முரண் தொகை!

தலைநரைத்த இளைஞனொருவன்
மூலிகை சீவக்காயை அரைத்து
பின் தற்கொலைக்கு முயன்ற
பாலியல் தொழிலாளி ஒருவளின்
தலையில் தடவி பார்த்தான்
முதிர்ந்த அண்டங்காக்கைகள்
தோல்வியின் முன்னேற்பாடுகள்
குறித்து ஆயத்தபடுத்தும் பொழுது
எந்தவித பிரஞ்சையும் இல்லாமல்
அவனது குறி யாரையோ
குறிவைத்து கொண்டிருந்தது
இவ்வாறாக நாளைய
தேர்தல் அறிக்கைகள் எழுதப்படும்.

***

முதுகு குறித்தான சிந்தனைகள் அவ்வபோது நெஞ்சை அரித்து கொண்டிருக்கிறது இருள் குறித்தான புரிதல் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நாளையை குறித்த அச்சங்கள் இறந்து விட்டது நான் என்ற பிணம் வாழ ஆரம்பித்து விட்டது.


முத்துபெருநன் கவிதைகள்!

எழுத்தாளர் வா.மு.கோமு வின் தந்தை முத்துபெருநன் அவர்கள் எழுதிய கவிதை!

சக்கிலிச்சி காதல் 
சந்தையிலே விக்குதா ?
சலிசு வெலைக்குச் 
சரஞ் சரமாத் தொங்குதா ?

கனு கனுப்பை பார்த்தா 
கை வைக்கத் தோணுதா ?
கீழ் சாதி மேல் சாதி 
காத்திலே பறக்குதா ?

கொஞ்சம் பெருசுதான் 
கண்ணை உறுத்துதா ?
கொழந்தைக்குத் தாட்டோனும் 
புருஷனுக்குக் காட்டோணும் 

நட்டறது நாங்க 
அறுக்கறது நாங்க 
கொண்டு போறோந் தவசம் 
பண்ணாடி வீட்டுக்கு 

கூலிக்கு மடி விரிச்சா 
குடிசைக்குள் இழுப்பதா ?
வெக்கங் கெட்ட ஆம்பளைக்கு 
வாழையிலை கேட்குதா ?

சக்கிலிச்சி காதல் 
சக்கரையா இனிக்குதா ?
சத்தியமாச் சொல்லறோம் 
சாட்டையினி  எங்க கையில் 


நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்!..

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது.

மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது.. 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று.

சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, 

ஆஷ், கேட்கிறார்,

மனிதர்களில் தாழ்ந்தவர்களா, 

அவர்கள், திருடும் இனமா? என்றான்? 

இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்.

வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – 

அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை.

அங்கே, ஒரு பிரசவ வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும்.

ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று..

பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், 

ஆஷ் கேட்கிறான், 

பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று.

அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,

அய்யா, 

அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்.

ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருக்கிறோம்.

ஆஷ், அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், 

” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், 

உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள்.

நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,

அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற செய்தி,பரவியது. 

வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி.

எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், 

குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் 

ஒரு சாதியக் குலக் கொழுந்து.

அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து, 

வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது, 

நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.

மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த வரலாற்று உண்மை.,


********
நன்றி..செல்வா கவிஞர்,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்..

கவிதை உருவான கதை.....

உன்மத்த நிலை தவிர்த்து
மற்ற மனநிலைகளில்
சுருக்குப்போடும் சொல்லாடல்கள்
நீண்டு தொங்கும் வரிகள்
உடைய கவிதைகள்
படிக்கப்படுவதில்லை
படித்தாலும் ரசிக்கப்படுவதில்லை
இதை தவிர்க்கவே
நான் கவிதை எழுதுகிறேன்........

****

இயேசுவின் மறுபிரவேசம்
உண்மையென்றால்
எனக்கிருக்கும் சந்தேகம்
ஒன்றை தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்ன சந்தேகமா
வேறென்ன,
வலது கன்னத்தில் அறைந்து
இடது கன்னத்தை காட்டுகிறாரா
என பார்ப்பது தான்!

****

என் பூவில் இதழில்லை
மணமுமில்லை
நான் கேட்டு
எனக்கு முள் வரவில்லை
நானும் உங்களை குத்தவில்லை
நீங்களே தொட்டீர்கள்
உங்கள் ரத்தம் கண்டு
என்னை திட்டுகிறீர்கள்
நான் இன்னும்
பூவாகத்தான் இருக்கிறேன்
என்னை விட்டுவிடுங்கள்
நானாகவே ஒருநாள் மடிவேன்.நினைக்கப்படுவாரா பெரியார்தாசன்.

தத்துவயியல் படித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக இருந்தவர், ஓஷோவும் தத்துவயியலில் மாஸ்டர் டிகிரி முடித்திருந்ததால் பெரியார்தாசன் மீது ஒரு மரியாதை இருந்தது. சினிமாவில் அந்த பெயரிலேயே வந்த அவர் பலராலும் கவனிக்கபட்டார், ஆனால் அதற்கெல்லாம் அவரே ஆப்பு வைத்து கொண்டார்.

2010 மார்ச் மாதம் தான் அவர் தம்மை ஒரு இஸ்லாமியன் என அறிவித்துக்கொண்டது, அதற்கு முன்னரே நான் பல தொலைகாட்சிகளில் அவரது நியுமரலாஜி பெயர் மாற்றும் ஜோதிடம், ராசிகல் விற்பது போன்ற கேனத்தனங்கள் செய்ததால் பெரியார்தாசனை கண்டுகொள்ளவில்லை. அவர் தம் பெயரை அப்துல்லா என மாற்றி கொண்டதாக அறிவித்ததும், இஸ்லாமியர்கள் மொத்த நாத்திகத்தையும் வென்றூ விட்டதாக போஸ்டர் அடித்து கொண்டாடினர். ஆனால் அவர் அதற்கு முன்னால் புத்த மதத்தில் சேர்ந்து தமது பெயரை சித்தார்த் என மாற்றி கொண்டதை மறைத்தனர்.


