ஒரு முக்கிய அறிவிப்பு!

ஈரோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நான் பிறந்த ஊர் மதுரை தான்! அங்கே ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது நான் கலந்துக்கலைனா எப்படி!,
அதனால ஈரோட்டில் இருக்குற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஞாயிற்றுகிழமை மதுரை போறேன்! யார் யார் கூட வர்றிங்க, எல்லாரும் கைய தூக்குங்க!

நண்பர்களின் தொடர்புடய சுட்டிகள்!

கார்த்திகை பாண்டியன்

ஸ்ரீ


சீனா ஐயா

டக்ளஸ் ராஜு

சோலை அழகு புரம்

நர்சிம்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் வால்பையன்.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .

இன்று குடியரசு தினம்!

நாம் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, அது விதிக்கப்பட்டது என்று நினைத்து கொண்டாலும் சரி, தற்செயலானது என்று நினைத்து கொண்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நாம் பிறக்கும் போதே அந்த நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மோடு சேர்ந்து ஊட்டப்படுகிறது, முன்னோர்களின் தியாகம் நம்மிடயே நாட்டு பற்றை வளர்க்கிறது!, வரலாறு மறக்கப்படும் போது நாட்டின் மேல் உள்ள பற்றும், ஆர்வமும் குறைந்து மூன்றாம் நிலம் போன்ற எண்ணம் ஏற்படுகிறது!

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வியாபார விசயமாக ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது, ஒரு ரயிலில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தீடிரென்று எழுந்து இருக்கையில் கிழிந்திருந்த கிழிசலை தைக்க ஆரம்பித்தார், இந்தியரோ அவர் இங்கே தான் வேலை செய்கிறார் போலன்னு நினைச்சிட்டார், தைத்து முடிந்த அவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை எடுத்து பார்க்க ஆரம்பித்தார், இந்தியருக்கோ ஆச்சர்யம், தைத்து கொண்டிருந்தவர் கோப்புகள் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று!

ஐயா யார் நீங்க? என்று கேட்டார்!, ஏழெட்டு முகவரி அட்டைகள் நிரம்பிய உறை ஒன்றை தருகிறார், அத்தனைக்கும் அவர் தான் நிறுவனரும் கூட, இந்தியருக்கோ ஆச்சர்யம், பின் ஏன் ஐயா நீங்கள் இதை தைத்தீர்கள் என கேட்கிறார், ஜப்பான்காரர் சொல்கிறார், ஐயா இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார், அது உண்மையோ, புனைக்கதையோ அது நமக்கு தேவையில்லை, ஆனால் அம்மாதிரி கதைகள் தான் இரண்டாம் உலகப்போரில் சாம்பலாய் போன ஜப்பானை மீண்டும் உயிர்பெறச் செய்தது!
சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும், நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும், மனிதர்களுக்கு உரிய அடிப்படை கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்க தவறினால் நாம் மனித உருவில் திரியும் ஜந்துவை போல தான்!

*****************
டிஸ்கி:எனக்கு இந்த மாதிரியெல்லாம் கருத்து சொல்லப்பிடிக்காது தான், ஆனா என்ன செய்யுறது ஒரே மாதிரி எழுதிகிட்டு இருந்தா நமக்கும் போரடிக்குமுல்ல!

பொதுபுத்தி மீண்டும்!..........

கூட்டம் அதிகமான நம்ம மெரினாபீச் மாதிரியான இடத்தில் நின்றுகொள்ளுங்கள், யாரையும் சட்டைசெய்யாமால் அண்ணாந்து பார்த்தபடியே இருங்கள், உங்களை கடந்து செல்பவர்களில் நான்கு சதவிகிதத்தினர் அண்ணாந்து மேலே பார்ப்பார்கள் என்பது பொதுவிதி(புத்தி), இப்பொழுது உங்களுடன் இன்னொரு நண்பரையும் சேர்த்து கொள்ளுங்கள், ஆட்கள் கூட உங்களுடன் அண்ணாந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பதை நீங்களே உணர்வீர்கள்!

