கேள்வி - பதில் (கடவுள் நம்பிக்கை)

//பூமி தட்டைன்னு எல்லோரும் நம்பிக்கிட்டு இருந்தபோது விஞ்ஞானிகள் அப்படி இல்லைன்னு 'நிரூபித்துக்' காட்டினாங்க. இப்படி ஒரு கூற்றை மறுத்தவர்கள்தான் ஆதாரம் காட்டியிருக்காங்க. ஆனா கடவுள் விஷயத்துல மட்டும் ஏன் சார் மறுக்கறவங்க நிரூபிக்காம நம்புறவங்கள நிரூபிக்கச் சொல்லுறாங்க?//

அறியாமை வேறு, மூடநம்பிக்கை வேறு
அறியாமையால் பெரிதாக ஆபத்தில், மூடநம்பிக்கை ஆளையே கொல்லும்.
ஆதியில் இயற்கை சீற்றங்களின் காரணம் தெரியாத மனிதன் தனக்கு மேலே எதோ சக்தி இருப்பதாக நம்பினான். அதை வணங்கினால் அது நம்மை துன்புறுத்தாது என நினைத்து வணங்க தொடங்கினான். இந்த மரண பயமே கடவுளின் ஆரம்பம்.

பூமி தட்டை என நம்பியதை நிலவில் விழும் நிழலை வைத்து பூமி உருண்டை என்று நிரூபித்தது அறிவியல். சூரியன், பூமியை சுற்றிவருகிறது என்கிறது மாற்றி பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என நிரூபித்தது அறிவியல், 23.5 டிகிரி சாய்ந்துள்ளதை பருவமாற்றங்கள் மூலம் நிரூபித்தது அறிவியல், நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு அனைத்துக்கும் காரணம் விளக்கி நிரூப்பித்தது அறிவியல்

இன்னும் எத்தனை முறை இல்லாத கடவுளை அறிவியல் கொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல,. சாதி, மத அடிப்படைகள் கூட அது உங்களை பற்றிக்கொண்டிருக்கவில்லை. அதை தான் நீங்கள் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சாதி,மதம் நமது அடையாளம், அதுவே ஒழுக்கம், அதனால் தான் நாம் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில் உங்கள் மண்டைய கழுவி மூளை செய்யப்பட்டுள்ளீர்கள்.

உலகில் எதோ ஒரு மனிதன் கூட சாதி,மத உணர்வற்று வாழ முடியுமென்றால் சாதியும், மதமும் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசமான ஒன்றல்ல, அது திணிக்கப்பட்டது என்பது தெரியாது. உலகில் யாராவது ஒரே ஒரு மனிதனை பசியில்லாமல் வாழச்சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது ஏனென்றால் அது தான் இயற்கை. நீங்கள் பற்றிக்கொண்டிருப்பதை எல்லாமே நம்பிக்கை மட்டுமே. உண்மையல்லபெரியார் கடைசி காலத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார், கருணாநிதி போடும் மஞ்சதுண்டு கடவுள் நம்பிக்கை தான், ரிச்சர்ட் டாக்கின்ஸ் கடவுள் இருக்கலாம் என்று சொன்னார். பரிணாமம் ஏற்றுகொள்வதில் சிக்கல் உள்ளது போன்று மத வியாபாரிகள் கிளப்பிவிடும் பொய்யையும், புரட்டையும், வதந்திகளையும் ஆயுதமாக ஏந்திக்கொண்டு அறிவியலுக்கு எதிராக சண்டையிட்டு கொண்டிருக்கீறீர்கள்.

எதை நிறுவ? உங்கள் மதமே நிறுந்தது, உங்கள் கடவுளே சக்தி வாய்ந்தவர் என காட்டவா?
உண்மையில அது சக்தி வாய்ந்த கடவுளாக இருந்தால் உலகில் இத்தனை கடவுளும், மதமும் உருவாகியிருக்க முடியுமா? உலகில் ஒரே கடவுளும், ஒரே மதமும் மட்டும் இருந்தால் கடவுள் மறுப்பாளன் உருவாகியிருக்க முடியுமா?
இந்த சிம்பிள் லாஜிக்கை கூட யோசிக்க மறுக்கும் நீங்கள் கடவுள் இல்லை என்பதை எங்களை நிரூபிக்கச்சொல்வது எவ்வகையில் நியாயம்?

valpaiyan.Sarahah.com

ஆண்மை குறைவிற்கு சாரு வைத்தியம்!

//ஆண்மை விருத்திக்கு கடுக்காய் சாப்பிடலாமா . சாரு சாப்பிட்லலாம்னு சொல்றாரு//

இந்த உலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர் சாரு, திருவண்ணாமலையில் ஒரு சாமியார் சொன்னா எல்லா நடக்குதுன்னு எழுதிகிட்டு இருந்தாரு, ஒருநாள் அந்த சாமியார், எனக்கும் சாருக்கும் சம்பந்தம் இல்லை. அந்தாள் என் பேரை சொல்லி பணம் கேட்டா கொடுக்காதிங்கன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் ”கடவுளை கண்டேண்”னு நித்தியானந்தா புகழ் பாடுகிட்டு இருந்தாரு. நித்தியானந்தா கைதானதும் அந்த பதிவுகளெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிருச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஒருநாள் வாய்ல நுழையாத ஒரு பேரை சொல்லி. நான் இந்த மதத்தை சார்ந்தவன். அதன் வேத புத்தகம் வெள்ளி கிரகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதுன்னு எழுதினார். உடம்பு பூரா மூளை இருந்தா தான் இந்த மாதிரி யோசனையெல்லாம் வரும். தீடீர்னு ஒரு நாள் என் மனைவி அம்மன்னு எழுதினார். (யார்ரா அது ஜீனத் அம்மனான்னு கேக்குறது)

உடல் நலம் பேணுவதில் சாரு தலை சிறந்த விஞ்ஞானி. ஆரம்பத்தில் மாட்டு மூத்திரம் குடிக்கச்சொன்னார்(அர்க்). பாஜக ஆட்சியில் மாட்டு மூத்திரத்துக்கு டிமாண்டே வந்தது. என்னை கேட்டா பாஜக வேற, சாரு வேறன்னு சொல்ல மாட்டேன். இப்ப கடுக்காயில் வந்து நிப்பார் போல.

