கேள்வி - பதில் (காதல்)

கேள்வி:
க்ரஸ் னு சொல்றாங்கல.. அது லவ் இல்ல..கிரஸ், இன்பாட்டிவேசன், இனக்கவர்ச்சினு.. இதுல இருந்து காதல் எப்படி பிறக்குது..   காதலுக்கும், கிரஸ் க்கும் எந்த இடத்துல வேறுபாடு...  இத துல்லியமா சொல்லமுடியாதுனு புரியுது.. ஆனாலும் முடிஞ்சவர சொல்லுங்க... பதிவா

பதில்:
மேலே நீங்க சொன்ன அனைத்திற்கும், காதல் உட்பட அடிப்படை எதிர்பால் ஈர்ப்பு. ஒரு ஆணா என் புரிதலையும், கேட்டு அறிந்தவைகளையும் உடலியல், உளவியல் வச்சு சொல்றேன்.

ஏற்கனவே சொன்னது போல் 24/26 வரை இனப்பெருக்கத்திற்கான பருவம் பீக்கில் இருக்கும். அப்போ பார்க்கும் பெண்கள் மேலல்லாம் காதல் வரும். எல்லாமே அழகா தெரியும். பேசினாலே காதில் ராஜா இசை கேட்கும். அவை எல்லாமே நம்மை இனபெருக்கம் செய்ய தூண்டும் ஹார்மோன் விளையாட்டு. அந்த வயதில் காதல் வராதா என்றால் வரும். ஆனால் அது தான் காதலா என புரிந்துகொள்ளவே 10 வருசம் ஆகும். ஏன்னா இப்ப காதலெல்லாம் நானும் காதலிக்கிறேன்னு பெருமைபீத்தவே பண்ணுவதா இருக்கு

சரி காதல்னா என்ன? ஏன் பண்றோம்னு உள்ளே கடந்து போனால் பகிர நம்பிக்கையான துணை, ஏன் அப்ப ஃப்ரெண்ட் நம்பிக்கையான ஆள் இல்லையா?
இப்படி கேள்விகள் கேட்டுட்டே போனால் கடைசியில் செக்ஸில் தான் வந்து நிக்கும். ஏன்னா மத்த தேவைகள் எல்லாமே நண்பர்களிடம் கிடைக்கும். அப்ப செக்ஸ் தான் காதலா என்றால் இல்லை. காதலை பகிர செக்ஸும் ஒரு வழி. அப்ப செக்ஸ் இல்லைனா காதலே இல்லையா என்றால் ஆம் செக்ஸ் இல்லாத காதல் சீக்கிரம் புட்டுக்கும்

என்ன தாண்டா காதல்னு உரிச்சிட்டே போனா கடைசியில் வெங்காயம் மாதிரி ஒன்னுமேயில்ல, அதான் காதல்னு வந்து நிக்கும். இனகவர்ச்சி தாண்டி ஆளுமைகள் மேல் காதல்வயப்படுவோம். அவங்க எவ்ளோ பல்பு கொடுத்தாலும் காதலிச்சிட்டே இருப்போம். ஆனால் காதல் என்பது ஒரு அங்கிகாரம் அது பிரதிபலிப்பை எதிர்பார்க்கும்., பல நாட்கள் ஒன்வேவா காதல் போய்கிட்டு இருந்தா உங்க உள்ளுணர்வும், ஹார்மோனும் உங்கள் காதல் உணர்வை குறைத்துவிடும். உங்கள் பார்வை வேற பக்கம் திரும்பும்மறுக்க முடியாத விசயம் காதல் என்பது மிக அற்புதமான உணர்வு. காதல்வயப்பட்டால் மகிழ்வுக்கான ஹார்மோன்கள் சுரந்து உங்களை பறக்கவைக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். ஏன் வாழ்றோம் என்ற தேடலுக்கு பதிலாக நிற்கும். ஆக காதல்னா என்னன்னு ஆராய்வதை விட காதலை அனுபவிப்பதே சிறப்பு.

காதல் நம் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கக்கூடியது. வேறு எதன் மீதும் நாட்டமில்லால் உங்கள் துணையை சுற்றியே மனம் நிற்கும். அந்த காதல் இனி இல்லை என்றால் அந்த மனம் முற்றிலும் வெற்றிடமாகும். உலகில் காதல் தோல்வி தற்கொலைகளே அதிகம். அதற்காக பட்டும் படாமலும் காதலிப்பது கட்டாந்தரையில் படுத்து நீச்சல் அடிப்பது போன்று. தோல்வி உங்களை பக்குவபடுத்தும், வலி தாங்கும் வலிமை தரும். காதல் சுகமென்றால் தோல்வி அனுபவம். ரெண்டையும் தவறவிடக்கூடாது. அனுபவிக்கனும்

கேள்வி - பதில் (உடலியல்)

கேள்வி: மனிதர்களுக்கு மட்டும் தொப்பை வருதே, அதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: மனிதர்களுக்கு மட்டுமே தொப்பை வருகிறது என்பது தவறு, குரங்குகள், கரடி, ஏன் நாய்க்கு கூட தொப்பை வரும். தொப்பை என்பது நாம் குறிப்பிடும் பெயர். உடலியல் படி அது சேமிக்கப்படும் கொழுப்பு. நம் உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை நாம் உணவின் மூலம் பெறுகிறோம். புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. நாம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டாலும் அது கொழுப்பாக மாற்றப்பட்டே சக்தி பெறப்படுகிறது. அப்படி கொழுப்பாக மாற்ற இன்சிலின் அதிகமாக வேலை செய்வதால் தான் சர்க்கரை வியாதி வருகிறது. அதை வேற இடத்தில் விரிவாக பேசலாம்

நமக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிஸ் தேவைபடுதுன்னு வச்சுகுவோம். அது ஒரு சட்டி சோறில் நமக்கு கிடைக்கும். ஆனால் அதே கலோரிஸ் 100 பாதாம் அல்லது கால்கிலோ மாமிசத்தில் கிடைக்கும். அது எப்படி வால் பத்தும்னு தானே கேக்குறிங்க. அங்க தான் பிரச்சனையே ஏன்னா நாம் உடலுக்கு சாப்பிடவில்லை. வயிற்றிற்கு சாப்பிட்டு பழகிவிட்டோம். அதை நிரப்பனும் என்பதில் குறியாக இருப்பதால் தேவை போக மீதி சக்தி கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. நம் உடலில் எல்லா பாகங்களும் இயங்கும். நடக்கும் போது கால்கள், எதையாவது தூக்கும் போது கைகள். நம் உடலில் குறைவான வேலை செய்வது எது என்றால் அது வயிறு தான். அதனால் தான் மீதி கொழுப்புகள் வயிற்றுபகுதியில் சேமிக்கப்படுகிறது

நம்ம தாத்தா, பாட்டியெல்லாம் இதை விட அதிகமா சாப்பிட்டாங்களே, அவங்களுக்கு தொப்பையே வரலையேன்னு தோணுதா? நம்ம தாத்தா குனிஞ்சு வாய்க்கா, வரப்பு வெட்டினாரு. நம்ம பாட்டி குனிஞ்சு சுள்ளி பொறுக்குனாங்க, நாத்து நட்டாங்க, களை எடுத்தாங்க. நாம குனிஞ்சு வீடு கூட்ட கஷ்டமா இருக்குன்னு வேக்குவம் கிளினர் வாங்கி வச்சிருக்கோம். பின்ன தொப்பை வராம என்ன செய்யும்.டயட் என்றால் சரிவிகித உணவு என்று அர்த்தம். யாராவது சாப்பிடலன்னு சொன்னா ட்யட்ல இருக்கியான்னு கேட்குறாங்க. பட்டினி கிடப்பது டயட் அல்ல. மேலும் அது பாதிப்பை தான் தரும். நாம்  ஒரு சூப்பர் பயோ கம்பியூட்டர். நம் உடலை எதாவது கிருமி தாக்கினால் அந்த கிருமி பற்றிய செய்திகள் உடனே மூளைக்கு அனுப்பப்படும். மூளை மற்ற பகுதிகளுக்கும் எச்சரிக்கை அனுப்பி கிருமியை கொல்லும். அந்த முறையில் தான் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பட்டினி கிடந்தால் உடலுக்கு தேவையான சக்தியை சேமிப்பில் இருந்து எடுக்கும். அந்த செய்தி மூளைக்கு செல்லும். இவன் சரியா சாப்பிட மாட்டான் போல எப்ப சாப்பிடுகிறானோ அப்ப அதிக பசியை தூண்டி நிறைய சாப்பிடவைக்கும் மூளை. இது பேலன்ஸ்டு மெண்டாபாலிசம்.

