கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 1(69)

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அடிக்கும் காலிங் பெல் சத்தம் சுந்தருக்கு தொண்டைக்குள் கைவிட்டு எதையோ இழுப்பது போல் இருந்தது!, அகிலாவும் கிட்டதட்ட உறைந்தே போய் விட்டாள், ஊருக்கு போயிருக்கார் இன்னைக்கு வரமாட்டார்ன்னு சொன்னதால் தானே வந்தேன்! சே இப்படி மாட்டிகிட்டேனே, ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு இனிமே எப்படி மூஞ்சிய பாத்துகிறது, எண்ணங்கள் தறிகெட்டு ஓடினாலும், உண்மையென்னவோ கதவில்லாத அறைக்குள் மாட்டி கொண்ட எலி தான்!

அகிலா தலை வழியாக நைட்டியை மாட்டி கொண்டிருந்தாள், இந்த பாழாப்போன உடம்புக்கு ஆசைபட்டு மானம் போகப்போகுதேன்னு நெற்றியில் அடித்து கொண்டான் சுந்தர், ஆரஞ்சு உதட்டில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ்ஷ் என்றாள்!, சுற்றும் முற்றும் ஒழிய இடம் தேடியவள் சட்டென்று முகம் மாறினாள், பால்கனியை கைகாட்டினாள், அதை ஒட்டி செல்லும் வேஸ்ட் வாட்டர் பைப் மூலமாக கீழே போகலாம்! ஆனால் அது வழியாக திருடர்கள் வரலாம் என்பதால் இடையில் எங்கேயும் ஆணி அடிக்காமல் சுத்தமான வழுக்கு கம்பம் போல் இருந்தது!

ஊருக்கு போயிருக்குற என் பொண்டாட்டிக்கு தெரிந்தால் என்ன ஆகும்! தலையில் அடித்து கொண்டு ஒரேடியாக போய்விடுவாள், இருக்குற மானமும் சுத்தமாக போய்விடும், ஒருவேளை அவள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தாள் என்ன பண்ணுவாள், சே சே அவ அந்த மாதிரியெல்லாம் பண்ண்மாட்டாள், இப்படி நம்பி தானே இந்த ஆம்பளைங்க தப்பு பண்றோம், விரக்தியில் செத்து போகலாம் போல் இருந்தது சுந்தருக்கு, அகிலாவோ அவன் தலை மறந்த பின்னர் தான் கதவை திறக்க முடியும், அடுத்த பெல் சத்தமும் கேட்டது!சுந்தர் கம்பியில் கால் வைத்து வெளிபுறம் வந்தான், பைப்பை இறுக பற்றியதும், பால்கனி கம்பியியிலிருந்து கையை எடுத்தான், அடுத்த நொடி சர்ர்ர்ர்ரென்று அவனது உடல்எடை பூமிக்கு துரோகம் செய்யாமல் அவனை கீழே இழுத்து சென்றது, பொத்தென்ற சத்தம் சுத்தமாக என்ன நடந்திருக்கும் என்று அகிலாவுக்கு உணர்த்தியது, கண்களை துடைத்தவாறு கதவின் தாழ்பாளை நீக்கினாள், வெளியே இரண்டு இளைஞர்கள்!

யார் நீங்க? என்றாள் அகிலா, இங்க பிரதீப்னு சாஃப்ட்வேர் இஞ்சினியர் குடியிருந்தாரே!, அகிலா முகம் சிவந்தது, பிரதீப்பா, அறிவு கெட்ட முண்டங்களா!, இது என்ன குடியிருக்குற வீடா இல்ல லாட்ஜாடா, நடுராத்தியில வந்து கதவை தட்டிட்டு பிரதீப் எங்கேனு எங்கிட்ட கேக்குற, இல்லய்ங்க என்ற சொல்ல வாயெடுத்த இளைஞர்களை பேசவிடவேயில்ல அகிலா!, போங்கடா அந்த தறுதல வீடு மேலயிருக்கு, தினம் ராத்திரியான குடிச்சிட்டு கூட்டமா சேர்ந்து ஆடவேண்டியது, உங்களை சொல்லி குத்தமில்லடா, இந்த செக்கரட்டரிய சொல்லனும், வாடகை வருதுன்னு மொட்டபசங்களை குடிவைக்கிறான் பாரு, நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்!
கோபத்தோடு படாரென்று கதவை சாத்தினாள் அகிலா!

திருப்ப முடியாதவை!

