குவியல்!..(29.12.09)

501 பாலோயர்ஸ், இன்று முதல் 500 பாலோயர்ஸை கடந்தவர்களில் நானும் ஒருவன் என சொல்லி கொள்ளலாம், அல்லது பரிசல் சொல்வது போல் உள்பனியனில் காலர் வைத்து தூக்கிவிட்டு கொள்ளலாம், ஆனாலும் இவையனைத்தும் உங்களாலே சாத்தியமானது, ஊர்கூடி தேர் இழுப்பது போல், சிறுதுளி பெருவெள்ளம் போல், நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு 500 பேர்கள் தான், உங்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

************

ஆணாதிக்க சிந்தனைகள் நிரம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன், முக்கியமாக மேலாண்மை தொடர்பான குறள்களுக்கு, அதில் ஒன்று தான்!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )


இந்த குறளுக்கேற்ப வாழும் சாட்சியாக நான் ஒருவரை சந்தித்தேன் என்றால் அது ஈரோடு கதிர் தான்! அவரை தவிர அந்நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக யாரும் செய்திருப்போமா என்பது சந்தேகமே! “பத்து பேர் வருவாங்களா வால்” என பேச தொடங்க ஆரம்பத்திலிருந்து எண்ணிக்கை கூடி கொண்டே வர சிறிதும் சளைக்காமல் காலத்திற்கேற்றவாறு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டே இருந்தார்!
பத்து எங்கே இருக்கு நூறு எங்கே இருக்கு, வந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூட பெரிய அறை, இருக்ககைகள், கல்யாண வீட்டிலேயே சாப்பாடு இல்லாமல் திரும்பும் இந்த காலத்தில் அனைவருக்கும் சாப்பாடு என குறையில்லாமல் செய்து முடித்ததில் குழு நேர்த்தியில் அவருக்கு இருக்கும் ஆளுமையும், அனுபவமும் எங்களுக்கு தெரிந்தது!

இதுவரை உலகெங்கும் நடந்த முக்கிய பதிவர் சந்திப்புகளில் ஈரோட்டில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியும் இடம்பெறும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இனிவரும் நிகழ்ச்சிகளும் இதே போல் திறம்பட கதிர் அவர்கள் நடத்தி காட்டுவார் என்பதில் வந்திருந்த யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது!

என்னாலும், ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமலும் அதிருப்தியடைந்த நண்பர்கள் தங்கள் கருத்துகளை முதுகுக்கு பின் சொல்லாமல் வெளிபடுத்தியது மிக்க மகிழ்ச்சி, நிகழ்ச்சி சிறப்புற நடக்க நீங்களும் ஒரு காரணம்! கதிர் அவர்களின் நிழலாய் செயல்பட்ட ஆரூரான் மற்றும் நண்பர்களின் பணியும் அசாதாரணமானது!!

*********************

அவதார்!




இந்த படத்தின் கிராபிக்ஸை அனைவரும் வரிக்கு வரி பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நெருடல், படம் ஆரம்பித்து பத்து நிமிடத்துக்கு மேல்,  என்ன கிராபிக்ஸ், எங்கே கிராபிக்ஸ் என்று தேடி கொண்டிருந்தால் நாம் படத்தின் கதையில் ஒட்டவில்லை என்ற அர்த்தம்! அது போகட்டும் படத்தை பார்த்த பிறகு வேறு சில யோசனைகளும் தோன்றியது, பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! டார்வீனில் ஆரம்பித்து பலர் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து விட்டார்கள், இனி என்ன நடக்கலாம் என ஹிண்ட்ஸ் எடுத்து கொண்டிருக்கிறேன், அதையும் தொடர் பதிவாக போட்டு தாக்கலாம்!

***********************

மேட்டூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே செல்ல ஆவலாய் இருந்தேன்! அதே போல் இந்த வருடமும் ஆவலாய் முடிந்ததே தவிர செல்லமுடியவில்லை!, மதுரை சென்று விட்டேன்.(இப்பெல்லாம் பொண்டாட்டி பேச்சு நிறைய கேக்குறனாக்கும்), அடுத்த வருடமாவது செல்ல வேண்டும்! சென்றிருந்த நண்பர்கள் புகைபடம் இருந்தால் வெளியிடவும்!