வாக்கிங் போனா தொப்பை குறையுமா? வாக்கிங் போனா வயிற்றுக்கு வேலையான்னு திருப்பி கேளுங்க. வயிற்றுக்கு சில உடல் பயிற்சிகள் இருக்கு. சமதள தரையில் படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு காலையில் மடக்காமல் ஒரு அடி மேலே தூக்குங்கள். இப்பொழுது உங்கள் காலின் எடையை தாங்குவது உங்கள் வயிற்றுபகுதி. அதை உங்களால் உணர முடியும். உங்களால் முடிந்த விநாடிகள் அப்படியே இருங்கள். பின் சற்று ஓய்வெடுங்கள். மீண்டும் செய்யுங்கள். கூடவே உங்கள் தலையையும் தூக்கி வயிற்றுக்கு வலு கூட்டலாம். இதை அப்டமன் எக்ஸர்ஸைஸ் என்பார்கள்.

இதை விட முக்கியம், பசிச்சா மட்டும் சாப்பிடுங்க. டைமுக்கு சாப்பிடனும்னு நினைக்காதிங்க. மென்னு சாப்பிடுங்க.

ஒழுக்க விதிகள்!

மனிதர்களின் ஒழுக்கவிதிகள் பற்றிய புரிதல் என்ன நிலையில் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேட்டேன். குறைவான ஆடை அணிந்திருக்கும் ஆண் மீது பெண் மையல் கொண்டால் தவறு ஆண் மீதா, பெண் மீதா என்று. பெண் மீது தான் தவறு என்று சிலர் சொன்னாலும் பெரும்பான்மை அதில் என்ன தவறு என்றார்கள். நிச்சயமாக அதுவே ஆணாக இருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைக்கு ஆதரவு மனப்பான்மை. ரெண்டாவது இத்தனை வருசமா அடிமையா இருந்தாங்கல்ல. இனி கொஞ்சம் ஆண்கள் இருக்கட்டும் என்ற மனப்பான்மை. இது கொஞ்சம் ஆபத்தும் கூட, இப்படி தான் தலித்தியவாதிகள் செய்யும் குற்றங்கள் கண்டுக்கொள்ளபடாமல் போகிறது.

இந்த ஆதரவு மனபான்மைக்கு பின்னே நீண்ட நெடிய வரலாறு உண்டு. மதம் ஒழுக்கமே போதிக்கிறது என்பது தன் நம்பிக்கையை சரியென்று நிலைநாட்ட மதத்தை நியாயபடுத்தும் மொன்னைவாதமே தவிர மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமேயில்ல. அட மதத்தை விடங்க. மதசார்ப்பற்றது என புகழப்படும் குறள் என்ன சொல்லுது?

பிறன்மனை நோகா பேராண்மை என்று ஆணுக்கும்
ஆணுக்கு அடிமையா இருந்தா பெய்யென பெய்யும் மழை என பெண்ணுக்கும் சொல்கிறது. பொதுபுத்தியில் பார்த்தால் இது இருபாலருக்கும் ஒழுக்கவிதிகள் போதிப்பது போல் இருக்கும் ஆனால் உண்மையில் ஆணை அங்கே உட்கார் எங்கிறது, பெண்ணை அங்கே கட்டிபோடுகிறது, இதுக்கு தான் சிலவருசங்களுக்கு முன்னால் வள்ளுவர் ஒரு நிலப்பிரபுத்துவ சொம்புதூக்கி என்று எழுதினேன். எல்லாரும் ரவுண்டு கட்டி கம்பு சுத்துனாங்க.ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் நிச்சயம் பெண்களுக்கு சுதந்திரமோ உரிமையோ அளிக்க வாய்ப்பில்லை. திறந்துவைக்கப்பட்ட பண்டங்களை ஈ மொய்க்கும் ஆகவே பர்தா அணிவீர் என்று பெண்களை பண்டங்களுடன் ஒப்பிடும் மதம் இஸ்லாம். பெண்களுக்கு பாதுகாப்பு தருவதே ஆண்களுக்கு அழகு என்று அதே மத புத்தகத்தில் இருந்தால் அது இருவருக்கும் பொதுவான மதம் எனலாம். உங்கள் மனைவி(யர்கள்)!! உங்கள் விளைநிலங்கள். அவர்கள் உங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்னு சொல்லும் மதம் ஒரு சாரார்க்கு மட்டும் ஒழுக்கம் போதிக்குதா இல்லையா?

இஸ்லாத்திலாவது பெண்களுக்கு மறுமண உரிமை உண்டு. ஆனால் இந்து மதத்தில் பெண் கடவுள்கள் உண்டு என சொல்லிக்கொண்டாலும் பெண்களை மிக மோசமாக நடத்துவது இந்து மதமே, வேதமே இந்தியாவின் பண்பாடு என்று பேசும் குருமூர்த்திகளுக்கு மட்டுமே தெரிந்த இந்திய பண்பாடு எது தெரியுமா?  சிறுவயதில் விதவை ஆன சிறுமிகளை மொட்டையடித்து சாகும் வரை துறவு மேற்கொள்ள சொல்வார்கள். அதை மையமாக வைத்து பெண் இயக்குனர் தீபா மேத்தா எடுத்த வாட்டர் என்ற படம் இன்று வரை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் உடம்பில் தீகாயம் ஏற்பட்டால் எப்படி துடித்துப்போவீர்கள். கணவனை இழந்த பெண் வாழவேகூடாது என்று அவளை உயிருடன் சிதையில் தூக்கி போடும் கொடூரத்தை வேற எங்கேயாவது காணமுடியுமா? இந்த பண்பாட்டை தான் மீட்டெடுக்க போகிறீர்களா? இது தான் உங்கள் மதம் இரு பாலருக்கும் போதிக்கும் சமமான ஒழுக்க விதிகளா? நான் இந்து என பெருமையுடன் சொல்லும் நீங்கள் அதில் மறைந்திருக்கும் இந்த கொடூர வரலாற்றை எப்படி நியாயப்படுத்தபோகிறீகள். இனி நீங்கள் நான் இந்து சொல்லும் போது வெட்கமடையவில்லையென்றால் நீங்கள் மனிதனே அல்ல.

