது தன் உடம்பிலே சுரப்பது, சுரப்பி மூலம் உருவகாத  மற்றவை பிற உயிரில் கடன் வாங்கிக்கொள்வது. உதாரணம் நாய் கடியில் பரவும் ரேபிஸ் போன்றவை. இதுவல்லாது கொமேடோ ட்ராகன் வகை தன் உணவை கடித்து அது நோய் முற்றி இறக்கும் வரை காத்திருந்து உண்டும். அந்த விசம் அதன் உழில்நீரிலே உள்ளது.

நம்மால் சமாளிக்க முடியாத பாம்பு விசத்தை மங்கூஸ் என்னும் கீரி தாங்கிக்கொள்கிறது. ஆனால் தேள் விசத்தை தேள்களால் தாங்க முடியாது, சில பாம்புகளும் அப்படியே. பரிணாம மாற்றத்தில் உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு சுரந்த என்சைம் வீரியமிக்க விசமாக மாறியது போல். அதை உண்டு அல்லது சமாளித்து வாழ வேண்டிய உயிர்களுக்கு அதன் விசத்தை தாங்கிக்கொள்ளவும் பரிணாமம் வழி செய்தது. (18 ஆம் நூற்றாண்டு வரை தக்காளி விசம் என்று நினைத்தார்கள்)அம்மைக்கு தடுப்பூசி முன் கூட்டியே போடப்படுவது போல் விச முறிவு மருந்துகள் விசத்தை கொண்டே தயாரிக்கப்படுகிறது. வெனோம் என்ற விசத்துக்கு பெரும்பாலும் அந்த விசத்தை குதிரைக்கு செலுத்தி அதன் உடம்பில் உருவாகும் எதிர்ப்பு சக்தியை மருத்தாக்கி தருகிறார்கள். குழந்தைகளுக்கு தரும் சில உணவுகள் ஒவ்வாமை ஏற்படுத்துவதை அறியலாம். கத்திரிக்காய் சிலருக்கு அரிப்பு ஏற்படுத்தும். சிறு வயதில் இருந்தே சிறுது சிறுதாக விசம் ஏற்றப்பட்ட உடல் பின்னாளில் அந்த விசத்தின் அளவு எவ்வளவு இருந்தாலும் தாக்கக்கூடிய சக்திபெற்று விடும்.

என்சைமாக இருக்கும் விசம் இன்னொரு உடலுக்கு கொல்லும் ஆயுதமாக எப்படி மாறுகிறது என்பதை எளிமையாக விளக்கவேண்டுமென்றால் நீர் என்ற மூலக்கூறு கட்டமைப்பில் உப்பு என்ற மூலக்கூறு கட்டமைப்பு கரைப்பதை சொல்லலாம். அதே போல் முத்து வினிகரில் கரையும். நம் உடம்பில் உள்ள கொழுப்பு ஆல்ஹகாலில் கரையும். அந்த விசம் மூலக்கூறு கட்டமைப்பை உடைப்பதால் உடல் செயல்பாடுகள் மாறுகிறது. செயல்பாடு தடைபடும் வரை செல்லும் பொழுது மரணம் நிகழ்கிறது.

உணவு குழாய் வழியாக செல்லும் விசம் உடலுக்கு ஒவ்வாமை கொடுக்கும். வாந்தி, இரத்த ஓட்டம் தடை பட்டு மயக்கமாகுதல் மாதிரி. இரத்த குழாய் வழியாக செல்லும் விசம் மிக வேகமாக வேலையை காட்டும். உடனே அது மூளையை அடைவதால். எந்த விசத்திற்கும் மருத்துவ பரிந்துரையின் படியே சிகிச்சை அளிக்க வேண்டும். விசம் முறிய மந்திரித்தல், பாடம் போடுதல் என்பது 100% உதவாது. அப்படி சிலரி பிழைத்தார்கள் என்பது அவர்கள் உடலில் இருக்கும் எதிர்த்து சக்தியால் மட்டுமே.

கேள்வி-பதில் (முதலாளித்துவம்)

கேள்வி:
உலகமயமாக்கலில் பெரும்பான்மை முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது, நீங்கள் எதிர்க்க காரணம் என்ன?

பதில்:
முதலாளித்துவத்தை எதிர்ப்பவன் நிச்சயம் பொதுவுடமைவாதியாக இருப்பான். அவன் அடிப்படை குணத்தை வைத்து அவனை தெரிந்து கொள்ளலாம். ஒரு நடிகரை கொண்டாடுவதோ, ஒரு அரசியல் தலைவரை கொண்டாடுவதோ, ஒரு கடவுளை கொண்டாடுவதோ அவனுக்கு பழக்கம் இருக்காது.

கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தெரியுதா? உங்களுக்கு எளிமையாக புரியவைக்க சில உதாரணங்கள் சொல்லவேண்டியுள்ளதே. முதலாளி என்ற தனிநபரை கொண்டாடுபவன் முதலாளித்துவ ஆதரவாளன். லட்சகணக்கான தொழிலாளர்களுக்காக பேசுபவன் பொதுவுடமைவாதி. மேலே சொன்ன உதாரணம் இங்கே பொருந்தி வருதா

முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் தனிநபர் வருமானத்தை எதிர்ப்பவர்கள் அல்ல, அந்த வருமானத்திற்காக அவர்கள் பலர் உரிமைகளையும், உடைமைகளையும் கொள்ளையடிப்பதை எதிர்ப்பவர்கள். அவ்ளோ ஏன் நீங்கள் சொல்லும் உலகமயமாக்களில் தொழிலாளிக்கு வேலை உத்தரவாதம் இருக்கா இல்லைன்னு கொஞ்சம் சிந்தியுங்கள்

முதலாளித்துவம் லஞ்சம், ஊழலின் ஊற்றுக்கண். 100 சிறு தொழில் நிறுவனங்கள் செய்யவேண்டிய ஒரு வேலையை ஒரே கார்ப்ரேட் நிறுவனம் கையப்படுத்த அவர்கள் லஞ்சம், ஊழலின் மூலமே கால் வைக்கிறார்கள். there no free lunch in the world என்று ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாலும் சரி, லஞ்சமாக கொடுத்தாலும் சரி, அவனுக்கு அது முதலீடு தான். அதற்காக லாபபணத்தை பொருள் தான் திணிப்பான்.

உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவை எடுத்துக்கொள்வோம். நாம் நுகரும்(பயன்படுத்தும்) பொருள்கள் அனைத்தும் அதன் நியாயமான விலையில் கிடைக்கின்றன என நம்புகிறீர்களா? 5000 கொடுத்து வாங்கிய அலைபேசி தீடிரென 500க்கு கிடைக்கிறது என்றால் அது சலுகை அல்ல, இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டோம் என்று அர்த்தம். 6 மாசத்திற்கு முன்பு வரை 1ஜிபி 250க்கு கிடைத்த இண்டர்நெட் இன்று தினம் 1ஜிபி கிடைக்கிறது என்றால் அது சலுகை அல்ல. இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டோம் என்று அர்த்தம்.

ஒரு பொருளின் நியாயமான விலையை நிச்சயமாக கார்ப்ரேட் நிறுவனம் நிர்னயிக்காது. கார்ப்ரேட் நிறுவனமே அரசை இயக்குவதால் அவர்களும் அதை கேள்வி கேட்க போவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் வரி தொகை 6.50 லட்சம் கோடி வராதொகையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆளும் அரசு அதை தனியாரிடம் வசூலிக்க சொல்லியுள்ளோம் என்பார்கள். அப்படியானால் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் கடன் மற்றும் வரி தள்ளுபடியாக இழந்த 25 லட்சம் கோடி பணம் ஏன் வசூல் செய்யப்படவில்லை?அமெரிக்காவின்  ஜெனரல் மோட்டார் நிறுவனம் அரசிடம் மறைமுகமாக ஒரு கோரிக்கை வைத்தது. பொது போக்குவரத்தை படிபடியாக குறையுங்கள் என்று. பொதுபோக்குவரத்து இல்லாமலும் அதே நேரம் கார் கம்பெனி 90% கடனில் கார் அளிக்க முன்வந்ததும் தற்செயல் நிகழ்வல்ல. ஆளும் அரசு அதானிக்கும், அம்பானிக்கும் ஒப்பந்தங்கள் கொடுப்பதில் குறியாக உள்ளது. அந்த வேலையில் நிரந்தர பணியாளார்கள் அமர்த்தப்பட மாட்டார்கள். அனைவரும் ஒப்பந்த பணியாளர்கள் சொற்ப சம்பளத்தில். இதை தான் ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவரர் என்று சொன்னார்கள்.

எந்த ஒரு நாடு மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், உணவு உறுதியை தனியார் வசம் கொடுக்கிறதோ அந்த நாடு கார்ப்ரேட்களால் இயக்கப்படுகிறது என்று அர்த்தம். பொது நிறுவனங்கள் நிச்சயமாக நல்ல தரமான பொருளும், சேவையும் தர முடியும். ஆனால் அவர்களின் மெத்தன போக்கிற்கு காரணம் அரசின் கார்ப்ரேட் அடிமைதனம் தான். அரசு மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் கிடைத்தால் நீங்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

முதலாளித்துவ ஆதரவு, வலதுசாரி சிந்தனை, உலகமயமாக்கல் என்பதெல்லாம் உங்களை பகட்டாக காட்டிக்கொள்ள மட்டுமே. உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்களே எழுதிக்கொடுக்கும் அடிமைசாசனம் தான். சீனா முதலாளித்துவத்தில் நுழைகிறது என்பது கார்ப்ரேட் உங்களுக்கு செய்யும் மூளை சலவை. ஏற்கனவே முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் வீடில்லாமல், உணவில்லாமல் உலகிலே அதிக குற்றங்கள் நடக்கும் நாடாக உள்ளது என்பதை பேசவே மாட்டார்கள்.

முதலாளித்துவ ஆதரவு என்பது மொத்த தொழிலாளருகளும் போராட்டத்தில் ஈடுபடும் பொழுது ஒரு அடிமை மட்டும் முதலாளியுடன் பெட்டி வாங்கி, உங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி உங்களுக்காக போராடுபவனை கெட்டவன் ஆக்குவானே அவன் தான். உன் உரிமை மறுக்கப்படும் பொழுது கேள்வி கேட்கக்கூட உனக்கு திராணியில்லை என்றால் நீ மனிதனே அல்ல!

பவர் பாண்டியும்., பெண்கள் காதலும்!

நல்ல கதையை சொதப்பலா எடுத்துருக்காங்கன்னு பவர் பாண்டி படத்தை பத்தி கண்ணம்மா வருத்தப்பட்டிருந்தா. ஒரு ட்ராமாவை இதுக்கு மேல என்ன பண்ண முடியும்னு தெரியல

பொதுவா பெண்ணியவாதிகளிடம் ஒரு பேச்சு உண்டு. ஆண்கள் பழைய காதலை தேடிபோகும் படமா எடுக்குறாங்க. பெண்கள் போற மாதிரி ஏன் எடுப்பதில்லைன்னு

ஒரு முத்தச்சி கதான்னு மலையாளபடம் ஒன்னு. ஆங்கிலத்தில் வந்த த பக்கெட் லிஸ்ட் சாயலில் இருக்கும். வயசான நேரத்தில் ஆசைபட்டதெல்லாம் செய்யும் போது காதலனையும் சந்திப்பதும் ஒரு விருப்பமா இருக்கும்.ஒப்பிட்டளவில் பார்த்தால் மலையாள சினிமா, தமிழ் மசாலாக்களை தாண்டி காத தூரம் போயிருச்சு. கிட்டதட்ட சார்லி படமும் இப்படி தான். ஆனால் வயசான இல்ல.