***********************
எனது டுவிட்டர் ஐடி!

mokkaiwriter
(சொல்றதை தான் செய்வோம், செய்யுறதை தான் சொல்லுவோம்)

***********************

புதிர்!

கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

எனக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!

நடந்து முடிந்த விசயங்களை என்ன செய்தாலும் மாற்றமுடியாது என்பதை நன்கு அறிவேன்! கற்பனை பிம்ப எதிர்பார்ப்பில் என்னை பார்த்தவர்களுக்கு அன்றைய நாள் நான் வில்லனாகி போனேன்! இருக்கட்டும் இன்றைய சூப்பர்ஸ்டாரே அன்றைய வில்லன் தானே!. நான் மற்றவர்களை கலாய்த்தது பற்றி எனக்கு எந்த வருத்தமுமில்லை, எனக்கு முன்னரே பழக்கமில்லாத யாரையும் நான் கலாய்க்க வில்லை என நம்புகிறேன்! புலவர் ராசு அய்யாவை தவிர! அதற்கு போன பதிவிலேயே வருத்தமும் தெரிவித்திருந்தேன்!

சீனா அய்யா, வசந்தகுமார், ஸ்ரீதர் அனைவரும் எனக்கு முன்னரே பழக்கமானவர்கள், நட்போட என்னிடம் இன்றும் பழகி வருபவர்கள், அவர்களுக்கு எனது குணம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் வருத்தம் இருக்காது என நம்புகிறேன்! ஆனால் எனக்கும் நடந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை, ”நான் ஏன் கவனிக்கனும்” என்ற தோணியில் நான் சொன்னதாக சஞ்சய் அங்கிள் எழுதியது தான் கொஞ்சம் உறுத்தல்! அந்த வார்த்தை என்ன சொல்லும் என்றால், நிகழ்ச்சியே வால்பையனுக்கு பிடிக்கல, அதனால வேணும்மின்னே பண்ணிய கலாட்டா என்ற எண்ணத்துக்கு கொண்டு செல்லும்!

அதை கவனிக்க அவுங்க இருக்காங்க தல, நமக்கு வேற வேலை இருக்குன்னு சொல்ல வந்தது, இப்படி மாறி போகும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, ”சோசியகாரங்களை சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்குறதால எல்லா சோசியகாரங்களும் சேர்ந்து எனக்கு சூனியம் வச்சிடாங்கன்னு நண்பர் ராதாமணாளன் காலையிலிருந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டு இருக்கார்!”(தலைப்புக்கு காரணம்). மனம் புண்படும் படி பேசியிருந்தால் அது நிச்சயமாக உளமறிந்து செய்யவில்லை! அங்கிள் நம்புவாராக!

சென்னையில் இருந்து நண்பர்கள் வருவது உறுதியானவுடன், அறை எடுக்கும் பொறுப்பை நானே எடுத்து கொண்டேன், நான் சென்னை செல்லும் பொழுதெல்லாம் ஒரு இளைய சகோதரனை கவனிப்பது போலவே அன்பாக கவனிக்கும் அண்ணன்களுக்கு இதையாவது செய்யும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மொத நாளே கொஞ்சம் ஓவராதான் போச்சு! நண்பர்கள் வருவதற்கு தாமதமானதால் நான் வீட்டிற்கு செல்லாமல் அந்த அறையிலேயே தங்கிவிட்டேன்! சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வந்த நான் ஞாயிற்றுகிழமை இரவு தான் சென்றேன்!



நான் அந்த அளவுக்கு ஸ்டெடியாக இருப்பேன் என்ற டவுட்டு எனக்கே இருந்ததால்(போட்டோவை பார்க்க) எனது தம்பி பிலாலையும் உடன் வைத்திருந்தேன்! அவருக்கு குடிக்கும் பழக்கம் இல்லை,(அவனுக்கு என்ன கோவமோ, போன் அடிச்சா எடுக்க மாட்டிங்கிறான்). எனது செயலை நியாயபடுத்தும் நோக்கில் இந்த பதிவு எழுதவில்லை, எனது பொறுப்புணர்வு எந்த அளவுக்கு மட்டமானது என்பதை நானே ஒருமுறை அசைபோட்டு கொள்கிறேன்! நான் முதல்முறை அப்துல்லா அண்ணனை சந்தித்த நிகழ்ச்சியில், பரிசல்காரனை எவ்வளவு தொந்தரவு பண்ணினேன் என நினைவில் வைத்திருப்பார் என நம்புகிறேன்!(இதிலென்ன பெருமை வேண்டிகிடக்கு)

