குவியல் (15.09.16)

தம்பி மனைவி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டெலி மார்கெட்டிங் பிரிவில் வேலை பாக்குறாங்க. ரெண்டு நாள் முன்னாடி ஆபிஸில் சென்னை கூட்டிட்டு போவதா சொன்னாங்க. சென்னைக்கு மிக அருகில்னு திருச்சியில் ப்ளாட் காட்டுவாங்கன்னு தானே கேள்வி பட்டோம். இதென்ன ஈரோட்டுக்கு மிக அருகில்னு சென்னை போறாங்கன்னு நினைச்சேன். வந்த பிறகு தான் தெரிஞ்சது அவுங்களை கூட்டிட்டு போனது அதிமுக ஆள்பிடிப்பு மாநாட்டுக்கு. போக, வர வண்டி இருக்கும், ஒரு நாள் சென்னையை சுத்தி பார்க்கலாம், சாப்பாடு உண்டு, செலவுக்கு 500 ரூபாய். தேர்ந்த அரசியல் தொண்டன் எல்லா  கட்சியிலும் உறுப்பினர் அட்டை வச்சிருப்பான் போல, எனக்கு தான் எழவு ஆதார் அட்டை கூட இல்லை.

அதிமுகவுக்கு போய்ட்டாளே நாகரிகம் மறந்துரும் போல, நேற்று (14.09.16) நடந்த ஒரு நேரலை விவாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து அதிமுக கிளைக்கு தாவிய ஞானசேகரன் ஒரு குண்டை போட்டார். ஒரு திருமண விழாவின் பொழுது வைகோ அவர்கள், ஜி.கே.வாசனிடம் உங்களுக்கு எவ்ளோ குறைவா சீட்டு கொடுத்தாலும் சரி அதிமுகவிலே கூட்டணி சேருங்கள் என்று சொன்னார் என்று. என்னை பொறுத்தவரை அவ்வாறு சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல, ஆனாலும் மக்கள் நல கூட்டணி. அதிமுகவின் B டீம் என்று உறுதியானது ஒரு அதிமுக உறுப்பினர் வாயாலே

வாய்மையே வெல்லும் என அஹிம்சை போதித்த காந்தி இருந்தால் கன்னடர்களிடம் அடி வாங்கியும் சிரித்துக்கொண்டிருந்த பெரியவரை அள்ளி அணைத்திருப்பார். ஆனால் ஒன்றை யோசியுங்கள் அந்த பெரியவரின் குடும்பம் இனி அக்கம் பக்கத்தை எப்படி எதிர்கொள்ளும். ஆக தமிழக ஊடகங்கள் அனைத்தும் சேர்ந்து அந்த பெரியவருக்கும், ஆடை கலைக்கப்பட்ட ஓட்டனருக்கும் தலா ஒரு கோடி நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். அந்த பெரியவருக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி கொடுக்க வேண்டும், அடி வாங்கியதற்கு அல்ல, அடி வாங்கிய பொழுதும் சிரித்துகொண்டே வாழும் இயெசு என தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததற்கு.

பெருமை படும் அளவுக்கு தமிழக பொதுபணி துறையோ, நீர் மேலாண்மையோ எதுவும் செய்யாமல் காவிரி நீரை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிடிக்காமல் தான் நான் அதை பற்றி எதுவும் எழுதவில்லை. காவிரி நீர் பல வருட பிரச்சனை. அதை விடுங்கள் சென்ற வருடம் சென்னை, கடலூரை பாதித்த வெள்ளத்தை கூடவா மறந்துவிட்டீர்கள். அதன் பிறகு அவசர கால நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? தமிழகத்தில் 30% ஏரி, குளங்கள் கூட இன்னும் தூர்வாரப்படவில்லையாம். மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அழகாக பயன்படுத்தி இன்னேரம் அனைத்து ஏரி, குளங்களை தூர் வாரியிருக்கலாம்.

இனியும் ஒருமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடாய் தான் மாறும்!

#குவியல்

ப்ளாக்கில் இது எனக்கு 499 வது பதிவு, எனது 500வது பதிவாக நண்பர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். உள்டப்பியிலோ, வாட்ஸ் அப்பிலோ (9003063176) மெயிலுக்கோ ( arunero@gmail.com ) அனுப்பி வைக்கலாம்

தோழிக்கு!.....

நலமாய் இருப்பதாக இருவருமே நடித்துக்கொண்டிருப்பதால் சம்பிரதாயங்கள் தவிர்த்து நேராகவே விசயத்துக்கு வந்து விடுகிறேன்.

கடித தொடர்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஹாஸ்டலில் படிக்கும் காலத்தில் ஒன்று, இரண்டு என நம்பரிட்டு அப்பாவிற்கு ஒரே சமயத்தில் 5 கடிதம் வரை எழுதுவேன். அவசர உலகின் மாற்றமா அல்லது உடனுகுடன் பதில் தந்த குறுசெய்திகளின் அழுத்தமா தெரியவில்லை முன்னை போன்ற கடிதம் எழுதுவதே அலுப்பளிக்கும் செயலாகமாறிவிட்டது.

ஒரு மனிதருக்கு சகமனிதனே சலிப்புளிக்கும் காலத்தில் செயல்கள் சலிப்படைவது இயல்பு தானே, கடமைக்கு பேசுறோம், கடமைக்கு வேலை செய்யுறோம், கடமைக்கு காதலிக்கிறோம், கடமைக்கு குடும்பம் நடத்துறோம் என்றாகிவிட்டது இயந்திர உலகில்.

கவிதா சொர்ணவள்ளி என்ற தோழர்,  தோழர் குமரகுருபரனை காதலித்தார். குமரகுருபரன் சமீபத்தில் இறந்து விட்டார். ஆனால் இன்றும் தோழர் கவிதா சொர்ணவள்ளியின் நினைவுகூறுகள்களை பார்க்கும் பொழுது உன்னை போல் யாரும் காதலிக்க முடியாது என்ற வார்த்தை எனக்கு பொருத்தமா என சந்தேகம் வருகிறது. தோழர் குமரகுருபரன் மீது பொறாமை வருகிறது.  உயிரோடுயிருக்கும் போது... சும்மா சும்மா உங்கிட்டவே பேசிகிட்டு இருப்பாங்களா? உன்னையே பார்த்துகிட்டு இருந்தா சலிப்பா இருக்காதா? நீ என்ன சின்ன குழந்தையா என் முத்தானைய பிடிச்சிகிட்டே திரியிற என்று கூறும் காதலர்கள் வாழும் மத்தியில் இறந்த ஒருவரின் காதலுயுடன் அந்த நினைவுகளுடன் வாழும் தோழர் காதலின் உச்சமாகவே உயர்ந்து நிற்கிறார்.

சோக தருணங்களை நினைத்து மன அழுத்தம் ஏற்படுத்திக்கொள்ளாதே என நண்பர்கள் சொல்வார்கள், எனக்கோ சந்தோச தருணங்களை நினைத்தால் தான் விழிதிரை நீர்படலத்தில் மறைகிறது.

தனிமையே துணையாக வாழ உன் போல் மனதிடம் என்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அதில் காயப்பட எங்கே இடம் இருக்கிறது என்ற மனதில் தான் அந்த திடம் உருவாகும்.

என் வருத்தமெல்லாம் உன் காயத்திற்கு என்னால் மருத்தளிக்க முடியாமல் போய்விட்டதே என்று தான்....

!

Blog Widget by LinkWithin