சேரனும் காதலும்!

ஆட்டோகிராஃப் படம் பார்த்த பொழுது அதில் ஒரு யதார்த்தம் இருந்தது போன்ற உணர்வு இருந்தது எனக்கு, நான் நாலாவது படிக்கும் பொழுது எஸ்தர்னு ஒரு பொண்ணை லவ் பண்ணேன்.

இந்த படத்தில் செந்தில் ஒரு பெண்ணை வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே லவ் பண்ற மாதிரி கதை இருக்கும், அந்த பொண்ணு வளந்து கல்யாணம் ஆகி சேரன் பத்திரிக்கை கொடுக்க வரும் போது ஒரு சீன், அந்த பெண்ணின் ரெண்டாவது மகன் பேரு செந்தில், கேட்டதும் சேரனுக்கு கண்ணு கலங்கும், கூட இருக்கும் நண்பர் மூத்த பையனை கூப்பிட்டு பெயர் கேட்பார், அவன் ஒரு பேர் சொல்லுவான். கேட்டியா உனக்கு முன்னாடியே ஒருத்தன் இருந்துருக்கான், ஓவர் ஃபீலிங் காட்டாத அடங்கு என்பார்.

இரண்டாவது காதலியின் பிரிவுக்கு பின்னர் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற காட்சிகள் வரும், சிகரெட்டால் நெஞ்சில் சூடு வைத்து கொள்வார். சுருக்கமா சொல்லனும்னா யாரும் அம்மா, அப்பா பிரிவுக்காக தற்கொலை பண்ணிகிறதில்ல, பெரும்பாலான தற்கொலைகள் காதல் தோல்வியால் தான் நடக்குதுன்னு நம்மில் நேர்மையாக ஒப்பு கொள்கிறவர்களுக்கு தெரியும்.

இரண்டாவது காதலி விதவைன்னு தெரியும் போது, கல்யாணத்தை நிறுத்திட்டு இவளை மறுமணம் செய்யனும்னு நினைப்பாரு சேரன், அதில் காதலில் ஆழம் இருந்தது. சுஜாதா ஒரு கட்டுரையில் அவரது நண்பர் காதலில் தோல்வியுற்றதும் கல்யாணமே பண்ணிக்காம 50+ ல அந்த பொண்ணு இப்ப விதவையா இருக்குன்னு தெரிஞ்சு அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டார்னு எழுதியிருப்பாரு. முட்டாள்தனமா கூட இருக்கலாம், மறுக்கவில்லை அதே நேரம் இம்மாதிரியான உணர்வுகள் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து காட்டுது என்பதையும் மறுக்கக்கூடாது என்பது தான் என் கருத்து.

காதல் என்பதின் மேல் எனக்கிருக்கும் மதிப்பீடுகள் வேற. பலர் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நல்ல காதல், கள்ளக்காதல்னு காமெடி பண்ணும் பொழுது புருசனுக்கு தெரியாம பண்றது கள்ளக்காதல்னா அம்மா, அப்பாவுக்கு தெரியாம பண்றதும் கள்ளக்காதல் தானேன்னு கேள்வி கேட்பேன்.

பெற்றோர்கள் தனது வாரிசுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையா நினைக்கிறது நம் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கு, இன்றும் அது தொடருது என்னை பொறுத்தவரை பெண் திருமணம் வரை பெற்றோருக்கு அடிமையாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்கிறாள் என்பது தான் என் கருத்து.

இன்னைக்கு ஊடகங்கள் பெருகி கிடக்கு, 10 வயசு குழந்தைக்கு, குழந்தை எப்படி பிறக்குதுன்னு சொல்லி கொடுக்கப்பட்டுகிட்டு இருக்கு, இந்த காலத்திலும் என் பொண்ணுக்கு நல்ல பையன் கணவனா வரணும்னு ஆசைப்படுறது தப்பான்னு சேரன் ஒப்பாரி வைக்கிறாது சின்னபுள்ள தனமா இருக்கு, அதுக்கு சேரன் தன் மகளை வளர்க்கும் பொழுதே காதல்னா என்ன? வாழ்க்கைன்னா என்னான்னு சொல்லி கொடுத்திருக்கனும். தன் சினிமாவை பார்த்து வளர்ந்த மகளை ஸ்டேட்டஸ் பார்த்து காதலினு சொல்ற தகுதி சேரனுக்கு இல்லை. சேரன் அவர் படங்களில் அதை காட்டியதும் இல்லை.

