இரண்டாம் உலகம்!

இரண்டாம் உலகம் பார்த்த பொழுது இந்த மாதிரி கதையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு மண்டைக்குள் உறுத்திகிட்டே இருந்தது. கதையின் மையகளம் பேரலல் யூனிவர்ஸ்(http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction) ) ஜெட்லி நடிச்ச தி ஒன் என்ற படம் இதுக்கு ஒரு முன்னோடியா இருந்துச்சுன்னு சொல்லலாம், அதன் பின் வந்த ஃபேண்டசி படங்களை விட oz the great and powerful னு ஒரு படம் எனக்கு இரண்டாம் உலகத்தோடு நிறைய ஒத்து போற மாதிரி தெரிஞ்சது.

ஒரு படைப்பு என்பது எதோ ஒரு தாக்கத்தின் விளைவாகவே உருவாகிறது அது சினிமாவாக இருந்தாலும் அல்லது நாவலாக இருந்தாலும், சென்னை 600028 வந்த போது அந்த படமும் ஒரு தாக்கத்தால் உருவானது தான் என எழுதியிருந்தேன், http://valpaiyan.blogspot.in/2008/06/blog-post_24.html அதில் ஃபுட்பால், இங்கே கிரிக்கெட். ஒரு சில மாற்றங்கள் அல்லது நம் சூழலுக்கு தேவையான மசாலா சேர்த்து கலப்பதால் அதன் மூலம் அறியப்படாமல் போய் விடுமா என்ன?

மங்காத்தா, கேயாஸ் என்ற ஆங்கில படத்தின் தளுவல். ஆரம்பம், டைஹார்ட் 4 மற்றும் ஸ்வார்ட் ஃபிஷ் படத்தின் தாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இரண்டாம் உலகம் படத்தில் என்ன தாக்கம் இருந்திருக்கும் என யோசிக்கையில் தோன்றியதை பகிர்கிறேன்.

oz the great and powerful

சர்க்கஸில் மேஜிக்மேனாக இருப்பவன் அங்கே நடக்கும் ஒரு சண்டையில் காற்று பலூனில் ஏறி தப்பிக்கிறான், அது ஒரு சூறாவளி காற்றில் சிக்குகிறது, அப்பொழுது அவன் வேண்டிக்கொள்கிறேன் தன்னை காப்பாற்றும்படி, சூறாவளி மறைகிறது ஆனால் அவன் இறங்குவதோ பூமி அல்ல.(இரண்டாம் உலகம்) அங்கு ஏற்கனவே இருந்த ராஜா சொன்னது போல் தம் உலகை காக்க வந்த ரட்சகனாக பார்க்கப்படுகிறான்.

சின்ன சின்ன விசயங்களில் லாஜிக்காக அவனது தேவை அங்கே உணர்த்தப்படுகிறது, குரங்கை சிங்கத்திடமிருந்து காப்பாற்ற வண்ணகுண்டை வீசி அதனை பயமுறுத்துதல், உயிருள்ள பீங்கான் பொம்மையின் உடைந்த காலை பசை கொண்டு ஒட்டி நம்பிக்கை பெறுதல் போன்றவை மிக முக்கியமான/லாஜிக்கான காட்சிகள். அந்த உலகில் இல்லாதவற்றை, இவனுக்கு தெரிந்தவற்றை கொண்டு அங்கே முக்கியத்துவம் பெறுகிறான். இறுதியில் வென்று நாட்டு மக்களுக்கு விடுதலை அளிக்கிறான்!

இரண்டாம் உலகில் பூமி ஆர்யா விரல் சூப்பும் பாப்பா மாதிரி முதலில் வருகிறார் பின் கோவா சென்று புரபசரை சைட் அடிக்கிறார், மற்ற பெண்களுடன் நெருக்கமாக பழகி அனுஷ்காவின் பொஸிசிவ்நெஸ்ஸை கிளரிவிடுகிறார், பின் அனுஷாகாவுடன் ரொமான்ஸ் பண்ணுகிறார், பின் அனுஷ்கா செத்து போனதும் தாடி வளர்கிறார்.