அறிவில்லாமல் உளருகிறான் வால்பையன்,. குடிச்சிட்டு இவனுக்கு இதுவே வேலையா போச்சு(அவரு தான் வந்து வாங்கி கொடுதாரு) உங்களுக்கு தெரியவில்லை என்றால் நேரில் வாருங்கள், எங்கள் மார்க்க அறிஞர்களை கேளுங்கள் என்பது. நேரில் வந்து தெளிவு பெற்று இஸ்லாத்தில் சேர நான் என்ன பெரியார்தாசனா? ஒரு நல்ல முஸ்லீம்க்கு 74 கன்னிகளை கூட்டிக்கொடுக்கும் மாமா கடவுளும் தேவையில்லை, அந்த மதமும் தேவையில்லை. சிந்திக்க மாட்டீர்களான்னு என்னை கேக்குறிங்களே என்னைக்காவது நீங்கள் சொன்ன மார்க்க அறிஞர்களிடம் கடவுளுக்கு எதுக்கு இந்த கூட்டிக்கொடுக்குற வேலைன்னு கேட்டிங்களா?நீங்கள் ஒரு நல்ல முஸ்லீம். கற்பனை செய்து பாருங்கள் சொர்க்கத்தில் 74 கன்னியர்கள் சூழ உல்லசாகமாக உள்ளீர்கள். எப்படி குஜாலா இருக்கா? இப்ப அப்படியே அந்த கற்பனையில் அதே நல்ல முஸ்லீமாக உங்கள் குடும்ப பெண்களை நினைத்துப்பாருங்கள் அவர்கள் 74 கன்னிபையன்களுடன் உல்லாசமாக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். இப்பயும் உங்களுக்கு குஜாலா இருந்தா ஹேட்ஸ் ஆஃப். தூன்னு துப்ப தோணுச்சுன்னா எல்லாத்தையும் தூக்கி போட்டு என் மாதிரி கடவுள் மறுப்பாளனா மாறுயிருக்கனும். என் கேள்விக்கு பதிலை தெரியலைன்னா வக்கனையா அட்ரஸ் கொடு, உங்கம்மாவை அனுப்புன்னு சொல்ல தெரியுதுல்ல. எங்க உங்க வீட்டு பெண்களிடம் போய் நல்ல முஸ்லீம் பெண்களுக்கு சொர்க்கத்தில் 74 கன்னிபையன்கள் கிடைக்கும். குஜாலா இருங்கன்னு சொல்லிபாருங்களேன்.

நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்வது இதை தான். ஒரு தனிமனிதனின் ஒழுக்கவிதிகள் அவனை சார்ந்தது. அதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கும் ஒழுக்க விதிகள் உண்டு. கடைபிடிக்க மிக சுலபமானது. ஒரு வரியில் சொல்வதென்றால் “ நான் என்ன எதிர்ப்பார்க்கிறேனோ அதையே இந்த உலகுக்கு கொடுக்கிறேன்”
எனக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாதுன்னு நினைச்சா நான் யாருக்கும் துரோகம் செய்யக்கூடாது. என்னை யாரும் தாழ்ந்தவனா நினைக்கக்கூடாதுன்னு நினைச்சா நான் யாரையும் தாழ்ந்தவனா நினைக்கக்கூடாது. என் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு நேரக்கூடாதுன்னு நினைச்சா எல்லா குழந்தைகளையும் என் குழந்தைகளா பார்க்கனும். கருத்து முரண்பாடுகளில் தனிமனித தாக்குதல் கூடாது. உனக்கு பசிப்பது போலே தான் எனக்கும் பசிக்கும். எவ்ளோ மூடா இருந்தாலும் கையடிச்சுட்டு படுத்துகனும்னே தவிர விருப்பில்லாத பெண்ணை தொந்தரவு பண்ணக்கூடாது

குற்ற உணர்வின்றி என் வாழ்க்கையை கடக்க இதுவே போதுமானதாகயிருக்கிறது. மனிதனின் பெரும் ஆரோக்கியமே குற்ற உணர்வின்றி வாழ்தல் தான். நான் சில நண்பர்களுக்கு கடன் பாக்கி தரணும். அதை தவிர நீ இன்ன தப்பு செஞ்சன்னு என் குற்றத்தை நிரூப்பிச்சிருங்க. நான் நாண்டுகிட்டு செத்துர்றேன் நானும் என் ஒழுக்கமும் எனக்கானது, உங்களுக்காக வேசம் போடமுடியாது.

பெராமோன் என்னும் உயிர்மணம்!

                        பெராமோன் - இதை உயிர்மணம்னு சொல்லலாம். இதுவே உயிர் உருவாக்கத்துக்கான தூண்டல், தாவரங்களில் இருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களும் பெராமோன் சுரக்கிறது. மனிதனை தவிர அனைத்து உயிர்களும் அதை உணர்கின்றன. மனிதன் ஏன் இழந்தான் என்பதை கடைசியில் பார்ப்போம்.

தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக தனிக்கே உரிய மணத்தை பரப்பி வண்டை ஈர்க்கிறது, அதன் மூலம் தாவரத்தின் இனப்பெருக்கம் நடக்கிறது. சிறு சிறு பூச்சி இனங்கள் கூட இனபெருக்கத்திற்காக பெராமோன் சுரக்கின்றன. அதனால் ஈர்க்கப்படும் ஆண் பூச்சிகள் ஒரு இடத்தில் கூடி அந்த பெண்ணை இணையபோராடும். அங்கே யார் சிறந்தவர் என்ற சண்டை நடக்கும். இந்த சண்டை பூச்சி இனத்தில் தொடங்கி யானை வரை நடப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இதே பெராமோனின் இன்னொரு வடிவம் ஆண் விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை குறிப்பிட எல்லைகளில் தங்கள் சிறுநீரை கழிப்பது. அது பெண்களுக்கு விடுக்கும் அழைப்பும் கூட. ப்ரேயிங் மேண்டிஸ் என்னும் பூச்சியை பார்த்திருக்கலாம், சற்று பெரிய வெட்டுகிளிபோல் இருக்கும். இதற்கு பசி எடுக்கும் நேரத்தில் அதிகமாக பெராமோனை சுரந்து ஆண் பூச்சியை உறவு கொள்ள வைத்து அதை தின்று விடும். ப்ளாக் விடோ என்ற சிலத்தியும் இப்படி தான்.இனபெருக்கத்திற்காக இருந்த கலவி, மனிதர்களுக்கும், சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கும் உளவியல் ஆற்றுபடுத்துனராக இருந்ததால் அவர்களுக்கு கலவிக்கென்று பருவம் இல்லாமல் உறவு கொண்டார்கள். ஆண்களும், பெண்களுக்கும் இயற்கையில் இருந்து விலகி தங்களை அழகி படுத்திக்கொள்ள ரசாயணபூச்சுகளை எடுத்துக்கொண்டதால் இயற்கை மணம் அவர்களை விட்டு போயிற்று

இயற்கையில் ஆணின் வியர்வை பெண்ணுக்கும், பெண்ணின் வியர்வை ஆணுக்கும் ஈர்ப்பை தரும். ஒரு பெண்னை கலவி நோக்கில் பார்க்கும் பொழுது ஆணுக்கு விரைத்து தன்மை ஏற்படுவது போல் பெண்களுக்கு பெராமோன் சுரக்கும்.(தற்சமயம் அதுவே உராய்வை சமாளிக்க பயன்படுகிறது) அதை அறியும் தன்மையை ஆண் இழந்துவிட்டதால் பெண் உடல்மொழியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்த பெராமோனும், பிட்யூட்ரி, தைராய்டு மாதிரியான உடலுக்கு தேவையான ஒரு சுரப்பி தான். மகிழ்வை ஏற்படுத்தும் டோபோமைன், உற்சாகம் கொடுக்கும் டெஸ்ரோஜன் ஆகியவற்றிடன் இதுக்கு தொடர்ப்பு உண்டு. இயற்கையாக ஏற்படும் ஈர்ப்பும் சுரக்கும் பெராமோனும் தவறான விசயமல்ல. அதற்காக நீங்கள் குற்ற உணர்வு அடையவேண்டியதில்லை. உங்கள் உடலில் நடக்கும் ஒவ்வொரு செயலும் உங்கள் உடலின் சமநிலைக்காகவே!