ஆனால் என்னை பொறுத்தவரை பெண்கள் பழைய காதலனை பார்க்கும் அளவுக்கு மன ரீதியாக தூண்டப்பட மாட்டார்கள். இயற்கையிலயே பாதுகாப்பு உணர்வு அதிகம் என்பதால் மகிழ்வை அனுபவிப்பதை விட தான் செய்வது சரியா, தவறான்னு குழப்ப ம்னநிலையில்யே இருப்பார்கள். அதும் முதல் காதல்னா சொல்லவே வேண்டாம்

ஒரு இழப்பை தாங்கிக்கொள்ள சட்டென்று எதிராளின் மேல் எல்லா பழியையும் தூக்கி போட்டு குற்ற உணர்வின்றி அனுபவத்தை தூக்கி போடுவது பெண்களுக்கு எளிதான ஒன்று. அது வரமும் கூட. அதனால் தான் பெண்கள் காதல் தோல்வில் தாடி வளர்த்து தண்ணி அடிப்பதில்லை.பெண்கள், சமூக அமைப்பு, குடும்ப கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டவர்கள். தன் உரிமைகளை விட சமூகம் என்ற நான்கு பேருக்கு பயப்படுவார்கள். தன் குழந்தைகளும் அதே போல் வளர்த்து அவர்கள் உரிமைகளையும் பறிப்பார்கள்.

அடுத்த தலைமுறையாவது ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வளர்ந்து வாழட்டும்

எங்கே நட்டம்?

போக்குவரத்து துறை வேலை நிறுத்தத்தை எதிர்க்கும் எல்லாரும் பொது துறை வேண்டாம்னு தனியார்மயத்தை ஆதரிக்கும் காவி வலதுசாரிகளா இருக்காங்க. அதான் நஷ்டம்னு சொல்றாங்கல்ல, கொடு, கொடுன்னா எங்கிருந்து கொடுப்பான் என்பது அவர்கள் கேள்வி. இதுக்கு தான் எஸ்மா, டெஸ்மா வேண்டும் என்பது அவர்கள் தீர்ப்பு.

அந்த கனவான்களிடம் சில சந்தேகம்.

தமிழக அரசு கட்டுபாட்டில் இருக்கும் துறைகளில் டாஸ்மாக் மற்றும் அறநிலைய துறை தவிர எல்லாமே நட்டத்தில் தான் இயங்குது. இந்தியாவில் மாநில அரசு கட்டுபாட்டில் இருக்கும் துறையில் மிக அதிக நட்டத்தில் இயங்குவது தமிழக மின்சார துறை தான்.

இங்கே தான் திமுகவும், அதிமுகவும் ஒன்னு, அதை அறியாதவன் வாயில மண்ணுன்னு மக்களுக்கு புரியவைக்க வேண்டியிருக்கு. மின்சாரம் தட்டுபாடு வந்தப்ப தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க முதல் ஒப்பந்தம் போட்டது திமுக தான். அதிமுக அதை கெட்டியா பிடிச்சிகிட்டு கொள்கை லாபம் பார்த்தது. போன மாதம் தனியார் நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை தராமல் மின்சாரம் தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 200 கோடி இப்போதைக்கு கொடுத்து மின்சாரம் வாங்கி தருது அரசு.

2011-2016 அதிமுக ஆட்சியின் பொழுது தமிழக காங்கிரஸ் தலைவராக இ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தார். அவர் தலைமையில் அதிமுகவின் மெகா ஊழல்கள் என ஒரு புத்தகம் ஆளுனரிடன் கொடுக்கப்பட்டது. அது போன இடமே தெரியல. செயல் தலைவர் விவசாயிகளுக்கு பந்த அறிவித்தார். அது மற்றொரு ஞாயிறு ஆனது. ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியும் சரியில்ல, எதிர்கட்சியும் சரியில்லைன்னா இதை விட 100 மடங்கு பிரச்சனைகளை நாம் சந்திக்கவேண்டி இருக்கும்.

வெளியே 3 ரூபாய்க்கு விற்கும் முட்டை தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு 4.25 ரூபாய்க்கு வாங்க்ப்படுகிறது. இது ஒரு சாம்பிள் தான். அப்ப மத்த துறைகள் எப்படி இருக்கும்னு பாருங்கள்.

தொழிளாலர் பணத்தை ஆட்டைய போட்டுட்டு நட்டகணக்கு காட்டும் அரசை உனடியாக கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிடலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு அதிமுக ஆதரவு வேண்டும் என்பதால் பாஜக இதெல்லாம் கண்டுக்காம இருக்கு.
ரெண்டு பேருமே திருட்டு கூட்டம் என்பதற்கு வேறெதும் உதாரணம் வேண்டுமா என்ன?

கேள்வி-பதில் (கடலில் ஏன் உப்பு)

கேள்வி:
ஆறு நீர் ஏன் உப்பு கரிப்பதில்லை? கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

பதில்:
கடல், ஏரி, குளம் என எல்லா நீர் ஆதாரங்களில் இருந்தும் வெப்பத்தால் நீர் ஆவியாகும், வேதியல் முறைப்படி வெப்பத்தால் நீர் மூலக்கூறுகள் விரிந்து கனமிழந்து மேல் நோக்கி எழுவது நாம் நீராவி என்கிறோம். அவ்வாறு ஆவியான நீர் மேகமாக வானில் சேர்கிறது.

