பெட்ரோல் பங்க் - எச்சரிக்கை!

கச்சா எண்ணைய் பீப்பாய் விலை வீழ்ந்தாலும், டாலுருக்கு நிகரான ருபாயின் மதிப்பு உயர்ந்தாலும் குறையாமல் நம் வயித்தெரிச்சலை கொட்டி கொண்டிருப்பது பெட்ரோல் விலை.  சிலபேர்லாம் இருக்காங்க, பெட்ரோல் விலை ஏறுனா என்னாங்க நான் எப்பவும் நூறு ருபாய்க்கு தான் போடுவேன்னு. சிலர் விலையேற்றத்தினால் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அது காலத்தின் கட்டாயம் என்பார்கள், அது யாருன்னு சொல்லவே வேண்டியதில்லை, ஆளுங்கட்சியினர் தான் அவர்கள்!

பெட்ரோல் விலையை பற்றி பேசிட்டு பெட்ரோல் பங்க் எச்சரிக்கைனு தலைப்பு வச்சிருக்கேனேன்னு பாக்குறீங்களா? விலையேற்றம் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது இந்த முதலாளித்துவ திருநாட்டில், ஆனால் பெட்ரோல் பங்கில் ஏமாறுவதையாவது தடுக்கலாமே எனத்தான் இந்த பதிவு!

நான் படித்து முடித்தவுடன்(ஆமா, அப்படியே மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டாரு) சென்ற வேலை பெட்ரோல் பங்க் தான், மூணு மாதம் பெட்ரோல் அடித்து கொண்டிருந்தேன், பிறகு பம்ப் கேஷியர், பிஸியான பங்குகளில் ரெண்டு, மூணு பம்ப் இருக்கும், ஒவ்வொன்றிற்கும் பேருந்து நடத்துனர் மாதிரி பை மாட்டி கொண்டு ஒரு கேஷியர் இருப்பார், அந்த பம்பில் ஆகும் வரவு செலவுக்கு அவர் தான் பொறுப்பு. உள்ளே சின்னதாக ஒரு மீட்டர் இருக்கும், ஒரு கேஷியரிடமிருந்து இன்னொருவர் மாறும் பொழுது அதை ரீடிங் எடுத்து அதை வரை ஓடிய ரீடிங்குக்கு அந்த கேஷியர் பணம் கட்ட வேண்டும்.

10-15 வருடங்களுக்கு முன்னர் அனலாக் மீட்டர் டைப் பம்புகள் தான் இருந்தன, அங்கே பெட்ரோலில் ஏமாற்றுவது கடினம், இரண்டு சக்கரவாகனங்களுக்கு  ஆயில் போடுவதில் ஐந்து, ஐந்து மில்லிகளாக தேத்தி அன்றைய செலவுக்கு பார்த்துக்கொள்வார்கள். எப்போதாவது சில அப்பாடக்கர்கள் காரில் இருந்த வாரே சாவி கொடுத்து, இவ்ளோ அடி, அவ்ளோ அடி என்பார்கள். ஏற்கனவே எதாவது பைக்குக்கு அடிச்சிகிட்டு இருந்தா அப்படியே பம்ப் ஆஃப் செய்யாமல் அப்படியே காருக்கு கண்டினியூ ஆகும். ரெண்டு லிட்டராவது கோவிந்தா. கார் வைத்திருக்கும் நண்பர்கள் அப்பாடக்காராக இல்லையென்றால் ஒழுங்காக இறங்கிப்போய் பெட்ரோல் போடுவது நல்லது. ஆனால் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டரில் இன்னும் கவனம் தேவை!

ரேட்டை பிக்ஸ் செய்து அடிக்க சுலபமான ஒன்றாகத்தான் அது வந்தது, ஆனால் அதில் கூட இப்படி ஏமாற்ற முடியும் என கண்டுபிடிக்க தமிழனால் மட்டுமே முடியும் போல, டிஜிட்டல் பம்பில் இரண்டு மீட்டர் இருக்கும், ஒன்று ரேட்டை ஃபிக்ஸ் செய்வதற்கு அது மேலே இருக்கும், மற்றொன்று எவ்வளவு  அடித்திருக்கிறார்கள் என நாம் அறிவதற்கு, நல்லாத்தானே இருக்கு அதிலென்ன சிக்கல் என்று கேக்குறிங்களா?



பெட்ரோல் அடித்து கொண்டிருக்கும் பொழுதே உங்களிடம் ஒருவர் பேச்சு கொடுப்பார், அடுத்த விநாடி பெட்ரோல் அடித்து முடித்து நாஸில் வெளியே எடுக்கப்படும், மீட்டரை பார்த்தால் நீங்கள் எவ்வளவு கேட்டீர்களோ அவ்வளவு காட்டும், ஆரம்பித்தில் நான் கூட சரியாகத்தான் அடித்திருப்பார்கள் என நினைத்து கொண்டிருந்தேன், இன்னொரு பங்கில் கவனிக்கும் பொழுது தான் எவ்வளவு அடித்திருக்கிறார்கள் என கீழே உள்ள மீட்டரிலும் தெரிய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

