சீரியஸான கேள்விகளும் எனது புரிதல்களும்!

கேள்வி, பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது எனது தேடலை அதிகபடுத்தவேயன்றி நான் எல்லாம் அறிந்தவன் என பறைச்சாற்றி கொள்ள அல்ல என்பது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும். நான் எதிர்பார்த்த, எனது பழைய சிந்தனைகளை தூண்டிவிடக்கூடிய கேள்விகள் தம்மை வெளிபடுத்திக்கொள்ளா விரும்பாத ஒரு நண்பரிடம் இருந்து வந்திருக்கிறது, கேள்விகள் குறைவு தான் என்றாலும் அதன் தாக்கம் மிகப்பெரிது. எனது புரிதலை நான் எங்கே பதிவாக இடுகிறேன், உங்கள் புரிதல்களை பின்னூட்டமாகவே தேவைப்பட்டால் பதிவாகவோ இட உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
விவாதம் தெளிவுறவேயன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!

**********

கேள்வி 1)
படைப்புவாத கொள்கை - அடிப்படையில் அனைவரும் சமமே என்று கம்யூனிசம் பேசுகிறது
பரிணாமக் கொள்கை - "survival of the fittest" என்று படிநிலையை ஆதரிக்கிறது.
ஆனால் -- நிஜத்தில் மதவாதிகள் படிநிலையை ஆதரிப்பவர்களாகவும், பரிணாமவாதிகள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் முரணின் மர்மம் என்ன ?? - இது விவாதத்துக்கு


அருமையான கேள்வி!, என்னை பலமுறை தூண்டிய கேள்வியும் கூட!
உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.
பரிணாமத்தின் படி உள்ளது சிறத்தல் என்றால், நான் உன்னை விட சிறந்தவன் என காட்ட பரிணாமம் பயன்படுகிறது என்பது பொது புத்தியில் விழைந்த விதியாகவே எனக்குப்படுகிறது!


பரிணாம கோட்பாட்டின் படி மனிதனும் ஒரு விலங்கே, டார்வீனிஷ கோட்பாடு தம்மை உயிர்புடன் காத்துக்கொள்ளவும் மேலும் தம் சந்ததியினரை காப்பாற்ற அது செய்யும் வேலைகளையும் வைத்து சிறந்தது(நீண்ட காலம்) வாழும் என வகுத்தார்.


அவர் அதைசொல்லும் பொழுது உலகில் நிலபிரபுத்துவ ஏகாதிபத்தியம் நிலவிகொண்டிருந்தது. நாடு பிடித்தல் அல்லது புதிய தளங்களை கண்டுபிடித்தல் என எல்லா நாட்டினரும் முயற்சித்து கொண்டிருந்தனர். ஆம் நாம் சிறந்தவர்கள் என காட்டாவே அந்த சிரத்தை. நாகரீக உலகில் நாகரிக மற்ற மக்களை பழங்குடியினர் என பட்டம் கட்டி அவர்களை அடிமைகளாக வைத்திருந்தது நிலபிரபுத்துவத்தின் பார்பனீய கோட்பாடே தவிர பரிணாமத்தின் தவறல்ல.
அன்று கறுப்பினத்தவன் மற்றும் போரில் தோற்றவர்கள் அடிமைகளாக கருதப்பட்டார்கள். ஒன்று நிலபிரபுத்துவம் மன்றொன்று அதிகாரமையம், இரண்டும் பார்பனீயத்தின் கிளைகள் தான். அனைவரும் சமம் என்ற வார்த்தை அவர்களை அடிமைகளோடு சேர்ந்து அமரச்சொன்னது போல இருந்தது, உண்மையில் அடிமைகளாக யாரையும் நடத்தாதே எனத்தான் உண்மையான கம்யூனிசம் சொன்னது.


ஆபிரஹாம மதஅடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாள் மூலம் பிறந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம், இன்று ஏன் பிரிவினை. நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணம், சூத்திரன் காலில் இருந்து வந்தவன் என்றால் எங்கே அனைவரும் சமம் என்ற கோட்பாடு.


அதுவல்ல நான் சொன்னது, அடிப்படை இந்துஞானமரபு பற்றி நீங்கள் பேசூவீர்களேயானால் அது பற்றி படுத்த பதிவில் விவாதிப்போம்!

*****

கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?

தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.
கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.


கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?


ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!


நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!


**********

கேள்வி 3)
பரிணாம தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லருக்கு, யூதர்களை கொன்றது மிகவும் நியாயமாக பட்டதாம். --- ஏனென்றால் பரிணாமக் கொள்கையின்படி ஹிட்லர் தன்னையும் தன் கும்பலையும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டதால். அது உண்மையெனில்........பரிணாம தத்துவம் மனிதர்களின் எண்ணங்களில் .....மனிதத்தை வளர்க்குமா ???? ---இதுவும் விவாதத்துக்கு.


ஹிட்லர் பற்றிய வரலாற்று குறிப்புகள் அறிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள், ஹிட்லர் சிறுவயதில் தன் தந்தையால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர், இவரது தந்தை ஒரு யூதர் என்ற செய்தியும் உண்டு, ஹிட்லர் ஜெர்மனியை சேர்ந்தவர் அல்ல, ஆஸ்டிரியாவில் பிறந்தவர், சிறு வயதில் Protestantism வகையை சேர்ந்த கிறிஸ்தவர்களின் போதனைகளால் யூதர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என உருமாற்றப்பட்டவர். முக்கியமாக புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.(பின்னாளில் அவரே கிறிஸ்துவத்தையும் எதிர்த்தார்)


ப்ழைய ஏற்பாடு என்னும் கிறிஸ்துவ புத்தகம் இன்று கிறிஸ்தவர்கள் கையில் இருந்தாலும் அதிலிருப்பவற்றை பின்பற்றிவதில் அவர்களுக்கு பல குழப்பங்கள் உண்டு, விருத்தசேதனம் என்னும் ஆண்குறி முன்தோல் நீக்குதல் அதில் தான் உண்டு,(குரானில் இல்லை) பின்னாளில் இயேசிவின் மறைவுக்கு பின் தொகுக்கபட்ட புதிய ஏற்பாடு கிறிஸ்துவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தது, இயேசு யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டதால் யூதர்கள் அன்று கிறிஸ்தவர்களுக்கும் பின்னாளில் இஸ்லாமியர்களுக்கும் எதிரிகள் ஆனார்கள்.