இது ஒரு சாதாரண செயல் மாதிரி தானே தெரிகிறது, ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயந்து இதை தான் செய்து கொண்டிருக்கிறோம், ஏற்கனவே யாரோ ஒருவர் செய்தது என்றால் அதில் குறைவான ரிஸ்க் தான் இருக்கும் என்பது மனிதனின் பொதுபுத்தி கருத்து, ஏனப்பா கோயிலுக்கு போற!? எங்க அப்பாவும் போனார், நானும் போறேன் என்ற பதிலை இளைஞர்களிடம் இன்றும் காணமுடியும், ஒரு செயலை ஏன் செய்கிறோம் என தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் கோவிலுக்கு போனால் உங்களை நல்லவன் என்று சொல்வார்கள் என உங்களுக்கு தெரியாது, ஆனால் அப்படி தான் சொல்லி கொடுத்து வளர்க்கப்பட்டீர்கள்!

பகுத்தறிவு என்பது அதிகப்படியாக வளர்ந்த அறிவு கிடையாது!.  இந்த உலகில் பகுத்தறிவு அற்ற மனிதர்களும் கிடையாது, ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அதை ஏன் நான் செய்யனும் என்று கேள்வி கேட்பது தான் பகுத்தறிவு, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் செய்கிறேன் என்றால் அத்தோடு முடிஞ்சி போச்சு, அதைவிட்டு அந்த புத்தகத்தில் போட்டிருக்கு, அந்த தாத்தா அப்படி தான் செய்ய சொன்னார் என்றால் நாம் முன்னோர்களிடமும், புத்தகங்களிடமும் மூளையை அடகு வைத்து அத்துடன் ஐக்கியமாகி விட்டோம் என்று தான் அர்த்தம்!

கடவுள் இருக்கு, இல்லை என்ற வாதங்கள் பலநூறு வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன! என்றோ நிறுபிக்கப்பட்டிருந்தால் இன்று என்னை போன்று பலர் எங்கே கடவுள் என கேட்டு கொண்டிருக்கமாட்டோம், நாங்கள் பகுத்தறிவு என்ற பெயரில் எதை சொன்னாலும் நம்புவதில்லை, ”பகுத்தறிவின் பால பாடமே கேள்வி கேள்” என்ற பிறகு அதை பெரியாரே சொல்லியிருந்தாலும் அதிலுள்ள உண்மையின் சாத்தியகூறுகளை ஆராய்கிறோம், பர்தா பற்றி பேசினால், இவன் எல்லாத்தையும் டூ பீஸில் போக சொல்றான் ரேஞ்சுக்கு மொட்டராசா குட்டையில விழுந்த கணக்கா பேசுவதில்லை!

அது ஏனப்பா கடவுள் பெண்களுக்கு மட்டும் இவ்வளவு சட்டதிட்டங்களை வைத்து ஆண்களை அவுத்துவிட்டான் என்று தானே கேட்கிறோம், இன்றும் பல விலங்குகளில் ஆணினம் தான் டாமினேட் செய்கிறது, அது அதன் உடல் வலிமையால், ஆனால் மனித இனம் இந்த அளவு உயர்ந்தது பகுத்தறிவால், அதை ஏன் நான் செய்து பார்க்ககூடாது என்ற கேள்வியால் தான் நெருப்பிலிருந்து ராக்கெட் வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அறிவு என்று வந்து விட்டால் ஆணுக்கு சமமாக பெண்ணாலும் சிந்திக்கமுடியும், அதற்கு அவளுக்கு நல்ல கல்வியும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்!
அதை விட்டுட்டு நீ வெளியே போனா சாமி கண்னை குத்தும் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்து கொண்டிருந்தால் வீடும் உருப்படாது, நாடும் உருப்படாது!
நன்றாக படித்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அப்பிராணி நண்பர் சொல்கிறார், ஒரு ஆம்பளை கெட்டால் அந்த குடும்பம் மட்டும் கெடுமாம், அதே பொம்பளை கெட்டால் அந்த ஊரே கெடுமாம்! எங்கிருந்து இதெல்லாம் கத்துகிறாங்கன்னு தான் தெரியல!, எந்த பெண்ணும் கெட்டதால ஊரு கெட்டதா எந்த ஆதாரமும் இல்லை, ஆனா நீரோவிலிருந்து ராஜபக்‌ஷே வரை கெட்ட ஆண்களால நாடே குட்டிசுவரா போன பல ஆதாரங்கள் இருக்கு, பின் எதை வைத்து இப்படியெல்லாம் பழமொழி சொல்றாங்க!