நம்மிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு நபர் பம்பை ஆஃப் செய்து விடுவார், மீண்டும் ஆன் செய்தால் அதாவது அந்த நாசிலை வைத்து எடுத்தால் பம்ப் ஆன்  - ஆஃப் ஆகிவிடும், அந்த இடத்தில் கையை அழுத்தி வைத்து எடுத்தால் பம்ப் ஆஃப்-ஆன் ஆகிவிடும், அப்பொழுது நமக்கு அடித்தது போய், எவ்வளவு நாம் அடிக்கச்சொல்லி அவர்கள் செட் செய்தார்களோ அது தெரியும். ”டே சோனமுத்தா, போச்சான்னு” மனசுக்குள் நினைச்சிகிட்டு வரவேண்டியது தான்!

சரி, ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம்.

1. பெண்கள் இருக்கும் பங்குகளை தேர்தெடுங்கள், அங்கே ஏமாற்றுவதில்லை.

2.பெட்ரோலோடு ஆயில் அடிக்கும் பம்ப் இருக்கும் பங்குகளில் கொஞ்சம் நேர்மையாக இருக்கிறார்கள், ஆயில் தனியாக ஊற்றினால், ”கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா” கதை தான், நீங்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை ஏமாற்றப்படுவீர்கள்.

3. யார் என்ன பேச்சு கொடுத்தாலும் மீட்டரை விட்டு கண்ணை எடுக்காதீர்கள், மறைத்தால் தள்ளுங்க என உரிமையோடு சொல்லுங்க.

4.விலையை முன்னரே தீர்மானிக்க பொத்தானை அழுத்தினால் வேண்டாம்னு சொல்லுங்க, அப்படியே அடிங்க, அதிகமாகிட்டா நான் காசு தர்றேன்னு சொல்லிடுங்க, இதில் எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

5.எல்லா பங்குகளிலும் சேல்ஸ் ஆபிஸர் நம்பர் இருக்கும், நீங்கள் ஏமாற்றப்பட்டது போல் அறிந்தால் அந்த நம்பரை பார்த்து மொபைலில் டயல் செய்யுங்கள், அலறி அடிச்சிகிட்டு வருவானுங்க.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் டிப்ஸ்

எதுக்கு அவ்ளோ கஷ்டம், பைக்கை வித்துட்டு சைக்கிள் வாங்கிகோங்க, எவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு பார்த்துடுவோம்!

புதிய சபாநாயகர்!

வாமு.கோமுவிடம் நண்பராகி பேசிக் கொண்டிருந்த பொழுது ஒருநாள் சொன்னார், இப்பகுதியில் அருந்ததியர் சமூகம் அதிகம் என்று, அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியாதுங்க என்றேன். பார்பனீயத்தின்(கவனிக்க-பார்பனீயம், பார்ப்பான் அல்ல) அடையாளம் தவிர்த்த மற்றவர்கள் பெரும்பாலும் சக மனிதராக தான் தெரிகிறார்கள், அதில் ஏன் பெரும்பாலும்னு பின்னாடி சொல்றேன்!

 பழைய சபாநாயகர் எதன் காரணமாகவோ!? ராஜினாமா செய்து புது சபாநாயகர் பொறுப்பேற்று இருக்கிறார், அவரும் அருந்ததியினர் சமூகமாம், சட்டசபையில் அவுங்க பேசியபொழுது தான் எனக்கே தெரிந்தது. பேசியவர்களில் புதிய தமிழகம் கட்சியையும், மனிதநேய மக்கள் கட்சியையும்(இது இஸ்லாம் கட்சி) விட்டுருவோம், இரண்டிலும் பெரும்பாலும் தாழ்த்தபட்டவர்களும் அல்லது முழுமையாகவே தாழ்த்தப்பட்டவர்களும் தான் உள்ளனர்.

 தி.மு.க என்ற கட்சி என்றைக்காவது ஒரு தொகுதியில் ஆதிக்க சாதியில்லாத சமூகத்தில் இருந்த ஒருவரை வேட்பாளாராக நிறுத்தியுள்ளதா?. சரி அது பழம் தின்னு கொட்டை போட்ட கட்சி. வெற்றிபெறும் வேட்பாளரை தான் நிறுத்தனும்னு நினைக்கும். தே.மு.தி.க வேட்பாளரை தேடிய கதை நமக்கு தெரியாதா?. இதை விட கொடுமை தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது.

 கொஞ்சநாளைக்கு முன்னர் தான் நாட்டைகாலி பண்ணும் (காடுவெட்டி) குரு, மாற்று சாதியில் கல்யாணம் பண்ணா வெட்டுங்க என்று மேடை போட்டு கத்தினான், இப்போ கவுண்டர்கள் பின்புறம் அழுக்காகாமல் பாதுகாக்கும் இன்னொரு பரதேசி கலப்பு மணத்தை எதிர்ப்போம்னு நாமக்கல்லில் கூட்டம் போடுறானாம், இதற்கு கெளரவகொலை என்ற பெயர் வேறு, கொலைக்கு கொலை தண்டனையாகாதுன்னு நாம பேசிகிட்டு இருக்கோம், கெளரவகொலை செய்யும் இந்த மனநோயாளிகளை நாட்டில் வைத்து கொண்டு இங்கே சமதர்ம ஆட்சி எங்கிருந்து நடத்துவது!