அது சரி, ஆண்மை விருந்தின்னு எதை சொல்றாரு?

நீண்ட நேர விரைப்பையா? அல்லது விந்தணு எண்ணிக்கையா?

எதோ ஒன்னு.

”பரவாயில்ல, அவனை விட நீ ரொம்ப நேரம் பண்றன்னு யார்ட்டயாவது சர்டிபிகேட் வாங்கனும்னா கடுக்காயோ, புடுக்காயோ சாப்பிடுங்க.”

வேறென்னத்த சொல்ல**
சீரியஸ் பதில்

இயற்கையில் காதலிக்கும் பெண்ணை நெருக்கும் ஒரு ஆணுக்கு அவள் உடலும், மணமும் கிளர்ச்சியை உண்டாக்கும். அந்த உணர்வை ரசிக்கனும், காதலை மதிக்கனும் அதான் காதலிக்கும் தகுதிபெற்ற மனிததன்மை. அதைவிட்டு ஸ்ப்ரே அடிச்சிகிட்டு, மாத்திரை போட்டுகிட்டு கண்டதையும் சாப்பிட்டுகிட்டு மரத்துப்போன இரு உடல்கள் இணைந்து என்ன சாதிக்கப்போறிங்க?

உங்கள் காதலை அந்த பெண் உணர மாட்டான்னு நினைக்கிறிங்களா? நீங்க மகிழ்வாய் இருந்தது அந்த பெண்ணுக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா? தன்னை காதலிக்கும் ஆணுக்கு தான் பெற்றதை விட ஆயிரம் மடங்கு சந்தோசம் தரக்கூடியவள் பெண்

அப்படியே சீக்கிரம் ஆனாத்தான் என்ன? அடுத்துடத்த முயற்சிகளில் ஆட்டோமெடிக்கா டைம் எடுத்துக்கும், சந்தோசமா இருக்கப்போறிங்க. முதல் தடவையிலயே இன்ப்ரஸ் பண்ண இங்க என்ன போட்டியா நடக்குது

புணரனும்னு காதலிக்காதிங்க
நான் உன்னை எவ்ளோ காதலிக்கிறேன்னு காட்ட புணருங்கள்

valpaiyan.Sarahah.com

அதிமுக - மரணபங்கம்

தினகரனை சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஜெயலலிதா மரணம் பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்
-தினகரன் ஆதரவாளர்

அதாவது இதோட சரியான அர்த்தம் என்னான்னா

அடேய் கூமுட்ட அதிமுக அடிமைகளா, நீங்க புரட்சிதலைவி, பொன்மனசெல்வின்னு தலைல தூக்கி வச்சி ஆடுனிங்களே ஜெயலலிதா, அந்தம்மா இயற்கையா சாகல. அந்த விசயம் எனக்கே தெரியும் போது மத்த ரெண்டு குருப்புக்கும் தெரியும்நாங்க அதிமுகவில் இருப்பது ஜெயலலிதாவிற்காகவோ, எம்.ஜி.ஆருக்காவொ அல்லது கட்சியின் கொள்கைகளுக்காகவோ இல்ல. பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும், கோடி கோடியான சம்பாதிக்கனும்

அந்த பதவிக்காக நாங்க எத்தனை பொய் வேணும்னாலும் சொல்லுவோம், எத்தனை உண்மைகளை வேணும்னாலும் மறைப்போம். அடிமாட்டு பயலுக நீங்க நாங்க தூக்கி போடுற எச்ச நூறு, இருநூறை பொறுக்கிகிட்டு எங்களுக்கு வாழ்க கோஷம் போடனும்-இதை படிச்சிட்டும் அதிமுககாரன் ஒருத்தன் என் ஃப்ரெண்ட்லிஸ்ட்ல இருந்தா அவனுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தனும். ஏன்னா சொரணையே இல்லாத மனுசனை நான் இன்னும் பார்க்கவேயில்லல

#வால்பையன்

கேள்வி - பதில் (காஷ்மீர்)

தம்பி வால் பையா மூளை இருக்கு ஆனா அது யூஸ் பண்ண உனக்கு விருப்பம் இல்ல செத்த மரத்துக்கு தண்ணி ஊத்துர வாடும் மரத்துக்கும் வெண்ணி ஊத்துர பார்ப்பனன் வெளிய இல்ல உனக்குள் இருக்கான் ஜெய் காளி//

இவரு சொல்றதை நான் என்னான்னு புரிஞ்சிகறது?

மூளை இருக்கு ஆனா யூஸ் இல்ல, ஏன்னா பார்ப்பான் உள்ள இருக்கான்னா இல்ல
பாப்பானுக்கு மூளை வேலை செய்யாதுன்னா..

அதை விடுவோம். மூளை என்பதை நான் அறிவுடன் சம்பந்தபடுத்தி பார்க்கிறோம். மூளை இருக்கான்னு கேட்டா அறிவிருக்கான்னு தான் அர்த்தம். ஆனா அறிவு என்பதை பொதுபுத்தியில் ஞாபகத்துடன் சம்பந்தபடுத்தி வைத்திருக்கிறோம். ஞாபகசக்தியால் ஒருவன் அதிக மதிபெண் பெற்றால் அவனுக்கு அதிக அறிவு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனா அறிவு என்பது அதுவல்ல. எந்த ஒரு விசயத்தையும் அதன் சாத்தியகூறுகள் ஆராய்ந்து அறிவது. நம்பிக்கை என்பது அறிவாகாது. அதுக்கு உங்க ஜெய் காளி ஒரு உதாரணம்.

