மறுபிறப்பு (கேள்வி-பதில்)

கேள்வி: Venkatesh Sankarapandian
//மறுபிறவியை பற்றி உங்களுடைய கருத்து.......?//

பதில்:
ஒரு குழந்தையிடம் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், கடவுள், மறுபிறப்பு பற்றி எதுவும் சொல்லாமல் வளர்த்தால் அந்த குழந்தைக்கு எதுவுமே தெரியாது.

மனிதம் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்குமே தன் உயிரை காத்துக்கொள்வது தன்னிச்சையான உந்துதல். அனிச்சை செயல் மாதிரி. உயிரை காத்துகொள்வதில் பிற உயிர்களை விட மனிதன் அதிகமாகவே போராடினான் என்பதற்கு சான்றே பரிணாமத்தில் அவன் உச்சாணி கொம்பில் இருப்பது தான்

இறந்த பிறகு என்ற கேள்விக்கு இன்று வரை அறிவியல் பூர்வமான பதில் இல்லை, ஆனால் ஆதியில் அறிவியல் வளர்ச்சியடையாத மனிதன் கனவில் வந்த இறந்த மனிதர்களை வேறு எங்கேயோ வாழ்வதாக நம்பினான், இந்த பூமியில் இறந்தாலும் அவர்கள் வேறு எங்கேயோ வாழக்கூடும் என்பது ஒரு வித ஆறுதல் அளித்தது அவனுக்குமரணத்தை பற்றிய பயமே எல்லாவற்றிகும் தொடக்கமாக இருந்தது, கடவுள், மதம், சொர்க்கம், நரகம் இப்படி எல்லாமே, அந்த மரண பயத்தை தற்காலிகமாக தள்ளி போட மறுபிறவி நம்பிக்கையும் தேவைப்பட்டது.

இந்து மதம் மற்றும் பெளத்தின் ஹீனயானம் பிரிவில் மறுபிறவி நம்பிக்கை உண்டு, ஆப்ரஹாம மதங்களில் இறுதி தீர்ப்பு நாள் வரை இறந்தவர்கள் காத்திருக்கவேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இவை அனைத்தும் புத்தகமாக உள்ளதே தவிர உண்மை என நிரூபிக்க எந்த சான்றும் இல்லை.

சிலர் தீடீரென்று வேறு ஒருவர் போல் பேசுவது. இறந்த மனிதர் போல் பேசுவது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது, அவை அனைத்தும் மல்டிபுள் பர்சனாலடி டிஸ்சாடர் வகையறா தான்.

மறுபிறவியும் கடவுள் போல் ஒரு நம்பிக்கை மட்டுமே, அடுத்த பிறவில் அப்படி பிறக்கனும், இப்படி பிறக்கனும்னு பரிகாரம் செய்யும் பொழுது அது மூடநம்பிக்கையாகிறது.

இருப்பதே ஒரே வாழ்க்கை, அந்த வாழ்க்கையை மனிதத்திற்கும் பயனுள்ளதாக வாழ்வதே சிறப்பு, நீங்கள் இந்த மண்ணில் பிறந்ததற்கான சான்றாக உங்கள் சுவடை பதிய விட்டு செல்வதே உங்கள் பிறப்பின் அர்த்தம்

சூரியன் சுருங்குமா? (கேள்வி-பதில்)

கேள்வி:
Saravana Kumar சூரியன் அளவு சுருங்குமா ?

பதில்:
சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலகூறுகளால் ஆனது.(இதை கண்டுபிடித்தது ஒரு பெண் விஞ்ஞானி) ஹீலியம் எரிந்து ஹைட்ரஜனாகவும், ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாகவும் மாறி மாறி பல கோடி வருடங்களாக எரிந்துக்கொண்டிருக்கிறது. நம் சூரிய குடும்பத்தின் மொத்த நிறையை எடுத்துக்கொண்டால் அதில் 99% சூரியன் மட்டுமே, மீதி 1% மட்டுமே மற்ற கோள்களும், அதன் துணைகோள்களும்.

சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனும், ஹீலியமும் எரிய எரிய இன்னும் சில லட்சம் வருடங்களில் சூரியன் விரிய தொடங்கும், நீங்கள் கேட்ட கேள்விக்கு உல்டாவா இருக்கா, இருங்க வர்றேன், அப்படி விரிய தொடங்குதல் என்பதை அதன் மைய ஈர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் அல்லது குறைத்துக்கொள்ளும் என சொல்லலம.

அவ்வாறு விரியும் பொழுது சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன், வெள்ளி மற்றும் பூமி கூட அதன் ஈர்ப்பில் இழுபட்டு சூரியனுக்குள் விழுந்து மறைந்து விடும். விஞ்ஞானிகளின் கருதுகோள் படி சூரிய குடும்பத்தில் இருக்கும் எல்லா கோள்களும் ரெட் ஜெயிண்ட்(red giant) என அழைக்கப்படும் அந்த பெரிய சூரியனில் விழுந்து விடும்.பின்பு அந்த சூரியன் சுருங்கதொடங்கும், அதை எவ்வாறு அர்த்தப்படித்தக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு பெரிய மலையை அமுக்கி அமுக்கி சுருக்கி ஒரு கால்பந்து அளவு கொண்டு வருவது, அப்பொழுது உருவம் தான் கால் பந்து அளவு, ஆனால் அதன் நிறை அப்படியே அந்த பெரிய மலையின் அளவு அதை ஒயிட் ட்வார்ஃப்(white dwarf) என அழைப்பார்கள். தமிழில் வெள்ளை குள்ளன். அதில் இருந்து ஒரு டீஸ்பூன் அளவு சூரியனை எடுத்தால் அது ஒரு பூமியின் எடை இருக்கும்அவ்வாறு சுருக்குவதற்கு என்ன லாஜிக்?

