சரணமா, சங்கராபரணமா.........

முன்னொரு காலத்தில் ஒரு குருகுலம் இருந்தது, அதில் பல மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். குரு தினமும் பாடம் எடுப்பார், இவ்வாறு நன்றாக போய்கொண்டிருந்த குருகுலத்தில் ஒரு நாள் ஒரு பூனை நுழைந்தது, அது மாணவர்கள் படிக்கும் பொழுது குறுக்கும் மறுக்குமா நடந்து மாணவர்கள் படிப்பவர்களுக்கு தொல்லை தந்தது.

அதனை கவனித்த குரு, அந்த பூனையை பிடித்து தூணில் கட்ட சொன்னார், மறுநாளும் பூனை வந்தது, குரு தூணில் கட்ட சொன்னார், இவ்வாறு குரு வரும் முன்னரே பூனையை பிடித்து தூணில் கட்டும் அளவுக்கு மாணவர்கள் பழகிபோயினர்,

ஒருநாள் அந்த குரு இறந்து விட்டார், புதிதாக ஒரு குரு வந்தார். பாடம் எடுக்கும் பொழுது தூணில் பூனை கட்டியிருப்பதை பார்த்து ஏன் அதை கட்டி வைத்துள்ளீர்கள் என வினவினார், முன்பு இருந்த குரு பாடம் நடத்தும் பொழுது இவ்வாறு பூனையை தூணில் கட்ட சொல்லியுள்ளார் என்றார்கள். ஒருவேளை இது எதாவது சடங்காக இருக்கும் என நினைத்த புதிய குரு, அப்படியே ஆகட்டும் என்றார், ஒருநாள் அந்த பூனையும் இறந்தது.

மறுநாள் புதிதாக ஒரு பூனை எங்கிருந்தோ பிடித்து வரப்பட்டு தூணில் கட்டப்பட்டது

எதற்காக இந்த கதை என்று உங்களுக்கு புரிந்திருக்கும்

ஏன் சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என நீதிபதி கேட்டார், அது பழக்கத்தில் இல்லை என்று பதில் சொன்னார்கள். அப்ப பழகிகோங்கன்னு தீர்ப்பு சொல்லிட்டார்,

சமய சடங்குகள் எல்லாமே இதை ஏன் பண்றோம்னு தெரியாமலே செய்யப்படுபவை தான். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். ஆனால் அந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் பொழுது, அந்த பிற்போக்குதனத்தை கட்டுடைக்கும் பொழுது. நம்பிக்கையாளர்கள் தங்களை நிர்வாணபடுத்தியதை போல் உணர்கிறார்கள், அதனால் தான் அவர்களால் நிதானமாக அதனை எதிர்கொள்ள முடியவில்லைசபரிமலைக்கு செல்லும் பெண்களின் பின்புலத்தை ஆராயவேண்டிய தேவை பாஜகவுக்கு என்ன இருக்கிறது? நீங்கள் ஆராய்ந்து தான் அனுப்பீவீர்களானால் நீங்கள் தான் அய்யப்பனை காப்பாற்றுகிறீகளா? மேலும் பாஜகவினரின் அறிக்கைகளை புலி வருது கதை தான்

மெரினாவில் பொது மக்கள் போராடிய பொழுது காவல்துறை என்ன அட்டாகாசம் செய்தது என்பதை அறிவோம், ஆனால் பாஜகவோ காவல்துறை தன் கடமையை செய்தது என அறிக்கை விடுத்தனர், தூத்துகுடியில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் என்றனர், ஆனால் இன்றோ காவல் துறையின் அராஜகம் என்கிறார்கள்..

ஆணுக்கு மட்டும் என ஒரு கடவுள் இருக்குமானால் உலகில் ஆண்களை மட்டுமே படைத்திருக்க வேண்டியது தானே கடவுள். இதுக்கு ,மேல நாம என்ன தான் லாஜிக்கா பேசினாலும் நீ நாத்திகம், உனக்கு என்ன அக்கறை என்பார்கள்.

உங்கள் முகதிரையை கிழிக்க என்போல் ஆட்கள் வேண்டுமே சங்கீஸ்

பிரபஞ்ச தோற்றம் - பகுதி 2

பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின் அடுத்த கேள்வி இந்த சூரியகுடும்பத்தில் பூமியில் மட்டும் எப்படி உயிர் வாழும் தகவமைப்பு ஏற்பட்டது, அதிலிருந்தே இது கடவுளின் படைப்பு என தெரியவில்லையா எங்கிறார்கள். அதற்கும் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை.