ஆளே மாறிகினாய்யா, சோக்காகீது கண்ணாடி, நிஜாரெல்லாம், பாத்து ஒரு அஞ்சு வர்ஷம் ஆகும், கண்ணாலாம் கட்டிகினானாம், ரெண்டு புள்ளங்கலாம், பழ்சயெல்லாம் மறந்துட்டானாம்,
நமக்கு தான் ஒரு இழவும் மறக்கமாட்டிகுது, நெஞ்சுல தச்ச முள்ளுகணக்கா குத்திகிணேருக்கு.
ஆனா ஒன்னு உதவி செய்யாங்காட்டியும் பரவால, உபத்ரம் மட்டும் செய்யகூடாது என்ன சகா நாஞ்சொல்ரது, வர்டா!


சரி உடு மச்சி நடந்தது நடந்துடுச்சி, இந்த டாவுகளே இப்பிடித்தான், நீ பேஜாராகாதன்னு ஒரு சால்னா கடையாண்ட போனோம், ரெண்டு பெரும் குறைய குறைய குட்சோம், அவன் எங்கயோ வடக்கால போறேன்னு சொன்னான், எனக்கு மனசெல்லாம் கஷ்டமா போச்சுப்பா, என்ன பொயப்புடா இதுன்னு வந்துட்டேன். அதான் சகா நான் அவங்ககூட கட்சியா சரக்கடிச்சது


மெய்யாலுமே அந்த பொண்ணு சொல்லிருஜ்சுபா! பின்ன சும்மா அய்யனார் அருவா கணக்கா நுப்பது, ஒன் மன்னாரு கழுத்துல கீதுன்னா எந்த பொண்ணு தான் மிர்சலாகாம இருக்கும், அதான் ஜகா வாங்கிருச்சு, எனக்கா மேட்டர் எதுவுமே தெரியாது.
அவனோ என்னை ஊரெல்லாம் தேடிகின்னு கீறான். கட்சியில புட்சிடான்பா, ஓஓஓஒன்னு ஒரே அழுவாச்சி.


இது தெரியாம என் ஃப்ரெண்டு அவரோட தன்யே போய்கினாம்பா, ஊருக்கே அப்பால இருக்குற கட்டுலு ஓட்டலு, அங்க முப்பது பேத்துக்கு நடுவால நம்ம பையன்,
எல்லார் கையிலயும் பெர்சு பெர்சா சாமானம் சும்மா பதமா கீது, நம்ம ஆளும் நீ முடிஞ்சா வெட்டிக்கோன்னு சவால் வுட்டுனுகிறான். சில பெற்ய மன்செங்கல்லாம் கெஞ்சி பாத்துருக்காங்க, கட்சியா சொல்லிட்டான், அந்த பொண்ண சொல்ல சொல்லுங்கோ நான் விட்டுடுறேன்னு.


நம்ம தோஸ்து ஒருத்தர் கீறாருப்பா, ஊருக்குள் பெரிய ரவுடின்னு அவரே சொல்லிக்குவாரு, அவராண்ட போய் ஹெல்ப் கேட்டேன், நானென்னமோ செய்ய நென்ச்சது ஹெல்பு தான். ஆனா அதுவே அவனுக்கு படா பேஜாரா பூச்சுப்பா. நம்ம ரவுடி தோஸ்தும் அந்த பொண்ணும் ஒரே கேஸ்டாம். வந்தது அங்கே தான் வினை. பட்சி கட்சி மாறியது.


அரசனுக்கும், ஆண்டிக்கும் தான் பிரச்சனையில்லை அந்த ரெண்டுமே நாந்தான்பா, இதெற்கெல்லாம் சேத்து வேட்டு வச்சிச்சி அவனோட பட்லி மேட்டரு, இவன் கொட்த லெட்டரு அவளோட வீட்ல சிக்கிகிச்சாம், அவள எங்கேயோ எஸ்கேப் பண்ணிட்டாங்களாம், தேடி கண்டுபிடிக்கணுமாம், நாம தான் பழக்கத்துக்கு எத வேணும்னாலும் செய்வோமே. கிளம்பிடோம்ல.


இதுக்கு முன்னாடி அவே ன் இத பத்தி என்னாண்ட பேஸ்னதேயில்ல, ஒரு தபா நான் அவே ன் வூட்டாண்ட போகsசொல்ல அந்த பொண்ணாண்ட பேசிகின்னு இருந்தத பார்த்தேன்.
நாலு வருஷமா லவ்விகின்னு கீறாராம். பொண்ணுவூட்ல மாலு கம்மினாலும், கேஸ்ட் பாப்பாங்களாம்.


அம்புட்டு குஜாலான பாருக்கு இதிக்கு முன்ன நான் போனதேயில்ல,
நானும் கீறேன்னு சொல்லிகிட்டா மாதிரி ஒரு டம்மி பல்பு ஒன்னு மினிக்கிகின்னு இருந்துச்சு அதுக்கு கீழ குந்துணோம், வசதியாகீறானாம், சொந்த பிஸ்னஸாம், உன்கும் வேல தர்றேங்கிறான், வாங்கி கொடுத்த பீருக்கு மண்டையையாவது ஆட்டனுமே ஆட்டிகினே யிருந்தேன்.


