என் கேள்விக்கென்ன பதில்?(மாட்டியவர் ரம்யா)

வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான்.
ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே. கடினமான பாதைகள் நம்மை மேலும் செம்மைப்படுத்தும், மென்மையான பாதைகள் துன்பம் வரும் போது எதிர்த்து நிற்கும் துணிவைத்தராது. அவரவர் அனுபவம் அவரவருக்கு ஆசான்.

தோழி ரம்யா எனக்கு சில நாட்களாகத்தான் பழக்கம்.
பழுத்த அனுபவசாலிகள் சொல்லி பார்த்திருக்கிறேன், படபடவென்று பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்து கொள்ளமாட்டார்கள் என்று, யாருக்கு பொருந்துதோ இல்லையோ தோழி ரம்யாவிற்கு நூறு சதவிகதம் பொருந்தும்.

தோழி ரம்யா கடந்து வந்த பாதையும் கடினமான முற்களாலும், கற்களாலும் ஆனது தான், ஆனாலும் அவருடய அனுபவங்களை அவர்களே சொலவது தான் சிறந்தது, இருப்பினும் தோழியின் அனுபவம் அவருக்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலையை கொடுத்திருக்கும்,
முழுமையான உருவம் தெளிந்த நீரோடையில் தான் தெரியும்.
கேள்விக்கான பதில் தெளிந்த மனதில் கிடைக்கும்.

என் மனதிலும் சில கேள்விகள் இருந்தது, பதில்கள் ஒவ்வொருக்கொருவர் மாறுபட்டாலும் தோழி ரம்யாவின் பதில்களை தெரிந்து கொள்ள உங்களைப்போலவே நானும் ஆர்வமாக உள்ளேன்.
என்னுடய கேள்விகளும் தோழியின் பதிகளும்
********************************************


1. இந்த வாழ்வும், அனுபவமும் நீங்கள் ஒரு பெண்ணாக பிறந்ததற்காக பெருமையடைய செய்திருக்கிறதா?

ஆமாம் என்று தான் சொல்லுவேன். நான் ஒரு சாதரணமான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் சாதாரணத்தில் இருந்து சற்று விலகி வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை அடைகின்றேன் என்று தான் சொல்லவேண்டும். இவள் என்ன செய்யப் போகிறாள் என்று என்னை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால், அவர்கள் எண்ணங்கள் தோற்றுக் கொண்டிருக்க நான் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருந்தேன். சில நேரங்களில் பெண்ணாக இருப்பது மிகவும் சோதனையாகவும், அதே நேரத்தில் சவாலாகவும் இருந்திருக்கின்றது. ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே! அங்கே நான் பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை என்றுதான் கூற வேண்டும்.


2.உங்கள் பார்வையில் ஆண்கள் என்பவர்கள் யார்? அவர்களுடய பொது குணங்கள் என்ன? நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடு எப்பவுமே எனக்குள் இருந்தது கிடையாது. இந்த இரு பாலாரும் என் முன்னே மனிதப் பிறவிகளே!! மனிதம் மனிதத்தை நேசிக்கின்றது. அவ்வளவுதான்!! ஆண்களுக்கு என்று பொது குணம், ஆமாம் குடும்பச்சுமையை ஏற்கின்றார்கள், உழைக்கின்றார்கள், பிரச்சனைகள் எது வந்தாலும் தாங்கிக்கொண்டு ஒரு தூணாக இருக்கின்றார்கள், பெற்றோர்களுக்கு பாதுகாப்பை கொடுத்தல், மனைவிக்கு தேவையானவைகளை செய்து திருப்திப் படுத்துதல்கள், குழந்தைகளுக்கு இரண்டு வயதில் பள்ளியில் சேர்க்க இரவே போய் பள்ளி வாசலில் காத்திருத்தல். இதற்கு மேல் என்ன சொல்ல??

3.உங்கள் பார்வையில் நட்பு என்பது? நட்பில் பால் முக்கியமா? அல்லது ஒரு ஆணுடன் ஒரு பெண் நட்பாக இருக்கமுடியுமா?

1. கண்டிப்பாக முடியும் . நட்பிற்கு பால் முக்கியம் இல்லை. எனது பார்வையில் நட்பு கொள்ள மனம் மட்டும்தான் முக்கியம். 2. நட்பு என்பது சிரிக்கும் போது நம் அருகாமை தேவை இல்லை. அழும்போது நம் அருகாமை மிகவும் அவசியம் என்று என் நட்பு வட்டாரத்தில் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். மனம் தளர்ந்து போகும்போது ஆறுதலான சொற்கள் அவசியம். தேவையான உதவிகள் அவசியமே அது நட்பால் மட்டுமே சாதிக்க முடியும். 3. ஒரு நூல் இழைதான் மனம் தடுமாறக் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. நட்பாக இருக்கும் தருணத்தில், பெண்ணின் எந்த செயலும் ஆண்களின் ஈர்ப்பை திசை திருப்பக் கூடாது. அதே போல் ஆண்களும் பெண்கள் பால் நடந்து கொள்வது மிக அவசியம். இது சில சமயம் தெரிந்தும் நடக்கலாம், சில சமயம் தெரியாமலும் நடக்கலாம். ஆனால் புரிந்து கொண்டு நட்பை நட்பாக மட்டும் காப்பாறிக் கொள்ளுவது என்பது நட்பிற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம். ஆண் பெண் இருவரிடையே நிலவும் நட்பு எப்போது முழுமை அடைகின்றது என்றால், ஒருவரின் சுக துக்கங்களில் மற்றவர் பங்கேற்று, ஒருவர் குடும்பத்தில் மற்றொருவர் ஐக்கியம் ஆகி பழகும் போதுதான்!! நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.

4.ஒவ்வொருவரும் எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த சமூகத்தால் அவமான பட்டிருப்போம், ஆனாலும் நமக்கு சமூகத்தின் மேல் ஒரு பற்று இருக்கும்! உங்களுக்கும் உண்டா? நீங்கள் இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புவது என்ன?

இது ரொம்ப அருமையான கேள்வி வால்பையன் அவர்களே. நான் நிறைய அவமானங்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் ஒரு நிமிடம் என்னை பாதிக்கும். இல்லை என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் அடுத்த நிமிடம் இந்த அவமானம் எனக்கு இல்லை. அதை உண்டாக்கியவர்களுக்கே என்று தூக்கி போட்டு விட்டு அடுத்த வேலை குறித்து யோசிக்க ஆரம்பித்து விடுவேன். சமூகம் ===== அழகான வார்த்தை. நான் இந்த தலைப்பில் ஒரு கதை எழுதி இருக்கின்றேன். அது ஒரு வார இதழில் வெளிவந்தது. பயங்கர சர்ச்சைக்குள்ளானது என்றே சொல்லலாம். அப்போது நான் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தேன். இந்த "சமுதாயம் என்ற நாலு பேர் " இதுதான் அந்த கதையின் தலைப்பு. நான் எப்போதும் இந்த சமுதாயத்தைப் பற்றி நினைத்து அதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டும், முடிந்த போது சிறிய பல சமுதாயப் பணிகளைச் செய்து கொண்டும் இருக்கின்றேன். எதிர் காலத்திட்டம், முதியவர்களுக்கு அரவணைப்பு, சிறார்களுக்கு அரவணைப்பு இவைகள் அங்கீகாரத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கு மேல் வாழ்வில் நலிந்த பெண்களுக்கு நிறைய செய்திருக்கின்றேன். இன்னமும் செய்ய என் சூழ்நிலை அமைய வேண்டும் என்பவைகள் என் மனதில் கணன்று கொண்டிருக்கும் தீராத்தாகம்.5.(நெருங்கிய)உறவுகள் வேறு, சமூகம் வேறு என்று பார்ப்பீர்களா? அல்லது உறவுகளும் சமூகத்தில் ஒருவர்களா?

நெருங்கிய உறவுகளும் சமூகத்தில் ஒரு அங்கத்தினர்களே. சமூகம் என்ற கோட்பாட்டின் கீழ் பலவற்றை அறிவுறுத்தி இருப்பார்கள். அந்த அறிவுரைகள் நமக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அந்த சமுதாயத்தின் அறிவுரைகளை அடித்துக் கொண்டு செல்லுகையில் அங்கே நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. அதனால் தான் எந்த முடிவு எடுத்தாலும் சமுதாயத்தை சார்ந்து எடுத்தால் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதோடல்லாமல், பாதுகாப்பும் கிடைக்க வழி உள்ளது என்று சொல்லுவேன்.

6.பெண் என்பவள் பிறப்பிலிருந்தே யாரையாவது நம்பி தான் வாழ வேண்டும் என சொல்லி கொடுக்கப்படுகிறாள்! அது பற்றி உங்கள் கருத்து!?

நல்ல கேள்வி, சரியாகச் சொன்னீர்கள். பெண்கள் எப்போதும் மற்றவர்களை சார்ந்து தான் இருக்கின்றார்கள். அப்படி நம் முன்னோர்கள் வரையறுத்து விட்டார்கள். பிறந்தவுடன் தாய், படிக்க தந்தை, ஓடி ஆடி விளையாட சகோதரம் மற்றும் நட்பு வட்டாரம், திருமணம் ஆனவுடன் கணவன், பிறகு மக்கள் இப்படி பல சார்புகள். ஆனால் இன்று இந்த சார்ந்திருக்கும் அவசியம் குறைந்து கொண்டு வருகின்றது. ஏனெனில் தன்னை காத்துக் கொள்ள எல்லாரும் முயற்சி செய்கின்றார்கள், சில சமயங்களில் அந்த முயற்சியில் ஒரு அயர்ச்சி வந்து விடுகின்றது. அப்போதுதான் சார்ந்து இருப்பது தேவையாகிப் போய் விடுகின்றது. இப்படி எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பவும் இந்த தலைப்பிற்கு விடியல் இல்லை. இது ஒரு தீராத தொடர்கதை என்றே நான் சொல்லுவேன்.

7.பெண் சுதந்திரம் என்பது கிடைத்து விட்டதா? அல்லது உண்மையான சுதந்திரமாக நீங்கள் நினைப்பது?

பெண் சுதந்திரம், ம்ம்ம் அப்படி என்றால் என்ன? இதில் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். பெண் சுதந்திரம் வேண்டும் என்று பாரதியார் கூறியது எனக்கு நினைவிற்கு வருகின்றது. பெண் சுதந்திரம் பல மட்டத்தில் இன்னும் கிடக்க வில்லை என்று என் நட்பு வட்டாரம் கூறுவார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. சரியான முறையில் எண்ண வெளிப்பாடுகள் இருந்தால் அங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம் தானாக வந்து விடும். சுதந்திரம் இருக்கின்றது என்று தவறான முறையில் உபயோகப் படுத்தினால் அப்போதுதான் அது ஒரு கேலிக்கூத்தாகி விடுகின்றது. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம். அது வேலைக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி. அதற்காக கட்டு பெட்டியாக இருக்கவேண்டும், கதவு இடுக்கில் இருந்து தான் ஆடவரிடம் பேசவேண்டும் என்றெல்லாம் நான் கூற வரவில்லை. எதிலுமே ஒரு கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகின்றேன். அப்போதுதான் அங்கே எந்த ஆபத்தும் வராது. ஆபத்து வெளியே இருந்து வருவதில்லை. நம்மிடம் இருந்துதான் வருகின்றது. சுதந்திரம் இருக்கின்றது என்று எல்லை கோட்டை மீறினால் நம்மால் நம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்தும் உள்ளது. இவைகள் தான் நான் பெண் சுதந்திரத்திற்கு கூறிக் கொள்வது.

