கருவாடு சுட்டு சாப்பிட்ட இயேசு

வெளிநாட்டில் உள்ள எங்கள் ஊர்க்காரர் ஒருவர் ஒருவர் எனக்கு திடிரென போன் செய்தார்.அவருடைய பெயர் முதல் அடி ஒரு இந்து சமய பெயரையும் கடைசி அடி கிறிஸ்த்தவ மதப் பெயரையும் கொண்ட ஒரு உப்புச்சப்பு உள்ள பெயராக தன்னை அறிமுகப்படுத்தினார்.எங்கள் ஊரைப் பொறுத்த அளவு சுத்தி சுத்தி எப்படி பார்தாலும் சொந்தக்காரகதான் இருப்போம்.
ஆரம்ப உரையாடலே ஒரு அசத்தலாக அமைந்தது.
தம்பி நீ வசந்தாக்காவின் பொடியன் தானே என அவர் ஆரம்ப கேள்வி கேட்டார்
ஓம் என்று நானும் சொன்னேன்
கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார் என ஒரு போடு போடு போட்டார்
நான் தாங்க்ஸ் அண்ணா என்றேன்
தம்பி நீங்கள் பிரிண்டிங் யொப் செய்வதாக கேள்வி பட்டேன் அது விசயமாக கதைக்க எடுத்தனான் என்றார்
நானும் அவசரமாக பெரிய சந்தோசத்திலை ஓம் ஓம் உங்களுக்கு என்ன பிரிண்ட பண்ணணும் எத்தனை பிரிண்ட் என்று என்று விடியக்காலமை நாலு மணிக்கு ஒரு ஓடர் வந்த புழுகத்திலை இன்னும் இரண்டு மூன்று அண்ணாவை சேர்த்து சொன்னேன் .

தம்பி; ஏ போர் பேப்பரை இரண்டாக மடித்த மாதிரி கலர் பிரிண்டிலை ஐந்து லட்சம் நோட்டிஸ் அடிக்கணும் என்றார்
எனக்கு கையும் ஓடல்லை காலும் ஓடவில்லை.என்றை பிரிண்டிங் வாழ்க்கையில் இது தான் முதல் முதலாக ஐந்து லட்சம் நோட்டிசுக்கான ஓடர்
நேரடியாக வந்திருந்தால் உடனே ஒரு யூஸ் சொல்லி கிளாசிலை ஊத்தி இன்னும் ஆளை கூல் பண்ணியிருப்பேன்.என்ன அடுத்த வார்த்தை கதைப்பது எண்டு தெரியாமல் நான் திணறிப்போய் கொண்டிருந்த நேரம் அவரே விசியத்துக்கு வந்தார்
தம்பி எத்தனை காலமாக பிரிண்ட் யொப்பிலை இருக்கிறிங்கள்

ஐந்து வருசமாக இருக்கிறேன்(இது நான்)
ஆனால் கர்த்தர்; உன்னோடு நீ பிறந்ததில் இருந்து இருக்கிறார் என்றார்

எனக்கு இந்த இடத்திலை என்ன கதைகிறது என்று விளங்கவில்லை

“ஓ அப்படியா” என மட்டும் நான் கேட்டு விட்டு எது சம்பந்தாமா நோட்டிஸ் என நான் கேட்டேன்
கர்தரின்; அருளை உலகுக்கு சொல்லுற நோட்டிஸ் என அவர் சொன்னார்.
இதுக்கும் “ ஓ அப்படியா” என மட்டும் நான் கேட்டேன்
என்ரை நாக்கு எப்பவும் சும்மா இருக்காது அது எனக்கு எப்பவும் வில்லங்கத்தை தான் வேண்டித்தரும் என அப்பூ அடிக்கடி சொல்லுவார் அது அப்படியே ஓ அப்படியா என்ற வார்த்தை எனக்கு விளங்க வைச்சுட்டுது.
நான் எதோ வியந்து கேட்டதாக அவர் நினைத்து விட்டார்

கிட்ட தட்ட ஒரு பத்து நாளாக எனக்கு அவர் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்
ஒரு நாளைக்கு சரியாக ஒண்ணரை மணித்திலத்துக்கு மேலாக அவர் என்னோடு போன் பேசுறார்
அந்த ஒண்ணரை மணித்தியாலத்தில் பாதி பைபிளை எனக்கு சொல்லி முடிக்கிறார்
எதிரிலை போன் பேசுகிறவன் ஆகக் கூடியது “ம்” கொட்டுறனோ என்று கூட கவனிக்காமல்
காதிலை ரத்தம் வருகிற அளவுக்கு கர்த்தர் புகழ் கதைக்கிறார்
திடிரென உச்ச சுருதியிலை ஒரு பாட்டு கூட பாடுகிறார்
நான் நினைக்கிறேன் கிட்த்தட்ட ஒரு பத்தாயிரம் முறை
கர்த்தர் உங்களோடு இருப்தாக சொல்லியிருப்பார்

இன்னைக்கு மோர்ணிங் போன் பண்ணினார்
இன்டைக்கு உதுக்கு ஒரு முடிவு கட்டணும் என பெலத்த சிந்தணையில் நான் ஒரு முடிவுக்கு வந்து இருந்தேன்
ஹலோ என்று சொன்ன கையோடு அவர் சொல்லும் முதல் வார்த்தை கர்த்தர் உங்களோடு இருக்கிறார்
நான் உடனே நீங்கள் யாருங்க என கேட்டேன்
என்ன தம்பி அதுக்குள்ளே என்னை மறந்து விட்டிங்களா?என கேட்டு விட்டு அந்த தன்னடைய உப்புச்சப்பு உள்ள பெயரை சொன்னார்

நான் உடனே என்ரை கௌவுரி அம்மனே உங்களை நான் மறப்பேனா?என நான் கேட்டேன்
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தம்பி என்றார்

ஓமோம் கர்த்தர் என்னோடு இருக்கிறார் அவர் என்னோடு கருவாடு சுட்டுச்சாப்பிடுகிறார் என சொன்னேன்
அதற்க்கு பிறகு எங்கள் ஊரிலை பயன் படுத்துற பிறப்பை சந்தேகப்படுகிற ஒரு கெட்ட வார்த்தையும் சொன்னேன்

தம்பி நீங்கள் கதைக்கிறது விளங்கவில்லை நான் பேந்து எடுக்கிறேன் என சொல்லி விட்டு அவர் போனை வைச்சு விட்டார்
நான் இன்னும் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை சேர்த்து இப்ப வைச்சு இருக்கிறேன .எனக்கு அவர் போன் எடுப்பார் என்ற நம்பிக்கையில் ………


நன்றி ரவிராஜன் ரவிக்குமார் - ஃபேஸ்புக் வாயிலாக

2 வாங்கிகட்டி கொண்டது:

ராவணன் said...

என்னுடன் கருவாடு சுட்டு சாப்பிட அந்த யேசு வரவில்லை.

எனக்கு அந்த அளவிற்கு வயசு வரவில்லை.

வேளாங்கண்ணியில் எனக்கு குழந்தை ஏசுவாக காட்சி கொடுத்தான். சாட்சாத் அந்த முருகனே....என் செந்தூர் முருகனே என் கண் முன் வந்தது போல் இருந்தது.

வெளங்காதவன்™ said...

மச்சி... பலே கில்லாடி மேட்டரா இருக்கே. நம்ப ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஒரு நாப் புடிச்சு ஓட்டி விடணும்

!

Blog Widget by LinkWithin