ரொம்பா நா கழிச்சி அவன பார்த்தேன், ஆளு கொஞ்சம் புஸ்டியா கீறான் ,
பாக்கச்சொல்லவே கண்டுகிணான், சரக்கடிக்கசொல்ல ஃப்ரெண்ட்சுகலாண்ட அவனையும் பாத்துருக்கேன், பேஸ்னாமாதிரி கூட ஞாபகங்கீது, சும்மா என்ன பார்த்ததும் ஒரு ஸ்மைல வுட்டுகினு ஃபிரியா இருந்தா வா மச்சி சரக்கடிக்கபோலான்னான். யார்ரா வருவான்னு குந்திகினுயிருந்தேன், உடுவேனா உடனே கிளம்பிட்டேன்.

*****************


டிஸ்கி:சற்றே மாற்றம் செய்த மீள்பதிவு!

குடித்தொழில்!

ஒரிஜினல் வெர்ஷன்


படம் உதவிதள்ளாடித் துவளும்
குடிகாரனின் கால்கள்
ஐந்தாறு ரவுண்டுகள்
அடித்திருக்க வேண்டும்
கையை நீட்டி
சிகரெட் கேட்கும் நண்பணின்
பாக்கெட்டுக்குள் ஒளிந்து,
சரக்கு, வாட்டர்,
கடலை என எதற்க்கும்
வெளிவராத நூறுருபாய்
தாள்களை காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
நாலுரவுண்டில் போதையாகும் இவன்
பின்னாட்களில் திருந்தலாம்
வெள்ளையடிக்கலாம்
சாமியாராகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது

குவியல்!..(21.09.09)

அண்ணன் அப்துல்லா அவர்கள் பாடிய ”சொல்ல சொல்ல இனிக்கும்” என்ற படம் இந்த வாரம் வெளி வந்திருக்கிறது! தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட இந்த பாட்டு தான் பாடுகிறது!, இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!

**
நேற்று (20.09.09) தருமி ஐயா தலைமையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு நடந்தது! மதுரையிலேயே இருக்கும் தருமி ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா,ஜெர்ரி, கார்த்திகைப்பாண்டியன், ஸ்ரீதர் மற்றும் பதிவரல்லாத மூன்று நண்பர்களும், வெளியூரிலிருந்து மருத்துவர் தேவன்மாயம், சொல்லரசன், ஆ.ஞானசேகரன் மற்றும் நானும் கலந்து கொண்டோம்!, மதுரை பதிவர்கள் சார்ப்பில் எதாவது செய்யலாம் என்பதே சந்திப்பின் நோக்கம்!
அதன்படி சென்னையில் நடந்தது போன்று டாக்டர் ஷாலினி அவர்களை அழைத்து
“குட் டச், பேட் டச்” நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவானது!

இடத்திற்கு தருமி ஐயா பொறுப்பெடுத்து கொண்டார், உள்ளூரில் இருக்கும் ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு ஜெர்ரி ஏற்று கொண்டார், கார்த்திகைப்பாண்டியனும் ஸ்ரீதரும் விரிவுரையாளர்களாக இருப்பதால் அவர்கள் கல்லூரியில் இருந்து ஆர்வமிக்க மாணவர்களை அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுகொண்டனர்! கார்த்திகைக்கு கூடுதல் பணியாக பணத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும்! நான் சும்மா இருந்தா எப்படி!? சென்ற முறை சென்னையில் நடந்த போது எதிர்பார்த்தது என்ன? நடந்தது என்ன? விடுபட்டவைகள் என்ன என்று நண்பர் நர்சிமிடம் கேட்டு சொல்ல வேண்டியது என் பொறுப்பாக ஏற்று கொண்டேன்!

இதுவரை தேதி முடிவாகவில்லை, ஆனதும் சொல்கிறேன்! முடிந்தவரை நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமறு கேட்டு கொள்கிறேன்!

**

வெகுநாட்கள் கழித்து அரங்கம் சென்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன்!
மதுரை மாப்பிள்ளைவிநாயகரில் கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ஈரம் படத்திற்கு போனோம்! தமிழில் புதிய முயற்சி என்று சொல்லலாமே தவிர கொண்டாட ஒன்றுமில்லை! செத்து போகும் நாயகி இடது கை பழக்கம் உடையவள் என்ற வித்தியாசம் ஒரு குறியீடு! மற்றவர்கள் இடது கையை பயன்படுத்தும் போது, நாயகியின் ஆவி உள்புகுந்து கொள்கிறது என்று பூடகமாக காட்டுகிறார் ஆனால் சிகப்புநிறத்துக்கும், நாயகிக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, அது நாயகனுக்கு எப்படி தெரியும் என்பது அதைவிட லாஜிக் ஓட்டை!

