குடியை நிறுத்துவது எப்படி?

குடியை நிறுத்துவது எப்படி?

எனது அனுபவத்தை, நான் கடைப்பிடிப்பதை பகிர்கிறேன், ட்ரை பண்ணி பாருங்க.

எல்லாத்துக்கும் முன்னால முதல் விசயம் நீங்க குடியை உங்களுக்காக நிறுத்துறிங்க, வேற யாருக்காகவும் விடுவதா கமீட் பண்ணிகிட்டா அவங்க கூட பிரச்சனை வரும் போது அவங்களை வெறுப்பேத்த இரு மடங்காய் குடிப்பீர்கள், ஆக இது முழுக்க முழுக்க உங்களுக்காகன்னு கமீட் பண்ணிக்கோங்க

என்னை பொறுத்தவரை தம்மை விடுவது தான் கஷ்டமா இருந்தது, ஏன்னா காசு இல்லைனா சரக்கு அடிக்க முடியாது ஆனா 5 ரூபாய் இருந்தாலும் பீடியாவது வாங்கி குடிக்கச்சொல்லும், உங்களுக்கான முதல் டாஸ்க் பாக்கெட்டில் பணம் வச்சிக்காதிங்க, டெபிட் கார்டை வீட்டில் வச்சிட்டே வெளிய போங்க,

இது இரண்டாவது டாஸ்க், எப்பவும் வயிறை காலியா வச்சிக்காதிங்க, வீட்டை விட்டு வெளிய போகும் போது கண்டிப்பா சாப்பிட்டு வெளிய போங்க, குடிப்பதாக இருந்தாலும் சாப்பிட்ட பிறகு மொடா குடி குடிக்க முடியாது, குடியை நிறுத்தனும்னு நினைப்பவர்கள் இதை கண்டிப்பா செய்யனும்



ஆனாலும் எனக்கு படிப்படியா விடுவது, குறைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, விட்டா உடனே எல்லாத்தையும் விடனும். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாவே அதிகமா குடிப்பாங்க, ஏன்னா நாக்கில் சரக்கு சுவை மாற சிகரெட். மீண்டும் சிகரெட் சுவை மாற சரக்கு, ஒன்னு இருந்தாலும் அது இன்னொன்னுக்கு இழுத்துட்டு போயிரும்

குடி பழக்கமாக இருந்து நோயாக மாறிய பின் அதற்கு அறுவை சிகிச்சைக்கு சமமான வலியை அனுபவித்து தான் வெளியே வர முடியும், சட்டுன்னு தண்ணியை விட்டவுடன் உங்களுக்கு நாலு நாட்களுக்கு தூக்கம் வராது. தூக்க முயற்சி பண்ணி கண்ணை மூடினால் யாரோ காதில் பேசுவது போல் இருக்கும், எதிர்மறை சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிக்கும், பய உணர்வு மீண்டும் தண்ணி அடிக்க இழுத்துட்டு போயிரும்

ஆக, தண்ணி விட நினைப்பவர்களுக்கு சப்போர்ட் வேணும், மனைவி அல்லது டீவி இல்லாம அவர்களால் தண்ணியில் இருந்து வெளிய வர முடியாது. விடிய விடிய முழிச்சிருந்து உடம்பு சூடு பிடிச்சிக்கும், அதுனால நிறைய தண்ணி குடிக்கனும், ஒரு லிட்டர் தண்ணிர் பாட்டிலில் எலக்ட்ரால் பவுடர் பெரிய பாக்கெட் ஒன்னை கலந்து குடிப்பது இன்னும் நலம், உடல் பதட்டத்தை குறைக்கும்

குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம், தண்ணிய விட்ட சில நாட்களுக்கு கோவம் பயங்கரமா வரும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவோம், மப்பில் செய்வதை விட அதிகமா கோவம் வரும். அச்சமயத்தில் குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம், அவங்க திரும்பி கோவபட்டாலோ, உங்களை உதாசினபடுத்தினாலோ மீண்டும் தண்ணி அடிக்க சொல்லும், அதிலிருந்தும் மீழ்வது தான் பெரும் சவால். ஏன்னா பெரும்பாலும் விட நினைப்பவர்கள் முடியாமல் இருக்க காரணம் குடும்ப சப்போர்ட் இல்லாதது தான்.