கதிர் அவருடய பதிவில் ஈரோடு பதிவர்களும் பொருளாதார ரீதியில் பங்கெடுத்து கொள்ளலாம் என எழுதியதும், ரம்யா தொடர்பு கொண்டு தானும் பங்கெடுப்பதாக சொல்லியிருந்தார். கதிர் மறுக்கவும் என்னை தொடர்பு கொண்டு என் பெயரில் பணம் கட்டிவிடுகிறேன் என்றார்! மறுநாள் அது ரம்யாவுடய பணம் தான் என்று கதிரிடம் சொல்லிவிட்டேன்! என் பெயரில் இருந்தாலும் அது ரம்யா அவர்களின் பங்கெடுப்பு தான்! என்னளவு பொருளாதார பங்கெடுப்பை செய்திருப்பேன் என நம்புகிறேன்!

என்னையும் ஒரு ஒருங்கினைப்பாளாரக தனது பதிவுகளில் மதிப்பளித்த கதிர் மற்றும் ஆரூரான் அவர்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை! அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்.(இனிமே கூப்டா தான).

****

மேடி திருமணத்தில் என்ன நடந்ததென அறியாதவர்கள், அந்த பதிவிலிருந்து ஒரு பிட்டை எடுத்து எனக்கு போடுகிறார்கள், ரொம்ப நன்றி. இப்படி இருந்தா தான் எனக்கும் பிடிக்கும்!

நன்றி வாழ்த்துனவுங்களுக்கும், திட்டுனவங்களுக்கும்!

என்னோட 250 வது பதிவா இதை எழுதுறதுல ரொம்ப சந்தோசம்! கதிர் தான் ஆரம்பத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார், எனக்கு பொறுப்பு விசயத்தில் சிரத்தை மிக குறைவு என்பதால் முன்னரே எனது பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சொல்லிவிட்டேன், கதிரும், ஆருரானும் பொறுப்பை எடுத்து கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் மிக சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்! எனது குறுக்கு கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி!

புலவர் ராசுவை நான் கேள்வி கேட்டது தான் பலரின் கோவத்துக்கு காரணம் என்று காலையில் பாஸ் சொல்லி தான் தெரியும், புலவர் ராசு பதிவர் என்று நான் நினைத்திருந்தேன், அதனால் என்னை பற்றி முன்னரே அறிந்திருப்பார் என நினைத்தேன்! அதனால் அவரிடம் மட்டும் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன்! சஞ்சய் அங்கிளுக்கு வயசாகி போச்சு அதனால் என்னை மாதிரி சின்னப்பசங்க கேள்வி கேட்பதை ஏற்று கொள்ளமுடியவில்லை! ஒரு நிகழ்ச்சின்னா கலகலப்பா இருக்கனும்! சும்மா தூங்கி வழியக்கூடாது!

சென்னையில் இருந்து வந்திருந்த ரம்யா, கலையக்கா, சித்தர் சுரேஷ், அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், தண்டோரா, கேபிள் சங்கர் மதுரையில் இருந்து வந்திருந்த சீனா ஐயா, கார்த்திகைபாண்டியன், ஸ்ரீதர் கோவையிலிருந்து வந்திருந்த லதானந்த், தமிழ்மணம் காசி, சஞ்சய் அங்கிள் திருப்பூரிலிருந்து வந்திருந்த வெயிலான், பரிசல்காரன்,ஈரவெங்காயம் ஆகியோருக்கும் நன்றி! உங்களால் தான் சந்திப்பே சிறப்படைந்தது!

சிறப்பு வருகையாக வந்திருந்த பழமை(ப்)பேசி, நாகா ஆகியோருக்கும் நன்றி!
உடலுழைப்பை தாராளமாக வழங்கிய ஜாபர், அகல்விளக்கு ஜெய்சிங், பாலாசி ஆகியோரையும் மறக்க முடியாது! நான் பதிவெழுத வந்த காலத்திலிருந்து இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து என்னை செம்மை(இது தான் உங்க செம்மையா) படுத்தி கொண்டிருக்கும் நந்து அண்ணாவுக்கும் எனது நன்றிகள்!