ஹிட்லர் முதலாம் உலகப்போரில் தாமாகவே முன் வந்து பணியாற்றினார், அப்போது கிடைத்த புகழினால் at wolf என ஜெர்மனியில் குறிக்கும் அடால்ஃப் என்று தம்மை அறிவித்து கொண்டார் அதாவது தம்மை ஒரு ஓநாய் என்று, இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஹிட்லர் என்றால் மேய்ப்பாளர் அல்லது காப்பாளர் என்றூ பொருள், ஒரே பெயரில் முரண்பட்ட இரு கருத்துகளை கொண்டவர் தான் ஹிட்லர்!
தாம் மேலானவர்கள் என்ற ஆரிய தத்துவம் அவரை ஈர்த்தது, ஹிட்லர் ஒரே சமயத்தில் முதலாளித்துவத்தையும், மார்க்சியத்தையும் எதிர்த்தார், யூதத்தலைவர்களால் சோசலிசம் பாதிக்கபடுவாதக கூறிய ஹிட்லர் யூதர்கள் வாழ தகுதியற்றவர்கள் அதாவது உடல் ஊனமுற்றவர்கள் போல் கடவுளின் சாபக்கேடுகள் என வர்ணித்தார், டார்வினசத்தை அவர் அறிந்திருக்கவில்லை ஆனால் உள்ளது சிறக்கும் என்ற தத்துவத்தை அறிந்திருந்தார் என வேண்டுமானால் சொல்லலாம்!, யூதர்களின் மேல் அவருக்கு திணிக்கபட்ட வெறுப்பால் தான் அவர் யூதர்களை கொடுமைபடுத்தினார், அங்கே டார்வீனிசம் வரவில்லை, மதமே காரணமாக இருந்தது.


பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, எனது பரிணாம பதிவில் நான் ஏற்கனவே கூறியிருப்பதைப்போல் நிலநடுகோட்டுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் கறுப்பினத்தவர்களாகவும், மேற்கத்திய மக்கள் வெள்ளையர்களாகவும் மாற இயற்கை அமைப்பே காரணம், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாற ஏற்படும் நிகழ்தகவை பரிணாமம் அழகாக விளக்குகிறது, அவை எங்கேயும் ஒன்றை விட ஒன்று சிறந்தது என சொல்லவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்றே சொல்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!

********

கேள்வி 4)
மனிதர்கள் ரகசியமாகவேனும் மனதுக்குள் தன்னை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்வதன் - மனோவியல் சார்ந்த _ காரணம் என்ன ??

தீர ஆராய்ந்தால் இச்சிந்தனை நமக்கு திணிக்கப்பட்டவை என்பது விளங்கும், சிறு வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ளோர் நம்மை உயர்ந்தவனாகவும், புகழ் உச்சாணியை அடைய வேண்டும் என்று திணித்தே நம்மை வளர்க்கிறார்கள், அசம்பாவிதமாக ஒரு சிலர், குழந்தைகளை சிறுமைபடுத்தி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி தம்மை என்றும் மற்றவர்களை விட குறைவான திறன் உள்ளவர்கள் என்று நினைக்க வைக்கிறார்கள்!
நான் எப்போதும் சொல்வேன், நான் முடியாது என்று சொல்வது கிடையாது, தெரியாது என்று வேண்டுமானால் சொல்வேன், இவ்வுலகில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவனால் செய்ய முடிந்த காரியத்தை எனக்கு செய்யத்தெரியாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக செய்ய முடியாமல் இருக்காது. முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அவர்கள் தம் நம்பிக்கையையை வளர்த்து கொள்ள இனி முடியாது என வார்த்தையை பயன்படுத்தாமல் தெரியாது, ஆனால் சொல்லிக்கொடுத்தால் செய்வேன் என்றால்.............


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள்ளும் இருக்காது!

********

உங்களது கேள்விக்கான எனது புரிதல்களை பதில்களாக அளித்துள்ளேன், ஹிட்லர் பற்றிய தகவல்களில் சில வரலாற்று பிழை இருக்கலாம், தெரிந்தவர்கள் சொன்னால் திருத்தி விடுகிறேன். மேலும் இம்மாதிரியான கேள்விகள் எனக்கு புதிய அனுபவங்களை கொடுப்பதால் உங்களிடமிருந்து இம்மாதிரியான மற்றும் தர்க்கம் சார்த்த எந்த கேள்வியாகினும் என்னை செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கிறேன்!

கேள்வி பதில் (29.01.2012)

பெரிய கேள்விகளெல்லாம் ஒன்றுமில்லை, நீ என்ன பிரஷ் யூஸ் பண்ற, என்ன பேஸ்ட் யூஸ் பண்ற போன்ற மதவாதிகளின் கேள்விக்கு ஞாயிறு இலவசமாக அதாங்க ஃப்ரியா இருக்கும் போதே பதில் சொல்லிடலாம்னு தான்! கேள்விகள் கேட்கப்பட்ட குவியல் லிங்க்

**


கடவுள் என்ற பெயரில் ஒருவர் ஒரு கூகள் கணக்கை ஆரம்பித்து சில கேள்விகளை கேட்டுள்ளார் அதற்காகவே இப்பதிவு, இதன் பிறகு பர்சனல் கேள்விகளுக்கு பதிலில்லை நண்பர்களே!

