மூட நம்பிக்கை!

                        அறியாமை, மூடநம்பிக்கை இரண்டுமே நம்பிக்கையின் இரண்டு கிளைகள். ஆனால் இரண்டுக்கும் ஒரு சமுத்திரத்தின் அளவு இடைவெளி உள்ளது

காட்சி படுத்தப்படும் நம்பிக்கைகளை அறியாமை லிஸ்டில் வைக்கலாம். உதாரணமாக ஃபேர் அண்ட் லவ்லி போட்டால் வெள்ளையாகிருவோம். எர்வா மார்டின் போட்டால் முடி வளரும் போன்றவை.

இவைகள் உங்கள் அறியாமையை பயன்படுத்தி உங்கள் நம்பிக்கையை பெறுபவை. தலைக்கு ப்ளீச் பண்ணுவாங்க. தல முடி ப்ரெளன் கலரில் மாறும். அதே மாதிரி உங்கள் முகத்தில் இருக்கும் சிறு சிறு கருப்பு முடிகளை தோலின் நிறத்திற்கு மாற்றுவது தான் அவர்கள் வேலை. உங்கள் தோலில் இருக்கும் மெலினின் தான் உங்கள் பாதுகாப்பு. அதை நீக்குகிறோம்னு ஒரு கம்பெனி வாக்கு கொடுப்பதும்., உங்களுக்கு தோல் புற்றுநோய் வாங்கி தருகிறோம் என்பதும் ஒன்றுமூட நம்பிக்கைகள் அனைத்துமே மதம் அல்லது கடவுள் என்ற புள்ளியில் இருந்து விரிவும் கிளைகள். சிறு வயதில் இருந்து மதநம்பிக்கை திணிக்கப்படுவதால் அதும் அவர்கள் பெற்றோர்களாலே திணிக்கப்படுவதால் அதுவே உண்மை என்று மனதில் பதிந்து விடுகிறது. இந்த நம்பிக்கையின் இன்னொரு சிக்கல் அது ஒழுங்கம் சார்ந்த முக்கிய விதியா போதிக்கப்படுவது. சீரியஸாவே கடவுள் மறுப்பாளர்கள் ரொம்ப கெட்டவர்கள் போல அவர்களுக்கு போதிக்கப்படும். இந்து மதத்தில் ஒழுங்கம் கெட்டவர்கள். மற்ற இரு மதத்தில் சாத்தான்.

அந்த வேரின் கிளைகளான மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதும் அவர்களுக்கு கோவம் ஊட்டகூடியவை தான். உங்க நம்பிக்கை தவறு என்று நாம் சொல்றது. போடா ஒழுங்கம் கெட்டவனேன்னு அவர்கள் காதில் விழுது. மூடநம்பிக்கையின் அனைத்து கிளைகளையும் பின்பற்ற வேண்டியதும் ஒழுக்கத்தின் கட்டாய கோட்பாடாகி விடுகிறது.காயத்திரி மந்திரம் சொன்னால் மூளை வளரும், கோமிசம் குடித்தால் உடலுக்கு நல்லது. வண்டி முன் எலுமிச்சை மாட்டினால் தூக்கம் வராது போன்ற எல்லா மூடநம்பிக்கைகளும் திரிக்கபட்டவை. உங்களுக்கு தெரியாது என்ற ஒரே அறியாமையை பயன்படுத்தி உங்களை முட்டாளகவே வைத்திருக்கும் மதத்தின் தந்திரம் இது.
மாடு ஒரு விலங்கு, அது குட்டி போடும். பாலூட்டிகள் அனைத்திற்கும் குட்டி போட்டா பால் சுரக்கும். எலியும் பாலூட்டி தான். யானை மட்டுமல்ல. பூமியில் பெரிய விலங்காகிய நீலதிமிலங்கமும் பாலூட்டி தான். மாடு உங்களுக்கு வசதியா இருந்தது. புடிச்சி வச்சி கரந்துகிட்டு இருக்கிங்க. நியாயமா சொல்லனும்னா கன்னுகுட்டியின் பாலை திருடிகிறீர்கள். மாடு தேவைக்கு அதிகமாக பால் சுரக்க அதற்கு ஸ்ட்ராய்டு உணவுகளும், ஊசியும் போட்டு அதை வதைக்கிறிங்க,

இவ்வளாவும் பண்ணிட்டு அதை தொட்டு கும்பிட்டு, அதன் மூத்திரத்தை குடித்து அதை புனிதம் எங்கிறீர்கள். உங்களை போன்ற சக மனிதனை தீண்டதகாதவன் எங்கிறீர்கள். மதம் என்னும் மடதனத்திற்கு இதை விட வேறென்ன பெரிய சான்று தேவைப்படும்.

செக்கு மாடுகள் உழுவுக்கு ஆகாதுன்னு ஒரு பழமொழி இருக்கு. ஏன்னா அதற்கு அறிவு அதையே சுத்தி சுத்தி வருவது தான். அதற்கு அறிவு வரும் பட்சத்தில் அது மனிதனாகும். மதத்தை தூக்கி போடும்

வாஞ்சிநாதனும், வெளியே தெரியும் குடுமியும்!

வாஞ்சிநாதனுக்கு முட்டு கொடுக்கும் பதிவுகள் எல்லாத்தையும் பார்த்திங்களா? அவங்க எல்லாருமே கிராஸ் பெல்டா தான் இருப்பாங்க. லாஜிக் ரொம்ப சிம்பிள். வாஞ்சிநாதனின் ஒரிஜினல் பேரு சங்கரன், அவனோட அப்பா பேரு ரகுபதி அய்யர்.

மிக வலுவான வாதத்தை எடுத்து வைத்த மாதிரியும், நாமெல்லாம் அவதூறு பரப்புவது மாதிரியும் அந்த பதிவுகளும், பின்னூட்டங்களும் இருக்கும். அவங்க அறிவுக்கு ஒரு சாம்பிள் சொல்றேன். நேற்று மத்திய அமைச்சர் ஹர்சவர்தன். அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்னு கருத்து சொல்லியிருக்காரு. வேற எந்த நாட்டிலாவது இப்படி ஒரு கூமுட்டை கருத்தை கேட்டதுண்டா..

வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுகொன்று தானும் தற்கொலை செய்துகொண்டான். அவனை சுதந்திர போராட்ட வீரராக கொண்டாடும் பார்பன கூட்டம், பகத்சிங் பற்றி பேசாது. ஏன்னா பகத்சிங் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டவர். தைரியமான தூக்குமேடை ஏறியவர். பக்தாளுக்கு நாத்திகன்னா தான் பிடிக்காதே.வாஞ்சிநாதன் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவனது சட்டை பையில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தில் பல பகுதிகள் மறைக்கப்பட்டன என்பதே உண்மை. ஏன்னா அப்ப காங்கிரஸை நடாத்திக்கொண்டிருந்ததும் கிராஸ் பெல்டுகள் தான். மேலோட்டமாக மாட்டுகறி தின்பவன் எப்படி நாட்டை ஆளலாம் அதனால் தான் கொன்றேன்னு இருக்கும் வெளியிடபட்ட செய்தியில்

பார்பனர்கள் வாதம், அந்த வழக்கு இந்தியாவில் தானே நடந்தது. வாஞ்சிநாதன் ஒடுக்கப்பட்டோர்க்கு எதிரான செயல்பட்டான் என்ற குறிப்புகள் இல்லையே என்று.

இக்கணம் பார்பனர்களுக்கும், காவி டவுசர்களுக்கும் ஒரு சவால் விடுறேன். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கின் ஆவணங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வாங்கி தர முடியுமா? வாஞ்சி நாதன் பற்றிய என் கருத்துகளை வாபஸ் வாங்கிகிறேன். ஏன்னா அந்த ஆவணங்கள் போன வருசமே காணாமல் போனதாக குஜராத் காவல்துறை அறிவித்துவிட்டது. இதை தான் அதிகாரமையத்தின் ஆவண போக்குன்னு சொல்வாங்க.

குற்றாலத்தில் ஒடுக்கப்பட்டோர் குளிக்க தடை இருந்தது, ஒடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அக்ரஹாரத்தில் நுழைய தடை இருந்தது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாம். அது ஆஷ்துரைக்கு யோக்கியன் வேடம் போட நாம் இடும் கட்டுகதைகளாம்

சமகாலத்தில் ரெண்டு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட ஒருவரின் பிணத்தை ஊர் தெருவுக்குள் எடுத்துசெல்ல கூடாது என பிரச்சனை பண்ணி அது கோர்ட் வரைக்கும் போய், அப்படியும் விட மாட்டோம்னு சொல்லி காவல்துறை அந்த பிணத்தை எடுத்து செல்கிறது..

இவ்வளவு அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்த காலத்திலே இப்படி கூமுட்டைகள் இருக்கும் பொழுது அந்த காலத்தில் எவ்ளோ கொழப்பெடுத்து ஆடியிருப்பானுங்க பார்ப்பனர்கள். அவனுங்க சும்மா இருந்தாலும் போய் தொலையிறானுங்கன்னு விட்றலாம். ஆட்சி கையில் இருக்கு என்ற தைரியத்தில் வரலாற்றை திரிக்க பார்க்கும் போது தான் அவனுங்க மேல எரிச்சல் அதிகமாகுது.

எதிர்கட்சிகளின் தேவை!..

இடதுசாரிகளே ஆட்சி அமைத்தாலும் எதிர்கருத்து ஆளே இல்லாத ஒற்றை கொள்கை ஜனநாயகத்திற்க்கு ஆபத்து என்பது எனது புரிதல்.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரி, தலித் மக்களின் விரோதின்னு நாம பேசிகிட்டு இருக்கோம். ஆனா பாஜக இஸ்லாமியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கியது, பார்ப்பனர் அல்லாத ஒருவரை(மோடி) பிரதமர் ஆக்கியது தற்பொழுது தலித் சமூகத்தில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்துள்ளது

பாஜகவின் ஒற்றை கொள்கை இந்துத்துவா, அதை எதிர்ப்பது பார்ப்பானா இருந்தாலும் ஆண்டி இண்டியன்னு சொல்லிருவாங்க. கலாமுக்கு பொட்டு வைக்காத குறை தான். சிவன் சிலையை வைத்து நோபல் பரிசு(அப்பல்லாம் நாம பொறக்கவேயில்ல, எதிர்த்து கேள்வி கேட்டா ஆண்டி இண்டியன்) வாங்கினார்னு இப்பவும் வாட்ஸ் அப்பில் சுத்துது.

எனது வருத்தம் என்னான்னா, எதிர் கருத்துக்கு வலுவான எதிர்கட்சிகள் இல்லாது போனதே. அதற்கு காரணம் அந்த எதிர்கட்சிகள் தான். காங்கிரஸ் கட்சி இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்த பொழுது போட்ட ஆட்டம் இவ்ளோன்னு இல்ல. ஊழல் இல்லாத துறைகளும் இல்ல.(இப்ப அந்த நிலை தான் தமிழகத்துக்கு)மக்கள் சேவை என்ற பதத்தை மறந்து அரசியல் நிறுவனமயமாகியதும், கார்ப்ரேட் பணத்தில் ஆட்சி நடத்துவதும் நிச்சயமாக ஜனநாயகமே அல்ல. அதற்கு எந்த கட்சியில் விதிவிலக்கும் இல்லாமல் செயல்படுகிறது. ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி. ஆனால் அவர் கையெழுத்து இந்தியாவின் தலை எழுத்தை மாற்றக்கூடும்

பாஜகவின் திட்டம், யூனிபார்ம் சிவில் கோட் சட்டம், காஷ்மீர் மீதான சிறப்பு சலுகைகளை ரத்து செய்தல், இந்தியா முழுவதும் மாநிலத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல், இந்தி, இந்து, இந்தியா போன்ற அனைத்தும் அடுத்த இரண்டு வருடங்களில் நம் மீது திணிக்கப்படும்.

இடதுசாரிகள் தொலைகாட்சி விவாதங்கள் மட்டும் அரசியல் செய்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இடது சாரிகளின் களைப்பு, மதவாத சக்திகளின் பூஸ்ட்

ஜனநாயகம் vs பணநாயகம்

டோல்கேட்ல எதுக்கு பணம் வாங்குறாங்கன்னு வர்ஷா கேட்டா.
நிறைய பேருக்கு உண்மையிலயே தெரியல போல. கேக்குறாங்க, கொடுத்துட்டு போறோம்.