சமூகத்தை கூர்ந்து கவனிச்சோம்னா பெரும்பாலும் பெண்ணின் காதல் மறுக்கப்படுவது தான் அதிகமா இருக்கு, நல்ல சம்பளம் வாங்கும் ஆண் ஒரு ஏழை பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணுவதில் சிக்கல் எதுவும் இருப்பதில்லை ஏன்னா பெற்றோர்கள் பெண் ஆணை சார்ந்து தான் வாழனும்னு நினைக்கிறாங்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரம், வாழும் உரிமை, தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் பெண்களுக்கும் உண்டு என்ற புரிதல் சிக்கல் போன்றவை குறித்து எந்த அக்கறையும் இல்லை.

உன் குழந்தையை நீ பெத்துகிறதுக்கு முன்னாடி பர்மிசன் கேட்டியா, நான் உன்னை பெத்துக்கவான்னு? பின்ன என்ன மசுத்துக்கியா நீ இப்படி வாழனும், அப்படி வாழனும்னு கண்டிசன் போடுறிங்க? உங்க எழவு இமேஜ் அதுனால போகும்னு நினைச்சா அதுக்காக உன் குழந்தையின் வாழ்வை பலி கொடுத்தல் எவ்வகையில் நியாயம்? சேரன் மகள் நல்ல மெச்சூர்டா இருக்குற மாதிரி தான் எனக்கு தெரியுது? சேரனுக்கு ஆதரவளிக்கும் இணைய புலிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமாகாரர்கள் மேல் தான் சந்தேகமா இருக்கு, இப்படி உங்க முகமூடியை நீங்களே கிழிச்சிகிட்டிங்களேன்னு வருத்தமாவும் இருக்கு.

back seat drivingனு ஒரு சொலவடை இருக்கு, பின்னாடி உட்கார்ந்துகிட்டு இப்படி ஓட்டு, அப்படி ஓட்டுன்னு நம்மை ஒழுங்கா வண்டி ஓட்ட வைக்கிறதா நினைச்சிகிட்டு நம்ம வாழ்க்கையும் சேர்த்து அவுங்க வாழ்ந்துகிட்டு இருப்பாங்க, இங்க நிறைய கருத்து கந்தசாமிகள் செய்வதும் அதுவே, சேரனுக்கு நான் புத்தி சொன்னா நானும் அந்த லிஸ்டில் சேர்ந்திடுவேன் ஆகவே இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எனக்கிருக்கும் கோவத்தின் வெளிப்பாடு எனவும், அதை வெளிகாட்ட சேரனின் செயல் ஒரு காரணியாக இருந்தது எனவும் சொல்லிக்கொள்ள கடமைபட்டவனாக உள்ளேன்!

# எனக்கும் மகள்கள் தான் ஆனா நிச்சயமா அவுங்க வாழ்க்கையை நான் வாழ மாட்டேன்!

11 வாங்கிகட்டி கொண்டது:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'காதல் பிரச்சனை இல்லா வீடும் இல்ல, கடன் தொல்லை இல்லாத ஆளும் இல்லன்னு' சொல்லுவாங்க.

மண்டை இருக்கிற வரைக்கும் சளி இருக்குங்குற மாதிரி மனுசப் பய இருக்குற வரை காதல் இருக்கும்.

இதுல ஒப்பாரி வச்சி என்னத்துக்கு ஆகப்போவுது. திரையில பாக்கிறப்ப கேக்குறப்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா யதார்த்தமுன்னு வந்தாதானே அந்த 'தீ' சுடுது

Unknown said...