நீராவியான மேகத்தின் மீது குளிர்ந்த காற்று படும் பொழுது அதன் வெப்பம் தளர்ந்து அந்த மூலக்கூறுகள் மீண்டும் இணைந்து நீராகி மழையாக பூமியை நோக்கி பொழுகிறது. அந்த குளிர்ந்த காற்றுக்காக தான் மழை பெற மரம் அவசியம் என்கிறோம். தாவரங்கள் தான் குளிர்ந்த காற்றை உற்பத்தி செய்கிறது

மழையாக பூமியை வந்தடைந்த நீர், பள்ளத்தை நோக்கி ஓடுகிறது. அவ்வாறு ஓடும்பொழுது மண்ணில் இருக்கும் கரைக்ககூடிய தாதுக்களை தன்னுடன் கரைத்து அடித்து இழுத்துச்செல்கிறது. அந்த தாதுக்களில் சோடியம் குளோரடு என அழைக்கப்படும் உப்பும் ஒன்று, அது போல் எல்லா தாதுக்களையும் தான் அடித்துச்செல்லும்.

சோடியம் குளோரைடு என்ற உப்பை தவிர மற்ற தாதுக்கள் உயிரினங்களுக்கு சத்தாக எடுத்துக்கொள்ளபடுவதால் அவை ஒரே இடத்தில் தேங்குவதில்லை. கடலுக்கு சென்ற உப்பு, நீர் ஆவியாகும் பொழுது கடலிலேயே தங்கி விடுகிறது. சுமார் 450 கோடி வருடங்களாக இது மீண்டும் மீண்டும் நடைபெறுவதால் கடலில் உப்பு சுவை அதிகமாகி விட்டது.ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தியை கணக்கிட்டு தான் தோராயமாக பூமியின் வயசு 450 கோடி வயசு இருக்கலாம் என கணக்கிட்டார்கள். கடலை போலயே பல வருடங்களாக தேங்கி நிற்கும் ஏரி குளங்களில் உப்பு சேரும், ஆனால் குறைந்த அளவே இருப்பதால் நம்மால் உப்பு சுவையை அறிய முடிவதில்லை.உதாரணத்திற்கு இஸ்ரேல் அருகில் இருக்கும் டெட் சீ(dead sea) கடலில் இருந்து பிரிந்த ஏரி பகுதி தான் ஆனால் அதில் உப்பின் அடர்த்தி அதிகம், மனிதனை மூழ்காமல் மிதக்க வைக்கும் அளவுக்கு.

#அறிவியல்
#கேள்விபதில்
#வாலு_பதில்கள்

நாம் டம்ளர்!

//மொழி வேற சாதி வேற நினைச்சா நீங்க பேசுறது சாதி ஓழிப்பே இல்லை இன்னும் சொன்னா நீங்க அதை முழுவதும் தெரிந்துக்காம தான் எதிர்க்கிறீங்க//

இப்படி ஒரு பதிலை பார்த்ததுமே இனி பேச ஒன்றுமில்லைனு புரிஞ்சிருச்சு. குடும்ப பெயருக்கும், சாதிக்கும் வித்தியாசம் தெரியாதவரிடம் போய் நான் என்னான்னு மொழின்னா என்ன, சாதின்னா என்னான்னு விளக்க. ரெண்டாவது அவர் எதையும் காதுல வாங்குற மாதிரியே இல்ல. முழுசா சந்திரமுகியா மாற்றும் நிற்கும் கங்காகிட்ட வேட்டையன் மாதிரி மாட்டிக்க விரும்பமில்லாம நன்றி வணக்கம்னு சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்.

இந்த பதிவு எதுக்குன்னா அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர் யாராவது இருந்தா அவர்களுக்கு உண்மை என்னான்னு புரிய வைக்க.

சாதி நேத்து முளைச்ச காளான்னு வச்சிகிட்டா, மொழி நூற்றாண்டுகள் கடுந்து வாழும் ஆலமரம். அதை இரண்டையும் ஒன்னா சேர்த்து பார்ப்பது உலகில் உள்ள மொத்த அறிவையும் ஒருங்கே பெற்றத்தனம்.

காட்டுக்குள் திரிந்த சமூகம் இன்றைய நாகரீகம் வரை வளர்ச்சி பெற காரணம் தகவல் பரிமாற்றம். தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்ட கருவி மொழி. இதை பற்றிய ஒரு பட்டய படிப்பிற்கு (ph.d) தேவையான தரவுகளை என்னால் கொடுக்கமுடியும். மொழியை கருவி என சொல்லக்காரணம் அந்த மொழி ஆரம்பத்தில் இருந்தது போலவே இல்லாமல் தன்னை தேவைக்கேற்ப கூர் தீட்டிக்கொண்டே இருந்தது தான்.

தமிழ் எழுத்துருக்களின் வரலாறு பார்த்தண்டா? கோடுகள் சிறுது சிறுதாக இணைந்து, வளர்ந்து இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துருவாக உள்ளது. பெரியார் காலத்தில் தான் னை,லை போன்றவை நிரந்திரமாக உருவானது என்பது எத்தனை பேருக்கு தெரியும். மொழியின் உச்சரிப்பு, அதன் பயன்பாடும் கூர் தீட்டிக்கொண்டே தான் இருந்தது. பண்டைய செய்யுளை விளக்கவுரை இல்லாமல் படித்து உங்களால் புரிந்துக்கொள்ள முடியுமா? அர்த்தம் சொல்ல முடியுமா?தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விசயம்.
தேர்தல் நேரத்தில் நான் வாக்காளர்களுக்கு சொல்வது, உங்கள் சுற்றுபகுதியின் பிரச்சனைகள் அறிந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று தான். அதுவே தமிழனுக்கும் நிச்சயாக பொருந்தும். அதற்கு ஏன் சாதியை முட்டுக்கொடுக்குறிங்கன்னு தான் எனக்கு புரிய மாட்டிங்குது.

சாதியை மறுத்ததால் நாம் நிறைய இழந்தோம்னு வேற ஒரு வரி சொன்னார். என் புரிதலில் அப்படி என்ன இழந்தோம்னு தெரியவேயில்ல. ஆனால் சாதியை ஏற்றுக்கொண்டதால் ஒருவன் உயர்சாதியாகவும், ஒருவன் தாழ்ந்த சாதியாகவும் உருவக படுத்தப்பட்டான். அதன் நீட்சி தான் இன்றும் நடக்கும் சாதி கலவரங்கள்.