வேறு உலக ஆர்யா, கத்தி சுத்தத்தெரியாமல் தளபதி/தந்தையிடம் திட்டு வாங்குகிறார். அனுஷ்காவிடம் செமத்தியா உதை வாங்குகிறார் ஆனால் அனுஷ்காவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் பயங்கர மிருகத்தை வேட்டையாடுகிறார். ட்ரங்கன் மங்கி சண்டை போடுகிறார். எதிரி நாட்டிற்குள்ளே அனைவரையும் வெட்டி சாய்க்கிறார், சுச்சு போட்டா வீரம் வர்ற மாதிரி எதாவது செல்வராகவன் கண்டுபிடிச்சிருப்பார் போல.

காதலை கற்றுத்தர பூமி ஆர்யா அங்கே போக வேண்டியதின் கட்டாயம் எங்கேயும் இல்லை. ஆர்யா அனுஷ்காவை பார்த்ததும் பூ பூக்கிறது அதாவது காதல் அங்கே வந்து விட்டதாம். அதே பார்வையை அங்கிருக்கும் ஆர்யா பலமுறை வீசியும் பூக்களுக்கு காது கேக்கவில்லை போலும். காதல் என்பது ஒரு உணர்வு அதன் குறீயிட்டை சரியாக பயன்படுத்த தெரியாமல் 
தடுமாறியிருக்கிறார் செல்வராகவன்.கடவுளுக்கு எதை எப்போ செய்யனும்னு தெரியும் என்பது போல் ஒரு பாத்திர படைப்பு. ஆர்யாவுக்கு சாவே இல்ல போல. ஓவ்வொரு உலகமா அனுப்பிவைக்கப்படுகிறான். சரி இரண்டாம் உலகில் காதல் வந்துருச்சு பின் அதன் தாக்கம் என்ன? அங்கே காதல் வர வேண்டிய அவசியமென்ன? அங்கே ஏற்கனவே எல்லாரும் புணர்ந்து பிள்ளை பெத்துகிட்டு தானே இருக்காங்க? இந்த காதலால் அங்கே நிகழ்ந்த மாற்றம் என்னான்னு சொல்ல வேணாமா? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பை ராஜான்னு சொல்வது சுதந்திரத்தின் அறிகுறியா? நானெல்லாம் தூக்கு மேடையில் நின்னா ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுவேன். இந்தியாவில் கூட காங்கிரஸ், பிஜேபியை கொள்ளைகூட்டம்னு சொல்லுது, பிஜேபி காங்கிரஸை ரத்தகறை படிந்த கரங்கள்னு சொல்லுது. இதுல என்ன குறியீடு வந்து வாழுதுன்னு தெரியல. செல்வா நல்ல டைரக்டர் தான் அதுக்காக அவர் சொதப்பினதையும் தூக்கி வச்சு கொண்டாடினா பின் நல்ல சினிமாவுக்கு என்ன அர்த்தம்?

நல்ல ஒரு அருமையான கான்செப்டை மொக்க ஸ்கீர்ன்ப்ளேவால் சொதப்பியிருக்கார் செல்வா. ஒரு விமர்சனத்தில் தமிழ்சினிமா 25 வருடம் கழித்து பார்க்க வேண்டிய படத்தை இப்போதே எடுத்திருகிறார்னு படிச்சேன். இவுங்க 25 வருசமா படமே பாக்குறதில்ல போலன்னு நினைச்சிகிட்டேன் :) உலகமே ஒரே கூரையில் கீழ் வந்த பிறகு அந்த டெக்னாலஜி இல்ல. டெக்னீஷியன்ஸ் இல்லன்னு சொல்ற கதையை நம்ப முடியாது. சிஜி ஒர்க் பண்ண ஆளுங்க இருக்காங்க, உட்கார்ந்து வேலை வாங்குறதுக்கு என்ன முடைன்னு தெரியல.

ஆகமொத்தம் அவசரத்தில் பிரசவித்த குழந்தை - இரண்டாம் உலகம்

வாழ்வென்ற வஸ்து!