8.பெண்ணிற்கு பெரிய சுமையாக இருப்பதாக எதை கருதுகிறீர்கள்?

ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்.

9.வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ, தனியாக தொழில் செய்யும் பெண்களுக்கோ முக்கியமாக இருக்கவேண்டியது எது?


வேலைக்குப் போகும் பெண்களுக்கு
=========================
எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு போகலாம், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் சூழ்நிலை இந்தக்காலப் பெண்களுக்கு இருக்கின்றது.
1. கொடுத்த வேலையை திறம்படச் செய்ய மனதில் உறுதி செய்து கொள்ளவேண்டும்
2. அந்த உறுதியை காப்பாற்ற எவ்வளவு நேரம் ஆனாலும் உழைக்க தயாராக இருக்க வேண்டும்.
3. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கை வேண்டும்.
4. ஒருவரையும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது, அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் எனபது நேரம் வரும்போதுதான் தெரிய வரும் .
5. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அடி மனதில் எழ வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதில் வானமே எல்லையாக இருக்க வேண்டும் 6. நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். தெரியாதது உலகளவு, தெரிந்தது கடுகளவு என்று நினைத்தாலே போதும் உன்னை எங்கோ சிகரத்திற்கு கொண்டு சென்றுவிடுமே!!
7. மேலாளர் ஆணோ , பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் திறன் கொண்டு, மேற்கொண்ட காரியத்தை செவ்வனே செய்தால் நீதான் நாளைய விடியலின் மஹாராணி.

தொழில் செய்யும் பெண்களுக்கு
======================
அதே போல் தொழில் செய்யும் பெண்களும் தொழில் நிமித்தம் பலரையும் சந்திக்க வேண்டி இருக்கும். தைரியமான முடிவெடுக்கும் தருணத்தில் நிதானம் வேண்டும். தெளிவான முடிவு, பயப்படாத தன்மை இவைகள் மிகவும் அவசியம். எந்த சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளுவதோடு, வெற்றியையும் எட்ட வேண்டும்.

1. எந்த தொழில் செய்தாலும், அந்த தொழில் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்று.
2. செல்லும் நோக்கம் தெளிவாகக் இருக்க வேண்டும்.
3. போகும் பாதை சரியானதாக் இருக்க வேண்டும்
4. நேர்மை தொழில் காட்ட வேண்டும்
5. கண்டிப்பு வேலை செய்பவர்களிடம் இருக்க வேண்டும்

6. தொழில் ரகசியம் காக்க வேண்டும்

7. தொழிலில் வெற்றி பெற அயராது உழைக்க தயாராக வேண்டும்
8. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கை வேண்டும்

9. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அடி மனதில் எழ வேண்டும்
இவைகள் அனைத்தும் இருந்தால் நீதான் நாளைய கனவுக்கன்னி.


10.கடவுள் என்பது இருக்கிறாரா? இல்லையா என்ற வாதம் போய், கடவுள் தேவையா, இல்லையா என்ற வாதம் வந்துவிட்டது! உங்களுடய பார்வையில் கடவுளின் தேவை!

கடவுளின் தேவை மிகவும் அவசியம். கடவுள் இருக்கா இல்லையா என்று கேட்டால். நான் இருக்கின்றது என்றுதான் கூறுவேன். உருவம் இல்லை என்றாலும் அரூவமான உருவமாக இருக்கின்ற கடவுளை நான் பல முறை உணர்ந்திருக்கின்றேன். அதனால் என்னால் கடவுளின் தேவை அதிகம் தேவை என்று கூற முடியும். நம்பிக்கை இருந்தால் வழி நடத்துதல்கள் கிடைக்கும். இது என் கருத்து. நான் நம்பிக்கை முலாம் பூசி பேசவில்லை. எனது ஒவ்வொரு முயற்சிக்கு பின்னால் "சமயபுர அம்மா" இருக்கின்றார்கள் என்று ஆணித்தரமாக இச்சபையில் கூற முடியும்.
கடைசியாக வால்பையனுக்கு
====================

என்னை நம்பி இவ்வளவு கேள்விகள் கொடுத்து இருக்கின்றீர்கள். மிக்க நன்றி நண்பா.
வலைச்சரத்தில் ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் ஜமால் ஏற்படுத்திக் கொடுத்தார்
இன்று ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் வால்பையன் ஏற்படுத்திக் கொடுத்தார்
உங்களுக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் தோழியாய், சகோதரியாய் கடைசி மூச்சு இருக்கும் வரை இருப்பேன்.

*********************************************
தோழி ரம்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டது அவரது சொந்த கருத்துகளே!
வழக்கமாக என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.

நட்சத்திர அறிமுகம்.!

150 வது பதிவு எழுதி கொண்டிருக்கும் நேரம், ஒவ்வொருவரையும் எழுதி முடித்து இன்னும் யாராவது விட்டு போயிருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது வந்தது அந்த மின்னஞ்சல், அதிர்ச்சியூட்டும் தகவலுடன், ....ஆம். நான் தான் இந்த வார நட்சத்திரமாம்.
அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளின் கலவையால் உறைந்து நின்றேன், 150 வது பதிவில் வரவேண்டிய சில நண்பர்கள் விட்டுபோய்விட்டார்கள், காரணம் கூடவே எனது மூளையும் உறைந்து விட்டது.

தாமதமான நன்றி உரைத்தலுக்கு முதலில் மன்னித்துவிடுங்கள்,
ச்சின்னபையன் கிரி விக்னேஷ்வரன் சாலிசம்பர் டாக்டர் தேவன்குமார் தேனியார் ஜோதிபாரதி ஜீவ்ஸ் காயத்ரி கோபிநாத் கோவிகண்ணன், இது போல் இன்னும் நிறைய அண்ணன்கள், இவர்களின் உதவி இல்லையென்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது, உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே!
***************************************

நீண்ட நாளாக எனது தொழில் பற்றி எழுத ஆசை, நிறைய பேர் நேயர் விருப்பமாக கூட அதை கேட்டுடிருந்தனர், எனது முதல் நட்சத்திர பதிவாக அதையே எழுதி விடுகிறேன்,

நான் கமாடிடி(commodity) அனலைசராக இருக்கிறேன்.
அது பற்றி சில விடயங்கள் கேள்வி பதில் வடிவில்.

கமாடிடி என்றால் என்ன?

விலை பொருள்கள் அனைத்தும் கமாடிடி என்று தான் அழைக்கப்படும்.

எப்படி வகைப்படுத்துவது?

சந்தையில் பொருளாக விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்தும் கமாடிடி தான்.

கமாடிடிக்கும், பங்கு சந்தைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு நிறுவனம் பல பங்குதாரர்களை கொண்டிருக்கும், ஒரு பங்கு வைத்திருந்தாலும் நீங்களும் ஒரு பங்குதாரர் தான், அந்த நிறுவனத்தின் லாப, நட்ட கணக்குகளை கொண்டு அந்த பங்கின் விலை நிர்நியக்கப்படும். அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள் கமாடிடி.

பங்குசந்தை முதலீட்டிற்கும், கமாடிடி முதலீட்டிற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டும் ஒன்றைப்போல தான். ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது அதன் தரத்தை எடை போடாமல் வாங்குவதில்லை, அதே போல் தான் பங்குகளும், கமாடிடியை அதிகமாக நுகர்வோர்கள் பயன்படுத்துகிறார்கள், முதலீட்டாளர்கள் குறைவே! நுகர்வோர்களின் எண்ணிக்கை, அந்த பொருளை வெளியிட்ட நிறுவனத்தின் பங்குகளை விலை உயர்த்துகிறது.

கமாடிடி விலையுயர்ந்தால் அந்த நிறுவனங்களின் பங்குகள் உயருமா?

செயற்கையான விலையேற்றத்தினால் மட்டுமே சாத்தியம்.
ஒரு பொருள் என்பது, பல கூட்டு பொருள்களால் ஆனது, அதை தயாரிக்க மூல பொருள்களின் விலை, ஆட்கூலி, போக்குவரத்து செலவு, சந்தைபடுத்த ஆகும் செலவு, போன்றவை அந்த நிறுவனத்தின் செலவு கணக்கில் வரும், ஆக அந்த பொருளின் தயாரிப்பு செலவு அதிகரிக்க, பொருளின் விலையும் அதிகரிக்கலாம், ஆனால் அந்த நிறுவனம் லாபம் அடைவதில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆக பங்களிலும் மாற்றம் இருக்காது.

கமாடிடி மட்டும் ஏன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது?

செயற்கையாக இருந்தாலும், நாட்டின் பண கொள்கையினால் இது தவிர்க முடியாததாகிறது.
பொதுவாக மனிதர்கள் சேமிப்பு என்ற ஒன்றை தனது மாத பட்ஜெட்டிலேயே வைத்திருக்கிறார்கள். பொதுவாக வங்கிகளிலும், பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்கிறார்கள், அங்கே அவர்களுக்கு சரியான ரிட்டர்ன்ஸ்(வருமானம்) கிடைக்காத பட்சத்தில், எது முதலுக்கும் மோசமில்லாமல், லாபமும் தருகிறதோ அதில் முதலீடு செய்வார்கள், அதற்காக அவர்கள் தேர்தேடுப்பது தங்கம் மற்றும் வெள்ளி.

அவைகளும் விலை இறங்கும் தானே?

கண்டிப்பாக! அனைத்து பொருள்களுமே மறைமுகமாக ஒருவித சீசனை(காலத்தேர்வு) கொண்டுள்ளது, அக்ரி(வேளான்மை) கமாடிடிகள் விளைச்சல் காலத்தில் விலை குறைவாகவும் மற்ற நேரங்களில் அதிகமாகவும் இருக்கும் என்பது அறிந்த ஒன்று, அதே போல் தான் மற்ற பொருள்களுக்கும் தேவை அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும், தேவை குறையும் போது விலையும் குறையும்.

தற்போது முதலீடு செய்தல் நலமா?

சென்ற ஆண்டு செயற்கையாக எல்லா பொருள்களும் வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டது, அந்த ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியை தவிர மற்ற பொருள்கள் அனைத்தும் விலை இறங்கியது. ஆக தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் மாற்று முதலீடாக மற்ற எதையும் நம்பாமல் தங்கம் மற்றும் வெள்ளியிலேயே முதலீடு செய்திருக்கிறார்கள்.
உலக பொருளாதாரம் மீண்டும் நிமிரும் பட்சத்தில் அடிப்படை உலோகங்களான காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் ஆகியவை மீண்டும் விலை உயரலாம், அப்போது தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களின் லாப பணத்தை கையில் பார்க்க கையிருப்பு பொருள்களை சந்தையில் விற்க தொடங்குவார்கள், சந்தையில் ஒரு பக்கமாக விற்பனை மட்டுமே நடந்து கொண்டிருக்கும் போது பொருள்களின் விலை வேகமாக சரியும்.

காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் இவைகளும் உலோகம் தானே! இவைகள் மட்டும் விலை குறைய காரணம்?

சந்தையை பற்றி ஆராய வேண்டுமென்றால் உலக பொருளாதாரத்தையும் அலச வேண்டும், அது உங்களுக்கு அயர்ச்சியை கொடுக்கலாம். சுருக்கமாக, தீடிரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் புதிய வீடு, புதிய வாகனங்கள், புதிய வீட்டு பொருள்கள் வாங்குவது சரிந்தது, இவை அனைத்திற்கும் மூல பொருள்கள் தான் காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம்.
ஆக இதன் விலையும் குறைந்தது. ஆனால் தங்க உபயோகம் ஆபரணமாக மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் பணமாகவே பயன்பட்டது, அது பயன்பாடு கணக்கில்லாமல் மதிப்பு ரீதியாக என்றும் ஜொலிக்கும்.