சேசாசலம் என்ற பெரியார்தாசன் என்ற சித்தார்த் என்ற அப்துல்லா என்று தமது பெயரை அறிவிக்கும் அளவிற்கு போய்கொண்டே இருந்தது அவரது பெயர். 10 வருடமாக குரான் ஆராய்ச்சி செய்தவர் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தார், ஏன் ராசிகல் விற்றார் போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமியர்களிடம் பதிலில்லை. ஆனாலும் தமது கூட்டங்களில் பெரியார்தாசன்(அப்துல்லா) பேசிகிறார் என இஸ்லாமிய பெயரை அடைப்புகிறியில் போடுமளவுக்கு இஸ்லாமியர்களின் நாத்திக எதிர்ப்பு இருந்தது.

பெரியார்தாசன் என்றாலே பெரியாருக்கு அடிமை என்று அர்த்தம்,  அந்த பெயர் ஓறிரை கொள்கை உள்ளவர்களுக்கு பொருந்தவே பொருந்ததாது, ஆனால் முன்னாள் நாத்திகன் என்பதை அடையாள படுத்த பெரியார்தாசன் தேவைப்பட்டது. புத்தர் சொன்னது போல் இவரால் ஆசைப்படாமல் இருக்க முடியவில்லை போல அதான் சித்தார்த்தாக இருந்த பெரியார்தாசன் அதை எங்கேயும் வெளிகாட்டிக்கவில்லை. இவர் இஸ்லாமியராக இருந்த சமயம் அவரிடம் அலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று காட்டியது அவருக்கு குரான் பற்றிய அறிவு போதவில்லை என்று. அவருக்கு பதிலாக வேறொருவரே பதில் கூறினார்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா உடல்நலகுறைபாட்டில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த அப்துல்லா இன்று மரணமடைந்தார், இனி இஸ்லாமியர்கள் கூட்டங்களுக்கு யார் பெயரை பயன்படுத்துவார்கள்? இனி எந்த இஸ்லாமியன் மீண்டும் அப்துல்லாவை நினைவு கூறுவான் என நினைத்தேன். பாவமாக இருந்தது.

இன்னொரு வருத்தம், அவர் குரானை படித்து எது ஈர்த்து இஸ்லாமில் சேர்ந்தார் என கேட்க வேண்டும் என நினைத்தேன், அதற்குள் போயிட்டார்.


குவியல் (17.08.2013)

கடைசியா குவியல் எழுதுனது 28.01.2012, ஒரு வருடத்திற்கும் மேலாக இணையத்தில் சரியாக செயல்பட முடியாததால் பதிவுகள் கூட சரியாக எழுதவில்லை, இந்த மாதத்தில் இருந்து தான் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளேன். கடைசி குவியல் எழுதிய போது 1250 ஃபாலோயர்ஸ் கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆக்டிவா இல்லாவிட்டாலும் ஃபாலோயர்ஸ் இணைந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள் இப்பொழுது 1410 ஃபாலோயர்ஸ். அந்த நல்ல உள்ளங்களுக்காகவது எதாவது எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன்.

*********

சென்ற ஞாயிறு 11.08.2013 ஈரோடு புத்தக சந்தையில் தோழர் வா.மு.கோமுவின் இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளியிடப்பட்டது, மிக சிறப்பாக நடந்து முடிந்த விழாவில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது.
இரு புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கிய நண்பர்கள் 90% வா.மு.கோமு என்ற தனிமனிதனை பற்றி மட்டுமே பேசினார்கள். புத்தகம் வாங்க தூண்டும் அளவுக்கு போதுமானதாக இல்லை அது. அடுத்த புத்தக மதிப்புரையில் புத்தகத்தின் நிறை, குறைகளை சரியாக பேசுவார்கள் என நம்புகிறேன்.
அநேகமாக அடுத்த புத்தக வெளியீட்டு விழாவில் என் கையில் மைக்கை கொடுத்து விடுவார்கள் என நினைக்கிறேன்..*********

ஃபாளக் எழுதுவதை பெரும்பாலனவர்களுக்கு தடுத்தது ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் தான் என்றால் அது மிகையாகாது. ஒரு பத்தியாக இருந்தாலும் அதை அடித்து போஸ்ட் செய்து விட்டால் 100 லைக் 20 கமெண்ட் என சில மணிநேரங்களுக்கு போதை தலையில் நின்று விடுகிறது. ப்ளாக் எழுத நிச்சயம் விசயம் தேவை. ஃபேஸ்புக் போல் இரண்டு வரி மொக்கைகள் ப்ளாக்கில் வேலைக்காகது. ப்ளாக் நல்லதொரு எழுத்து பயிற்சிக்கூடம். நண்பர்கள் படிக்கிறாங்களோ இல்லையோ, எழுதிகொண்டே இருப்பது என முடிவு செய்திருக்கிறேன்.

********

வோல்வோரின் - 2

முந்தைய படங்களை மறந்து பார்க்கலாம் என்றால் இடையிடையே ஜீனை கொண்டு வந்து குழப்பி எடுத்து விடுகிறார்கள். காட்சிகள் எதற்கு முன்னால் எதற்கு பின்னால் என்று புரியாமல் நான் லீனியராக இருக்கிறது. சூப்பர் ஹீரோ படங்களில் உள்ள ஒரே சிக்கல் அந்த ஹீரோவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு ஒரு வில்லனை உருவாக்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவை டம்மியாக்கி முக்கால்வாசி படத்தை ஓட்டி விட்டார்கள். ஆக்‌ஷன் ஒகே. திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்********

இறுதியில் புரிதல்

விட்டொழி
தப்பி ஓடு
ஒளிந்து கொள்
கண்ணை இறுக்க மூடு
உலகம் இருண்டதாய்
நினைத்து கொள்
முடிவில்
யதார்த்தம் கண்டு
வீடு திரும்பு..

யாரிடம் இருந்து யாருக்கு சுதந்திரம் கிடைத்தது.....?