கூச்சபடாமல், ஆம் நான் தண்ணியடிப்பதை விட்டுட்டென்னு சொல்லுங்க, அவர்கள் அவமான படுத்தினாலும் உங்களால் முடியும்னு உங்களுக்குள்ளே சொல்லிகொள்ளுங்கள், உங்கள் மேல் அக்கறையுள்ள நண்பர்களிடம் அதிகம் நேரம் செலவழியுங்கள், குடி பழக்கம் இல்லாத நண்பர்களிடம் பேசுங்கள், எக்காரணம் கொண்டும் குடியை மறக்க ஹான்ஸ், பாக்குன்னு வேறு பழக்கத்திற்கு போகாதிங்க, தம் பழக்கம் இருந்தாலும் டெம்ட் ஆகும் போது மிட்டாய் சுவைக்கலாம், நான் ஆர்பிட் எடுத்துகிறேன்.

குடிப்பதற்கு ஆயிரம் சாக்கு(காரணம்) சொல்றமே அதுபோல இன்றே குடியை நிறுத்த காரணத்தை பட்டியலிடுங்கள். கூச்சபடாமல் நீங்கள் அவமான பட்டது, ரோட்டில் விழுந்து கிடந்தது, குடிக்க பணமில்லாமல் வீட்டில் திருடியது என எல்லா காரணத்தையும் எழுதுங்கள், இதுவா உங்கள் இயல்பு? இதுவா உங்கள் சுயம் என உங்களையே கேளுங்கள். இனியும் அவமானப்பட கூடாதென்றால் இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு உறுதி எடுங்கள்.

எல்லா அரசு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இருக்கும், ஒரு தடவை சும்மா போய் பாருங்க. எத்தனை பேர் போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரியும். அந்த நிலமை உங்களுக்கும் தேவையான்னு கேட்டுக்கோங்க

விடுபட்ட முயற்சிகள் எதாவது இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்

தமிழ் தேசியம்

தமிழ் தேசியம் என்றால்

மாநில உரிமை காப்பது
வளங்களை பாதுகாப்பது
மாநிலத்தை மேம்படுத்துவது
தன்னிறைவு அடைவது
தனிநபர் மேம்பாடு

இதெல்லாம் தான் அடிப்படை

சீமானின் முக்கிய குற்றசாட்டு என்னவென்றால் தமிழர் அல்லாதோர் நம் வளங்களை சுரண்டி நமக்கு சேர வேண்டியதை அவர்கள் சொந்தம் கொண்டாடினர் என்று

விந்திய மலையின் தெற்கே அனைத்தும் திராவிட நிலபகுதி என அழைக்கப்பட்டதால் கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் நான்கும்(இப்ப தான் தெலுங்கானா) திராவிடம் என அழைக்கப்பட்டது. தேசிய கீதத்தில் இருக்கும் திராவிடம் என்ற வார்த்தை இதை தான் குறிக்கிறது

தமிழ் தேசியம் பேசப்படுவது இன்று நேற்றல்ல, அதன் கருத்தியல் படி சீமான் பச்சகுழந்தை. ஆனால் இதற்கு முன் தமிழ் தேசியம் முன்னெடுத்தவர்களை சீமான் பெரியாத முன் வைக்கவில்லை. மாறாக பிரபாகரன் பெயரை வசூலுக்கு பயன்படுத்திகொள்கிறார்

ஆரம்ப காலத்தில் பொது கூட்டங்களில் பெரியார் படம் இருந்தது. எனக்கு பகுத்தறிவு சொல்லிக்கொடுத்த தந்தை என்றார். எம்.ஜி,ஆர் படம் இருந்தது. ஆனால் இன்று அனைவரும் வந்தேறி ஆகிவிட்டனர்

சிறுகுழந்தைகள் பெற்றோரின் கவனத்தை பெற காரணமே இல்லாமல் அழும், அதனை அட்டென்சன் சீக்கிங் பர்சனாலிடி என்பார்கள். அதே போல் தான் சீமான் தமிழ் தேசியம் பேசாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற எதிர்ப்பு அரசியலில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிறர் கவனத்தையும் பெறுகிறார்