பல புதிய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! திருப்பூரில் இருந்து வந்திருந்த பேரழகன்! குடும்பத்துடன் வந்திருந்த தொழிநுட்ப பதிவர் சுமஜ்லா ஆகியோருக்கும் நன்றி! அய்யா வானம்பாடிகள், இரா.வசந்தகுமார் ஆகீயோருக்கும் நன்றி!
பலரது பெயர் விட்டு போயிருக்கலாம், கிட்டதட்ட நூறு பேர் வந்திருந்ததாக கதிர் சொன்னார்! நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்து அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

படங்களை காண இங்கே சொடுக்கவும்!

*************

நிகழ்ச்சியில் ஹேக்கிங் பற்றி பேச நேரம் கேட்டேன்! குறைவான நேரமே இருந்ததால் விரிவாக பேசமுடியவில்லை, தனிப்படிவாக எழுதும் படி கதிர் கேட்டு கொண்டார், அதனால் இங்கேயே!

ப்ளாக்கருக்கும் ஜிமெயிலுக்கும் ஒரே பயனர் கணக்கு தான், யாரும் உங்கள் ப்ளாக்கை ஹேக் பண்ணவருவதில்லை, அவர்களது குறி உங்கள் ஜிமெயில் தான்! ஜிமெயிலில் இருக்கும் நண்பர்களுக்கு உங்களை போலவே மெயில் அனுப்பி பணம் பறிக்க வாய்புண்டு! அவர்களுக்கு உங்கள் ப்ளாக்கை பற்றி எந்த கவலையும் இல்லாததால் அதை அழிக்க வாய்புண்டு!

orkut இந்த சுட்டியை நீங்கள் அழுத்தினால் அது ஆர்குட்டுக்கு செல்லாது, மாறாக யாஹூவிற்கு செல்லும், இதே போல் ஆர்குட் இணைப்பு கேட்டு உங்களுக்கு வரும் லிங்கை அழுத்தினால் அது நேரடியாக பயனர் சொல் உள்ளிட ஆர்குட் தளத்திற்க்கு செல்ல வேண்டும், மீண்டும் ஒருமுறை பயனர் சொல் கேட்ககூடாது! அப்படி கேட்டால் அது போலி ஆர்குட் தளம், அங்கே உங்களது ஜிமெயில் பயனர் சொல்லை இடும் போது, உங்களுடய கடவுச்சொல் திருடப்படும், செர்வர் பிஸியென்ற அடுத்த பக்கத்திற்கு செல்லும் பொழுது உண்மையிலேயே தொழில் நுட்ப பிரச்சனை போலன்னு நினைச்சு நீங்க அதை பற்றி மறந்து விடுவீர்கள்! தெரியாத லிங் வரும்பொழுது அதை அழுத்தாமல் இருப்பதே ஹேக்கிங்கை தடுக்கும் ஒரே வழி!

எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, உதாரணத்துக்கு சொல்லனும்னா குரளி வித்தை காட்டுறவன் கூடவே ஒரு நாலு பேரை வச்சிருப்பான், முதலில் அவனுங்க தான் சுத்தி நிப்பானுங்க, அரைமணி நேரத்தில் இருபது, முப்பது பேர் சேர்ந்திருவாங்க, ஆனா கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்த அந்த நாலை பேரை நம்மால கண்டுபுடிக்கவே முடியாது, இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை, ஆனாலும் மனுசன் புத்தி மட்டும் மாறாதே, அதனால தான் பெரும்பான்மைகிட்ட தன்னை ஒப்பு கொடுத்துகிட்டு சுத்துறான்!