தமிழ் சமூகத்தில் சாதிய கட்டமைப்பு தவிர்க்க முடியாதது. தேர்தல் அரசியலில் பயணிக்க சாதிய ஆதரவும்  வேண்டும் என்று ஒரு கட்சியின் தலைவர் நினைப்பது அவர் அளவில் சரி தான். அவருக்கு சிம்மானசம் கிடைக்க ராஜத்ந்திரங்கள் தான் உதவும். அந்த மேய்ப்பரின் கட்டளைக்கேற்ப ஆட்டு மந்தைகளும் தம்மை பலி கொடுக்கும்.

ஆனால் ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் நேரத்தில் மேய்ப்பவனுக்கு வேலை இருக்காது

விதண்டாவாதங்கள்!

தனி மனித உரிமையை மதிப்பவன் என்பதால், தனிமனித தாக்குதலாக இருந்தாலும் கூட உடனே கோபப்பட்டு அன்ஃப்ரெண்ட் பண்ணுவது, ப்ளாக் பண்ணுவது கூடாது என கொள்கை வைத்துள்ளவன் நான். நேற்று நடந்த இரு  உரையாடல்கள் என்னை நிறைய யோசிக்க வைத்தது.

சாதியால் என்ன பலன் என்று கேள்வி தான் கேட்டேன். நீங்களும் திணிக்க தான் செய்றிங்கன்னு முத்திரை குத்தினார் தமிழ்தேசியவாதி ஒருவர். அவர் கொள்கை என்ன லட்சணமும் அவரே ஒரு பதிவு போட்டு வெளிச்சம் காட்டினார்.

இங்க சாதியை பேரோடு போட்டுகிறதை எதிர்ப்பவர்கள், அமெரிக்காவில் குடும்ப பெயரை சேர்த்து கொள்வது பற்றி எதுவும் பேசுவதில்லை என்று

எங்க அப்பா பேரு நடராஜ், என் பேரு அருண்ராஜ், ரெண்டு தம்பிங்க பேரு கனகராஜ், செல்வராஜ். தம்பி பையன் பேரு மோகன்ராஜ், ரூபன் ராஜ். எங்க சாதி என்ன ராஜா? அப்படினா ராஜ்னு பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் எங்க சாதியா?
இல்ல அமெரிக்காகாரன் நாங்கள் ஆண்ட குடும்பம், நீங்கள் பேண்ட குடும்பம்னு பெருமை பேசுறானா? இந்த குடும்ப பெயருடைய மணமகனுக்கு அதே குடும்ப பெயருடய மணமகள் தேவைன்னு மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுக்குறானா?
சாதிக்கும், குடும்ப பேருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் இத்தனை நாள் வளந்திங்களா?

நான் எல்லா கருத்துகளில் இருக்கும் நல்ல விசயங்களை ஆதரித்து பேசியுள்ளேன். தமிழ் தேசியம் உட்பட. எப்போதேனும் பெரியார் கருத்துகளையோ, மார்க்ஸ் கருத்துகளையோ பகிர்ந்து பார்த்ததுண்டா? நான் படித்தாலும் அதன் சாத்தியகூறுகளை ஆராயாமல், சரியாக புரிந்துகொள்லாமல் நான் எழுதமாட்டேன்.

இன்னொரு சம்பவம்

சாதி அது பாட்டுக்கு இருக்கு, நீ தான் சாதி இல்லைன்னு எழுதி வன்மத்தை வளர்க்கிற,
சரி சாதி ஏன் தேவைன்னு சொல்லுங்க
நீ சாதி ஏன் தேவையில்லன்னு சொல்லு

இவர்களெல்லாம் கண்ணை மூடிட்டா உலகம் இருட்டாகிரும்னு நம்புவாங்களோ.

நார்வே, மனிதன் வாழ உலகில் தகுதியான முதல் இடம், பின்லாந்து மனிதம் கல்வி கற்பதற்கு தகுதியான உலகில் முதல் இடம். ஐஸ்லாந்து போன்ற நாட்டில் குற்றவாளிகள் இல்லாமல் சிறைசாலையை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நாடுகளில் 80% அதிகமான மக்கள் கடவுள் மறுத்து மனிதம் போற்றும் மக்கள்.

நாடு பிடிக்க நடந்த சண்டைய விட, உலகில் மத சண்டையில் இறந்தவர்கள் அதிகம். தமிழகத்தில் சாதிய வன்முறைகள் நடப்பதேயில்லை என்பது போல் பேசுபவர்களிடம் என்ன சொல்வது? நேற்று தான் ஒரு கோவில் விழாவுக்கு அரசு 144 தடை போட்டிருப்பதை சொன்னேன். காரணம் சாதி.. சாதியும், மதமும் ஏன் தேவையில்லைன்னு நான் பல காரணங்கள் சொல்லிட்டேன் சொல்லிகிட்டும் இருக்கேன்.நீ என்னவேணும்னாலும் சொல்லு, நாங்க வீம்புக்கு வீணா தான் போவோம் என இருப்பவர்களை எதுக்கு நட்பு வட்டத்தில் வச்சிகிட்டு நான் டென்சன் ஏத்திக்கனும்னு யோசிக்கிறேன். நான் படிக்க வேண்டியது, எழுத வேண்டியது நிறைய இருக்கு., இந்த மாதிரி ஆட்கள் ஸ்பீட் ப்ரேக்கர் மாதிரி என்னை பின்னே இழுப்பது மட்டுமல்லாமல் அறியாமையில் இருக்கும் பிறரையும் இவர்களுக்கு மூளை சலவை செய்த குழுவிடம் இழுத்து செல்லும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கோவம் வருது, டென்சன் ஆகுது. உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என ஆதங்கம் ஏற்படுகிறது. என் இயலாமை வன்முறையாக மாறிவிடுமோ என பயம் வருகிறது. இந்த முட்டாபுன்னகைகளை நட்பு வட்டத்தில் வச்சிகிட்டு நம்ம டென்சன் ஆகுறதை விட, தூக்கிபோட்டு நல்ல விசயங்கள் நாலு படிக்கலாம், எழுதலாம்.