ஒரு சம்பவம் சொல்றேன்
ஒரு நண்பருடன் காஷ்மீர் பற்றி ஒரு விவாதம் எழுந்தது. காஷ்மீருக்கு ஏன் சிறப்பு சலுகைன்னு. அவருக்கு நான் விளக்கினேன்

1947 சுதந்திரம் பெற்றபோது அன்றைய இந்தியாவில் பிரிட்டீஷ் அரசுக்கு கப்பம் கட்டிகொண்டு சில சிற்றரசர்கள் இருந்தனர். அதில் காஷ்மீரும் ஒன்று. சிற்றரசர்களை இந்தியாவில் இணைக்க சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடன் பேசி மானியம் வழங்குவாத கன்வின்ஸ் பண்ணி இந்தியாவுடன் இணைத்தார். அதனால் தான் அவருக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் கிடைந்தது.

1947ல் காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்தது ஹரிசிங் என்ற இந்து மன்னர். அவர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடன் சேராது தன்னிச்சையாக செயல்பட விரும்பினார். ஆனால் சுதந்திரம் பெற்ற அந்த ஆண்டே பாகிஸ்தான் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமிக்க போர் தொடத்தது. அதற்கு இந்தியா உதவியானலும் ஹரிசிங் இந்தியாவுடன் இணைக்க விரும்பவில்லை.நேரு தலைமையில் ஹரிசிங்குடன் நடந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து 1952 ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிறப்பு சலுகை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக முடிவெடுத்து சட்டமாக இயற்றபட்டது

இதை சொன்னதுக்கு அவர் சொல்றார். நீ வரலாறு தெரியாம பேசுற, அவர்களாக தான் இணைய வந்தார்கள் என்று

ஒரு கம்பெனிக்கு வலிய சென்ற வேலை கேட்பவனுக்கு யாராவது சிறப்பு சலுகை தருவார்களா? தீர்மானம் கோரலாம். சட்டமாக இயற்ற நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும். நேருவா முடிவெடுத்து சிறப்பு சலுகை அளிக்க முடியுமா?

நான் 1947ல பிறக்கவேயில்ல. ஆனாலும் அதிகபட்ச சாத்தியகூறுகள் எதற்கு இருக்கு என்பதை சிந்திப்பது தான் அறிவு. காஷ்மீர் இஸ்லாமிய தேசமாகவும். அங்கே வாழ்வது முழுக்க இஸ்லாமிய மக்களாகவும் நம்பிக்கொண்டிருப்பது மதவாதிகள் உங்க மண்டைய கழுவி செய்யப்பட்ட மூளை சலவை.

ஜெய் காளியும் மூளை சலவை தான் 

வாழ்க்கை!

அன் கண்டிசனல் லவ், அன்கண்டிசனல் கேர் இதுவும் கூட செலிபிரட்டி வொர்சிப் சிண்ட்ரோம் மாதிரி மனசிக்கல் தான். தெளிவான  மனநிலையில் இருப்பவர்கள் பிரதிபலிக்கப்படாத, உள்வாங்கி உணரபடாத செயலை தொடர்ந்து செய்யமாட்டார்கள். நாம் தேவைபடாத இடத்தில் அதை உணர்ந்தும் நின்றுக்கொண்டுயிருப்பதே நம்மை நாமே அவமானபடுத்தும் செயல் தான்.

பொருளாதாரம் சார்ந்து ஹோகெல் சொன்ன தத்துவம் என்ன சொல்லுதுன்னா வினை - எதிர்வினை = விளைவு. இதை முதலாளி, தொழிலாளி உறவு, கணவன், மனைவி அல்லது காதலன், காதலி என்று எல்லா உறவுகளுக்கும் பொருத்தி பார்க்கலாம். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கு பின்னால் ஒரு காரணமோ அல்லது தேடலோ இருக்கும்.

ஒரு செயலுக்கு மனிதன் மூன்று விதமான எதிர்வினைகள் காட்டுவான். விருப்பு, வெறுப்பு மற்றும் பயம் அல்லது குழப்பம். இந்த பயம் என்னான்னா இதை செய்யலாமா வேண்டாமா? ரிஸ்க் எடுக்கலாமா இல்ல சும்மாவே இருந்துறலாமா ரகம். பெரும்பாலும் ஆண்கள் காதலை பெண்கள் நிராகரிக்கக்காரணம் இந்த ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தான். உங்களை பிடித்தாலும் முன் தந்த அனுபவம் மீண்டும் ரிஸ்க் எடுக்க விடாதுவிருப்பு, வெறுப்பு ரெண்டுமே ஒன்றுகொன்று தொடர்புடையது. இப்ப அதிமுக கட்சியை எடுத்துக்கோங்க. அந்த கட்சியின் ஒரே ஆளுமை ஜெயலலிதா இறந்துட்டாங்க. அவங்க நல்லவங்களோ, கெட்டவங்களோ அந்த கட்சியின் முக்கியமான ஆளுமை என்பதில் மாற்றுகருத்தில்லை. இப்ப கட்சியே வேறு ஒரு கட்சியின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து கிடந்தாலும் இன்றும் பலர் தம்மை அதிமுக கட்சியை சேர்ந்தவன்னு சொல்றதை பார்க்கலாம். அதுக்கு காரணம் அதிமுக மேல் இருக்கும் விருப்பம் இல்லை. திமுக மேல் இருக்கும்  வெறுப்புஎல்லா செயலுக்கு பின்னாலும் நாம் கடந்துவந்த அனுபவங்களின் தாக்கம் இருக்கும். காதலை நிராகரிக்கும் பெண்ணை இன்ப்ரெஸ் பண்றேன்னு கோமாளிதனம் பண்ணுவது அவர்களை டார்ச்சர் பண்ற மாதிரி ஆகிரும். அவர்கள் போக்கில் விடுவது அவர்களுக்கு சிந்திக்க வாய்ப்பளிக்கும்

நம் வாழ்க்கை என்பதே அனுபவங்களின் கட்டுமானமும், மீண்டும் மீண்டுமான பரிசோதனை முயற்சியும் தான். அது இரண்டும் நம் இருத்தலை இந்த உலகுக்கு காட்டுகிறது. இருத்தலே வாழ்க்கையாக இருக்கிறது

