பரிணாமம் - RESTART

முன்னோட்டம்-
உலகம் முழுவதும் கடவுளால் படைக்கபட்டது. அதிலுள்ள உயிரனங்கள் அனைத்தும் இப்பொழுது எப்படி உள்ளனவையோ அப்படியே கடவுளால் படைக்கபட்டது என்பதே படைப்புவாத கொள்கை. உலகில் உள்ள 99% மதங்கள் படைப்புவாத கொள்கையை நம்புகின்றன. ஆனால் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு படைப்புவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. இங்குள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையவை என்றது பரிணாம கொள்கை. மனிதன் குரங்கினத்தின் மேம்பட்ட படிநிலை என்றது பரிணாமவாதம்.

மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அமெரிக்கா, பரிணாம கோட்பாட்டை தற்பொழுது பாடதிட்டத்தில் சேர்ந்துள்ளது அறிவியலுக்கு கிடைத்த வெற்றி தான். நம் கண் முன்னே பரிணாமத்தின் பல சான்றுகள் காண கிடைக்கின்றன. ஆனால் மத அடிப்படை வாதம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. பரிணாம கொள்கையை ஏற்றுக்கொண்டால் படைப்புவாத கொள்கை பொய்யென்று ஆகிவிடும். படைப்புவாதமே இல்லையென்றால் கடவுளுக்கு வேலையில்லை என்பதால் கடவுளை காப்பாற்ற முடிந்தவரை மதவாதிகள் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே பரிணாமம் என்ற லேபிளில் பல பதிவுகள் சான்றுகளுடனும், அதிக பட்ச சாத்தியகூறுகளை விளக்கியும் எழுதியுள்ளேன். நீங்கள் புதிது என்றால் அதையும் ஒரு நடை பார்த்து விடுங்கள்.

*****

படைப்புவாதத்தை எதிர்த்து வைக்கும் ஒரே ஒரு கேள்விக்கு கூட மதவாதிகளால் பதில் சொல்ல முடியாது. எல்லாவற்றிக்கும் அவர்கள் பதில் அது கடவுள் விருப்பம் என்பதாக மட்டுமே இருக்கும். பூமியில் வாழும் மனிதர்கள் ஏன் ஒன்று போல் இல்லை. ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என நம்மாள் கண்டவுடன் அடையாளம் தெரியக்கூடிய அவர்கள், கடவுளால் படைக்கபட்ட ஒரே ஒரு ஜோடியால் உருவானவர்கள் என்றால் ஏன் இத்தனை வித்தியாசம்?

பரிணாமம் என்பது இருக்கும் சூழலுக்கும், வாழும் தேவைக்கும் உயிர்களின் தகவமைப்பை இயற்கை மாற்றி அமைப்பது. எந்த உயிரும் நான் இப்படி ஆகவேண்டும், அப்படி ஆகவேண்டும் என வேண்டி விரும்பி பெற்றுக்கொள்வதில்லை இந்த வளர்ச்சியை. நீங்கள் பயன்படுத்தாத உறுப்பு நாளடைவில் காணாமல் போகும், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் உறுப்பு நாளடைவில் மேலும் சிறக்கும்.

பூமியில் உள்ள உயிரனங்களில் மனிதனுக்கு அதிக தொடர்பு உடையது சிம்பன்சி குரங்குகள். நமக்கும் அவற்றிக்கும் 98% மரபணு ஒற்றுமை உள்ளது.
பண்டைய அதாவது பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த குரங்கு வகையில் இருந்து இடம் பெயர்ந்த குரங்கினங்கள் நாட்பட நாட்பட பரிணாம மாற்றம் கண்டன., நான் முன்னறே சொல்லியது போல் தேவைக்கு தான் இயற்கை சில மாற்றங்களை கொடுத்தது. பரிணாமம் கண்டாயம் நடந்தே ஆகவேண்டும் என்றில்லை. பல கோடி வருடங்களாக சுறா மீன் வடிவத்தில் சிறுத்துள்ளதே தவிர உருவத்தில் மாற்றமில்லை.