இப்போது முதலீடு செய்ய விருப்பம் செய்யலாமா?

தற்போது சந்தை இருக்கும் நிலையில் உங்களது சேமிப்பை தக்க வைத்து கொள்வது முக்கியம்.
பங்குசந்தையோ, கமாடிடியோ இரண்டிலும் சரிசமமாக ரிஸ்க் உள்ளது. சேமிப்புக்கு அதிகமாகவே இருக்கிறது என்று இருப்பவர்கள் மட்டும் பண்ணலாம், மற்றவர்களுக்கு
money in the pocket is better than money in the market. கொஞ்ச நாளைக்கு.. :)


இது பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ! எனது மெயிலிலோ(arunero@gmail.com) அல்லது அலைபேசியிலிலோ(9994500540) தொடர்பு கொள்ளலாம்.

150. சைலன்ஸ்! நன்றி சொல்லும் நேரமிது!

வழக்கொழிந்த சொற்கள்,வழகொழிந்த பொருள்கள் தேடும் நாம் வழகொழிந்த பழக்கங்களை தேட மறந்து விட்டோம். அதில் ஒன்று தான் நன்றி சொல்லுதல். என்னுடய இந்த 150 தாவது பதிவை நன்றி சொல்ல பயன்படுத்தி கொள்கிறேன்.

நண்பர் ஒருவரின் நம்பரை சாட்டில் வாங்கி போன் செய்தால், “என்ன பேசுரதுன்னே தெரியல, பெப்ஸி உமா கூட பேசுற மாதிரி இருக்குங்கிறார்”. எனக்கு கூச்சமும், வெட்கமுமாக இருக்கிறது.
நம்புங்க நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை, அதே நேரம் ஒருவரை இம்மாதிரியாக பாராட்டுவது அவருக்கு தலைகணம் உருவாக காரணமாக ஆகிவிடலாம், தயவுசெய்து இம்மதிரியெல்லாம் பேசி அவர்களை செலிபிரட்டி ஆக்கி குழியில் தள்ளி விடாதீர்கள்.
*************************

2007 நவம்பர் மாதம் ப்ளாக் ஆரம்பித்தேன், ஆனந்தவிகடன் மூலம் தெரிந்த ப்ளாக்குகள் படித்து, பின் தமிழ்மணம் அறிந்து நானும் அதில் இணைந்து இன்று 150 வது பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.

வந்த புதிதில் என்ன எழுதுவதென்றே தெரியாது, ஏகப்பட்ட எழுத்து பிழைகள் வேறு, ப்ளாக்கை எதற்காக பயன்படுத்தலாம் என்ற வரைமுறை இல்லாமல் சகட்டுமேனிக்கு பதிவுகள் இருக்கும்,
ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே போட்டு இன்றும் அதை ஒரு பதிவாக கணக்கு காட்டி கொண்டிருக்கிறேன். இடையில் ஏற்பட்ட திருப்பம் மட்டும் இல்லையென்றால் ப்ளாக்கின் மேல் சலிப்பு ஏற்பட்டு என்றோ விலகியிருப்பேன்.

அந்த திருப்பம்!

சாதரணமாக எல்லாருடய பதிவிலும் கும்மிகளை அடித்து கொண்டிருந்த நான் முதன் முதலாக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். தி.மு.க கட்சியின் மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை, அதே போல் எந்த கட்சியின் மீது மதிப்பு இல்லை. அந்த காரணத்தால் நடுநிலைவாதியாக என்னை நினைத்து கொண்டு நண்பர் எழுதிய தி.மு.க ஆதரவு பதிவுக்கு எதிராக பின்னூட்டம் இட்டேன். அந்த பிரச்சனை எங்கங்கோ போய், ஒன்றுக்கும் உதவாத என்னை தமிழ்மணம் முழுதும் பிரபலபடுத்தியது, இன்று வால்பையன் என்று ஒருவன் பதிவு எழுதுவது உங்களுக்கு தெரியுமென்றால் அந்த பதிவரே காரணம் எனது நன்றிக்காக, அவர் எது பட்டாலும் சரி(சந்தோசம், வருத்தம் அந்த மாதிரி) உண்மை உண்மை தானே!
தோழர் லக்கிலுக்(யுவகிருஷ்னா) அவர்களுக்கு,

வலையுலகில் நான் முதன் முதல் பார்த்தது இவரைத்தான், தோற்றம் தான் வயதான மாதிரி இருந்தாலும், என்னை விட இளமையான கருத்துகளை உடையவர், வயதாகி விட்டால் நாத்திகம் குறைந்து ஆத்திகம் தொடங்கி விடும் என்று கூற்றுக்கு இன்றும் சவால் விட்டு கொண்டிருப்பவர், நாத்திக விசயத்தில் எனது மானசீக குரு ஐயா தருமி அவர்களுக்கு,

வலையுலகில் இவரை போல் வேறு யாரையும் நான் இந்த அளவுக்கு வம்புக்கு இழுத்ததில்லை, ஆனாலும் அலைபேசியில் அழைத்து “சுகர் எப்படியிருக்கு” ”வாக்கிங் போகிறாயா” என்று ஒரு தந்தையின் ஸ்தானத்தில் எனக்கு அறிவுரை வழங்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு,

நானும் இருக்கிறேன் என்று ஆங்காங்கே பின்னூட்டம் இட்டு கொண்டிருந்த பொழுது, நீ தான் ஆசிரியர் என்று ஒரு பொறுப்பற்றவனுக்கு பொறுப்பை கொடுத்து வலையுலகில் மேலும் என்னை பிரகாசிக்க வைத்த ஐயா சீனா அவர்களுக்கு,

கள விவாததிற்கு முன் சில விசயங்களை உறுதி படுத்தி கொள்ள என்நேரம் அழைத்தாலும் முகம் சுழிக்காமல் பதிலளிக்கும் அண்ணன் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு,

வெகுஜன பத்திரிக்கைகளில் பல சிறுகதைகள் எழுதியவர், அரசு பணியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்(இன்று கூட தொலைக்காட்சியில் வந்தார்) என்ற தலைகணம் சிறிதும் இல்லாமல்,
“வாலு அடுத்த தடவை நானே உனக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்குவேன்” என்று சபை இறுக்கத்தை குறைக்கும் அங்கிள் லதானந்த் அவர்களுக்கு,

எங்கே எழுதிய பதிவுகளை படித்து அறிவை வளர்த்து கொள்ளாமல் போய் விடுவானோ என்று, எப்போது பதிவெழுதினாலும் உடனே சாட்டில் சுட்டி கொடுக்கும்(எனக்கு மட்டும் தானா?)
அன்பர் அபிஅப்பா அவர்களுக்கு,

இலக்கியத்தில் நான் தொட கூட முடியாத(தெரிஞ்சா தானே தொடறதுக்கு)தூரத்தில் இருந்தாலும் சாட்டில், பத்து வருடம் பழகிய நண்பனை போல் அரட்டை அடிக்கும் நண்பர் அய்யனார் அவர்களுக்கு,

பதிவுலகில் நகைச்சுவை மன்னர் என்று பெயர் இருந்தாலும், என் சாட்டில் வந்து “உனது பதிவு நல்லாருக்கு வால்” என்று பாராட்டும் அண்ணன்(இல்லை அங்கிளா யாராவது சொல்லுங்கப்பா) குசும்பன் அவர்களுக்கு,

எனக்கு உடன்பிறந்த மூத்த சகோதரன் இல்லை என்று குறையை தீர்த்து வைத்த அண்ணன் ரமேஷ் வைத்யா அவர்களுக்கு,

அலைபேசியில் அழைத்து “உங்களை கலாய்த்து கொள்ளட்டுமா” என்று அனுமதி கேட்டால், இப்படி அந்நியபடுத்திட்டிங்களே வால்ன்னு வருத்தப்படும் அண்ணன் தாமிரா அவர்களுக்கு,

காக்டெயில் என்று பெயரில் நீங்கள் எழுதலாம் என்று இருந்தீர்களாமே, நான் வேண்டுமானால் பெயரை மாற்றி கொள்ளட்டுமா என்று விட்டு கொடுத்தலின் விளிம்புக்கு செல்லும் அன்பு சகா கார்க்கி அவர்களுக்கு,

நமது வலையுலகில் அடுத்த வெகுஜன பத்திரிக்கை நட்சத்திரம் என்ற முத்திரை இருந்தும் சிறிதும் அலட்டல் இல்லாமல் அதே அன்போடு பழகும் அண்ணன் பரிசல் அவர்களுக்கு,

என்நேரமாக இருந்தாலும்(விடியற்காலை 5 மணியானலும்) ரயில் நிலையம் வந்து அழைத்து செல்ல காத்திருக்கும் நண்பர், ஆனால் அவரது வேலையை பார்த்தால் இவருக்கு கீழ் ஆயிரகணக்கில் இருக்கிறார்கள். இம்மாதிரியான ஆட்களை பார்க்கும் பொழுது தலைகணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் மனிதரே இல்லை, அந்த மாமனிதர் அண்ணன் நர்சிம் அவர்களுக்கு,

என்னிடம் கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், யாரேனும் என்னிடம் தனி மனித தாக்குதல் மேற்கொண்டால், ”வால் எனது உடன்பிறவா சகோதரன் என்று சண்டைக்கு நிற்கும் இன்னொரு உடன்பிறவா அண்ணன் கணேஷ்(வீணாப்போனவன்னு பெயர் வச்சிக்கிட்டா எப்படி சொல்றது) அவர்களுக்கு,

”அழைத்து” கூகுள் விளம்பரம் எப்படி வைப்பது!, எம்மாதிரியான முறைகளை மேற்கொண்டால் சம்பாரிக்கலாம் என்று சகமனிதனும் சம்பாரிக்கனும் என்று நினைக்கும் நண்பர் ஜிம்ஷா அவர்களுக்கு,

எங்கேயோ நான் பின்னூட்டமாக நான் போட்ட எனது அலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு, எனது பதிவுகளில் எனக்கே தெரியாத நுண்ணரசியலை விவரிக்கும் தோழி ரம்யா அவர்களுக்கு,

பதிவுலகில் மன உளைச்சளில் இருந்த நேரத்தில் தினமும் யாஹூ சாட்டில் எனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்த தோழி கபீஷ் அவர்களுக்கு,

சர்ச்சைகுறிய பதிவுகள் எழுதும் முன்னர், எனது எதிரணியனியரிடமிருந்து எம்மாதிரியான கேள்வி கணைகள் வரலாம் என தெரிந்து கொள்ள சோதனை சாவடியாக பயன்படுத்தி கொள்ளத்தான் அழைக்கிறான் என்று கூட தெரியாத பச்சை(கருப்பு) குழந்தை அண்ணன் கும்கி அவர்களுக்கு,

எனக்கு பின் எழுத வந்தாலும், ப்ளாக் என்பதை எப்படி பயன்படுத்த வேண்டுமென பல பேருக்கு முன்மாதிரியாக இருக்கும் நண்பர் மோகன்பிரபு(மேக்ஸிமம் இந்தியா) அவர்களுக்கு,

மென்பொருளாலானலும் சரி, சினிமா பாட்டானலும் சரி தேடி கிடைக்கவிட்டால் ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது எங்கிருந்தாலும் தேடி தந்து ஆச்சர்யமூட்டும் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு,