பிறப்பிற்கும் சாவிற்கும்
ஆன இடையில்
வாழ்வென்று ஒன்றிருக்கிறது
அது முதலில் என்னை மகன் என்றது
பின்னர் சகோதரன் என்றது
பின் கணவன் என்றது
பின் அப்பா என்றது
முடிந்தவரை 
கடமைகளை செய்தேன்
ஒன்றிற்கும் உதவாதவன் என்றது
செத்தபின் அழுதது
பின் பிணம் என்று
தூக்கி போட்டது


********

முற்றிலுமாக தொலைத்த
ஒருவன் தன்னை
தொலைந்துபோனவனாக தானே
கருத முடியும்
யாரிடம் கேட்பது
தொலைத்த வாழ்வை
அறிந்தவர்களுக்கு தானே தெரியும்
இவன் கற்றுக்கொள்ளவே
வாழ்வை தொலைத்தான் என்று

********
வீதி என்பது
நேராக செல்வது
நாம் இடவலம் பாப்பதில்லை
ஆங்கோர் சாவு என்றால்
என்ன சாதி என
முதலில் கேட்ப்போம்
எவன் செத்தால்
நமக்கென்ன
நம் சாவுக்கு வருபவன்
வாங்கிவரும் ஜவ்வாது மழை
நமக்கு மணக்கவா போகிறது

********

பேசிக்கொள்ள
விசயம் தோணும் போது
நான் பயன் படுவேன்
ஆம் நான் அயோக்கியன்
உங்கள் பணத்தை 
கொள்ளையடித்தவன்
நீங்கள் விருப்பியவளை
கவர்ந்து சென்றவன்
உங்கள் குழந்தைகள் உணவை
பிடிங்கி தின்றவன்
நாத்திகனாய் வாழ்தற்கு
ஒரு அடையாளமாக
இருக்க வேண்டாமா!
துகில்கையில்
குற்ற உணர்வு வரலாம்
இருக்கவே இருக்கு
சரக்கு!


*******

செத்த பிறகு
சங்கூதறவன் வந்து
காசு கேப்பான்
டிப்ஸ் கொடுங்க
நாம் தான் வள்ளலாச்சே


********

கண்ணாடியில் தெரியும்
பிம்பத்தை தவிர
வேறதும் நான்
உருவாக்கியதில்லை
நீங்களே
கற்பனை கொண்ட பிம்பத்திடம் கேட்போம்
நான் உங்களை
காயப்படுத்தினேனா
ஆம் நான் மத மறுப்பாளன்
நான் உங்களை காயப்படுத்தினேனா
ஆம் நான் சாதி மறுப்பாளன்
நல்ல வேளை எந்த மனிதனையும்
காயப்படுத்தவில்லை
சாவு சந்தோசமாக இருக்கும்


*********

தொலைந்து போன
பொருளை தேடிக்கொண்டிருக்கும்
குருடனை பார்த்து
எங்கு தொலைத்தாய்
என கேட்பவனே
இங்கு
அவர்கள் சமூகத்திற்கு
தேவையளவு செய்து விட்டதாய்
நம்புகிறார்கள்


********

இரு கைகள் பொத்தி
அழுவதென்பது
கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது
எனக்காக தானே அழுகிறேன்
பின் ஏன் என்று,
ஏன் இந்த பிம்பத்தை
வளர்த்தேன்று தெரியவில்லை
பிம்பத்திற்கும் எனக்குமான சண்டையில்
யாரோ ஒருவர் இறப்பார்
யாரோ ஒருவர் இருப்பார்.