லைக்குக்காகவும், ஷேருக்காகவும் எழுதுறவன் பெரும்பான்மைக்கு ஜால்ரா அடிச்சிகிட்டு இருப்பான். கண்டிப்பா இந்த பதிவுக்கு ஆமா சாமி போடுறவன் தான் உனக்கு வேணுமான்னு கேள்வி வரும்.

விவாதங்கள் தெளிவுறவேயின்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல என்ற கருத்துடையவன் நான். முன் முடிவுடன் அணுகுபவ்ர்களையும், சாதி பெருமை பேசி திரிபவர்களையும் வச்சிகிட்டு விவாதிச்சா ஊர் கண்னுக்கு தான் பைத்தியம் மாதிரி தெரிவேன்.

ஒரே வருத்தம் என்னான்னா, இவர்களெல்லாம் சமூகத்திற்கு மாற்றம் கொண்டுவரும் திறனும் அறிவும் உள்ளவர்கள்னு இவ்ளோ நாள் நம்பிகிட்டு இருந்தேன். பொய்யாகிட்டாங்க

பதஞ்சலியும், சமணமும்!

                        கேள்வி:
பதஞ்சலி முனிவர் சமணர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

பதில்:
விக்கிபிடியாவில் இருப்பதையும், பல இணைய தளங்களில் இருப்பதையும் அப்படியே உங்களுக்கு எடுத்துக்கொடுக்க நான் எதற்கு, அதை நீங்களே படித்துக்கொள்ளலாமே, என் பதில் அதிகபட்ச சாத்தியகூறுகளின் அடிப்படையில் தான் இருக்கும். மொத்த மக்களும் உலகை படைத்தது கடவுள் என சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் பெருவெடிப்பை என்ற கொள்கையின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளை விளக்கி அனைத்து பகுத்தறிவு விஞ்ஞானிகளும் ஒத்துக்கொண்டு இன்று பாடத்திட்டத்தில் கூட இருக்கிறது.

என் கூற்றே இறுதி முடிவு என்று நான் எப்போதும் சொன்னதில்லை. மாற்று கருத்துகளும், விவாதங்களும் தெளிவுற வைக்கும். திருவள்ளுவர் சமணர் என்று கூற்று ஏற்படக்காரணம் என்ன? அவர் புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வலியுறுத்தியதால். 3000 வருடங்களுக்கு முன் ஆடு, மாடு மேய்க்க வந்த ஆரியர்கள் அசைவம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன லாஜிக்? அவர்கள் கொண்டு வந்தது தான் குதிரையும்.(18 ஆம் நூற்றாண்டு வரை ஆஸ்திரேலியாவில் குதிரை இல்லை) இன்றும் கொல்கத்தா பார்பனர்கள் கடல் புஷ்பம் என்ற பெயரில் மீனை உண்கிறார்கள்.பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் சமஸ்கிருத மொழியில் இருக்கலாம். சமணம் என்பது ஒரு கொள்கை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் சமஸ்கிருதத்தில் பேசக்கூடாது என்றில்லையே. ஒருவேளை அது பாலி மொழியின் மொழி பெயர்ப்பாகவும் இருக்கலாம் இல்லையா!, மேலும்  யோக பயிற்சியில் கடவுள் வழிபாடு என்று எங்கேயும் இல்லை. சமணம் இந்தியாவில் தோன்றிய இறை மறுப்பு கொள்கை. அதை பார்ப்பனர்கள் செய்திருப்பதற்கு எங்கேயும் சாத்தியகூறுகள் தெரியவில்லை

அடுத்த சாத்தியகூறு கிபி எட்டாம் நூற்றாண்டில் திவாகர முனிவர் என்பவர் திவாகர நிகண்டு என்ற சமண கோட்பாடுகளை தமிழில் எழுதியுள்ளார். கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் கல்வெட்டில் சமண முனிவர்கள் பற்றி உள்ளது. பார்பனர்கள் தியானத்தில் ஈடுபட்டதாக எங்கேயும் குறிப்புகள் இல்லை. அதை செய்து வந்தது, பரப்பி வந்தது சமணர்கள் என்பதற்கான தரவுகளே அதிகம் உள்ளன.

ஆக பதஞ்சலி முனிவர் சமணராக இருப்பதற்கே அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ளன.

கலாச்சாரம்-பண்பாடு

தெரியாதுன்னு சொன்னதுவங்க நேர்மைய பாராட்டுறேன். நானும் தெரியாததை தெரியாதுன்னு தான் சொல்லுவேன். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். இது எல்லா விசயங்களுக்கும் பொருந்தும் என்பதால் அவர்கள் புரிதலும் அவர்கள் அளவில் சரியே.

ஆனால் நாங்க கட்சி ஆரம்பிச்சதே கலாச்சாரத்தை காப்பாத்த தான், எங்க கட்சி ஆட்சிக்கு வந்தா தான் பண்பாடு பாதுகாப்பா இருக்கும்னு சொன்னவங்ககிட்ட கேட்டபொழுது. அவர்கள் பதில் குண்டக்கன்னா குண்டக்க, மண்டக்கன்னா மண்டக்க என்றே இருந்தது.