நூத்துக்கு எண்பது பேருக்கு மேல இந்த மனநிலை உள்ளவர்கள் தான், சொந்த அண்ணன் தேர்தல்ல நிப்பாரு ஆனா ஓட்டு வேற ஆளுக்கு போடுவான், ஏன்னு கேட்டா, நான் ஓட்டு போட்டா அவரு ஜெயிக்க போறாருன்னு சொல்லுவான், தன்னை எப்போதும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது போலவே காட்டிகொள்வது பொதுபுத்தியுள்ள மனிதனின் குணம், ஜெயிக்கும் ஆட்களை பொறுத்து அவர்களது இடமும் மாறும், ஆனால் பொதுபுத்தி மட்டும் போகாது, தன்னம்பிக்கை குறைவான ஒருவித பாதுகாப்பற்ற தன்மையா உணர்பவர்கள் இந்த பொது புத்திகாரங்க!, இவுங்களை ஒண்ணும் பண்ணமுடியாது, ஏன்னா தப்பாவேயிருந்தாலும் அதிகம் பேர் சரிதான்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு நம்புறவங்க இவுங்க!

பொதுவாவே மனுசனுக்கு மிஸ்டிரிஸ் எனப்படும் ஆச்சர்யங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், பொதுவா ஒரு விசயத்தை உண்மைன்னு நம்புறதுக்கு அதிகபடியான சாத்தியகூறுகள் இருக்கான்னு பார்ப்பான், அவனாலே உள்ளேயே போகமுடியலைனா அதை அப்படியே நம்பும் மனநிலைக்கு தள்ளப்படுவான், அதற்கு அவன் சொல்ற காரணம் தான் தமாசா இருக்கும், அந்த கலைக்டர் நம்புறாரு, அந்த அரசியல் தலைவர் நம்புறாரு அதனால நானும் நம்புறேம்பாம், பொதுபுத்தி உள்ள மனிதர்களுக்கு மாற்று கோணம்னா என்னானே தெரியாது, ஒருத்தன் அவனுக்கு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ தான் இருக்க முடியும், அவனால ஒருத்தரை தனிபட்ட ஒரு புரிதல் கொண்ட மனிதரா பார்க்கவேமுடியாது!

கைரேகை ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபடுவது போல் நமது கருத்துகளிலும் வேறுபடுகிறோம், சிலருக்கு மட்டும் சில விசயங்களில் ஒத்த கருத்து இருக்கும், ஆனால் ஒருவருக்கு முழுமையான ஜெராக்ஸாக யாருமே இருக்கமுடியாது, இந்த பொதுபுத்தி மக்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம், தனக்கு ஒரு ரோல்மாடல் இல்லைனா வாழ்கையே முழுமையடயாதது போல் உணர்வாங்க, தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, தனித்தன்மைனா கிலோ என்னவிலைன்னு கேட்பாங்க!.

அஸ்வினி,ப்ரணி எல்லாம் நட்சத்திரம் இல்லை, அவையெல்லாம் 360 டிகிரிய 27 பிரிச்சி சும்மா வச்சிகிட்ட பேரு, அதெல்லாம் கற்பனை தான், இருந்தாலும் உங்களுக்கு அடிப்படை வான சாஸ்திரம் தெரிஞ்சிருக்கனும், அப்போ தான் உங்களுக்கு புரியும், கற்பனையை நான் ஏங்க தெரிஞ்சிகனும்னு கேள்வி கேட்டா நீங்க முட்டாளாவோ, லூசுப்பயலாவோ பார்க்கபடலாம், எனக்கு என்ன சந்தேகம்னா ஒருத்தரை சோசியம் சொல்லி ஏமாத்த அந்த கற்பனை குதிரைங்க எல்லாம் தேவையேயில்ல, நீ பொறந்த தேதி பதினெட்டா, ஒவ்வோரு பதினெட்டாம் நாளும் நீ புதுசா பொறக்குற மாதிரி, அதனால நீ வெளியூர் பயணத்தை, கொடுங்கல், வாங்கலை தவிர்ன்னு சொன்னா மண்டையாட்டி கேட்க நாப்பது பேர் இருக்கான், ஆனா எவனுமே ஒண்ணாந்தேதி பிறந்தவன் தினமும் இதை கடைபிடிக்கனுமான்னு எதிர் கேள்வி கேட்க மாட்டான்!
அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!