சிம்பன்சி வகை குரங்குகள் நமது மூதாதைருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். நியாண்டர்தால் மனிதர்களுக்கும் அவர்களுக்கும் 99% மரபணு ஒற்றுமை இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலிருந்து பிரிந்து ஹோமோஎரக்டஸ் உருவாகினர், பின் ஹோமோ சேபியன்ஸ். ஹோமோ சேபியன்ஸ், ஹோமோ எரக்டஸ் மனிதர்களை வேட்டையாடியே கொன்று விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எஞ்சியிருந்த ஹோமோ சேபியன்ஸில் இருந்து பரிணாம மாற்றம் பெற்ற ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் தான் இன்று இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வால்பையன் என்ற மனிதன். படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் தான்.
ஆப்ரிக்காவின் நடுப்பகுதியில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் காங்கோ ஆறு. நைல் நதிக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் ஆப்ரிக்கா செளுமைக்கு உதவுகின்றது.  இன்று குறுக்காக பாயும் ஆறு இருந்த பகுதியில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய ஏரி ஒன்று இருந்துள்ளது(அதற்கான படிமங்கள் கிடைத்துள்ளன). அந்த காலகட்டத்தில் சிம்பன்சி வகை குரங்குகள் அந்த ஏரியை சுற்றிலும் வாழ்ந்து வந்தன. பூமியின் தட்பவெட்ப மாறுதலின் போது அந்த ஏரி வற்றிப்போனது மட்டுமல்லாமல் அதற்கு தண்ணிர் கொண்டு வரும் ஆற்றின் தொடர்ச்சியாக மட்டும் மாறியது, அப்படி உருவானதே காங்கோ ஆறு.

பெரிய காட்டாறாக உருவெடுத்தபோது காங்கோ பகுதியே இரண்டு துண்டுகளாக பிரிந்தது போல் ஆனது. அங்கே வாழ்ந்த உயிரனங்கள் இரு பகுதிகளில் பிரிக்கபட்டது, அவ்வாறு பிரிந்த உயிரனங்களில் அங்கே வாழ்ந்த சிம்பன்சி வகை குரங்குகளும் உண்டு.1925 சமயங்களில் டார்வினிசம் வேகமாக பரவி உடல்கூறுயிலாளர் என புது ஆராய்ச்சியாளர்கள் பெருகினர். அதில் ஜெர்மனை சேர்ந்த Edward Tratz மற்றும்  Heinz Heck என்ற இருவர் காங்கோ ஆற்றின் வடக்கு பகுதியில் வாழ்ந்த குரங்கினங்களை ஆராய்ச்சி செய்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சிம்பன்சி என நம்பிக்கொண்டிருந்த குரங்கு வகையில் சில வித்தியாசங்களை கண்டனர். மேலும் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்த குரங்குகளை பொனோபோ குரங்கு என அழைந்தனர். அந்த பகுதியின் பெயரான பொலோபோ என்ற பெயர் மருவி குரங்குக்கு இந்த பெயர் வந்துருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர்.

பொனோபோ சிம்பன்சிக்கும், காமன்(common)சிம்பன்சிக்கும் மரபணு 99.99% ஒத்துபோனாலும் அவை தோற்றத்தில் வித்தியாசபட்டு இருந்தன. பொனோபோ குரங்கள் சிம்பன்சியை விட உருவத்தில் சிறியவை. சிறிய தலைபகுதியும், லேசான புருவமேடும் கொண்டவை. பொனோபோ பெண் குரங்களுக்கு சிம்பன்சி போல் இல்லாமல் சிம்பன்சி பெண் குரங்குகளை விட பெரிய மார்பகங்கள்(முலைகள்) இருந்தன.  சிம்பன்சிகளை விட அதிக நேரம் இரு கால்கள் மட்டுமே நிற்க கூடிய ஆற்றல் பெற்றுள்ளது.