இந்த மாதிரி பானாவுக்கு பானா போட்டு, மானாவுக்கு மானா போட்டு நாமளும் ஆயிரம் பழமொழி சொல்லலாம், திண்னையை தேய்க்கும் பெருசுகள் மாதிரி இந்தகால இளைஞர்களும் அதை நம்பி பேசி கொண்டிருப்பது எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையை குறைய வைக்கிறது!, உங்களை போலவே எங்களுக்கும் வெற்றிகளும், தோல்விகளும் உண்டு, நாங்கள் எங்கள் தோல்விகளுக்கு என்ன காரணம் என ஆராய்கிறோம், நீங்கள் எல்லாம் கடவுள் செயல் என அடுத்த வேலைக்கு செல்கிறீர்கள், நாங்கள் தோல்விகளால் எங்களுக்கு பின் வரும் சமூகத்திற்கு வெற்றிபடியை கட்டி தருகிறோம், நீங்கள் படியை கட்டி கட்டி உடைத்து கொண்டிருக்கிறீர்கள்!


உங்கள் வெற்றி, தோல்விக்கு நீங்களும் உங்களை சார்ந்த சூழ்நிலையும் தான் காரணம் என நன்றாக தெரிந்துமே சந்திரனும் , வியாழனும் காரணம் என பின்வரும் சந்ததியினருக்கு நீங்கள் கட்டிய படிகளை காட்டாமல் உடைத்தெறிகிறீர்கள்,  இந்த உலகில் கம்பியூட்டரலிருந்து கடுதாசி வரைக்கும் நேரடியாக அப்பொருளாக கண்டுபிடிக்கப்படவில்லை, ஒவ்வொரு பொருளும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியை  போன்று நீண்ட வரலாற்றை கொண்டது தான், சார்லஸ் பாப்பேஜ் இன்றிருக்கும் கம்பியுட்டருக்கு சொந்தம் கொண்டாட முடியாது, ஆனால் Difference Machine சிஸ்டத்தின் (முதலில் பஞ்ச்கார்டு என்று எழுதியிருந்தேன், தவறை திருந்திய பேநாமூடி அவர்களுக்கு நன்றி) மூலம் முதல் கம்பியூட்டரை கண்டுபிடித்தது அவர் தான்!, பெரும்பான்மை என்னும் பொதுபுத்தியில் இருந்திருந்தால் எந்த வளர்ச்சியும் இந்த உலகம் அடைத்திருக்காது!

(தொடரும்)

வாழ்த்தி வழியனுப்புகிறோம்!

பெங்களூரை சேர்ந்த போட்டோகாரர் ஜீவ்ஸ் இன்னைக்கு அமெரிக்காஆஆஆ போறார்!, அவரு சத்தமில்லாம போனாலும் நாம எப்படி கண்டுக்காம விடுறது, தலைவர் எத்தனையாவது தடவையா விமானத்தில் போறார்ன்னு தெரியல, இருந்தாலும் போயிட்டு வந்து ஒரு ஆறு மாசத்துக்காவது அதன் அடையாளம் மாறாமல் பார்த்து கொண்டால் தான் அப்பப்ப அமெரிக்கா பத்தி பெருமை அடிக்க முடியும், அதனால அண்ணாத்தைக்கு சில ஆலோசனைகள் கொடுக்கலாம்!
1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!