பாஜக அரசின் வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டம் உருவானது. காஷ்மீர் டு கன்னியாகுமரி நான்கு வழி சாலை. அதே போல் கிழக்கு மேற்கா குறுக்கா ஒரு சாலை. அந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. கார்ப்ரேட் கம்பெனிகள் இவ்வளவு செலவில் நாங்கள் ரோடு போட்டு தர்றோம் என்று டெண்டர் குறிப்பிடுவார்கள். அந்த பணத்தை வசூல் செய்ய சில வருட காலங்கள் அரசு கொடுக்கும். கூடவே அந்த காலம் வரை சாலையை பராமரிக்கும் பணியும் அந்த நிறுவனம் சார்ந்தது.

எதாவது ஆச்சுன்னா நமக்கு தான் ரெண்டாவது வேலைன்னு தரமா போடுறான் ரோட்டை. அதனால் தான் அது பல வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கு. உள்ளாட்சி சார்ப்பில் போடப்படும் ரோடுகள் சில நாட்களில் பல்லிளிக்குது.

தனியார் ரோடு போட்டா நம்மிடம் வாங்கும் வரி பணம் எங்கே என்று கேள்வி தானே எல்லாருக்கும் தோன்றும்...

ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் மத்திய அரசுக்கான வரி பணத்தில் 42% பணத்தை மாநில அரசுக்கு கொடுத்து விடும் மத்திய அரசு. மீதி பெரும்பகுதி எம்.பிக்கள் சம்பளம். ஊர் சுற்ற அலவன்ஸ். சும்மா உட்காந்து சீட்டை தேய்க்கும் அதிகாரிகள் சம்பளம்.இதுவல்லாது மிக முக்கிய அடிப்படை தேவையான கல்வி, உணவு, சுகாதாரம் இவற்றிற்கு தனியாக பணம் ஒதுக்கும். காங்கிரஸ் ஆட்சியில் போடபட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தில் வரும் பணம் கொண்டு தான் அதிமுக அரசு அம்மா உணவகம் அமைத்தது. தற்போதைய பாஜக அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாற்றம் செய்து ஆப்பு வைக்கிறது கேட்டால் கள்ள சந்தையில் விற்பனையாகிறது என்று பதில்.காங்கிரஸ் காலத்தில் ரைட் டு எஜிகேட் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% வசதியில்லாத குழந்தைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசு பீஸ் கட்டும். இப்படி ஒரு திட்டம் இருப்பதே எனக்கு இந்த வருசம் தான் தெரியும். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதால் பக்தாஸ் வாயை மூடிகிட்டு அவங்க குழந்தைகளை மட்டும் சேர்த்துவிட்டாங்க. இந்த வருசம் அரசு அந்த குழந்தைகளுக்கான தேர்வை ஆன்லைன் மூலம் அப்ளை செய்ய சொல்லியிருக்கிறது.சுகாதாரத்தில் முக்கியானது அரசு மருத்துவமனைகள். ஆனால் அங்கே கழுத்து வெட்டபட்டு ரத்தம் சொட்ட சொட்ட போனாலும் முதலில் பாராசெட்டாமல் மாத்திரை தான் கொடுப்பார்கள். அதில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ சுஜ் பாரத் என்று இன்னும் வரி வாங்கி கங்கையை சுத்த படுத்தவும், மாட்டுக்கு குண்டி கழவி விடவும் செலவு செய்கிறது. கழிப்பிடம் அமைத்தல் மட்டுமே அதில் நல்ல திட்டம். அரசு தரும் மானியம் பெற அதை விட அதிகமா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். போன வருசம் இந்த திட்டத்தை கபாலி இலவச டிக்கெட் கொடுத்து கவர்ச்சி திட்டமாக மாற்றினார்கள்

இது போக இந்தியாவின் கடனுக்கு வட்டி கட்டனும். பெரிய பிஸ்தான்னு சீன் போட பக்கத்துக்கு நாட்டுக்கு நிவாரணம் கொடுக்கனும். பேரிடர் நிவாரண நிதி, நீர் வளம் பாதுகாப்பு நிதி. பசுமை பாரதம் நிதி என்று மத்திய அரசு பொறுப்பில் நிறைய இருக்கிறது, அதை பல மாநிலங்கள் சரியாக பயன்படுத்தி தங்கள் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது.2011 - 2016 அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொடுத்த பல திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தாமல் அதை மத்திய அரசு திரும்ப பெற்றது. அப்பவே அப்படினா இப்ப சொல்லவே வேணாம். அப்பவே பல முறை எழுதினேன். அந்த சமயத்தில் தமிழக காங்கிரஸ் தான் அதிமுகவின் செயலற்ற தன்மையையும், ஊழலையும் பேசியது. திமுக மப்பு தெளியாமல் சுற்றிக்கொண்டு இருந்தது.

திமுக தோற்க முக்கிய காரணங்கள்.
5 வருசத்திற்கு ஒரு முறை ஆட்சி மாறுது., அடுத்து நாம தான் என்ற மமதை. கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ளாமல் விசிக போன்ற கட்சிகளை புறம் தள்ளியது, உட்கட்சி பூசல், ஏற்கனவே வட்டம், மாவட்டத்திடம் மக்கள் வாங்கிய வடுகள் மறையாமல் இருந்தது. ஜெயலலிதா மேல் பெண்களுக்கு இருந்த மாஸ் கிரேஸ். பணநாயகம்.