கேள்வி - பதில் (தற்கொலை)

//நீங்க தற்கொலைமுயற்சி பன்னிருக்கீங்களா?//

இல்லை

ஆனால் அந்த மனநிலையில் இருந்தபொழுது சில்வியா ப்ளாத் ஆத்மநாம் போன்ற கருத்துமுதல்வாத சிந்தனை கொண்ட ஆளுமைகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு தீவிரமா யோசிச்சிருக்கேன். கடைசியா இறந்த பிரபாகர் பதிவுகள் கூட இந்த சின்ன வயதில் இவ்வளவு முற்போக்கு சிந்தனையான்னு யோசிக்கவச்சது

ஆதியில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 18 வயசு தான். நிலபிரபுத்துவ சமூகத்தில் நாடுபிடி சண்டை நடந்தபோது அதுவும் சோழர்கள் ஆட்சி காலம் வரை பார்த்தா 36 வயசு தான் சராசரி ஆயுட்காலம். இன்னைக்கு நாம நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்து 70 வயசு வரைக்கும் கொண்டு வந்துட்டோம்....ஆனால் அந்த வயது வாழ்கிறோமா என்றால்..
இயந்திர உலகில் 30 வயதிலேயே காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள், பணம், பாசம், துரோகம், வலி எல்லாத்தையும் பார்த்திருவோம். அடுத்து என்ன? என்று மிகபெரிய கேள்விக்குறி தூக்குகயிறு போல் நம் முன் நிற்கும். மதமும், ஆன்மீகமும் வேகமாக வளர காரணமும் அதுதான்

இன்று ஒரு பதிவு படித்தேன். பிறரை வெல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுது, அதை யார் வேண்டுமானாலும் செய்வார்கள். உங்களை நீங்கள் வெல்லுங்கள். அது உங்களால் மட்டுமே முடியும்

மனித சிக்கலுக்கான சூத்திரங்கள் சிலநேரங்களில் போகிற போக்கில் காணக்கிடையும்., நான் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இந்த பூமியில் 1000 கோடி மனிதர்களாவது பிறந்து இறந்திருப்பார்கள். அவர்களில் வெகுசிலரை மட்டுமே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். காரணம் அவர்கள் எதோ ஒரு வகையில் மனிதத்தை நேசித்தவர்கள்.தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே வர படிப்பது, எழுதுவது என்று டைவர்ட் பண்ணலாம். நீங்க இந்த சமூகத்துக்கு வேணும் வால்னு அழைத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். இருந்தும் சில பொழுதுகளில் வெறுமையை சந்திக்கநேரும். அம்மாதிரி நேரங்களில் போதையின் பிடியில் நம்மை ஒப்புக்கொடுக்கும் அவலம் நடக்குறது

இதையெல்லாம் விட ஒரு மனிதனுக்கு அங்கிகாரம் அளித்து நம் இருத்தலை உணரசெய்யும் சக்தி ஒரு விசயத்திற்கு உண்டு

அதனை காதல் என்று அழைப்பார்கள்

valpaiyan.Sarahah.com

சபிக்கப்பட்டவர்கள்!

//மீண்டும் காதலிபீர் தெரியும் காதலிக்கபடுவீர் என நம்புகிறீறா..//
கடந்தகாலத்தை நினைவுபடுத்த தெரியாதவர்கள் மீண்டும் அதே வாழ்வை வாழ சபிக்கப்பட்டவர்கள்
-ஜார்ஜ் சாந்தாயன் என்ற புகழ்பெற்ற தத்துவஞானி எழுதியது


இயற்கையிலயே எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதால் பெண்கள் காதல் விசயத்தில் பயங்கர உஷார். முன்னால் எதுவெல்லாம் பிரச்சனை கொடுத்ததே அதை தவிர்த்து விடுவார்கள். தெரியாதனமா பண்ணிட்டா கூட எதும் பிரச்சனை வந்துருமோன்னு பதட்டப்படுவார்கள்
இந்த விசயத்தில் பெரும்பாலான ஆண்கள் கூமுட்டைகள். திரும்ப திரும்ப காதலிச்சு பல்பு வாங்கும் வரம் பெற்றவர்கள், ஆனாலும் காதல் என்பது பிரதிபலிக்கப்பட்டால் தான் முழுமையடையும். உணரபடாமலே இருந்தால் அங்கேயே தேங்க மாட்டார்கள்.
காதலை முழுமையாக உணரக்கூடிய வயதில் தலையணை சைஸ் புத்தகத்தோடு உறவாடிக்கொண்டிருந்தேன். சுண்டல் பேப்பர், தெருவில் கிடக்கும் பேப்பரை பொறுக்கி கொண்டுருந்தேன். இப்ப காதலிக்க ஆள் தேடினா விளங்குமா
எதோ ஒரு வலியில் வரும் தோழர்களுக்கு உளவியல் ஆற்றுபடுத்துனரா இருப்பது பிடிச்சிருக்கு.
நான் காதலிக்கபடுவேனா என்பதை விட என் காதலை தாங்கும் சக்தி இங்கே யாருக்கும் இருப்பதா எனக்கு தெரியல
பின் சேர்ப்பு
சொல்ல மறந்துட்டேன். ஜார்ஜ் சொன்ன அந்த சாபம் பெற்ற ஒரு கூட்டம் எனக்கு தெரியும். அவர்களை தமிழக வாக்காளர்கள் என்று அழைப்பார்கள் 😂😂😂😂😂😂 

சாதி இருக்கும் வரை சாதி ரீதியான இடஒதுக்கீடு இருக்கும்...