ஜெமமோகனும் இந்துத்துவாவும்!

ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் புத்தகம் வாசிப்பது கனிசமாக குறைந்துவிட்டது உண்மை தான். நான் பயணங்களில் மட்டும் படிச்சிகிட்டு இருந்தேன். போனவாரம் போன் இல்லாததால் படிக்காத புத்தகம் எதாவது இருக்கான்னு தேடினேன். ஜெயமோகனின் வாழ்விலே ஒரு முறை என்ற அனுபவ கட்டுரை தொகுப்பு இருந்தது. அதன் முதல் கட்டுரையை படித்ததும் மலத்தில் கால் வைத்தது போல் இருந்தது.

யோகி ராம்சுரத்குமார் என்று அழைக்கப்பட்ட விசிறி சாமியாரை ஜெயமோகன் சந்திந்த அனுபவ கட்டுரை அது. பவா செல்லத்துரைக்கு விசிறி சாமியார் மேல் ஈர்ப்பு வரக்காரணம், அவருக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது. ஜெயமோகன் பார்த்ததும் கேக்கிறார். “பாலகுமாரன்” உங்களை குரு என்று சொன்னாரே. ஜெயமோகனுன் பொதுபுத்தி ஆசாமி தான் என்பதற்கு அதுவே போதும்பொதுவாக என்னுடன் கடவுள் பற்றிய விவாதம் செய்பவர்கள், ஒரு கட்டம் தாண்டி அவர்கள் நம்பிக்கையை நியாயபடுத்த, அந்த கலைக்டர் கோவிலுக்கு போறார், அந்த பெரிய மனிதர் கோவிலுக்கு போறார். அவங்கல்லாம் முட்டாளா என்பார்கள். இதை தான் பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் பொதுபுத்தி எங்கிறோம். கல்விக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள்.

ஜெயமோகன் கேள்விக்கெல்லாம் விசிறி சாமியாரின் பதில் நான் பிச்சைகாரன், எல்லாம் என் அப்பன் பார்த்துக்கொள்வான். திரும்ப திரும்ப அதே ரிக்கார்ட் தான் தேயுது, ஆனா ஜெயமோகனுக்கோ அது தத்துவ குறியீடுகளாக தெரியும். ஓம் என்ற வார்த்தையை தான் பசு அந்த வார்த்தையை திருப்பி ம்மோன்னு கத்துகிறது எங்கிறார். அதை படித்ததும் எனக்கு வேற ஒன்னு ஞாபகம் வந்ததுமனசிதைவு நோய் கூறின் அறிகுறிகளில் ஒன்று காதில் குரல் கேட்பது, சுத்தும் மின்விசிறி சத்ததை குரலாக மொழி பெயர்ப்பார்கள், குழாயில் இருந்து வரும் தண்ணீர் கூட பேசும். மனநல காப்பகத்தில் 10 நோயாளிகள் இருந்தால் அதில் 7 பேர் மனசிதைவு குறையாடாக தான் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களையும், கடவுளையும் பார்த்ததாக சொல்வார்கள்.

என்னடா சத்து சாக்குல ஜெயமோகனை மனசிதைவு நோயாளின்னு சொல்லிட்டேன்னு ஆசானின் அடிபொடிகள் கோவப்படலாம், மாடு மோட்டதும், பேண்டதும் மணக்கும்னு ஜெயமோகன் சொன்னா அப்படி தான் சொல்வாங்க.

விருதையே வேண்டாம்னு சொன்னார், அவரை போய் இந்துதுவாவாதின்னு சொல்றிங்கன்னு சிலர் கேட்டாங்க. ஜே.டி,குரூஸ் போன்ற ஆட்கள் விருது கொடுத்த கட்சியையும், கட்சி தலைவரையும் பாராட்டுவாங்க. ஆனா அவங்க கருத்தியலில் நிச்சயம் முரண்படுவாங்க. ஜெயமோகன் மாதிரியான ஆட்கள் தங்களில் விசம் ஊரெங்கும் பரவனும்னு நினைப்பாங்க.

இப்ப என்ன ஆச்சு, விருது வாங்க தகுதியாக சாரு மாதிரி ஆட்கள் “தமிழன் என்று சொல்ல வெட்கபடுகிறேன்” என்று எழுதுவது. ஹிந்தி படித்தால் சொம்பனஸ்கலிதம் ஆகாது என்பது. இந்து, இந்தி, இந்தியா என முக்குவது பரவலாக காணக்கிடைக்கலாம். ஜெயமோகனுக்கு விருது பெரிதல்ல. இந்த மாதிரி விசம் சமூகத்தில் பரவுவது தான் வேண்டும்.

கடவுளா, அவன் கிடக்கான் தேவிடியாபையன் என்ற வசனம் எழுதியதால் ஜெயமோகன் கடவுள் மறுப்பாளன் ஆகவிட முடியாது. இன்னும் கொஞ்சம் நாட்களில் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் காலமும் ஜெயமோகனுக்கு வரும். அதை தான் இந்துதுவா விசம் எங்கிறேன்.

#வால்பையன்

கேள்வி - பதில் (பொருளாதாரம்)

கேள்வி:
நரேந்திரமோடி வாக்குறுதி கொடுத்த வருசம் 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதா? மக்களின் மறதியை போல் அவரும் மறந்துவிட்டாரா?

பதில்:
வருசம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பென்றால் மூன்று வருடத்தில் 6 கோடி பேர் வேலை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சொன்னதில் ஒரு சதவிகிதம் கூட அரசு உருவாக்கவில்லை என்பதே உண்மை

பாஜக தரப்பு சொல்கிறது புதிதாக தொழில் முனைவோர் 7.5 கோடி மக்கள் வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக ஆனால் ஆர்.பி.ஐ சொல்கிறது கடந்த 60 வருடம் இல்லாத அளவு கடன் வாங்கும் திறன் அளவு குறைந்துள்ளது என்று.

வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கு முதலீடு மிக முக்கியமான ஒன்றாகவும் கூடவே நம் நாட்டின் பொருளாதாரமும் அதில் சம்பந்தபட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியாக அவர்கள் காட்டும் ஜி.டி.பி அளவு பணவீக்கத்தை தான் காட்டுகிறது, நாட்டின் வளர்ச்சியை அல்ல

FDI எனப்படும் ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்மெண்ட் 25% மட்டுமே நேரடி முதலீடு, மீதி 75% இங்கிருக்கும் நிறுவனங்களுடன் கூட்டு. அதாவது இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இதெப்படி வேலை வாய்ப்பை உருவாக்கும்?பிரதமர் மோடி பற்றிய மாயபிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டது.பாதுகாக்கப்பட்டும் வருகிறது. ஜி.எஸ்.டியை எதிர்த்து குஜராத்தில் வரலாறு காணாத பேரணி நடந்துள்ளது. யாரும் பேசவும் இல்லை, காட்டவும் இல்லை.

மக்கள் மறதி என்பது நம் நாட்டின் சாபம். நவம்பர் 8 பணமதிப்பு இழப்பு அறிக்கை. கருப்பு பணம் பிடிபடும் என்றார்கள். எவ்ளோ பணம் வங்கிக்கு வந்தது என கேட்டால் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எங்கிறார்கள். அதனால் வேலை இழந்தோர். உயிர் இழந்தார் பற்றி மறந்து பிக்பாஸில் யார் குசு விட்டான்னு பேசும் நமக்கு இதை விட நல்ல பிரதமர் கிடைக்க வாய்ப்பில்லை.

எப்படியோ நாசமா போங்க

#வால்பையன்
#பொருளாதாரம்

மியூச்சுவல் ஃபண்ட்!