ஒரு கிலோ தங்கத்தின் அளவு பார்த்ததுண்டா? ஒரு பிஸ்கட் அளவு தான் இருக்கும், அதுவே ஒரு கிலோ இரும்பின் அளவு உங்களுக்கு தெரியும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதிலுள்ள மூலகூறூகளின் நெருக்க கட்டமைப்பு,

அவ்வாறு நெருக்கக்கப்பட்ட மூலகூறு ஒரு கட்டத்தில் மீண்டும் வெடிக்கும், அதன் பெயர் நெபுலா(nebula). இரண்டு சூரிய குடும்பத்தின் அளவு இருக்கும் நெபுலா மீண்டும் மூலகூறு கட்டமைப்பால் இணைந்து மீண்டும் ஒரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அந்த சுழற்சிக்கு ஒவ்வ்ரு சூரிய குடும்பமும் பல லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.கேள்விக்கு நன்றி. இன்னும் நிறைய கேளுங்க. இதில் சந்தேகம் இருந்தாலும், என் கட்டுரைகள் அனைவரும் படிக்க முடிந்த அளவு எளிமையாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்

புதிய ஆப்பு - உதய் மின் திட்டம்

தமிழ்நாட்டின் கடனில் பெரும்பகுதி மின்சார வாரியத்தால் உண்டானது.
காரணம் ஊழல் மட்டுமே
தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றலையில் இருந்து அவர்கள் மின்சாரம் தர சம்மதித்த பொழுதும் அதை வாங்காமல் தனியாரில் மின்சாரம் வாங்கிய இவ்வளவு பெரிய கடன் சுமைக்கு காரணம்

மேலும் தரமற்ற நிலகரியை அதிக விலை கொடுத்து வாங்கியது, டிஜிட்டல் மீட்டர் வாங்கியதில் ஊழல். மத்திய அரசு பழைய தெரு விளக்குகளுக்கு மாற்றாக புதிய எல்.ஈ.டி பல்புகள் குறைந்த விலைக்கு தருகிறேன் என்று சொன்னபொழுதும் அதை வாங்காமல் தனியாரிடம் வாங்கியதில் ஊழல், மீண்டும் தனியாரிடம் நிலகரி வாங்க அனுமதி கேட்பது என ஊழலை தவிர வேறென்றும் அறியோம் பராபரமே என வாழ்த்து கொண்டிக்கிறது தமிழக அரசுஅந்த ஊழலில் ஏற்பட்ட நட்டங்களை குறைக்க ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மேல் பாரத்தை வைத்தது மாநில அரசு, இப்பொழுது மீண்டும் பெரிய ஆப்பு ஒன்று காத்திருக்கிறது

புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் மின் திட்டத்தின் மூலம் இனிமே தமிழக மக்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

முதல் 100 யூனிட் இலவசம் என்றால் அடுத்து ஓடும் ஒவ்வொரு 100 யூனிட்டுக்கும் நான் செலுத்தும்  தொகை முன்பை விட அதிகம்.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மாசத்திற்கு 200 ம் குறைவாக பயன்படுத்தினால் அதிகபட்ச தொகை 170 அதுவே 210 யூனிட் என்றால் 260 ரூபாய். சராசரியாக இரண்டு மாதத்திற்கு 250 பயன்படுத்தினால் 380 ரூபாய் நீங்கள் கட்டவேண்டும், அதுவே மூன்று மாதத்திற்கு என்றால் 350 யூனி என வைத்துகொண்டாலும் நீங்கள் கட்ட வேண்டிய தொகை 680 ரூபாய்ஒரு மாதம் நீங்கள் பயன்படுத்திய 100 யூனிட் மின்சாரத்திற்கு நீங்கள் செலுத்தவேண்டிய அதிக தொகை 300 ரூபாய். அதிமுக அரசும் சரி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும் சரி, மக்கள் நலம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் செயல்கள் தான் இதுவரை செய்துள்ளனர்., தானும் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறியாமலெயே மக்கள் மீண்டும் ஒருமுறை இம்மாதிரியான ஊழல் அரசுக்கு வாக்கு அளிப்பது நான் தற்கொலை செய்வதோட மட்டுமல்லாமல் பிறரையும் கொலை செய்வதற்கு சமம்

வர்த்தகம் கற்கலாம் வாங்க.....

வாரன்ஃபப்படிடம் ஒரு பேட்டியில் நிருபர் கேட்டார்
அதிகம் படிக்கவில்லை, யாரையும் பின்பற்றவில்லை ஆனாலும் உலகின் இரண்டாவது பணக்காரராக இருக்கிறீர்கள், ஏன் மற்றவர்களால் அது முடியவில்லை என்று

அதற்கு வாரன் பதில் சொன்னார்
அவர்களுக்கு என் போல் மெதுவாக பணக்காரன் ஆகும் பொறுமை இல்லை என்று

இந்த சம்பவத்தை புதிதாக பங்குவணிகத்தில் நுழைபவர்களுக்கும், ஏற்கனவே இருப்பவர்களும் முக்கியமான பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்பதவர்களுக்கும் அடிக்கடி சொல்வேன்.

முதலீடு என்பது விதை போல, அதை இன்று விதைத்து நாளையே பலன் எதிர்பார்ப்பது, எதும் இல்லையென்றால் அதை தோண்டி பார்ப்பது போன்றவை விதையை நாசமாக்குமே தவிர ஒருபொழுதும் பலனை தராது.

ஆனாலும் பங்கு சந்தையில் தினம் சம்பாரிப்பவர்கள் இருக்கிறார்களே அது எப்படி?

பங்கு வணிகம் என்றால், ஒரு நிறுவனத்தின் முதலீட்டில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று அர்த்தம். நியாயமாக 3 மாசத்துக்கு ஒரு முறை நிறுவனம் கணக்கு தணிக்கை செய்து லாபநட்ட கணக்கு பார்க்கும் போது வரும் லாபத்தில் உங்களுக்கு பங்கு தரவேண்டும்

அதுவே இப்படி யோசித்து பாருங்கள், உங்களிடம் அந்த நிறுவனத்தின் பங்குகள் இருக்கின்றன, அந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்து நல்ல லாபம் தரும் என நம்பும் ஒருவர் நீங்கள் சொல்லும் விலைக்கு அந்த பங்கை வாங்கிக்கொள்ள தயாராய் இருக்கீறார், நிறுவனத்தின் வெளியே உங்கள் வரவு செலவு முடிகிறது, அதை தான் ஆன்லைன் பங்கு வர்த்தகம் என அழைக்கிறோம்.