ஜனத்தின் நாயகனை ஜனநாயகம் தான் தேர்தெடுக்கனும், பணநாயகம் தேர்தெடுத்தால் அவன் பணத்தின் நாயகனா தான் இருப்பான். கூவந்தூர் சிறந்த உதாரணம் அதற்கு.. நீங்கள் நடக்கும் சாலை, தெருவில் எரியும் விளக்கு, மருத்துவமனையில் போடும் ஊசி, வாங்கிய இலவச பொருட்கள் எல்லாமே உங்க காசு தான். இன்னார் மூலமாக வந்ததுன்னு சொல்லலாமே தவிர அன்னாரின் சொந்த காசில்ல அது. அன்னார் அந்த திட்டத்தில் ஆட்டைய போட்டது தான் நிறைய. அதில் ஒரு வழக்கு முடிவுக்கு வந்து உடன் பிறவா சகோதரி ஊதிபத்தி உருட்டுறாங்க. கழகத்திற்கு அடுத்த மாதம் தீர்ப்பாம்

இவ்ளோ விளக்கமா சொல்லியும் புரட்சி தலைவி, புரட்டாசி தலைவலின்னு கூவுறவங்களை பார்த்தா, நான் கடைசி வரைக்கும் அடிமையா தான் இருப்பேன்னு சபதம் போட்டு பிறந்த மாதிரி தெரியுது. இது திமுக அடிமைகளுக்கும் பொருந்தும்

#வால்பையன்
#அரசியல்

எதிர் கருத்துடையவன் எதிரி அல்ல!...

அதிமுகவை கேள்வி கேட்டால் திமுகவை கேட்டியா என்பது
பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸை கேட்டியா என்பது
இந்து மதத்தை கேள்வி கேட்டால் இஸ்லாமை கேட்டியா என்பது..

நீ ஒழங்கா என்ற கேள்விக்கு , ஆம் ஒழுங்கு அல்லது ஒழுங்கில்லை என்ற இரு பதில்கள் தான் இருக்க முடியும். அட நீ ஒழுங்கான்னு கேள்வி கேட்பவனை திருப்பி கேட்டால் கூட பரவாயில்ல. அவன் ஒழுங்கா என மடை மாற்றுவது எப்படி பதிலாகும்

விஜயகுமார் என்ற நபர் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஃபாருக் அகமது என்ற நபருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்லை.எனக்கு விமர்சனம் உங்கள் கருத்தியல் மீது. உங்கள் கருத்தை சரியென நிறுவ முயல்வது உங்கள் கடமை, உரிமை. எனக்கு கருத்தியில் தவறென்று சாத்தியகூறுகளுடன் விமர்சிப்பதும் உங்கள் உரிமை.

நான் இஸ்லாமை விமர்சித்து அவர்களிடம் காவி பட்டம் வாங்கியது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை உங்களுக்கு நிரூபித்து உங்களிடம் நல்ல பேர் வாங்கனும் என்ற அவசியமும் எனக்கில்லை

ஆனால் நீ ஏன் இஸ்லாமை விமர்சிக்க மாட்ற, ஏன் கதைக்கு இஸ்லாம் பேர் வைக்க மாட்ற என்பது என் தைரியத்தை சோதிப்பது போல் தெரியவில்லை. மாறாக உங்களுக்கு இஸ்லாம் மேல் இருக்கும் வன்மத்தையே காட்டுகிறது. இதை தான் கொண்டைய மறைக்க தெரியலையே என்பார்கள். எனக்கும் இஸ்லாம் நண்பர்கள் இருக்காங்கன்னு ஆதார் அட்டைய தூக்கிட்டு வராதிங்க. பாம்பு எப்ப கொத்தும்னு கடப்பவனுக்கு தெரியாது. பாம்புக்கு தான் தெரியும்.சீனிவாசன் என்ற நபர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அவர் கருத்தியலுக்கும், நம்பிக்கைக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்ற விமர்சனம் உங்கள் கருத்தியல் மேல் தான். உங்களை முட்டாளாக நீங்களே நினைத்துக்கொண்டால் அதற்கு ஏன் எப்படி பொறுப்பாக முடியும்.

ஒரு மதவாத பாஸிச அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் பொழுது அதன் முகதிரை டார்டாராக கிழிப்பது தான் தைரியம். இந்த இந்து பெரும்பான்மையில் இந்து மதத்தை கிழிப்பது தான் தைரியம். இஸ்லாம் நாட்டில் இஸ்லாமை கிழிப்பது தான் தைரியம். அதை சிறுபான்மையினரும் சண்டைக்கு போன்னு என்னை உசுப்பேத்துகிறங்க.மதவாதிகளுக்கு எப்போதும் ஒரு பதில் சொல்லுவேன். எனது விமர்சனம் உங்கள் நம்பிக்கையை புண்படுத்துமேயானல் தவறு என் விமர்சனம் மீதல்ல. உங்கள் நம்பிக்கையில் தான் பிசுகு

பத்து வயசு பையனை ஒண்டிக்கு ஒண்டி வர்றியான்னு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் என்னை விட பலசாலிகளுடன் தான் மோதுவேன். மனிதமும், உண்மையும் வெல்லும்.

#வால்பையன்

பிரிட்டன் தேர்தல்!

பிரிட்டனில் மீண்டும் அடிப்படைவாத கட்சியை சேர்ந்த தெரசாமே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து எல்லாம் சேர்ந்து மொத்தம் 650 சீட்டுகள். அதில் 326 சீட்டுகள் பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால் கன்சர்வேடிவ் கட்சி பெற்றுள்ளது 318 இடங்கள் மட்டுமே., அவர்களுக்கு டெமாடிரிக் கட்சி 10 சீட்டுடன் ஆதரவு அளிப்பதால் 328 சீட்டுகள் என்று பெரும்பான்மை காட்டி ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதெல்லாம் பேப்பர்லயே வரும். நீ என்னடா சொல்ல வர்றன்னு தானே கேக்குறிங்க. இந்த (கன்சர்வேடிங்) பழமைவாதகட்சி தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தான் அந்த கட்சியின் பெயரே


சூரியன் மறையா நாடு என பெயர் பெற்றது பிரிட்டன். அந்த அளவு உலகம் முழுவதும் நாடுகளை அடிமை படுத்தி வைத்திருந்தது, நம்ம ஊரில் சோத்துக்கு ......பவனே தன்னை ஆண்ட பரம்பரைன்னு பெருமை பீத்தும் போது அவனுக்கு எவ்ளோ இருக்கும். அதும் அந்த கட்சியின் கொள்கையே பழமை வாதம் தான். சுருக்கமா சொல்லனுமா அவனும் முன்னோர்கள் முட்டாள் இல்லன்னு சொல்லிட்டு திரியிறான்
இதற்கு முன் டேவிட் கேமரூன் என்ற நபர் இருந்தார். அப்பொழுது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவர வேண்டுமா வேண்டாமா என்று மக்களிடம் பொது வாக்கெடுப்பது நடந்தது. அதன் முடிவு வெளியே வரலாம் என்று மக்கள் வாக்களிக்கவும். டேவிட் கேமரூன் பதிவு விலகினார். தெரசாமே பதிவேற்றார். அவர் பதிவு ஏற்று ஒரு வருடம் தான் ஆகிறது என்பது தான் சிறப்பு.


