பரிணாமம்-எதிர்வினை உரையாடல்!

9:14 PM R@ng@: unga post-la oru chinna hole irukku

21 minutes
9:36 PM me: எங்கே?
  R@ng@: வளர்ச்சி என்கிற இடத்தில்
9:37 PM நான் ஒரு புது வகையான கண்ணோட்டத்தில் அதை பார்க்கிறேன் 
9:41 PM  me: எப்படி? 
 R@ng@: பெரிசா இருக்கும் பரவாயில்லையா? 
9:42 PM சரி..சொல்றேன்.. 
9:45 PM சொல்லவா? 
9:46 PM me: தாரளமா 
 R@ng@: இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அப்போ பிலிப்பைன்ஸ் தீவுகளில் போர் விமானங்கள் அவசரகதியில் தரையிறக்கப்பட்டன..
    
அங்கே குடியிருந்த ஆதிவாசி மக்கள் அவர்களை கடவுள் என்று நினைத்துகொண்டனர்..அந்த வீரர்களின் வெள்ளை தோல், அவர்கள் இதற்கு முன் பார்த்திறாத பறக்கும் விமானங்கள்...அவர்கள் கொடுத்த அறுசுவை உணவுகள் என்று..போர் முடியும் வரை அந்த மக்கள் அந்த விமானிகளையும் போர்வீரர்களையும் கடவுளாகவே பார்த்தனர்..
    
போர் முடிந்து..அவர்கள் கிளம்பி சென்ற பிறகும், அவர்கள் நினைவாய் சின்னங்கள், விமான பொம்மைகளை உருவாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டனர்..இப்போதும் அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!!
  சாப்டு வரேன் 
9:47 PM me: இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? 