வில்லன் தானாக குற்றத்தை ஒப்புகொள்ளவில்லை, அதற்கும் ஆவி உள்புக வேண்டியிருக்கிற்து, அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் என நமக்கே தோன்றும் போது இயக்குனருக்கு ஏன் தோன்றவில்லை, பரவாயில்லை இயக்குனருக்கு முதல் படம் என்பதால் ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு எட்டு போய் படத்தை பார்த்து விடலாம்!**

நண்பர் ஒருவர் வெகுநாட்களாக என்னிடம் குழந்தைக்கு பேர் வைக்க நல்ல பெயர் கேட்டு கொண்டிருந்தார், தமிழில் வைக்க வேண்டுமென்றால் இணையத்தில் தேடி கொடுத்திருப்பேன்!, முன்னாடி இந்த எழுத்து தான் வர வேண்டும் என்ற நிபந்தனையென்பதால் எனக்கு தயக்கம், நெருங்கிய நண்பர் என்றால் சொல்லிவிடுவேன்! அவர் என் பதிவுகளையும் படித்துவிட்டு என்னிடமே நியுமராலாஜி கேட்பது தான் சங்கடம்! எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ”கே”வில் ஆரம்பிக்கும் பெயர் கேட்டதற்கு “கே”வில் ஆரம்பிக்கும் ஒரு கெட்டவார்த்தையை சொன்னேன்!
அதன் பின் அவர் என்னிடம் பேசுவதேயில்லை! எனக்கு நண்பர்கள் வேண்டும் அதனால் தயவுசெய்து இம்மாதிரியான புத்திசாலித்தனமான கேள்விகளை(தகவல்களை) என்னிடம் வைக்காதீர்கள்!

**

வா.மு.கோமுவின் “சொல்லகூசும் கவிதை படித்து கொண்டிருக்கிறேன்!
அதிலிருந்து ஒரு சின்ன பிட்டு!

பொம்மைக்கடைகாரனின்
பொம்மை கேட்டது
விளையாட
ஒரு குழந்தை
வேண்டுமென!

பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி!

பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!

***


பைபிள் என்றாலே புத்தகம் என்று தான் அர்த்தம், தமிழில் விவிலியம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூல மொழி ஹீப்ரு,யூத மக்களால் பேசப்படும் மொழி, இன்று உலகில் அதிகமாக மொழி பெயர்கப்பட்டுள்ள நூலில் விவிலியத்திற்கே முதலிடம்! எங்கேயும் விவிலியத்தை அதன் மூல மொழியில் தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை! இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!

குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!அரபி, அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்! இஸ்லாமியர்களின் பெரும்பாலோர்க்கு உருதுஅரபி தெரிந்திருக்கிறது, அதே நேரம் உருதுஅரபி தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழ் அர்த்தத்துடன் குரானும் இருக்கிறது, நானே பார்த்துள்ளேன்!, ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருதுஅரபி மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருதுஅரபி மட்டும் தான் தெரியும் போல! அதை பற்றி பிறகு விவாதிக்கலாம், ஏனென்றால் இவர்கள் உருதைஅரபியை மொழியாக தான் பார்க்கீறார்கள், உருதுஅரபி என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,
(இவர்களுக்கும் பார்பனீய சிந்தனை உண்டா இல்லையான்னு இவுங்க தான் வந்து சொல்லனும்!)


மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே!, ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கும் பல மொழிகள் நம் தேவைகேற்ப சுருங்கியும், விரிந்தும் தற்போதய நிலையில் இருக்கிறது, ஆயினும் அதன் அடிப்படை இலக்கணம் மாறவில்லை என்பது முக்கியம், சங்ககால தமிழ் பாடல்களை இன்று விளக்கவுரை இல்லாமல் படிக்க முடியாது!, உலகில் உள்ள பல மொழிகளில் வெகு சில மொழிகளுக்கே இந்த சிறப்பம்சம், அதில் தமிழ் மொழியும் ஒன்று, அதற்காக யாரும் எங்கள் மொழி தான் வேதம், அதை தினம் நான்கு முறை சொன்னால் சோறு கிடைக்கும், அந்த பாட்டை பாடினால் உடலிலுள்ள நோய்களெல்லாம் பறந்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சிலகாலமா நான் கவனிக்கிறேன்!