இந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றிருப்பது தொழிலார் கட்சி. நல்லவேளை இரண்டாம் இடம் பெற்றது. பிரிட்டனும் முழுமையான முதலாளித்துவ நாடு தான். ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்த பொழுது கொஞ்ச்ம் விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள் போல. அதான் தொழிலாளர்கள் கட்சி இரண்டாம் இடம் வந்துருக்கு.
இந்த ஸ்திரதன்மை இல்லாத தேர்தல் முடிவு அதாவது 326 சீட்டுகள் பெறாமல் கூட்டு அமைத்து ஆட்சி ஏறும் சூழலால் பிரிட்டன் பொருளாதாரம் அன்னிய செலாவணியில் கொஞ்சம் இறக்கம் கண்டுள்ளது. அதனால் அமெரிக்காவில் முதலீடு அதிகமாகி டாலர் மதிப்பு உயர்ந்து தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்தது.
நடந்த முடிந்த ஒரு வருடத்தில் தெரசாமேவின் செயல் திட்டம் எதுவும் முழுமை பெற்றிருக்காது. இனி தான் பார்க்க வேண்டும். ஆனால் மொத்த உலகத்தின் பயம் என்னவென்றால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மூன்றிலும் சொல்லி வச்சா மாதிரி பழமைவாதிகள் ஆட்சி செய்வது தான். மீண்டும் கிழங்கிந்திய கம்பெனி இந்தியா வரலாம்.
நாம் எப்போதும் அடிமைகளாகவே இருக்கிறோம். ஆள்பவர்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறார்கள்

நல்லதுக்கே காலமில்ல!

அது ஒரு மருத்துவ கல்லூரி, மாணவர்கள் ஒரு பிணத்தை சுற்றி நிற்க மருத்துவர் பாடம் எடுக்கிறார்.

பாருங்க, நாம பண்ண போறது தொழில் இல்ல, சேவை. இதில் கூச்ச நாச்சம் பார்க்கக்கூடாது. இப்ப இந்த பிணத்தோட வாயில் என் விரலை விட்டு பின் என் வாயில் வைப்பேன். நீங்களும் எல்லாரும் பண்ணனும்,

மருத்துவர் அவ்வாறே செய்ய, மாணவர்கள் வேண்டா, வெறுப்பா அப்படியே செய்தனர். எல்லாரும் பண்ணியாச்சா. நாம சேவை தான் பண்றோம். ஆனா சொல்லி கொடுக்குறவன் என்ன பண்றான்னு கவனிக்கனும். நான் நடுவிரலை வாயில விட்டு, மோதிர விரலை சப்பின்னேன்னு சொன்னார் மருத்துவர். மாணவர்கள் எல்லாரும் வாந்தி எடுத்தாங்க.

இந்த கதை ஏன்னு சொன்னேன்னு போக போக புரியும்.

நம் அண்ணன், தம்பிகள் கொஞ்சம் கொஞ்சமா அக்கா, தங்கைகளா மாறிகிட்டு இருக்காங்க. அவங்களை தடுத்து நிறுத்துக்கன்னு ஒரு போஸ்ட் போட்டா, ரிப்போர்ட் காப்பி கேக்குறாங்க. மாட்டு மூத்திரம் குடிச்சா கேன்சர் குணமாகும்னு சொன்னானே அப்ப ரிப்போர்ட் கேட்டிங்களான்னு கேட்டா அது நம்பிக்கையாம்மூத்திரம் குடி சொன்ன எவனாவது உங்க முன்னால் மூத்திரம் குடிச்சு பார்த்ததுண்டா? நீங்க தான் குடிக்கனும். இப்ப புரியுதா அந்த கதை ஏன் சொன்னேன்னு. அவ்வளவு அறிவியல் ஆதாராட்டோட சொன்னாலும் உங்களுக்கு நம்பிக்கை தான் பெருசா போச்சு

அப்படி தான் நிலாவுல பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்குன்னு சொன்னாங்க. அதும் நம்பிக்கை தான். போங்க, போய் ஆளுக்கு கொஞ்சமா புண்டு, புண்ட வட சாப்பிடுங்க. உங்களுக்கெல்லாம் நல்லது சொல்றதுக்கு பதில் நாலு சினிமா பார்க்கலாம்

அவசரம் - இந்திய ஆண்களுக்கு

நீங்கள் இந்தியாவை சேர்ந்த ஆண் என்றால் முழுவதும் படியுங்கள்

ஆண் உடலில் ஆண்ட்ரோஜன் என்னும் சுரப்பியும், பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் சுரப்பியும் உள்ளன. ஆண்ட்ரோஜன் ஆண் தன்மையை காக்கிறது. ஈஸ்ட்ரோஜன் பெண் தன்மையை உறுதி செய்கிறது

ஆண்ட்ரோஜன் தடைபடும் ஆணுக்கு மார்பகம் பெரிதாகுதல், குரலில் நளினம், மலட்டுதன்மை ஏற்படும், ஈஸ்ட்ரோஜன் தடைபடும் பெண்களுக்கு உடல் பருமன், குரலில் ஆண் தன்மை, மற்றும் மீசை, தாடி முளைப்பதும் நடக்கும்.