38 minutes
10:26 PM R@ng@: அந்த பிலிப்பைன்ஸ் என்கிற வார்த்தைக்கு பதிலா..பூமி கிரகம் என்கிற வார்த்தைய போட்டு பாருங்க 
10:27 PM me: போட்டு 
10:28 PM R@ng@: ஆமாங்க..அப்போ புதுசா ஒரு விளக்கம் கிடைக்கும் 
 me: :)
  நாமளா சொல்லிக்க வேண்டியது தான்
  புதிய பொருள்களை அதுவும் பறக்கும் ஒன்றை பார்த்ததனால் அவர்கள் பயந்தார்கள்
  ஆதி மனிதன் நெருப்புக்கும், மின்னலுக்கும் பயந்தா மாதிரி 
10:29 PM R@ng@: :)
  அப்படி பயந்து கிடந்த மனிதர்களை எது உசுப்பிவிட்டது? 
10:30 PM me: அவைகளை கட்டுபடுத்த முடிந்த போது
  உதாரணமாக நெருப்பு 
10:31 PM R@ng@: உண்மை..ஒத்துக்கறேன்..அப்படியே இருந்தாலும்..அவர்கள் வளர்ச்சி..இப்போதைய ஆப்பிரிக்க பழங்குடிகளாகவே இருந்திருக்கணும்..எப்படி நாகரிங்களா பிரிந்தது? 
 me: சும்மா இல்லப்பா
  40000 வருடங்கள் ஆச்சு அதற்கு 
10:33 PM R@ng@: சரி..20000 வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் எகிப்தியத்தை எடுத்துக்குவோம்..அவர்களுக்கு எப்படி பிரிமிடை கட்டும் அளவுக்கு அறிவு வந்தது..(இந்த காலத்து கட்டிட வல்லுனர்களே கட்ட தயங்கும் ஒரு விஷயத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்) 
10:34 PM me: பிரமீடுக்கு வயசு 20000 ம்னு யார் சொன்னது? 
 R@ng@: நான் எகிப்தியத்தின் வயதை தான் 20000ம்முன்னு சொன்னேன்..பிரமிடை அல்ல..அல்ல.. 
10:35 PM me: அரசனுக்கு மரியாதை தர தேவைபட்ட பிரமாண்டமோ பிரமீடு
  இப்போது கட்டதயங்கும் என்ற வார்த்தை மிகை,
  இப்போதும் முடியும் 
10:37 PM R@ng@: முடியும்..அனால் அதற்கு ஆகும் பொருட்செலவும் , உழைப்பும் 120 எம்பயர்ஸ்டேட் பில்டிங்குகள் கட்ட ஆகும் செலவினங்களுக்கு சமம்
  அதான் தயங்குகிறார்கள்.. 
 me: இன்று பணம் என்ற மதிப்பு இருக்கு 
10:38 PM ஒவ்வொரு பொருளுக்கும் விலை இருக்கு
  அன்று என்ன இருந்தது!? 
 R@ng@: பொருளாதாரம் இல்ல பாஸ்.நான் பேச வரது டெக்னாலஜி 
10:39 PM me: டெக்னாலஜி என்பது துறை சார்ந்தது அல்லவா! 
10:40 PM இன்று மத்த துறையிலும் மனிதன் முன்னேறியுள்ளான்
  பிரமீடு கட்டிடக்கலையின் ஆரம்பம் 
10:41 PM R@ng@: சரி..நீங்கள் ஒரு பில்டிங் இன்சினியராக விரும்புகிறீர்கள்..அப்போ பிறந்த உடனே இன்ஜினியார்கிடுறீங்களா? 
10:42 PM me: படிப்படியாக தானப்பா பிரமீடு உருவாச்சு
  அதற்கு முன் இருந்த சிறிய கட்டிடங்கள் காலத்தால் அழிஞ்சு போச்சு
  ரங்க்ஸ் நீங்க குழந்தையா இல்ல
  நடிக்கிறிங்களா?
  பிரமீடு மட்டுமே கட்டினான் எகிப்தியன் என்று எங்கேயாவது இருக்கா
  அவன் என்ன பிரமீடுகுள்ளவா வாழ்ந்தான் 
10:46 PM R@ng@: குரங்குகள் இன்னும் ஏன் குரங்குகளாகவே இருக்கின்றன 
 me: அடடே!
  ப்ரிணாம வளர்ச்சி என்பது சொடுக்கிடும் நேரத்தில் நடப்பதில்லை
  அவைகளின் மாற்றம் நம் வாழ்நாளில் கண்டுபிடிக்க முடியாது
10:47 PM அண்ணே அனைத்தும் விரிவாய் பதிவில் வரும் அண்ணே 
 R@ng@: சொல்லிதராமல் நீங்கள் இந்த கணினியில் டைப் பண்ணி இருக்க முடியுமா? 
 me: நீங்க என்னைய கிறுக்காக்குற மாதிரி எனக்கு தெரியுது!
  வேணும்னே கலாய்க்கிறிங்க 
 R@ng@: இல்ல பாஸு
  நான் கண்டுகிட்டதை சொல்றேன்..அவ்வளவே
10:48 PM ஒரு சொல்லிதரல்..ஒரு தூண்டுகோல் தான் நம்மை ஆதிவாசிகளில் இருந்து நகர வாசிகளாக மாற்றி இருக்கிறது.. 
 me: தூண்டுகோலும் கிடையாது மண்னாங்கட்டியும் கிடையாது
10:49 PM வாழும் தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு தேவையானதை உருவாக்கி கொண்டான்! 
10:50 PM R@ng@: அப்படியே ஆகட்டும் 
 me: அப்படித்தான் ஆச்சு
  எல்லாமே காடு தான் முதலில் 
 R@ng@: everthing has some probablity 
 me: அழித்து தான் நகரம் உருவாச்சு
10:51 PM தமிழ் தமிழ் 
 R@ng@: எல்லாவற்றிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாய்ப்புகள் உண்டு 
10:52 PM me: தகுதியுள்ளது பிழைக்கும்
  வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுதல் தகுதி வாய்ந்தது 
 R@ng@: புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை
  வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
10:53 PM மனிதன் ஒரு காட்டு விலங்கு..அவனுக்கு எதோ ஒரு தூண்டுகோல் கிடைத்ததால் தான் அவன் வளர்ந்தான்..இல்லையேல் நாகரிகமாவது மண்ணாங்கட்டியாவது..இது என் வாதம் 
10:55 PM me: என்ன தூண்டுகோல்னு சொல்லுங்க
  புத்தியுள்ளன்னு ஒரு பாட்டு பாடினா அது உண்மையாயிரும்மா
  தத்துவம் என்பதே ஒரு பேத்தல்
10:56 PM அதுவும் கடவுள் மாதிரி நம்பிக்கை சார்ந்ததே 
 R@ng@: டார்வினிஸமும் அப்போ பேத்தல் தான் 
 me: இருக்கலாம்
  உரையாடல் உறுதி செய்ய அல்லவே,
  சிந்திப்போம் 
 R@ng@: ம்ம்..நான் தூண்டுகோல்னு சொல்றது 
10:57 PM me: சொல்றது? 
 R@ng@: வேற்று கிரக மனிதர்களை..(ஜீவராசிகளை)ன்னு வெச்சிக்கலாம் 
 me: :)
10:58 PM இருக்கலாம் 
 R@ng@: நான் முதன்முதலில் கூறிய அந்த பிலிப்பைன்ஸ் விஷயத்தை ஒப்பிட்டு பாருங்கள்.. 
 me: சாத்தியகூறுகளை ஆராய்ந்து பதிவிடுங்கள்
  ஒப்பீடு சாத்தியகூறு ஆகாது 
10:59 PM R@ng@: பலர், பல விதங்களின் ஆராய்ந்துவிட்டு, இன்று அவர்கள் அமெரிக்க அரசையே கேள்விகேட்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்
  இந்த சங்கதி தெரியுமா?
11:00 PM அவர்களின் கேள்வி “ஏன் இன்னும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்?” என்பதே 
 me: இருந்தே தானே மறைக்க? 
 R@ng@: பல லட்சம் பேருக்கு இவைகள் இருப்பது தெரியும்..நம் இஸ்ரோவுக்கும் கூட..!! 
11:01 PM me: :)
  அந்த பல லட்சத்தில் நீங்களும் ஒருவரா? 
 R@ng@: வாய்ப்புகள் அடிப்படையில் ஏற்றுகொள்கிறேன்
11:03 PM என் கருத்து படி பார்த்தால் நாம் வணங்குவது வேற்றுகிரக மனிதர்களையொ என்று கூட தோன்றுகிறது? 
 me: சாத்தியகூறுகள் என்னன்னா சொன்னா நானும் தெரிஞ்சுகுவேன்
  பல லட்சம் பேர் நம்புறாங்ககிறதுக்காக நான் எந்த மதத்தையும் ஏற்கலையே
  கடவுளுக்கு என்ன சாத்தியம்னு கேள்வி கேக்குறேனே
  நீங்களாவது சொல்லுங்க 
11:04 PM R@ng@: உங்களை சுற்றி லட்சம் ஆடுகள் நின்னுகிட்டு இருந்தா நீங்க சிங்கம் இல்லைன்னு ஆகிடுமா?
  கடவுள் இப்போ பிரச்சனை இல்லை..பிரச்சனை Origin of Human Culture 
11:05 PM me: அதற்கு தான் சாத்தியகூறுகள் கேட்கிறேன்
  சரியா சொன்னா ஏத்துக்க போறேன் 
11:06 PM R@ng@: சாத்தியக்கூறை சொல்லவா? இல்லை ஒரு விஷயத்தை தேடி பாக்குறீங்களா?
  How Nasca Lines used? னு தேடி பாருங்க
  கூகுள் பண்ணவும் 
 me: உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்
  தமிழில் சொல்லுங்க
 R@ng@: நாஸ்கா லைன்கள் என்பது தென் ஆப்பிரிக்க கண்டத்தில் அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள் 
11:08 PM me: அவை மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் தான் 
11:09 PM R@ng@: ஆமாம்
  ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்..அவகளை 12000 அடி உயரத்தில் பறந்த படி பார்த்தால்தான் முழுமையாக தெரியும் 
11:10 PM me: ஜுஜுபி
  தாரளமாக செய்யலாம் 
 R@ng@: இப்போ செய்யலாம்..நீங்க பறந்த படி பார்க்கலாம் 
11:11 PM me: இடம் வாங்கி கொடுங்க 
 R@ng@: ஆனால் அப்போது 3500 வருடங்களுக்கு எப்படி செய்திருக்க முடியும்
  ஏன் செய்ய வேண்டும்? 
 me: அப்போ மனிதன் முட்டாள்னு யார் சொன்னது
11:12 PM அவனுக்கு பிடிச்சிருக்கு செஞ்சிருக்கான் 
 R@ng@: உஸ்ஸப்பா..ஏன் வானத்துல இருந்து பாக்குற மாதிரி செஞ்சிருக்கான்? 
 me: மேலும் அவை 3500 வருடங்கள் பழமையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை 
 R@ng@: இருக்கு.. 
11:13 PM me: எங்கே? 
  பாரும் 
11:15 PM me: 2,000 years ago
  நாளை பேசலாம் 
 R@ng@: ஓக்கே  ************************** உலகத்திற்கெல்லாம் ஒரே கடவுள்னு ஒரு கும்பல், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்னு ஒரு கும்பல், நீ தான் கடவுள்னு ஒரு கும்பல், கடவுளே இல்லைன்னு ஒரு கும்பல், கடவுள் என்பது வேற்றுகிரகவாசிகள்னு இப்போ புதுசா!

ஆனா நல்லாயிருக்கு!
சாத்தியகூறுகளை ஆராய்வோம்!