நண்பர்கள் நிறைய பேர் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி கேக்குறாங்க..

நான் கமாடிடி அனலைசர், அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் தான் பார்ப்பேன்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்கு வணிகம் செய்யும் ஒரு நிறுவனம் கையில் நம் பணத்தை கொடுத்து வணிகம் செய்வது

அந்த நிறுவனத்தில் என்னை போல் அனலைசர்ஸ் நிறைய பேர் இருப்பாங்க. அவங்க எந்த நிறுவனம் வளர்ச்சி பாதையில் இருக்கு, எதிர்காலம் நல்லாருக்குன்னு பார்த்துட்டே இருப்பாங்க

உங்க பணத்தை இரு வழிகளாக முதலீடு செய்யலாம். ஒரே தடவையில் ஒரு தொகை கொடுத்து இணைவது அல்லது எஸ்.ஐ.பி என்னும் சிம்பிள் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானில் இணைவது SIP யில் மாதம் ஒரு தொகையை கட்டிக்கொண்டே வர வேண்டும்

உங்கள் பணத்தை முதலீடு செய்து வரும் லாபத்தில் அந்த கம்பெனி முதலாளியில் இருந்து காவலாளி வரை சம்பளம் கொடுத்தது போக மீதி பணத்தை உங்களுக்கு லாபமாக தருவார்கள்.இதில் உள்ள நன்மைகள், சிறந்த ஆலோசகர்கள் இருப்பதால் நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவார்கள், நீண்டகால முதலீடாக இருந்தால் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்தீமைன்னு பெருசா ஒன்னும் இல்ல. தீடீர்னு பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தால் உங்கள் முதலீடும் சேர்த்து தான் நட்டமடையும். அதை தான் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் போடும்போது வேகவேகமா படிப்பார்கள். அது மார்கெட் ரிஸ்க் பொறுத்தது என்று. அதே போல் குறுகிய கால முதலீடு என்றாலும் உங்களுக்கு நட்டம் தான். பெரும்தொகை போய்விடும்

நேரடியாக பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது தேவையில்லை. ஏற்கனவே பல வேலை இருக்கு. நான் செய்யமுடியாது என்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஒரே ஒரு வேண்டுகோள், ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரை கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.

#வால்பையன்
#பொருளாதாரம்

பயம்!

எந்த கவலையுமின்றி ஒரு குழந்தை மகிழ்வாய் இருக்க காரணங்கள் யோசித்ததுண்டா? எப்படி சுத்தி வந்தாலும் ஒரே ஒரு காரணம் தான். குழந்தைகளுக்கு பயம் இல்லை.

நாம் சைக்கிளோ, பைக்கோ ஓட்ட கற்றுக்கொள்ளும் எவ்வளவு தடுமாறியிருப்போம். அதே நாம் தான் இன்னைக்கு அதில் சர்க்கஸ் காட்றோம். காரணம் அப்பொழுது இருந்த பயம் இப்பொழுது இல்லை.

ஒரு உறவை நீங்கள் பெரிதும் மதிக்கிறீர்கள். அதை இழக்க விரும்பவில்லை. அதை எப்பொழுது நினைக்கிறீர்களோ அப்பொழுதே இழந்து விடுமோமோ என்ற பயமும் தொற்றிக்கொள்ளும். இழக்க விரும்பாமல் அந்த உறவை இறுக பற்றுவீர்கள். அவர்களை கண்காணிப்பீர்கள் அது அவர்களுக்கு மூஞ்சு முட்டவைக்கும். நீங்கள் எது நடக்கக்கூடாது என பயந்தீர்களோ, அந்த பயமே அதை நடக்கவைக்கும்பொதுவாக வாழ்க்கை முறைக்கு வேறு எதையும் உதாரணம் சொல்வது நகைமுரணாக இருக்கும். ஆனால் உறவு என்பதை கண்ணாடிக்கு சமமாக சொல்லலாம். ஒரு முறை ஏற்பட்ட விரிசல் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு பார்வையின் போதும் அந்த கோடு பிரதானமாக தெரியும்.

பயம் என்பதை எச்சரிக்கை உணர்வு என்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு சுரக்கும் அட்ரினல் கவனத்தை கொடுக்கும். ஆனால் பெரும்பாலோர் பிரச்சனையை எதிர்கொள்ள அதை பயன்படுத்துவதில்லை. அதில் இருந்து தப்பி ஓடுவே பயன்படுத்துகிறன்றர்.

பயம் எச்சரிக்கை உணர்வால் வருவது, எச்சரிக்கை உணர்வு முன் அனுபவத்தால் வருவது. ஒரு குழந்தை எதையும் முன் அனுபவத்துடன் ஒப்பிடுவதில்லை. அதன் லாப, நஷ்ட கணக்குகள் யோசிப்பதில்லை. ஒரு மிட்டாய்க்கு குழந்தை அடையும் பெரு மகிழ்ச்சி அனுபவம் பெற நாமும் எந்த எதிர்பார்ப்புகள் இன்று ஆச்சர்யங்களை பெற வேண்டும்

நாம் என்ன தான் குட்டிகரணம் போட்டாலும் நடந்து முடிந்த சம்பவங்களை மாற்ற முடியாது. உங்கள் செயலுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதுவும் விரிசலை ஒட்ட வைக்காது. நாளையை பற்றிய கனவுகளும் நிலையில்லாதது.

இக்கணம் வாழுங்கள், வாழ்தலே வரம், வாழ்தலே ஆன்மீகம்

யார் சாமான்யம்?

 குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான கல்வி, உணவு, உடை என்ற வாழ்வாதார செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். வருடத்திற்கு நாம் பெறும் வருமான உயர்வை விட இது அதிகம் என்பதும் தெரியும்

மாதம் ஒரு முறை குடும்பத்தோடு சினிமாவிற்கு போகும் நபர் இனி யோசிப்பார். ஹோட்டலுக்கு போகும் நபர் இனி யோசிப்பார். அட்லீஸ்ட் என்னை மாதிரி வாரம் ஒருக்கா பைக்ல ரவுண்டிங் போய் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆளும் யோசிப்பான்.

ஆடம்பரம் என்பது பணக்காரர்களுக்கானது என்பது போய் இன்று பொழுது போக்கு என்பதே பணக்காரர்களுக்கானது என்ற நிலை உருவாகிவிட்டது

தொலைகாட்சி விவாதங்களிலும், இணைய பதிவுகளும் காண கிடைக்கும் சாமான்யக்கு நல்லது ஜி.எஸ்.டி என்ற பதிவுகளில் அந்த சாமான்யம் யார் என நானும் பூதக்கண்ணாடி வச்சு தேடி பார்த்துட்டேன்

முதல் முரண், அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள். ஜி.எஸ்.டி நல்லது என்ற ஒரு வார்த்தை இருந்தாலும்,மீதி முழுக்க”இந்த பதிவை ஷேர் செய்பவன் தேவிடியாளுக்கு பிறந்தவன்”என்று இருந்தாலும் சிறிதும் கவலை இன்றி ஷேர் செய்கிறார்கள்

தொலைகாட்சி விவாதங்களில் பேசப்படும் சாமான்யர்கள் இந்தியாவில் வருமான வரி கட்டும் 7% பேர். அவர்களுக்கு கிடைக்கப்போகும் வரிசலுகை என்பதை பற்றி தான். அவர்களுக்கான உரிமை கொடுக்கப்பட வேண்டும் தான். அதற்காக மீதி 93% மக்களை கழுவிலா ஏற்ற வேண்டும்.குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் வேலை படிப்பது, நம் வேலை அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பது, காசில்லை, விலை ஏறிபோச்சு என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது.