//kaduvul said...
பாவம் உன்னை நம்பி காசை போட்ட உன் பார்டனரை சொல்லனும்//

சொல்லுங்க, கேட்க அவர்களும் ரெடியாத்தான் இருக்காங்க!


//உனக்கு இன்று இருக்கும் மன நிலையில் எந்த வித தொழில் செய்தாலும் ஓடாது. நீ ஒரு அழிக்கும் சக்தி, சும்மா சீன் போடனும்ன்னு ஏதாச்சும் விட்டேத்தியே பேசிகிட்டு இருக்கும் ஒரு லூசு//

என் மனநிலையை படிக்கும் அளவிற்கு நீங்க மனோத்துவ நிபுணர் என்றால் இப்படி அடையாளம் மறைக்கப்பட்டு வர வேண்டிய அவசியம் இருக்காதே. நான் எந்த தொழில் செய்தாலும் ஓடாதா?, நான் என்ன மாட்டு வண்டியா ஓட்டப்போனேன்?. நான் அழிக்கும் சக்தி தான், மதவாதிகளை அழிக்கும் சக்தி. உங்களை போன்ற முதுகில் குத்தும் துரோகிகளை அழிக்கும் சக்தி. நான் விட்டேந்தியா பேசுறேன்னு படிக்கிறவங்க சொல்லட்டும் பாஸ், இன்னொரு விசயம் நான் புத்திசாலின்னு என்னைக்கும் சொல்லிகிட்டது கிடையாதே, எனக்கு புதுசா லூசு பட்டம் கொடுக்குறிங்க!//உன்னோட நான் நெருக்கி பழகி இருக்கிறேன். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.//

நெருங்கி பழகுவதை போல் நடித்திருக்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், நெருங்கி பழகும் ஆசாமி இப்படி அடையாளம் இல்லாமல் விமர்சனம் செய்ய மாட்டான். என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்ததில் மகிழ்ச்சி, என் ஜட்டி சைஸ் என்னான்னு சொல்லுங்க பார்க்கலாம்!?


//பிழைக்கிற வழிய பாரு அடுத்தவனை குத்தம் சொல்றதை நிறுத்து//

உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல. இந்த பின்னூட்டத்தில் நீங்க சொல்லியிருக்குறதுக்கு பெயர் என்ன?. நீ ஒருவனை குற்றவாளி என காட்டும்பொழுது மீதி மூன்று விரல்கள் உன்னை காட்டுகிறதுன்னு யாரோ சொன்னாங்களாம், பேர் தெரியல கேட்டு சொல்றேன்!

//தன் வாழ்க்கையை ஒழுங்காக வைத்து கொள்ளாத நீ எல்லாம் எப்படி அடுத்தவனுக்கு நியாயம் சொல்லாம்??//

என் வாழ்க்கை கெட்டு போச்சுன்னு யாரு அழுதது இப்போ, நான் என்ன குவியலில் பிச்சையா எடுத்துகொண்டிருந்தேன். நான் யாருக்கைய்யா நியாயம் சொன்னேன், சரி அதை விடு. இப்போ நீ பண்றதுக்கு பெயர் என்ன?( வயசு அதிகம் என்றாலும் இப்படி பண்ணா வேற எப்படி யார் சொல்றது, அவுங்களுக்கா அறிவு வேணும். அது என்ன குரள் சார், இன்னாரை ஒறுத்தல்.........)

//உன் தன்னம்பிக்கை எல்லாதைய்ம் குப்பையில் போடு ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாத நீ எல்லாம் எப்படிடா அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய வரே?? உனக்கு மேல் மாடி காலியா?//

மேல்மாடி காலியாயிருந்தா நான் எப்படியப்பா சென்னையில் வேலை செய்ய முடியும், எட்டு வருடம் கமாடிடி மார்க்கெட்டில் இருந்தேன், ஒரு வருசம் ஹோட்டல், அதில் சில இழப்புகள் திரும்பவும் பழைய இடத்திற்கே வந்து விட்டேன். இதில் என் தன்னம்பிக்கையில் என்ன குறை கண்டாய் மகனே அல்லது மச்சானே, அல்லது பேரனே(அர்த்தம் தெரிந்தவர்கள் சிரித்து கொள்க, வெளியே சொல்ல வேண்டாம்).

//kaduvul said...
இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற


தூ//

சார் அடையாறுக்கு எப்படி போகனும் என்பதும் கேள்வி தான், அதுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதியில்லைன்னு ப்ளாக் உலகில் கோழையாக அடையாளத்தை மறைத்து, சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்கும் ஒரு பிரபல பதிவர் சொல்லியிருக்கார், அதுனால உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது, வேற யார்கிட்டயாவது கேட்டுக்கோங்கன்னு சொல்லிரட்டுமா?
என் வாழ்க்கை குப்பை நோண்டுவதில் போனால் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்பதே உண்மை. குப்பையில் தானய்யா ஏகப்பட்ட பொக்கிஷங்கள் கிடக்கு, அது ஒரு கிடங்கு!


நேர பார்த்து துப்பன்பும் தெரிந்த்சதா? அண்ணாந்து பார்த்து துப்பி இப்ப உன் மூஞ்சியே நாறி போச்சு பாரு! :)


இது வரை பதில் சொன்னது ஒரு கழிசடைக்கு இனி உருப்படியா பதில் சொல்வோம்!