****************************
சில எழுத்து பிழைகளை(நான் செய்தது) மட்டும் மாற்றியிருக்கிறேன் ரங்க்ஸ், நல்லொரு உரையாடலாக அமைந்தது, நண்பர்களின் கருத்துகளையும் கேட்போம்!

பரிணாமம் - முன்னுரை

பரிணாம வளர்ச்சி பற்றி பேசினாலே நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது! இது ஆத்திகவாதிகள் மட்டும் கேட்கும் கேள்வியல்ல, கடவுள் மறுப்பாளர்களும் என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், தவறில்லை, நமக்கு ஆரம்பம் எல்லாமே கேள்வி ஞானம் தானே, அதன் பின் தொடர்ச்சியாக அதை பற்றி அறிய முயற்சி செய்தால் தானே உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகளை அறியமுடியும்! அதை செய்தவன் அறிகிறான், வேத புத்தகங்களை மட்டும் படிப்பவன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறான்!

இந்த தொடரை எழுத எனக்கு படிப்பறிவு தகுதியில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் பரிணாமம் பற்றி பேச, எழுத படிப்பறிவு தேவையில்லை, சுற்றுசூழலை ஊன்றி கவனித்தாலே போதுமானது! நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பரிணாமத்தின் சுவடுகள் சிதறி கிடக்கின்றன, அலட்சியம் செய்வது மதவாதிகளின் குணம், அது ஏன், எவ்வாறு, எப்படி என்று கேள்வி கேட்பது பகுத்தறிவாளனின் குணம்!, அதையும் கூட சொன்னவுடன் நம்பவேண்டியதில்லை, அதற்க்குண்டான சாத்தியகூறுகளை ஆராயும் தனிபட்ட உரிமை தனியொரு மனிதனுக்கும் இருக்கிறது! சிந்திக்க தான் அந்த மூளை மறுக்கிறது!

பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு!
பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!ஒருவேளை திருவள்ளுவர் இன்று தமிழகம் வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வோம்! அவரால் இன்றிருக்கும் தமிழை படிக்க முடியுமா!? இது சத்தியமாக தமிழில்லை வேறு எதோ மொழி என்பார், அதற்கு காரணம் என்ன!? மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!

தூரத்தில் இருக்கும் எதிரியையோ, உணவையோ தாக்க முதன் முதலில் மனிதன் கல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தினான், அதை விட சரியான இலக்கை தாக்க ஈட்டி, அதைவிட வேகமாக தாக்க வில், பின் துப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி, ஏவுகணை இவையெல்லாம் என்ன காட்டுகிறது! கல் என்னும் ஆயுதம் சிறப்பு பெற்று பயன்படுத்த இலகுவான ஆயுதமாக மாறி ஆயுத பரிணாமத்தின் வளர்ச்சியை காட்டுகிறது!கம்பியூட்டர் இல்லாமால் இன்று மளிகைகடை கூட இல்லை! ஆனால் ஆரம்பகால கம்பியூட்டரை வைக்கவே தனியாக ஒரு அறை வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே! இன்று அதன் வளர்ச்சியை கண் முன்னே பார்த்து கொண்டிருக்கிறோம்! நமது சட்டைப்பைக்குள் அடங்கும் கைப்பேசி இன்று ஒரு கணிணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, அலைபேசியின் பரிணாம வளர்ச்சியும் நாம் அறிந்ததே! இவை தான் உள்ளது சிறத்தல் என்ற பரிணாம வளர்ச்சி!


சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் தந்தை என அழைக்கபடுகிறார், அவர் பரிணாம கருத்துகளை முதன்முதல் வெளிட்டதால் அந்த பெயர், மேலும் பலர் நினைத்து கொண்டிருப்பது போல் அவர் மனிதனின் பரிணாமத்தை பற்றி மட்டுமே ஆராயவில்லை, பரிணாமம் என்ற கண்டுபிடிப்பே அவருடய வாழ்வில் தற்செயலாக நடந்தது எனவும் சொல்லலாம்! ஒவ்வோரு தீவுகளில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வடிவ வேற்றுமைகளும், குண வேற்றுமைகளும் இருந்ததை கண்டு ஆராய்ந்து தான் அவர் புத்தகம் எழுதவே ஆரம்பித்தார்! அவருடய காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தில் அவரால் சொல்ல முடிந்தது மனிதனுக்கும், குரங்குக்கும் சம்பந்தம் உள்ளது, மனிதன் குரங்கின் வம்சாவழியாக இருக்கலாம் என்று, ஆனால் தற்போது பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன! இன்றைய கண்டுபிடிப்பில் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று ஒரே மாதிரி செல்வதல்ல, அது ஒரு மரத்தின் கிளைகளை போல ஒரே குடும்பம் பல வடிவங்களை பெற்றது கண்டு பிடித்திருக்கிறார்கள்!

அவற்றில் உள்ள உண்மையின் சாத்தியகூறுகளை அலசுவோம், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளையும் , சிந்தனைகளையும் சொல்ல உரிமையுண்டு! வாதம் என்பது சண்டையிட அல்ல, தெளிவு பெற மட்டுமே! அது பற்றி நண்பர்கள் அறிந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்! சுட்டி கொடுத்தாலும் சரி!

மத தீவிரவாதம்!