தமிழ் வலையுலகில் சமஸ்கிருதத்தின் திணிப்பு அதிகமாக இருக்கிறது! அந்த மந்திரத்தை சொன்னால் மூச்சு வரும், இந்த மந்திரத்தை சொன்னால் பேச்சு வரும் என்று காட்டுத்தனமாக மூளைச்சலவை நடந்து கொண்டிருக்கிறது!, எதை சொன்னாலும் நம்பிவிடும் நம் மக்கள் கூட அதே பாணியில் இடுகைகள் எழுதி கொண்டிருக்கிறார்கள், வேதத்தில் ஒவ்வோரு சொல்லும் மந்திரமாம்! கடவுளுக்கு பூஜை செய்ய இருக்கும் துதிகள் இல்லாமல் சமஸ்கிருதம் என்பதே மனிதனை நோயிலிருந்து மீட்க வந்த ஒரு மருத்துவ மொழி என்று!சமஸ்கிருதத்துக்கும், வட மொழி எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கவே இந்த இரண்டு படங்களும், எல்லோரும் ஹிந்தி கத்துகோனும்னு டில்லியில ஒருத்தன் ஏன் கத்திகிட்டு இருக்கான்னு இப்ப புரியுதா!? இதுக்கு பேர் தான் பார்பனீய சிந்தனைன்னு சொல்றது!கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!, இந்த வித்தியாசம் போதுமென்று நினைக்கிறேன் மொழி கூட பார்பனீயம் பேசுகிறது என்பதை சுட்டிகாட்ட!


தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்!

பாரு ஸ்டைலில் ஒரு பயணம்!

மன்னையில் நடக்கும் சிறுகவிதை பட்டறை பற்றி அறிந்திருப்பீர்கள், அமெரிக்காவில் அருந்து அம்புலி மாமா அழைத்திருந்தாலும், ஜப்பானில் இருந்து ஜாங்கிட் தம்பி கூப்பிட்டிருந்தாலும் அண்ணன் பைப்புகாரன் மேல் கொண்ட அன்பாலும், வாவ்ராம் பந்தரின் அன்பான உபசரிப்புக்காவும் மன்னை சென்று பட்டறையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது என்று முடிவு செய்தேன்! அது பற்றி எழுதி போன பதிவிலேயே உதவி கேட்டிருந்தேன்(இது வரை வசூல் 35 ருபாய் 45 பைசா). உதவிய நண்பர்களுக்கு நன்றி, நான் வழக்கம் போல் திருட்டு ட்ரெயினிலேயே மன்னை வந்து விடுகிறேன்!

மன்னையில் எனக்காக குளிரூட்டப்பட்ட அறை எடுக்கும்படி நண்பர் பண்டோராவிடம் சொல்லியிருந்தேன், எல்லாம் இருக்கு வாங்க என்றார், எனக்கு அப்போதே சந்தேகம், மன்னையில் எல்லாம் இருக்கு, ஆனால் எனக்கு அங்கு தங்க இடம் இருக்கா என்பதே அது!
டம்பீ சாவியிடம் முதலிலேயே கேட்டேன், தம்பி வந்தால் சரக்கு வாங்கி தருவியா என்று,
“நானே ஓசி கஞ்சி, உனக்கு சரக்கு வேணுமாக்கும்” என்று கடுப்படிக்கிறார்!, நீங்களெல்லாம் வேலைக்கு போய் என்னாத்த சம்பாத்திக்கிறீர் என்ற சந்தேகம் வருகிறது!, என்னை போன்ற பிராபலங்கள் ”ஸாரி டங்க் ஸ்லிப் ஆயிருச்சு”, பிரபலங்கள் வரும்போது செலவு செய்ய கூட முடியலைன்னா என்ன பொழப்பு அது!

ஒருவழியாக ரயிலை பிடித்து சீட்டுக்கடியில் ஒதுங்கினேன்! காதல்பட வில்லன் மாதிரி வந்த ஒரு டீ.டீ.ஆர், என்னை கோலத்தில் இறக்கி விட்டுட்டார், விடுவேனா! அங்கேயே ஒரு லாரிகாரரிடம் கெஞ்சி பானட் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டேன், அவரிடம் பேசியது மட்டுமே நான்கு நாவல்கள் எழுதலாம்! ”ஜீரோ பைசா” என்ற நாவலில் இது பற்றி ஏற்கனவே குறிப்பிடுள்ளேன், கதைகளை எங்கேயும் தேடவேண்டியதில்லை, அது நம்மை தேடி வரும் என்று!, மன்னை வந்து இறங்கியவுடன் நண்பர் பாஸ்கிக்கு மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.