தல ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் இன்னும் அதே காரத்தோட வந்துருக்கீங்க .நேற்றே கேட்க நினைத்தேன்.அப்புறம் பதிவர் அருள் மாதிரி மற்றும் அவர்களது கூட்டமும் மனுஷனா மாறினாலே போதும் .பாதி பிரச்சினை முடிந்து விடும்.

RAVI said...

சரியாத்தான் சொல்ற வால்ஸ்.

Unknown said...

ஒரு தந்தை ஆகா சேரன் செய்வது சரியே

Anonymous said...

”தனக்கு வந்தா இரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச் சட்னி” - இதாம்பா தமிழர் கொள்கை. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜனின் திருமண விஷயத்தில் நீங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கவில்லையா அது போல தான்.

kumar said...

சரியாத்தான் சொன்னீங்க

kumar said...

சரியாத்தான் சொல்லீருக்கீங்க தப்பே இல்ல

Unknown said...

நாலு பத்தி வரைக்கும் நல்லாத்தான் இருந்தது அதுவும் //இம்மாதிரியான உணர்வுகள் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து காட்டுது என்பதையும் மறுக்கக்கூடாது என்பது தான் என் கருத்து.//இது கூட சரிதான் அஞ்சாவது பத்தில //புருசனுக்கு தெரியாம பண்றது கள்ளக்காதல்னா அம்மா, அப்பாவுக்கு தெரியாம பண்றதும் கள்ளக்காதல் தானேன்னு கேள்வி கேட்பேன்.// இங்க உங்க சுய முகம் வெளிவரமாதிரி தெரியுது LOVE -ன்ற வார்த்தையில ஏற்பட்ட குழப்பமானு தெரியல பெற்றோர் - மகள் இடையே வரது (LOVE)அன்பு -இது இவள பெத்துகனும்னு இவங்க நினைக்கறதிலிருந்து தொடங்குது ,ஒரு பொண்னுக்கும் ஒரு பையனுக்கும் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் தனது ஒத்த கருத்து ,பாலின ஈர்ப்பு , சுயநலம் ,சூழல் இவைகள் மூலம் ஏற்படுவது (LOVE),காதல் .அதுபோலத்தான் கணவன் மனைவி இடையே உள்ளது காதல் , கணவனுக்குத்தேரியாமல் மனைவியோ ,மனைவிக்குத்தேரியாமல் கணவனோ வேறொருவருடன் கொள்வது கள்ளக்காதல் .//பெற்றோர்கள் தனது வாரிசுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையா நினைக்கிறது நம் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கு,//இது நம்ம கலாச்சாரத்துல ஊரிகிடக்கல இதுதான் நம்ம கலாச்சாரம் .// இன்றும் அது தொடருது // இன்றுவரையில்லை இந்த கலாச்சாரத்தை பின்பற்றும் கடைசி மனிதன் இருக்கும்வரை இது தொடரும் இதுதான் இந்த கலாச்சாரம் நமக்கு போதித்த வாழ்க்கை நெறி .இதுதான் இந்த உலகத்துல உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் ,ஏன் விலங்குகளிடமிருந்தும் நம்மை பிரித்துக் காட்டும் உன்னத நெறி .