*********************


திரு அர்த்தநாரி

//நீங்கள் பணம் நஷ்டம் என்று சொன்னீர்கள். அப்புறம் எதற்காக, பணம் பண்ணலாம் ஷேர் மார்க்கெட்-ல் என்று கூவி கூவி அழைத்தீர்கள்.? உங்களை நம்பி யாரும் வர மாட்டார்கள் என்பது வேறு. இப்பொழுது, பணம் நஷ்டம் வந்த வுடன், கடையை சாத்திவிட்டு, அடுத்த நபரிடம் வேலைக்கு சேர்ந்து விடீர்கள். உங்களை நம்பி பணம் போட்டிருந்தால், என்ன வாகி இருக்கும் என நினைத்து பார்த்தீர்களா?
நீங்கள் இப்பொழுது வேலை பார்க்கும் வேளையில், கடவுள் போட்டோ இருகிறதா? இருந்தால், வேலையை விட்டு விட்டு போய் விடவும்.
சில வருடங்களில், நீங்கள், உங்கள் பாஸ் ஆபீஸ்-ல் வேலை, அப்புறம், ஹோட்டல் பிசினஸ்(அதன் முடிவு என்ன ஆச்சு என்று கூறவும்.. அந்த முதலாளி என்ன ஆனார்), அப்புறம் ஷேர் மார்க்கெட்(அதன் நிலவரம் என்ன).., என பல வேளைகளில் , என் நிரந்தரம் இல்லாமல்,வேலை செய்கிறீகள்..!!!!!!//


நான் எட்டு வருடம் பங்குவணிக துறையில் இருந்தேன், ஹோட்டல் இழப்பில் என் பங்கு மட்டுமல்ல எனது பார்ட்னர்களுக்கும் பங்கு உண்டு என்பதால் தான் நான் இப்போது வேலையில் இருக்கிறேன், நான் ஏமாற்றி இருந்தால் கம்பி தானே எண்ணி கொண்ட்இருப்பேன்.


கடவுள் போட்டோ!? :)


நான் கோவிலில் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்தாலும் கடவுள் மறுப்பாளன் தான்,
நாத்திகன் என்ற வார்த்தையே சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதம் பேசுபவர்களிடமும் கடவுள் மறுப்பாளர்கள் இருந்ததால் தான் அந்த பெயரே வந்தது. நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல, நான் என்னவாக இருக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம்.


நேர்முகத்தேர்வில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கூறினேன், ஏன் என்று கேட்டார்கள்.
நான் என்னை நம்புகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றேன்.


என் பார்ட்னர் என்ன பண்றாங்க, என் பழைய பாஸ் கார்த்திக் என்ன பண்றார்னு தெரியனும்னா 9994500540 க்கு போன் பண்ணுங்க, பொதுவில் சொல்ல அவுங்க என்ன பொதுச்சொத்தா?

****

//உங்கள் பெண்ணிற்கு ஸ்கூல்-ல் certificate தர மாட்டேன் என்கிறீர்கள். நல்லது. உங்களிடம் ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், ஸ்கூல் TC , மற்றும் எதாவது இருக்குமாயின், தயவு செய்து கிழித்து போட்டு விட்டு, அதை போட்டோ எடுத்து ப்ளாக்-ல் போடவும். உங்கள் பெண்ணிற்கே, நீங்க ஜாதி certificate தராதவர், நீங்கள் மேற் சொன்னவற்றை அப்பளை செய்யும் போது கண்டிப்பா கொடுத்து இருப்பீர். அதெல்லாம் உங்களுக்கு தேவை கிடையாது.
உங்கள் பெண்களின் பெயர் பற்றி கூறும் போது, நான் தமிழ் தமிழ் என்று எப்போ சொன்னேன் என்று தத்துவமாக பேசினீர்கள். வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. வேண்டுமானால், ஸ்கேன் செய்து அனுப்புகிறேன், உங்களால், அந்த பெயரை, இப்போ gazette மாற்ற முடியுமா.. தூய தமில் பேர் , அங்கவை, சங்கவை.//


எனக்கு சாதி அடையாளம் தரும் எந்த ஒரு அடையாள அட்டையும் என்னிடம் இல்லை, என்னிடம் ரேஷன் கார்டு இருக்கு, அதில் எங்கே சாதி இருக்கு? லைசன்ஸ் இருக்கு அதில் சாதி இருக்கா?, இதையெல்லாம் அப்ளை பண்ண சாதி சான்றீதழ் வேணும்னு உங்களுக்கு சொன்ன கூமுட்டை யாருங்கோ!?


அருண் என்பது என் பெயர் அதற்கு அர்த்தம் சூரியன், ஆரூன் என்றால் அதிகாலை சூரிய உதயம் என்று அர்த்தம், வர்ஷா, வருணா இரண்டுமே மழையை குறிக்கும் சொல். இவர்கள் இருவர் பிறக்கும் பொழுதும் நல்ல மழை என்பதால் அதன் அடையாளமாக அந்த பெயர் வைத்தேன். சமஸ்கிருதம் தேவமொழி இல்லை என்பதே என் வாதம், அதை ஒரு மொழியாக ஏற்று கொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.


என் குழந்தைகள் அவர்கள் பெயரை மாற்ற நினைத்தால் அவர்கள் கெஜட்டில் மாற்றி கொள்ளட்டும், அது அவர்கள் இஷ்டம்!


**+**


//உங்கள் கல்யாணம் வீட்டில் பார்த்து பண்ணியதா? உங்கள் கல்யாண் அழைபிதழ் இருகிறதா? அதில் ஜாதி உள்ளதா? அப்பொழுது பொங்கி எழுந்தீர்களா? ஜாதி இல்லை எனில், மிகவும் நன்று. முடிந்தால், உங்கள் அழைபிட்ஹழ் , ப்ளாக்-ல் போடவும்.
நீங்கள் கல்யாணம் பண்ணும்போது தாலி கட்டி , இந்து முறை படி நடந்துதா? அப்பொழுது உங்கள் moolai வேலை செய்யவில்ல என்றால், இப்பொழுது வேலை செய்யுமா? //


எனது நெருங்கிய நண்பர்களுக்கு எனது மணவாழ்க்கை பற்றி தெரியும்.
தாலி கட்டினேன், இது உனக்கு கல்யாணம் ஆயிற்று என்பதற்கான அடையாளமே தவிர நான் உன் கணவன் என்பதற்கான அடையாளம் அல்ல, நாம் இருவரும் மனமொத்த நிலையில் இருக்கையில் இந்த அடையாளம் தேவையில்லை என்றால் நீ கழட்டி விடலாம் என எப்போதே சொல்லிவிட்டேன்.