இருந்த சில்லரைகளை பொறுக்கி யாருக்காவது போன் பண்ணி கார் கொண்டுவர சொல்லலாம் என்று தேடினேன்! தூங்கி கொண்டிருந்த பர்சிம்மை எழுப்பி நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்! பத்து நிமிடத்தில் ஹோண்டா காரில் வந்தார், உங்களுக்கே தெரியும் நான் பென்ஸை தவிர வேறு காரில் ஏற மாட்டேன் என்று.(என்னாது லாரியில வந்தேனா!, அது நேத்து நான் சொல்றது இன்னைக்கு), முட்டிக்கால் முன்சீட்டில் இடிக்க காலை மடக்கி அமர்ந்தேன்! சிகரெட்டை எடுத்து பத்த வைக்கலாம் என்றால் உள்ளே பிடிக்க கூடாது என்கிறார்!, வெளியே பிடித்தால் போலிஸ் பிடிக்குது, உள்ளே பிடித்தால் பர்சிம் அடிக்கிறார்!, அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன கொடும சார் இது!

ஒரு வழியாக சிறுகவிதை பட்டறைக்கு வந்த சேர்ந்தேன்!, அனைத்து நண்பர்களும் குழுமம் குழுமமாக நின்று பேசி கொண்டிருந்தனர், நம்ம பாண்டு சாரும் வந்திருந்தார், இந்த வயதில் எந்த சமீபத்திய கவிதை எழுதி கொல்ல போறாரோன்னு தெரிஞ்சிகலாம் பக்கத்துல போனேன்!, இப்படித்தான் சமீபத்தில் 1967 ல்ன்னு ஆரம்பிச்சார், சார் லைட்டா வயித்த கலக்குது, நீங்க பேசிகிட்டே இருங்க, இந்த வந்துடுறேன்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்!
இம்மாதிரியான இடங்களில் மிக்கிய(முக்கிய போட்டால் சுச்சிவேஷன் நாறிடும்) ஆட்களை கவனிக்க தனியாக ஆட்களை ஒதுக்க வேண்டும்!, இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்!

ஒருவழியா மதியம் வந்தது, செம பசியில் ரெண்டு லெக்பீஸ் முதலில் சாப்பிடலாம்னு தேடினால் இல்லை, வாவ்ராம் பந்தரிடம் கேட்டால் மட்டனில் லெக்பீஸ் போட முடியாதுங்கிறார்! ஒரு முழு ஆட்டை தலைகீழாக தொங்கவிட்டு சுட்டு சாப்பிடும் பரம்பரையை சேர்ந்தவனிடம் சொல்லும் பதிலா அது! சேம் சேம் பப்பி சேம்!,
இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!, சரி நண்பர்களே மீதியை நாளை எழுதுகிறேன்!


********************

டிஸ்கி:பட்டறை ஞாயிற்றுகிழமை(13.09.09), இன்று வெள்ளிகிழமை(11.09.09)

இன்றுமுதல் டீ நான்கு ரூபாய்!

டீ இனி 3.50 திலிருந்து நான்கு ருபாய்! ஐம்பது பைசா தானே ஏறியிருக்கிறது என நாம் நினைக்கலாம்! பழைய பேப்பர் வாங்குபவனிடம் நாலணாவுக்கு சண்டை போடும் மார்வாடிகளை பார்த்தும் நமக்கு காசின் அருமை தெரிந்ததில்லை! முதலில் அதை சொல்ல எனக்கு தகுதி இல்லாததால் நேரடியாக விசயத்துக்கு வருவோம்!, செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து எங்கள் ஊரில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நடுத்தர, விளிம்பு நிலை மனிதர்களின் அத்யாவிசய புத்துணர்வு பானமான டீ மற்றும் காப்பியின் விலை உயர்ந்துள்ளது!பாலின் விலை உயர்ந்ததே காரணம் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை, சரி வேறென்ன சொல்லப்போறேன்! பசு மாட்டின் பால் இரண்டு ரூபாயும், எருமை மாட்டின் பால் நான்கு ரூபாயும் உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதை பின் அலசுவோம், இப்ப டீ மேட்டருக்கே வருவோம்! ஒரு டீக்கு ஐம்பது பைசா உயர்ந்துள்ளது, ஒரு லிட்டர் பாலில் நாற்பது டீ போடலாம்!, நான்கு ரூபாய் லிட்டர் பாலுக்கு ஏறியிருக்கிறது, ஆனால் டீ கடைக்கு லாபம் எவ்வளவு மடங்கு!(இதையெல்லாம் உட்கார்ந்து கணக்கு போட்டா உனக்கு மண்டை வெளுக்காம, கருக்கவாடா செய்யும்னு கேக்குற நண்பர்களுக்கு தேங்ஸ்)

ஆவின் என்பது தமிழக் அரசின் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம்!, அங்கே வாட்ச்மேன் வேலை கிடைத்தால் போதும் லச்சாதிபதி ஆகிவிடலாம் என கிராமப்புறங்களில் இன்றும் சொல்வார்கள்! அப்படி என்ன தான் நடக்குது அங்கே! விலாவரியாக பார்ப்போம்!