பெரியாருக்கு ஆங்லிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதில் உடன்பாடில்லை, அவர் அதை கறுப்பு தினம் என்றார் என்ற கருத்து இன்று எந்த குழந்தைக்கும் சொல்லி கொடுக்கப்படுவதில்லை, ஒருவேளை சொல்லிக்கொடுக்க பட்டிருந்தால், ஏன் பெரியார் அவ்வாறு சொன்னார் என்று இப்போதிருக்கும் தலைமுறை கொஞ்சமேனும் யோசித்து பார்த்திருக்கும். பெரியார் ஏன் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை? ஏன் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கும்.

1938 ஆம் ஆண்டே குடியரசு இதழில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெறும் தகுதி வந்துவிட்டதா? என எழுதியிருந்தார் பெரியார். அன்று மட்டுமல்ல இன்றும் அதே கேள்வி பலர் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சுதந்திரம் பல தியாங்களுக்கு மத்தியில் பெறப்பட்டது, அதை கொச்சை படுத்தாதீர்கள் என்று சிலர் சொல்கிறார்கள், அவர்கள் தியாகங்களை நினைவு கூறவாவது சுதந்திர தினம் கொண்டாட படவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

போராட்டங்களின் நியாயம் கருதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா? இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் வாங்கிய பேரடி சுதந்திரம் கொடுக்க வைத்ததா? இனி இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல ஒன்றும் இல்லை என்பதால் சுதந்திரம் கிடைத்ததா? என்ற பல கேள்விகள் சுதந்திரம் குறித்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. காந்திவாதிகள் ஒருபக்கம் அஹிம்சை பேசிகொண்டு இந்து ஞானமரபுக்கு உப்புதண்ணி ஊத்தி வளர்க்கிறார்கள், சுபாஸ் சந்திரபோஸ் தான் காரணம் தான் என புரட்சி போராளிகள் கையை உயர்த்திய போஸ்டருடன் நாங்கள்லாம் அப்பவே ராணுவ பயிற்சி எடுத்தவிக என பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

காந்தி செய்தது அரசியல் ரீதியான போராட்டங்கள், இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியாவில் பல இந்தியர்கள் தலைமை பதவியில் இருந்துருக்கிறார்கள், தமிழகத்தின் முதல்வராக கூட தமிழர் இருந்திருக்கிறார். ஆகினும் சுதந்திரம் என்பது அன்றைய பொழுதில் மற்ற நாடுகளிடம் நம்மை மார்தட்டிக்கொள்ள பயன்பட்டதால் மிக உறுதியாக இருந்து பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

போஸ் எல்லை பகுதியில் தனி ராணுவம் அமைத்து ஒருபக்கம் அண்டைநாடுகள் துணையுடன் ஆங்கிலேயருக்கு குடைச்சல் கொடுத்து வந்தாலும் உள்நாட்டில் சில போராளிகள் சுதந்திரத்திற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையிலேயே இந்தியாவின் சுதந்திரத்திற்காக காரணமாக வைத்திருந்த கொள்கை யாருக்கும் தெரியவில்லை, வாஞ்சிநாதன் என்ற ஆஷ்துரையை கொன்று தற்கொலை செய்து கொண்ட தியாகி இன்று வரலாற்றில் இருக்கிறார், ஆனால் அவரது கொள்கை........

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”

இது வாஞ்சிநாதன் சட்டை பையிலிருந்த கடிதம், பெரியாரும் 1938 ல் கேட்டது இதை தான். பெண்ணடிமையும், தீண்டாமையும் இருக்கும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா என்றார். இன்றளவும் பெண்னடிமை, தீண்டாமை, இரட்டை குவளை, சாதிவெறி, கெளரவகொலை இருக்கும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா? சக மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சில ஜந்துக்கள் வாழும் சமூகத்தில் சுதந்திரம் வாங்கிய நாடு இந்தியா என்று சொல்ல வெட்கமாக இல்லை நமக்கு!


அடைத்து பாதுகாக்கப்படும் சுதந்திரம்!

சுதந்திர தினத்தன்று
பறக்க விட வேண்டி
புறா ஒன்று கூண்டில் அடைத்து
வளர்க்கப்பட்டது
அருகில் மேலும் சில புறாக்கள்
சுதந்திர தினத்தன்று
மாணவன் கையில் திணிக்கபட்டு
பறக்கவிடப் பட்ட புறா
மீண்டும் கூண்டிருக்கும் திசை நோக்கி
பறந்தது.........

கருவாடு சுட்டு சாப்பிட்ட இயேசு

வெளிநாட்டில் உள்ள எங்கள் ஊர்க்காரர் ஒருவர் ஒருவர் எனக்கு திடிரென போன் செய்தார்.அவருடைய பெயர் முதல் அடி ஒரு இந்து சமய பெயரையும் கடைசி அடி கிறிஸ்த்தவ மதப் பெயரையும் கொண்ட ஒரு உப்புச்சப்பு உள்ள பெயராக தன்னை அறிமுகப்படுத்தினார்.எங்கள் ஊரைப் பொறுத்த அளவு சுத்தி சுத்தி எப்படி பார்தாலும் சொந்தக்காரகதான் இருப்போம்.
ஆரம்ப உரையாடலே ஒரு அசத்தலாக அமைந்தது.
தம்பி நீ வசந்தாக்காவின் பொடியன் தானே என அவர் ஆரம்ப கேள்வி கேட்டார்
ஓம் என்று நானும் சொன்னேன்
கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார் என ஒரு போடு போடு போட்டார்
நான் தாங்க்ஸ் அண்ணா என்றேன்
தம்பி நீங்கள் பிரிண்டிங் யொப் செய்வதாக கேள்வி பட்டேன் அது விசயமாக கதைக்க எடுத்தனான் என்றார்
நானும் அவசரமாக பெரிய சந்தோசத்திலை ஓம் ஓம் உங்களுக்கு என்ன பிரிண்ட பண்ணணும் எத்தனை பிரிண்ட் என்று என்று விடியக்காலமை நாலு மணிக்கு ஒரு ஓடர் வந்த புழுகத்திலை இன்னும் இரண்டு மூன்று அண்ணாவை சேர்த்து சொன்னேன் .