ஈஸ்ட்ரோஜன் பெண் விலங்குகள் அனைத்திலும் உண்டு, அவை பெண் உறுப்பில் அதிகமாக காணப்படும். மாட்டு மூத்திரத்தில் ஒரு மனித பெண்ணுக்கு இருப்பதை விட 100 மடங்கு ஈஸ்ட்ரோஜன் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

அதை குடிப்பதால் ஆணுக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பது தடைபட்டு, ஈஸ்ட்ரோஜன் சுரக்க ஆரம்பிக்கும், முதலில் அவர்களுக்கு எதிர்பால் மேல் ஈர்ப்பு குறையும். பிரம்மசார்யம் ஏற்ற ஆசைபடுவார்கள். நடையில் நளினம் காணப்படும், மீசை வைத்துக்கொள்ள ஆசை வராது. மலட்டு தன்மை ஏற்படும். மூளை செயல்திறன் குறையும்

அட்லாண்டிஸ் யூனிவர்சிடி செய்த செக்ஸ் மாற்றங்கள் ஆராய்ச்சியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் பகிர்ந்து இந்திய ஆண்களை காப்பாற்றுகள். மாட்டு மூத்திரம் குடிக்க வைப்பது நம் அனைவரையும் பிரம்மசார்யம் ஏற்ற வைக்க நடக்கும் சதி. விழித்துக்கொள்ளுங்கள் ஆண்களே

இந்தியன் என்றால் பகிரவும்

பரிணாமம் - சான்றுகள்

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

பரிணாமம் என்பது ஒரு உயிர் தன்னை சூழலுக்கு தகுந்தாற்போல் மேம்படுத்திக்கொள்ளும் தன்மை. அவற்றின் சான்றுகள் நம் கண்முன் ஆயிரம் காணகிடைத்தாலும் படைப்புவாத கொள்கையுடைவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை

எலும்மிச்சை, கொழுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்ச் அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பது நமக்கு தெரியும். ஒரே குடும்பமாக இருந்தாலும் அதன் தன்மையும் சுவையும் மாறுபடும். அதே போல் தான் உயிரனங்கள் இருக்கும் சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் பொழுது அதன் தன்மை மற்றும் உருவம் மாறுபடும். அவற்றில் இருக்கும் ஒற்றுமைகளை கொண்டு நம்மால் அவைகளின் மூலத்தை அறிய முடியும்


எலி வகைகள் பெரும்பாலும் மணலுக்கடியில் வாழும், தரையில் கிடைக்கும் உணவு பற்றாக்குறையால் அவைகள் மரம் ஏறதொடங்கின. அப்படி பிரிந்தது ஒரு வகை

அவைகளுக்கு மேல் இருக்கும் உயிர்களை உதாரணமாக சொல்லலாம்தரையில் சிறப்பாக கற்றுக்கொண்டவை பெரிய உருவம் பெற்றது. அதற்கு உதாரணம் மேல் இருக்கும் குனியாபிக் மற்றும் எலி வகைகளில் பெரிதான கேத்திபாரா


டியர்மெளஸ் என்ற உயிரினம் எலி போன்ற சிறிய உருவம் கொண்டது ஆனால் தோற்றத்தில் மான் போல இருக்கும். இவைகள் எலிகளுக்கும், மான்களுக்கும் இடையில் இருக்கும் உயிரினங்கள்


இவைகள் பெரிதாக வளர்ந்த மான்கள். பரிணாமமத்தில் எலியிலிருந்து மாற்றம் பெற்ற உயிரினங்களின் படங்கள் மூலம் உங்களால் உணர முடியும்.

பார்பனீயம் vs பெரியாரியம்

கேணி நிகழ்வில் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை கூறினார். என்னை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் தொடர்பு கொண்டாங்க, நீங்கள் எங்களுக்கு எவ்ளோ எதிரா எழுதினாலும் நாங்கள் உங்களை ஏத்துக்குவோம் ஆனால் நீங்கள் ஆதரிக்கும் இடதுசாரிகள் சிறுது கருத்து வேறுபாடு வந்தாலும் தூக்கி போட்ருவாங்கன்னு. ஏன் அப்படி சொன்னாங்கன்னு ஒரு நண்பர் கேட்டார், ஞாநி பிறப்பால் பார்பனர்னு சொன்னேன். அது ஒரு காரணமா என்றார். ஒரு காரணமில்லை அதான் மொத்த காரணமும் என்றேன். பெரியார் காலத்தில் பார்பனீயம் ஊறி போய் கிடந்தது. தீண்டாமை பார்க்காத பார்ப்பான் லட்சத்தில் ஒருத்தன் இருந்தால் ஆச்சர்யம். மேலும் அப்போதைய பார்பனர்கள் பெரியாரை எதிர்ப்பு கண்ணோட்டத்தில் அனுகினார்கள். அதனால் தான் பாம்பை விட பார்ப்பானுக்கு விசம் அதிகம் என்ற பொருள் படி கூறினார். அதே நேரம் அவர் ராஜாஜியுடன் அந்தரங்கம் பகிரும் அளவுக்கு நட்புடன் இருந்தார் என்பதையும் கவனிக்கனும் இன்றைய நிலையில் பார்பனீய கூறுகள் பார்பனர்களிடம் மட்டும் இல்லை. பிறப்பால் உயர்வு, தாழ்வு பார்ப்பதே பார்பனீயம், இன்று தங்களை உயர்சாதி, ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்ளும் அனைவரும் தீண்டாமை கடைபிடிக்கிறார்கள். அவர்களும் பார்பனர்களே. ஆனால் பிறப்பால் பார்ப்பனாக பிறந்து சாதி மறுக்கும் பலரை நான் அறிவேன். நம்கூடவே பலர் இருக்கிறார்கள். அவர்களே வெளிகாட்டிக்கொள்ள விரும்பாத அதை நானும் காட்ட விரும்பவில்லை. பதிவின் பொருள் குறித்து ஞாநி விஷயம் மட்டும்.

பூனை குறுக்கால போனா அப சகுனம், கொஞ்சம் நேரம் நின்னுட்டு போன்னு சொல்ற மூடநம்பிக்கைக்கு சமமாக பார்க்குறேன் பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு, பார்ப்பானை அடி என்ற நிலைதகவல்களை. ஒரு மதவாதிக்கு உண்டான அனைத்து திணிப்புகளும் உங்களுக்கு நடந்துள்ளது. ஒரு மதவாதியை போலவே பகுத்தறியாமல் நீங்கள் வேதம் போல் அதை ஓதிக்கொண்டு இருக்கிறிர்கள். ஹலோ, ஹலோ பார்ப்பஸ். உங்களுக்கு இனிமேல் தான் இருக்கு. பார்பனியத்தை அதாவது பிறப்பால் உயர்வு, தாழ்வு பார்ப்பதை விடுத்த எவரும் பார்ப்பான் என்ற சொல்லுக்கு கோவம் அடைய தேவையில்லை. பார்ப்பான் என்ற சொல் உங்களை குறிப்பதாக கருதினால் அந்த பார்பனீய சிந்தனை உங்களுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். நான் ஒன்னும் பண்ணல, என்னை ஏன் பார்ப்பான்னு திட்டுறான்னு கேட்பவர்களுக்கு. எவனோ திருடன்னு கத்துனா திருடன் தான் திரும்பி பார்ப்பான், நீ ஏன் முக்குற திருமுருகன் காந்தி பேசியது பார்ப்பனிய நோக்கில் சிறுபான்மையினரை ஒடுக்கும், அவர்கள் வாழ்வாதரத்தை பாதிக்கும் சட்டம் இயற்றும் பார்ப்பனர்களை. அவரை தெரு முருகன் காந்தி என எழுதினால் நீ ஒரு அக்மார்க் பார்பனிய சிந்தனையுள்ள பார்ப்பான். பெரியார் சொன்னது உன்னை தான். உன் விசம் தான் அனைத்தையும் விட கொடியது #வால்பையன் #பார்பனீயம்