********

என் அழுகை சத்தம் கேட்க வில்லையே
அது உங்களை தொந்தரவு படுத்தலாம்
நாம் தான் என்றுமே
எவன் செத்தாலும் கவலை பட்டதில்லையே
நமக்கு வழிப்பாதை என்பது
தெளிவான நீரோடையாய் வேண்டும்
சிறுதுளி ஒருவேளை
நாளை ஸ்டேட்டஸ் போட உதவலாம்
எதையும் பெறுவதற்கோ
எதையும் இழப்பதற்கோ
நாம் ஆயுத்தமாய் இல்லை
நாம் நாமாய் இருக்கிறோம்
எழுதினாயா ஒரு லைக்
செத்தாயா ஒரு மாழை
அவனவன் வாழ்வு அவனுக்கு********

சோதனைகள் மேருகேற்றுவதற்கு
என்பதெல்லாம் தங்கத்திற்கு தான்.
காகிதத்தை கொழித்தி பாருங்கள்
சோதனையின் வேதனை தெரியும்
உங்கள் அறிவுரைகளை
அடக்கி கொள்ளல் நலம்
நான் வேற மாதிரி
உங்களையும் கொழித்தி விடுவேன்,
சாவை பார்த்தவனுக்கு தான்
வாழ்வு தெரியும்.

குழந்தைகள்

எவ்வித அடையாளங்களும் இல்லாமல்
ஒரு குழந்தை பிறந்தது
முதல் அடையாளமாக அதற்கொரு பெயரிட்டீர்கள்
அதில் முடிந்தவரை வலிந்து
உங்கள் மதத்தை திணித்தீர்கள்
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும்
மகிழ்ச்சி கொண்டீர்கள்
உங்களை உய்விக்க வந்த
தேவதையை போல் கொஞ்சினீர்கள்
வெற்று தாளாய் இருந்த குழந்தையின் மனதில்
உங்கள் கிறுக்கல்களால் மூச்சு திணற வைத்தீர்கள்
உங்கள் பயண சவாரிக்கு
குழந்தைகளை குதிரை ஆக்கினீர்கள்
நேர்மையாக வாழ் என்றீர்கள்
நீங்கள் நேர்மையற்று வாழ்ந்தீர்கள்
முரண்பாட்டால் விழி பிதுங்க வைத்தீர்கள்
உங்களுடன் முரண்படும் போதெல்லாம்
எனக்கு தான் பிறந்தாயா என சந்தேகித்தீர்கள்
என் பெயரை காப்பாற்று என்றீர்கள்
உங்கள் பெற்றோர் பெயரை மறந்தீர்கள்
கடமை என்ற பெயரில்
உங்கள் குழந்தைகளை கைதியாக்கினீர்கள்
முன்பின் அறியாதவருடன்
படுக்கையை பகிர சொன்னீர்கள்
உங்கள் கெளரவம் காப்பாற்றபட்டதாக நம்பினீர்கள்
நீங்கள் போகும் போது அந்த கத்தியை
உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து சென்றீர்கள்

கிறுக்கல்கள்

எல்லோருக்கும்
எதோ ஒரு காரணம்
கிடைத்து விடுகிறது
என்னை வெறுக்க
எனக்கு மட்டும்
எதோ மிச்சமிருக்கிறது
அது நீயாகத்தான்
இருக்கக்கூடும்


**


தொலைந்து போனேன்
என்பதற்கெல்லாம்
அர்த்தம் தேடாதீர்கள்
என்னை நான்
மறந்து போனேன்
என்பதையும்
அவ்வாறே சொல்லலாம்
அன்றொருநாள்
அவள் தொப்புள் குழியில்
தொலைந்த போது
யோசித்தது
 
**
 
தொலைந்து போவதற்கு
முந்தைய நொடி வரை
அனைத்தும் இருந்தது
அனைத்தையும் தொலைத்ததால்
தொலைந்து போனவன் ஆனேன்
 
**
 
இழப்பதற்கு
உயிர் மட்டுமே
மிச்சமிருக்கிறது
யாருக்கு
நிரூப்பிப்பது
என்பதில் தான்
குழப்பம்.
 

**

என் தோளிலிருந்து
மார்பு வரை
உன்னை குடியமர்த்த
எத்தனித்து விட்டேன்
வாடகையாய்
நொடிக்கொரு
முத்தம் கொடு
போதும்


**

அள்ளித்தெளிப்பதெல்லாம்
கோலம் ஆகா
கவிதையும் அவ்வாறே
அதற்கென்று ஒரு அமர்வும்
பேரிழப்பும் தேவைப்படுகிறது


**

சொல்லித்தான்
தெரியவேண்டுமா
என் வானுக்கு
நீ ஒருவளே
நிலவென்று


**

ஆணின் காதலைவிட
பெண்ணின் காதல்
நூறுமடங்கு அதிகம்
புரிந்து கொள்ள
கொஞ்சம் பிரிந்திருக்க
வேண்டும்.