அறிக்கையில் சொல்லியுள்ளது போல், ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து லிட்டர் கணக்கில் பால் கொள்முதல் செய்வதில்லை, அனைத்தும் பாலிலிருக்கும் கொழுப்பு(fat) கணக்கை வைத்தே! அதனால் தான் பசும்பால் விலை குறைவாகவும், எருமைப்பால் விலை அதிகமாகவும் இருக்கிறது! பசும்பாலில் குறைந்த பட்சம் இரண்டிலிருந்து அதிகபட்சமாக ஐந்து வரை கொழுப்பு இருக்கும், அதிக கொழுப்பு வரும் பொழுது பாலின் அளவு குறைந்து விடும் என்பது பால் உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் சாபக்கேடு!, எருமைப்பாலில் நான்கிலிருந்து எட்டு வரை கொழுப்பு இருக்கும், இங்கேயும் அதே அளவு பிரச்ச்னை உண்டு!

கொழுப்பு அளவிடும் எலக்ட்ரானிக் இயந்திரம்!
கடைசியாக் வந்த தகவல்படி கொழுப்புக்கு ஒரு சதவிகிதத்திற்கு 2.60 காசுகள் வீதம் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது! ஆனால் இது வரை அதிகபட்ச கொழுப்பு உள்ளே பாலே தனியார் அளித்த ஆரோக்கியாவின் நாலரை பால் மட்டுமே! அந்த நாலரை அதிலுள்ள கொழுப்பு! தமிழக அரசு அளிக்கும் பாலில் இரண்டையிலிருந்து மூன்றுக்குள் இருக்கும்!
பாலிருந்து கொழுப்பை வெண்ணையாக எடுக்கும் முறையில் அதை எடுத்து தனியாக கிரீம் என்று விற்று விடுவார்கள்!

எட்டு சதவிகதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலில் முழுவதும் கொழுப்பை நீக்கி விட்டு மீண்டும் அதில் நான்கு சதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலை ஊற்றினால் அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கும்!, அந்த சக்கையை தாம் நாம் குடித்து கொண்டு இருக்கிறோம்!, இதை பற்றி முழுமையான கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என தகவல்! தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப்பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!

பாலிலிருந்து கொழுப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம்!
2.60 காசிலிருந்து விலையேற்றப்பட்டாலும் இன்னும் அதற்குறிய சட்டபூர்வ அறிக்கை வரவில்லையாம்! அதனால் பழைய விலைக்கே பால் கொள்முதல் நடைபெறுகிறது, ஆனால் பால் மட்டும் விலையேறிவிட்டது! எது எப்படியோ முன்னருக்கு தற்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் தானே என்று கேட்பவர்களுக்கு, மாட்டு தீவனத்தின் விலை உயர்வை எந்த அரசாங்கமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை!

பால் உற்பத்தியாளர்கள் அடிப்படையில் விவசாய தொழிலை சார்ந்தவர்கள்! விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் அல்லது வருமானம் இல்லாத நேரங்களில் இது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்! கிராமப்புறங்களில் ஆவினை யாரும் நம்புவதில்லை, நேரடியாக பால் கறப்பவரிடமே பால் வாங்கி கொள்ளலாம்! நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!

விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்!

குவியல்!..(03.09.09)

இந்த வாரத்தில் செம்டம்பர் முதல் நாளன்று நண்பரும் கணிப்பொறி வல்லுனருமாகிய நண்பர் வடிவேலன் அவர்கள் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்!, நண்பரது சேவையை பற்றி நீங்கள் அறிவீர்கள், நமக்கு தேவையான, தேடி கொண்டிருக்கும் மென்பொருள்களை நமக்கு இன்ப அதிர்ச்சியாக தந்து மகிழ்பவர், நண்பரது பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம்!

பெண்களை பொறுத்தவரை மிகமுக்கிய பணி சமையல் செய்வதே, ஆனால் பலருக்கு அவர்களது ஹாபியும் சமையல் செய்வதாக தான் இருக்கிறது, புதிது புதிதாக எதாவது செய்து நம்மை அதிர்ச்சிகுள்ளாக்குவதில்!? அவர்கள் வல்லவர்கள், பலர் அம்மாதிரி ப்ளாக் வழியாக நம்மை சோதனை செய்வது நாம் அறிந்ததே, அதில் முக்கியமானவர் தான் தோழி தாரணிபிரியா. அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இன்னும் பலபல கண்டுபிடிப்புகள் சமையலில் செய்து அனைவரையும் அவரைப்போலவே ஆக்க வாழ்த்துவோம்!