குடும்ப அமைப்புகளில் சிம்பன்சிகளை விட வன்முறையை குறைவாக கையாளும், கோவமாக இருக்கும் ஆண் குரங்கை பெண் குரங்குகள் தாமக அணுகி அதனுடன் உடலுறவில் ஈடுபட்ட கூட்டத்தை அமைதியடைய செய்யும். ஒவ்வொரு குரங்கும் தனித்த முகசாடை கொண்டவையாகவும் இருந்தன. அமர்ந்திருக்கும் பொழுது சிம்பன்சிகளை விட இவைகள் மனிதனையே அதிகம் ஞாபகபடுத்தும் வகையில் இருக்கும்.

காங்கோ ஆற்றின் மறுகரையில் வாழும் சிம்பன்சிகள் இதற்கு அப்படியே நேர் எதிர். வன்முறை மிகுந்திருக்கும். கூட்டத்தில் உள்ள குரங்குகளையே கொல்லும். உருவ அமைப்பும் வித்தியாசமானது. சின்பன்சி வகைகள் ஆண் ஆதிக்கம் கொண்டது. நேர்மாறாக பொனோபோ வகை குரங்குகள் பெண் ஆதிக்கம் கொண்டது.

சின்பன்சிகளை விட உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவை பொனோபோ வகைகள். மனிதனை போல் முகம் பார்த்து உறவு கொள்ளுதல். வாய்வழி பாலறவு போன்ற விளையாட்டுகள் என அவற்றின் வாழ்க்கை பெரும்பகுதி உடலுறவில் கழிக்கின்றது. புதிதாக உணவு இருக்கும் பகுதியை கண்டாலும் முதலில் உடலுறவில் ஈடுபட்டு பின் ஆற அமர உணவை சாப்பிடுவதை அறிந்தனர். பொனோபோ வகை குரங்குகள் 5 வருடங்கள் ஒரு குட்டியை வளர்ப்பது வரை அடுத்த குட்டியை ஈனுவதில்லை. பால் கொடுக்கவில்லை என்றாலும்.அறிவில் சிம்பன்சியை விட மேம்பட்டவை. தன் முகத்தை முக கண்ணாடியில் அறியும் திறன் பெற்றுள்ளது. மற்ற குரங்குகளை அடையாளம் காணவும். தங்களுக்குள் சில ஒலிகளை எழுப்பி தகவல் தொடர்பு கொள்கின்றது. சோதனையில் 3000 வகையான கை சமிஞ்சைகளை கற்றுகொண்டு அவற்றை வரைகணித குறியீடுகளாக அடையாளம் அறியும் திறன் இருந்தது.

காங்கோ ஆற்றின்  பகுதியில் மட்டுமே வாழும் பொனொபோ குரங்கு வகை தற்பொழுது 10000 மட்டுமே இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு போரின் காரணமாக காட்டுக்குள் பதுங்கிய போராட்டகாரர்கள் உணவுக்காக பெருமளவு அழித்துவிட்டதாக தெரிகிறது

பொனொபோ வகை குரங்குகள் மனிதனின் அடுத்த கீழ் படிநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மற்ற உயிரனங்கள் இனபெருக்கத்திற்காக மட்டுமே உடலுறவு கொள்ளும், மனிதம் மட்டுமே அதை ஒரு சந்தோச பகிர்வாக பயன்படுத்தி வருகிறான். இதே பழக்கம் பொனோபோ வகைகளில் காணபடுகின்றன. சிம்பன்சியை விட அறிவில் மேம்பட்டவைகளாக உள்ளன. அவற்றை காக்க பொனோபோ அமைதி காடுகள் திட்டம் என்று ஒன்றை உருவாக்கி. பல அமைப்பின் நிதி உதவியுடன் இந்த குரங்கு வகைகளை பாதுகாத்து வருகின்றனர்.