முப்பாட்டன் முருகன் என்ற பொழுதே அவரது உளரல் ஆரம்பித்துவிட்டது. அதுக்கு திருவிளையாடல் திரைபடத்தை உதாரணம் காட்டிய பொழுது பகுத்தறிவாளர்கள் சிரித்தனர். ஆனாலும் அவரது உளரல் நின்றபாடில்லை. நாம் சுரண்டபடுகிறோம் என்ற ஒன்றை அஜெண்டாவில் அவருகென்று ஒரு கூட்டத்தை கட்டிபோட்டு வைத்துள்ளார்



சாதாரமாண உளவியல் இது.
சோதிடம் சொல்பவனை கவனித்ததுண்டா
நீங்கள் ரொம்ப நல்லவர், உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், நீங்கள் நல்லது செய்ததை மறந்து உங்கள் குறைகளை மட்டும் சுட்டி காட்டுகிறார்கள் என பொதுவாக எல்லாருக்குள்ளும் இருக்கும் ஆற்றாமையை கிளரி அவன் பணம் வாங்கிட்டு போயிருவான்

சீமான் சோசியகாரன் அளவுக்கு கூட வொர்த் இல்ல என்பதெ என் கருத்து. சீமான் வெளிச்சத்தில் நிற்க ஆசைப்படுகிறார். தன்னை சுற்றி ஒரு கூட்டம் சேர்க்க ஆசைப்படுகிறார். அவர்கள் பகுத்தறிவை வலு இழக்கசெய்து கண் மறைக்கப்பட்ட குதிரை போல் தன்னை பின் தொடர சொல்கிறார்

நாம் சுரண்டபடுகிறோம் என நம்பும் பெரும்பான்மை தமிழ் தேசிய தம்பிகள் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டுயிருக்கிறார்கள்., அப்படியானால் நீங்கள் அந்த நாட்டை சுரண்டி கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்?

அடிக்கும் போது ஒருத்தன் சொன்னான், எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே ரொம்ப நல்லவன்னு
அந்த நல்லவன் நீங்க தான்

பொருளாதாரம் - தொடர்ச்சி

நேற்று எழுதிய பொருளாதார கட்டுரையின் தொடர்ச்சி மோடி கடைசி இரண்டு முறையாக சென்ற பொழுதே இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரியை குறையுங்கள் என்று. கஸ்டமஸ் என்ற வார்த்தையை கேள்வி பட்டுருப்பீர்கள். நான் கொண்டு வரும் புதியாக இருந்தால் அந்த பொருளுக்கு நம் நாடு விதித்துள்ள விதியை வசூல் செய்வார்கள், உதாரணத்திற்கு கொண்டு கட்டியாக(நகையாக கொண்டு வர அளவுகோள் உண்டு) கொண்டு வரும் தங்கத்திற்கு 10% வரி. நூறு கிராம் தங்கம், 3 லட்சம் என்றால் 30 ஆயிரம் நீங்கள் வரியாக வேண்டும். அந்த வரும் இந்திய அரசுக்கு போய் சேரும், அம்மாதிரி ஒன்னொரு பொருளுக்கும் தனிபட்ட வரிவிதிப்புகள் உண்டு. மேலும் அந்த வரிவிதிப்பு நாட்டுக்கு நாடும் வேறுபடும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு காரணம் அவ்வாறு வரி குறைக்கப்பட்டால் அமெரிக்க பொருள்கள் இங்கே அதிகமாக விற்பனை ஆகும், இந்தியா என்ற பெரும் சந்தையை ஆக்கிரமிக்க முடியும் என நினைத்தது.

ஆனால் இந்திய தரப்பு அதை மறுத்து விட்டது. உடனே அமெரிக்க அரசு ஒரு மிரட்டல் விடுத்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருள்களுக்கு நாங்கள் 100% வரி விதிப்போம் என்று. யோசித்து பாருங்கள். இரு மடங்கு விலை கொடுத்து வாங்க யாராவது தயாராய் இருப்பார்கள் அந்த நாளே இந்திய மதிப்பு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு ரூபாய் உயர்ந்தது. அதாவது 67ல் இருந்து 68 ஆக. அதுக்கு நமக்கு பின்னடைவு தான். இதே தான் இப்பொழுது துருக்கியிலும் நடந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டதை நான் அன்றே எழுதினேன், ஏன் யாரும் கவனிக்கலன்னு தெரியல. பழைய மாதிரி புல் ஸ்விங்க்ல எழுத ஆரம்பிக்கனும்