இன்று இன்னொரு முக்கியமானவருக்கும் பிறந்தநாள், நான் கும்மி அடிக்க காரணமாக இருப்பவர், சிறந்த நண்பர், எனக்கு மாதாமாதம் படியளக்கும் எனது பாஸ் கார்த்திக் அவர்களுக்கும் இன்று தான் பிறந்தநாள், புகைப்படத்தின் மேல் உள்ள நாட்டத்தால் ப்ளாக் உலகிலிருந்து விலகி ப்ளிக்கரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், நண்பரும் பல நூறாண்டுகள் எனக்கு சம்பளம் கொடுக்க வாழ்த்துவோம்!
(ஒரே கல்லுல ரெண்டு மாங்கா)


***************************

நமது அண்டை மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி இப்பதிவு எழுதும் வரை கண்டுபிடிக்கப்படவில்லை! இது ஆந்திராவுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல, மொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சி, நமது நாட்டு தேசிய பாதுகாப்பின் மேல் விழுந்த கரும்புள்ளி. உள்துறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் வெற்றிலையில் மை போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை, என்ன ஆனார், ஏது ஆனார் என்று ஒரு தகவலும் இல்லை, ஹைதையில் கிளம்பி சித்தூர் வரும் வழியில் ஹெலிகாப்டர் தொலைந்து போயிருக்கிறது, கடைசியாக சிக்னல் வந்த நேரத்தை வைத்து எந்த இடத்தில் காணாமல் போயிருக்கலாம் என்று குத்துமதிப்பாக ”மழமலா” என்ற காட்டுப்பகுதியில் தேடி வருகிறார்கள்!
கனமழை வேறு மீட்பு பணியில் குறுக்கிடுகிறது, தடைகளை மீறு ஆந்திரமுதல்வர் நலமுடன் திரும்புவார் என நம்புவோம்!

*************************

என்னை பொறுத்தவரை ஆக்சன் படங்களுக்கு விமர்சன் தேவையில்லை என்று நினைப்பேன், முக்கால்வாசி படத்தை ஆக்சன் காட்சிகளே ஆக்கிரமித்து கொள்வதால் மக்களின் சுவாரசியம் குறையாமல் ரசிப்பார்கள், ஆனால் சில படங்கள் குறைந்த ஆக்சன் காரணத்தால் கவனிக்காமல் போய்விடக்கூடும், அந்த வரிசையில் மிக முக்கியமான படம் gattaca. 1997 ல் வந்த சயின்ஸ்பிக்‌ஷன் மூவி, ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்றதெல்லாம் உணர்வுபூர்வமான நடிப்பும், சிறந்த திரைக்கதையும், கடைசிவரை உங்களுக்கு சுணக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும், இப்படத்தை பற்றியும் நீண்ட விமர்சனம் எழுதலாம், ஆனால் ஏற்கனவே சரியாக புரிந்து கொள்ளாமல் டெர்மினேட்டர் படத்தை பற்றி எழுதி செமத்தியாக வாங்கி கட்டி கொண்டதால் வேண்டாம் என நினைக்கிறேன்!, ஆனால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என உறுதியளிக்கிறேன்!*****************************

இந்தவாரம் எதிர் கவுஜ!
மாட்டியவர்

நீ அனுப்பிய இரு பாட்டிலும்
இன்று வந்து சேர்ந்தது
வழக்கம் போல திறக்கமுடியவில்லை
இதில் எது நல்லசரக்கு? எது கெட்டசரக்கு?
ஒன்றில் வழிந்தோடிய நுரையும்
இன்னொன்றில் எப்போதும் போல் எனக்கான போதையும்


சென்றமுறை நீ அனுப்பிய சரக்கு குறித்து குறிப்பேதும் இல்லையே
உனக்காக நான் அனுப்பிய சைடிஷும்
இரு அவிச்ச முட்டையும் வந்து சேர்ந்ததா?

எதிர் கவுஜ தான்!

ஒரிஜினல் சரக்கு!


சரக்குசரக்குகள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
சரக்கே நிலையாகிபோன
உலகிலே
சரக்கு அடிப்பதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
போதையும் உண்டு


***************************
குழம்பு வைத்தல்வேண்டியவரை தண்ணீரை
பாத்திரத்தில் கொண்டு கலக்கி
கறியும் எலும்பும் சேர்த்து
பட்டை, லவங்கம், மிளகாய்
இஞ்சி, பூண்டு,
போன்ற மசாலாக்களை
எனக்குண்டான சுவையில்
சேர்த்து கலக்குகிறேன்

இதை சாப்பிடக்கூட முடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.

!

Blog Widget by LinkWithin