ஜாதகம்னா என்னான்னு சொல்லி கொடுக்க வர்றவங்களே சொல்ற முத வார்த்தை இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது! ஆனாலும் மனிதனுக்கு தன்னை பற்றிய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிகிற ஆர்வம் எதாவது செய்ய சொல்லிகிட்டே இருக்கு, மேலும் தன்னை பற்றிய மற்றவர்களது அபிப்பிராயங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் கொடுப்பான், அது ஒருவித சுய பரிசோதனை தான், ஆனால் சோதிடம் என்பது அதிர்ஷ்டத்துக்கு மறுபெயர், தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்பற்ற தன்மையா உணர்ற மக்களை ஜாதகம் என்ற பெயரில் எளிதில் ஏமாற்றமுடியும்! ரொம்ப சுலபமா அதை செய்யலாம், ஒரு பெண் கர்ப்பமா இருக்கான்னு வச்சுகோங்க, என்ன தெரியுமா சோசியகாரரு சொல்லுவாரு, நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!



ஜோதிடம் இந்துதுவாவின் நீட்சி தான்னு எல்லோருக்குமே தெரியும், எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்! உலகத்துல 6 ல ஒருத்தன் இந்தியன் ஆனா எல்லோருமே ஜோசியம் பாக்குறதில்லை, அதனால நாசமாவா போயிட்டாங்க, நம்மளை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் வாழ்க கோஷம் போடும் போது ந்மக்கு ஒரு சந்தோசமாதான் இருக்கு இல்லையா!? இல்லைனா இத்தனை நடிகர்களும், அரசியல்வாதிகளும் பொழுப்பு நடந்த முடியுமா, அந்த கோஷ்டியில் இப்போ இன்னும் சிலர் சேர்றாங்க!


********************


டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!

சோதிடமும், சந்திரனும்!

//////வால்பையன் said...
எனது பதிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு ஒரு டெம்ப்ளெட் வச்சிருந்திங்களே!
இடம் பத்தலைன்னு எடுத்துட்டிங்களா?/////

SP.VR. SUBBIAH said...
பகுக்கவும், வகுக்கவும், கழிக்கவும், கூட்டவும், பெருக்கவும், ஒதுக்கவும், அள்ளவும், கொட்டவும் எனக்கு
நேரமில்லை. ஆனால் பகுத்தறிவு பற்றி அந்த டெம்பிளேட்டில் எதுவும் சொல்லவில்லையே? இறைவனை
நம்புபவனுக்கும், நம்பாதவனுக்கும், அறிவு பொதுவானதுதான். அறிவை வைத்து பகுப்பதும் வகுப்பதும்
அவரவர்கள் இஷ்டம்.

*********************

மேலிருப்பது சுப்பையா வாத்தியாரின் இந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டமும் அதற்கு அய்யாவின் பதிலும்!,

சென்ற ஆண்டு சூலை மாதம் நான் எழுதிய ”இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்” என்ற பதிவும், அதற்கு எதிர்வினையாக நண்பர் கூடுதுறையும் அண்ணன் உண்மைதமிழனும் எழுதிய பதிவிற்கு நான் எழுதிய பதில் “கூடுதுறை மற்றும் உண்மைத்தமிழன் பதிவுகளுக்கு பதில்!”, இந்த இரண்டு பதிவுகளுக்கு பிறகு சுப்பையா வாத்தியார் பதிவின் முன்னால் கொட்டை எழுத்தில் “எனது பதிவு தன்னம்பிக்கையை குறைக்கலாம், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது என்று வைத்திருந்தார்” இப்போ நேரமில்லையாம், ஆனால் எனக்கு நேரமிருக்கே, எதிர்வினையாற்ற!

********************

இந்த பதிவிலேயே சொல்லியிருந்தேன், சந்திரன் தோன்றியது எப்படியென்று, இங்கேயும் கொஞ்சம் முன்னோட்டம்,

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் மீது ஏற்பட்ட விண்கல்லின் மோதலில் தோன்றியது தான் நிலா என்ற துணைக்கோள், இந்த சூரிய குடும்பத்தில் பூமியை விட பெரிய துணைகோள்கள் சுற்றி வருகின்றன, ஆனால் பாருங்கள் தம்மாத்துண்டு புதன் கிரகம் நம் மீது செலுத்தும் கதிரியக்கத்தை அவைகள் நம் மீது செலுத்தாது!, ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது!. சந்திரன் பூமியை சுற்றி கொண்டு தம்மை தாமே சுற்றி வரும் ஒரு சிறு கிரகம், அதனால் பூமியில் low tide, high tide ஏற்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு மிக முக்கிய காரணம் பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!



அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!, சரி சந்திரன் மட்டும் தான் எனக்கு எதிரியா என்றால், பதில் சந்திரன் மட்டுமல்ல, மொத்த சோதிடத்துக்கும் நான் எதிரி, ஏன் என்று விளக்க முயற்சிக்கிறேன்!

மனிதன் நாகரிக வளர்ச்சி பெற்றாலும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது, இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும். ஒரு பகல்,ஒரு இரவு சேர்ந்து ஒருநாள் என கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாறுதல்களுக்கும் ஆகும் கால அளவை அவர்கள் குறித்து வைத்திருந்தனர்!,அவர்களுக்கு மனிதர்களின் வருங்காலத்தையோ, குணாநலன்களையோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இருந்ததில்லை, ஆனால் பின்னாள் வந்த சில பொறம்போக்குகள், அனைவருக்கும் பொருந்துவது போல் சில பலன்களை எழுதி காசு சம்பாரிப்பது மட்டும் அல்லாமல், அதை பயன்படுத்தி எப்போதும் மக்கள் சுயசிந்தனையில்லாமல் வாழ செய்து விட்டார்கள்!



நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................

பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)

12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!

******************

டிஸ்கி:ரொம்ப நாளாக சர்ச்சைகுறிய பதிவு எழுதவில்லை என்று வருத்தப்பட்ட அ.மு.செய்யதுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

மேவிக்கு மட்டும் தான் ஞாபகம் வருமா!?

முதலில் மேவியின் பதிவை படித்து விடுதல் உத்தமம்!

என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் அடித்த சரக்கு ஞாபகமாவே இருக்கு. சரக்கு என்றால் அது நான் அடித்த MC சரக்கு தான். மற்றவையில் எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று அனுபவிக்காமல் MC, MC என்றே இருந்தேன். MC ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் தண்ணிர் ஊற்றி கொண்டு ..... முருக்கு , சிப்ஸ் கடிச்சி கிட்டு ....... சியர்ஸ் சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் பார்ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன பாட்டில்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் SCOTCH, டகிலா எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......




வீடியோ தெரியலைனா இதை அழுத்துங்க

துணுக்ஸ்!

இன்று இரவு NDTV-HINDU!? டீவியில் byte it என்ற நிகழ்ச்சியில் நண்பரும், பதிவருமான அண்ணன் வடிவேலன் அவர்களின் பேட்டி வருகிறது, அண்ணாரின் கணிபொறி மென்பொருள்களின் கூடம் என்ற வலைப்பதிவு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் உழைப்பே காரணம், அவரை மேலும் உயர வாழ்த்துவோம்


********

வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், சென்ற முறை நடந்த சந்திப்பில் மேடியின் திருமணம் மிக முக்கிய காரணமாக இருந்தது, பல நண்பர்களுக்கு மேடியும்டன் நேரடி அறிமுகமில்லாமல் வர தயங்கியதாக தெரிகிறது, அதனால் இம்முறை பதிவர்களோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் சேர்த்து அழைப்பு விடப்படுகிறது!, பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!



இந்த முறை முழு பொறுப்பையும் அண்ணன் கதிர் ஏற்றுள்ளார், அதனால் தைரியமாக வரலாம்! வரும் முன் முன்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ ஒரு முறை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்!

வால்பையன்:9994500540
ஈரோடு கதிர்:9842786026

வெளீயூர் பதிவர்களுக்கு சிறப்பு சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு!

*********

போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.

ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********

2012

புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, தங்கமணியின் வற்புறுத்தலினால் போய் அமர்ந்தேன், கிராபிக்ஸ் ,கிராபிக்ஸ் மீண்டும் அதே. இமயமலை பகுதியை சீனாவாக காட்டி அரசியல் செய்ததாக சிலர் சொல்லியிருந்தனர், இயமலையின் அந்த(பின்) பக்கம் யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அதுவும் நமக்கு தான் சொந்தமா!?



கடைசி கப்பல் ஆபத்தில் சிக்க காரணமாக இருப்பது நாயகன் மற்று குரூப், ஆனால் அந்த சிக்கலை அவரே தீர்த்து வைக்க, என்னவோ அழிந்து கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து, செண்டி”மெண்டல்” தனம் எல்லா பக்கமும் தான் இருக்கு!