// என்னை பொறுத்தவரை பெண் திருமணம் வரை பெற்றோருக்கு அடிமையாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்கிறாள் என்பது தான் என் கருத்து// இங்க அடிமைத்தனம் எங்க வந்தது . இந்த நாட்டின் , மக்களின் பண்பாடு , கலாச்சாரம் , வாழ்க்கைநெறி இவைகளை கற்பிக்கின்றனர் ,இல்லைனா நீங்க சொல்றமாதிரியான ''பத்துவயது குழந்தையும் குழந்தை பிறப்பது எப்படின்னு '' பார்த்து தெரிந்துகொள்ளும் மாதிரி காட்சி படுத்தும் இந்த ஊடக விபச்சாரிகளின் செயலால் இந்த நாட்டின் பண்பாடு , கலாச்சாரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்வதை நீங்கள் அடிமைத்தனம்னு நீங்கள் நினைத்தால் ;சொல்லுங்கள் உங்கள் மகளிடம் , உங்கள் தங்கைகளிடம் உங்களுக்கு இந்த மாதிரியான க்கலாச்சாரம் , பண்பாடு என்ற கட்டுப்பாடு எல்லாம் இல்லை நீங்கள் உங்கள் இஷ்டம் போல் யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள் , யாரோடு வேண்டுமானாலும் பழகுங்கள் , யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளுங்கள் அதுவும் மறைவாகக்கூட தேவையில்லை மற்றவர்கள் பார்க்கும் படிகூட செய்யுங்கள் என்று . இதையே உங்கள் மனைவிக்கும் தாய்க்கும் சொல்லுங்கள் . அவர்களின் கருத்தை கேட்டு பின் உங்கள் கருத்தை போதுமைபடுத்துங்கள் .// உன் குழந்தையை நீ பெத்துகிறதுக்கு முன்னாடி பர்மிசன் கேட்டியா, நான் உன்னை பெத்துக்கவான்னு? பின்ன என்ன மசுத்துக்கியா நீ இப்படி வாழனும், அப்படி வாழனும்னு கண்டிசன் போடுறிங்க? உங்க எழவு இமேஜ் அதுனால போகும்னு நினைச்சா அதுக்காக உன் குழந்தையின் வாழ்வை பலி கொடுத்தல் எவ்வகையில் நியாயம்?// நீங்க சொல்ற மாதிரி ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் ,உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அவங்களோட காம இச்சைக்கு உடலுறவு கொண்டார்கள் அதனால தேவையில்லாமல் நீங்க பொறந்ததா நெனைச்சி உங்கள தெருவுல தூக்கி வீசியிருந்தாலோ (அப்பல்லாம் தொட்டில் குழந்தை திட்டம் இல்ல ) நீங்க இப்படி ஒரு விஷ விருட்சமா வளர்ந்து இந்த சமுதாயத்த கெடுக்கும் நிலை வந்திருக்காதுல்ல .அதுஎன்ன //BACK SEAT DRIVING// இந்த மண்ணில் பிறந்த எந்த உயிரினமும் தானாக எதையும் (எதையும் பார்க்காமல் , கேட்காமல் ,யாரும் சொல்லாமல் ) தெரிந்துகொண்டதாக என் அறிவுக்கு எட்டவில்லை .// இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எனக்கிருக்கும் கோவத்தின் வெளிப்பாடு // உங்களின் சம காலத்தி நான் வாழ்வதை நினைத்து வெட்கப்படுகிறேன் . மீண்டும் எனக்கொரு பிறப்பிருந்தால் உண்காலத்தில் பிறக்காதிருக்க இறைவனை வேண்டுகிறேன் . thangamaangani@gmail.com