அமெரிக்காவில் இருந்தாலும் மாதம் ஒருமுறை அழைத்து நலம் விசாரிக்கும் அண்ணன் அமரபாரதி அவர்களுக்கு,

தமிழ்நெஞ்சம் பதிவில் லோகோ நல்லாருக்கு, நானும் செய்யனும் என்று தான் சொல்லியிருந்தேன், மறுநாளே எனது மெயிலுக்கு தற்போது இருக்கும் லோகோவை செய்து அனுப்பி வைத்த நண்பர் பாலசந்தர் அவர்களுக்கு,

நொடிந்த நேரத்தில் நான் இருக்கேனடா உனக்கு என்று பின்னூட்டம் அளித்து ஊக்கமளித்த டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு,

பிரச்சனை வரும்பொதெல்லாம் அவதாரம் எடுக்கும் எனது அன்பு நண்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்களுக்கு,

கூடவே, யார் எதை சொன்னாலும் நான் உன் கூடவே இருக்கிறேன் வால் என்று அலைபேசியில் அழைத்து சொல்லும் அண்ணன் நல்லதந்தி அவர்களுக்கு,

ஒரு தொழிலதிபர் என்ற மமதை கொஞ்சம் கூட இல்லாமல் என்னை போன்ற வெட்டிகள் செய்யும் போனுகெல்லாம் பொறுமையாக பதில் சொல்லும் அங்கிள் சஞ்சய் அவர்களுக்கு,

காலை, மதியம், இரவு என்று ஒரு பொழுதும் விடாமல் சாப்பிடிங்களா என நலம் விசாரிக்கும் சகோதரி பூர்ணிமாசரண் அவர்களுக்கு,

எனது கருத்துரிமைக்காக உடன் நின்ற சகோதரர்கள், நட்புடன் ஜமால் மற்றும் அ.மு.செய்யது அவர்களுக்கு,

எங்கேயேனும் நானும் ஒரு எழுத்தாளன் என்ற தலைக்கணம் வந்து விட கூடாது என ஒரு வரி விடாமல் என்னை கலாய்த்து என் ஆணவத்தை போக்கும் நண்பர் லவ்டேல் மேடி அவர்களுக்கு,

சிங்கையில் இருந்து போன் செய்து நலம் விசாரிக்கும் அண்ணன் நிஜமா நல்லவன் அவர்களுக்கு,

தனியாக திரட்டி ஒன்றை ஆரம்பித்து என்னையும் மதித்து அதில் இணைத்து(பதிவை மட்டும் தான்) ஆலோசனைகள் கேட்கும் நண்பர் மோகன்ராஜ் அவர்களுக்கு,

கவிதைன்னா என்னான்னே தெரியாம கிறுக்கறதையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னதோடு மட்டுமில்லாமல் இன்றும் என்னை குரு என்று அழைத்து நெளிய வைக்கும் நண்பர் அனுஜன்யா அவர்களுக்கு,

”என்ன வாங்கி வர வால்”(உங்கள் அன்பே பல கோடிக்கு சமம்) என்று உரிமையோடு விசாரிக்கும் அண்ணன் ராகவன் நைஜிரியா அவர்களுக்கு,

எங்கேயேனும் தவறாக பின்னூட்டம் இட்டிருந்தால் அழைத்து அன்போடு கடிந்து கொள்ளும் அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

என்னை போன்ற சிறுவனையும் அண்ணே என்று அழைத்து மரியாதைக்கே இலக்கணம் கற்று கொடுக்கும் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு,

பெங்களுர் வரும் போது(நீங்கள் அங்கே இருக்கும் போது) எனக்காக நேரம் ஒதுக்கி, நான் பக்கத்து டேபிளில் ஆம்லேட் எடுப்பதையெல்லாம் பொறுத்து கொள்ளும் அண்ணன் செந்தழல் ரவி அவர்களுக்கு

அங்கிருந்து அப்படியே அனுப்பி விடாமல் பேருந்து நிலையம் வரை வந்து அனுப்பி விட்டு மறுநாள் நல்லபடியாக பிரயாணம் அமைந்ததா என நலம் விசாரிக்கும் நண்பர் பெங்களூர் அருண் அவர்களுக்கு,


அருகிலேயே இருந்து கொண்டு நான் எழுதுவது முதல், எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக ஆசான் அண்ணன் நந்து f/o நிலா அவர்களுக்கு,

பின்னூட்ட புயலாலும், வாழ்த்து மழையாலும் என்னை திக்குமுக்காட வைக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும்,

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு சம்பளமும் கொடுத்து, ஒரு கணிணியும் கொடுத்து பதிவெழுதவும், கும்மி அடிக்கவும் அனுமதி அளித்திருக்கும் எனது நண்பர் கார்த்திக் அவர்களுக்கு,

வெறும் நன்றி என்ற வார்த்தையில் முடித்தால் எனக்கு சோறு இறங்காது, தூக்கம் வராது.
ஒரு மனிதனை துன்பத்துகுள்ளாக்குவது நிராகரிப்பு,
அவனையே மகிழ்ச்சிக்குளாக்குவது அங்கிகாரம்.
எனது கருத்துகளுக்கும் அங்கிகாரம் அளித்த உங்களுக்கு, எனது மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீரால் பாதபூஜை செய்ய வேண்டும்.


நான் எங்கேயேனும் உங்களை மிகைபடுத்தி பாராட்டியிருக்கிறேன் என்று நினைப்பீர்களேயானால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் மிகை பட்ட மதிப்புக்கு அது ஒன்றும் கூடியதல்ல!

காணவில்லை!

ஓரினசேர்க்கையை பற்றிய விவாதங்கள்!!

எனது முந்தைய பதிவில் எங்கேயும் ஓரின சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றோ, முற்றிலும் ஒதுக்க வேண்டியவர்கள் என்றோ சொல்லவில்லை. அது அவர்களது விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அதை தடுக்க நான் நீதிபதி அல்ல, அதே நேரம் அவர்களை ஆதிரிப்பதற்கு முன்னாள் அவர்களின் சில உத்திரவாதங்களை கேட்கிறேன். ஓரின சேர்க்கை, எதிர் பால் ஈர்ப்பை குறைக்கும் அதனால் புதியவர்களை இந்த சங்கடங்களுக்கு ஆளாக்காதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன் திரும்பவும் படித்து பாருங்கள் தெரியும்.

இம்மாதிரியான பதிவுகளில் ஒரு பிரச்சனை, பின்னூட்டம் இட சங்கடப்பட்டு சிலர் பதிவை மட்டும் படித்து சென்று விடுவார்கள், இது பற்றி என்ன விவாதம் நடக்கிறது, உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைவு என்பதால், அங்கே வந்த பின்னூட்டங்களில் சர்ச்சைகுறியவைகளை மட்டும் இங்கே எடுத்து, அதற்கு என்னுடய பதில்களை சொல்லி விடுகிறேன்.
*************************

vinoth gowtham said...
கண்டிப்பாக அவர்களக்கு ஒரு அமைப்பு தேவை, அதற்கு மருத்துவ ஆலோசனையும் வழங்க வேண்டும்.

கண்டிப்பாக அமைப்பு தேவை, ஈரோட்டில் விலைமாதர்களுக்கு தாய் என்னும் அமைப்பு இயங்குகிறது. அங்கே திருநங்கைகளும், பெண்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு பாலியல் நோய்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நீங்கள் சொல்வதை நானும் ஏற்று கொள்கிறேன்.

ஸ்ரீதர் said...
அவர்களை இயற்கைக்கு மாறான இந்த ஈர்ப்பில் இருந்து விடுபட மனோதத்துவ ரீதியான சிகிச்சைகள் அளிக்கலாம்.

கண்டிப்பாக செய்ய வேண்டும்,
தனது தந்தையின் அராஜக செயலால் நிறைய பெண்கள் மொத்த ஆண்களையும் வெறுப்பதை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். அவை குணப்படுத்த கூடிய சிறு மனஅழுத்தமே, அதே போல் ஓரினசேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

கிஷோர் said...
நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் வன்புணர்ச்சி மற்றும் அவர்களால் ஏற்படும் தொல்லை பற்றி கூறி இருக்கிறீர்கள்.
ஏன் இது போல் ஆண்களால் பெண்களுக்கும் பெண்களால் ஆண்களுக்கும் நடந்து கண்டதில்லையா?
ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை வில்லனாகவே கருதுகிறீர்கள்?

நல்லதொரு கேள்வி!
நாம் எங்கேயும் வன்முறையை ஆதரிக்கவில்லை, ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்துவது சட்டபடி குற்றம், ஆனால் ஒரு ஆண், தன்னை பலாத்காரம் செய்தான் என்று இன்னொரு ஆண் எப்படி கம்ப்ளைண்ட் கொடுப்பது. சிறுவயதில் அந்த ஆள் கூப்பீட்டால் போகாதே அவன் மோசமானவன் என்று நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கேனே ஒழிய இதற்காக ஒரு சட்டம் இருப்பது கூட எனக்கு தெரியாது. அதே போல் அவர்கள் நாளுக்கு நாள் புதிய இணை தேடுவதையும் கேள்வி பட்டுள்ளேன். அவர்களை வில்லனாக பார்க்கவில்லை, பரிதாபமாக பார்க்கிறேன். அவர்களுக்கு நல்வழி காட்டாமல் மீண்டும் மீண்டும் புதிய ஓரினசேர்க்கையாளார்களை உருவாக்குவதை வேதனையுடன் நோக்குகிறேன்.

//தனிமையில் உழல்பவர்கள், பெண்கள் கிடைக்காதவர்கள் தாமாக, ஆண்களுடன் உறவு எப்படி இருக்கும் என்ற ஒரு க்யூரியாசிட்டியில் முயற்சிக்கும்போது புதிய ஓரினச்சேர்க்கையாளாராகவும் மாறுவாவதாக படித்தேன்.//

வாய்ப்பு உண்டு தான், பள்ளி பாடங்களிலேயே அதற்கான விழிப்புணர்வு இருந்தால் அவைகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.

வெண்பூ said...
சுய இன்பம் கூடத்தான் தவறு. அது இயற்கைக்கு மாறானது இல்லையா வால்?

இனபெருக்கத்திற்காக இருந்த செக்ஸ் எப்போது தேவைக்காக மாறியதோ, அப்போதே அனைத்தும் ஏற்று கொள்ளப்பட்டது, நான் சொல்லவருவது அவர்களை நிறுத்த சொல்லியல்ல, அறியாசிறார்களை தொந்தரவு செய்வதை நிறுத்த சொல்லி!

//குடிக்காத நண்பனின் வாயைப் பிளந்து பியரை ஊற்றியவர்களைப் பற்றி நீங்கள் கேள்விபட்டதில்லையா? தூக்கத்தில் இருக்கும் ஒருவர் வாயில் சிகரெட்டை வைத்து அவர் இருமலுடன் திடுக்கிட்டு எழுவதை ரசிக்கும் ராகிங்கை பார்த்ததில்லையா? அதே போல்தான் இதுவும்.. அதற்காக யாருமே சிகரெட் குடிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது என்று சொல்வது போலதான் இதுவும்..//


இம்மாதிரியான உதாரணங்கள் மேலும் தவறுகள் நடக்க தூண்டுவது போல் இருக்கிறது, ஒருவருக்கு சொந்தமான பொருளை அவரது சம்மதம் இல்லாமல் எடுப்பது கூட தவறு தான். கவனிக்க நான் சொல்வது பொருளைக்கூட. அப்படியிருக்க ஒருவனை துன்புறுத்துவது எப்படி சாதாரணமாக எடுத்து கொள்ள முடியும். மேலும் சிகரெட் குடித்தல், தண்ணி அடித்தல் ஆகியவை நமது ஆர்வ மிகுதியால் பரவும் பழக்கம், அதே போல் ஆர்வமுற்று நானும் ஓரின சேர்க்கைக்கு சென்றீருந்தால் தைரியமாக சொல்வேன் நானும் ஓரினசேர்க்கையாளன் என்று. நான் சொல்வது விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று. அதற்கு குழந்தைதனமான விளக்கம் அளித்து நியாயம் கற்பிக்காதீர்கள்.