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க வேணும்னா அந்த வீட்டில் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆளக்காரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள் தான்

செக்ஸ் கல்வி (ஓரினைசேர்க்கையாளர்கள்)

//Gay உருவாகிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா? உங்கள் கருத்து//

ஓரினைசேர்க்கையாளருடன் அனுபவம் உள்ளதுன்னு எழுதியவுடன், உங்கள் அனுபவத்தை சொல்லுங்கன்னு ஏகப்பட்ட மொட்டகடுதாசி.. அதென்ன அட்வெஞ்சரா,, சிலாகிச்சு சொல்ல. அது ஒரு விபத்து. ஆனால் ஓரினைசேர்க்கையை பற்றி தெரிந்துக்கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இல்லைன்னா நானும் மத அடிப்படைவாதிகள் போல் ஓரினைசேர்க்கையாளர்கள் சாத்தான் வாரிசுன்னு எழுதிட்டு திரிந்திருப்பேன்..

பெற்றோர்களுக்கு 35+ வயத்திற்கு மேல் பிறக்கும் குழந்தைகள் (எல்லாரும் அப்படி இருக்கனும்னு அவசியமில்ல) பெற்றோர் பைசெக்ஸுவலாக இருப்பது, குழந்தையாக இருக்கும் போது ஊட்டசத்து குறைபாட்டால் ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆவது. இந்த குறைபாடுகளை ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிக்க முடியும் என்று நவீன மருத்துவ அறிவியல் கூறியுள்ளது

பதின்மம் மற்றும் இனபெருக்க பருவம் மிகவும் முக்கியமான ஒன்று. பத்து ஆண் நண்பர்கள் ஒன்னா கட்டிபிடிச்சு உருண்டாலும் பாலியல் சிந்தனை உருவாகாது, ஆனால் புதியாய் ஒரு பெண் அருகில் இருந்தாலே அவள் வாசனையே பாலியல் ஹார்மோன்களை தூண்டி விடும். அந்த வயதுகளில் சம வயதுடைய பெண்ணுடன் ரொமான்ஸ் செய்யும் பொழுது ஒருவருக்கு முன்னரே ஆர்கஸம் ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் அந்த வயதில் கட்டிபிடித்தலே செக்ஸ்க்கு சமமான செயல் தான்., அதே ஆண் ஒரு அனுபவமிக்க பெண்ணுடன் ரொமான்ஸ் செய்யும் பொழுது தடவுதலில் ஆர்கஸம் எட்டியவுடன் அந்த பெண். “அவ்ளோ தானா”ன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். அவனை உயிருடன் தந்தூரி அடுப்புக்குள் இறங்கியது போல் உணர்வான். தான் பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள லாயக்கில்லை என்ற தாழ்வு மனம்பான்மை ஏற்படும். பெண்கள் என்றாலே செக்ஸ் ஹார்மோன் சுரக்காது. இம்மாதிரி ஆட்களை நம்பி தான் பரம்பரை வைத்தியர்கள் ஊர் ஊரா லாஜில் ரூம் போட்டு திரிகிறார்கள்சிறுவயதில் ஹாஸ்டலில் படிப்பது, சிறைசாலை, நீண்டநாட்கள் பெண் வாடையே படாமல் இருக்கும் ராணுவத்தினரிடையே ஓரினைசேர்க்கை உறவுகள் ஆரம்பிப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் தன் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் பொழுது அவனுக்கு இயற்கையாக இருக்கவேண்டிய எதிர்பால் ஈர்ப்பு குறைந்துபோகிறது.  

இம்மாதிரி பல்வேறு சூழ்நிலைகளில் ஓரினைசேர்க்கை பிரியர்களாக ஆனவர்களுக்கு சரியான துணை இன்னொரு ஓரினைசேர்க்கை பிரியர் அல்ல என்பது விந்தை. அவர்களுக்கு சரியான துணையாக இருப்பது பை செக்ஸுவல் என அழைக்கப்படும் இருபால் பிரியர்கள். இவர்கள் பற்றி ஆய்வு செய்தபொழுது பண்டைய கிரேக்க நாகரீகத்தில் பெண்ணுடன் உறவு கொள்வது குழந்தை பேறுக்கு மட்டுமே, ஆணுடன் உறவு கொள்வதே ஆணுக்கு அழகு என்ற நம்பிக்கை இருந்துவந்துள்ளது தெரிந்தது. மாவீரன் அலைக்ஸாண்டர் என்று அழைக்கப்பட்டவன் ஒரு பை செக்ஸுவல் என்பது நிறைய பேருக்கு தெரியாது

பை செக்ஸுவல்கள் பெரும்பாலும் பேண்டஸி செக்ஸ் பிரியர்கள். (செக்ஸ் புரிதலுள்ள தம்பியர்கள் இதில் விதிவிலக்கு) மிசினரி பொஸிசனில் இருந்து விடியோவில் பார்க்கும் எல்லாவறையும், அதில் ஓரல் செக்ஸ், ஏனல் செக்ஸூம் அடங்கும் செய்து பார்க்கும் ஆவல் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் நிறைவேற்ற முடியாத ஆசைகளை இவர்கள் ஓரினைசேர்க்கையாளர்களிடன் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். உலகில் ஓரினைசேர்க்கையாளர்களோடு கணிக்ககிட்டால் பைசெக்ஸுவல்கள் 60% இருக்கலாம் என்று ஆய்வு சொல்கிறது.. இவர்களுக்கு உடலுறவுக்கு நிறைய சட்டதிட்டங்களும், சடங்கு, சம்பரியாதங்களும் விதிக்கும் மனைவி வாய்த்தால் ஒரேடியாக ஓரினைசேர்க்கையாளர்களாக வாய்ப்புள்ளதுமேலே குறிபிட்ட ஹார்மோன் குறைபாடு விசயத்தில் திருநங்கைகளும் வந்துவிடுவார்கள். அவர்களை தனியாக பிரித்துபார்க்கவேண்டியதில்லை

