குவியல் (30.08.16)

ஃபோகஸ்னு ஒரு ஆங்கில படம் பார்த்தேன் பெருசா சொல்லிகிற மாதிரி எதுவும் இல்ல, அலுப்பு தட்டாத திரைகதைன்னு வேணும்னா சொல்லலாம்.
படத்தில் அமெரிக்கன் ஃபுட்பால் நடக்கும் போது ஒரு பந்தயம் நடக்குமே. அதான் இப்ப பேசப்போகும் பொருள்.ஒரு நபர் எதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என திட்டமிடல். இதை தான் மலையாளத்தில் திருஷ்யம் என்ற பெயரில் எடுத்தார்கள். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கெடுத்தார்கள்.

நம் மண்டைக்குள் ஒன்றை புகுத்துவது இன்று நேற்று நடப்பதல்ல, ஆண்டாண்டு காலமாய் நாம் ப்ராண்டுக்கு அடிமையாகி கிடப்பதே அப்படித்தான். செலிபிரடி ஒர்சிப் சிண்ட்ரோமையும், எதிர்பால் கவர்ச்சியையும் உங்களுக்கு தூண்டில் இரையாக்கி அவர்கள் விருப்பதற்கு உங்களை தலையாட்ட வைக்கிறார்கள்.

நாம் அன்றாடம் தெரு சுவர்களில் பார்க்கும் இரட்டை இலை, உதயசூரியன் கூட ப்ராண்ட் புரமோசன் தான்.
அந்த கட்சியின் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் யார் என கூட அறியாமல் இன்னும் சின்னத்திற்கு ஓட்டு போடும் ஆட்களை ஆட்டுமந்தைகள் என நீங்கள் அழைப்பீர்களேயானல். விளம்பரத்திற்கு பலியாகி அந்த பொருளை மட்டுமே பயன்படுத்துவேன் என்பவர்களும் ஆட்டு மந்தைகள் தான்!

விளம்பரத்தில் தவறான தகவல்களை பரப்புவோர், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பது போன்றவைகளை செய்தால் அதில் நடிப்பவருக்கு தண்டனை மற்றும் அபராதம் என மத்திய அரசு சட்ட திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றயுள்ளது.

கூடவே கங்கை நீர் புனிதம், மாட்டு மூத்திரம் புரோட்டின் மிகுந்தது போன்ற டுபாக்கூர் விளம்பரங்களுக்கு நடிவடிக்கை என்பார்களா என்றால் நிச்சயம் இருக்காது. இந்த சட்ட திருத்த மசோதாவே உள்ளூர் சிறு வியாபாரிகளை நசுக்கி வெளிநாட்டு கார்ப்ரேட்களை உள்ளே கொண்டு வரும் கார்ப்ரேட் அடிமைகளின் முயற்சியே!

நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை. அதன் தரம் பேசும்


#குவியல்

அரசும் ஜோக்கரும்!

//"இங்க பாக்க முடியாது. அப்பல்லோல தான் பாக்கனும்னா ஓட்டு ஏன் கெவர்மென்டுக்கு போடனும்.
அப்போல்லோவுக்கோ போட்ரலாமே"//

இது ஜோக்கர் படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால் ஒரு வரியில் முடிவதில்லை இதன் வலி.ஆஞ்சியோ செய்த பிறகு அப்பாவுக்கு தொடர்ச்சியான விக்கல், மருத்துவ நண்பர்கள் சிலர் இது சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்னு சொல்லவும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு வாரம் கழித்து சொல்கிறார்கள் உங்கப்பாவுக்கு மூளை காய்ச்சல், இங்கே அதற்கு பார்க்க டாக்டர் இல்லையென்று. முன்னாடியே சொல்லியிருந்தா கூட சேலத்தில் அல்லி மேடம் உதவியுடன் அப்பாவை காப்பாத்தியிருக்கலாம்.

எனக்கு தலையில் அடிபட்டி, முகவாதம் வந்து பேச்சு வராமல் முதலில் அங்கே தான் போனோம். அதென்ன சாபகெடு என்று தெரியவில்லை. எல்லா வியாதிக்கும் பாராசெட்டாமால் தான் மருந்தாக இருக்கிறது அரசு மருத்துவமனைகளில். கடன் வாங்கியாவது பார்த்துக்கொள்ளலாம் என சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்

ஒரு கட்டுரைக்காக போதைபழக்கத்தில் இருந்து மீள நினைப்போற்கான வார்ட்டில் நோயாளிகளிடம் பேசினேன். ரெண்டாவது நாளிலே டாக்டர் சொல்கிறாராம். இங்கே தேவையான மருந்துகள் இல்லை. எனது கிளினிக் எதிரில் தான் இருக்கு. அங்கே வாங்க என்று.

இருக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவர்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை, மருந்துகள் இல்லை.
அந்த துறை மட்டுமல்ல.
காவலர்கள் இல்லை, நீதிபதிகள் இல்லை, பேருந்துகள் இல்லை.

இப்படி இல்லை இல்லை என்பது கடைசில் கஜானாவில் பணம் இல்லை என்பதாக போய் நிற்கிறது!