ஒரே கண்டத்தில் ஒரு ஆற்றின் ஒரு கரையில் பிரிந்த குரங்குகளின் உடல் அமைப்பு, வாழும் தகவமைப்பு அனைத்தும் மாறியுள்ளன. இவை ஏற்பட பல ஆயிரம் வருடங்கள் பிடித்திருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர் ஆராய்ச்சி மூலம் பரிணாமம் 100% உண்மை என்பதை மக்களுக்கு நிரூப்பிக்க முடியும் என நம்புகின்றனர்.

-இனி தொடரும்

அரசியல் திருப்பம்!

இதோ பூ பூத்து விட்டது, காய் கனிந்து விட்டது, பழம் பாலில் விழப்போகிறது என ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்த கருணாநிதியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண் என காட்டியிருக்கிறது இன்று விஜயகாந்த் எடுத்த முடிவு.

அதிமுக, தேமுதிக கட்சியை உடைத்தது. தனித்து நின்றால் 10 சீட்டு கூட ஜெயிக்க முடியாது. மேலும் தனித்து நிற்பது தற்கொலைக்கு சமம் ஆகவே தேமுதிக, திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என பல திமுக உறுப்பினர்களும், அனுதாபிகளும், நடுநிலைவாதிகளும் நேற்று வரை கூறி வந்தார்கள். அதில் சில திமுக உறுப்பினர்களுக்கு கருணாநிதி இன்னும் விஜயகாந்தை தொக்கி கொண்டிருப்பது பிடிக்காமல் கருணாநிதியை கலாய்த்த போட்ட மீம்ஸை கூட ஸ்மைலியுடன் ஷேர் செய்து தன் அதிருப்தியை காட்டினார்கள்.
மக்களின் தேசிய குணம் மறதியாக இருக்கலாம். கட்சிகளும் தன் தேவைக்கு சந்தர்பவாத கூட்டணி அமைக்கலாம். ஆனால் தேமுதிக நிலை வேறு. திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி என தமிழகத்தில் உருவெடுத்து தனித்து நின்ற தேமுதிகவை அப்படியே விட்டிருந்தால் இன்று இவ்வளவு அசுர வளர்ச்சி அடைத்திருக்காது. சும்மா இருந்த தேமுதிகவை விஜயாகாந்தின் கல்யாண மண்டபத்தை இடித்து அதிமுகவுடன் கூட்டணி அமைய வைத்ததே திமுக தான்.


தேமுதிகவை குத்திய அம்பு அதிமுக என்றால். அதை எய்தது திமுக. அதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே தேமுதிக, மக்கள் நல கூட்டணி அல்லது பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என கூறி வந்தேன். தமிழகம் வந்த மோடியும், அமித்ஷாவுன் ஜெயலலிதாவை மட்டும் பார்த்து சென்றது பாஜக மேல் விஜயகாந்துக்கு அதிருப்தியை உருவாக்கியது.


தற்சமயம் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக ஏற்றுகொண்டு மக்கள் நல கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. தேமுதிக 124, மக்கள் நல கூட்டணி 110 தொகுதிகள் என தற்சமயம் முடிவாகியுள்ளது. தொகுதிகள் மாறுலாம் ஒழிய கூட்டணி கலைய வாய்ப்புள்ளதாக தெரியவில்லை. ஒரு வாரத்தில் கலையும், ஒரு மாதத்தில் கலையும் என ஆருடம் பாஜக பிரமுகர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது மக்கள் நல கூட்டணி.


பாஜகவின் தமிழக எதிர்காலம் அதிமுகவின் கூட்டணி அமைத்தால் மட்டுமே. பாமகவின் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்றுக்கொண்டாலும் பாமக வலுவாய் உள்ள தொகுதிகளை பாமக எடுத்துக்கொண்டு மீதியை பாஜகவுக்கு கொடுக்கும். அங்கே டெபாசிட் கூட வாங்க முடியாது என்பது இரண்டு கட்சிகளுக்கும் தெரியும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிகபட்சமாக 20 தொகுதிகள் நிற்க கிடைக்கலாம். ஆனால் ஊழல் வழக்கு பாஜகவுக்கு ஒரு தடையாக உள்ளது.