//யாரோ ஒருவனின் பழக்கம் (அது மதுவோ, சிகரெட்டோ, ஓரினச் சேர்க்கையோ) என்னை பாதிக்காத வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.//

இது சரியான வாதமல்ல, தன்னை பாதிக்காத வரை பிரச்சனையில்லை என்றால், உங்களுக்கு பாதிப்பு வரும்போது மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா?
பைக்கிலோ, காரிலோ அலுவலகம் சென்று வீட்டுக்கு வரும் நீங்கள், தினம் தினம் பஸ்ஸில் செல்லும் வாலிபர்களை பற்றி நினைக்கவேண்டும்.

//அந்தப்புரங்களில் நூற்றுக்கும் மேல் அரசிகள். அரச‌ன் ஒருவனே அத்தனை பெண்களின் இச்சைகளையும் தீர்த்திருப்பானா? வெளியே இருந்தும் எந்த ஆணும் வர முடியாத சூழலில் அந்த பெண்கள் என்ன செய்திருப்பார்கள் வால்.. எனக்கென்னவோ இதை சூழ்நிலைதான் தீர்மானிக்குமே தவிர நானும் நீங்களும் அல்ல..//

அன்றைய அந்தபுரமும், இன்றைய ராணுவமும் ஒன்று தான், அந்தபுரத்தில் பெண்கள் மட்டும் தனியாக, இங்கே ஆண்கள் மட்டும் தனியாக. இயற்கையில் ஏற்படும் உடல் தேவைகளை நிறைவேற்ற விட்டால் நீங்கள் சொல்லும் சூழ்நிலை உருவாகும், அதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க சொல்வோம்.

சொல்லரசன் said...
இந்த சேர்கையால் வாழ்க்கையில் சீரழிந்தவர்களை நேரில் பார்த்தவன். எனவே 377 பிரிவின் தடையை ரத்து செய்தால்தான்.இவர்களின் தொல்லையில் இருந்து அப்பாவிகள் காப்பற்றபடுவார்கள்

அப்பாவி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற கோரிக்கை நியாயமானது, அதே நேரம் அவர்களை குற்றவாளியாக்காமல் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவும் செய்ய வேண்டும்.
எனது பதிவில் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்ககூடாது என்று சொல்லவில்லை, அதற்கு முன் அப்பாவி வாலிபர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உத்திரவாதம் மட்டும் அளிக்க சொல்லியிருக்கிறேன்.

//இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு : 377//

மாற்று பரிசீலினைக்கு உட்படுத்த வேண்டிய சட்டம்.
ஆணும், பெண்ணும் சேர்த்திருப்பது மட்டுமே தண்டனையில்லாத செயல் என்றால் ஒருவன் பிரம்மச்சாரியாக இருப்பது தண்டனைகுறிய குற்றமாக பார்க்கப்படும். அவரவர் தேவையை அவர்கள் பார்த்து கொள்ளட்டும், விருப்பமில்லாதவர்களை துன்புறுத்தாமல்!

Bharath said...
வன்முறையையும், ஹோமோசெக்சுவாலிடியையும் குழப்பிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நம்மால் புரிந்துகொள்ள முடியாததெல்லாம் தவறுன்னு முடிவுசெய்யக்கூடாது.. அவர்களின் அங்கீகாரம் காலத்தின் கட்டாயம்..

இல்லை, வன்முறையை மட்டும் எடுத்து பேசவில்லை, ஓரினசேர்க்கையை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பால் ஈர்ப்பு குறைந்து போகலாம். சுய இன்பம் தவறானது என்று நினைத்து கொண்டு வரும் மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மை போல் இதற்கும் ஏற்ப்படலாம். இவைகளை எடுத்து சொல்லலாம், கேட்கவில்லை என்றால் நாம் ஏன் மறுப்பு சொல்ல போகிறோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கட்டாயப்படுத்துவதை நிச்சயம் எதிர்க்கிறேன், ஆனால் எம்மாதிரியான உறவுகளில் அது அதிகம் இருக்கிறது - ஓரினச் சேர்க்கையை விட இருபால் உறவுகளிலேயே அது அதிகமென்பதை ஒப்புக் கொள்வீர்கள்தானே...

பேருந்துகளில் பயணம் செய்யும் போது இருக்கையில் தெரியாத ஒரு பெண்ணுடன் சேர்ந்து அமர தயங்குவோம். ஆனால் ஒரு ஆணுடன் அமர நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் நம்மை போன்று தானே என்ற நம்பிக்கை, ஆனால் என்ன நடக்கிறது, தொடையை தடவுவது, பாக்கெட்டில் என்ன இருக்குன்னு உள்ளே கையை விடுவது என கூச்சத்தில் நெளிய வைப்பார்கள்.
இது வேறு மாதிரியான டார்ச்சர். வன்முறை எல்லா கோணங்களிலும் தவறு தான்.

//ஒரு பிரச்சனையை அணுகும்போது நீதிபதி ஸ்தானத்தில் உங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். உரையாடலைக் கொன்றுவிடும் அது.//

பாதிக்கப்பட்ட பிரதிவாதியின் வக்கில் தான் நான், அதே நேரம் குற்றவாளி கூண்டிருப்பவர்களுக்கு தேவை தண்டனையில்லை, புரிதல் மற்றும் விழிப்புணர்வு என்று தான் சொல்லி கொண்டிருக்கிறேன், எங்கேயேனும் அதிகார தோனியில் நான் பேசியிருந்தால் இனிமேல் அது நடக்காமல் பார்த்து கொள்கிறேன்.

கோவி.கண்ணன் said...
ஓரினப் புணர்ச்சி செயல் தவறு என்ற பெரும்பாண்மை சமூகப் பார்வைக்கு எதிராக அவர்கள் அது தவறல்ல எங்களையும் பிறரைப் போலவே பாருங்கள் என்கிறார்கள்.

அந்த பதிவிலேயே சொல்லியுள்ளேன், ஓரின சேர்க்கையாளர்களுடன் மணி கணக்கில் அமர்ந்து பேச தயார், கூடவே சரக்கடிக்கிறேன், பாதி அடித்த சிகரெட்டை கூட வாங்கி அடிக்கிறேன், ஆனால் என்னை படுக்க மட்டும் வற்புறுத்தாதே என்பது தான் என் வாதம். அவர்களுது விருப்பத்தில் நான் குறுக்கே வரவில்லை, என் மனதில் மண்ணை போடாதே என்கிறேன்.

ஆனால் இத்தகைய உறவுகளுக்கு திருமண அங்கீகாரம் கேட்பதை நான் எதிர்க்கிறேன். திருமண உறவுகள் குடும்பம் சார்ந்தது, அதைக் கொச்சை படுத்துவது போல் ஓரின திருமணங்கள் சகித்துக் கொள்வது கடினம் தான்.

திருமணம் கேட்பது இப்போதய வேண்டுகோள் தான்,
ஒரு ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக கணவன், மனையாக இருக்க வேண்டும் என்பது சமூகத்தின் பார்வை, ஆனால் இரு ஆண்களை சமூகம் கவனிப்பதில்லை. ஆக ஏற்கனவே அவர்கள் திருமணம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு தேவை, யாரும் மொய் வைக்கவில்லையாம். அதனால் உலகறிந்த திருமணம் வேண்டுமாம்.

//ஓரின இச்சையாளர்கள் மூலம் உயிர்கொல்லி நோய் மிகுதியாக பரவும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

மிகுதியோ, குறைவோ பரவுதா இல்லையா?
பரவும் சதவிகிததில் குறைவு என்பதால் பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவோமா?
அதே போல் தான் இதுவும்.

//பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் மட்டுமே பரவும் அது இருபால் புணர்சியாளர்களுக்கும் பொருந்தும்.//

95% ஓரினசேர்க்கையாளர்கள் பாதுகாப்பை பற்றி கவலைபடுவதில்லை, நிறைய பேர் பெண்களுடன் உறவு கொண்டால் மட்டுமே பால்வினை நோய் வரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்

//இயற்கைக்கு மாறானது என்று சொல்வதும் தவறென்றே படுகிறது. இருபால் புணர்சியிலும் 'இலக்கு' இல்லாத புணர்ச்சிகள் உண்டு, அதையெல்லாம் இயற்கை என்று சொல்லமுடியாது.//

செக்ஸ் என்பது இனபெருக்கதிற்கு என்பது இயற்கை, அது எப்படி இலக்கை இழந்ததோ அதே போல் தான் இதுவும், நான் குற்றம் சாட்டவில்லையே! ஆனால் ஏற்று கொள்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமைக்கு நாம் கொடுக்கும் மதிப்புக்காக இருக்க வேண்டுமே தவிர இயற்கையாக அதை ஏற்று கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் பின்னாளில் பல இயற்கைகளை புதிதாக நீங்கள் சந்திக்க வேண்டிவரும்

வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல முடியாத ஒன்றை சமுகத்திடம் சொல்லி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீன் என்றே நினைக்கிறேன்.//

சரியான கருத்து தான், ஆனால் அவர்கள் சொல்வது சமூகம் ஏற்று கொண்டால் தான் எங்களை வீட்டில் ஏற்று கொள்வார்கள் என்று!

ஆண் ஓரின சேர்கையாளர்களால் குறிப்பாக பெண் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இடையே ஒரு பெண் நிம்மதியாக நடமாடமுடியும்.//

நகைச்சுவை ஒன்று உண்டு,
சாலையில் செல்லும் ஒரு அழகான பெண்ணை ஒரு ஓரின சேர்க்கையாளன் எவ்வாறு ரசிப்பான்!
பதில்
அவளே எவ்வளவு அழகா இருக்களே இவளுக்கு ஒரு சகோதரன் இருந்தால் எவ்வளவு அழகா இருப்பான்.


செல்வன் said...
ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்தால் அவர்கள் ஏன் அதன்பின் பிறரை தொந்தரவு செய்ய போகிறார்கள்?ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த நாட்டிலும் இம்மாதிரி நடப்பதில்லையே ஏன்?

நம்நாட்டிலேயே என்னை போன்ற சிலர் தான் வெளியே சொல்கிறோமே தவிர எல்லோரும் வெளியே சொல்வதில்லை, அவர்களுக்கு தெரியும் எல்லோரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த சங்கடத்திற்கு உள்ளாயிருப்போம் என்று. அதனால் வெளிநாட்டை பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை

ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கி,திருமனம் செய்யும் உரிமையை வழங்கினால் புது ஓரினசேர்க்கையாலர்கள் உருவாக மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் உத்திரவாதமளித்தால் அங்கிகரிக்கலாம், ஆனால் உண்மை ஓரினசேர்க்கையாளர்கள் தினம் தினம் வித வித சோடி தேடுபவர்கள் என்கிறதே!