எனது அழைப்பிதழில் சாதி இருக்காது, ஏனென்றால் என் அப்பா வேற சாதி, என் அம்மா வேறு சாதி!
:) எனக்கு ரொம்ப வசதியா போச்சு சாதியை முற்றிலும் ஒழிக்க!

****//பண்ணும் வேலை எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது.. வருத்தமா இருக்கு. எங்கள் ஊரில் , இதற்கு பெயர் விளங்காதவன். (leg Dhaadha ) . அந்த பெயர் உங்களுக்கு வராது இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், //

பல கோடி நட்டம் ஆகி உங்ககிட்ட பிச்சை எடுக்க வந்த மாதிரி ஃபீல் பண்றிங்களே, எங்கள் ஊரில் உங்களை போல் ஆட்களை பிச்சைகாரர்கள் என்போம், ஆம் இங்கே பார்பன பிச்சைகாரர்கள் அதிகம், அதுனால எந்த பாப்பான பார்த்தாலும் பிச்சைகாரன் மாதிரி தான் தெரியும். :) எல்லாம் வல்ல இறைவன் முதலில் அவன் குண்டியை கழுவி கொள்ளட்டும், பிறகு இங்கே வந்து கழவச்சொல்லுங்கள்!


***


//நான் ungal மனம் நோக இதெல்லாம் செய்யவில்லை. நீங்கள் மற்றவரை வம்புக்கு இழுக்கும் போது, " இந்த கேள்வி -கு இன்னும் பதில் வரலை" என்று இறுமாப்புடன் சொல்லுவீர்கள். நான் கேட்கிறேன், இதற்கு பதில் உண்டா? இதற்க்கு அந்த ஆயி மூஞ்சி ராஜன் கூட சேர்த்துகிட்டு , என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.//

மனம் என்ன செஞ்சு வச்ச பொம்மையா,,..... நோக!?
எனது பதிவில் எதற்காக ராஜன் பெயரை இழுக்குறிங்க, உங்களுக்கு அறிச்சா நீங்களே சொரிஞ்சுகோங்க, ராஜனை கூப்பிட்டா ரத்தகளரி தான் ஆகும்.


திருப்பதில், திருசெஞ்தூரில், பழனியில் மக்களின் மயிரை புடுங்கியதை(அல்லது மழித்து எடுத்து கொண்டதை) விட வேறொன்றும் இந்த கடவுள் என்ற கல் செய்யவில்லை என்று எங்கும் சொல்வேன் எங்கேயும் சொல்வேன்!


கடைசியில் இவரும் நாறிட்டாரே, பெயரிலேயே அர்த்தநாரி என்று இருப்பதாலோ?
மனிதம் ஒன்றே வாழ்க்கை, மனிதம் காக்க எதற்கும் தயார்!

குவியல் (28.01.2012)

மிக மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் குவியல். ஆயிரம் பாலோயர்கள் தொட்டபிறகு ஒவ்வொரு நூறுக்கும் சொல்லும் நன்றி கூட சொல்ல முடியவில்லை. இணையம் பக்கம் நெருங்க முடியாமலும், தன்னிச்சையான சிந்தனைகளுக்கு முட்டுகட்டை போடுமளவுக்கு வேலை பளுவும் இருந்தது, இப்போதும் அப்படி தான், ஆனால் அவை எனது சிந்தனை ஓட்டத்திற்கு மிகவும் தடையாகவும், தன்னம்பிக்கை குறைவாகவும் சிந்திக்க வைப்பதால் மாற்றம் வேண்டி மறுபடி பழைய வால்பையன் திரும்ப வந்துவிட்டான். பலமுறை அலைபேசியிலும், மெயிலிலும் அங்கே அந்த பழைய வால்பையன் என கேட்டு உசுப்பி விட்ட நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இந்த குவியல் அர்பணம்!

****

இதை எழுதி கொண்டிருக்கும் பொழுது 1249 பாலோயர்ஸ் யார் அந்த 1250 ஆவது பாலோயர்னு தெரியல, என் பழைய குவியலை படித்தவர்களுக்கு தெரியும், என்னை பாலோ செய்யும் அனைவரையும் ப்ளாக் இருந்தால் கண்டிப்பாக நான் பாலோ செய்வேன், ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் தெரியப்படுத்தவும்!

****

நான் இப்போது சென்னையில் இருப்பது பல நண்பர்களுக்கு தெரியாது, முன் செய்த தொழிலில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிப்பார்கள், மேலும் என்மீது அக்கறை கொண்ட பலர் அது தனக்கு நேர்ந்த இழப்பாய் நினைப்பார்கள் என்பதே மிக முக்கிய காரணம். இன்று அறிந்தவர்கள் மன்னிக்கவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்!, நான் இழந்தது கொஞ்சம் பணத்தையும், நிறைய நேரத்தையும் தான், நம்பிக்கையை அல்ல.

****

10 வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த சென்னை சத்தியமாக இது இல்லை. இன்று எல்லாமே தலைகீழ். sky walk, express avenue என வாழ்க்கை எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. ஒரு சினிமாவுக்கு போகனும்னாலும் 500 வேணூம், எப்படி மக்கள் சமாளிக்கிறாங்கன்னு தெரியல, அதே நேரம் 15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!, எங்கேயும் எப்போதும் படத்துல சொல்ற மாதிரி இது சென்னை இல்ல, மொத்த தமிழ்நாட்டின் அடையாளம்னு சொல்லலாம்!