கேள்வி-பதில் (06.06.17)

கேள்வி ஜெரால்டு ததேயு 1) ஆலங்கட்டி மழை பெய்யுதுள்ள... அந்த ஆலங்கட்டி வானில் எப்படி உருவாகிறது? 2) இவ்ளோ அகண்ட வெளில மேகம் திண்ம பொருளா மாறுற அளவுக்கு எங்கிருந்து குளிர தக்க வைக்கிற இடம் கிடைக்குது? 3)மேகம் குளிரயில மழையா பெய்யாம ஏன் ஐசா மாறுது.? 4)இந்த ஐஸ் படிவம் மேல விமானங்கள் மோதுன சம்பவங்கள் ஏதும் நடந்துருக்கா? அல்லது நடக்க வாய்ப்பிருக்கா? பதில்: 1963 ஆம் ஆண்டு Erasto Batholomeo Mpemba ஒரு விதியை கண்டுபிடித்தார். அதுவே ஆலங்கட்டி மழை பெய்ய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது அவர் கண்டுபிடித்த விதி, சாதாரண சூட்டில் இருக்கும் நீரை விட, கொதி நீர் விரைவில் பனிகட்டி ஆகும் என்பது. இதற்கு காரணம் நீர் வெப்பமாக இருக்கும் பொழுது அதன் மூலக்கூறுகள் விலகி எடை குறைந்த தன்மை பெற்றிருக்கும். சிறுது குளிர்ச்சியும் அதை மீண்டும் இணைக்கும் பொழுது அவை வேகமாக பனிகட்டி ஆக்குகின்றது மேகம் உரசும் போது தோன்றும் மின்னல் ஏற்படுத்தும் வெப்பம் நீரை சூடாக்குவதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும். அந்த வெற்றிடம் ஒரு ஃபீரஷரை போல் செயல் படும். நீரின் அடர்ந்தி அவற்றை ஒன்றினைத்து பனிகட்டிகளாக மாற்றுகிறது. இவை பொது விதி இதுவல்லாது "சூடோமோனாஸ் சிரஞ்சி" என்ற பாக்டீரியா நீரை பனிகட்டி ஆக்குகிறது என்பதை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள். விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டவனா என குறிப்புகள் கிடைக்கவில்லை. பெரு மழையில் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் விபத்திற்கு வாய்ப்புள்ளது என்று தான் சாத்தியகூறுகள் சொல்றிகின்றன.


கேள்வி-பதில் (01.06.17)

கேள்விகள் Para Meswaran

1. காய்ச்சல் குணமான பின் அதிக சுறுசுறுப்பை உணர்கிறோமே அதன் காரணம் என்ன?

பதில்: குளிரூட்டபட்ட அறையில் இருந்து வெளியே வரும் பொழுது இரவாக இருந்தாலும் நம் உடல் வெப்பத்தை உணரும். களைப்பு என்பது உங்களை ஓய்வு எடுக்க உங்கள் மூளை தூண்டும் செயல். போதுமான ஓய்வு கிடைத்தவுடன் களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள்

2. உலகத்தையே ஆண்ட பிரிட்டிஷாரால் தம்மாத்துண்டு பாண்டிச்சேரியை அடிச்சு பிடுங்காமல் இருந்ததன் காரணம் என்ன?

பதில்: ப்ரெஞ்சு, போர்ச்சிகிஸ் எல்லாம் ஐரோப்பிய யூனியம் பிரதேசம் தான். வியாபாரத்திற்காக வந்த பொழுதே அவர்களுக்குள் இருந்த ஒப்பந்தம் அது. அவர்கள் வெள்ளையர்கள் என்ற பொதுவிசயத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்தியா சாதி/மதம் என்ற விசயத்தில் பிளவு பட்டு இருந்தது

2. அரபுநாடுகள் & சீனதேசம் போன்றவை ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தில் இருந்தவையா? இல்லையென்றால் என்ன காரணம்?


பதில்:வணிகரீதியாக ஆக்கிரமிப்பு எல்லா பக்கமும் காலணி ஆதிக்கம் செய்தது. 1950களில் ஆப்கானை பார்த்தால் நம்பவே மாட்டீர்கள். மற்ற அரபு நாடுகள் பாலைவன பகுதியாக இருந்ததால் மற்ற வளங்களை எதிர்பார்த்து காலணி ஆதிக்கம் செய்யவில்லை. சீனாவில் இன்றும் ஹாங்காங் பகுதி காலணி ஆதிக்கத்தில் தான் உள்ளது. ஆனால் சீனா காலணி ஆதிக்கத்தில் இருந்ததை விட குட்டி தீவான ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்தது தான் கொடுமை3. தென்கொரியாவின் திடீர் அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம்?

பதில்:வடகொரியா மேல் இருந்த வெறுப்பின் காரணமாக மற்ற நாடுகள் தென் கொரியாவிற்கு உதவியது முக்கியமாக அமெரிக்கா, வட கொரியா தன்னை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றகொள்ள முயற்சித்த சமயத்தில் தென் கொரியா எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதிகள் சந்தையின் முக்கிய இடத்தை பிடித்தது. நாம் பயன்படுத்திய கொரிய போன்கள் தென் கொரியாவில் இருந்து வந்தது தான். உலகின் பெரும் முதலாளித்துவ நாடுகள் வட கொரியாவின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது


4. சேட்டிலைட் இல்லாத காலத்தில் கண்டம்விட்டு கண்டம் தொலைபேசியில் எப்படி பேசினார்கள்? கடலுக்கடியில் கேபிள்?