.ஓரினசேர்க்கையாளன் என்று தெரிந்தும் அவனை திட்டி,மிரட்டி ஏதோ ஒரு பெண்ணுக்கு கட்டி வைத்தால் அவன் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் திருட்டுதனமாக இன்னொருவரை தன் வழிக்கு இழுக்கத்தான் நினைப்பான்.//

உண்மைதான், இதை ஒப்பு கொள்கிறேன். ஒருவன் தன்னை ஓரினசேர்க்கை பிரியன் என்று சொல்வதால் அவனை தண்டிக்க கூடாது என்று நானும் சொல்கிறேன்.

சிறுமிகளை பலாத்காரம் செய்யும் ஆண்கள் இருப்பதுபோல் ஓசேக்களிலும் இருக்கிறார்கள்.பலாத்காரம் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்.ஆனால் ஓரினசேர்க்கை குற்றம் அல்ல.//

சிறுமிகளை பலாத்காரம் செய்வது மனநோயா இல்லையா?
ஓரினசேர்க்கை குற்றம் இல்லை, மற்றுவர்களை தொல்லைகுள்ளாக்குவதே குற்றம்.***********************************
ஓரின சேர்க்கையாளர்களை அங்கிகரிக்கலாம்
அதற்கு முன்
அவர்களிடன் இனி விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உறுதி மொழி வாங்க வேண்டும்.

ஒரின சேர்க்கையாக இருந்தாலும் பாதுகாப்பற்ற உடலுறவு பால்வினை நோயை உருவாக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஓரீன சேர்க்கையிலிருந்து வெளி வந்து சகஜ நிலையில் வாழ நினைப்பவர்களுக்கு கவுன்சிலிங் செய்து வாழ அனுமதிக்க வேண்டும்

சில மாற்று கண்ணோட்டங்கள் புதிய வழிகளை காட்டலாம் என்ற நம்பிக்கையில்

ஒரினசேர்க்கை ஆதரவும், எதிர்ப்பும்!!

பாலியல் கல்வி பள்ளிகளிளேயே தேவை என்பதால் இதற்கு 18+ போடவில்லை.

************************

எட்டு வருடங்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவமனையில் எனது உறவினர் ஒருவர் மனச்சிதைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்தார், அவரை பார்த்து கொள்ளும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது. அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ”உள்ளேயிருந்து சில குரல்கள்” என கோபி கிருஷ்னன் தலைப்பில் எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் தற்போது நடந்து வரும் ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆதரவு திரட்டுதல் அதிலும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஞாநி அவர்கள் நேரடியாக ப்ளாக்குக்கு வந்து கருத்துகளை பரிமாறி கொள்ளுதல் அவற்றின் முக்கியதுவத்தை அதிகபடுத்தியது. இருப்பினும் எந்த விசயதையும் மாற்று கருத்துகளையும் சேர்த்து அலசுவதே சிறந்தது,

என் பங்கிற்கு

நான் அங்கு சென்ற ஓரிரு தினங்களில் அவனை சேர்த்தார்கள், பெயர் ஞாபகமில்லை. குமார் என்று வைத்து கொள்ளுங்கள். வயது பதினெட்டுக்குள் தான் இருக்கும். பொறியியல் முதலாம் ஆண்டு கல்லுரியிலேயே ஒரு விடுதியில் தங்கி படிப்பதாக அவரது தந்தை கூறினார். அவனது பெற்றோர்கள் இருவரும் அரசு வேலைக்கு செல்பவர்கள், இன்னோரு மகள் உறவினர் வீட்டில் இருந்து படிக்கிறாலாம்.

குமார் மருத்துவமனையில் சேரும் போது ஒரு வார்த்தை கூட பேச முடியாதவனாக சேர்க்கப்பட்டான். எந்த கேள்விக்கும் அவனிடத்தில் பதிலில்லை, ஆரம்பத்தில் மத சம்பந்தமான சடங்குகள் செய்து பார்த்து அது வழக்கம் போல எந்த பயனையும் தராததால் இறுதியிலேயே இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். குமார் சாப்பிட கூட வாய் திறக்க மறுத்தான், அப்படியே சாப்பிட்டாலும் அது யாரும் இல்லாத போது, தூரத்து படுக்கையில் இருந்து அதை நான் கவனித்திருக்கிறேன்.

இயல்பாகவே நான் அனைவரிடமும் சகஜமாக பழகுவேன், மேலும் அங்கே நான் தான் அப்போது சீனியர் என்பதால் மற்ற நோயாளிகளுக்கு ரத்த சோதனை கூடம், மற்றும் வெளியெ இருந்து உணவு வாங்கி வருதல் போன்ற கடமைகளை தவறாமல் செய்து வந்தேன், அங்கிருந்தவர்கள் அனைவரும் அவர்கள் குடும்பத்தில் இருவராக தான் என்னை நினைப்பார்கள். நோயாளிகளுடனும் பேசுவது, அவர்களுது மனநிலையை புரிந்து கொள்ள முயல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

குமார் சேர்ந்து ஒரு வாரம் ஆகியும், அவனது குறையை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மாத்திரைகளும் ஊசியும் போடப்பட்டது ஆனால் அவன் வாயை திறக்கவேயில்லை. ஒருநாள் அவன் குளித்து விட்டு வந்து எதையோ தேடுவது போல் இருந்தது, அருகில் சென்று என்னவென்று கேட்டேன், அவன் வழக்கம் போலவே பதில் சொல்லவில்லை.
டேபிள் மேல் இருந்த நோட்டை பார்த்தது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனிடம் நோட்டும் பேனாவும் கொடுத்து அவன் என்ன தேடுகிறான் என்று எழுதி காட்ட சொன்னேன்.
“ஜட்டி” என்று எழுதினான்.

அதன் பின் அவனுடன் பழகுவது எனக்கு சுலபமாகிவிடது, ஒரே நாளில் அவனுடன் நெருக்கமானேன், நானும் விடுதியில் படித்தவன் என்றும், அது நரக வாழ்க்கை என்றும் அவனுள் இருந்த ரகசியத்தை தெரிந்து கொண்டேன். அந்த அதிர்ச்சியூட்டும் தகவலை எழுதும் முன்னே இதை யாரிடமும் சொல்லகூடாது என்று சத்தியம் வாங்கினான்.

விடுதியில் ராகிங் என்ற பெயரில் சில மேல்நிலை மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள், உச்சகட்டமாக வாய்வழியாக புணரசெய்து அவனை பெரும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அன்றிலிருந்து வாயை திறந்தாலே எதோ கெட்ட வாடை வருவதாக உணர்ந்தானாம், அதனால் வாயை திறக்கவே பயமாக இருக்கிறது என்று கூறினான். வீட்டில் சொல்லவும் முடியவில்லை. நன்றாக படித்து கொண்டிருந்த அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு ஓரினசேர்க்கை ஆதரவாளர்கள் என்ன நஷ்டஈடு கொடுக்க போகிறீர்கள்.

*************************************

செக்ஸ் என்பது என்ன?
இயற்கையில் எல்லா உயிரனங்களுக்கும் செக்ஸ் உண்டு, அவை இனபெருக்கதிற்காக,
ஓரினசேர்க்கையாளர்கள் அலெக்ஸாண்டர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள், பெண் என்பவள் இனபெருக்கதிற்கு மட்டுமே! நமது செக்ஸ் வீரம் மற்றொரு ஆணுடன் என்ற மூடநம்பிக்கையில்!

ஓரினசேர்க்கையாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் இதை கவனிப்பதில்லை, மற்றவர்கள் அவர்களை புரிந்து ஏற்று கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அவர்கள் செய்யும் வேலைகளை கண்டிப்பதே இல்லை.

நான் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது ஒரு வடநாட்டவர் 500 ரூபாய் பணம் தருகிறேன் என் அறைக்கு வா என்று அழைத்தார். புரிந்துகொண்ட நான் மறுத்து விட்டேன்,ஆனால் அதன் பின் ஒரு ரூம் சர்வீஸ் பாய் அந்த அறைக்கு சென்று அரைமணி நேரம் கழித்து வந்தான் என்று மற்றவர்கள் பேசி கொள்ளும் போது தான் தெரியும், அந்த ஆள் மொத்த ஹோட்டலையும் அழைத்திருக்கிறான் என்று. அதன் பிறகு அந்த ரூம் சர்வீஸ் பாயை அழைத்து கண்டித்தேன்.

நீ ஒரு ஓரினசேர்க்கையாளன் இல்லையென்றால் இந்த பழக்கம் உன்னை எதிர்பாலின ஈர்ப்பு அற்றவனாக்கி உன்னையும் ஒரு ஓரின சேர்க்கையாளனாகவே மாற்றிவிடும், பிறப்புக்குகே உரிய முதல் கடமை நமது சந்ததியினரை இந்த மண்ணில் விட்டு செல்வது, அதில் நீ தவறக்கூடும் என்று. அதன் பின் அவன் அம்மாதிரியான உறவுகளை தவிர்த்துவிடுவதாக உறுதியளித்தான்.

*****************************

ஓரின சேர்க்கையாளர்கள் கூட்டம் நடத்துவது எதற்காக, தம்மை இந்த உலகம் அங்கிகரிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக என்றால் சரி என்று ஏற்று கொள்ளலாம், ஆனால் தனது இணையை தேடி கொள்ள என்றால் அது எம்மாதிரியான பாலியல் விழிப்புணர்வற்ற தனம்,
ஐந்து நட்சத்திர விடுதியில் கார் சாவி மாற்றி துணையை மாற்றி கொள்ளும் நாலந்தர பணக்காரர்கள் கூட அதற்காக பாதுகாப்பு கவசம் அணியக்கூடும், ஆனால் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அதை செய்வார்களா அல்லது எய்ட்ஸ் என்னும் அரக்கனை அனைவர் உடம்பிலும் பரப்புவார்களா?

ஓரின சேர்க்கையாளர்களிடம் மணி கணக்காக பேசலாம், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக, ஆனால் சாதாரணமானவர்களும் அவர்களுக்கு கம்பெனி தர வேண்டுமா என்ன?
என்றாவது ஓரின சேர்க்கையாளர்கள் விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உத்திரவாதம் அளித்திருகிறார்களா? எத்தனை பேருந்துகளில், எத்தனை சினிமா அரங்குகளில் உடன் பிறந்த சகோதரனோடோ, பெற்ற தந்தையினோடோ செல்லும் போது சங்கடபட வேண்டியிருக்கிறது.

ஓரின சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ள வேண்டும் என என்னை போல உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைப்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்களுக்கு தான் முதலில் விழிப்புணர்வு தேவை என்பதை ஏன் உணரவில்லை.

திருநங்கைகள் வேறு, ஓரின சேர்க்கையாளர்கள் வேறு, ஓரிரு ஓரின சேர்க்கையாளர்கள் பல ஓரின சேர்க்கையாளைகளை உருவாக்குகிறார்கள், அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவது தவறாகவே இருக்கலாம், அதே நேரம் அப்பாவி சிறுவர்கள் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களே அதை என்ன சொல்வது? ஓரின சேர்க்கையாளர்களின் உணர்வு இயற்கை என்றால், பின்பு விலங்குகளுடன் உறவு கொள்வதையும் இயற்கை என்று ஏற்று கொள்வீர்களா?

ஓரின சேர்க்கையாளர்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முன் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள், அப்புறம் ஆதரவு அளிக்கலாம்.

இப்படிக்கு
பேச தயங்குவதை பேசுபவன்.

கேட்டதில் பிடித்தது!!!.......

நதி எங்கே வளையும்!
கரை ரெண்டும் அறியும்!

மதி எங்கே அலையும்!
ஆகாயம் அறியும்!

விதை எங்கே விளையும்!
அது யாருக்கு தெரியும்!

அதை அறிந்து சொல்லவும் வழியில்லை
அதை அறிந்தால் அதன் பெயர் விதியில்லை!