நமது உணவு, உடை, கட்டிடகலை ஆகியவை கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை. விசேசங்களில் மட்டும் அணியும் உடைகள் என்று உடை கலாச்சாரம் ஆகிப்போனது. சிவப்பு லோலாக்கு(காதல் கோட்டை) பாட்டில் ராஜாஸ்தான் உடை கலாச்சாரம் தெரியும். அதே போல் தான் உணவும், கட்டிட அமைப்பு முறைகளும். நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, கிடைப்பதை கொண்டு அமைத்துக்கொண்டது தான் கலாச்சாரம்

எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் குடிக்க தண்ணி கொடுப்பேன்னு யாராவது சொல்லி கேட்டதுண்டா, அதான் பண்பாடு. பழக்க வழக்கங்கள், நம் செயல் சார்ந்த விசயங்கள் எல்லாமே பண்பாடு தான். கலச்சாரத்தில் மனிதம் தாண்டிய வித்தியாசம் இருக்காது. பண்பாட்டில் தான் சாதியம் புகுந்தது. அதற்கு உதாரணம் ஜல்லிகட்டு, எங்க குலசாமி, எங்க வழிபாட்டு முறை, எங்க சடங்குகள் எல்லாமே பண்பாடு. ஆனால் பிரிவினைகள் உண்டுஇது இரண்டுமே பெரும்பாலானவை ஏன் பண்றோம்னு தெரியாமயே செய்து வருவது நம் மக்களின் பழக்கம்.பூப்புனித நன்னீராட்டு விழா தேவையான்னு ஒருத்தர்ட்ட கேட்டேன். தேவைன்னு சொன்னாரு. ஏன் தீட்டுன்னு ஒதுக்கி மூலையில் உட்கார வைக்கனும்னு கேட்டேன். அப்ப சத்தான ஆகாரம் கொடுக்கனும்னு சொன்னார். அது சரி ஏன் தனியா வைக்கனும்னு கேட்டா முன்னோர்கள் முட்டாளா. அவர்கள் காரணத்தோடு தான் செய்வார்கள் என்ற பதில் தான் பலரிடம் இருந்து. பதில் தெரியாத எல்லா விசயங்களுக்கும் அதுவே பதில்.

அக்காலத்தில் பெண் பருவம் அடையும் வரை திருமணத்திற்கு காத்திருக்க மாட்டார்கள். அப்படியும் இருக்கும் பட்சத்தில் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு தயாராக ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்காக நடத்தபட்ட சடங்கு அது. அந்த காலத்தில் இம்மாதிரியான நகர கட்டமைப்பு இல்லை. ஒரு சில குடில்கள் இணைந்ததே ஒரு கிராமம். சுற்றிலும் வனம். இரத்த வாடைக்கு வேட்டை விலங்குகள் வரலாம் என்பதனால் ஒரு உழக்கையை பாதுகாப்புக்கு கொடுத்து வீட்டிற்குள் அமர வைத்தார்கள். தீட்டு, சமையல் பாத்திரங்கள் தொடக்கூடாது என்பதெல்லாம் ஆணாதிக்க பார்ப்பனிய திணிப்பு தான்.நீர் வளத்தையும், உணவு வளத்தையும் தேடி மனிதன் அலைந்த பொழுது இடத்திற்கான போர் ஆரம்பித்துவிட்டது. நாளடைவில் ராஜ்ஜியங்கள் போரிட்ட பொழுது வில், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்பட்டன, அவற்றின் மேல் இருந்த பயத்தை போக்க, அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்றவை பயன்பட்டது. இவ்ளோ தானா வலி என்று உணர்ந்தவன் போர் களத்தில் பின் வாங்காமல் போரிட்டான்.

உணவிலோ, உடையிலோ, கட்டிட கலையிலோ நம் கலாச்சாரம் இப்பொழுது இல்லை. அதை தாண்டி நம் வசதிக்கு அமைத்துக்கொண்டோம். உண்மையில் கலாச்சாரம் அது தான். நம் சூழலுக்கு ஏற்ப நம்மை பாதுகாத்துக்கொள்ளும் முறை. பண்பாடுன்னு சொல்லிக்கொள்ளும் எதற்கும் இன்றைய தேவையுமில்லை. அதன் காரணமும் உங்களுக்கு தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாளைக்கு தான் கலாச்சாரத்தை காப்பாற்றப்போறேன், பண்பாட்டை பாதுகாக்கப்போறேன்னு கதை விட்டுட்டு இருப்பிங்க. மனிதன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த தலைமுறை சாதி, மதமற்ற மனிதம் பேசும் சமூகமாக இருக்கும்


கேள்வி-பதில் - இலிமினாட்டி

கேள்வி:
அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ளன என்ற அடிப்படையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், இலிமினாட்டிகளுக்கு சாத்தியகூறுகள் இருந்தும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

பதில்:
முதல்ல ஒரு விசயத்தை சொல்லிர்றேன், நீங்கள் மகாபாரத்தையும், பைபிளையும், குரானையும் ஏற்றுக்கொள்ளும் நபராக இருந்தால் நான் சொல்லும் இலிமினாட்டிகள் பற்றிய கூற்று உங்கள் மண்டையில் ஏறாது.

18 ஆம் நூற்றாண்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக உருவான அமைப்பு தான் இலிமினாட்டி, சில பகுத்தறிவு இயக்குனர்கள் பட பூஜையின் போது பூனையை குறுக்கால விடுவது, விதவையை கொண்டு விளக்கு ஏற்றுவது, அமங்களமாக பொது புத்தியை ஏற்றுபட்டவைகளை செய்வதுன்னு இருப்பாங்களே, அதே போல் கடவுளுக்கு எதிராக ஆண்டி கிறிஸ்ட் என்ற அழைக்கப்பட்டார்கள். கடவுளுக்கு எதிரான சாத்தானை வேண்டுமென்றே வணக்கி மக்களை வெறுப்பேத்தினார்கள். இலிமினாட்டி என்றால் ஒளியை பாய்ச்சுவது என்று அர்த்தம். அவர்கள் அமைப்பு வெறும் 18 ஆண்டுகள் மட்டுமே இயக்கியது.