இங்கே நீங்கள் கிடைக்கும் விலைக்கு ஒருவர் வாங்கி கொள்ள தயாராய் இருந்தால் பங்குகளை விற்று லாபம் பார்க்கிறீர்கள், அல்லது கேட்கும் விலைக்கு கொடுத்து நட்டத்தை ஏற்றுக்கொள்கிறீகள், இதிலே நீங்கள் எடுக்கும் ரிஸ்க் தான் உங்கள் லாப நட்டம், என் போன்ற சந்தையை கவனிப்பவர்கள், சந்தையை கணிக்கிறோம், எந்த பங்கின் விலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது, எதை வாங்கலாம் எதை விற்கலாம் என முன்கூட்டியே கணிப்பதை என் வேலையாக செய்கிறோம்

அப்படி கணிப்பதில் சில நேரம் சறுக்கலாம். சந்தையை பொறூத்தவரை ஒரு நிறுவனத்தின் பங்கு விலை உயர பல காரணிகள் உள்ளன, அந்த நிறூவனம் புதிதாக பெரிய டெண்டர் எடுத்திருக்கலாம், அரசு சலுகை பெறலாம், நிறுவனம் பயன்படுத்தும் கச்சா பொருளின் விலை சரியலாம் போன்றவை, அதுவே உல்டாவாக நடந்தால் நம் கணிப்பு தவறாக முடியும்

அதனால் தான் எப்போதும் வர்த்தகத்தை நட்டதடுப்போடு செய்ய வேண்டுகிறோம் அதனை ஆங்கிலத்தில் ஸ்டாப்லாஸ் என அழைப்பார்கள்

பங்கு வணிகத்தில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இங்கே கேட்கலாம், சந்தை நிலவரம் மற்றும் பரிந்துரைகளை அறிய 9364151621 என்ற வாட்ஸ் அப் எண்ணில் இணையலாம்


விக்கல்கள்..........

என்றேனும்
நிராகரிக்கப்படுவோம்
என தெரிந்தே
கொண்டாட
அனுமதிக்கின்றன
பூக்கள்.....


*************************

உன் வெற்றியின் பரிசாக
நீ அளித்த தோல்வியை
கொண்டாடிக்கொண்டிருக்கிறேன்..


************************

விக்குமோதெல்லாம்
உன் நினைவு.........


***************************

குடுவையை உடைத்த
குழந்தைக்கோ
அது விளையாட்டுப்பொருள்
குயவனுக்கோ
அது வாழ்க்கை.....*************

பெரும் கதவையும்
கொடும் சிறையையும்
தகர்தெறியலாம்
நினைவுகளை தவிர.......

*************************

அடித்த
அம்மாவையே
சுற்றி வரும்
குழந்தையை
நினைவூட்டுகிறது
அந்நேசத்தில்
மிச்சருக்கும்
எச்சம்...........


***********************

வாழ
வேண்டியதற்கான
நிர்பந்தத்தை
வாழ்ந்து முடிந்த
தருணங்கள்
நினைவூட்டிக்கொண்டே
இருக்கிறது.......


************************

பூட்டிய கதவையே
வெறித்துக்கொண்டிருப்பது
அழைக்கமாட்டாயா
என்ற நம்பாசையும்
பத்திரமா இருக்கிறாய்
என்ற திருப்தியும் தான்....இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் பார்ட் 1

இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்காங்கன்னு வச்சுகுவோம். அதில் 13 லட்சம் பேர் டாப் பணக்காரர்கள். 13 கோடி பேர் அப்பர் மிடில் பணக்காரர்கள், அப்புறம் முடில்கிளாஸ், என்னை போல் சொந்த வீடில்லாத லோயர் மிடில் கிலாஸ். லோ கிளாஸ்(பொருளாதாரத்தை சொல்றேன்)

இப்ப எனக்கு 10000 சம்பளமா கையில் வருதுன்னு வையுங்க, வீட்டுக்கு போகும் போது ஒரு குவாட்டர் அடிச்சிட்டு, ஒரு கோழி பிரியாணி சாப்பிட்டு, குழந்தைகளுக்கு பார்சல் வாங்கிட்டு அப்படியே தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிட்டு வீட்டுக்கு போவேன்.

அந்த பணம் என் கையில் இல்லாமல் என் டெபிட் கார்டில் இருந்தால். நான் ஏடிஎம் போகனும், அதுக்கும் மாசம் மூணு நாள் மட்டுமே நாப்கின் வைக்கனும், அதுல எல்லா நாளும் பணம் இருக்கும்னு சொல்ல முடியாது, ஆக வேற இல்லாம நான் ஏசி பாருக்கு போகனும், அங்க ஒரு லார்ஜ் ஒரு குவாட்டர் விலை. ஒரு குவாட்டருக்கு மூணு குவாட்டர் விலை கொடுக்கனும்,

அப்புறம் சாப்பாடு, வீட்டுக்கு பார்சல். போற வழியில் பழமுதிர்சோலையில் பழங்கள். இல்லைனா குழந்தைகளுக்கு பழங்கள் கட்டு. இதுல பார்த்திங்கனா சார். சும்மா 500 ரூபாவில் முடியவேண்டிய என்னோட செலவு என் சம்பளத்தில் 20% முழுங்கிவிடும்,என் கையில் பணமாக இருந்தால், ரோட்டு கடையில்  பூ வாங்குவேன். குழந்தைகளுக்கு பழங்கள் வாங்குவேன். அண்ணாச்சி கடையில் வீட்டுக்கு மளிகை வாங்குவேன், மாசகடைசியில் கடனும் வாங்குவேன் கார்டா இருந்தா நான் ஷாப்பிங் மால் போகனும் அங்கே MRP இருக்கும் பொருள்களுக்கு 50 பைசா விலை குறைச்சிட்டு விலை குறிப்பிடாத மளிகை பொருட்கள் வச்சு ஊனுவான், நல்லா செக் பண்ணி பாருங்க, மளீகை கடையில் விற்கும் பருப்பு விலையை விட ஷாப்பிங் மாலில் 20 ரூபாய் அதிகம் இருக்கும்

இதெல்லாம் தெரிந்தும் நான் வேற வழி இல்லாமல் பணமாக கையில் இல்லாததால் ஷாப்பிங்மாலில் செலவு பண்ணனும், ஹோட்டலில் வரி கட்டனும், வரி கட்ற நல்ல விசயம் தான், ஆனால் என் வருமானத்துக்கு அது எவ்வளவு அதிகம். அதுவே ரோட்டு கடையில் வாங்கினால், அந்த பணம் இந்தியாவில் மீதி 90% மிடில், லோயர் மக்களிடம் புழங்கும், பணபுழக்கம் இருந்தால் தான், மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

ஒரு வடைகடைகாரர் ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு விற்றால் 700 முதலீடு போக 300 லாபம் பார்பார். அவரின் விற்பனை குறையும் போது அவரால் அன்றாடம் செலவை குறைக்கக்கூடாது, அவர் முதலில் இருந்து பணம் எடுக்கனும், வடைகடை ஒரு உதாரணம் தான், அந்த முதல் என்பதை இன்னும் புரியும் படி சொல்லனும்னா விதை நெல் என்பார்கள், அந்த விதை நெல் தாய்க்கு சமம், அதை விற்று சாப்பிடும் நிலை ஒரு விவசாயிக்கு வந்தால் அந்த நாடு நாசமாய் போக போகிறது என்று அர்த்தம்

இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் பார்ட் 1

விலைவாசி கட்டுக்குள் உள்ளதா?...

இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையவில்லை. விலைவாசி கட்டுக்குள் உள்ளது, இதுதான் பாஜக ஆதரவாளர்களின் வாதம்
பெட்ரோல் விலை எவ்வளவு ஏறினாலும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுன்னு தினம் போய் பெட்ரோல் பங்க் நிற்கும் சாமான்யர்களுக்கு அவர்கள் சொல்வது சரியா தான் இருக்கும் போலன்னு தோன்றும்,

ஆனால் உண்மை அதுவா?

லேஸ் பாக்கெட் தெரியுமா? நாலு உருளைகிழக்கு சிப்ஸை இலவசா கொடுத்து காற்றை விற்பார்களே அப்படி தான் இதுவும்,

பெட்ரோல் விலை 65 ரூபாய் இருந்தபொழுது நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தால் உங்களுக்கு 1.54 லிட்டர் அதாவது ஒண்ணரை லிட்டர் பெட்ரோல் கிடைக்கும், அதுவே லிட்டர் விலை 85 ரூபாயாக இருக்கும் பொழுது நீங்கள் 100 ரூபாய்க்கு அடித்தால் உங்களுக்கு 1.18 லிட்டர் மட்டுமே கிடைக்கும், அதாவது ஒண்ணேகால் லிட்டருக்கும் கீழே., சரி இதுக்கும் விலைவாசி கட்டுக்குள் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் ஒரு நடுதர குடும்பம், வாரம் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு பற்பசை வாங்கி பயன்படுத்துபவர். அதில் 50 கிராம் இருக்கும் என வைத்துகொள்வோம், இப்போதும் அதே அளவு இருக்கும் என நினைக்கிறீர்களா? அது தான் இல்லை, அது எப்பவோ 40 கிராம் ஆகிவிட்டது, அதே போல் சோம்பு, ஷாம்பு என பாக்கெட்டில் அடைக்கப்படும் அனைத்து பொருள்களும் மறைமுகமாக எடை குறைக்கப்பட்டு அதே விலைக்கு விற்கப்படுகிறது, விலையில் மாற்றமில்லை என்பதால் உங்களுக்கும் எதுவும் தெரியவதில்லை, ஆனால் நீங்கள் ஒரு மாசத்துக்கு குடும்பத்திற்கு 5000 செலவு செய்வீர்கள் என்றால் தற்பொழுது உங்களை அறியாமலே 1000 ரூபாய் அதிகமாக செலவு செய்துக்கொண்டிருக்கிறீர்கள்.பொருள்களின் விலை ஏற்றம் சப்ளை அண்ட் டிமாண்ட் அடிப்படையில் முன்பு விலை ஏற்ற இறக்கம் கண்டது, அதாவது சப்ளை அதிகமாக இருந்தால் பொருள் விலை குறையும், அதே நேரம் டிமாண்ட் அதிகமாக இருந்தால் பொருள் விலை ஏறும், ஆனால் சமீபகாலமாக எல்லா பொருள்கள் விலையும் செயற்கையாக ஏற்றப்பட்டு கொண்டுக்கிறது. அரசு சொல்லும் எந்த முகாந்திரமும் இல்லாத காரணங்களை பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டுயிருக்கிறனர்.

இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம், ஆனால் நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு பெரும் நட்டம் அடைக்கிறியோமே,அதை ஏன் நாம் கவனிப்பதில்லை? இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக இருந்தால் ஏற்றுமதி மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் விவசாய நாடாக அறியபடும் இந்தியாவிற்கு பல கோடி ரூபாய்களுக்கு விவசாய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது தெரியுமா?

இதற்கு என்ன தான் காரணம்?

அரசின் தவறான கொள்கையே முழு காரணம்,
இதற்கு தீர்வு தான் என்ன?
வாருங்கள் அலசுவோம்...

சாபம் பலிக்குமா?

கேள்வி:
கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?

பதில்:
எனக்கு தெரிந்த பெரியவர் ஒருத்தர் சொல்லுவார், நான் சொன்னா மழை வரும் தெரியுமான்னு, அதை என் போன்ல இருக்கும் அப்ளிகேசனே சொல்லுமேன்னு நான் சொல்லுவேன்

ஒரு படத்தில் சந்தானம் ஒரு ஹோட்டலில் வேலை செய்வார், சந்தானம் எதாவது தப்பு செய்யும் போது ஹோட்டல் முதலாளி வேலைய விட்டு போன்னு சொல்லுவார், தான் கருநாக்கு சொன்னால் பலிக்கும் மிரட்டியே சந்தானம் வேலையில் இருப்பார்

இப்படி சினிமாவையும், புத்தகத்தில் படித்தும் தான் மக்கள் மூடநம்பிக்கையை வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள், சீமான் கூட ஒருமுறை முப்பான் முருகன் தான் தமிழனத்தின் முதல் போராளி என்றார், எப்படி சொல்றிங்கன்னு கேட்டதுக்கு திருவிளையாடல் படம் பார்க்கலையான்னு கேட்டாரு, நான்ல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிச்சிகிட்டு இருக்கேன்சாபம் பற்றி

உங்களை யாராவது திட்டினால் நீங்கள் எதும் தவறு செய்யவில்லை என்றால் உங்களுக்கு கோவம் வரும், தவறு செய்திருப்பின் அமைதியாக இருப்பீர்கள். அது ஒரு எதிர்வினை.

உங்கள் முகத்துக்கு நேராக ஒருவர் சாபம் விடும் பொழுது, அவருக்கு நான் எதும் தீங்கிழைத்து விட்டமோ, நம்மால் அவர் பெரும் இழப்பை சந்திப்பு விட்டாரோ என உங்களுக்கு குற்ற உணர்வு வந்தால் அது மன உளைச்சலை உண்டாக்கும், மன உழைச்சல் உங்களை எந்த வேலையும் செய்ய விடாது, எல்லார் மீதும் எரிந்து விழுவீர்கள், உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் தண்டனையே சாபத்தின் பலனாக நீங்களே உணர்வீர்கள்.

உங்க மனசாட்சிபடி நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை, வேலையந்த வெட்டிபய எதோ சாபம் விட்டு போறான்னு நகர்ந்து சென்றால் அது உங்களை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

யாரும் சாபம் விடனும்னு அவசியமில்லை, குற்ற உணர்வே சாபம் தான், அதனால் முடிந்த வரை உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருங்கள். அதுவே நிறைவான வாழ்க்கை

தமிழகத்தில் பாஜகவின் நுழைவு...