நாம் யாருக்கு ஓட்டு போட்டோம், எதற்காக ஓட்டு போட்டோம்?

குவியல் (18.08.16)

கொஞ்சநாளா மழைய மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது. ஈரோட்டில் மழைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சோன்னு நினைக்கும் போது அதை தொட்டு அங்கிருந்து வானவில்லுக்கு போயி ஹைகூ மாதிரி ஒரு போஸ்ட் தேறுச்சு.

அவ்ளோ தான் கற்பனை, குதிரையில் ஏறி உட்கார்ந்துட்டா போதும் அது பாட்டுக்கு நம்மை கூட்டிட்டு போகும். நாம கவனிச்சா மட்டும் போதும்.

கவனித்தல் பத்தி சொல்லும் போது ஞாபகம் வருது. தமிழக சட்டமன்றத்தில் நாங்க மட்டும் தான் பேசுவோம், வேற யாரும் பேசக்கூடாதுன்னு நினைச்சிட்டாங்க போல.

அதே சட்டமன்றத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம் சொல்றேன். அப்ப காங்கிரஸ் ஆட்சி, எதிர்கட்சி தலைவராக பேரறிஞர் அண்ணா இருக்கார்.
காங்கிரஸ் தலைவர் பேசி அமர்ந்ததும் அண்ணா எழுந்து கை தட்டி அருமையான சொற்பொழிவு, இயேசுவின் மலை பிரசங்கத்திற்கு ஒப்பானதுன்னு சொல்ல

காங்கிரஸ் தலைவர் எழுந்து, இயேசு மாதிரி என்னையும் சிலுவையில் அறைந்துவிடாதீர்கள் என்றார். உடனே அண்ணா எழுந்து, இயேசுவை சிலுவையில் அறைய காட்டி கொடுத்து காரணமான இருந்த அந்த ஒருவன் அவர் கூடவே தான் இருந்தான்,. நீங்களும் கவனமா இருங்க என்றார்.

ஒருத்தர் கவனத்தை ஈர்ப்பது விளப்பரத்தின் யுக்தி தான், ஆனால் தவறான தகவலை கொண்டு சமகால பிரச்சனைகளை ஆயுதமாக்கி விளம்பரம் செய்வது சரியான மோடிதனம். அந்த மஞ்சகாமாலை மருத்தை தான் சொல்றேன்மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ஷாக்சிமாலிக்குக்கு அரசு பணி கொடுத்து ஊக்க தொகையும் கொடுத்திருப்பது வரவேற்றதக்கது. மத்திய அரசின் ஊக்கதொகை கொடுக்கப்போவதாக மோடி அறிவித்துள்ளாராம். அப்படியே விளையாட்டு துறை மேல் கொஞ்சம் அதிக கவனம் கொடுத்தாம் நலம். அட இங்க கூட ஒரு கவனம்.

ஒரு படம் பார்த்தா அதை செமையா ரசித்து பார்க்கனும்,. காட் ஃபாதர் முதல் பாகம் பார்த்துட்டு இரண்டாம் பாகம் பார்க்க நேரம் கிடைக்காம வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன். கிடைக்கும் கொஞ்ச இடைவெளியில்
குச்சுனா கஹோ, குச்சு பீனா கஹோன்னு 1942 லவ் ஸ்டோரி பாட்டு கேட்க சரியா இருக்கு!

#குவியல்
#நான்லீனியர்

அடிமைகள் அரசு!

இன்று 11.08.16 34 வது நாள். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,
பதிவு செய்யப்பட்ட மரணம் 54. கிளச்சியாளர்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் கணக்கு தெரியவில்லை.

இந்த விசயம் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல. காஷ்மீரில் என்ன நடக்கின்றது என்று உலக நாடுகள் கவனித்துக்கொண்டு இருக்கின்றது.
காஷ்மீரினால் இந்தியா, பாகிஸ்தான் போர் மூளக்கூடும். பாகிஸ்தானுக்கு எதாவது பெரிய நாடு ஆதரவு தெரிவித்தால் இந்தியாவுக்கு வலிய வந்து ஒரு நாடு ஆதரவு தெரிவிக்கும். காஷ்மீர் என்ற சிறு நில பகுதி மூன்றாவது உலக போரை கூட கொண்டு வரலாம்.

அப்படி கொழுத்து விட்டு எரியும் காஷ்மீர் பற்றி உங்கள் நிலைபாடு என்ன என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டால் அவர் என்ன செய்துள்ளார்?

காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் என்று பாட்டு பாடியுள்ளார்...