தம்பி; ஏ போர் பேப்பரை இரண்டாக மடித்த மாதிரி கலர் பிரிண்டிலை ஐந்து லட்சம் நோட்டிஸ் அடிக்கணும் என்றார்
எனக்கு கையும் ஓடல்லை காலும் ஓடவில்லை.என்றை பிரிண்டிங் வாழ்க்கையில் இது தான் முதல் முதலாக ஐந்து லட்சம் நோட்டிசுக்கான ஓடர்
நேரடியாக வந்திருந்தால் உடனே ஒரு யூஸ் சொல்லி கிளாசிலை ஊத்தி இன்னும் ஆளை கூல் பண்ணியிருப்பேன்.என்ன அடுத்த வார்த்தை கதைப்பது எண்டு தெரியாமல் நான் திணறிப்போய் கொண்டிருந்த நேரம் அவரே விசியத்துக்கு வந்தார்
தம்பி எத்தனை காலமாக பிரிண்ட் யொப்பிலை இருக்கிறிங்கள்

ஐந்து வருசமாக இருக்கிறேன்(இது நான்)
ஆனால் கர்த்தர்; உன்னோடு நீ பிறந்ததில் இருந்து இருக்கிறார் என்றார்

எனக்கு இந்த இடத்திலை என்ன கதைகிறது என்று விளங்கவில்லை

“ஓ அப்படியா” என மட்டும் நான் கேட்டு விட்டு எது சம்பந்தாமா நோட்டிஸ் என நான் கேட்டேன்
கர்தரின்; அருளை உலகுக்கு சொல்லுற நோட்டிஸ் என அவர் சொன்னார்.
இதுக்கும் “ ஓ அப்படியா” என மட்டும் நான் கேட்டேன்
என்ரை நாக்கு எப்பவும் சும்மா இருக்காது அது எனக்கு எப்பவும் வில்லங்கத்தை தான் வேண்டித்தரும் என அப்பூ அடிக்கடி சொல்லுவார் அது அப்படியே ஓ அப்படியா என்ற வார்த்தை எனக்கு விளங்க வைச்சுட்டுது.
நான் எதோ வியந்து கேட்டதாக அவர் நினைத்து விட்டார்

கிட்ட தட்ட ஒரு பத்து நாளாக எனக்கு அவர் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்
ஒரு நாளைக்கு சரியாக ஒண்ணரை மணித்திலத்துக்கு மேலாக அவர் என்னோடு போன் பேசுறார்
அந்த ஒண்ணரை மணித்தியாலத்தில் பாதி பைபிளை எனக்கு சொல்லி முடிக்கிறார்
எதிரிலை போன் பேசுகிறவன் ஆகக் கூடியது “ம்” கொட்டுறனோ என்று கூட கவனிக்காமல்
காதிலை ரத்தம் வருகிற அளவுக்கு கர்த்தர் புகழ் கதைக்கிறார்
திடிரென உச்ச சுருதியிலை ஒரு பாட்டு கூட பாடுகிறார்
நான் நினைக்கிறேன் கிட்த்தட்ட ஒரு பத்தாயிரம் முறை
கர்த்தர் உங்களோடு இருப்தாக சொல்லியிருப்பார்

இன்னைக்கு மோர்ணிங் போன் பண்ணினார்
இன்டைக்கு உதுக்கு ஒரு முடிவு கட்டணும் என பெலத்த சிந்தணையில் நான் ஒரு முடிவுக்கு வந்து இருந்தேன்
ஹலோ என்று சொன்ன கையோடு அவர் சொல்லும் முதல் வார்த்தை கர்த்தர் உங்களோடு இருக்கிறார்
நான் உடனே நீங்கள் யாருங்க என கேட்டேன்
என்ன தம்பி அதுக்குள்ளே என்னை மறந்து விட்டிங்களா?என கேட்டு விட்டு அந்த தன்னடைய உப்புச்சப்பு உள்ள பெயரை சொன்னார்

நான் உடனே என்ரை கௌவுரி அம்மனே உங்களை நான் மறப்பேனா?என நான் கேட்டேன்
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தம்பி என்றார்

ஓமோம் கர்த்தர் என்னோடு இருக்கிறார் அவர் என்னோடு கருவாடு சுட்டுச்சாப்பிடுகிறார் என சொன்னேன்
அதற்க்கு பிறகு எங்கள் ஊரிலை பயன் படுத்துற பிறப்பை சந்தேகப்படுகிற ஒரு கெட்ட வார்த்தையும் சொன்னேன்

தம்பி நீங்கள் கதைக்கிறது விளங்கவில்லை நான் பேந்து எடுக்கிறேன் என சொல்லி விட்டு அவர் போனை வைச்சு விட்டார்
நான் இன்னும் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை சேர்த்து இப்ப வைச்சு இருக்கிறேன .எனக்கு அவர் போன் எடுப்பார் என்ற நம்பிக்கையில் ………


நன்றி ரவிராஜன் ரவிக்குமார் - ஃபேஸ்புக் வாயிலாக

தலையில் கணம் கூடிய ஜெமோ!

கடந்த எட்டாம் தேதி ஈரோடு புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளாராக ஜெமோ அழைக்கபட்டிருக்கிறார். அந்த அதிமேதாவியின் பேச்சை ஈரோட்டு வாசகர்கள் புறக்கணித்ததால் ஜெமோ தன் வலைதளத்தில் அவர்களை காக்கை கூட்டம் என்று எழுதியிருக்கிறார். இந்த மாதிரி லுச்சா பசங்களுக்கு எதிர்வினை ஆற்ற தேவையில்லை தான் ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை என்றால் ஈரோட்டுவாசி ஆமா நாங்க காக்கா தான்னு ஒத்துகிற மாதிரி ஆகிரும், அதுனால ஜெமோ என்னும் பிணம் தின்னி கழுகுக்கு நான் அவரது உரை குறித்த கருத்து மற்றும் அதுனுடன் தொடர்புடைய கடிதங்கள் குறித்து எழுதி ஏற்கனவே கிழிந்த ஜெமோ டவுசரை அவுத்து காற்றில் பறக்க விட வேண்டும் என ஆவலாய் இருக்கிறது.