வாசன் தனது குழந்தையை நடைபயில வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திமுகவுடன் காங்கிரஸ் உள்ளதால் அங்கே போக வாய்ப்பில்லை. அதிமுகவிடன் போனால் வாசனும் யோகா செய்ய வேண்டியிருக்கும் ஆக வாசனுக்கு உள்ள சாத்தியகூறுகளும் இரண்டு தான். ஒன்று மக்கள் நல கூட்டணி. இன்னொன்று பாமக கூட்டணி. இல்ல நான் அடிமையா தான் போவேன்னு சொன்னா வேல்முருகன், செ.கு.தமிழரசன் மாதிரியான அடிமைகள் வரிசைகள் வாசனையும் உட்கார வைக்கனும்.


ஒரு வருடத்திற்கு முன்பு வரை நான் எடுத்த சர்வேபடி மக்கள் அதிமுக மேல் அதிருப்தியில் இருந்தாலும் திமுக மேல் கோவத்தில் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தேன். இப்போது திமுகவுக்கு சமமான கூட்டணி ஒன்று மக்களுக்கு அடுத்த வாய்ப்பாக கையில் கிடைத்துள்ளது. அதிமுக அதிருப்தி ஓட்டுகள் பாமக, பாஜக என பிரியாமல் மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்தால் இந்த கூட்டணிக்கு 80திலிருந்து 90 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.

திமுக ஆதரவிலோ, அதிமுக ஆதரவிலோ வெற்றி பெற்ற உதரி கட்சிகள் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவளிக்கும். அவ்ளோ ஏன் திமுகவே வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும். அவர்களை பொறுத்தவரை மீண்டும் ஒரு முறை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் திமுக கண்டிப்பாக உடையும். ஆதரவு அளிக்காவிட்டால் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று மீண்டும் தேர்தல் நடக்கலாம்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி மாதிரியான ஒரு கேவலமான செயல் எதுவும் இருக்கமுடியாது. இது இயற்கை கூட்டணி என சப்பை கட்டு கட்டுவது மக்களை எல்லாம் மடையர்கள் என சொல்லுவதற்கு சமம். திமுக கூட்டணிக்கு ஆளில்லாமல் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டது. அதிமுகவின் பல ஊழல்கள் அம்பலபட்டும், நமக்கு நாமே என நாடகம் நடத்தியும் பெரும்பான்மை மக்களிடம் திமுக மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.

திமுக, அதிமுக மட்டுமல்ல. தன்னை திருத்திக்கொள்ள தயாராக இல்லாத எவரும் பிறர் நம்பிக்கையை பெற முடியாது. இது தனி நபருக்கும் பொருந்தும்..

எது தியாகம்!

எது தியாகம்?

உன்னை ஏற்றுக்கொள்வதா?
நிராகரிப்பதா?
எது தியாகம்?
விளைவுக்கு நானே பொறுப்பு என்பதா?
தண்டனையை ஒருவர் மட்டும் பெற்றுக்கொள்வதா?
எது தியாகம்?
உன் மகிழ்வில் நான் மகிழ்வதா?
உன் தேவைக்கு உன்னை தொலைப்பதா?
எது தியாகம்?
நினைவுகளுடன் மட்டும் வாழ்வதா?
நினைத்தவுடன் மறப்பதா?
எது தியாகம்?
தொடர்புகளை அறுப்புதா?
மணிகட்டை அறுப்பதா?
தியாகத்திற்கான உன் வரையறை என்ன
உன் வலி உனக்கு...
என் வழி எனக்கு...
தன் வழியை தேடி விலங்குகளை கூட
அதன் பெற்றோர் தடுப்பதில்லை
இதில் தியாகம் என்ன தேவையிருக்கு
பாதைகள் கற்களும், முற்களும் நிறைந்தவை
பார்த்து நட!

சின்ன புள்ள!

கதறிய அலைபேசியில் கோபால் என்ற பெயரை பார்த்ததும் உடனே எடுத்து பேசினான் சரவணன்.