2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து அமெரிக்கா சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.

3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் சரக்கு வாங்கிவர வேண்டியிருக்கும்)

4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் பைக் சைட்லாக் பண்ணனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)

5.திரும்பி வந்த பிறகும் அமெரிக்கா புராணம் பாடுவது மேலும் சிறப்பு.
அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.

6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன்,(அப்படியே குடிச்சிட்டாலும்) ”தேவாமிர்தமடா” என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)

7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட ”என்னடா உலகம்”, நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் ”இந்தியாவே கைக்குள்ள அடிங்கிருச்சு” என்று புருடா விடணும்.

8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அண்டார்டிகா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.

**************************


இன்னும் எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க, பயன்படுத்திகுவார்!

அடைக்க வேண்டிய ஓட்டைகள்!


கிருஷ்ணமூர்த்தி சார் மாதிரி எனக்கு கொழ கொழன்னு கொழம்பு வைக்க தெரியாது, அதனால நறுக்குன்னு சொல்லிட்டு நகர்ந்துகிறேன்! நான் இந்த விசயத்தை பத்தி எழுத வேணாம்னு தான் நினைச்சேன், ஆனால் நண்பர்கள் விடுவதில்லையே!

சற்றேறகுறைய ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தடகள போட்டியில் வெற்றி பெற்றார், சிறப்பு என்னவென்றால் ஸ்கூபா டைவிங்கிற்கு பயன்படுத்தும் இறுக்கமான உடை அணிந்திருந்தார், அதே போன்ற தலைகவசம் கூட இருந்தது,(படத்தில் பார்க்க)இந்த செய்தியை புர்கா போட்டு போட்டியில் ஒரு பெண் வெற்றி பெற்றார் என்று பீர் அண்ணன் பதிவு போட்டு சொறிந்து கொண்டார்!(இது தான் புர்காவா!?)ஏறக்குறைய 1700 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது தான் குரான், அதில் தான் புர்கா பற்றி எழுதியிருக்கிறது, அதற்கு முன்னாலும் கடவுள் நிறைய தூதர்களையும், கூடவே வேதம் என்ற பெயரில் சில கட்டுபாடுகளையும் அனுப்பியிருக்கிறார், ஆனால் அதிலெல்லாம் பெண்களின் உடை பற்றி ஒன்றுமில்லை, இஸ்லாமியர்களை பொறுத்தவரை குரானே இறுதி வேதம், அதனை அவரே!? சொல்லியிருக்கிறார், ஒரு முழுமையான வேதத்தை கொடுக்க இம்புட்டு டெஸ்டுகள் செய்யும் கடவுள் இதை தான் முழுமையான வேதம் என்று எப்படி அறிவிக்க முடியும், முதல் முயற்சியிலேயே சரியானவற்றை செய்யமுடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்!

கடவுள் மறுப்பாளர்கள் எப்போதும் தாங்கள் சொல்லவதை சரி என்றும், நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் என்றும் சொன்னதில்லை, அந்த புத்தகத்துல போட்ருக்கு, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று யாரிடமும், எதனிடமும் எங்கள் மூளையை நாங்கள் அடகு வைத்ததில்லை, நாங்கள் முன் வைப்பதெல்லாம் உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகள், அதை சரியான வாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் சேனை கட்டிய குதிரையாக இருப்பது தான் உங்கள் விருப்பமென்றால் நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட போவதில்லை, நாங்கள் உலகை திருத்த வந்த அவதாரங்கள் கிடையாது!.

நாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் அதை மறுபரீசிலனைக்கு எடுத்து கொள்ள மாட்டீர்கள் என எங்களுக்கும் தெரியும், இஸ்லாமிய பெண்களுக்கு பர்தா போடுவது பிடித்திருக்கிறது, எங்கள் பார்வையில் இஸ்லாமிய பெண்களுக்கு அடிமையாக அல்லது அடங்கி இருப்பது பிடித்திருக்கிறது, இஸ்லாமிய ஆண்களுக்கு பெண்களை அடிமையாக வைத்திருப்பது பிடித்திருக்கிறது, அதற்கு ஒரு சாக்கு “குரானில் இருக்கிறது” என்பது!, புர்கா அணிவது உங்கள் உரிமை தான், இல்லையென்று எந்த கடவுள் மறுப்பாளனும் சொல்லமாட்டான், ஆனால் அதனை கேள்விகுள்ளாக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாதவர் மழுப்புவதற்காக சொல்வது!திருட்டு டி.வி.டி, சாலையோர படுகொலை என எப்படி உங்களுடய சமுதாய அக்கறைகளை காட்டுகிறீர்களோ, அது தான் நாங்களும் செய்கிறோம், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லையென்றால், தெரியவில்லை என்று பின் வாங்கி கொள்ளவேண்டும், அதை விட்டு எங்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை, நீ அடைச்சுக்கோ, அமுக்கிகோ என்பது, நாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பதற்கு சமம்! நாங்கள் ஆரம்பித்தால் எல்லா ஓட்டையும் கார்க் புடிங்கி வெளி வரும்! இதுவரை நீங்கள் எந்த கேள்விக்கும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்!

குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4

சென்ற மாதம் எனக்கு காது வலி வந்தது. அதன் விளைவாக நடுவிரல் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் டைனோசர் கடித்தது போல் வலித்தது; கடுத்தது. விரலை கீழே தொங்க விடாமல் மேல் நோக்கி வைத்திருந்தால் வலியும் வீக்கமும் குறைந்தது. அதனால் நடுவிரலை எப்போதும் மேல்நோக்கி வைத்து மற்ற விரல்களை மடக்கி இருக்கும் ஸ்டைலிலேயே வைத்திருக்க வேண்டி ஆனது. ஆனால் இதை மற்றவர்கள் தங்களுக்குத் தரப்படும் அவமரியாதை என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

என்னை அடுத்து புஜ்ஜிகுட்டிக்கும் காதுவலி வந்து அதற்கும் நடுவிரல் வீங்கியது; ஆயிரம் டைனோசர் கடித்தது போல் கடுத்தது(உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). அது வேறு கத்தல் திலகம் என்பதால் ஒரே ரகளை. (அதுக்கிட்ட கேட்டால் ‘வாலுதான் குரைத்தல் திலகம் ’ என்னும். அது குடிப்பதில்லை என்பதால் அதோட தரப்பு கேட்பார் இல்லாமல் போகிறது). வலியால் அது குரைப்பதை பார்த்துப் பார்த்து சலிப்படைந்து என் வலி பற்றி வெளியில் சொல்வதையே நிறுத்திக் கொண்டேன். ஒயின்ஷாப்பில் கேட்டதில் இந்த வலி சரக்கடித்தால் சரியாகும் என்றார். சரக்கடித்தல் என்பது குவாட்டரா, ஆஃபா, ஃபுல்லா என்று கேட்டதற்கு என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு “ஓரிரண்டு ஃபுல்கள் ” என்றார்.

மற்ற ஒயின்ஷாப்பில் விசாரித்த போதும் அந்த பதிலே கிடைத்தது. இரண்டு ஃபுல்லை எப்படி அடிப்பது? பல சமயங்களில் ராவா அடிக்கலாமா என்ற அளவுக்கு வலி. இதற்கிடையில் டிசம்பர் 31 அன்று நியூஇயர் கொண்டாட்டத்துக்கு டாஸ்மாக் போய் சரக்க அடிக்கவேண்டும்.

