தன்யனாக்கு!

உள்ளே இருந்ததென்னவோ ஆறு அங்குலங்கள் தான் ஏனோ என்னை முழுதாய் உன்னில் தொலைத்த உணர்வு இதழ்கள் பிரியும் வரை மறுஇயக்கத்திற்கான நினைவே வரவில்லை இப்படியே உன்னில் கரைந்து போனால் தன்யனாவேன்!

*************
தூக்கம் கலைந்து எழந்து பொழுது பிய்த்து எரியப்பட்ட நிலவின் துண்டுகள் போல் சில கனவுகளின் நினைவுகள், முழு கண்ணாடியிலும் நீயே இருந்தாய் சில்லு சில்லாய் உடைந்ததில் நீ பன்மைகளாய் இருந்தாய் எத்தனை முறை என்றாலும் எனக்கு சலிப்பே இல்லை இப்படியே இணைந்திருப்போமே உனக்கடுத்து நான் தரும் முத்தம் மரணத்திற்கு மட்டுமே

************

நீ மகிழ்வாய் இருந்தாயா? வலித்ததா? ரொம்ப உணர்ச்சிவச படுறேன்ல என் கண்ணையே பார்த்தயே என்ன தெரிந்தது உன்னால் மட்டும் எப்படி காதலை கடல் போல் அள்ளி தர முடிகிறது எந்த கேள்வி கேட்டாலும் முத்தத்தை மட்டுமே பதிலாய் தருகிறாய் என்ன தவம் செய்தேன் உன் காதலை பெற

2 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

இது நான் எழுதும் 400 வது பதிவு.

சமர்ப்பணம்னு சொல்லனுமா என்ன?

அவளுக்கு தான் இது.

வெளங்காதவன்™ said...

செமையா இக்கீது மச்சி

!

Blog Widget by LinkWithin