என்னடா கோபால் இன்னேரத்துக்கு கூப்ட்ருக்க, இப்ப கோர்ட்டில் இருப்பேன்னு தெரியாதா என்றான். ஸாரி மச்சி நம்ம சாமு துபாய்ல இருந்து வந்துருக்கானான், கேட்டவுடன் டைம் பார்க்காம உனக்கு போன் பண்ணிட்டேன் என்றான். அப்படியா கோர்ட் முடிஞ்சதும் போய் பார்க்கலாம்டா என்றான் சரவணன்

ரொம்ப சிரமம் வைக்கவில்லை சாம் என்ற சாமுவேல். இவர்களை தேடி அவனே வந்து விட்டான். லாலி ரோட்டில் இருக்கும் ஒரு பாரில் சந்திந்தார்கள்.
கோபால் மட்டும் ஒரு பீர் போதும்னு சொல்ல சாமுக்கும், சரவணனுக்கும் ஒரு ஆஃப் சொன்னார்கள்.

என்ன மச்சி முடி நரைச்சு போச்சு என்றான் சாம் சரவணனை பார்த்து. நரைக்க நரைக்க தாண்டா விரைக்கும். நீ சரக்க ஊத்துடா என்றான் சரவணன். சரக்கு முடிந்தததும் திரும்ப ஒரு குவாட்டர் சொல்லி ஆளுக்கு பாதியாக காலி செய்தார்கள்.

மச்சி உனக்கு எதும் நம்பர் தெரியுமாடா என்றான் சாம்

என்ன நம்பர்டா என்றான் சரவணன்

மேட்டர் நம்பர்டா

அதெல்லாம் கோபால்கிட்ட கேட்டுக்கோ, அவன் தான் அதில் எக்ஸ்பெர்ட் என்று முடித்து விட்டான் சரவணன்

சாம் கோபாலை பார்க்க, இருடான்னு போனை எடுத்து கணேஸை கூப்பிட்டான் கோபால். பேசிகொண்டே எப்படி மச்சி வேணும்னு சாமை பார்த்து கேட்டான். சின்னபுள்ளையா பாருடா என்றான் சாம்

சின்ன புள்ளையே இருக்காம்டா, வடவள்ளி வரைக்கும் போகனும் ஒகேவா என்றான் கோபால். பகல் நேரம் தானே. போலிஸ் இருக்காது வாங்கடா போலாம்னு மூவரும் கிளம்பினார்கள்.  வடவள்ளி திருப்பத்தில் கணேஸ் இவர்களாக காத்து கொண்டு இருந்தான்

முதலில் யார் போவது என்ற போட்டியெல்லாம் இல்லை. சாமை நீ போய்டு வாடான்னு அனுப்பி வைத்தார்கள். ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்ததும். யாருக்கு வேணுமோ போங்கடா என்றான். அடுத்த போன சரவணனும் உடனே வந்து விட்டான். கடைசியாக கோபால் போனான்.

திரும்ப வந்த கோபால் கணேஸ் முகத்தில் ரைய்ய்ன்னு ஒரு அறை விட்டான்., எதுக்குண்ணா அடிக்கிறிங்க என்றான் கணேஸ்.

நான் உங்கிட்ட என்னடா கேட்டேன்

சின்னபுள்ள கேட்டிங்க

இவ என்னடா கிளவியா இருக்கா

அய்யோ அண்ணா, அவ சின்னபுள்ளதான்,. வேணும்னா கூப்டுங்க சின்னபுள்ளன்னு அவளே வெளிய வருவா என்றான் கணேஸ்

என்ன விளையாடுறியா. அவ சின்ன புள்ளையா என்றான் கோபால்.
சத்தம் கேட்டு வெளிய வந்த பெண் சொன்னாள்

ஆமாங்க நான் சின்ன புள்ள தான், வேணும்னா பாருங்க ஓட்டர் ஐடி கூட தர்றேன். என் பேர் சின்ன புள்ள தான் என்றாள் 45 வயசு நெருங்கிய பெண்!

!

Blog Widget by LinkWithin