**

புதிதாய் பேனா கொடுத்து
எழுதிப்பாரு கண்ணம்மா என்றால்
ஐ லவ் யூடா மாமா
என எழுதிக்கொடுக்கிறாள்
இப்பொழுது முத்தம்
நான் யாருக்கு தரவேண்டும்
பேனாவுக்கா
அவளுக்கா


**

காதல்
சாவிலிருந்தும்
மீட்கும்
போராடும் சக்தியை
கொடுக்கும்
நம்மை
தோண்டி எடுக்கும்
புதிதாய்
பிறக்க வைக்கும்


**

பட்டாம்பூச்சியின்
சிறகைப்போல்
என் மேனியெங்கும்
வண்ணம் பூசியிருக்கிறாள்
முத்தத்தடத்தில்
என் மொத்ததடமும்
மாறிவிட்டது!


**

நண்பனை போல்
தாங்கும் தோள்களையும்
தாயைப்போல்
பாச தலைகோதலையும்
மகளைப்போல்
அன்பு அதட்டல்களையும்
காதலியால் மட்டுமே
கொடுக்க முடிகிறது
யாதுமாகி என் வாழ்வில்
நிறைந்திருக்கிறாள்!


**     

   

நானாக நானில்லை ...............

வேலை இல்ல
சோறு இல்ல
மனிதம் இல்ல
எந்த புத்திசாலி முயலையும்
வெற்றி கொள்ளும்
இயலாமைகள் இவை....

*********************

பெரும்பாலும்
இழப்பும்
புறக்கணிப்புமே
செயற்கை மரணத்திற்கு
காரணமாய் இருக்கிறது
ஆகினும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு நியாயம் இருக்கிறது
குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட
தொலைந்து போதல் நலம்........

******************

எங்கேயோ
யாரோ, யாரையோ
அழைப்பதற்கெல்லாம்
தலை திருப்புகிறேன்
என் வாழ்வை
நான் எப்போது
வாழ்வது?

**************************

நீக்கமற நிறைந்திருக்கும்
ஒலியைப்போல்
என் வெளியை
உய்விக்க ஒளியை
தேடுகிறேன்.
எந்த இரவில்
ஒளிந்துள்ளதென
தெரியவில்லை.

*************************

விழாத தூசிக்காய்
அழும் மறுக்கண்ணை போல்
எனக்காய் அழ யாருண்டு
நேர்காணலின்றி
தேர்வு செய்யப்படுவீர்

************************

இருப்பேதேழு ரூபாய்
என்பது
இரண்டு பத்து ருபாய்களும்
ஒரு ஏழு ருபாயும்
ஏழு ரூபாய்
எப்படி இருக்குமென
யாருமெனக்கு
காட்டவில்லை.

**********************

என் சுதந்திரம்
என்னிடமே இருக்கிறது
என் பயணம்
எனது விடுதலை
நோக்கி தான்..

********************

புதிதென்பதை
பார்த்ததால்
புதிதாய் படைக்க முடியாது
புதிதென்பது
நமக்கு தான் புதிது
அது அதுவாகவே
இருக்கிறது.

********************

பாதி தான்
கடந்திருக்கிறேன்
மீதி போவதற்குள்
பாதை பழகிவிடும்
என்ற நம்பிக்கையில்!

******************

புதிதாய் படைக்க
ஒன்றுமில்லை
இருப்பதையே
ரசிக்க எவருமில்லை.

*****************

செவிக்குணவிற்கு
பஞ்சமில்லை
ஆலோசனைகளாய்
வயிற்க்கு பாட
புது வள்ளுவன் தேவை.