****

”மெளனகுரு” ன்னு ஒரு படம் பார்த்தேன். நீண்ட நாள் கழித்து நல்லதொரு திரைக்கதையை பார்த்த மகிழ்ச்சி, அதே நேரம் ஆனந்தவிகடனில் அவர் அளித்த பேட்டியில் கமர்சியலுக்காக நான் நகைச்சுவையையோ, சண்டை காட்சிகளையோ, பாடலையோ புகுத்த மாட்டேன் என பேட்டி அளித்திருந்தார், நியாயமா பார்க்கனும்னா மெளனகுரு படத்தில் ஆர்த்தி என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை, அது வலுகட்டாயமாக திணிக்கப்பட்டது தானே, ஒருமுறை ஜெயித்ததும் தலையில் கணம் கூடிகொண்டது போல, அவரது ஆசிரியர் தருமி ஐயா கொஞ்சம் சொல்லி தட்டி வைக்கவும்!(இதுல ஐயா கடைசியில் நாயகனும், நாயகியும் சைக்கிளில் போவது போல் எதிர்பார்த்தாராம், அது தானே எல்லா படத்திலும் நடக்குது, இங்கேயும் எதற்கு)
மற்றபடி நான் மிகவும் ரசித்த the game என்ற திரைபடத்திற்கு நிகரான திரைக்கதை.
நாயகன் தவிர்த்து வில்லன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தம். நாயகன் மட்டும் காலைகடன் கழிக்க தவறியவர் போல் முகத்தை வைத்து கொண்டு திரிகிறார், அவர் சிரிக்கவே கூடாதுன்னு இயக்குனர் கட்டளை போல!. நாயகன் வசனங்கள் அனைத்தும் கூர்மை ஆனால் முகத்தில் எந்த பாவமும் இல்லை(இது அந்த பாவம் இல்லை, நான் சொல்றது முகபாவம்), அதுவும் இருந்திருந்தா அருள்நிதி இன்னொரு சூர்யாவாக, விக்ரமாக வாய்ப்பிருக்கிறது. நான் முழுநீள விமர்சனங்கள்(முழுநீள படம் தானே எடுப்பார்கள்) எழுதுவதில்லை அதுக்கு நம்ம அண்ணன் ஊனா தானா இருக்கிறார், அங்கே படித்து கொள்ளலாம்! :)

சாந்தகுமாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, சினிமாவை எடுத்தால் அதை தமிழ்சினிமாவின் இலக்கணங்களுள் எடுத்தால் காலம் புறந்தள்ளி விடும்!

******

தனது தளத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு இலவச விளம்பரம் அளிப்பதாக அறிவித்திருந்தேன். கோவையில் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கல்யாணத்திற்கு தயாராக ஒரு மாப்பிள்ளை இருக்கிறார். சாதி, வசதி பிரச்சனையில்லை. மேற்படிப்புக்கு விருப்பப்பட்டாலும் அதை செய்து தர அவர் குடும்பம் தயாராக இருக்கிறது. தாய், தந்தை இல்லை. மாதம் 12,000 சம்பாதிக்கிறார்.
பெற்றோர் அற்ற ஆதரவற்ற பெண்ணுக்கு முன்னுரிமை. பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தால் இவருக்கு சூட்டாகாது, உங்களுக்கு தெரிந்து அப்படி எதாவது பெண் இருந்தால் எனது அலைபேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தவும்!

9994500540

arunero@gmail.com

மேலதிக தகவல்கள் தனிப்பட்ட முறையில் தரப்படும்!

****

ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு, அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை(டோண்டு மூடிட்டார் போல) திறக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கேள்வி எதுவானாலும் எனது புரிதலில் நிச்சயம் பதிலளிக்கிறேன்.

கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியாள் இல்லை தான், இருப்பினும் பதில் தேடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை தான்!

****

கவிதை மாதிரி..

குடியும், குடித்தனமும்.

கூடிக்கழித்து
குடித்து கும்மாளமிட்டதை தவிர
வேறொன்றும் மிச்சமில்லை
நலமா, சாப்பிட்டியா
என்பதை விட
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
என்பதே இன்று
நட்புகளில் உரையாடல்கள்!
நீண்ட தூரம் சென்று
திரும்பிய பின் தான் தெரிகிறது
குடித்தனத்தை மறந்து விட்டோம் என்று!
முதல் தேதிக்கு இன்னும்
நான்கு நாட்கள் இருக்கிறது
அது வரை மாதசம்பளக்காரனின்
தத்துவம் தொடரும்!..

****

குடிவெறி எதிர்ப்பாளர்கள் அதிஷாவிற்கும், லக்கிக்கும் இது அர்ப்பணம்! :)

இயேசுவும், முகமதுவும் தூதர்களா!?

அப்புறம் இந்த கேள்வி கேட்கமாக ரெண்டு பேரும் ஆம்பளைங்களான்னு கேட்டா பெரிய பிரச்சனை ஆகிடாது!, மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம், வரும் அதாங்க நாளைக்கு 21 சனிக்கிழமை மற்றும் 22 ஞாயிற்றுகிழமை. ஆபிஸ் போகும் போது நுங்கம்பாக்கம் ரயில்வேஸ்டேஷனாண்ட இந்த போஸ்டரை பார்த்தேன், சும்மா இருப்பமா அப்பவே ஒரு போட்டோ எடுத்துட்டேன் நம்ம போன்ல அதான் கீழே இருக்கிறது!


அப்புறம் ரூமுக்கு வந்து பார்த்தா பேஸ்புக்குல கூட அந்த விளம்பரம் போட்டிருந்தாங்க, அந்த போட்டோவையும் டவுன்லோடு பண்ணிட்டேன்சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

ஈசா நபி என்ற பெயரில் இயேசு அனைவராலும் ஒரு தூதராக ஒப்புக்கொள்ளப்பட்டவர், இஸ்லாமை பொறுத்தவரை கடைசி தூதர் முகமது என்பதை தவிர ஆபிரகாம மதங்கள் சொல்லிய அனைத்து தூதர்களையும் அவர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.