தமிழர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள பலபேருக்கு தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள்!ஆனால் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது! ரத்தம் தோய்ந்த தீவிரவாதத்தின் வரலாறு பூமியின் இரண்டு பெரிய மதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது, அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே மதத்தின் பெயரால் மாற்று மதத்தவர் கூண்டோடு அழிக்கப்பட்டனர், அந்த மதத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கபட்டுவிட்டது! அந்த மத தீவிரவாதத்தின் தலைவன் கூன்பாண்டியன் என்ற இந்து, கழுவிலேற்றி கொல்லபட்ட 800 மாற்று மதத்தவர்கள் சமணர்கள்!
மதத்தை பற்றி கேள்வி எழுப்பினால் மதவாதிகளின் பதில், கீதையை படித்து தெளிவுருங்கள், குரானை படித்து தெளிவுருங்கள்! மாவோகானில் குண்டு வைத்த பெண் சாமியார் கீதையை படிக்காமலா இருந்திருப்பார், இல்லாமலா அவரை சாமியாராக ஏற்று கொண்டார்கள், டுவின் டவரில் இடித்த இஸ்லாமியன் குரானை படிக்காமலா இருந்திருப்பான்! இல்லாமலா அவனை தேர்வு செய்திருப்பார்கள்! வேதபுத்தகத்தில் நீங்கள் காட்டும் தெளிவுக்கு சமமாக குழப்பத்தை என்னாலும் காட்டமுடியும்!எவனொருவன் என் மதம் அமைதியே உருவானது என்கிறானோ அவனது வீட்டில் வெடிமருந்துகள் சேமித்து வைத்திருக்கிறான் என சந்தேகம் உருவாகிறது, எவனொருவன் என் மதத்தில் தீவிரவாதம் எனும் புற்றுநோய் பரவி கொண்டிருக்கிறது, என் சகோதர மக்கள் நிலையை கண்டு நான் வருந்துகிறேன் என்கிறானோ அவனுக்குள் மனிதம் இருக்கிறது, மதம் அவன் கண்களை மூடவில்லை என காட்டுகிறது, அவனால் ஒருநாள் மதம் எனும் பேய் ஒழிந்து மனிதம் தழைக்கும் என நம்பிக்கை பிறக்கும்! ஆனால் யார் அவ்வாறு சொல்வது, மாட்டிக்காத வரைக்கும் அவன் என் மதம், மாட்டிக்கிட்டால் அவன் குரானை, கீதையை சரியாக படிக்கவில்லை என பல்டி அடிப்பது!நான் உன்னிடதில் சமாதானம் செய்யவரவில்லை!, தாய்க்கும்,சேய்க்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும் பிரிவினை உருவாக்கவே வந்தேன் என பைபிள் சொல்கிறது! நான் யூதர்களை காக்கவே வந்தேன் எனும் இயேசுவின் வசனம், கடவுள் ஒரு இனத்தை மட்டுமே காப்பார், மற்றவர்களையெல்லாம் கைவிட்டு விடுவார் எனும் அவநம்பிக்கையை விதைக்கிறது! உன் அண்டை அயலாரையும் நேசி என்ற அதே குரானில் தான், இறுதிநாளுக்கு முன் கடவுள்(அல்லா) நம்பிக்கையாளருக்கும், நம்பிக்கையல்லாதவருக்கு யுத்தம் மூளலாம் என்றும் இருக்கிறது!, நம்பிக்கையற்றவனால் நீ கொல்லப்பட்டால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் என சொல்லப்படுவதாலேயே அவன் தற்கொலை படை தீவிரவாதியாகிறான். சத்திரியனுக்கு தொழில் தர்மம் கொலை செய்வது, நீ அவனை கொல்லாவிட்டால் அவன் உன்னை கொல்லுவான் என போதிக்கிறது கீதை, எங்கே இருக்கிறது அமைதி!

விவசாயமே வாழ்வின் ஆதாரம் அனைவரும் கிராமத்து ஓடி சென்று விவசாயம் பாருங்கள் என்ற சீனபுரட்சியும் ஒரு வகையில் தீவிரவாதமே, அந்த சம்பவத்தால் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பார்கள் என்கிறது வரலாறு! ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், ஹிட்லரும், ராஜபக்‌ஷேயும் செய்தது தீவிரவாதமே! உன்னால் தானே என் விடுதலை பறிபோயிற்று உன்னை பழிவாங்கினால் என் மனசு ஆறும் என்று ராஜிவ்காந்தியை படுகொலை செய்தது தீவிரவாதமே! மக்களை காக்கவே படையை அனுப்புகிறேன் என்று எண்ணைய் வளத்தை திருடிய புஷ்ஷின் செயலும் தீவிரவாதமே, அவன் என்னை அடிப்பான் நான் மட்டும் வாங்கிகுனுமா என்று தான் மதசண்டையின் ஆரம்பம் தொடங்குகிறது! விட்டுகொடுத்தல் எனும் சொல் மதசார்பை மீறி தன் கெளரவ பிரச்சனையாக மாறிவிட்டது! எங்கிருந்து வரும் அமைதி!


நான் எந்த மதத்தை பற்றியோ, கடவுளை பற்றியோ எழுதினாலும் ஒரே லேபிள் “இறைநம்பிக்கை” மட்டுமே, ஆரம்பத்திலிருந்தே அதே தான், எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்களுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சிகிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத்திற்கு எள்ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!

அமெரிக்காவின் அடக்குமுறைகள் இங்கே பட்டியிலபட்டிருக்கிறது

இந்துத்துவா தீவிரவாதம் இங்கே!

நான் ஏன் நாத்திகனானேன்!

நான் “மதுரை கிழக்கு ஆரம்ப ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்” அப்போது ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்! அந்த பள்ளியில் தனித்தனி அறைகள் கிடையாது! செவ்வகமான அந்த பெரிய அறையில் ஐந்து கரும்பலகைகள், என்னுடய வகுப்பில் மொத்தமே பனிரெண்டு பேர் தான்! காட்டுகத்தலாக அந்த அறை முழுவதும் மாணவர்கள், மாணவயியரும் படிப்பது நிரம்பியிருக்கும்! மதியம் அனைவருக்கும் சத்துணவு, ஒன்றிரண்டு வசதியான மாணவர்களை தவிர அனைவருமே சத்துணவு தான்! அதில் நானும் ஒருவன்!.

எனக்கு நண்பர்கள் அனைத்து வகுப்பிலும் இருந்தனர்! மதிய விளையாட்டு, கரும்பு காட்டுக்கு செல்வது, குருவி பிடிப்பது, ஓணான் அடிப்பது, மீன் பிடிப்பது, கிணற்றில் குளிப்பது என எல்லா தரப்பிலும் நண்பர்கள்! ஒருமுறை ஒரு நண்பணின் தட்டில் கூடவே நானும் அமர்ந்து சாப்பிட்டேன்! என் தங்கை அதை என் வீட்டில் சொல்லிவிட்டாள், வீட்டில் இனிமேல் அவன் கூட அப்படி சாப்பிடக்கூடாது என்றார்கள், ஏன் என்று கேட்டதற்கு அவன் வேறு சாதி என்றார்கள், எனக்கு நண்பனாக இருக்க அவனுக்கு சாதி முக்கியமில்லை! நான் அப்படி தான் சாப்பிடுவேன் என்றேன்! அங்கே சாதி பற்றிய என்னுடய கேள்விகள் ஆரம்பமானது! இன்று வரை நான் என் குழந்தைக்கு பள்ளியில் சாதி சான்றிதழ் தரவில்லை!

முதல் இரண்டு வகுப்புகள், ஜெய்ஹிந்துபுரம் முருகன் பள்ளி, மூன்றாவது சிவகங்கை, நான்காவது பசுமலையில் விடுதியில், ஐந்தாவது தான் கருப்பாயூரணியில்! யாரும் சமாளிக்க முடியாத உங்கள் பாசையில் முடக்குவாதம் பிடித்தவனாக தான் திரிந்தேன்! ஆறாவது படிக்கும் போது தான் ஈரோடு வந்தேன்! ஒன்பதாவது வரை தான் படித்தேன்! ஏட்டு பாடம் எனக்கு திருப்தியளிக்கவில்லையா!? அல்லது ஊர்சுற்றி பழகிய எனக்கு ஒரே இடத்தில் இருக்கப்பிடிக்க வில்லையா!? என்பதெல்லாம் எனக்கு தெரியாது! ஆனால் படிப்பு ஏறவில்லை என்று மட்டும் சொல்லமுடியாது! ஐந்தாவிதிலுருந்து ஒன்பதாவது வரை நான் தான் முதல் மாணவனாக இருந்தேன்!