எல்லாமே கடவுள் செயல்னு சொல்ற மாதிரி உலகில் எது நடந்தாலும் அதற்கு இலிமினாட்டிகள் தான் காரணம்னு அவர்கள் மேல் தூக்கி8 போடுவது எப்படி சாத்தியகூறாகும்னு எனக்கு புரியல. மணல் திட்டுகளை ராமர் பாலம்னு சொல்றது. பாறையான மரத்தை நோவா செய்த கப்பல்னு சொல்றது. நிலா ரெண்டா பொழந்து திரும்ப ஒட்டுச்சுனு நம்புறது எல்லாமும் கட்டுகதைகள் தான்.
பைபிள் பழைய ஏற்பாட்டின் வயசு இரண்டாயிரத்துக்கும் மேல், ராமாயணம் சொல்லவே வேண்டாம். அந்த காலத்துலயே அருமையாக கதை புனைய தெரிந்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு இலிமினாட்டி கதை கட்டவா தெரியாது. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களையும், முதலாளிதுவத்தும் அராஜகத்தையும் மறைக்க அவர்களே பழி போட வைத்திருக்கும் அமைப்பு தான் இலிமினாட்டி

ஜான் பெர்கின்ஸ், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தில் இலிமினாட்டிகள் பற்றி சொல்லியிருக்கார்னு ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறாங்க. உலகம் இயங்குவது பணம் படைத்தவனால் அவன் இலிமினாட்டி இல்லாதபோதும் அதை தான் செய்துக்கொண்டிருந்தான்.

அமெரிக்க ட்ரம்ப் ஆகட்டும், இந்திய மோடி ஆகட்டும், நாட்டுக்கு நல்லது பண்றதாக நினைத்து அவர்கள் செய்யும் கேனதனங்கள் எல்லாமே அவர்களின் சொந்த, சுய சூனியமே. அவற்றிற்கும் இலிமினாட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மார்கெட்டிங், ப்ராண்டிங் எல்லாமே விளம்பர உலகின் ஒரு அங்கம், அது இரட்டை இலையாக இருந்தாலும், தாமரையாக இருந்தாலும். மொத்த உலகமும் விளம்பர மோகத்தில் தான் இருக்கு. விதிவிலக்கு இல்லாமல் இதுக்கு நாம தான் வெட்கபடுனுமே தவிர இலிமினாட்டிகள் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ளக்கூடாது

#வால்பையன்

கேள்வி-பதில் (மனசிதைவு)

கேள்வி:-
புரிதல் நமது மூளையின் செயல்பாடு என்ன? மற்றவர் பேசுவது எழுதுவதை புரிதல் முக்கியமான சிந்தனை, மனசிதைவாளர்களுக்கு சிறிது புரிகிறது சில புரிவதில்லை என்றால் எந்த அளவு அவர்கள் புரிதல் உள்ளது? மூளையில் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனையினால் மனச்சிதைவு ஏற்படுகிறது?

பதில்:-
புரிதல் என்பதை மூளையின் மொத்த செயல்பாடுகளின் இறுதி முடிவு என எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்த செயல்பாடுகள் என்பது ஒரு கருத்தை பிற கருத்துகளோடு ஒப்பிடுதல், அதிக பட்ச சாத்தியகூறுகளை ஆராய்தல் என்பவை.

மனசிதைவு ஏற்படும் நபர்களுக்கு மூளையில் தன்னிச்சையாக சில ரசாயனம் சுரக்கும், உதாரணமாக நாம் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் நமக்கு டோபோமைன் சுரக்கும். மனசிதைவு ஏற்பட்டால் சந்தோசம் ஏற்படாமலே அவர்களுக்கு அது போன்ற ரசாயன சுரப்பு ஏற்படும்

அதனால் தான் அவர்கள் காரணம் இல்லாமல் சிரிப்பார்கள். மூளையில் உள்ள வலபகுதி லாஜிக்கில் சிந்தனைக்கு பழைய ஞாபக அடுக்கில் இருந்து இப்பொழுது இருக்கும் கருத்தோடு ஒப்பிடும். மனசிதைவு ஏற்பட்டால் ஞாபக அடுக்கு சிதறி கலவையாக தோன்றி குழப்பம்.

கனவை உண்மையென்று நம்புவார்கள். தன் நம்பிக்கையே உண்மை. பிறர் அவர்களை முட்டாளாக்க முயற்சிப்பாக நினைப்பார்கள். கோர்வையற்று ஒன்றை ஒன்று தொடர்ப்பு படுத்துவார்கள். டெஸ்ட்ரோஜன் அதிக சுரப்பில் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.

மனசிதைவுவின் ஆரம்ப சாத்தியம் கருவை கலைக்க முயற்சி செய்வது. அவ்வாறு முயற்சி செய்தும் தோல்வி அடைந்தால் அந்த குழந்தைக்கு மனசிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அடுத்து மூளையை பாதிக்கும் போதை வஸ்துகள். பரம்பரையில் தொடர 40% வாய்ப்பு உள்ளது.

ஒரு முறை மனசிதைவு வந்து விட்டால் அவரை கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். முழுமையாக குணமாவது தன் முயற்சியில் மட்டுமே சாத்தியம். தொடர் தூக்கமின்மை. யாரை பார்த்தாலும் பயம். எதன் மீதும் நாட்டமின்மை. ஞாபக மறதி. இயல்பு மாறிய செயல்கள் இவையெல்லாம் மன சிதைவு குறைபாட்டின் அறிகுறிகள்.

நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நம்மால் வலி அல்லது சோர்வு மூலம் உணர முடியும். மன பிரச்சனைகளை நம்மால் உணர முடியாது. நம்மை பொறுத்தவரை நாம் சரியாக தான் இருக்கிறோம். ஆனால் நமக்கு பிரச்சனை இருப்பதை நம்மை சுற்றி உள்ளவர்களால் உணர முடியும். நமக்கே நம் இயல்பு  தவறுவது தோற்றும். அதை கவனிக்காமல் விட்டால் மட்டுமே மனசிதைவின் முழு ஆளுமைக்குள் சிக்குவோம்.

மன பிரச்சனைக்கு தீர்வு, நம்பிக்கையும், மனம் விட்டு பேசுதலும் மட்டுமே

!

Blog Widget by LinkWithin