என் புரிதலில் மனைவியை கொடுமைபடுத்தும் தந்தையை பெற்றவர்கள், சிறுவயதில் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளானவர்கள். எதோ சில காரணங்கள் ஆண்கள் மேல் தீராத வெறுப்பு கொண்டவர்கள் லெஸ்பியன் ஓரினை பிரியர்கள் ஆக வாய்ப்புண்டு. ஆனால் ஒப்பிட்டவளவில் இது மிக மிக குறைவு. இருப்பினும். லெஸ்பியன்களுக்கு குரல் கொடுக்கும் @Malani மற்றும் செக்ஸ் பேச வேண்டிய விசயம் தான் என எழுதும் @Bulbul போன்றவர்கள் லெஸ்பியன்கள் பற்றி எழுதினால் பலர் தெளிவு பெற வாய்ப்பாக அமையும்

ஓரினைசேர்க்கை இயற்கைக்கு புறம்பானது என்று தான் நானும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ப்ளாக் ஆரம்பித்த புதிதில் அப்படி எழுதியும் இருக்கிறேன். ஆனால் விலங்கினங்களில் 258 வகைகளுக்கும் மேல் ஓரினைசேர்க்கையாளராக இருப்பது தெரிந்தது முதல் என் கருத்தை மாற்றிக்கொண்டேன்

மேலும் அது குறித்து படிக்கையில் பரிணாம மாற்றத்தின் அடுத்த படியாக பெண், ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே கொமேடோ டிராகன் அப்படி முட்டையிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.  ஈஸ்ட்ரோஜன்(பெண்மைக்கான சுரப்பு) அதிகம் காணபட்ட நதிநிலைகளில் ஆண் மீன்கள் கருமுட்டையுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருங்காலம் இருபால் நிலையும் மறைந்து ஒரே பாலினமாக ஆகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறன,

எனக்கு காபி, டீ பிடிக்காது என்பதற்காக அதை குடிப்பவர்களை குற்றவாளி என சொல்லமுடியுமா? அப்படி தான் நமக்கு ஓரினைசேர்க்கை பிடிக்காது என்பதற்காக அவர்களை குற்றவாளிகள் போல் பார்ப்பது. ஒரு பெண்ணிடம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் பொழுது பலர் முன்னிலையில் உங்களை அவமானபடுத்தினால் எப்படி இருக்கும். அதுவே தான் தன் விருப்பத்தை தெரிவிக்கும் ஒரு ஓரினைபிரியரை ஸ்கீரின்ஷாட் போட்டு அவமான படுத்துவதும். ஒரு பெண் உங்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே நீங்கள் இவர்களிடம் நடந்துக்கொள்ளுங்கள்

ஆண்பால், பெண்பால் மறைந்து அன்பால் இணையப்போகும் காலத்தில் நாம் படியெடுத்து வைத்துவிட்டோம்

கேள்வி - பதில் (16.08.17)

//இந்தி எதிர்ப்பு" ஈழப்போராட்டம், ஜல்லிக்கட்டு, இந்த போராட்டங்களில் உங்களை மிகவும் ஈர்த்தது, பாதித்தது, நேர்மையானது எது ஏன்???.. பிரபாகரன் கலைஞர், ஒற்றுமை வேற்றும
//
இந்தி எதிர்ப்பின் போது நான் பொறக்கவேயில்ல
ஈழப்போராட்டம் உணர்வு பூர்வமானது ஆனால் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிக்கொள்ள மடை மாற்றியது போராட்டத்தை நீர்த்துப்போக செய்தது
ஜல்லிகட்டு போராட்டமும் தோல்வி தான். ஏன் ஜல்லிகட்டை ஆதரிக்கிறோம்னு தெரியாமலே நிறைய பேர் வந்து அரசியல் கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்
என் புரிதலில் பேசப்பட வேண்டிய நேர்மையான போராட்டம் நெடுவாசல் போராட்டம். யார் வந்தாலும் வாங்க, வராட்டி போங்கன்னு மக்களே அமர்ந்து போராடியது. ஆனால் அவரை பொறுத்தவரை நெடுவாசல், கதிராமங்கலம் போராட்ட மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள். ஏன்னா ஆட்சி நடத்தது அஹிம்சாவாதி
கருணாநிதி, பிரபாகரன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை. அரசியல் அனுபவமும் இல்லை. கருணாநிதியின் சினிமா மற்றும் இலக்கிய பங்களிப்பு தமிழுக்கு மிக முக்கியமானது. 90க்கு பிறகு அரசியலில் சுயநலம் ஏற்றுகொண்டார் என்பது என் புரிதல். பிரபாகரன் ஒரு தேசியத்தின் தலைவராக பல லட்சம் மக்களால் ஏற்றுக்கொள்ளபட்டவர். இருவர் மீதும் தனிபட்ட முறையில் விமர்சனம் இருந்தாலும் இருவருமே தமிழ் சமூகத்தின் மறுக்கமுடியாத ஆளுமைகள்

****

//காமராஜர் நெஜம்மாவே அவ்வளவு சூப்பரா ஆட்சி பண்ணினாராங்க?//
சூப்பரான்னு தெரியல. ஆனா நேர்மையாக இருந்தார் என்பது உண்மை. பிற மாநிலங்களை விட தமிழகம் கல்வியிலும், தொழிலிலும் முன்னோடியாக இருப்பதற்கு காமராஜர் ஒரு காரணம். ஏழைகளும் படிக்க வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை உருவாக்கியது அனைவருக்கும் தெரியும்
ஒரு கம்பெனி தமிழகத்தில் பத்து தொழிற்சாலைகள் அமைக்க விரும்பியது. ஒவ்வொரு கம்பெனியின் செலவிலும் 10% கமிசனாக கிடைக்கும் என சொல்லப்பட்டது. அதற்கு காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா? அந்த பத்து கம்பெனி கமிசனை வச்சு இன்னொரு கம்பெனி ஆரம்பிக்கச்சொல்லு என்றார்
இன்றைய அரசியல்வாதிகளோ தொழில் தொடங்க வரும் கம்பெனிகளிடம் 40% கமிசன் கேட்டு எல்லாரையும் வெளிமாநிலங்களுக்கு துரட்டிக்கொண்டு இருக்கின்றனர்.. அதிலும் குறிப்பாக 2011-2017 தொழில் வளர்ச்சியில் தமிழகம் வரலாறு காணாத மந்தம்****