எனது கேள்விகளுக்கு ”சாதாரணமாக” யாரும் பதில் சொல்லி தப்பிக்க முடியாது! நான் கேட்டுகொண்டே தான் இருப்பேன்! நண்பர்களின் கேள்விகளுக்கும் விடை தேடி கொண்டே தான் இருந்தேன்! கடவுள் என்ற ஒன்றை மறுப்பதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது!?
இந்து மதத்தை அறிய விவேகானந்தர் வரலாறு படித்தேன், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வரலாறு படித்தேன்,, சாரதா அம்மையார் வரலாறு படித்தேன்! ஒஷோ தத்துவங்கள் படித்தேன், தம்மபதம் படித்தேன், பைபிள் படித்தேன், குரான் படித்தேன்! ஆனால் எல்லாவற்றிலும் கடவுள் என்ற சொல் பயன்படுகிறதே தவிர அவை எல்லா இடங்களிலும் ஒரு ”பொருளை” போலத்தான் பயன்படுகிறது!

கடவுள் இல்லாமல் இந்த உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்வியோடு நிறுத்திவிட்டால் ”நாம் கடவுள்” என்ற சொல்லாடு நம் தேடும் அறிவையும் நிறுத்திவிடுவோம்! அதனால் அதனையும் தெரிந்து கொள்ள என்னால் முடிந்த முயற்சிகள் செய்தேன்! பரிணாம வளர்ச்சியின் அடையாளங்கள் நம் கண் முன்னால் பல சான்றுகள் விட்டுப்போயிருப்பதை அறிந்தேன். அறிந்து கொண்டிருக்கிறேன், இன்னும் அறிவேன்! எத்தனையோ உயிரினங்கள் நம்மை சுற்றி, அது தான் வாழ தேவையானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறது! மனிதன் மட்டுமே பரிணாம வளர்ச்சியில் தற்போதைய இறுதிநிலையில் இருக்கிறான்! ஆனால் இதுவே இறுதியல்ல!


கரடி இனங்களில் அனைத்துமே மாமிசம் உண்ணும், அதற்காக அதற்கு கோரை பற்கள் உள்ளன! ஆனால் ”பாண்டாகரடி” எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள மரத்தில் வாழ பழகி இன்று மூங்கில் குருத்தை மட்டும் சாப்பிட்டு வளர்கிறது, பரிணாம வளர்ச்சியின் எச்சமாக அவற்றிற்கு இன்றும் கோரை பற்கள் உள்ளன! இன்னும் சில வருடங்களில் அது மறைந்துவிடும்! பறவைகள் அனைத்தும் முட்டையிடும், முட்டையிட காரணம் அதிக குட்டிகள் உடலுக்குள் வளர ஏற்ற உடல்வாகு இல்லை, அதனால் முட்டையாக வெளியேற்றி விட்டால் அது வெளியே வளர்ந்து கொள்ளும்! ஆனால் ப்ளாட்டிபஸ் என்ற பறவை முட்டையிட்டு பால் கொடுக்கும்! அதாவது அது பறவையினத்திலிருது நம் கண் முன்னே பாலூட்டியாக மாறி கொண்டிருக்கிறது!


இன்னும் எத்தனையோ அடுக்கி கொண்டு போக முடியும்!(தனிப்பதிவாக தொடர் எழுதுகிறேன்) கடவுள் என்ற பதமே, விஞ்ஞானத்தின் சகோதரன் என்று மெய்ஞானம் என்ற பெயரில் உன்னில் கடவுளை தேடு என்று மாறி கொண்டிருக்கிறது! ஆனால் அதித நம்பிக்கை உள்ள மதவாதிகள், தம்மையும் வளர்த்து கொள்ளாலாமல் தன் சத்ததியினரையும் வளர விடாமல் சேனை கட்டிய குதிரைகளாகவே உள்ளனர்! அவை மாற வேண்டும், மண்ணில் மனிதம் நிலைக்க வேண்டும் என்பதற்காக நான் மதவாதிகளிடம் சண்டை போட்டு கொண்டே தான் இருப்பேன்! நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!


**********************

சென்ற பதிவில் கடவுளின் போர் வீரர்கள் எவ்வாறு எதிர்வினை அளிப்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள ஒருநாள் அனானி பின்னூட்டம் ஒன்று அழிக்காமல் வைக்கப்பட்டிருந்தது! நண்பர்களுக்கு மனம் சங்கடபட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்! கடைசி வரை துணை நிற்பேன் என்று உறுதி கூறிய நண்பர்களுக்கும், தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்த நண்பர்களுக்கும் நன்றி! அந்த அனானி சக ப்ளாக்கர் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! விரைவில் நரியின் சாயம் வெளுக்கும்!

குவியல்!..(19.02.10)

சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை(20.02.10) நண்பர் பரிசலின் புத்தகமும், யூத்து கேபிள் சங்கர் புத்தகம் வெளியிடப்பட்டது! தவிர்க்கமுடியாத சில காரணங்களால் நேரில் செல்ல முடியவில்லை!
வாழ்த்த வயதில்லாத காரணத்தால் வணங்கி கொள்ளலாம்! என்னை பொறுத்தவரை இது அவர்களுக்கு ரொம்ப தாமதமான அங்கீகாரம்! பரிசல் பல வருடங்களுக்கு முன்னரே வெகுஜன பத்திரிக்கையில் கதைகள் எழுதியவர்! தொடர்ந்திருந்தால் இன்னேரம் ஆந்திரா பக்கமோ, கர்நாடகா பக்கமோ பிரபல எழுத்தாளராகி இணையத்தில் எதாவது ஒரு சாமியாருக்கு கொ.ப.செ வேலை பார்த்திருக்ககூடும்! கேபிளும் சாதாரணமானவர் அல்ல! சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தெரியும், ஒவ்வொரு சீனும் ஒரு சிறுகதை என்று! அதற்கேற்றார்போல் அவரது கதைகள் நல்ல முதிர்ச்சியாய் இருப்பதாக நண்பர்கள் சொல்ல கேட்டேன்! மேலும் பல புத்தகங்கள் எழுதி தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் எனதே என் வேண்டுகோள்!


****************


தோழர் அதிஷாவின் திருமணம் நேற்று(18.02.10) கோவையில் நடந்தது, நானும் எனது பாஸும் போயிருந்தோம்! ஏற்கனவே அங்கே சஞ்சய் அங்கிள், வடகரை வேலன் அண்னாச்சி, தோழர் லக்கி, தோழர் ”வெள்ளிநிலா” ஷர்புதீன் மேடையை கலகலப்பாக்கி கொண்டிருந்தார்கள்!(நாங்கள் உன்ளே நுழையும் நேரம் போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்), நாங்களும் போட்டோ எடுத்து கொண்டோம்! பிறகு சாப்பாடு! சாம்பார், வத்தகுழம்பு, ரசம், தயிர் என்று அமர்களமாக இருந்தது! அனுமதி அளித்திருந்தால் கொஞ்சம் வத்தகுழம்பு பார்சல் பண்ணியிருப்பேன்! பிறகு வெகு நேரம் தோழர்களுடன் பேசி கொண்டிருதோம்! மண்டபத்திலிருந்து கிளம்பி சஞ்சய் அங்கிள் அறைக்கு சென்றோம்!