Unknown said...

நாலு பத்தி வரைக்கும் நல்லாத்தான் இருந்தது அதுவும் //இம்மாதிரியான உணர்வுகள் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து காட்டுது என்பதையும் மறுக்கக்கூடாது என்பது தான் என் கருத்து.//இது கூட சரிதான் அஞ்சாவது பத்தில //புருசனுக்கு தெரியாம பண்றது கள்ளக்காதல்னா அம்மா, அப்பாவுக்கு தெரியாம பண்றதும் கள்ளக்காதல் தானேன்னு கேள்வி கேட்பேன்.// இங்க உங்க சுய முகம் வெளிவரமாதிரி தெரியுது LOVE -ன்ற வார்த்தையில ஏற்பட்ட குழப்பமானு தெரியல பெற்றோர் - மகள் இடையே வரது (LOVE)அன்பு -இது இவள பெத்துகனும்னு இவங்க நினைக்கறதிலிருந்து தொடங்குது ,ஒரு பொண்னுக்கும் ஒரு பையனுக்கும் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் தனது ஒத்த கருத்து ,பாலின ஈர்ப்பு , சுயநலம் ,சூழல் இவைகள் மூலம் ஏற்படுவது (LOVE),காதல் .அதுபோலத்தான் கணவன் மனைவி இடையே உள்ளது காதல் , கணவனுக்குத்தேரியாமல் மனைவியோ ,மனைவிக்குத்தேரியாமல் கணவனோ வேறொருவருடன் கொள்வது கள்ளக்காதல் .//பெற்றோர்கள் தனது வாரிசுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையா நினைக்கிறது நம் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கு,//இது நம்ம கலாச்சாரத்துல ஊரிகிடக்கல இதுதான் நம்ம கலாச்சாரம் .// இன்றும் அது தொடருது // இன்றுவரையில்லை இந்த கலாச்சாரத்தை பின்பற்றும் கடைசி மனிதன் இருக்கும்வரை இது தொடரும் இதுதான் இந்த கலாச்சாரம் நமக்கு போதித்த வாழ்க்கை நெறி .இதுதான் இந்த உலகத்துல உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் ,ஏன் விலங்குகளிடமிருந்தும் நம்மை பிரித்துக் காட்டும் உன்னத நெறி .
// என்னை பொறுத்தவரை பெண் திருமணம் வரை பெற்றோருக்கு அடிமையாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்கிறாள் என்பது தான் என் கருத்து// இங்க அடிமைத்தனம் எங்க வந்தது . இந்த நாட்டின் , மக்களின் பண்பாடு , கலாச்சாரம் , வாழ்க்கைநெறி இவைகளை கற்பிக்கின்றனர் ,இல்லைனா நீங்க சொல்றமாதிரியான ''பத்துவயது குழந்தையும் குழந்தை பிறப்பது எப்படின்னு '' பார்த்து தெரிந்துகொள்ளும் மாதிரி காட்சி படுத்தும் இந்த ஊடக விபச்சாரிகளின் செயலால் இந்த நாட்டின் பண்பாடு , கலாச்சாரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்வதை நீங்கள் அடிமைத்தனம்னு நீங்கள் நினைத்தால் ;சொல்லுங்கள் உங்கள் மகளிடம் , உங்கள் தங்கைகளிடம் உங்களுக்கு இந்த மாதிரியான க்கலாச்சாரம் , பண்பாடு என்ற கட்டுப்பாடு எல்லாம் இல்லை நீங்கள் உங்கள் இஷ்டம் போல் யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள் , யாரோடு வேண்டுமானாலும் பழகுங்கள் , யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளுங்கள் அதுவும் மறைவாகக்கூட தேவையில்லை மற்றவர்கள் பார்க்கும் படிகூட செய்யுங்கள் என்று . இதையே உங்கள் மனைவிக்கும் தாய்க்கும் சொல்லுங்கள் . அவர்களின் கருத்தை கேட்டு பின் உங்கள் கருத்தை போதுமைபடுத்துங்கள் .// உன் குழந்தையை நீ பெத்துகிறதுக்கு முன்னாடி பர்மிசன் கேட்டியா, நான் உன்னை பெத்துக்கவான்னு? பின்ன என்ன மசுத்துக்கியா நீ இப்படி வாழனும், அப்படி வாழனும்னு கண்டிசன் போடுறிங்க? உங்க எழவு இமேஜ் அதுனால போகும்னு நினைச்சா அதுக்காக உன் குழந்தையின் வாழ்வை பலி கொடுத்தல் எவ்வகையில் நியாயம்?// நீங்க சொல்ற மாதிரி ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் ,உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அவங்களோட காம இச்சைக்கு உடலுறவு கொண்டார்கள் அதனால தேவையில்லாமல் நீங்க பொறந்ததா நெனைச்சி உங்கள தெருவுல தூக்கி வீசியிருந்தாலோ (அப்பல்லாம் தொட்டில் குழந்தை திட்டம் இல்ல ) நீங்க இப்படி ஒரு விஷ விருட்சமா வளர்ந்து இந்த சமுதாயத்த கெடுக்கும் நிலை வந்திருக்காதுல்ல .அதுஎன்ன //BACK SEAT DRIVING// இந்த மண்ணில் பிறந்த எந்த உயிரினமும் தானாக எதையும் (எதையும் பார்க்காமல் , கேட்காமல் ,யாரும் சொல்லாமல் ) தெரிந்துகொண்டதாக என் அறிவுக்கு எட்டவில்லை .// இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எனக்கிருக்கும் கோவத்தின் வெளிப்பாடு // உங்களின் சம காலத்தி நான் வாழ்வதை நினைத்து வெட்கப்படுகிறேன் . மீண்டும் எனக்கொரு பிறப்பிருந்தால் உண்காலத்தில் பிறக்காதிருக்க இறைவனை வேண்டுகிறேன் .