**********

நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான், போன வாரம் தண்ணீர் கிடைக்காமல் லோக்கல் தண்ணிர் ஊற்றி சரக்கு அடுத்து தொண்டையில் கரகரப்பு, மூக்கடைப்பு, ஒரே தும்மல்!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!

*********

கவிதை மாதிரி(அடிக்க கூடாது)

நீல வடிவ
வண்ணத்தில்
குழைத்த
சதுர வண்ண
மலர்கள் முன்
உயர்ந்ததொரு
ஆற்றினைப் போல்
படுத்து கிடந்த
அருவியின் பின்
கவிழ்ந்த கிடந்த
குவளைக்குள்
உருண்டிருந்த
பூகோளத்தின்
ஒற்றைகால்
சந்திரன்
நான்

********

டிஸ்கி:குவியல் தான், பெயர் மாற்றி!

முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லது கொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது, அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்தது கொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியா என பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களிடம் வேலை பறிக்கப்பட்டது, நாடு திரும்ப முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டனர்(வழக்கம் போல் வெளிவராது). அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும் சற்றும் எதிர்பாராத சரிவை சமாளிக்க முடியாமல் பொருளாதார பின்னடவை கண்டது, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடிந்த தகுதியான சில நாடுகள் மட்டும் காலூன்றி நின்றது, அமெரிக்க அரசும் பல கோடி நிதி அளித்து பல முதலாளிகளுக்கு உதவி செய்தது, ஆனாலும் நேற்று வரை அமெரிக்காவில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 124!. பலகோடிகள் பேப்பரை டாலராக மாற்றி அரசு பல நிறுவனங்களில் தம்மையும் பங்குதாரராக ஆக்கி கொணடது! (இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல)

****

இந்தியாவில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயங்களில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன! அதனாலேயே பலருடய எதிர்ப்பை அவர் சம்பாரித்தார், இன்றும் சில முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு இந்திராகாந்தியை பிடிக்காது, அதற்கு பல அரசியல் காரணங்கள் கூட சொல்வார்கள்!

தமிழகத்தில் நான் பிறப்பதற்கு டி.வி.எஸ் கையில் போக்குவரத்து இருந்ததாக சில பெருசுகள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இன்றும் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு டி.வி.எஸ் 50 யாவது கையில் இருந்திருக்கும் அதாவது வாங்க வைக்கப்பட்டிருப்போம்! இன்றும் கூட பெங்களூரில் தனியார் பேருந்துகளும் அரசுக்கு இணையாக இயங்குகின்றன!, ஒருவேளை அரசு பேருந்து இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம்! சில முதலாளித்துவவாதிகள் சொல்வார்கள் ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் பலருக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று.

இந்தியாவில் இருக்கும் தனியார் கேபிள் ஆப்புரேட்டர்கள் கண்டிப்பாக தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்ப வேண்டும், அவர்களும் ஒளிபரப்புவார்கள் ஆனால், சிக்னல் மிக குறைவாக உள்ள பேண்ட்வித்தில் வெளிச்ச புள்ளியாக, இரைச்சலாக இது தான் பொதிகை என்று நாமே கண்டு பிடித்து கொள்ள வேண்டியது தான்! அரசுக்கு இப்படியென்றால் தனியாருக்கு எப்படியிருக்கும் இருட்டடிப்பு!?, எத்தனை பேருக்கு கொடுத்தாலும் வலியவன் ஒருவன் அனைவரையும் கவுட்டுக்குள் அமுக்கி வைத்து மேலேறி உட்கார்ந்து கொள்வான், நுகர்வோர் தேவைகளை மறந்து தருவதை பெறும் நிலைக்கு தள்ளப்படுவோம்!



***

மேட்டர் என்னான்னா!. கம்யூனிஷம் என்பது தனி மனித கொள்கையாக இல்லாமல் ஒரு நாடு தன் கொள்கையாக வைத்திருந்தது, அது சக வல்லரசான ரஷ்யா , இன்று அதுவும் பல துறைகளை தனியாருக்கு வழங்கி கொண்டிருக்கிறது! ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

!

Blog Widget by LinkWithin