சில தகவல்கள்

உடலுறவு, கேன்சர் செல்லின் வளர்ச்சியை குறைக்கும்.
1985 ல் ஒரு ஜிபி டவுன்லோடு ஆக 308 நாட்கள் ஆகும், 2013 ல் டவுன் லோடு ஆக ஒரு நிமிடம் இருபது நொடிகள்.
நீங்கள் விண்வெளி வீரர் ஆக வேண்டுமானால் உங்கள் உயரம் ஆறு அடி மூன்று அங்குலத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
நம் தேவைகள் மற்றும் ஆசைகள் ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறை மாறுகிறது என்கிறது ஆய்வு.
ஹெர்ஷே(Hershey) சாக்லெட் கம்பெனி உரிமையாளர் மில்டன் மற்றும் அவரது மனைவி இருவரும் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய வேண்டியவர்கள், மில்டனின் மனைவிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் பயணம் தடைபட்டது.
விக்ஸ் இன்ஹேலர் பயன்படுத்துவது, போதை மருத்து சோதனையின் போது நீங்கள் போதை பொருள் பயன்படுத்தியவராக காட்ட அதிகம் வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு பயமுறுத்தும் படியான கனவுகளே அதிகம் வருகிறது என்றும், ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவே அதிகம் வருகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
நாள் ஒன்றுக்கு 40 சதுரமைல் என்ற அளவில் நம்பூமி பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது. மனித நாகரிகத்திற்கு பின் 70% இயற்கை காடுகள் அழிக்கபட்டு இருக்கின்றன.


கடைபிடிக்கனும்

1. பிரச்சனைன்னு யாராவது போன் பண்ணா நாம அவசரத்தில் இருந்தாலும் இரண்டு நிமிசம் ஒதுக்கி, நான் இருக்கேன் எதுவாக இருந்தாலும் சமாளிச்சிகலாம்னு நம்பிக்கை கொடுக்கனும்.
2. கடன் கேட்டா இருந்தா கொடுக்கனும், இல்லைன்னா இப்ப இல்ல, நானும் ட்ரை பண்றேன் நீயும் ட்ரை பண்ணுன்னு சொல்லனும். அட்வைஸ்குற பேர்ல வெந்த புண்ணுல வெந்நீர் ஊத்தக்கூடாது.
3. நமக்கு ஒரு விசயம் தெரியும்னு தெரியாதவரை ஏளனமா நடத்தக்கூடாது, ஏன்னா நமக்கே தெரியாத விசயங்கள் நிறைய இருக்கு.
4. தெரியாதுன்னு சொல்லலாம். முடியாதுன்னு சொல்லக்கூடாது. உலகில் யாரோ ஒருவரால் முடியுமானால் நிச்சயமாக உன்னாலும் முடியும்னு நம்பனும்.
5. நடந்துமுடிந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதோ/கோவப்படுவதோ கூடாது. அதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கமுடியாது.
6. ஒருத்தரை பத்தி மற்றவர்கள் சொன்னதை வச்சி ஒரு பிம்பம் கட்டமைக்கக்கூடாது. நம்மகிட்ட எப்படி பழகுறாங்களோ அதை வைத்து தான் நட்பை கொண்டாடனும்.
7. எவ்ளோ முயற்சி பண்ணியும் ஒருத்தருக்கு நம்மை புரிய வைக்க முடியலைன்னா பிறகு எதற்கும் விளக்கம் கொடுத்து பயனில்லை. அதுனால் ஆமா நான் அப்படித்தான்னு சொல்லிட்டு போயிறனும்.
8. எந்த சூழல்நிலையிலும் ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததை சொல்லிக்காட்ட கூடாது.
9. நம் சுதந்திரம் அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே, மூக்கை தொடும் வேலை வச்சுக்கக்கூடாது.
10. ஒழுங்கின்மையே ஒழுங்கு. யாரும் இப்படித்தான் இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது. அது வெட்டியா நம்மை டென்சன் பண்ணும்.
இதெல்லாம் நான் கடைபிடிக்கும்/பிடிக்க நினைக்கும் கோட்பாடுங்கள். முடிஞ்ச அளவு என் மனசாட்சி படி ஃபாலோ பண்றேன். எங்கேயுனும் சறுக்கியிருக்கலாம். ஆனாலும் இவை தான் என் வாழ்க்கை கோட்பாடுகள்.

!

Blog Widget by LinkWithin