பதில்: தந்தியில்லாத இணைப்பை கண்டுபிடிக்கும் வரை நாம் கண்டம் விட்டு கண்டம் பேசிக்கொள்ளவில்லை. சாட்டிலைட் வருவதற்கு முன்னால் காற்றலைகள் மூலம் கிடைக்கும் சிக்னலை ரீசிவர் மூலம் பெற்று வந்தார்கள். அது அதிகமாக ராணுவத்தில் மோர்ஸ் கோட் போன்றவற்றை மொழிபெயர்க்க பயன்பட்டது

5. ஆதிகாலத்தில் இரும்பை எப்படி கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள்? தாது கண்டறியும் வசதி, சுரங்கம் இதெல்லாம் எப்படி?

பதில்:்உலோகங்களை மனிதன் முதலில் அறிந்தது எரிமலை குழம்பின் மூலம், குளிர்ந்த எரிமலை குழம்பில் இருந்த உலோகம் கல்லை விட கடினமாக இருந்ததால் அதை ஆயுதமாக பயன்படுத்தினான். இரும்புக்கு முன்னரே மனிதன் பயன்படுத்தியது பித்தளை. கடின உலோகம், மென் உலோகம் என்று தான் வகைபடுத்தினான் தன் பயன்பாட்டிற்காக. தங்கத்தின் மேல் உள்ள மோகம் கடைசி 6000 வருடங்களில் தான் இருக்க வேண்டும். அதற்கு முன் தான் வேட்டையாடிய விலங்குகளின் பாகத்தையே அணிகலனாக அணிந்தான்

6. பாடிபில்டர்கள் அனைவரும் அசைவ உணவை உட்கொள்பவர்களா?

பதில்: நம் உடலுக்கு தேவையான மிக முக்கியான சக்தி புரதத்தின் மூலமே கிடைக்கிறது. அந்த புரதம் மாமிசத்தின் மூலமே கிடைக்கிறது. நாம் தற்சமயம் எடுத்துக்கொள்ளும் அரிசி, கோதுமை வகைகள் நம் உணவு அல்ல. அவைகள் மாவு சத்துகள் எனப்படும் கார்போஹைட்ரேட். அவை உடலுக்குள் சென்று குளுகோஸாக மாறி சக்தியாக மாற்றப்பட நம் கணையம் படாதபாடு படுகிறது. உலகில் தற்சமயம் பரவலாக காணப்படும் நீரழிவு பிரச்சனைக்கு காரணம் அது தான். கணையம் தான் இன்சிலின் சுரக்கிறது


7. நீலப்படத்தை முதன்முதலில் எடுத்த & திரையிட்ட இடம்பற்றிய விவரங்கள் இருக்கா?

பதில்:நீலப்படமாக எப்ப எடுத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் கலிகுலா போன்ற கிறுக்கு மன்னர்கள் காலத்தில் உடல் உறவு காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று செய்திகள் உள்ளன. அந்தகாலத்துக்கு அந்தபுரத்தை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்8. ஒளி பரவ ஊடகம் தேவையென்றால், வெற்றிடத்தில் எப்படி ஒளி ஊடுறுவ முடிகிறது?

பதில்:ஒலி அதாவது சவுண்ட் தான் வெற்றிடத்தில் பரவாது. ஒளி(வெளிச்சம்) பரவும். ஆனால் அந்த ஒளியை காண அது எதாவது பொருளின் மீது பட்டு எதிரொளிக்க வேண்டும்.

9. "வெட்றி" என்று உச்சரிப்பதை ஏன் வெ-ற்-றி என்று எழுதுகிறோம்?

பதில்:தமிழில் மிக சிக்கலான சிறப்புகளின் இதுவும் ஒன்று. ஒலி வடிவம் உங்களுக்கு அப்படி தெரியுது. தமிழர்கள் அல்லாதவர்களுக்கு ந,ன,ண உச்சரிப்பு ஒரே மாதிரி தான் தெரியும். பல்லி, பள்ளி ரெண்டையும் சொல்லிப்பாருங்க. ப எழுத்தில் தான் அழுத்தம் மாறும்படி தோணும்

10. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது உடனே எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாது, மொபைலில் வீடியோ எடுக்கும் சமகால மனிதர்களின் சைக்காலஜி பற்றி எவ்வளவு யோசித்தாலும் புரிய மாட்டேங்குது கொஞ்சம் விளக்கவும்?

பதில்: முதல் விசயம் சம்பவத்தின் பாதிப்பை அவர் உடல்/ரீதியாக உணர வில்லை. ஏன்னா அவர் அடிபட்டிருந்தால் அப்படி செய்ய மாட்டார். பொருள் முதல் வாத சமூகம் பக்கத்துக்கு வீட்டுகாரன் பேரே தெரியாம இருக்கு. அவனுக்கு ஒன்னுன்னா எப்படி உதவிக்கு ஓடும். உளவியல் ரீதியாக இன்றைக்கு 40% இளைய தலைமுறையினர் மன அழுத்தத்தில் உள்ளனர். நிரத்தர வேலையில்லாதது ஒரு காரணம். நான் வேலைக்கு போனா தான் சோறு, எனக்கு தேவைனா நான் தான் பார்த்துக்கனும் என்று தன் சார்ந்தே சிந்தனைகள் மாறி போனது இதனால். சம்பவ இடத்தில் விடீயோ எடுப்பவர்களை விட அதை மாறி மாறி ஃபார்வேர்ட் செய்யும் சைக்கோக்களை நினைத்தால் தான் எனக்கு பயமா இருக்கு. கொடூரமாக கொல்வது. அடிபட்டு உடல் பாகங்கள் சிதறிகிடப்பது போன்றவற்றை என்னால் பார்க்கவே முடியாது. அதை ரசித்து பின் பிறருக்கு அனுப்பவர்கள் மனநிலை என்ன மாதிரி இருக்கும்?


#கேள்விபதில்
#வால்பையன்

!

Blog Widget by LinkWithin