சங்கிகள் விநாயகசதுர்த்தி மூலமா தான் தமிழகத்தில் கால் ஊன்றபார்க்குறாங்கன்னு பரவலா ஒரு கருத்து இருக்கு, ஆனா அவங்க 80களில் இருந்தே பல வகைகளில் முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க.

இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியை குறைஞ்சு எடை போடாதிங்க, பாஜகவில் ஆமா நான் சங்கி தான்னு சொல்லிட்டே எல்லாத்தையும் பண்ணுவானுங்க, காங்கிரஸில் நிறைய ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பாங்க.

குலகல்வி முறையை அமுல் படுத்துவதில் ராஜாஜி வெகு தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் நடத்திய மாநாட்டில் பார்ப்பானர்கள் சமையல் பண்ணலைனா நாங்க சாப்பிடமாட்டோம்னு வெளிநடப்பு பண்ணாங்க, பெரியார் வெகுதீவிரமா இடஒதுக்கீடு கேட்டப்ப, முடியாதுன்னு சொல்லிட்டதால் பெரியார் கட்சியை விட்டு வெளியேறினார். (பின்னாளில் ராஜாஜியின் சுதந்தரா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து காமராஜரை தோற்கடித்தது சோககதை)

ஜெயலலிதா பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் நன்றாக கவனித்து பார்த்தால் அவர்கள் வைணவகொள்கைகளில் தீவிர ஈர்ப்புடன் இருக்கவில்லை, (செத்தபிறகு ஏன் எரிக்கலன்னு பிரச்சனை ஆனது) கேரளா நம்பூரிகளையும், ஜோசியகாரர்களையும் நம்பியே முடிவுகள் எடுத்தார். அதனால் சங்கிகள் நேரடியாக ஜெயலலிதாவை பயன்படுத்த முடியவில்லைஆனாலும் சத்தமே இல்லாமல் சாஹாவில் சிறுவர்களை மூளைசலவை செய்தார்கள். தேசபக்தி என்ற பெயரில் அவர்கள் விதைத்த நஞ்சு இந்துதுவா தான், கராத்தே சொல்லி தர்றாங்கன்னு நான் கூட கொஞ்சநாள் போனேன், எங்களுக்கு சொல்லி கொடுத்த குரு இன்னும் கல்யாணம் பண்ணாம சுத்துறதா கேள்வி பட்டேன், சம்சாரியவே யாரும் திரும்பி பார்க்க மாட்றாங்க, சன்யாசியை எங்கிட்டு பார்க்க.

அடுத்த முயற்சி, பிட் நோட்டீஸ். அதில் இந்திய சுதந்திரத்திற்கு போராடிவர்கள்னு இலையை கூட கிள்ளிபோடாதவர்களின் பெயர்கள் இருக்கும். சுதந்திரத்தின் போது இந்திய முஸ்லீம்களின் எண்ணிக்கை என்று குறிப்பிட்ட சதவிதகமும், தற்போதைய நிலமைன்னு கூடுதலாக சதவிகமும் இருக்கும்,

இந்தியாவை முஸ்லீம் நாடாக ஆக்க முயற்சிக்கிறார்கள் என்பது இப்போதும் அவர்கள் வைக்கும் குற்றசாட்டு. குழந்தைகள் என்ன செடிகொடியா. நட்டுவச்சு தண்ணி ஊத்த, வளர்க்க வேண்டாமா? அப்படியும் எப்படி முஸ்லீம்கள் எண்ணிகை உயர்ந்தது. ஒருவரல்ல, இருவரல்ல ஒரு ஊரே கூட்டாக இஸ்லாம் மதத்தை ஏற்றது. குற்றபரம்பரை என ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். சாதிய ஒடுக்குமுறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம் ஆனார்கள். இப்படி இந்துகளாக இருந்தவர்கள் தான் இஸ்லாமியர்கள் ஆனது.

சமீபகாலமா இன்னொரு முயற்சியும் பண்றாங்க, கோவில் நிலங்கள் மீட்பு குழுன்னு இவங்களா ஒரு குரூப் சேர்த்துட்டு அங்கங்க ஆர்பாட்டம் பண்ணுவாங்க. சி.எஸ்.ஐ பள்ளியில் படித்த இந்து முண்ணனி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்தியாவில் கிறிஸ்துவ பள்ளியே இருக்கக்கூடாதுன்னு சொல்லுவார். அதற்கு மாற்றதான் நவோதயா பள்ளிகளை திணிக்க பார்க்குறாங்க

கோத்ரா சம்பவம் இங்கே எடுப்படவில்லை, இப்போது வரை கோவையை கை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், இப்போதும் IIMT பல்கலைகழகத்தில் உள்ள புரபஸர்கள் 221 பேரில் 209 பேர் ஆதிக்கசாதிகள் தான், படிச்சு தானே வச்சாங்க என்பது சரிதான், ஆனால் அங்கே எப்படி சமநீதியும், சமூகநீதியும் செயல்படும். சாதிய கட்டமப்பை நீக்காத வரை இந்துதுவா முழுமையான வெற்றி பெறாது, ஆனால் சாதிகள் இல்லையென்றால் இந்து மதமே கிடையாது.

திமுக பிஜேபியுடன் இணக்கமாக இருப்பது போல் காட்டுவது, இந்துகளை பகைத்து கொண்டு ஓட்டுகளை இழக்கக்கூடாது என செயல்படுவது இந்துதுவாவாதிகளுக்கு கொண்டாட்டமா இருக்கும், அதனால் வருசா வருசம் விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல் பார்ப்பான்கள் பூணூல் மாத்தும் ஆவணி அவிட்டத்தை கூட இந்து பண்டிகைன்னு திணிச்சுகிட்டு இருக்காங்க.

ஏற்கனவே அதிமுக பிஜேபிக்கு அடிமையா இருக்கு, திமுகவின் செயல்பாடுகள் சரியில்லைனா நாம தாமரை மயிருல தான் மலரும்னு சொல்ல முடியாது. 2 எம்.,எல்.ஏ வச்சு ஆட்சியை பிடிக்கும் குறுக்குவழி காரர்களுக்கு அது பெரியவிசயமா இருக்காது. மதம் என்பதே மடதனம், மதம் மனிதனை மடைனயாக்கும் பரவலா விழிப்புணர்வு ஏற்படுத்தனும்

இன்னும் சங்கிகள் இந்த்துவாவை பரப்ப வேறு எதும் முயற்சி பண்ணியிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க, மண்டையில ஏத்திகிறேன்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பீடா!....