” சரக்கடிக்க வேண்டுமானால் டாஸ்மாக் செல்ல வேண்டுமே; இந்த விரலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” யோசித்தேன்.

எப்படியோ மடக்கி மடக்கி மறைத்து சேர்ந்து விட்டோம். ஒயின்ஷாப் வாசல். சக குடிமகன்கள் சரக்கு வாங்கும் நேரம்.

என்னைப் பார்த்து ” என்னா வேணும்? ” என்று கேட்டார். நான் புஜ்ஜிகுட்டியை சுட்டிகாட்டி ” கடந்த ஐந்து நாட்களாக மாற்றி மாற்றி இதுக்கு கொட்டாவி வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது சேல்ஸ்மேன். இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான காதுவலியை பற்றியும் சொன்னேன்.

” அப்படியா? புஜ்ஜிகுட்டி இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, கீழே குனிந்து ஒரு உருட்டைகட்டை மாதிரியான ஒரு தடியை புஜ்ஜிகுட்டியின் தலையில் ஒன்னு போட்டார்.

அடுத்து, சில அடிகள் காதில் விழுந்தது. அப்போது காலை மணி பண்ணிரெண்டு. காலையிலிருந்து அவருடைய நடமாட்டங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு நிமிடம் கூட விடாமல் ராவாக சரக்கு அடித்தது போல் அங்கே ஒரு ஆட்டம், இங்கே ஒரு கும்மாளம் என்று ஆடிக் கொண்டிருந்தார். ஒரு வாய் சைடிஷ் கூட சாப்பிட்டிருப்பாரா என்பது சந்தேகம். இன்னும் பலர் சரக்குவாங்க காத்துக் கொண்டிருந்தார்கள். சரக்கு வாங்கி மீண்டும் பாருக்குள் செல்ல வேண்டும். அநேகமாக இரவு 12 மணிக்குத்தான் அவரால் சைடிஷ் சாப்பிடமுடியும்.

என்னைப் பார்த்து அந்த அற்பமான சிரிப்புடன் “புஜ்ஜிகுட்டிக்கு சரியாயிருச்சு. உனக்கும் ரெண்டு போடட்டுமா? ” என்று கேட்டார்.

“சேல்ஸ்மேன், இன்னும் நீங்கள் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை என்று நினைக்கிறேன்... ”

“ஆமாம் என்ன இப்போ... ”

என்னதான் சேல்ஸ்மேன் என்றாலும் சரக்கடிச்சா சைடிஷ் சாப்பிடனும் தானே? இருந்தாலும் நாள் பூராவும் சைடிஷ் தண்ணீர் இன்றி குடிமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் மகாகுடிமகன் மீது ஒரு குடிகாரனுக்கு தன் சரக்கின் மீது எத்தனை அன்பும், பாசமும் சுரக்குமோ அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு என் மனம் நெகிழ விடை பெற்றேன்.

சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். புஜ்ஜிகுட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக தாவி தாவி ஓடியது.

வீடு திரும்பும்போது என் நடுவிரல் நீட்டி கொண்டிருப்பது பற்றி சேல்ஸ்மேனிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் விடிந்ததும் சேல்ஸ்மேனுக்கு ஒரு போன் பண்ணினேன்.

போன் பேசியதும் நேரில் வந்து உருட்டைகட்டையால் காதிலும், கையிலும் செமத்தியா அடித்தார் அன்றே, அந்தக் கணமே காதுவலி சரியாகி விட்டது. நடுவிரலும் கொஞ்சம் கொஞ்சமாகக் மடங்கிப் போனது.