*************

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை

உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை

எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை

அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை!

***********************
நேற்று இரவு கேட்ட பாடல்!
பிடித்திருந்தது
அதற்காக விதியை நம்புபவன் என்று நினைக்காதீர்கள்
பிடித்தது....கடைசி இரண்டு வரிக்காக!

பகுத்தறிவு மூடநம்பிக்கைகள்! (இஸ்லாமிய நண்பர்கள் மன்னிக்கவும்)

நண்பர்கள் மன்னிக்கனும் கொஞ்சம் மொக்கையிலிருந்து விலகி சொறிஞ்சுகிறேன். நான் சும்மா இருந்தாலும் என்னை சொறிஞ்சி விட்டு போறதால வர்ற பின்விளைவுகள் தான் இதெல்லாம்.

பூனையை தூணில் கட்டிய கதை உங்களுகெல்லாம் தெரியும்னு நினைக்கிறேன், தெரியாதவங்களுக்கு சுருக்கமாக

ஒரு ஆஸ்ரமத்துல குரு பாடம் சொல்லி கொடுத்துகிட்டு இருக்கும் போது ஒரு பூனை குறுக்காலையும், நெடுக்காலையும் போய்கிட்டு இருந்தது, மாணவர்களுக்கும் அது தொந்தரவா இருக்கவே, குரு அதை பிடிச்சி தூண்ல கட்ட சொன்னார். வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவுத்து விட்டுடாங்க

ஆனா மறுநாளும் அதே பூனை வந்து தொந்தரவு பண்ணுச்சு. குரு ஒரு பார்வை பார்த்தவுடனே மாணவர்கள் அதை பிடிச்சு தூண்ல கட்டிடாங்க, மறுநாள் குரு வர்றதுக்கு முன்னாடியே பூனை வந்துருச்சு, அதனால குரு வரும்போதே பூனை தூண்ல கட்டப்பட்டிருந்தது.

காலம் கடந்தது, ஒரு நாள் அந்த பூனை செத்து போச்சு, புதிய மாணவர்களுக்கு ஒன்னுமே புரியல, குரு வந்தா பூனை எங்கேன்னு கேட்பாரேன்னு பயந்து ஒரு புது பூனையை பிடுச்சி தூண்ல கட்டினாங்களாம்.

காலங்காலமா மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சொல்லப்பட்டு வரும் இந்த கதை இன்று பகுத்தறிவுக்கு எதிராகவும் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்துருச்சு,

நண்பர் நண்டு @ நொரண்டு எழுதிய இந்த பதிவை பாருங்கள்.
இவர் வந்தேரிகள் என குறிப்பிடுவது பார்ப்பனர்களை தான், ஆனால் அதை வெளிப்படையாக சொல்லவில்லை,

இந்து மதத்தை கொண்டு வந்தது இவர்கள் தான், மக்களை பக்தி போர்வையில் பயமுறித்தி வைத்தது இவர்கள் தான், அரசர்களுக்கு அடிவருடியாக செயல்பட்டது இவர்கள் தான்.

இவருடய பதிவில் பாதி இதை தான் சொல்லவருகிறார்.
இதன் பின் தான் இருக்கு விசயமே!

//தங்களின் பிழைப்புக்காக சமயத்தில் பலவற்றை தோற்றிவித்து அதன் மூலம் நிறுவனத்திற்கு
மிகப்பெரிய சொத்தினைப் பெறவைத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை ஓட்டினர்
வந்தெரிகள்.அப்படி நிறுவிய நிறுவனங்களின் சொத்துக்கள் கஜினியால் கொள்ளையடிக்கப்படவே அரசுகள் போல்,சமய நிறுவனமும் ஆட்டம் கண்டது. //

இங்கே அவர் என்ன வருகிறார் தெரிகிறதா?
பார்ப்பனர் ஏய்த்து சம்பாரித்த சொத்துகளை கஜினி வந்து கொள்ளையடித்தார். அதனால் சமயம் ஆட்டம் கண்டது.

படையெடுத்து வந்த கஜினியின் வம்சத்தினரை இவர் வந்தேரிகள் என்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு முன்னரே இருக்கும் பார்ப்பனர்கள் வந்தேரிகள், அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றவே கஜினி படையெடுத்து வந்தது போல் ஒரு மாயையை ஒருவாக்குகிறார்.

//இஸ்லாத்தை மக்கள் பின்பற்ற வைக்கப்பட்ட பொழுது இவர்கள் நிலை மேலும்
மோசமானது.//

அதே சமயம் இஸ்லாமியர்கள் கத்திமுனையில் மத மாற்றம் செய்ய முயற்சித்தைதையும் ஒப்புகொள்கிறார், ஆனால் இந்து மதம் என்பது பயஉணர்சியில் கட்டி போடப்படிருந்தது என்று சொல்லும் இந்த பகுத்தறிவுவாதி இஸ்லாமிய மதத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

//இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், பிறிதொரு வகையினர் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் .வந்தேரிகள், இஸ்லாத்தை பின்பற்றாதவர்களின் பின்னாள் தங்களின் நிறுவனச் சொத்துடன் ஒளிந்து கொண்டனர்கள்.//

இங்கே அப்பட்டமாக சொல்லவருவது பார்ப்பனர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டனர், அதனால் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் பின் அவர்கள் ஒளிந்து கொண்டனர்.
இது பிரிவினையை தூண்டும் வாதமா இல்லையா?

//ஆங்கிலேயாரின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்பொழுது வந்தேரிகளின் மார்க்கமும் சரி, இஸ்லாத்தும் சரி, கிறிஸ்துவின் வரவால் தங்களின் மார்க்கங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கொண்டனார்.//

மேலே குறிப்பிட்ட மூன்று இனங்களில் யார் வந்தேறிகள்? யார் முன்னர் இருந்தே இங்கே இருந்தனர்.
பார்ப்பனர்களும் வந்தேரிகளாக இருக்கலாம், ஆனால் அவர்களை மட்டும் வந்தேரிகள் மார்க்கம் என்று தாக்கி இஸ்லாத்துக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன?

//இன்று வீதிக்கு ஒரு கோவில், வீட்டுக்கு ஒரு கோவில் என்ற நிலை ஏற்பட்டதற்கான காரணம் வந்தேரிகளின் நிறுவனங்களிலும், கோவில்களிலும் அவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாத இந்த மண்ணின்மைந்தர்கள் தங்களின் தேவைக்கேற்ப கோவில்களை அமைத்துக்கொண்டதாலேயே ஒழிய வேறு ஒரு காரணமும் கிடையாது.//

கடவுளையும், கோவிலையும் எதிர்க்க வேண்டிய பகுத்தறிவாளர் கோவில்களுக்கு சொல்லும் சப்பைகட்டை பாருங்கள். பார்ப்பனர்கள் அட்டூழியம் பண்ணினால் கோவில்களை இடிக்கவேண்டியது தானே, அதைவிட்டு வீட்டுக்கு ஒரு கோவில் இருப்பதற்கு காரணம் கண்டுபிடிப்பது தான் பகுத்தறிவா?

//இந்தியா சுதந்திரத்திற்காக தன்னை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.
வந்தேரிகளில் பெரும்பான்மையோர் சுதந்திர எண்ணம் இல்லாதவர்கள். வந்தேரிகளில் மற்றவர்கள் சுதந்திரத்தை வெறுத்தவர்கள் . ஆங்கிலேயே அரசுகளிலும், இரண்டாம் தர அடிமை அரசுகளின் துணையுடன் வாழ ஆரம்பித்தனர் //

சுதந்திரநாளை துக்க நாளாக அறிவித்த பெரியாரின் பகுத்தறிவு சீடர்கள் சொல்கிறார்கள், பார்ப்பனர்கள் சுதந்திர போராட்டத்தை வெறுத்தவர்களாம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பார்ப்பனர்களின் பட்டியலை யாராவது வெளியிட்டால் மகிழ்வேன்.

//சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் கடைசியாக கடுமையாகப் போராடினர் இந்தியாவின் இருதவப் புதல்வார்கள்.
ஒருவர்
மாமனிதர் மகாத்மா காந்தியடிகள் .

இவர்கள் இல்லையேல் இந்தியா எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு வந்தேரிகளினால்
தள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேமுடியவில்லை.//

இவரு யாருக்கு ஆதரவா பேசுறாருன்னே புரியல, வர்னாசிரமத்தை ஆதரித்த காந்ந்தியை தவபுதல்வன் என்கிறார். அவர் இல்லையென்றால் பார்ப்பனர்கள் இந்தியாவை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறார்.

பின்னூட்டத்தில்
//நீங்கள் ஈரோடு தானே அங்கு பெரியார் மன்றம் இருக்கிறது .
அங்கு சென்று வந்தேரிகள் என்றால் யார் என கேட்டுத்தேரிந்து கொள்ளவும்.
ஜின்னா தனி நாடு கேட்டதற்கு காரணமானவர்களே வந்தேரிகள் தான் என்ற உண்மையை முதலில் தெரிந்து கொள்ளவும் .//

ஜின்னா தனி நாடு கேட்டத்ற்கு காரணம் வந்தேரிகள் என்கிறார், அதற்கான ஆதாரம் நமக்கு தேவையில்லை ஆனால் பார்ப்பனர்கள் வந்தேரிகள் என்று சொல்லும் இவர் தனிநாடு கேட்ட இஸ்லாமிரை ஏன் ஒன்றும் சொல்லவில்லை?

**************************************

பெரியார் காலத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தீண்டாமை என்ற முறையில் அதிகமாக இருந்தது உண்மை. அதே சமயம் பார்ப்பனர்களிடம் விலகி இருந்த தலித்துகள் அதே முறையை உயர்சாதியினர் என்று சொல்லி கொள்பவர்களிடமும் கடைபிடித்தார்களா இல்லையா?
பார்ப்பன எதிர்ப்பு அப்போது தேவைப்பட்டதால் பெரியார் அதை கையில் எடுத்தார்!
இன்று எவ்வளவோ சமூக பிரச்சனைகள் இருக்க, இன்னும் பார்பன எதிர்ப்பை காட்டுவது தான் பகுத்தறிவு மேதாவித்தனமா?

பகுத்தறிவு என்றால் என்ன?
கடவுளை மூலமாக கொண்ட மதத்தை, மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது தானே, அதில் என்ன ஓரவஞ்சனை? தி.மு.காவில் கூட்டணியில் இருக்கும் திராவிடர் கழகம், தி.மு.க, பா.ஜா.காவுடன் கூட்டணி வைத்தால். அ.தி.மு.காவுடன் கூட்டு சேர்ந்து விடும்.
காரணம் பா.ஜா.க மத சார்புள்ள கட்சி. இருக்கட்டும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் மத சார்புள்ள கட்சியில்லையா? அதனுடன் மட்டும் கூட்டு ஏன்?

அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பகுத்தறிவாளர்களா?

உங்களுக்கு வேண்டுமானால் பெரியார் கடவுளாக இருக்களாம், நான் பெரியாரை படித்தோ, பார்த்தோ கடவுள் மறுப்பு கொள்கைக்கு வரவில்லை. கண்மூடித்தனமான எதிர்ப்பை நீங்கள் செய்வீர்களேயானால் அதையே நானும் செய்ய நெற்றியில் லேபிள் ஒட்டிய பகுத்தறிவாளன் நானில்லை.