அங்க என்ன எழவ பேசினீர்னு எனக்கு தெரியாது, ஆரம்பத்தில் இருந்தே உங்க மனசுக்குள் அதிமேதாவிதனம் இருப்பதால் நான் உங்களை போல் ஆட்களை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இந்து ஞானமரபு, காந்தியம் குறித்து பல விசயங்களில் நான் முரண்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் நீங்கள் ஒரு கடிவாளம் பூட்டிய குதிரை. மனசுக்குள் உங்களுக்கு யோகி என்ற நினைப்பு. இந்த மாதிரி முட்டாளுக்கு ஏன் நேரத்தை செலவிடனும்னு வேற வேலை பார்க்க போயிருவேன். ஜெயமோகனின் பேச்சு சலிப்பூட்டவதாக இருந்தது, அதனால் கூட்டம் கலைய ஆரம்பித்தது என்று ஈரோட்டு நண்பர் ஒருவர் எழுதியிருக்கிறார், கவனிக்க ஒருவர் எழுதியிருக்கிறார் அதற்கு உங்களது எதிர்வினை எப்படியிருக்கிறது.

 ”அமர்ந்திருந்த காக்கா கூட்டத்தில் நாம் பேச வேண்டுமா”

இதிலிருந்தே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் உங்களுக்கு பின் மண்டை ஏன் புடைத்திருக்கிறது என்று, உங்களுக்கு முன் பேசிய மாணவர்களின் பேச்சு முட்டாள்தனமாக இருந்தது, அவர்கள் அதற்கு முன் ஒரு புத்தகத்தையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகமே அவர்கள் பேச்சு வழக்கமான மேடை பேச்சாளர்களின் நகல் ஆகவே அவர்கள் பேச்சுக்கு கைதட்டல் விழந்தது. 

வயித்தெரிச்சல்றா அவனுக்குன்னு சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், ஆனா உம்ம எழுத்தில் தீயிற வாசமே அடிக்குதேயா. படிப்பை கூட முடிக்காதவர்கள், கைதட்டல் பெறும் அளவுக்கு பேசினார்கள் என்று பாரட்டுவது பெரியமனுசதன்மையா, பாராட்டிவர்களை காக்கா கூட்டம் என்பது பெரியமனுசதன்மையா? தூரல் விழுந்ததோ, இடி இடித்ததோ நல்ல பேச்சுன்னா உட்காந்து கேக்க வாசகன் ரெடியா தான் இருக்கான், உம்ம வாந்தியை வீட்டுக்கு அள்ளிட்டு போக ஈரோட்டுகாரன் ஒன்னும் மீசை மயிரில்ல, நீர் நினைச்சா முறுக்க!,  சொல்லிட்டு போயிருக்கனும் உம்ம புத்தகம் வெளியிட்ட பப்ளிஸர்கிட்ட இங்கே என் புத்தகங்கள் விற்க வேண்டாம்னு. நீரெல்லாம் என்னைக்கும் இனி மீசை வைத்து கொள்ளாதீரும். ரொம்ப செயற்கையா இருக்கும்.

ஈரோட்டு வாசகன் அவமானபடுத்தவில்லை ஜெமோ. மிக அழகாக உதாசீன படுத்தினான். உமக்கு முன்பு பேசியவர்களுக்கு கைதட்டல் விழும் போது உமது முகம் போன அஷ்டகோணலை யாரும் பார்க்காமலா இருந்திருப்பார்கள். தனக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி அடுத்தவன் எல்லாம் முட்டாபயமாதிரி நினைச்சவன் எல்லாம் கடைசி காலத்தில் நாய் கூட சீந்தாம ரோட்டில் கிடந்த கதையை எதுவும் படித்ததில்லையா? பின்ன நீரெல்லாம் எங்கிருந்து உலக இலக்கியத்தை ஈரோட்டு வாசகனுக்கு அறிமுக படுத்த வந்தீர் அய்யா?

சா.நி க்கு சொன்னது தான் உமக்கும் ஜெமோ. உம்மை இங்கு கொண்டாடவில்லை என்று அயர்ச்சியாக உள்ளதா? யாருக்கும் எந்த வருத்தமுமில்லை நீரும், உம்ம அல்ல கைகளும் தூர தேசம் போவதென்றால் தமிழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை. உம்மை போல் பல கோமாளிகளை பார்த்தாகிவிட்டது தமிழ் சமூகம். மேலும் பலர் வரலாம். தேவைனா வாசகன் படித்த புத்தகத்தையே கூட திரும்ப படித்து கொள்வான். உம்மை அறிவாளியாய் நினைத்து கொண்டு தமிழகத்தில் செய்து வரும் கோமாளிதனம் போதும் எங்களுக்கு. போய் கொஞ்ச நாள் கேரளாவை இம்சித்து வாரும்.

ஸ்டாலின் குணசேகரன் என்ற மனிதருக்காக நீர் மேடை ஏறினீர், அதே மனிதனுக்காக நீர் இன்னும் அடி வாங்காமல் இருக்குறீர். ஈரோட்டு வாசகனை காக்காகூட்டம்னு எழுதுனது நிறைய பேருக்கு தெரியாது, தெரிஞ்சா நேர்ல வந்து பிஞ்ச செருப்பாலயே அடிச்சிபுடுவான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய தகவலின் படி மீண்டும் ஜெயமோகனை, ஸ்டாலின் குணசேகர் பேச அழைத்தால் அடுத்து புறக்கணிக்கப்படும் நபர் ஸ்டாலின் குணசேகராக தான் இருக்கும்.  

படத்தில் எழுத்தாளர் வாமு.கோமு அருகில் இருக்கும் மீசையில்லாத சின்னபையன் தான் பேச தெரியாமல், எழுத கற்றுக்கொண்டிருக்கும் ஜெயமோகன் என்ற ஜெமோ!

காமிக்ஸ் உலகம்!

குழந்தைகள் உலகம் முற்றிலும் வேறு, அவர்களுக்கு பக்கம் பக்கமான போதனையோ, சலீப்பூட்டும் வசனங்களோ பிடிப்பதில்லை. ஒரு விசயத்தை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும், குழந்தை பருவத்தை தாண்டி வந்த நான் மட்டும் அதில் விதிவிலக்காக இருப்பேனா என்ன?