விரிந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் அணு கூட்டமைப்புகள் உரசும் பொழுது இடத்தை சுருக்கி அதாவது அணுக்களை நெருக்கமாக்கி ஒன்றுடன் ஒன்றை இணைக்கிறது, அவ்வாறு பல கோடி மடங்கில் இணைந்த அணுக்கள் சூரியன். ஏற்கனவே எழுதியிருந்தேன், இந்த பிரபஞ்சத்தில் கோள்கள் இல்லாம சூரிய குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் இரு குழந்தைகளை கைகளை பிடித்துக்கொண்டு சுற்றி வருவது போல் நேர் எதிர் திசையில் சுற்றிகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் அவைகளும் மோதிக்கொள்ளும். அவ்வாறு மோதும் பொழுது வெடித்து சிதறும் அணுகள் இருந்து உருவாவது தான் கோள்கள்.அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை, நம் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட அரிய தாதுகள் சூரியனில் இருந்து வந்தவை தான் என்பது. வாயு கிரகங்கள் தவிர மற்ற கிரகங்களில் தங்கம் கிடைக்கவும் வாய்ப்புண்டு, சூரியனில் இருந்து தெரித்த அணுக்கள் ஒன்றினைந்து கோள்கள் ஆகும் பொழுது அது வட்ட வடிவம் பெற்று விடும், சூரியனை சுற்றுவதால் ஏற்படும் விசை அது. கோள்கள் உருவாக்கம் என்பதற்கு இன்னொரு உதாரணம் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் உள்ள கைபர் பெல்ட் என அழைக்கப்படும் கற்கள் கூட்டம், செவ்வாயை போல் ஒரு கோளாக உருப்பெற வேண்டிய அணுக்கூட்டம் ஒரு பக்கம் சூரியனின் ஈர்ப்பாலும், எதிர்பக்கம் சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பாலும் அலைகழிக்கப்பட்டு கோளாக உருவாகாமல் கற்களாக சூரியனை சுற்றி வருகிறது.பூமியில் உயிர் உருவாக நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் மட்டுமே காரணமா என்றால் இல்லை, தூரம் மட்டுமே காரணம் என்றால் இந்நேரம் சந்திரனில் உயிர்கள் இருக்க வேண்டும், பூமி உருவாக காரணம் என்ன? இந்த பிரபஞ்சம் உருவாக எப்படி ஒரு விபத்து காரணமாக இருந்ததோ அப்படியே இந்த பூமி உயிர் பெறவும் காரணம் ஒரு விபத்து தான். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் கோள்கள் சேர்க்கை நடைபெற்று முடிவுறும் தருவாயில் அப்போதைய பூமியை ஒரு பெரிய விண்கல் தாக்கியது, அந்த தாக்குதலில் பிய்த்து எரியபட்ட பூமியின் குழந்தை தான் சந்திரன், இப்போதைய சந்திரனை அப்படியே பசிபிக் கடலின் நடுபகுதி ஆழத்தில் பொருத்திக்கொள்ளலாம்.அவ்வாறு தாக்கப்பட்ட பூமியில் இருந்து பல ஆயிரம் மைல்கள் அளவுக்கு தூசி மண்டலம் பரவியது. மேலும் அம்மாதிரியான வேக தாக்குதல்களில் அணுகளில் மிண்ணுனு மாற்றம் உருவாகி புதிய புதிய தனிமங்கள் உருவானது. அது வரை பயங்கர வெப்பமாக இருந்த பூமி தன்னை சுற்றியிருந்த தூசி படலத்தால் குளிர தொடங்கியது, நேரடி சூரிய வெப்பம் அதன் மேல் படாதததும் ஒரு காரணம். தூசி படத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிசன் மூலகூறுகள் இணைந்து வெப்பத்தால் மேகமாக காத்திருந்தது. பூமி குளிர்ந்தது, மேகம் நீராக மாறி மழையாக பூமியை மேலும் குளிர்வித்தது. பல நூறு/ஆயிரம் வருடங்கள் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்றது. அதாவது சூரியனின் நேரடி பார்வையில் நீர் ஆவியாகி மேகமாதலும், மறுபக்கம் குளிர்த்து மழையாதலுமாகஇந்த பூமி உயிர் கிரகமாக மாற அந்த விபத்தே காரணம். யாரேனும் நீ எதாவது ஒரு கடவுளை நம்பியே ஆகவேண்டும் என்றால் நான் விபத்து தான் என் கடவுள் என்பேன். இந்த பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்பு ஏற்பட காரணம் ஒரு விபத்து, இந்த பூமி மற்ற கோள்கள் போல் அல்லாமல் உயிர் கிரகமாக மாற உதவியது ஒரு விபத்து, அணுக்கள் இருக்கும் உட்கருவான நியூட்ரான், தன்னை தானே பிரித்துக்கொள்ளும் நியூக்ளியஸ் அணுவாக மாற காரணம் ஒரு விபத்து. இதை ஏன் சம்பவம் என குறிப்பிடாமல் விபத்து என குறிப்பிடுகிறேன், சம்பவம் மறக்கப்படலாம், விபத்தை மறக்கக்கூடாது என்பதற்காக.....