மனிதர் பெரிய புத்தக பிரியராக இருக்கிறார்!, சமையல் செய்வது எப்படி போன்ற ஏராளமான அறிவியல் தற்காப்பு கலைகள் புத்தகங்கள் நிறைய உள்ளன!, பி.டி விதைகள் பற்றி பேசிய போது, அது தவறில்லை என்றார்! அவர் பி.டி. பருத்தி விதைகள் உபயோகிக்கிறாராம்! பருத்தி சாப்பிடும் பொருளாக இருந்தால் என்னவாகும் என்று அவருக்கு தெரியுமா, தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை!, தோழர் லக்கியுடனும் வெகு நேரம் அரசியல் பேசி கொண்டிருந்தோம்!(எல்லா அரசியலும் தான்) மிக அருமையான சந்திப்பாக இருந்தது!
நிறைய படங்களை தோழர் ஷர்புதீன் வெளியிட்டிருக்கிறார், பார்த்து கொள்ளுங்கள்!


*************************

google buzz என்பது பயங்கர தொந்தரவாக இருந்தது எனக்கு! நல்லவேளையாக நண்பர் நட்புடன் ஜமால் காப்பாற்றினார், உங்களுக்கும் தொந்தரவாக இருந்தால் இதை பின்பற்றி காத்து கொள்ளலாம்!, எதுவுமே புரியாத போது என்ன தான் அதை வைத்து கொண்டு செய்வது, நீங்களே சொல்லுங்கள்!
**********************

the village!


மனோஜ் நைட் சியாமளனின் படம்! இவரது படங்கள் அனைத்துமே அமானுஷ்ய தன்மை நிறைந்த படங்கள் தான்!, ஆனால் இந்த படம் தமிழில் வந்த விசில் என்ற படம் மாதிரியான கதை! urban legent என்ற படமும் அதே மாதிரி தானாம்! நிச்சயமாக தமிழை பார்த்து மனோஜ் காப்பியடித்திருக்க வாய்ப்பில்லை! மனோஜின் திரைக்கதை வடிவம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இந்த படமும் திரைக்கதையில் மீண்டும் நிறுபித்திருக்கிறது!

புனைக்கதைகள் காலங்காலமாக உண்டு, அதில் வரும் சில சம்பவங்கள் சில நடந்து விட்டால் அந்த புனைகதையே உண்மையாக திரிக்கப்படும்! இறுதிநாள் எனப்படும் மதநம்பிக்கையாளர்களின் கடைசிநாள், எப்போதெல்லாம் எரிமலை வெடித்து பூகம் வருகிறதோ அப்போதெல்லாம், இதோ இறுதிநாள் அருகில் வந்து விட்டது என்று புருடா விடவைக்கும்! பல கோடி ஆண்டுகளாக எரிமலைகள் வெடித்து கொண்டு தான் இருக்கிறது, பூகம்பம் வந்து கொண்டு தான் இருக்கிறது! ஆனால் மதவாதிகள் தான் நம்ப தயாராய் இல்லை! சரி வாங்க கதைக்கு போவோம்!


ஒரு கிராமத்தில் பல வருடங்களாக ஒரு புனை கதை இருக்கிறது! அந்த கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் ஒரு விலங்கு போன்று ஒன்று உள்ளது! காட்டிற்க்குள் மனிதர்கள் போனால் கொன்று விடும்! அவ்வபோது கிராமத்திற்குள் வந்து எச்சரிக்கை விடுக்கும் என்பது கதை! அதில் சில நடப்பது போல் தெரிய கிராம மக்கள் அங்கிருந்து நகராமல் அங்கேயே வாழ பழகி விடுகிறார்கள், மின்சார வசதி கூட இல்லாமல், நகர தொடர்பு இல்லாமல்! ஒரு இளைஞன் மட்டும் நகரத்து செல்ல அனுமதி கேட்கிறான், மறுக்கப்படுகிறது!, சில நாட்களில் அவனுக்கும், அதே ஊரை சேர்ந்த பார்வையிழந்த ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது! அந்த பெண்னை ஏற்கனவே விரும்பிய ஒருவன், அந்த இளைஞனை கத்தியால் குத்திவிடுகிறான்!

இளைஞனை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, ஆனால் பார்வையிழந்த பெண் தான் நகரத்துக்கு சென்று மருத்து வாங்கி வருவதாக கூறுகிறாள்! நீண்ட வாக்குவாதத்துக்கு பின் ஊர் மக்களால் அனுப்பி வைக்கப்படுகிறாள், வழியில் அந்த மிருகத்தையும் சந்திக்கிறாள்! பிறகு என்ன ஆனாள், இளைஞன் பிழைத்தானா என்பதையும், அந்த மிருகன் என்ன? அல்லது யார் என்பதையும் ஸ்டார் மூவீஸில் படம் போடும் போது பார்த்து கொள்ளுங்கள்!
இன்று ஸ்டார் மூவிஸில் என்ன படம் என அறிய!

********************

ஏ.ஜோக்!


ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!

அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!

என்ன என்றால் பாதிரியார்!

நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா என்பதே அது என்கிறாள்!

என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் ஜெபித்து உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்!

கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா என்றது!

உடனே பாதரியாரின் கிளி ஒன்று,
சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

சமீபகாலமாக ஆன்லைன் தொழில், மல்டி லெவல் மார்கெட்டிங், என்று பல நூதன முறைகளில் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் மதுரையில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!

சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என்றான்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத்தமாக ஒரு பெரிய தொகையை லவட்டி கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வருமானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசை பட்டு பணத்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளியே சொல்லமுடியாதுன்னு சொல்வாங்கள்ள அந்த மாதிரி இருக்கக்கூடாது!

நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!


உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்

ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

பத்தாயிரத்துக்கு நல்ல பங்காக பத்து வாங்கினால் அடுத்த வருடம் இருபதாயிரத்துக்கு இருபது வாங்கலாம்! கமாடிடியில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்! பணம் இரட்டிப்பாக ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக நிதானமாக சரியான இடத்தில் வாங்கலாம்! இதை பகுதி நேரமாக ல்லது மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே செய்வதால் உங்களுடய வழக்கமான பணிகளுக்கு இடையூறு வராது!உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்தையே நாடலாம்! அல்லது என்னையும்(9994500540) தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்! நேர்மையான வழியில் சம்பாரித்தால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது!