 பார்வேர்ட் ப்ளாக், கவுண்டர்கள் கட்சி, சரத்குமார் நடத்தும் நாடார்கள் கட்சி, தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் சபாநாயகரை வரவேற்குதாம், அட பரதேசி நாய்களா உங்க வீட்டு பெண்ணையோ, பையனையோ ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கு மணம் முடித்து வைப்பீர்களா? காதலித்தாலும் கூட. நாடார் சமூகமெல்லாம் ஒருகாலத்தில் ரவிக்கை அணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் உயர்சாதியினரால் போடப் பட்டிருந்ததாம், ஆனா இன்னைக்கே அவனே கொஞ்சம் உயர்ந்து விட்டதால் போடும் ஆட்டம் என்ன? திருநெல்வேலி தாழ்த்தபட்ட மக்களிடம் கேட்டுபாருங்கள் தெரியும். நண்டு கொழுத்தா வலை தங்காது என்ற பழமொழி இந்த மாதிரி தீடிர்னு ஒருபடி ஏறுனுவங்களுக்குத்தான் போல, ஒருகாலத்தில் நம்தோழில் அமர்ந்து நம் காதில் தாண்டா ஏறுஓட்டி கொண்டிருந்தார்கள் என்பது மறந்து தொலைக்கும் மானங்கெட்ட ஜென்மங்கள்!


இந்த பணிதல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த பார்வேர்ட்ப்ளாக். பார்பணீயத்தின் தற்கால வாரிசுன்னே சொல்லலாம், பரமக்குடி துப்பாக்கிக்சூடு நடந்த போது நாய்கள் செத்ததற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என ஃபேஸ்புக்கில் சிரித்த தமிழ்நாட்டு ஹிட்லர்கள், ராஜபக்ஸேக்கள். அந்த கட்சியில் ஒருஆள் எந்திரிச்சு ஆத்துறான் பாரு, யம்ம்மம்மாம்மா முடியல. இவனுங்க மூணு பேருமே ஏன் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தானுங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல. அ.தி.மு.க காரன் போடும் ஜால்ராவை விட சத்தம் அதிகமாக இருந்தது. 


இறுதியாக சபாநாயகர் பேசினாரய்யா, அங்க தான் பெரிய காமெடியே. மத்த கட்சியினரை அழைக்கும் பொழுது பெயர் சொல்லி அழைத்தவர் இங்கே மாண்புமிகு அம்மா பேசுவார் என்றார்,( சபாநாயகருக்கு அம்மாவா, இல்ல நாலு குழந்தைங்க பெத்தவரா) இனி எங்கிருந்து சட்டசபை நடுநிலை பெறும், அதுமட்டுமா. தமிழகத்தின் விடிவெள்ளி, புரட்சித்தலைவரின் ஒரே வாரிசு(வாரிசுன்னா மக தானே, உறவே மாறுதேய்யா) அடுத்த பிரதமர் அதுவும் இந்திய தாழ்த்தபட்ட மக்கள் இவருக்கு லெட்டர் போட்டு எப்படியாவது அவரை பிரதமர் ஆக்கிருங்கன்னு கேட்டா மாதிரியே பேசினார்.

 தாழ்த்தபட்ட சமூகத்தினர் ஒருவர் நல்ல பதவியில் வருவது மிகவும் வரவேற்கதக்கது, ஆனால் உயர்சாதியாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்த மாதிரியே இன்னொரு அடிமை சபாநாயகராக வருவது எந்த அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும், என் உயிர் அம்மா போட்ட பிச்சை, அவுங்க வந்து தான் நான் பார்த்துக்கிறேன்னு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னாங்க என்று வெளிப்படையாக சொன்ன சபாநாயகர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்தவர் பெயரை ஏன் சொல்லவில்லை!?. பணம் யாரு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் அந்த புரட்சிதலைவியே அறுவை சிகிச்சை செய்திருக்கலாமே!, அல்லது இவர் தான் நீங்களே பண்ணிருங்க, நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிங்களேன்னு சொல்லியிருக்களாமே!?

 ஒருமனதாக தேர்ந்தெடுத்ததின் காரணம் தனபால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பது தான் என்று தெரிந்தும், அம்மா போட்ட பிச்சை என்றே கடைசி வரை சொன்னவர் எங்கிருந்து மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகள் பேசுவதை ஏற்கவோ, ஆதரிக்கவோ அல்லது பேச நேரம் ஒதுக்கவோ போகிறார்?. மக்களின் நலன் காக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற புகழாரம் வேற. எது பொற்கால ஆட்சி? பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும், மின்சார கட்டணத்தை உயர்த்தியதுமா? அப்படினா சந்திரகுப்தமெளரியர் நடத்தியது கற்கால ஆட்சியா?

 வரலாறு இனி நாசமாய் போகட்டும்!

!

Blog Widget by LinkWithin