அட்லீஸ்ட் பயோ டீசலை ஊக்கப்படுத்தி விவாசயத்தை காப்பாற்றினாலும் கூலி வேலைக்கு போய் பொழச்சிக்கலாம்னு பார்த்தா நம்ம நாட்டில் அவர்களே கோவணத்துடன் சுத்துறாங்க.

போரே இல்லாமல் ஒரு நாட்டில் அகதிகள் உருவாவது இந்தியாவில் தானா இருக்கும்

கேள்வி - பதில் (செக்ஸ் புரிதல்)

கேள்வி: 30 வயதிற்கு மேல் ஆண்களின் காதல், காமம் குறித்தல் மாறுவது இயல்பா அல்லது எனக்கு மட்டும் அப்படி தோணுதா?

கேட்டவர் என் தம்பிகளில் ஒருவர்

பதில்:
உலகில் உள்ள எல்லா உயிர்களின் அடிப்படை தேவை உணவியல், உறவியல்(இனபெருக்கம்) இதுல ஏன் இயல் வந்ததுன்னா அவற்றை பெற ஒவ்வொரு உயிரும் தனிதன்மை பெற்றுள்ளன. அது குறித்து எழுதினால் என்சைக்ளோபிடியா புத்தகத்தை விட பெரிதாக எழுதனும். அவ்ளோ விசயங்கள் இருக்கு அதில்

மனிதர்களில் பிற உயிர்களை விட ஒரு படி மேம்பட்டவர்கள். அவர்கள் சிந்தனை பொருளியல், கருத்தியல் சார்ந்தது. பொருளியல் என்பது பொருள் ஈட்டல், அதை சேமித்தல், அதை காத்தல். இதில் உணவுக்கான தேவையும் அடக்கம். கருத்தியல் என்பது சிந்தனை, செயல்(ஆட்டிடியூட்) ஆளுமை(கேரக்டர்) சார்ந்தது. இதை ஏன் சொன்னேன்னு கடைசியில் புரியும்.காதல், காமம் இரண்டிலும் பால் வேற்றுமை இன்றி இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் தான் ஏற்படும். பருவம் ஏய்திய வயது முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எதிர்பால் ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும் பயமும் அதிகமாக இருக்கும். அதன் பின் 17 அல்லது 18 வயதிலிருந்து இனபெருக்கத்திற்கான பருவம் தொடக்கம்

அதிர்ஷ்டவசமாக இந்திய பெண்கள் 99% பேர்களுக்கு இந்த பருவத்தில் திருமணம் நடந்துவிடுகிறது. 55 ஆண்டுகளுக்கு முன் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 16 தான். ஆனால் இப்போது இருப்பதை விட பிரசவ கால இறப்புகள் அப்பொழுது அதிகம். உடல் தகுதியும், மன முதிர்வும் திருமணத்திற்கும், பிரசவதிற்கும் அவசியம் ஆகிறது.திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறக்கும் வரை சிக்கலில்லாமல் போகும் குடும்ப வாழ்க்கை, குழந்தைக்கு பின் தடுமாறும், ஒரு இடத்தில் இருவர் இருந்தாலே அங்கே அரசியல் உண்டு என்பது பொது விதி. மூன்றாம் நபராக வரும் குழந்தையை களிமண்ணாக பாவித்து ஒருவர் பிள்ளையார் பிடிக்க ஆசைப்படுவார், மற்றவர் கண்ணுக்கு அது குரங்காக தெரியும். இங்கே தேவை எது நல்லது என கருத்தியல் ரீதியான உரையாடல் ஆனால் பெண்களின் பிடிவாதமே வெல்லும். ஆண்களின் அனுபவம் பல தோல்வியில் முடிவதால் குழந்தைகள் குறித்தான முடிவுகளை பெண்கள் எடுப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

பொருள் ஈட்டியாகவேண்டிய கட்டாயம், மற்றொரு துணையின் வேலைபளு இருவருக்குமான உறவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இடைவெளி ஏற்படும். இவ்விசயத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் இருந்து கோடீஸ்வரகள் வரை விதிவிலக்கல்ல. ஒரு தரப்பின் அதிக எதிர்பார்ப்பும், ஒரு தரப்பின் அலட்சியமும் பெரும் முரணை இருவருக்கும் ஏற்படுத்தி இடைவெளியை அதிகமாக்கும். இது போக கருத்தியல் முரண்கள், ரசனை சார்ந்த வேறுபாடுகள் போன்ற உளவியல் சிக்கல்கள் நிறையஉடலியல் இங்கே முக்கிய பிரச்சனை. பண்டைய ஆளுமைகள் மனித வாழ்வில் கலவியின் முக்கியத்துவம் கருதி கலவிகென்று கோவிலே கட்டினார்கள், பின் வந்த ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு செக்ஸ் புரிதல் ஏற்படுவதை விரும்பவில்லை. பயப்பட்டார்கள் என்று கூட சொல்லலாம். செக்ஸ் என்பதே கெட்டவார்த்தை, கெட்ட செயல் போல் திணிக்கபட்டதால் பெண் உறுப்புகளை தொடுவதை கூட அருவருப்பாக எண்ண ஆரம்பித்தாள்

செக்ஸ் என்பது ஒரு அனுபவம், அந்த அனுபவம் ஒரே மாதிரி இருந்தால் சலிப்பு ஏற்படுவது இயல்பு இது இரு பாலருக்கும் பொருந்தும் தான். ஆனால் ஆணோ செக்ஸை தூக்கமாத்திரை போல் பயன்படுத்திகிறான். எதிர் தரப்பின் தேவை குறித்தான எந்த உணர்வும் இல்லை. அவளுக்கும் வெளிப்படையாக கேட்க தயக்கம். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்று அவள் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவான் என்ற பயம். பிரி மெச்சூர் இஜாக்குலேசன் பெரும்பாலும் மனரீதியான பிரச்சனை தான். இருவருக்குள் இருக்கும் புரிதலால் அதை சரி செய்ய முடியும்.

உளவியல், உடலியல் இரு தேவைகளும் 30 வயதிற்கு மேல் முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கும் தன் கருத்தியிலில் ஒத்து போகும் ஆளுமைகள் தனி கவனம் பெறுவார்கள். அவர்களுக்குள் எந்த வித கமீட்மெண்டுகளும் இருக்காது. நீ இதை தான் செய்யனும், இப்படி தான் செய்யனும் என்ற அதிகாரம் இருக்காது. துணைக்கு பொருள் ஈட்டு தனியாக மெனக்கெட வேண்டியிருக்காது. எல்லாத்தையும் விட முக்கியம் செக்ஸ் சுதந்திரம் இருக்கும். கேட்டது கிடைக்கும்

சரியான நேரத்தில் தேர்தெடுக்கும் சரியான துனையை தான் சமூகம் கள்ளகாதல் என அழைக்கும்.

இந்த கட்டுரை சமூக ஒழுக்க விதிகளுக்கு எதிரானதாகவும், தனி நபர் ஒழுக்கத்தை சந்தேகப்பது போலவும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஒழுக்கம் என்பது தனிநபர் அதாவது உங்களை மட்டுமே சார்ந்தது உங்கள் ஒழுக்கத்திற்காக நான் பெருமை பட முடியாது. என் கட்டுரை உளவியல், உடலியல் சார்ந்தே இருக்கும்.

GST அடுத்து என்ன நடக்கும்?