பாலியல் குற்றங்கள்!..........

சமீபமா #metoo என்ற ஹேஷ்டாக் மூலம் பெண்கள் தாங்கள் அடைந்த பாலியல் தொல்லைகள் வெளிபடுத்தி வருகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் குறித்தான விரிவான கட்டுரை..

ஏற்கனவே சொன்னது தான். எதாவது ஒரு வகையில் பெண்களை கவருகிறதே எல்லா ஆண் உயிரினக்களும் இயற்கை அளித்த விதி, ஆனால் மனிதம் மற்ற விலங்குகளில் இருந்து நாகரிகம் அடைந்துவிட்டான். உளவியல், உடலியல் எல்லாம் கற்றுக்கொண்டான், ஆனாலும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன,

பெருவாரியான காரணமாக வாய்ப்புகளே பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. இறுதிசுற்று படத்தில் அந்த ட்ரெயின் காட்சி ஒரு உதாரணம் மட்டுமே, அதே போல் பரிட்சையில் பாஸ் ஆக, வேலை பெற என வாய்ப்புகள் வேண்டிய எல்லா பகுதிகளிம் ஆண் பாலியல் தொந்தரவு செய்கிறான்.அடுத்ததாக ப்ளாக்மெயில், உதாரணத்திற்கு அண்ணியின் மாற்று உறவை காட்டி கொழந்தன் ப்ளாக் மெயில் செய்து தன் இச்சைக்கு அழைப்பது. அது போல் தவறுகளை காட்டி நீ இதை சொன்னால் நான் அதை சொல்வேன் என ப்ளாக்மெயில் செய்வது போன்றவன்றிலும் பாலியல் தொந்தரவு நடக்கிறது.

ஆப்ரிக்க வளராத நாடுகளில் குழந்தைகள் சிறுவயதில் கர்ப்பமாவது அதிகமாகியிருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் குழந்தைகள் திருமணம் சகஜமாக நிகழ்கிறது. வளர்ந்த மேலை நாடுகளில் மட்டுமே குழந்தைகள் தனியாக தூங்கவைக்க படுகிறார்கள். இங்கே அண்ணன், மாமா, தாத்தா என நாம் நம்பி குழந்தைகளை தரும் ஆட்களால் பாலியல் தொந்தரவு நடக்கிறது.

சாதியம் விட்டு போகக்கூடாது, சொத்து சொந்தத்தில் தான் இருக்கனும் என பெற்றோர்களால் கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைப்பதும் ஒரு பாலியல் குற்றம் தான். அந்த பெண் பொம்மை தான் அந்த பாலியல் வாழ்கையை அனுபவிக்கிறாள். நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்

ஆழ்கடலில் கட்டவிழ்ந்து
விடப்பட்ட உயிர்
தப்புதலுக்கு ஒப்பானது
ஒரு பிரியமில்லா
கலவியின் முடிவை
எதிர்நோக்கம்
ஆசுவாசம்

அந்த கவிதையில் பாலியல் குற்றத்தின் வலி உணரப்பட்டால் உங்களுக்கும் மனசாட்சி இருக்கிறது

உலகின் நேரடியான 56% பெண்களுக்கும் மேல் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். வன்புணர்வையும் சேர்த்து. என்னை கேட்டால் இது 80% இருக்கும் என்பேன். இதை விட பெரிய அவலம் இந்த தொடர் தொல்லை தாங்கமுடியாமல் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் ஏன் பெரும்பாலனா குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை?ஒரு சிலர் நான் கொடுத்த விலைக்கு பலன் கிடைத்துவிட்டதாக தன்னை தானே சமாதானம் செய்துகொள்கிறார்கள், அதனால் அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை.