பாடபுத்தகம் தவிர்த்து நான் படித்த முதல் புத்தகம் காமிக்ஸ் தான், ஆறாவது படிக்கும் பொழுது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில் கார் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு வேலைக்கு போவேன், தினம் இரண்டு ரூபாய் பேட்டா, வாரம் இருபது ரூபாய் சம்பளம். சுயமாக சம்பாரிக்க ஆரம்பித்ததின் திமிர் என்னை வேறெதிலும் கவனம் செலுத்த வைக்க வில்லை, நான் எனது முதல் வருமானத்தில் வாங்கியது புத்தகங்களே ஆம் காமிக்ஸ் புத்தகங்கள் தான்.

படித்து கொண்டே அதனுடன் சினிமா பார்ப்பது போல் பயணிக்க உதவும் படம் அவ்வயது சிறார், சிறுமிகளுக்கு கிரியேட்டிவ் மைண்ட் வளர நிச்சயம் உதவியாக இருக்கும். தாமாக கற்பனை செய்து கொள்ள நாம் அவ்வயதில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கவில்லை, அவ்வயதில் சரியானது காமிக்ஸ் புத்தகங்களே என்பது என் கருத்து, மேலும் படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய காமிக்ஸ் புத்தகம் தான் இன்று தலையணை அளவு உள்ள புத்தகங்களை பார்த்தும் கூட பயப்படாமல் இருக்க உதவுகிறது.மனப்பாட செய்யுளை மண்டையில் கொட்டி கொண்டே படித்தாலும் கூட இன்றைய சிறார், சிறுமிகளால் அதை மறுநாள் ஞாபகமாக சொல்ல முடிவதில்லை, அதே சிறார், சிறுமிகள் தொலைகாட்சியில் ஓடும் சினிமா பாடல்களை அதன் கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், காரணம் என்ன என்று என்றேனும் யோசித்ததுண்டா? நமது கல்விமுறை குழந்தைகள் கற்கும் முறைக்கு ஏற்றதாக இல்லை என்பதே சரியான காரணம். இன்று ஸ்மார்க் கிளாஸ் என்று வருட பள்ளி கட்டணத்தில் சேர்த்து வாங்கி கொண்டாலும் பல பள்ளிங்களில் அது வெளியே இருக்கும் போர்டு அளவு தான் இன்றளவும் இருக்கிறது.

இதற்காக நாம் தனிப்பள்ளியா தொடங்கி நடத்த முடியும், ஏன் நம் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை நாமே தூண்டக்கூடாது? குழந்தைகள் உலகத்தை அறிந்து கொள்ள எத்தனை பேர் அந்த உலகத்திற்குள் பயணிக்க தயார உள்ளீர்கள். ஈரோடு மக்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடந்து கொண்டிருக்கும் ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் எண் 78 முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே விற்கும் அரங்கு. ஒருமுறை கூட படிக்காதவர்களால் அதன் பெருமை புரியாது.
லக்கிலுக்
டெக்ஸ் வில்லர்
ஸ்பைடர்
கேப்டன் டைகர்
லார்கோ
டிடெக்டிவ் ராபின்
விங் கமாண்டெர் ஜார்ஜ்
வேய்ன் ஷெல்டன்
டேஞ்சர் டயாபாலிக்

இந்த கதாபாத்திரங்கள் உருவாகி ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கலாம், ஆனாலும் இன்று படிக்கும் பொழுதும் சலிப்பூட்டாது கொண்டு செல்கிறது படக்கதை. புத்தக திருவிழாவின் சிறப்பு தள்ளுபடியாக 23 புத்தகங்கள் கொண்ட தொகுப்பு 200 ரூபாய்க்கு கிடைக்கிறது, புத்தகங்கள் பழையதாக இருக்கலாம், அந்த கால ஓட்டை காலணா இன்று நூறு ரூபாய் தெரியுமா?நான் வாங்கிய காலத்தில் ராணி காமிக்ஸ் 2 ரூபாய்க்கு கிடைத்தது. லயன், முத்து காமிக்ஸ் ஐந்து ரூபாய்க்கும், சிறப்பு மலர் 20 ரூபாய் வரைக்கும் பெரிய கதைகளுடன் வரும், ஆனால் அப்பொழுது வந்ததெல்லாம் ப்ளாக் அண்ட் ஒயிட் புத்தகங்கள் இன்று புத்தகத்தின் விலை 50, 100 என்று இருந்தாலும் கண்ணை கவரும் வகையில் நல்ல படக்கதைகள் கலரில் வெளியிடப்படுகிறது. இதன் ஒரிஜினல் ஆங்கில வெர்ஷன் புத்தக விலையுடன் (10 டாலர் = 600 ரூபாய்) ஒப்பிடும் பொழுது நிச்சயம் இது பெரிய தொகையில்லை, நமது குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை கூட்ட நாம் அதை கூட செலவு செய்ய தயராக இல்லை என்றால் எப்படி!

ஈரோட்டில் இருக்கும் நண்பர்கள் புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ஸ்டாலின்
236/27 முதல் மாடி
டாக்டர் பாரி காம்ப்ளக்ஸ்
காவேரி ரோடு
கருங்கல் பாளையம்
ஈரோடு - 638003

தொடர்பு எண் 0424-2222298

வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கு

லயன் காமிக்ஸ் - சிவகாசி:

தொலைபேசி: 04562 - 262749

மின் அஞ்சல்: lioncomics@yahoo.com

வாமு.கோமுவின் இரு புத்தகங்கள் வெளியீடு

எழுத்தாளர் வாமு.கோமுவின் இரண்டு சிறுகதை தொகுப்புகள் எதிர் வெளியீடு பதிப்பகத்தின் மூலமாக இந்த வருட ஈரோடு புத்தக திருவிழாவில் வெளியிடப்படுகிறது.