//சைகோ தனத்தின் உச்சம் எது?? சைகோகளை எப்படி கண்டுபிடிப்பது..
//
அந்த அளவுக்கு டீப்பா தெரியல‌
என்னை பொறுத்தவரை நமக்கு வலிப்பது போல் பிறருக்கும் வலிக்கும்னு புரியாதவர்கள் எல்லாருமே சைக்கோக்கள் தான்.
என் புரிதலில் ஒருவர் செய்த தப்புக்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் அல்லது வேறு ஒரு தனிநபரை பழிவாங்கும் மனபான்மையை சைக்கோதனம் என்று உணர்கிறேன். யோசித்து பாருங்க, நான் சொல்றது சரின்னு தெரியும்
அதில் உச்சம் பற்றி யோசிக்கவே முடியல

*****

பணத்தை வைத்து சாதியை ஒழிக்க முடியாதா?//
வளர்ந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் பெற்றதால் சாதி ஒழியவில்லை
அவர்கள் பிரிவினைகளை ஒழித்ததால் தான் பொருளாதார முன்னேற்றம் பெற்றார்கள்
சாதி பொருளாதாரத்தையும் தாண்டி மேட்டிமைதனம் பேசுவது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்ததால் மட்டுமே இன்னைக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் சங்கராச்சாரி ஆகிவிட முடியுமா? கோவில் கருவறைக்குள் செல்லமுடியுமா? முற்றிலுமாக சாதி போன்ற பிரிவினைகள் ஒழியும் வரை நாடும் முன்னேறாது, மனிதமும் முன்னேறாது

*****

//சசிகலா தான் வரணும்ன்னு தைரியமா பேசுற சுப்ரமணியசாமிய யாரும் BJP ல கேக்காதது அவங்க இயலாமையா? இல்ல இவரோட ஆளுமையா? இல்ல BJP la எவ்வளவு கருத்து சுதந்திரம்ன்னு பாருங்கன்னு சொல்றதுக்கா//
ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அதுவும் சிறை சென்று திரும்ப பிறகு பொன்னார் சொன்னபொழுது பாஜக எதுவும் கேட்கவில்லை. அதே பொன்னார் இப்போ சசிகலாவுக்கு ஆதரவா பேசினா பதவியே பறிக்கப்படலாம்
பாஜகவில் சுதந்திரம் பார்ப்பனியத்திற்கும், பார்ப்பனியத்தின் ஆதரவாளருக்கு மட்டும் தான்
ஜனாதிபதி வேட்பாளர் தலித் தான் ஆனாலும் நல்லவர் என்றால் என்ன அர்த்தம்
மற்ற தலித்துகள் மேல் என்ன அடையாளம் சுமத்த நினைக்கிறார்கள்
இது தான் பார்பனீயம்
வேறு யாருக்கும் இந்த யோசிக்கக்கூட தோணாது

****

//NEET க்கு எதிரா பேசும்போதே current system la management quota la சாப்ட்ற கல்விதந்தைகள் மறைமுகமா இன்னும் ஒரு 3 வருசம் சம்பாதிக்கட்டும்ன்னு சொல்றோமா?//
நீட் என்பது வரைமுறை படுத்திகிறோம் என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சி, மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு இல்லை என்பது பக்தாஸ்க்கும் தெரியும், ஆனாலும் முட்டு கொடுப்பாங்க‌
கல்வி களவாணிகளை வரைமுறை படுத்த வேண்டிய சட்டம் வேற. அதை சரி செய்யத்தான் நீட் என்பது காய்ச்சல் என்ற வியாதிக்கு சூடு வைக்கும் முட்டாள்தனம். கல்வி களவாணிகள் மட்டுமல்ல. தமிழகத்தில் இயற்கை வளங்கை சுரட்டும், காருண்யா, ஜக்கி மற்றும் தாது மணல் கொள்ளைகள் மீதும் கடுமையான நடவடிக்கை வேண்டும்.
அதை செய்யாத அரசு உண்மையில மக்கள் நலனில் தான் நீட் கொண்டு வந்துருக்குன்னு நம்புறிங்களா/ ஒரு பக்கம் கல்வி களவாணிகளுக்கு ஆதரவளிக்கும் படி இருக்குன்னு சொல்லிட்டு இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கும் களவாணிகளும் கல்வி களவாணிகள் தான். அது ஏன் உங்களுக்கு தெரியல‌

*****

கேள்வி - பதில் (12.08.17)

//உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்... உங்களுடைய ஒரு நல்ல பழக்கத்தைப்பற்றி விரிவாக சொல்லுங்களேன். எப்படி ஆரம்பித்தது, அதை ஏன் இன்னும் தொடர்கிறீங்கள் என்பன பற்றிய விவரனைகளுடன். நன்றி வால்...
//
ஒரு செயலின் விளைவுகளே அது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்கிறது.
கொலை தவறு, ஆனால் ஒரு மனிதவெடிகுண்டை கொல்வது சரியானது
ஆக இது சரியா தவறா என்று யோசிக்க ஆரம்பித்தால் எதையுமே செய்ய முடியாது. என்னை பொறுத்தவரை குற்ற உணர்வை ஏற்படுத்தாத எல்லாமே சரி தான்.
எப்போதாவது தடுமாறினாலும் நான் கடைபிடிக்கும் பழக்கங்கள்:
தவறை நியாயபடுத்திக்கொண்டே இருந்தால் நம்மை திருத்திக்கொள்ள முடியாது
பிறரை குறை கூறுவதே நம்மை நியாயபடுத்தும் செயல் தான்
எதையும் விழிப்புடன் செய்வது
அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்வது
எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மாணவனாக இருப்பது
முடிந்தவரை இயற்கையாக வாழ்வது