ஈசா நபி என்ற இயேசுவை அவர்கள் ஏற்று கொண்டாலும் இயேசுவின் 13 வயதிலிருந்து 30 வயது வரை எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கான பதில் எந்த ஒரு கிறிஸ்தவனிடமும் கூட கிடையாது, அதுவே இஸ்லாமியர்களுக்கு ஒரு பொறி, மேலும் பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன்பிருந்தே இருப்பது. உயிர்பலி போன்ற பத்து கட்டளைகள் உள்ளடங்கியது அது!

புதிய ஏற்பாடு இயேசுவின் சீடர்களால் தொகுக்கப்பட்டது, அவர்கள் இயேசுவுடன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட இயேசுவின் போதனைகளை அவர்கள் புதிய ஏற்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள்.

சரி குரான் என்பது என்ன?

முழுக்க முழுக்க முகமதுவினால் எழுதபட்டதா?

அதுவும் முகமதுவின் நண்பர்கள் அவர் சொன்னவற்றை தொகுத்து அதுவும் அவர் இறந்த பிறகு(அதில் எத்தனை நண்பர்கள் தொகுக்கபட்ட போது உயிருடன் இருந்தார்கள் என தகவல் தெரியவில்லை) தொகுக்கப்பட்டது. குரான் முகமதிவிற்கு வஹி(வலிப்புன்னு சொன்னா முஸ்லீம்கள் நமக்கு போன் பண்ணி அசிங்க அசிங்கமா திட்டுவாங்க)வந்து கடவுளின் தூதனால்(அப்ப முகமது, ஈசாவல்லாம் யாரு) சொல்லப்பட்டது!

ஆக பைபிளின் புதிய ஏற்பாடும், குரானும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

இல்லை புதிய ஏற்பாடு தப்புன்னு வச்ச்சிகுவோமோ, இயேசுவையும் அதற்கு முன் பல தூதர்களையும் தேர்தெடுத்த கடவுள் என்ன லூசா?

புதிய ஏற்பாடு மனிதன் கைப்பட்டு புனிதம் கெடும் என்றால் ஏன் இயேசுவை தேர்தெடுக்கனும், ரொம்ப இல்ல ஜெண்டில்மேன் 400 வருசம் வெயிட் பண்ணா முகமது தான் ஒட்டகம் மேய்க்க வந்துர்றாரே!.

இதுல காமெடி என்னான்னா ஈசா என்ற இயேசு அப்பனே இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி மாதிரி மரியைக்கு கருவாகி பிறந்தவர், ஆனா முகமது அப்படியல்ல 35 வயது வரை யாரென்றே அறியப்பாடாதவர். அப்பக்கூட அவருக்கு தூதர் தகுதி வரல, முதல் மனைவியை கட்டி வசதியா வாழும் பொழுது ஆபிரகாம மதங்கள் பற்றியும், ஆபிரஹாம வேதங்கள் பற்றியும் அப்படியே குழுமியிருக்கும் முட்டாள் மக்கள் பற்றியும் அறியும் போது தான் அவருக்கு வஹி வருகிறது.

என்னே ஒரு கடவுள், படைப்பானாம் அவனே தூதனையும் அனுப்புவானாம் அப்படியும் மக்கள் மாறவில்லையென்றால் திரும்ப திரும்ப அனுப்புவானாம், அதில் கடைசி தூதன் என்று ஒரு ஜம்பம் வேறு, இப்படி தான் நடக்கும் என தெரியாதவன் கடவுளாக ஏன் தூதனாக அட அவ்வளவு ஏன்யா ஒரு நாயாககூட இருக்க லாயிக்கால்லாதவன் தானே! நாயிக்கு கூட தெரியும், ஓட்டல் எச்சில் இலையில் தமக்கான உணவுண்டென்று!

எனக்கு என்ன சிரிப்புன்னா எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பன் இருக்கிறான், பைபிளில் எல்லாம் உண்டு அதில் இல்லாததது எதுவும் இல்லை என அவன் அடிக்கம் லூட்டி தாங்க முடியாது, நாளைக்கு அதே லூட்டியை இஸ்லாமியர்கள் அடிக்கப்போகிறார்கள்!

கேள்விக்கு பதில் சொல்லும் இஸ்லாமியர்களே முதலில் கடவுள் ஏன் மனிதனை படைத்தான், ஏன் இத்தனை தூதரை அனுப்பினான் என்பதற்கு ஒழுங்க முதல்ல பதில் சொல்லுங்க ப்ளீஸ்!

தத்துவம்!

நீண்ட நாள் கழித்து தன்னிச்சையான என் பதிவு, நேற்றே எழுத வேண்டுமென்றிருந்தேன் வேறு ஒரு உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எழுதமுடியவில்லை. மேலும் கிட்டதட்ட ஒரு வருடம் என்மைக்குண்டான தனித்துவ பதிவுகள் எதுவும் எழுதாததால் நிறைய பதிவுகள் பாதி எழுதி எனக்கே பிடிக்காமல் கிடப்பில் கிடக்கிறது. இன்று எழுதியே தீருவது என முடிவு செய்து விட்டேன்.

நான் ஏற்கனவே பலமுறை சொன்னது தான், எனது பதிவுகள் அனைத்தும் எனது புரிதல்கள் மட்டுமே, இறுதி தீர்ப்பு அல்ல, விவாதம் தெளிவுறவே அன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!

பேஸ்புக்கில் நடந்த தத்துவம் பற்றிய விவாதம் குறித்து தான் இந்த பதிவே!

அதில் கணேஷன்னு ஒருத்தர் இருக்கார், போட்டோ இணைத்திருக்கிறேன். முதல் சந்தேகம் சாமியார்னா ஷேவிங் பண்ணக்கூடாதுன்னு எதாவது விதி இருக்கா? எனக்கு தெரிந்து பல சாமியார்கள் தாடியோயத்தான் இருக்காங்க. நித்தியானந்தா மாதிரி சில சாமியார்கள் தாடி, மீசை வச்சிகிறதில்ல ஒருவேளை கிஸ் அடிக்கும் போது குத்துதுன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கலாம். அதை கிடப்பில் போடுவோம் இப்ப நம்ம மேட்டர் தத்துவம் பற்றி!