ஈரோடு வாசிப்பாளர்கள் குழுமம் என செயல்பட்டு அதில் தீவிரமாக வாசிப்பனுபவம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் அண்ணன் தாமோதர் சந்துரு மற்றும் பாரதி புத்தகாலயம் இளங்கோ அவர்களின் சீரிய முயற்சியில் வரும் ஞாயிறு (11.08.2013) ஆக்ஸ்போர்டு ஹோட்டல் மேல் தளத்தில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கி ஐந்து மணி வரை நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

 பிலோமி டீச்சர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு
மலைகள் இணைய இதழ் ஆசிரியர் சிபி செல்வம் அவர்கள் மதிப்புறையாற்றுகிறார்.

தவளைகள் குதிக்கும் வயிறு சிறுகதை தொகுப்பிற்கு
தோழர் விஜயராகவன் மதிப்புறை ஆற்றுகிறார்.

இறுதியாக ஏற்புரையும், நிகழ்ச்சி நல்ல படியாக நடத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே முழு முயற்சி எடுத்த அண்ணன் தாமோதர் சந்துரு மற்றும் பாரதி புத்தகலாயம் இளங்கோ அவர்களுக்கு நன்றியுரையும் பேசுவார்.

நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!


பூதம்!

நான் நம்பிக்கை இழக்கும்
தருணங்களில் எல்லாம்
என் கடந்த கால நினைவுகளுக்கு
கோரைபற்கள் முளைத்து
என்னை பயமுறுத்துகிறது
ஒவ்வொரு கனவிலும்
எதிர்காலம் பூதம் போல்
உடை அணிந்து
என்னை துரத்தி கொண்டிருக்கிறது
தப்பிக்குமான உபாயம் கேட்டேன்
உன் மடியில் உறங்க சொன்னார்கள்
நீயோ என்னை பூதம் போல் பார்க்கிறாய்!


சேரனும் காதலும்!

ஆட்டோகிராஃப் படம் பார்த்த பொழுது அதில் ஒரு யதார்த்தம் இருந்தது போன்ற உணர்வு இருந்தது எனக்கு, நான் நாலாவது படிக்கும் பொழுது எஸ்தர்னு ஒரு பொண்ணை லவ் பண்ணேன்.

இந்த படத்தில் செந்தில் ஒரு பெண்ணை வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே லவ் பண்ற மாதிரி கதை இருக்கும், அந்த பொண்ணு வளந்து கல்யாணம் ஆகி சேரன் பத்திரிக்கை கொடுக்க வரும் போது ஒரு சீன், அந்த பெண்ணின் ரெண்டாவது மகன் பேரு செந்தில், கேட்டதும் சேரனுக்கு கண்ணு கலங்கும், கூட இருக்கும் நண்பர் மூத்த பையனை கூப்பிட்டு பெயர் கேட்பார், அவன் ஒரு பேர் சொல்லுவான். கேட்டியா உனக்கு முன்னாடியே ஒருத்தன் இருந்துருக்கான், ஓவர் ஃபீலிங் காட்டாத அடங்கு என்பார்.

இரண்டாவது காதலியின் பிரிவுக்கு பின்னர் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற காட்சிகள் வரும், சிகரெட்டால் நெஞ்சில் சூடு வைத்து கொள்வார். சுருக்கமா சொல்லனும்னா யாரும் அம்மா, அப்பா பிரிவுக்காக தற்கொலை பண்ணிகிறதில்ல, பெரும்பாலான தற்கொலைகள் காதல் தோல்வியால் தான் நடக்குதுன்னு நம்மில் நேர்மையாக ஒப்பு கொள்கிறவர்களுக்கு தெரியும்.

இரண்டாவது காதலி விதவைன்னு தெரியும் போது, கல்யாணத்தை நிறுத்திட்டு இவளை மறுமணம் செய்யனும்னு நினைப்பாரு சேரன், அதில் காதலில் ஆழம் இருந்தது. சுஜாதா ஒரு கட்டுரையில் அவரது நண்பர் காதலில் தோல்வியுற்றதும் கல்யாணமே பண்ணிக்காம 50+ ல அந்த பொண்ணு இப்ப விதவையா இருக்குன்னு தெரிஞ்சு அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டார்னு எழுதியிருப்பாரு. முட்டாள்தனமா கூட இருக்கலாம், மறுக்கவில்லை அதே நேரம் இம்மாதிரியான உணர்வுகள் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து காட்டுது என்பதையும் மறுக்கக்கூடாது என்பது தான் என் கருத்து.

காதல் என்பதின் மேல் எனக்கிருக்கும் மதிப்பீடுகள் வேற. பலர் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நல்ல காதல், கள்ளக்காதல்னு காமெடி பண்ணும் பொழுது புருசனுக்கு தெரியாம பண்றது கள்ளக்காதல்னா அம்மா, அப்பாவுக்கு தெரியாம பண்றதும் கள்ளக்காதல் தானேன்னு கேள்வி கேட்பேன்.

பெற்றோர்கள் தனது வாரிசுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையா நினைக்கிறது நம் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கு, இன்றும் அது தொடருது என்னை பொறுத்தவரை பெண் திருமணம் வரை பெற்றோருக்கு அடிமையாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்கிறாள் என்பது தான் என் கருத்து.

இன்னைக்கு ஊடகங்கள் பெருகி கிடக்கு, 10 வயசு குழந்தைக்கு, குழந்தை எப்படி பிறக்குதுன்னு சொல்லி கொடுக்கப்பட்டுகிட்டு இருக்கு, இந்த காலத்திலும் என் பொண்ணுக்கு நல்ல பையன் கணவனா வரணும்னு ஆசைப்படுறது தப்பான்னு சேரன் ஒப்பாரி வைக்கிறாது சின்னபுள்ள தனமா இருக்கு, அதுக்கு சேரன் தன் மகளை வளர்க்கும் பொழுதே காதல்னா என்ன? வாழ்க்கைன்னா என்னான்னு சொல்லி கொடுத்திருக்கனும். தன் சினிமாவை பார்த்து வளர்ந்த மகளை ஸ்டேட்டஸ் பார்த்து காதலினு சொல்ற தகுதி சேரனுக்கு இல்லை. சேரன் அவர் படங்களில் அதை காட்டியதும் இல்லை.