நான் ஒரு தேசியம் சார்ந்த அரசியல்வாதி என்றால் ஜி.எஸ்.டி வரி நல்லதே என்பேன். மன்னராட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி அரசு இயந்திரம் இயங்குவது மக்களின் வரி பணத்தில் தான். ஆடம்பர பொருள்களுக்கு வரி உயர்த்தப்படுவதும், மக்களின் வாழ்வாதார பொருள்களுக்கு வரி குறைக்கப்படுவதும், மாறி மாறி நடப்பது தான்.

அதே நேரம் வரி வருவாய் எப்படி செலவாகிறது என்பதும் முக்கியம். முதல் செலவு அரசு அதிகாரிகள் சம்பளம், அதில் எம்,பிக்களுடம் அடக்கம். பட்ஜெட்டில் ராணுவத்திற்கு அதிக பணம் ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. போக கல்வி சுகாதாரம் என்று மீதி பணம் செலவாகும்.

பெரும் மக்கள் சக்தி கொண்ட இந்தியா உலக அரங்கில் இன்னும் பின்  தங்கியிருப்பதற்கு காரணம் ஊழல் பெரும் கொடும் நோய். இந்த ஆட்சியில் ஊழல் இல்லையா என்றால் காங்கிரஸ் அளவுக்கு இல்லை என்று ஒத்துக்கொள்ள தான் வேண்டும். ஆனால் மாநில அரசு தன் கொள்ளையை செய்துக்கொண்டு தான் இருக்கிறது.  மாநில அரசின் தயவு தேவையால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. குற்றத்தை வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளி தான்தீப்பெட்டிக்கு 18% வரி. பிச்சை எடுத்து பிழைப்பவன் ஒரு தீப்பெட்டி வாங்கினாலும் அவனும் அரசுக்கு வரி கட்றான் என்பதே உண்மை. ஆக அரசு அந்த வரி பணத்தை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு செலவு செய்வதே நியாயம். உலகில் உள்ள பல நாடுகளை விட இந்தியாவில் ஜி.எஸ்.டி அதிகம் என்பதை படித்திருப்பீர்கள் ஆனால் உலகில் ஜி.எஸ்.டி உள்ள நாடுகள் மக்களுக்கு தரும் உரிமைகளை படித்ததுண்டா?

வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை. வயதானவர்களுக்கு பென்சன் அங்கே கட்டாயம். தரமான கல்வியும், மருத்துவமும் அங்கே இலவசம். ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதே போல் நம் நாட்டில் மாறுமா என்றால் இந்த அரசு ஏன் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை?

ஜி.எஸ்.டி கண்டு பொங்குபவர்கள் வரி செலுத்தாத ஏமாற்றுகாரர்கள் எனும் பாஜகவினரின் வாதம் தட்டையானது. மேலும் பக்தாஸ்க்கு அவ்ளோ தான் தெரியும் என்பதும் உண்மை. இங்கே தொழில் செய்யும் ஒரு மளிகைகடை காரனோ, ஹோட்டல்கடை காரனோ அந்த லாபத்தை இங்கேயே தான் முதலீடு செய்வான். கோடி கணக்கில் லாபம் பார்த்தும் அரசு சலுகை பெறும் கார்ப்ரேட்டுகள் அந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு பண்ணுவான்.

நான் இன்னும் வரி கட்டும் அளவுக்கு சம்பளம் வாங்கல. ஆனால் ஜி.எஸ்.டியால் 5 லட்சம் வரை வருடம் சம்பளம் வாங்குபவர்கள் வரி சலுகை பெற வாய்ப்புள்ளது. இது வாங்கும் சக்தியை அதிகரிக்கும். அதே நேரம் முறைசாரா தொழில்கள் நசியாமலும், அவர்கள் தினசரி வரிமானத்திற்கு உத்தரவாதமும் அரசு கொடுக்க வேண்டும்.

மக்கள் வரி பணம் மக்களுக்கு செலவு செய்யபடுவதே மக்களாட்சி. அதை விடுத்து வரி பணத்தால் மதம் வளர்த்தால் மக்கள் நாசமாய் போவார்கள். மக்கள் நாசமாய் போவதும் நாடு நாசமாய் போவதும் ஒன்று தான்

ஆப் கி பார் பிராடு சர்க்கார்!

நண்பர்களே,

எனக்கும் மோடிக்கும் வாய்க்கா தகராறு எதுவும் இல்லை. இந்தியா நல்லாயிருந்தா நான் நல்லாயிருக்கும் மாதிரி தான். ஆனால் புனிதபடுத்துதல் கேள்வி கேட்க விடாது, பொய் சொல்ல வைக்கும். அதுவே ஆக்கபூர்வமான விவாதம் என்றால் குறை, நிறைகளை சரியாக வரிசை படுத்த முடியும். பண மதிப்பை திரும்ப பெறுதல் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த சரியான முயற்சி தான். ஆனால் அதை எப்படி பண்ணனும்னு தெரியாம பல்பு வாங்கியது தான் மிச்சம், ஆதார், ஜி.எஸ்.டி காங்கிரஸ் கொண்டு வந்த பொழுது தீவிரமாக எதிர்த்த பாஜக இப்போ அதை அவங்களே கொண்டு வந்த மாதிரி மார் தட்டுது., காங்கிரஸ் காலத்தில் தவறா இருந்த ஒரு விசயம்., இப்போ எப்படி சரியாகும்? அப்போ இவ்ளோ நாளா முட்டாளா இருந்தவன் இப்போ புத்திசாலி, புத்திசாலியா இருந்தவன் முட்டாளா?

பெட்ரோல் வரிக்கு நியாயமான காரணம் கேட்டா வண்டி அதிகமாயிருச்சு, பெட்ரோல் விலை கம்மியானா சூழல் மாசு கெடும்னு சொல்றிங்க, இதெல்லாம் எவ்ளோ கேவலமான விளக்கம்னு உங்களுக்கு புரியலையா? அந்த லாப பணம் அம்பானிக்கு போவது குறீத்து உங்களுக்கு எந்த கவலையும் இல்லையா?

காவீரி மேலான்மை வாரியம் அமைக்க மாட்றான். காவிரி காய்த்து போன பிறகு அடியில் பெட்ரோல் இருக்குன்னு மொத்தமா ஆறு இருந்த சுவடையே அழிச்சிருவான். தமிழ்நாடு பாலைவனம் ஆகும். நீட் தேர்வு பற்றி பேசல. நியாயமா கிடைக்க வேண்டிய காவிரி நீர் பற்றி தான் பேசுறேன். எது கேட்டாலும் காங்கிரஸை கேட்டியான்னு வர்றிங்க, காங்கிரஸ்காரன் செய்யலைன்னு தானே உங்களுக்கு ஓட்டு போட்டேன். கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை கேட்டியா என்பது பதில் ஆகும்? அப்ப அடுத்த தேர்தலில் அவனுக்கு ஓட்டு போட்டு கேக்குறதா? அவ்ளோ தானா உங்கள் திறமை?தமிழ் பெயரில் ஒரு குழுமம், அனைவரும் தமிழர்கள், பேசுவதும் தமிழில். ஆனால் இந்திக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். படிப்பது அவரவர் இஷ்டம் என்பது சரியா? படித்தே ஆகனும் என்பது சரியா? ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பது அரசு முடிவு செய்வது சரியா? ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டியது அரசா?

ஒரு அரசை, ஒரு கட்சியை ஆதரிக்க ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது. அதற்காக மாற்று கருத்து உள்ளவர்களை பாகிஸ்தான் போ. கடல்ல விழு என்பதெல்லாம் ஜனநாயக நாட்டிற்கு அழகா? உங்களுது இந்த செயல் நீங்கள் சார்ந்த அரசுக்கும், கட்சிக்கும் சேர்த்து அவபெயர் ஏற்படுத்தி தருகிறது என்பது புரியவில்லையா?