சென்ற முறை ஜே,கே.ரித்தீஸை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுத்தபொழுது எழுதினேன். ஒரு நடிகருக்கு அதுவும் இளம் நடிகருக்கு எப்படி அரசியல் தெரியும்? அரசியல் அனுபவமில்லாத அவருக்கு ஒரு பெரிய கட்சியில் சீட்டு கிடைக்கின்றது என்றால் எவ்வளவு செலவு செய்திருப்பார். அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வாரா அல்லது அவரது செலவு தொகையை மீட்டெடுப்பாரா என்று(அப்பொழுது ரித்தீஸ் திமுக, இப்பொழுது அதிமுக)திமுக ரித்தீஷ் விசயத்தில் சறுக்கியது என்றே கூறலாம்.
நான் அறிந்து திமுகவின் அடிமட்ட தொண்டன் வரை பகுத்தறிவு பேசுவான்.
சாமியே கும்பிட்டாலும் உலக நடப்புகள் விரல் நுனியில் இருக்கும்.
எந்த விவாதமாக இருந்தாலும் தரவுகள் முன் வைத்து பேசுவார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை எந்த கேள்விக்கும் பதில் ஒன்னு. இது மக்கள் நல அரசு அதனால் செலவாக தான் செய்யும், இரண்டு. எல்லாம் அம்மாவுக்கு தெரியும்(அப்ப நீங்க புடுங்கவா கட்சியில இருக்கிங்க)

எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை ஜனநாயகம் கேலி கூத்தாகும் என்பதை சாக்ரடீஸ் காலத்திலயே சொல்லிட்டாங்க. ஒரு செயல்முறை(சிஸ்டம்) தோற்கும் பொழுது அதற்கு மாற்று செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் அதற்கு தயாராக இல்லை.

விளம்பர நிறுவனம் ஒரு பொருளை வாங்க நம்மை மூளை சலவை செய்வது போல் மத்திய அரசும் மாநில அரசும் நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது.
மின்சார துறையில் நட்டம், போக்குவரத்து துறையில் நட்டம், பால்வள துறையில் நட்டம். லாபமாக இயக்கிகொண்டிருக்கும் ஒரே துறை டாஸ்மாக்.

பத்தி எரியும் காஷ்மீர் பற்றி கேட்டால் பாட்டு பாடும் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் திறமையா செயல்பட போறாங்களா?
ஆமா நாங்க அடிமைங்க தான்னு ஒத்துகிட்டார் ஒரு எம்.எல்.ஏ.

ஆனாலும் இந்த மக்கள் ஏன் திரும்ப திரும்ப அடம் பிடிச்சு நாசமா போறாங்க?

பாம்புகள்

உலகில் 2900 வகையான பாம்புகள் உள்ளன. அதில் 375 வகை பாம்புகள் விசம் கொண்டவை. பாம்புகளுக்கு இமை கிடையாது. சில பாம்புகள் சாப்பிடாமல் இரண்டு வருடம் வரை கூட வாழும்.

அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியுசிலாந்தில் பாம்புகள் இல்லை. பாலைவனம், சதுப்புநிலம், தண்ணிர் இப்படி அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் வசிக்கின்றன.

அதிக விசம் கொண்ட முதல் பத்து பாம்புகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. பாம்புகள் இரையை மெல்லாது. அப்படியே விழுங்கிவிடும். தன் தலையின் அளவை விட மூன்று மடங்கு பெரிதான விலங்குகளை பாம்புகளால் விழுங்க முடியும். இருப்பினும் பரிமாணத்தில் பற்கள் மறையாமல் இருக்ககாரணம் பாம்புகள் இரை தப்பிசெல்லாமல் இருக்க பற்களால் கவ்வுகின்றன.

பாம்புகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் வழக்கம் கொண்டவை. பச்சை அனகோண்டா என்ற வகை பாம்புகள் 250 கிலோ வரை வளரக்கூடியவை.


Barbados thread என்ற பாம்பு தான் உலகில் மிகசிறிய பாம்பு. முதலில் புழு என்று நினைத்தார்கள். பாம்பை போலயே பிளவுபட்ட நாக்கு தான் இதை பாம்பென்று அடையாளம் காட்டியது.


சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் Titanoboa என்ற பாம்பு வகை வாழ்ந்துள்ளது. முற்றிலும் அழிந்து விட்ட இந்த வகை பாம்பு 42 அடி நீளம் இருக்கும். எடை 1100 கிலோ வரை இருக்கும். தென் அமெரிக்க நாடுகளில் இவை வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரேசில் அருகே ஒரு தீவு உள்ளது. அதை பாம்பு தீவு என்றே அழைக்கிறார்கள். அங்கே ஆராய்ச்சிக்கு கூட செல்ல முடியவில்லை. இரண்டு சதுர அடிக்கு ஒரு பாம்பு என்ற வீதம் அங்கே பாம்புகள் வாழ்கின்றன!


உலகம் முழுவதும் பாம்பு கடியால் வருடதிற்கு ஒரு லட்சம் பேர் வரை இறங்கின்றனர். வெப்ப மண்டல காடுகளில் வாழும் பாம்புகள் வருடதிற்கு ஆறு முறை சட்டையை உரிக்கும்


சில வகை பாம்புகள் முட்டையிட்டும், சில வகைகள் குட்டியிட்டும் இனபெருக்கம் செய்கின்றன. பிறந்ததும் குட்டிகள் தாயை விட்டு பிரிந்து விடும். ஆப்பிரிக்காவில் வாழும் பாறை பைத்தான்(மலைபாம்பு) வகை மட்டும் தன் குட்டிகளை நான்கு மாதம் வரை பாதுகாக்கின்றது.

!

Blog Widget by LinkWithin