பிள்ளையார் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் உலகமே இயங்காது என்பதற்கு, அந்த அழுக்குருண்டைக்கு முன்னாடி உலகம் எப்படி இயங்கியது என்ற லாஜிக்கான கேள்வியை நாம் முன்வைக்கலாம், ஆனால் அது ஜோஸ்திட சாத்திர நிகழ்ச்சி ஒரு பக்கம் நடத்தி, மறுபுறம் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போடும் தொலைக்காட்டிக்கு எதிரான ஸ்டேட்மெண்ட் என்பதால் நாம வேற டாபிக் போவோம்.

மனிதர்களுக்கு பயம் இல்லாமல் வாழ நம்பிக்கை தேவையாய் இருந்தது. திகட்ட திகட்ட நம்பிக்கையூட்டியே குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள், இஸ்லாமியர்களுக்கு அல்லா உலகை இயக்குகிறார். கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர் உலகை இயக்குகிறீர். போலவே அனைத்து மதத்துகளுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் மதத்திற்கெல்லாம் ஜனநாயக முறையில் தேர்தல் வச்சு தேர்தெடுப்பாங்க போல.குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனிதர்களுக்கு பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும், ஆனாலும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள பயம் ஊட்டப்படும், கடவுள் இல்லையென்று சொன்னால் உனக்கு மறுபிறவி கிடைக்காது, இறந்தபிறகு நரகத்தில் பல தண்டனைகள் கிடைக்கும் என்பதையும் பரம்பரை பரம்பரையாக ஊட்டி வைத்திருப்பதால், அதுவும் சேர்ந்தே கடத்தப்படுகிறது. எல்லாத்தை விட மதவாதிகளின் கடைசி ஆயுதம், கடவுள் இல்லையென்றால் உனக்கும் நட்டமில்லை, எனக்கும் நட்டமில்லை, ஆனால் ஒரு வேளை இருந்தால் உனக்கு தானே நட்டம்.

டெஸ்லாக்கு முன்னால் யாரேனும் மின்சாரத்தை உருவாக்க முடியும் என சொல்லியிருந்தால் பைத்தியம் மாதிரி பார்த்திருப்பார்கள். பூமி உருண்டை என்பதையோ, பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்பதையோ அன்றைய மதவாதிகள் ஏற்காமல் கடுமையான தண்டனைகள் கூட கொடுத்தார்கள், தொலைபேசி வந்த ஆரம்பத்திலே பிற்காலத்தில் தந்தி இல்லாத பேசும் சாதனம் மக்கள் சட்டை பையில் இருக்கும் என்று சொன்ன பெரியார் ஏன் பகுத்தறிவு தந்தை என அழைக்கப்படுகிறார்னு நீங்களும் யோசிச்சா புரியும்(பிழைப்புவாத பெரியாரிஸ்டுகள் விதிவிலக்கு)

உங்களுக்கு கொண்டாட ஒருநாள் வேண்டும் என்றால் குடும்பத்துடன் மகிழ்வாக கொண்டாடுங்கள், கல்லை எறிந்து மண்டைய உடைக்கிறது, மெடிக்கல்ஷாப்பில் காண்டம் திருடுறதுன்னு இருந்தால் எப்படி உங்கள் கவனம் பொருளாதாரம் பக்கம் திரும்பும், ஆசியாவிலே பொருளாதாரத்தில் மோசமான நாடாக இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது, அதை சரி செய்ய யோசிக்காமல் கொஞ்சம் கூட பகுத்தறிவே இல்லாமல் அழுக்குருண்டைக்கு பிறந்தநாள் கொண்டாடிக்கிட்டு இருக்கிங்க

ஓரினைபிரியமும் இயற்கையே.......

ஏற்கனவே பலமுறை எழுதியுள்ளேன். பக்தி என்பதை ஒழுக்கம் சார்த்த நடவடிக்கையில் சேர்த்து கொண்டதால் தான் அது மாயை என பலமுறை நிரூபிக்கப்பட்டாலும் தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக்கொள்ள மனிதம் தன்னை பக்தி மிகுந்த மதவாதியாக அடையாளப்படுத்திக்கொள்கிறான்.
ஒரினைசேர்க்கைக்கு எதிராக காட்டிக்கொள்வதும் அப்படியான ஒழுக்கவாதி வேசம் கட்டவே..

உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகளிடம் ஓரினைசேர்க்கை பழக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இனபெருக்கத்திற்கென்று பருவம் வைத்துள்ள விலங்குகள் அந்த சமயத்தில் துணை கிடைக்காத பொழுது ஓரினைசேர்க்கையில் தேவையை தீர்த்துக்கொள்கின்றன, மனிதனில் ஓரினைசேர்க்கை இயற்கை இல்லை என எதிர்பவர்கள் விலங்குகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என எதும் சட்டம் இயற்றியுள்ளனரா?மனிதர்கள் அனைவருமே கருவாக உருவாகும் பொழுது பெண் கருவாக தான் உருவாகிறார்கள். ஆணில் இருந்து செல்லும் ஒய் குரோம்சோம்கள் தூண்டப்படும் பொழுதே கரு ஆணாக உருவெடுக்கிறது, தன்னை ஆண்மகன் என மார்தட்டிக்கொள்ளும் அனைவரும், நான் உட்பட உருவாகும் பொழுது பெண் கருவே

ஒருவர் ஓரினைபிரியர்களாக உருவாக பல காரணிகள் இருக்கின்றன, அவை அனைத்தும் இந்த சமூகத்தாலே உருவானவை, இந்த சமூகம் என்பது நீங்களும் நானும் தான், ஒழுக்கம் போதிக்கும் நீங்களே ஒருவரை ஒழுக்கவிதிகளை கட்டுடைக்க தூண்டுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் போதிக்கும் எந்த ஒழுக்கவிதிகளையும் நீங்களே கடைப்பிடிப்பதில்லை.அவன் என்னவோ பண்ணிட்டு போறான், என்னை ஏன் தொந்தரவு பண்றான் என்பது பலரின் தற்காப்பு வாதமாக இருக்கிறது. பேருந்து நிலையத்திலோ, பொது வெளியிலோ ஒரு பெண்ணை கண்டால் அவளை சைட் அடிக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றுவது எந்த அளவு இயற்கையோ அதே விதி தான் அவர்களுக்கும், ஒரு பெண்ணை கலவிக்கு இசையவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளை தான் அவர்களும் செய்கிறார்கள், போக அவர்கள் உங்களை ஒருபொழுதும் வன்புணரபோவதில்லை.

ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் தருகிறீர்கள், பலர் முன்னிலையில் அந்த பெண் உங்களை செருப்பால் அடித்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வீர்களா?
நான் என் விருப்பதை தெரிவித்தேன், உங்களுக்கு விருப்பமில்லையெனில் நாகரிகமாக சொல்லியிருக்கலாம் என்பது தானே உங்கள் கருத்து, அதுவே தான் ஓரினை பிரியர்களுக்கும்

உலகில் 26 வளர்ந்த நாடுகள் ஓரினைசேர்க்கை சட்டபூர்வமாக அங்கிகரத்துள்ளது. அவர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. ஒரு தனி மனிதன் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ உரிமை உண்டு என்றால் அதே தனி மனித உரிமை ஒரு மனிதன் ஓரினைபிரியராக வாழவும் உள்ளது.உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்பதற்காக அதை ஒழுக்கம் கெட்ட செயல் என வெளிகாட்டுவது தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக்கொள்ளும் வேசமே தவிர அதில் உண்மை எள்ளளவும் இல்லை. ஏனெனில் உங்கள் ஆதர்ஷ நாயகனை திரையில் காணும் பொழுது நீங்களும் ஆர்கஸம் அடைகிறீர்கள்.

இவ்வுலகில் அனைவரும் பை-செக்ஸுவல் தான்


கேள்வி - பதில் (மார்க்ஸியம்)

கேள்வி:
Anand Babu · 3 mutual friends
அண்ணா விளக்கம் அருமை. மார்க்ஸியம் பற்றியும் அது நடைமுறைக்கேதுவானதா இல்லையா என சொல்வீர்களா ?

பதில்:
மார்க்ஸ் ஒரு முறை சொன்னார், பின்னொரு நாளில் என் சித்தாந்தங்களை விட உயரிய சிந்தனைகள் உருவாகி, மனிதம் தளைத்து எனது புத்தகங்கள் அருகாட்சியத்தில் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று.

மார்க்ஸியம் மட்டுமல்ல, எல்லா சிந்தனைகளையும் அதன் கருத்தியலுடன் இசைந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும், அது மனிதம் தளைக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும். எந்த சித்தாந்தமும் ஒரு கட்டத்தில் மக்களிடையே இயல்பில் கலந்து விடும், கிட்டதட்ட ஒரு சடங்காகி விடும். கம்யூனிஸமும், பெரியாரியலும் தற்பொழுது அந்த நிலையில் தான் இருக்கிறது.ஒருவரின் சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது அந்த ஒருவரை அவமானபடுத்துவதல்ல, மனிதத்தின் சிக்கல் முடிச்சுகளை அவிழ்க்க பலர் பல கருத்தியல்களை உருவாக்கினார்கள், அதில் சில மட்டுமே நிலைக்க காரணம், அதன் தேவையும், கருத்தியலின் வள்ர்ச்சியும் தான்.

இதை ஒரு முறை நான் சொன்னதுக்கு, நீ என்ன மார்க்ஸ், பெரியாரை விட பெரிய அப்பாடக்கரான்னு சண்டைக்கு வந்தார்கள். அறிவியலும் கருத்தியலும் ஒரே இடத்தில் தேங்கி நின்றால் மனிதம் இந்த அளவு வளர்த்திருக்குமா? ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் மத கருத்தியலுக்கு சமமாக கருத்து முதல் வாதத்தை நிறுவுவது அதனை வெளிபடுத்தியவர்களுக்கு நாம் செய்யும் அவமதிப்பு அல்லவாநான் அடுத்த வகுப்புக்கு செல்கிறேன் என்றால் அதற்கு முந்தைய வகுப்பை அவமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை, அது இல்லாமல் என்னால் தேவையான பாடத்தை உணரவும் முடியாது. மேலும் அடுத்த வகுப்பு செல்லவும் முடியாது. மார்க்ஸ், பெரியார் போல் நாமும்  மனிதம் சிந்திக்க வேண்டும், ஆனால் தற்போதைய தேவையும் கருத்தில் கொண்டு

இந்திய பொருளாதாரம் உயர்கிறதா?

இன்றைய தினதந்தி தலையங்கத்தில், ரூபாய் மதிப்பு சரிந்தாலும், பெட்ரோல் விலை உயர்ந்தாலும் நாட்டில் ஜிடிபி அபார வளர்ச்சி அடைந்துள்ளது என எழுதியுள்ளனர். ஊடகங்கள் அப்படி தான் எழுதும், ஆனால் உண்மை என்ன என்பதை எழுத வேண்டியது நம் கடமை ஆயிற்றே.

ஜிடிபி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என பொருள் கொள்ள வேண்டும். அதை எவ்வாறு கணக்கிட முடியும்? மற்ற தொழில்களில் விற்பனை ஆகும் பொருட்களுக்கு செலுத்தும் வரியை கொண்டு உற்பத்தியை கணக்கிடலாம், ஆனால் விவசாய உற்பத்தி அடைந்துள்ளது என்பதை எதை கொண்டு புள்ளி விபரம் சொல்கின்றனர்.

வரி வருவாய் கொண்டே ஜிடிபி அளவிடபடுகிறது என்பதற்கான சான்று

காய்கறி அல்லாத விவசாய பொருட்கள் பெருமளவு அரசால் கொள்முதல் செய்யப்படும். அதற்கு அரசு நிர்ணயதுள்ள விலை விவசாயிகளுக்கு கொடுக்கப்படும், பல வருடங்களாக கரும்புக்கு விலை உயர்த்த கோரி விவசாயிகள் சண்டையிட்டு கொண்டிருப்பது நீங்கள் அறியலாம்.

பெட்ரோல் விலை உயர்ந்தாலும் நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழல், பொது போக்குவரத்தும் உரிய அளவு சேவையில் இல்லாததால் நாம் சொந்த வாகனமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். 75 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் போது அரசுக்கு கிடைத்த வரி வருவாயை விட 83 ரூபாய்க்கு விற்கும் பொழுது அதிகமாக கிடைக்கும், அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்து வளர்ச்சியாக காட்டுவது சரிதானா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என உறுதியளித்த மோடி மற்றும் அவரது வகையறா தற்பொழுது சொல்வது முத்ரா வங்கி மூலம் 13000 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பெற்றவர்கள் அனைவரும் சுயதொழில் செய்து கொண்டிருக்கிறனர், இதுவும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது தான் என்று

முத்ரா வங்கியில் 83% கடன் பெற்றவர்கள் 50000 ரூபாய்க்கும் கீழே தான் வாங்கியுள்ளார்கள், அவர்களால் அதை வைத்து என்ன தொழில் செய்ய முடியும்? மகளிர் குழுவில் கூட பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றனர், ஆனால் முத்ரா வங்கியோ புள்ளி விபரத்துக்காவே செயல்பட்டு வருகிறது.