இனி மேல் எப்போதும் நீங்கள் தான் ஆட்சியில் இருப்பீர்கள் என்ற மமதையில் இதெல்லாம் செய்றிங்களா? அப்படி காங்கிரஸ் போட்ட ஆட்டத்தால் தான் 33 எம்.பி மட்டுமே ஜெயிச்சான். நீங்க வந்த உடனே பல்பு வாங்குவிங்க போலயே

கடவுள் தேவை இல்லை!

பெருவெடிப்பை பற்றி பேசும் போது கடவுள் மறுப்பாளராக இருக்கும் நண்பர் ஒருவர், அதெப்படி ஒன்னுமில்லாததில் இருந்து உலகம் உருவாச்சு, எதாவது இருந்திருக்கும் என்றார். அந்த எதாவது எப்படி வந்ததுன்னு சொல்லுங்க என்றால் அவருக்கு சொல்ல தெரியல.

அடிப்படை அதான். எவ்ளோ சுத்தி சுத்தி வட்டம் போட்டாலும் ஒன்னுமில்லாததில் இருந்து தான் உலகம் உருவாச்சு. எல்லா மத நம்பிக்கையாளர்களும் இந்த புள்ளியில் இணைவாங்க. “அதெப்படி உலகம் தானா உருவாகியிருக்கும்” கண்டிப்பா கடவுள்னு ஒருத்தர் இருக்காருஇவ்ளோ அகண்ட பிரபஞ்சம், மிகவும் சிக்கலான உயிர் இரண்டும் விபத்தால் ஏற்பட்டது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. ஆனால் மனதில் இருக்கும் பயம் அதை நம்ப விடாது. நல்லா கவனிச்சு பாருங்க. விவாதம் எல்லாம் முடிஞ்ச பிறகு தோல்வியை ஒத்துக்க முடியாத கடவுள் நம்பிக்கையாளரகள் சொல்வாங்க., “ஒருவேளை கடவுள் இருந்துட்டா”

மனிதனுக்கு எப்போ பயம் ஆரம்பிச்சதோ அப்பவே கடவுளும் வந்துட்டான். மரண பயம் கடவுளை கெட்டியா பிடிச்சிக்க வச்சது. மனிதனுக்கு வாழ்க்கையை இழக்க விருப்பமில்லை. செத்துட்டா அவ்ளோ தானா என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவனே கற்பனையா ஒரு உலகம் படைச்சு, அதுக்கு சொர்க்கம்னு பேரு வச்சு..... அப்படி தான் கடவுளும் கற்பனையால் உருவாச்சு.

சொர்க்கம், நரகம் நல்ல விசயம் தானே, தப்பு பண்ணா நரகம்னு தப்பு பண்ணாம இருப்பான்ல. ஆமா தான் ஆனா எது தப்புன்னு முடிவு பண்ண நீங்கள் யார்? ஒருத்தன் மாட்டுகறி சாப்பிடாதன்றான், ஒருத்தன் பன்னிகறி சாப்பிடாதன்றான்.

உலகம் மொத்தமும் ஒரே கடவுள், ஒரே மதம்னு இருந்தா கடவுள் மறுப்பாளன் உருவாகியிருக்க மாட்டான் தெரியுமா? அவனை சிந்திக்க வைத்ததே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தான்.இந்த உலகம் கடவுள் இல்லாமல் தான் இயங்குது. அது உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படியே தான் இந்த உலகம் உருவாகவும் கடவுள் தேவையில்லை

பார்பனீயம் என்றால் என்ன?

ஒருவர், நான் பெண்ணியத்திற்கு எதிரானவன், அது குடும்ப உறவை சிதைக்கும், சமூகத்தின் ஒழுக்க விதிகளை கெடுக்கும்னு எழுதுறார்னு வச்சுகுவோம். அவரை என்னான்னு சொல்வோம்??

அவர் ஒட்டு மொத்த பெண்களுக்கும் எதிரானவர், வீட்டில் அம்மா, பொண்டாட்டியை கொன்றிருப்பார், ஓரினை சேர்க்கையாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளதுன்னா?

கேனதனமா இருக்குல்ல

ஏன்னா பெண்ணியம் என்பது ஒரு கருத்தியல்
பெண் விடுதலை, ஆடை சுதந்திரம், இணையை தேர்தேடுக்கும் உரிமை என்பது போன்ற கருத்தியல், அந்த கருத்துக்கு மாற்று கருத்து இருக்கலாம். அந்த மாற்று கருத்தை நிறுவ அவர்கள் பல ஆதாரங்களை வைக்கலாம். அதுவே ஆரோக்கியமான கருத்து முதல் வாதத்தின் தொடர்ச்சி. அதுவே நாகரித்தின், படி நகர்தல்.

பெண்ணியம் போலவே பார்பனீயம் என்பதும் ஒரு கருத்தியல், நானே உயர் பிறப்பு மற்றவர்கள் என்னை விட கீழானவர்கள் என்பதும் அதற்கு ஒரு அடையாளம் இட்டு கொள்வதும் பார்ப்பனீயம். அந்த கருத்தியலை யார் ஆதரித்தாலும் அதை எதிர்ப்பது பார்ப்பனீய எதிர்ப்பு.

பார்ப்பனீயம்னு எழுதிட்டாலே, டீச்சர் என்னை கிள்ளிட்டான்னு அழவாச்சி வைக்கிறது. அவனை கேட்டியான்னு தன் தவறை மறைப்பது, நியாயபடுத்த பார்ப்பது என்பதெல்லாம் ஒரு கருத்தியலை சரியென்று நிறுவ செய்து கருத்து வாதங்கள் அல்ல. நான் அப்படி தான் தப்பு பண்ணுவேன், கேட்க நீ யார்டா என்னும் திமிர்

ஸ்ரீராம்னு எனக்கு ஒரு நண்பர், ஒருக்கா ஒன்றுக்கும் உதவாத பூனூல்னு எழுதினேன். யார் சொன்னா, முதுகு அரிச்சா சொறிய இதமா இருக்கும், தூக்கி போடும் முன்னாடி எனக்கு அப்படி தான் உதவியதுன்னு நக்கலா சொன்னார். பார்ப்பான்னு எழுதினா உங்களுக்கு கோவம் வரலையான்னு கேட்டேன். திருடன்னு எழுதினா திருடனுக்கு தான் கோவம் வரணும், எனக்கு ஏன் வரணும்னு கேட்டார்.அவனுங்களே பிறப்பதால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆகவிட முடியாதுன்னு சொல்றானுங்க. அதையே பிராமணன் என்றால் பிரம்மன் நெற்றியில் பிறந்தவன்னு சொல்றாங்க. அப்ப நடத்தையால் நெற்றியில் பிறந்தவன் வேறு இடத்தில் பிறந்தவன் ஆகிருவானா?

இந்த மாதிரி கேனதன உளரல்களை எல்லாம் நியாயபடுத்த முடியாம தான் எதிர்கருத்துக்கு பதிலா அடையாள முத்திரை குத்துவது. பார்ப்பனியம் என்று எழுதினால் ஒன்று அவன் திருட்டு திராவிடன் இல்லைனா இஸ்லாமியன்.

ஒரு கருத்தை எதிர்கொள்ள தெரியாத, சரியாக பதில் சொல்ல தெரியாத, கருத்தோடு மோதாமல் கேள்வி கேட்க நபரை விமர்சிக்கும் லூசு பயல்களை ஊம்ப கூட லாயக்கில்லாத பார்ப்பான்னு நான் சொன்னா அதுக்கு கோவம் வந்தா, ஆமா நான் உன்னை தான் சொல்றேன்னு நீயே ஒத்துகிறன்னு அர்த்தம்...

!

Blog Widget by LinkWithin