பலர் சமூகம் நம்மை தப்பாக பார்க்கும் என குற்ற உணர்வை தனக்குள் புதைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, பின்னாளில் அந்த பெண்ணுக்கு மனநோய் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு கூட போகலாம்.

ஒருகாலத்தில் தாய்வழி சமூகமாக வாழ்ந்த மனித இனம், சாதி, மதம், கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை பூட்டி வைத்தது பெரிய காரணம். சமூகத்துக்கு செக்ஸ் கல்வி அவசியம், பெண்களுக்கு ஒழுக்கம் சொல்லி கொடுப்பதை விட ஆண்களுக்கு ஒழுக்கம் சொல்லி கொடுப்பதே சரியான சமூகம்

மொத்த உலகிலும் பெண்களை விட ஆண்களுக்கே செக்ஸ் புரிதல் குறைவாக உள்ளது. ஆண்கள் தங்களை துணையிடம் உறவுக்கு அனுமதி கேட்கலாம். வற்புறுத்தக்கூடாது. செக்ஸ் என்பது win-win method முறை, அதாவது நீங்கள் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும். உன்னை சந்தோசபடுத்தி நான் பார்க்கனும் என்பது. ஒருவர் மட்டுமே சந்தோசம் அடைவது உண்மையில் செக்ஸ்க்கு தோல்வியே.

பாலியல் கல்வியை குழந்தைகள் அம்மனாக திரியும் போது கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முழுமையான புரிதல் இல்லை என்பதே இங்கே பிரச்சனை. பிற உயிர்களை மதிக்கனும், பிறர் மனதை காயபடுத்தாமல் வாழும் அடிப்படை நேர்மை இருந்தாலே போதும், பாலியல் குற்றங்கள் மறைய தொடங்கும்

மீண்டும் சின்மயி

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழியட்டும் என்ற சினிமா டயலாக் டுவிட் தான். சின்மயி ராஜன் மீது செக்ஸுவல் அபூஸ் புகார் கொடுக்க காரணம். சின்மயி சும்மா இருந்திருந்தாலும் ராஜனின் அரசியலுக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்கள் சின்மயியை தூண்டு விட்டார்கள் என்பதும் உண்மை, அதில் பெரும்பாலும் இருந்தது பார்பனர்கள் தான்.

அதே போல் வைரமுத்துவின் எதாவது பேச்சோ, சைகையோ சின்மயிக்கு தவறாக தெரிந்திருக்கலாம் என்றாலும் முற்றிலுமாக மறுக்க முடியுமா என்றால் யோசிக்க வேண்டிய விசயமாக தான் தெரிகிறது, புகழ் போதையில் இருப்பவர்கள் வெகு சுலபமாக எதிர்பாலினர் தன் வலையில் விழுந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கத்தான் செய்கிறதுஇருவர் மனமுவந்து கொள்ளும் உறவு தவறில்லை என்பது என் நிலைபாடு. சாரு நிவேதிதா செய்தது போல் சும்மா பேசிய பெண்ணிடம் உனக்கு வெட் ஆகலையான்னு கேட்டது தான் உண்மையான செக்ஸுவல் அபூஸ். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒருவேளை சின்மயின் செய்கைகள் கூட வைரமுத்துவுக்கு கிரீன் சிக்னலாக தெரிந்திருக்கலாம்

ஆதியில் உணவுக்கும், பெண்ணுக்கும் தான் பெறும் போட்டியாக இருந்தது. நாடு பிடிக்க நடந்த சண்டையில் கூட எதிரி நாட்டு ராணியை அபகரிப்பது, தோற்ற நாட்டு பெண்களை அடிமைகளாக தூக்கி சென்றது பெருமையாக பார்க்கப்பட்டது.பெண்கள் விசயத்தில் அந்த காட்டுமிராண்டிதனம் முற்றிலுமாக விலகி இருக்கும் என நான் கருதவில்லை. சமூக பார்வைக்காக, நம் மேல் நமக்கு இருக்கு இமேஜை தக்கவைக்க ஆண்கள் வேசம் போடலாமே தவிர. உளவியல், உடலியல் விசயத்தில் பெண் மீது ஆண் ஈர்ப்பு கொள்வது தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.

விரும்பமில்லாத பெண்ணை தொடக்கூடாது
இதுதான் நான் சொல்ல வந்தது

!

Blog Widget by LinkWithin