புலிகளை காப்போம்! (1411)

புலி தான் இந்தியாவின் தேசிய விலங்கு! ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமாகவே இருந்தது, இன்று நம் கண் முன்னே அந்த இனம் அழித்து கொண்டிருக்கிறது!, ஒரு இனம் அழிவிலிருந்து மீண்டும் தலைத்தோங்க வேண்டுமானால் இந்த இனத்தில் குறைந்த பட்சம் 5000 இனங்களாவது இருக்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது, ஆனால் இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே! உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் அருகில் இருக்கிறது! கிட்டதட்ட ஒரு இனம் அழியும் தருவாயில் இருக்கிறது, அதற்கு முன்முதற் காரணம் மனிதனேயன்றி வேறு யாருமில்லை!
பண்டைய காலத்தில் தன்னை பெரும் வீரனாக காட்டிகொள்ள நினைத்த நிலபிரபுக்கள் பெரும்படையோடு!? சென்று புலிகளை வேட்டையாடினர்! தனியா போயிருந்தா புலி அவனை வேட்டையாடியிருக்கும், பின் வெள்ளைகாரர்கள் ஆட்சியில் வேட்டை ஒரு பொழுது போக்காவே இருந்தது! சனியம் புடிச்ச வெள்ளைகார துரைகள், ”நான் இத்தனை புலி சுட்டேன்”னு லண்டனில் மார்தட்டி கொள்வார்களாம்! அவர்களோடு கம்முனாட்டி சாமியார்களும் புலித்தோலுக்காக வேட்டையாடி அதன் மீது அமர்ந்தனர்! அப்போ தான் அவர்களது சீட்டு அமுக்கிகிட்டு இருக்கும் போல! அந்த கபோதிகளை எல்லாம் புலிகளுக்கே இரையாக போட்டிருக்கனும்! தப்பிச்சிகிட்டானுங்க!


நகரமயமாக்கல் என்னும் கொடூரமும் வன விலங்குகள் அனைத்தும் இறக்க காரணம்! இன்னும் 50 வருடங்களில் இந்தியாவில் 50% காடுகள் காணாமல் போயிருக்கும், இந்தியா 150 வருடங்களில் பாதி பாலைவனமாக மாறியிருக்கும்! நமது பேரக்குழந்தைகள் மண்ணை தின்று நாட்கணக்கில் வாழ்ந்து மடிவார்கள், அரசியல் நரிகள் முதலாளிகள் போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிடும்! நாம் எதாவது இலவசமா கொடுப்பானுங்களான்னு நாக்கை தொங்கபோட்டுகிட்டு காத்து கொண்டு இருப்போம்!

ஊட்டியில் இருக்கும் காட்டேஜுகளை முழுதுவமாக் அகற்ற சட்டம் போட்டிருப்பதாக கேள்விபட்டேன்! அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி, அப்படியே இந்தியா முழுவதும் இருக்கும் காடுகளை பாதுகாக்க அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் வன விலங்குளும் தப்பிக்கும், மனிதமும் பிழைக்கும்!


saveourtigers என்ற வலைத்தளம் மூலம் சமூக அமைப்பு ஒன்று இந்த கருத்துகளை நாடெங்கும் பரப்ப கேட்டிருக்கிறது! நண்பர்களும் தங்களால் முடிந்தததை ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்!


இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?

புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில தகவல்


புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் தமிழ் தகவல்

பயணங்கள் முடிவதில்லை!

சென்ற சனிக்கிழமை அலுவல் நிமித்தமாக நானும் எனது பாஸும் நாகர்கோவில், மார்தாண்டம் சென்றோம்! அந்த பக்கத்தில் பதிவர்கள் யாரும் தெரியாததால், யாரையும் சந்திக்க முடியவில்லை, நல்லபுள்ளையாக வேலையை மட்டும் பார்க்க முடிந்தது, காரணம் அன்று வள்ளலார் தினம்!

நாகர்கோவிலில் பேருந்தில் ஏறி அமர்ந்தோம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கார்த்திக், நக்மா நடித்து வெளிவந்த ”பிஸ்தா” படம் ஒடியது, ஏற்கனவே பார்த்தப்படம் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத நகைச்சுவை, இங்கே ஒரு செய்தி, நான் பெரும்பாலும் இப்படி பேருந்துகளில் பிட்டு(பாதி)படம் பார்த்து தான் டி.வி.டி வாங்கி முழுப்படம் பார்க்கிறேன்!

மார்த்தாண்டத்தில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே ”முபாரக்” என்ற அசைவ உணவு விடுதி இருக்கிறது, காலை எட்டு மணிக்கே மூணு ஆட்டை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், சுவையும் குறைவில்லாமல் இருந்தது, அவ்வழியே செல்பவர்கள் அங்கே ருசி பார்த்து விட்டு செல்லலாம்! பிறகு ஒரு ஐந்து கிலோ மீட்டர் நடை பயணமாக ஊரை சுற்றினோம், ஊரின் மையத்தை தவிர மற்ற இடங்களில் இன்னும் பச்சையம் கற்பழிக்கப்படாமல் இருக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியவில்லை!

மதியமே கிளம்பி மீண்டும் நாகர்கோவில், அதிசயமாக பார்வதி என்ற பெரிய விடுதியில் தாக சாந்தி கிடைத்தது, பின் பிரபு என்ற அசைவ உணவி விடுதியில் சாப்பாடு, விலை கொஞ்சம் அதிகம் தான், சுவை நன்றாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருப்பதால் ருசித்து சாப்பிட முடியாத குறை உண்டு, நாகர்கோவில் செல்பவர்கள் அங்கே கை நனைத்து செல்லலாம், அதற்கு முன் விலை பட்டியலையும் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள், மாவாட்டும் வேலை மிஞ்சும்!


அதன் பின் செத்தவிளை என்ற இடத்தில் இருக்கும் கடற்கரைக்கு சென்றோம், புகைப்பட கருவி எடுத்து செல்லவில்லை, அதனால் இந்த தடவை எழுத்து பதிவு மட்டுமே! அழகான கடற்கரை!. சுற்றுலா செல்பவர்கள் அமைதியாக கடலை ரசிக்க சிறந்த இடம்!
இனிமேல் தான் இருக்கு மேட்டரே! அனைத்தும் முடிந்து பழைய பேருந்து நிலையத்தில் ரயில்நிலையம் போகும் வண்டிக்காக நின்று கொண்டிருந்தோம், 36ஏ வண்டி கடக்கும் போது, ரொம்ப நேரமா அப்போ கிடைக்கல இப்போ எத்தனை போகுது பாருங்க செத்தவிளைக்குன்னு பாஸிடம் சொல்லி கொண்டிருந்தேன், பின்னால் இருந்து ஒரு பெரியவர் இது ரயில்நிலையம் போகும் வண்டியா என கேட்டார்!(அவருக்கு தமிழ் தெரியாது, நடந்த உரையாடல்கள் அனைத்து அரைகுறை ஆங்கிலத்திலேயே நடந்தது!)