வால்பையன் said...

அடிமையாக பெண்கள் இருப்பது தான் கலாச்சாரமா?

//உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அவங்களோட காம இச்சைக்கு உடலுறவு கொண்டார்கள் அதனால தேவையில்லாமல் நீங்க பொறந்ததா நெனைச்சி உங்கள தெருவுல தூக்கி வீசியிருந்தாலோ (அப்பல்லாம் தொட்டில் குழந்தை திட்டம் இல்ல ) நீங்க இப்படி ஒரு விஷ விருட்சமா வளர்ந்து இந்த சமுதாயத்த கெடுக்கும் நிலை வந்திருக்காதுல்ல //


என்ன ஒரு அருமையான சிந்தனை. உங்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கு. இப்படியே உங்க அழுகிபோன கலாச்சாரத்தை கட்டிகிட்டே அழுங்க. அப்ப தான் சீக்கிரம் கிடைக்கும்!

Chandru said...

அடிமைத்தனத்திற்கும் பாதுகாப்பிற்கும், சமத்துவத்திற்கும் வித்தியாசம் உண்டு. முதலில் ஆணும் பெண்ணும் உடல் வலிமையில் சமமல்ல, ஏனென்றால் சிலசமயம் ஆண்களே வலிமையுள்ளவனிடம் உடமைகளை இழக்கின்ற பொழுது பெண்கள் இழப்பது உடமை மற்றுமின்றி(கற்பு அது ஒரு பொருட்டல்ல) உயிரும் ஆவதால் பாதுகாப்பு என்பதுதான் முக்கியம். மகள் ”வாழ்ந்து பார்க்கிறேன்”(கற்பு அது ஒரு பொருட்டல்ல) என்று அலையும் போது, இப்படித்தான் வாழ வேண்டும் என்று தந்தை சொல்வதும் விரும்புவதும் கண்டிப்பதும் அவசியமானது. காதல் கருமாந்திரத்தை எல்லாம் கடந்து கல்யாணம் என்கிற இயற்கை தேர்வுக்கு (Natural selection)மனித இனம் வந்து பல்லாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது.என்ன பிஸினஸ் செய்தால் பணம் கொட்டும் என்று சொல்லப்பட்டதும் எழுதியதும் ஏராளம். ஆனாலும் கேட்ட, படித்த, எல்லாருக்கும் பிஸினஸ் வாய்த்து விடவில்லை. ஒரு தந்தைக்கு மகள் எப்பொழுதுமே குழந்தையாகத்தான் தெரிவதால் காதலைப் பற்றி அறிவுறுத்தும் முன் காலம் கை மீறி விடுகிறது. ஏனென்றால் சாப்பிடும் உணவும், பார்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும் திணவினால் LKG லிருந்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்களாம். அதற்காக தந்தை LKG லிருந்து காதலைப் பற்றி சொல்லிக் கொடுக்க முடியாது.அது போல் என்னதான் மகளுக்கு அறிவுறுத்தப்பட்டாலும் பக்குவப்படாத மகளை விட்டுவிட முடியாமல் புலம்புவதுதான் பாசம்.உன்னை அறிவுறுத்தாமல் வளர்த்து விட்டேன் அதனால் எக்கேடு கெட்டுப் போ என்றுவிடவும் முடியாது. இதில் சேரன் என்ற தந்தையை ஆதரித்து எழுதுவதும் வீட்டில் பேசுவதுமே அவரவர் மக்களுக்கு அறிவுறுத்தலை ஏற்படுத்தும் செயலாகும்.

!

Blog Widget by LinkWithin