பெரியார் என்ன கடவுளா என்று நான் போன வருடம் இதே பிப்ரவரியில் எழுதிய பதிவு

இஸ்லாமிய சகோதரர்களை வந்தேரிகள் என்று சொல்வது என் நோக்கமல்ல அதே நேரம் கண்மூடித்தனமான பார்பன எதிர்ப்பும் முட்டாள் தனமானது என்று சொல்லவே இந்த பதிவு,
அவர்கள் அரசியலுக்கு வேண்டுமானால் நீங்கள் இஸ்லாமியராக இருக்கலாம், எனக்கு நீங்கள் மத அடையாளமில்லாத சகோதரர்களே.

பார்ப்பன எதிர்பாளர்களுக்கு இந்த பதிவு நல்ல வேட்டை, ஆனாலும் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவோட வாதத்திற்கு வந்தால் உங்கள் பகுத்தறிவின் உன்னத நிலை உலகறியும்!

கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.

உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை!

சமீபத்தில், சில வருடங்களுக்கு முன் என்று வைத்து கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். அம்மாதிரியான நேரத்தில் எங்களின் உறவினர் ஒருவருக்கு திருமணம் வந்தது, என் அம்மா தான் சென்றிருந்தார்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் என்றாலே அனைவரும் கும்பலாக அமர்ந்து கொண்டு மற்றவர்களின் குடும்ப நிலையை விசாரிப்பதே காலம்காலமாக நடந்து வரும் வழக்கம். அங்கேயும் அது தான் நடந்திருக்கிறது, என் அம்மாவின் முறை வருகையில் “இளையது ரெண்டும் நல்லாத்தான் இருக்கு, இந்த மூத்தது தான் அடங்காம திரியுதுன்னு” கம்பேனி சீக்ரெட்டை போட்டுடைத்தார்.

என் அம்மாவின் சித்தி மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியர், அவரது மகன்(எனக்கு மாமா) சென்னையில் ஸ்டூடியோ வைத்திருக்காராம் அதற்கு என்னை வேலைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் மறுத்து பார்த்தேன் பிறகு சென்னை என்பதால் உள்ளூர ஒரு ஆசை, போய் தான் பார்ப்போமே என்று, ஒரு சுபயோக(அவர்களுக்கு)தினத்தில் என்னை ரயிலேற்றி சென்னை அனுப்பினார்கள், சென்னைக்கு பல முறை விடுமுறையில் சென்றிருந்தாலும் இம்முறை தொழில் நிமித்தம் செல்வதால் மனதுக்குள் ஒரு பெரியமனுஷத்தனம் வந்தது, சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன்.

போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், பிரிண்ட் போடுதல் பற்றியதை தொழில் சார்ந்த வேறு ஒரு பதிவில் பார்த்து கொள்ளலாம், இங்கே நேரடியாக விசயதிற்கு வருகிறேன். அந்த ஸ்டூடியோ பொறுத்தவரை எனக்கு வெளி நிகழ்ச்சிகள் எடுப்பது தான் வேலை, அங்கேயே இருந்தாலும் கடைக்கு வரும் நபர்களை போட்டொ எடுப்பது அலமேலு என்ற பெண் தான். நான் சும்மா தான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன். மாலை ஆறு மணிக்கு அந்த அம்மணி பேக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுவார், எனது மாமாவும் அந்த நேரத்தில் வந்து விடுவார்.

ஒரு நாள் மாலை நேரம், வானம் லேசாக தூறி கொண்டிருந்தது, ஆடையை மீறி குளிர் தோலில் உறைத்தது, ஒரு சுகவாசியாக உணர்ந்த தருணம், அதை அனுபவிக்க ஒரு தம் அடிக்கலாமே என்று தோன்றியது, கீழே சென்று சிகரெட்டும் வாங்கி வந்தேன், ஸ்டூடியோவுக்கு முன் உள்ள பால்கனியில் பற்ற வைத்து சுதந்திர வானில் புகையை ஊதி கொண்டிருந்தேன்,
”நீங்கள் சிகரெட் பிடிப்பிங்களா” என்று பின்னால் இருந்து ஒரு குரல் -அலமேலு

அந்த வயதிலெல்லாம் சிகரெட் என்பது நானும் பெரிய மனுசன் ஆகிட்டேன் என்று உலகுக்கு உணர்த்த பயன்படும் ஒரு வஸ்த்து அதனால் மிடுக்காக ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.

அரைமணி நேரத்தில் எனது மாமாவும் வந்து விட்டார், நான் வெளியேவே நின்று கொண்டிருந்தேன், அலமேலு எல்லாத்தையும் போட்டு கொடுத்திருக்கிறாள், எனக்கு அது தெரியாது, ஒருவேளை கேட்டால் என்ன சொல்வது என்ற முன் ஒத்திகை எதுவும் இல்லாமால் தேமே என்று தான் இருந்தேன்.

ஒரு எட்டு மணி இருக்கும், என் மாமா என்னை அழைத்தார், எதிரில் அமர சொன்னார்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்ற்கு வந்தார்,
“நீ சிகரெட் குடிப்பியா?”

புரிந்துவிட்டது எனக்கு! சண்டாளி போட்டு கொடுத்துவிட்டாள். எப்படி தப்பிப்பது என யோசிக்க கூட நேரமில்லை பதில் சொல்லியே ஆகவேண்டும்.

”ஆமாம் மாமா குடிப்பேன்”

”எப்போதிருந்து”

”ஸ்கூல் படிக்கும் போது பழகிட்டேன்”

”நாம சாப்பிடுற பொருள்கள்லேயே உரம்ங்கிற பேருல விசத்தை கலந்துற்ரானுங்க, இதுல இது வேற தேவையா விட்டுடு என்னா”

”சரிங்க மாமா”(சிறிது மெளனம்)
”நீங்க சிகரெட் குடிச்சிருக்கிங்களா மாமா”

”என்ன இப்படி கேட்டுபிட்டா
காலேஜ் படிக்கும் போது நான் போடாத ஆட்டமில்லை”

”எப்போ மாமா விட்டிங்க”

”28 வயசுல எல்லா பழகத்தையும் விட்டுட்டேன்”

”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது

திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்


இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!


(தொடரும்)

தலைப்பு - பாகம் இரட்டை!

ஏற்கெனவே சில பதிவர்கள் வரும் நாட்களில் என்ன என்ன தலைப்புகளில் பதிவிடப்போகிறார்கள் என ஒரு பதிவிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இது.
புதிதாக வருபவர்கள் முதலில் இதன் முந்தைய பாகத்தை படித்துவிட்டு வாருங்கள்


தாமிரா
தங்கமணி செய்த தங்கபஸ்பம்
புத்தகத்தில் தங்கபஸ்பம் செய்வது எப்படி என செய்முறை படித்துவிட்டு தாமிராவின் பிப்ரவரி மாத சம்பளத்தை கொண்டு மொத்தமாக தங்கம் வாங்கி அப்படியே அதை பஸ்பம் செய்து தாமிராவின் மூக்கை பிடித்து ஊற்றி விட்டாராம். அன்றிலிருந்து தாமிரா ஜொலிக்கிறாராம். அதை தான் பதிவாக போடப்போகிறாராம். பண கஷ்டம் உள்ளவர்கள் தாமிராவை லேசாக சுரண்டி கொள்ளலாம். தங்கமானவர் என்ற சொல்லுக்கு ஏற்றவர்.


அபிஅப்பா
கோழைசேகர விலாஸ்
தற்போது எழுதிவரும் விரசேகர விலாஸ் பயங்கர மொக்கை என்று பல நண்பர்கள் சாட்டில் முரட்டியதால், இந்த மொக்கையை கூட படிக்க முடியாத கோழை சேகரர்கலா என்று பதிவிடப்போகிறாராம். கண்டிப்பாக இந்த பதிவிலும் கல்யாணம் உண்டு ஆன கடைசி வரை பந்தி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த மாட்டாராம். பசியோடு இருப்பவர்கள் வேறு கடையை பார்ப்பது நல்லது.

டோண்டு
உழைப்பால் உயர்ந்த காக்கை,குருவி சாதிகள்
நான்: அதுங்க என்னங்க பண்ணுச்சு! அதை கூட விடமாட்டிங்கிறிங்க

டோண்டு:பாரதியே சொல்லியிருக்கார், காக்கை,குருவி எங்கள் சாதின்னு அதை எப்படி விடுவதாம்

நான்: சரி என்னா தான் சொல்ல போறிங்க

டோண்டு:காக்கைகள் தரையில் வைக்கும் சாப்பாட்டை சாப்பிடக்கூடாது.
அதே போல் தனி இலை என்று தெரிந்தால், சாப்பிடாமல் தானே சமைத்து தனியாக சாப்பிட பழக வேண்டும்.

நான்: தலைக்கு மேல ஒரு காக்கா பறக்குது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க


கார்க்கி
பாட்டி கதைகள்
புட்டி கதைகளின் நாயகர்கள் ஏழுவும்,ஆறுமுகமும் அடிக்கும் லூட்டி உங்களுக்கே தெரியும்,
ஆனால் அவர்களுடய பாட்டிகள் அதை விட பெரிய லொள்ளு பார்ட்டிகளாம். தற்சமயம் ஊருக்கு போயிருந்த கார்க்கி, பாட்டி அடித்த லூட்டிகளை கேள்வி பட்டு அதையும் இனி பாட்டி கதைகள் என்ற பெயரில் எழுதப் போகிறாராம்.


நர்சிம்
கட்டுதறியும் கவிபாடும்
முடிந்த வரை கம்பனை பற்றி அலசி விட்டதால், கடைசியாக கம்பர் வீட்டு கட்டுதறி பாடிய கவிதையை எழுதுகிறாராம், சரி அது என்னான்னு ரெண்டு வரி சொல்லுங்கன்னு கேட்டேன்
டக் டடக் டக்
டடக் டக் டடக்
டக் டடக் டக்
டடக் டடக் டக்
டக் டக் டடக்

இது தான் கவிதையாமாம்
புரிந்தவர்கள் எனக்கு விளக்குங்களேன்

ஜிம்ஷா
கேள்வி கேட்டு அலுத்து போச்சு
ஜிம்ஷாவின் பதிவுகளை படிப்பவர்களுக்கு!? மட்டுமே தெரியும் ரகசியம், அவரது பெரும்பாலான பதிவுகள் கேள்வி குறியுடன் தான் முடியும். ஆனால் பாருங்கள் யாருமே பதில் சொல்ல மாட்டிங்கிறாங்களாம் கடுப்பாயி போன ஜிம்ஷா இனிமே யார் கிட்டயும் கேள்வி கேட்க மாட்டேனு சொன்னார்! அப்படியானு கேட்டேன்! உங்களுக்கு தெரியுமா?னு ஆரம்பிச்சார்..................

இன்னும் தொடரலாம்

மொக்க கவுஜ!


உழைப்பு உயர்வைத் தரும்,
உயர்வு புகழைத் தரும்,
புகழ் பணத்தை தரும்,
பணம் திமிரைத் தரும்,
திமிர் ஆணவத்தைத் தரும்,
ஆணவம் அழிவைத் தரும்

அதனால் உழைப்பை எதிர்ப்போம்.

இவண் ரெஸ்டு எடுத்து,
ரெஸ்டு எடுத்து
டயர்டாணவர்கள் சங்கம்.

ஈரோடு கிளை
தலைவர் :நந்து f/o நிலா
செயலாளர்! :வால்பையன்

சிங்கை கிளை
தலைவர் :நட்புடன் ஜமால்
செயலாளர் :நிஜமா நல்லவன்

சென்னை கிளை
தலைவர் :புதுகை அப்துல்லா
செயலாலர் :வெண்பூ

உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்

!

Blog Widget by LinkWithin