கவனிக்க அவர் தான் வந்து கேட்டார், அதற்கு முன் நாங்களும் பலரிடம் விசாரித்து கொண்டிருந்தோம், அதையும் அவர் கவனித்து கொண்டு தான் இருந்தார், நாங்களும் அங்கே தான் போகிறோம் வரும் போது சொல்கிறோம் என்று அமைதியாக கவனிக்க ஆரம்பித்தோம், வண்டி வரவும் பாஸ் முன்னாடி சென்றார், அந்த பெரியவரிடம் ஒரு பெரிய பையும், ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது, வண்டிக்கு அருகில் சென்ற பாஸ் “அந்த கேனையாவது எடுங்க என்றார்” நான் திரும்பி அந்த பையை எடுத்து வண்டியில் ஏறினேன்!, பாஸ் தான் பையை எடுக்க சொன்னதாக அவர் நினைத்து கொண்டார் போல!

வண்டி ஏறிய பெரியவர் முதலில் என் பிறந்த தேதி கேட்டார், சொன்னேன், நீங்கள் சுயநலவாதி, அம்மா அப்பாவை கூட கவனிக்க மாட்டிங்க என்றார், நான் சிரித்து கொண்டேன், பாஸிடம் தேதி கேட்டார், அவர் சொன்னவுடம் நீங்கள் நர்ஸ் மாதிரி எல்லாருக்கும் உதவி செய்விங்க என்றார், நான் ஒரு talking animal என்று அந்த பெரியவரிடம் சொன்னேன்! பாஸுக்கு ஒன்றும் புரியவில்லை, ரயில்நிலையம் உள்ளே சென்றதும் ஆரம்பித்தார் சொற்பொழிவை, தலைவர் பாபாவின் சீடராம், கிட்டதட்ட இரண்டு மணிநேரம் தொடர் மழை, அருகில் அமர்ந்திருந்த நான் அந்த எச்சில் மழையில் கிட்டதட்ட நனைந்தே விட்டேன்!

ஒருமுறை பறந்து கொண்டிருந்த விமானத்தில்!? தீடிரென எரிபொருள் தீர்ந்து விட்டதாம், பைலட் பாபாவை நினைத்து கோண்டாராம் வண்டி எரிபொருள் இல்லாமல் 450 கிலோ மீட்டர் பறந்து தானாகவே லேண்ட் ஆனதாம், எனக்கோ பிபி எகிறி கொண்டிருக்கிறது, பாஸ் வேண்டுமென்றே அவரை உசுப்பேத்தி கொண்டிருக்கிறார், உஸ் என்றால் நல்லது நடக்கும் என்கிறார் அந்த பெருசு, கேன்ஸர் குணமாகுதாம், செத்தவன் பிழைக்கிறானாம், பாபா நினைத்தால் எதையும் ஆக்கவும் முடியுமாம், எதையும் அழிக்கவும் முடியுமாம்!

எங்கே எதற்கு வந்தீர்கள் என்றேன், இந்தியாவிலிருக்கும் எல்லா கோவிலையும் சொல்லிவிட்டு கேரளாவில் கோவில் சுற்ற செல்வதாக கூறினார், உலகில் அத்தனை கடவுள் இருக்கிறதா என்றேன், இல்லை அனைத்தும் ஒரே கடவுள் தான் என்றார், ஒருமுறை ”சிவன் செம மூடில் இருந்தப்ப விஸ்ணு பெண் வேடம் போட்டு போய் குனிந்து நின்றாராமே” என கேட்க தொண்டை வரை வந்து விட்டது, வயதானவர்களை ஏன் கடுப்படிக்க வேண்டாம் என விட்டுவிட்டேன், அவரது லிஸ்டில் குருவாயூரும் இருந்தது, சிவன், விஸ்ணுவுக்கு பிறந்தது தான் அய்யப்பன் என பு(ருடா)ராணம் சொல்லுது!

நான் வெளியே சென்றிருந்த சின்ன இடைவெளியில் பாஸ் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை சொல்லிவிட்டார். பாஸ் அங்கிருந்து ஈரோட்டிற்கு செல்வதால் அவரது வண்டி வந்தததும் ஏறி சென்று விட்டார், நான் மதுரை செல்வதால் எனக்கான வண்டிக்காக காத்து நின்றேன், என் கையை காட்டச்சொல்லி ரேகை பார்த்தார், எனக்கு சுதந்திரமான சிந்தனைகள் என்றார், இன்னும் என்ன என்னமோ சொன்னார் கடைசில் ”உன் கூட வந்தவர் வேஸ்டு” என்றார், நான் அவரிடம் வேலை பார்ப்பவன் என அவருக்கு தெரியாததால் செமையாக ஓட்ட ஆரம்பித்தார், ஒழுங்கா உணவு கூட ஆர்டர் பண்ணதெரியாது, நீ என்ன சாப்பிடுவிவோ அதையே தான் அவரும் ஆர்டர் பண்ணுவார் என!

எல்லாம் முடித்த பின் அவர் தான் எனது பாஸ் என்றதும் அவரது முகம் சுருங்கி விட்டது,
வயதான காலத்தில் அவருக்கு எதற்கு அத்தனை முகஸ்துதி என தெரியவில்லை, பெரிய கடவுள் பக்தர் என வேறு சொல்லி கொண்டார், எங்கள் இருவரையும் அவருக்கு உதவி செய்ய பாபா அனுப்பி வைத்ததாக சொல்லினார், அத்தோடு நிறுத்தியிருந்தால் அவர் நம்பிக்கை என வயதான காலத்தில் கெடுப்பானேன் என்று விட்டுவிட்டேன் ஆனால் முதலில் நர்ஸ் மாதிரி என்று புகழ்ந்தவர், பின்னர் சுயபுத்தியில்லாதவர் என்கிறார், ஏனென்றார் அப்பொழுது பக்கத்தில் இருப்பது நான் மட்டுமே!

அவருக்கு லோயர் பெர்த் தான் அலாட் ஆயிருந்தது, வண்டியில் அவ்ர் ஏறும் பொழுது அங்கே ஒரு பெண் தனது குழந்தையோடு தூங்கி கொண்டிருந்தார், அவரால் எதுவுமே பேசமுடியவில்லை, என்னா சார் பாபா ஆப்பு வச்சிட்டாரான்னு கேக்கலாம்னு அதுக்கு ஆங்கிலத்தில் என்னான்னு தெரியல! அப்போ அவர் முழிச்ச முழி இருக்குதே!

வாழ்க கடவுள் நம்பிக்கை, வளர்க ஊரை ஏமாற்றும் பொழைப்பு!

!

Blog Widget by LinkWithin