டாஸ்மாக் பார் என்ற பெயரால் அழைக்கப்படும் அந்த அற்புதமான சொர்க்கப்பூமியை நீங்கள் பார்க்க விரும்பினால் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணி வரை தெருவுக்கு தெரு பார்க்கலாம். அங்கே குடித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுடனும் கலந்து கொள்ளலாம். அவர்களோடு பேசலாம். உங்கள் குடிபிரதாபங்களை சொல்லலாம். அவரது ஆலோசனைகள் பெறலாம். அடிதடி இலவசம்.

தொடர்புக்கு:டாஸ்மாக், ஊரெங்க்கும்


*****************

டிஸ்கி:எங்கேயோ பார்த்த மயக்கம்!

ஐஸ்கிரீமை வறுத்து சாப்பிடலாம் வாங்க!

நிஜமாலும்,மெய்யாலும், சத்தியமாலும் இது சீரியஸான பதிவு தான்!

**********************
தற்சமயம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல எழுதிகிட்டு இருக்கேன்! இந்த ஒரு மாசம் முழுவதும் அங்கே எழுதனும், அதனால இங்க எழுதுறது குறைவா தான் இருக்கும்!(இல்லாட்டி மட்டும் எழுதி தள்ளிருவனாக்கும்), முதல் முறை வித்தியாசமா சமையல் குறிப்பு! எப்படியிருக்குன்னு செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க!(கொஞ்சம் வால்தனமா தான் இருக்கும்)

திரும்பவும் சொல்றேன் இது சீரியஸ் மேட்டர்!

தேவையான பொருள்கள்!

தக்கணூண்டு மைதா மாவு!
தக்கணூண்டு கார்ன்ப்ளவர்!

கண்டிப்பா ஐஸ்கீரிம் வேணும்!

அப்புறம் பிரட்ஸ்கிரம்ஸ் ரொம்ப முக்கியம், பேக்கரியில கேட்டாலே கிடைக்கும், இல்லைனா பிரட்டை காய வச்சு உதுர்த்துக்கலாம்!

உப்பு, மொளகாபொடியெலெல்லாம் உங்க வீட்ல இருக்குல்ல, ரைட்டு அதெல்லாம் பத்திரமா அங்கேயே இருக்கட்டும், நமக்கு அதெல்லாம் தேவைப்படாது!

முதல்ல அடுப்ப பத்த வச்சுகோங்க, பச்சதண்ணி மாதிரி இருக்குற எண்ணையில இத செஞ்சா எண்ணை மொத்தமும் வேஸ்டா போயிரும், அதுனால நல்லா சூடா இருக்கனும்!

இப்போ செய்முறை, மைதாவையும், கார்ன்ப்ளவரையும் தக்கணூண்டு தண்ணி விட்டு பசை மாதிரி கலக்கனும், ஐஸ்கிரிமை எடுத்து உருட்டி எல்லா பக்கமும் அந்த பேஸ்ட் படுறாமாதிரி பண்ணனும், ரொம்ப வேகமா பண்ணனும், உங்களால முடியலைனா ரங்கமணிகளை செய்ய சொல்லுங்க! புயல் மாதிரி செயல்படுவாங்க!

இப்போ அப்படியே எடுத்து பிரட்ஸ்கிரம்ஸ்ல உருட்டனும், எல்லா பக்கமும் படுறாமாதிரி, அப்போ தான் ஐஸ்கிரீம் எண்னையில படாம இருக்கும், இப்போ அப்படியே எடுத்து கொதிக்கிற எண்னையில போடனும், ஒண்ணரை நிமிசத்துகுள்ள எடுத்துறனும், அதுக்கு மேல இருந்தா ஏழரை ஆயிரும்! உடனே எடுத்து பரிமாறிரனும், இல்லைனா உருகி போன ஐஸ்கீரிம் தான் மிஞ்சும்!
*********************

இதை செஞ்சு பாருங்க, பிடிச்சிருந்தா (மட்டும்) உங்க பதிவுல போட்டுக்கலாம், கொஞ்சம் உங்க எழுத்து நடைக்கு மாத்திகோங்க!

!

Blog Widget by LinkWithin