*****************

நான் இரும்பாய்
இருக்கிறேன்
என்னை ஆயுதமாய்
மாற்றிக்கொண்டு
இருக்கிறது சமூகம்

****************

இரண்டாம் மாடியும்
நண்பர்களும்
எப்போதும் சுகம் தரும்
இதையாவது கடந்தாயே
என்ற இரண்டு மாடிகளின்
சாட்சிகளுடன்

*****************

பார்வையின்
பசிக்கு
இமைகள்
இரையாகா!

****************

மீண்டு வருவதற்கு
தூண்டில்கள்
பயன்படாது,
வாழ்க்கை தராசில்
உயர்ந்திருப்பவனை விட
தாழ்ந்திருப்பவனே
கொண்டாடப்படுகிறான்.


****************முரண் தொகை!

தலைநரைத்த இளைஞனொருவன்
மூலிகை சீவக்காயை அரைத்து
பின் தற்கொலைக்கு முயன்ற
பாலியல் தொழிலாளி ஒருவளின்
தலையில் தடவி பார்த்தான்
முதிர்ந்த அண்டங்காக்கைகள்
தோல்வியின் முன்னேற்பாடுகள்
குறித்து ஆயத்தபடுத்தும் பொழுது
எந்தவித பிரஞ்சையும் இல்லாமல்
அவனது குறி யாரையோ
குறிவைத்து கொண்டிருந்தது
இவ்வாறாக நாளைய
தேர்தல் அறிக்கைகள் எழுதப்படும்.

***

முதுகு குறித்தான சிந்தனைகள் அவ்வபோது நெஞ்சை அரித்து கொண்டிருக்கிறது இருள் குறித்தான புரிதல் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நாளையை குறித்த அச்சங்கள் இறந்து விட்டது நான் என்ற பிணம் வாழ ஆரம்பித்து விட்டது.


முத்துபெருநன் கவிதைகள்!

எழுத்தாளர் வா.மு.கோமு வின் தந்தை முத்துபெருநன் அவர்கள் எழுதிய கவிதை!

சக்கிலிச்சி காதல் 
சந்தையிலே விக்குதா ?
சலிசு வெலைக்குச் 
சரஞ் சரமாத் தொங்குதா ?

கனு கனுப்பை பார்த்தா 
கை வைக்கத் தோணுதா ?
கீழ் சாதி மேல் சாதி 
காத்திலே பறக்குதா ?

கொஞ்சம் பெருசுதான் 
கண்ணை உறுத்துதா ?
கொழந்தைக்குத் தாட்டோனும் 
புருஷனுக்குக் காட்டோணும் 

நட்டறது நாங்க 
அறுக்கறது நாங்க 
கொண்டு போறோந் தவசம் 
பண்ணாடி வீட்டுக்கு 

கூலிக்கு மடி விரிச்சா 
குடிசைக்குள் இழுப்பதா ?
வெக்கங் கெட்ட ஆம்பளைக்கு 
வாழையிலை கேட்குதா ?

சக்கிலிச்சி காதல் 
சக்கரையா இனிக்குதா ?
சத்தியமாச் சொல்லறோம் 
சாட்டையினி  எங்க கையில் 


நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்!..

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது.

மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது.. 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று.

சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, 

ஆஷ், கேட்கிறார்,

மனிதர்களில் தாழ்ந்தவர்களா, 

அவர்கள், திருடும் இனமா? என்றான்? 

இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்.

வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – 

அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை.

அங்கே, ஒரு பிரசவ வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும்.

ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று..

பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், 

ஆஷ் கேட்கிறான், 

பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று.

அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,

அய்யா, 

அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்.

ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருக்கிறோம்.

ஆஷ், அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், 

” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், 

உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள்.

நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,

அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற செய்தி,பரவியது. 

வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி.

எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், 

குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் 

ஒரு சாதியக் குலக் கொழுந்து.

அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து, 

வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது, 

நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.

மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த வரலாற்று உண்மை.,


********
நன்றி..செல்வா கவிஞர்,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்..

!

Blog Widget by LinkWithin