சமூகத்தை கூர்ந்து கவனிச்சோம்னா பெரும்பாலும் பெண்ணின் காதல் மறுக்கப்படுவது தான் அதிகமா இருக்கு, நல்ல சம்பளம் வாங்கும் ஆண் ஒரு ஏழை பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணுவதில் சிக்கல் எதுவும் இருப்பதில்லை ஏன்னா பெற்றோர்கள் பெண் ஆணை சார்ந்து தான் வாழனும்னு நினைக்கிறாங்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரம், வாழும் உரிமை, தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் பெண்களுக்கும் உண்டு என்ற புரிதல் சிக்கல் போன்றவை குறித்து எந்த அக்கறையும் இல்லை.

உன் குழந்தையை நீ பெத்துகிறதுக்கு முன்னாடி பர்மிசன் கேட்டியா, நான் உன்னை பெத்துக்கவான்னு? பின்ன என்ன மசுத்துக்கியா நீ இப்படி வாழனும், அப்படி வாழனும்னு கண்டிசன் போடுறிங்க? உங்க எழவு இமேஜ் அதுனால போகும்னு நினைச்சா அதுக்காக உன் குழந்தையின் வாழ்வை பலி கொடுத்தல் எவ்வகையில் நியாயம்? சேரன் மகள் நல்ல மெச்சூர்டா இருக்குற மாதிரி தான் எனக்கு தெரியுது? சேரனுக்கு ஆதரவளிக்கும் இணைய புலிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமாகாரர்கள் மேல் தான் சந்தேகமா இருக்கு, இப்படி உங்க முகமூடியை நீங்களே கிழிச்சிகிட்டிங்களேன்னு வருத்தமாவும் இருக்கு.

back seat drivingனு ஒரு சொலவடை இருக்கு, பின்னாடி உட்கார்ந்துகிட்டு இப்படி ஓட்டு, அப்படி ஓட்டுன்னு நம்மை ஒழுங்கா வண்டி ஓட்ட வைக்கிறதா நினைச்சிகிட்டு நம்ம வாழ்க்கையும் சேர்த்து அவுங்க வாழ்ந்துகிட்டு இருப்பாங்க, இங்க நிறைய கருத்து கந்தசாமிகள் செய்வதும் அதுவே, சேரனுக்கு நான் புத்தி சொன்னா நானும் அந்த லிஸ்டில் சேர்ந்திடுவேன் ஆகவே இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எனக்கிருக்கும் கோவத்தின் வெளிப்பாடு எனவும், அதை வெளிகாட்ட சேரனின் செயல் ஒரு காரணியாக இருந்தது எனவும் சொல்லிக்கொள்ள கடமைபட்டவனாக உள்ளேன்!

# எனக்கும் மகள்கள் தான் ஆனா நிச்சயமா அவுங்க வாழ்க்கையை நான் வாழ மாட்டேன்!

தன்யனாக்கு!

உள்ளே இருந்ததென்னவோ ஆறு அங்குலங்கள் தான் ஏனோ என்னை முழுதாய் உன்னில் தொலைத்த உணர்வு இதழ்கள் பிரியும் வரை மறுஇயக்கத்திற்கான நினைவே வரவில்லை இப்படியே உன்னில் கரைந்து போனால் தன்யனாவேன்!

*************
தூக்கம் கலைந்து எழந்து பொழுது பிய்த்து எரியப்பட்ட நிலவின் துண்டுகள் போல் சில கனவுகளின் நினைவுகள், முழு கண்ணாடியிலும் நீயே இருந்தாய் சில்லு சில்லாய் உடைந்ததில் நீ பன்மைகளாய் இருந்தாய் எத்தனை முறை என்றாலும் எனக்கு சலிப்பே இல்லை இப்படியே இணைந்திருப்போமே உனக்கடுத்து நான் தரும் முத்தம் மரணத்திற்கு மட்டுமே

************

நீ மகிழ்வாய் இருந்தாயா? வலித்ததா? ரொம்ப உணர்ச்சிவச படுறேன்ல என் கண்ணையே பார்த்தயே என்ன தெரிந்தது உன்னால் மட்டும் எப்படி காதலை கடல் போல் அள்ளி தர முடிகிறது எந்த கேள்வி கேட்டாலும் முத்தத்தை மட்டுமே பதிலாய் தருகிறாய் என்ன தவம் செய்தேன் உன் காதலை பெற

டாடி, எனக்கு ஒரு டவுட்டு! 1

மாரியாத்தா சீசன் வந்துருச்சு போல, வீட்ல பேசிகிட்டு இருந்தாங்க.

மச்சான்: சமயபுரம் போனா சாமி பார்க்க ரெண்டுநாள் ஆகும் போல

மாமியார்: 20 ரூபா டிக்கெட்டிலுமா?

மச்சான்: தெரியாதா சித்தி, சீசன் டைம்ல அந்த டிக்கெட் 50 ரூபா பண்ணிடுறாங்க, ஆனா சாமிய பக்கத்துல பார்க்கலாம் இன்னும் கொஞ்சம்.

மாமியார்: எங்க தம்பி, ஒரு நிமிசம் முழுசா நின்னு அம்மாவை கும்பிட முடியல, தெரிஞ்ச ஆள் ஒருத்தர் இருந்தார் முன்ன, 100 ரூபா கொடுத்தா போதும், 5 நிமிசம் வரைக்கும் நின்னு நிதானமா கும்பிட்டு வருவேன்.

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாலும் பல்ல இறுக்க கடிச்சிகிட்டு வேண்டாமுடா வால்பையான்னு உட்காந்திருந்தேன், ஆனாலும் சும்மா இருக்குமா நம்ம வாலு

நான்: ஏங்கத்த, எனக்கு ஒரு சந்தேகம்

மாமியார்: சொல்லுங்க தம்பி.

நான்: மொத்தமா 1000 ரூபா கொடுத்து அம்மனை வீட்டுக்கே வர வச்சிட்டா என்ன?

மாமியார்: ஆஸ்பத்திரியில் இருந்துட்டு வந்தாலும் குசும்பு அடுங்குதா உங்களுக்கு.

*********

அடங்கொன்னியா! ஹாஸ்பிடல் போனா பக்திமானா வெளிய வரணும்னு எதாவது சட்டம் போட்ருக்காங்ய்களா புதுசா?

!

Blog Widget by LinkWithin