உயிரினம் என்பது கடவுளால் ஓவனில் வேகவைத்து அப்போதே எடுத்தாற்போல் இன்ஸ்டண்ட் படைப்பு என்பது சிலரது வாதம், பரிணாமம் பற்றி சில ஆதாரங்களை காட்டியவுடன் கடவுள் தானய்யா அதையும் செய்தார் என சிலரது வாதம். ஆனா பரிணாமத்துக்கும் பன்னி அவதாரத்துக்கும் இதுவரைக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு இன்னும் புரியல.

தத்துவம் என்பது என்ன?

தீர்வா?

கேட்டவுடன் ஏற்படும் கிளர்ச்சியா?

இல்ல, எனக்கு தோணுச்சு சொன்னேன்னு எடுத்துக்கலாமா?

முதலில் தத்துவம் என்றால் என்னான்னு பார்க்கலாம்.

//மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.//

இப்படி சொல்லியிருக்கு இந்த விக்கிபீடியா லிங்கில்

தத்துவம் நமக்கா தோணுதா அல்லது நமக்கு யாராவது சொல்றாங்களா?

கணேஷ் என்பவர் தத்துவம் பற்றிய வகுப்பு எடுப்பது பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போட, நான் தத்துவம் மனிதனுக்கு தேவையா என ஒரு கேள்வியை கேட்க பாண்டிசேரியில் இருக்கும் மோகன் என்பவர் ரெண்டு நாட்களாக என்னுடம் விவாதித்து கொண்டிருந்தார்.

என்னுடய கேள்வி, படிப்பறிவில்லாத எத்தனையோ பாமரர்கள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள், அவர்களது அன்றாட வாழ்விற்கு எந்தவித தத்துவ ஞானமும் தேவைப்படவில்லை அப்படியிருப்பின் தத்துவம் என்பது மனிதகுலத்துக்கு மிக முக்கியமானது என சொல்வதற்கு என்ன காரணம் என்றேன்.

மேலும் தத்துவம் என்பது வேறொருவர் அனுபவம், அதை உங்களிடம் பகிர்கிறார். அப்படியாயின் அவர் கண்களால் நீங்கள் உலகை பார்ப்பது போலே தானே ஆகும், நீங்கள் உங்கள் உலகை எப்பொழுது பார்க்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு ஏறிக்க ஒரு முதுகு வேணும் நானா நடக்க முடியாதுன்னுட்டார்!

இவ்விடத்தில் மிகமுக்கியமான ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கருத்து பகிர்தலுக்கும், தத்துவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆகையால் ஒருத்தர் வாய் திறந்து சொன்னாலே அது தத்துமாகிவிடாது!

விக்கிபீடியா சொல்ற மாதிரி எங்கேயாவது தத்துவம் தர்க்கத்திற்குள்ளாக்கபடுதா?

சாமியார் காவி உடை உடுத்தி கொண்டு வலபக்கமும், இடபக்கமும் இரண்டு பிகர்களை நிறுத்தி கொண்டு காலையிலில் மனனம் செய்த ஜென் கதைகளை சொல்லி நம்மை வெறுப்பேற்றி கொண்டிருப்பார்(இடையில் புன்னகை வேறு, அந்த வாயை பார்த்தா வேற ஒண்ணு தான் நியாபகத்துக்கு வரும்).

ரொம்ப வேண்டாம்ய்யா, பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுதே சொன்னேங்களே, ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுன்னு, நியாபகம் இருக்கா இல்லையா?. அப்ப தத்துவம் உன்னிடம் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறாய்!.

தத்துவம் என்பது பொதுவானது, அது ஒரு சொல் மட்டுமே. அப்படியானால் மனித வாழ்க்கை பொது விதிகளுக்குள் கட்டமைக்கபட்டதா? உனக்கான வாழ்வை நீ வாழ வேண்டுமா? அல்லது தத்துவம் வாழுமா?

எனக்கு சரியென்று பட்டது உங்களுக்கு தவறென்றால் நான் தவறானவனா?
அப்படி பார்த்தால் நீங்களும் நிறைய மனிதர்கள் பார்வையில் தவறானவர்கள் தானே?

சொல்லுங்கள் தத்துவம் சொல்லும் கார்பரேட் சாமியார் தேவையா? அல்லது உங்கள் வாழ்கையை நீங்களே வாழ்ந்து பார்க்க ஆசையா?

**************

பேஸ்புக்கில் இருக்கும் கணேஷ் என்பவருக்கு இது எதிர் பதிவல்ல, தத்துவம் என்ற பதத்துக்கு என்னுடய கருத்து, விவாதம் அங்கே நடந்ததால் அவர் பெயரும் இடம் பெற்றுவிட்டது, இதற்காக அவர் வருந்தினால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அந்த மன்னிப்பு அவர் வயசுக்கு தான் அவரது பிரம்மஸ்ரீ பட்டத்துக்கு அல்ல!

இம்மாதிரியான மக்களை முட்டாளாக்கும் பட்டங்களை நான் முழுமையாக எதிர்கிறேன்!

நேசம் + ப்ரணவ பீடம் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை


 நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் திரு ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
 இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில்  உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி.  இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும். 

நிகழ்ச்சி நடக்கும் இடம் : 

ப்ரணவ பீடம், 
பொன்னுரங்கம் ரோடு, 
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம் 

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை


இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.
 


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com**************************

மன்னிக்கவும் ஓம்கார், நான் சுவாமி என்ற பதத்தை பயன்படுத்துவதில்லை!

கும்பகோணத்தில் பங்குசந்தை பற்றிய கருத்தரங்கம்!கும்பகோணத்தில் இருக்கும் நண்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள் அல்லது யாரேனும் உங்கள் நண்பர்கள் கும்பகோணத்தில் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

அலைபேசி 9994500540

!

Blog Widget by LinkWithin