ஜிடிபி உயர்ந்தாலும் விலைவாசி உயர்வையும், வங்கி இருப்பு குறைவையும் காட்டும் படம்.

EPF பிடித்தம் முதலில் ஒரு நிறுவனத்தில் 20 பேர் வேலை செய்தால் கட்டாயம் பிடிக்கவேண்டும், ஆனால் மோடி வந்த பிறகு அதை பத்தாக குறைத்தார், 10க்கும் மேல் வேலை செய்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு EPF பிடித்தது, அதனை மோடி உருவாக்கிய வேலை வாய்ப்பாக காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.

பணமதிப்பை திரும்ப பெற்றதால் கருப்பு பணம் ஒழியும் என்றார்கள், 99.3% பணம் திரும்ப வங்கிக்கே வந்து விட்டது. அந்த சமயமே பணமில்லா வர்த்தகம், டிஜிட்டல் இந்தியா என மடை மாற்றினாலும் இந்த்துவா ஆதரவாளர்கள் தவிர மோடிக்கு ஓட்டு போட்டவர்களே துக்ளக்கு பின் மோடி என கிண்டல் செய்யும் அளவுக்கு ஆட்சி இருக்கிறது.

பொய்யான புள்ளி விபரங்களோ, வெறும் வாக்குறுதிகளோ நாட்டை உயர்த்தாது, நீண்ட கால பயன் உள்ள வகையில் முறையான செயல் திட்டம், மக்கள் நலன், அவர்களது உரிமை பாதுக்காக்கப்படும் நாடுகள் மட்டுமே உலக அளவில் மக்கள் வாழ தகுதியுள்ள நாடாக அறியப்படும். அன்றைய ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் ஹீரோயாக இருக்கலாம், இன்றைய இந்த்துவாவாதிகளுக்கு மோடி ஹீரோவாக இருப்பது போல்.

ஆனால் ஹிட்லரின் முடிவை யாரும் மறக்கமுடியாதே

உறவு சிக்கல்!

மற்ற விலங்குகளை விட மனிதர்கள் வித்தியாசப்பட எமோசனலி அட்டாச்டு என்பதும் ஒரு காரணம். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், இழப்பு, அங்கிகாரமின்மை போன்றவை நான் என்ற ஈகோவை இல்லாததாக்கும், அந்த நான் என்ற ஈகோ இழந்த தருணம் சுயந்தை இழந்து தற்கொலையோ, கொலையோ செய்யும் மன உழைச்சலுக்கு தள்ளப்படும் விசித்திர உயிரினம் மனிதம்

மாற்று காதல் உருவாக எதோ ஒரு வகை உளவியல் சிக்கல் காரணமாக இருக்கிறது. நாம் அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறோம், சுதந்திரமற்று இருக்கிறோம், சுயத்தை இழந்து நிற்கிறோம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம், இதுல கொடுமை என்னான்னா பெற்றோர் வீட்டில் கட்டுபெட்டிதனத்துடன் வளர்க்கப்பட்ட பெண், கணவன் வீட்டில் சுதந்திரமாக இருந்தாக் ஆட்டம் ஓவரா தான் இருக்கும் என்பது கண்கூடு, காரணம் அவர்களுக்குள் புதைந்துள்ள ஆழமன ஆசைகள் தான்

மாற்று காதலில் செக்ஸ் மட்டுமே பிரதானமாக இருக்காது என்பது என் புரிதல், அப்படி செக்ஸ் மட்டுமே காரணமாக இருந்தால் அது காதலாகவே இருக்காது, சில மாதங்களில் உடல் கவர்ச்சி அற்று பிரியும் சூழல் ஏற்படும், சிறு வயசு காதல் பெரும்பாலும் தோல்வி அடைய காரணம் இது தான்முதிர் காதல் கூட பலருக்கு சோதனை முயற்சியாக தான் முடியும், பேய்க்கு பயந்து பூதத்திடன் மாட்டிக்கொண்ட கதையான அனுபவம் தரும், ஒழுங்கா இருப்பவனை சந்தேகபடுறானேன்னு சைக்கோவிடம் மாட்டி நெந்து நூடுல்ஸ் ஆவார்கள், முன் தந்த அனுபவம் காதலை மதிப்பவனையும் தள்ளியே நிறுத்தும், பொஸிசிவ்நெஸ்க்கும், சந்தேகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்

உண்மை தான், செய்த தவறை மறப்பவர்கள், மீண்டும் அதே தவறை செய்ய சபிக்கப்பட்டவர்கள் என்ற தத்துவம் உலகவளவில் பலரால் நடைமுறையில் உணரப்பட்டது, விதிவிலக்குகள் உண்டு, நீ தான் உலகம் என்று காதலித்ததால் பெரும் வலி பட்டு ஒருவள்/ன் மீண்டும் காதலிக்க நேர்ந்தால் அப்படியே தான் காதலிப்பார்கள், சிலரின் பிறப்பியல்பு அப்படி.

உலகம் முழுவதுமே காதல் பெரும் ஆற்றுபடுத்துனராக உள்ளது, சமூக சிக்கல், பொருளாதார நெருக்கடி போன்ற கமீட்மெண்டுகள் காதலில் இருக்காது, சுயநலமற்று நீ சாப்டியா என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும், கல்யாணம் ஆனவுடன் காதல் காணாமல் போய்விடும், சிறு வாக்குவாதத்திலும் நாம காதலித்த! பொழுது நீ இப்படி இல்ல என்பார்கள், அப்படியென்றால் இப்பொழுது காதலிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

இந்த உலகம் முற்றிலுமாக இயந்திரதனத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது, எல்லா உறவுகளும் கடமைக்கு நலம் விசாரித்துகொள்கிறனர்கள். கண்ணுக்கு தெரியாத காலம் கூட காசுக்கு விற்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிறர் சந்தோசத்தை கெடுக்க நினைக்க நேரம் ஒதுக்குவதே சைக்கோதனம் தான். ஆனால் சமூக நெருக்குதல் அப்படியான சைக்கோகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்

!

Blog Widget by LinkWithin