*****

//வாழ்நாள் முழுக்க நடந்தாலும் பாதம் ஏன் தேய்வதில்லை//
உடல் உறுப்புகள் உயிருள்ள பொருள். நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் நம் உடலை ரிப்பேர் செய்துக்கொண்டே இருக்கும்.
முடி வெட்டினால், நகம் வெட்டினால் வலிக்காது, ஏனென்றால் அவை இறந்த செல்கள்

*********

//நீங்க ஏன் இப்படி ப்ளே பாயாவே இருக்கீங்க உண்மையான பதில் வேண்டும்//
பிறருக்கு தொந்தரவு இல்லாமல் நமக்கு சந்தோசம் தரும் எதையும் செய்யலாம். எனக்கு கால் பாயா இருக்கக்கூடத்தான் ஆசை, அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் போல

***

//ராஜன் ஒங்க ஜிகிரி தோஸ்தா//
என் தம்பி

**

//ரொம்ப சர்சைக்குரிய விசயங்கள் ஆனா வெளிப்படயா நேர்மையா தோணுறத போட்டோவோட எழுதிறீங்க, போலிஸ், அரசியல்வாதிங்க தொல்லை இல்லியா//
ஒரு உயிரின் மிகப்பெரிய பயம் மரணம்
அதை கடந்துவிட்டால் வேறு எதை பற்றியும் பயம் வராது.
போலிஸ் இதுவரை கேட்டதில்லை
அரசியல்வாதிகள், மதவாதிகள் கொலைமிரட்டலும், போன் பண்ணி திட்ற வேலையும் செய்வாங்க.
என் கேள்வி உன் நம்பிக்கையை காயபடுத்தினால் உன் நம்பிக்கையில் தான் பிசுகு. என் கேள்வி சரியானதே என்பேன்

***

//பெரியார் பற்றியும், திராவிடம் பற்றியும் உங்கள் கருத்தை அறிய ஆவல்//
திராவிடம் என்பது ஆரியர்களுக்கு எதிரான அவர்களது கொள்கைகளுக்கு எதிரான நிலபரப்பு ரீதியாக நம் தொன்மங்களின் படி கட்டமைக்கபட்ட சித்தாந்தம். இஸம் என்றும் சொல்லலாம்
ஆரியர்களின் வருணாசிரம கொள்கை, குலகல்வி முறையை எதிர்த்து வெற்றி பெற்றத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது
கர்நாடகா, கேரளா நம்மை போட்டு மிதிக்கிறானே என்பது நமக்கும் பக்கத்து வீட்டு காரனுக்கும் இருக்கும் தகராறு போற்றது. அதுக்கும் திராவிட சித்தாந்தம் எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறாக சித்தரிப்பது தமிழ் தேசியவாதிகளின் மொன்னைவாதம்
நம் வீட்டுக்கு வேலி அமைத்து கொள்ளவும், நம் உரிமைகளை சண்டை போட்டு பெற்றுக்கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு. அவ்வகையில் தமிழ் தேசிய சித்தாந்தத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் திராவிடத்தால் தான் வீழ்ந்தோம் என்பது அயோக்கியதனம்
முக்கிய குறிப்பு, தற்சமயம் இருக்கும் திராவிட பெயர் தாங்கி கட்சிகளுக்கும், திராவிட சித்தாந்த்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் முறையை எதிர்த்த பெரியார் படத்தை போட்டு ஓட்டு பொறுக்கும்......... இவர்கள்

*****
//ஓரினச்சேர்க்கை அனுபவம் உண்டா?!//
உண்டு.
இது சம்பந்தமா இன்னொரு கேள்வியும் வந்துள்ளது. அதற்கு விரிவாக பதிலளிக்கிறேன்
சின்ன ட்ரைலர்
உலகில் 60% க்கும் மேற்பட்ட ஆண்கள் பைசெக்ஸுவல்

****


 

பிறருக்கு என் மீது இருக்கும் மதீப்பிடுகள் பற்றியெல்லாம் அக்கறையில்லை
நான் ஏற்கனவே கேள்வி - பதில் பகுதி எழுதிகிட்டு இருக்கேன். சிலருக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள கூச்சத்தாலே முடியாமல் இருக்கலாம். அவர்களுக்காக தான் இந்த அப்ளிகேசனை எடுத்தேன்.***

தமிழ் தேசியம்!

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது ஒரு ஐடியாலஜி, கட்சியின் கொள்கை.
இந்தி, இந்து, இந்தியா போன்ற கேவலமான கொள்கையுள்ள கட்சியே இந்தியாவை ஆளும் போது தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கை மோசமில்லை

ஆனால் அதற்கு ஒரு தமிழனா உங்களுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கும் அக்கறையையும், செயல்முறை திட்டங்களையும் தான் காட்டி ஓட்ட வாங்க முடியும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது மொன்னை வாதம் மட்டுமல்ல, அயோக்கியதனமும் கூடஇந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் முன்னேறியேயுள்ளது. பல மாநிலங்களை விட இங்கே சாதி கலவரம் குறைவு, பாமக போன்ற சாதியவாதம் பேசும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாத்திகிட்டா அந்த குறைவும் இல்லாமல் போகும்.

நீங்க என்னடான்னா நீ தமிழனான்னு தெரிஞ்சிக்க அவன் என்ன சாதின்னு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துகிட்டு இருக்கிங்க. உங்களை மாதிரி பிற்போக்குவாதிகளிடம் இருந்து காப்பாற்றியதே திராவிடம் தான்.

திராவிட கட்சிகளின் ஊழலை சொல்லி ஓட்டு கேளுங்க. அதே திராவிட கட்சியில் இருந்து ஆண்ட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கையாலாகதனத்தை சுட்டி காட்டி ஓட்டு கேளுங்க. நீர்மேலான்மை, விவசாயத்தில் உங்களுக்கு இருக்கும் திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்க.

அதை விட்டு கேனதனமா நரம்பு புடைக்க வந்தேறி வந்தேறின்னு கத்திகிட்டு இருந்தா கடைசி வரைக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்க முடியாது. உங்கள் அரசியலை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதே நல்லது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்க

!

Blog Widget by LinkWithin