எரிகிற குடிசையில் பீடி பற்ற வைப்பவர்களே!

”அஞ்சாதே” என்ற படத்தில் அஜ்மல், பிரசன்னாவிடம் கேட்பது போன்று ஒரு காட்சி வரும்!, பெண்ணை கடத்தி அதுக்கு தான் பணம் வாங்கிட்டியே பின் ஏன் அந்த பெண்ணை கெடுத்தேன்னு, அதுக்கு வரும் பதில் “அப்ப தான் போலிஸ்கிட்ட போக மாட்டாங்க”, அப்போது அதன் யதார்த்தம் எனக்கு புரியவில்லை, இப்பொழுது கண்கூடாக பார்த்து விட்டேன்!

ஒருவன் பேருந்தில் இடித்துவிட்டான் என புகார் செய்தால், எங்கே இடித்தான், இடிக்கும் போது எப்படி இருந்தது, இடிக்கப்போறான்னு தெரிஞ்சி தானே விட்ட, அவனை சிக்க வைப்பதற்காகவே அங்கே போய் நின்னயா?, பேருந்தில் தான் இடிப்பாங்கன்னு தெரியுமுல்ல, உன்னை யார் இதில் வரச்சொன்னது?, நீ பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு என இடித்தவனை மறைமுகமாக தப்பிக்க வைக்கும் அறிவிஜீவுகள் நிரம்பிய தமிழகத்தை வெகு ஆச்சர்யமாக பார்க்கிறேன்!

தலைவன் மேல் கண்மூடித்தனமாக பக்தி கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகள் பற்றி ஏற்கனவே பல பொதுபுத்தி பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆட்டுமந்தைகள், நாங்கள் எப்போதும் அப்படியே தான் இருப்போம் என நினைவூட்டி கொண்டே இருக்கின்றன, ஆளாளுக்கு சில சந்தேகங்களை எழுப்ப ஒருத்தர் ஒரு படி மேலே போய் சாட் செய்தது சாருவே அல்ல, அவர் பெயரில் வேறு யாரோ என்கிறார்!. இந்த காமலை கண்ணன்களுக்கு யாரை வைத்து வைத்தியம் பார்ப்பது என தெரியவில்லை.

அந்த பெண்ணை நான் மட்டுமல்ல, எனது சொந்த ஊரில் நடந்த பதிவர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன், அவரது தாயாருடன் வந்திருந்தார், அவரை பதிவர் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தியும் வைத்தேன், கடந்த ஆறுமாதமாக இணையத்தில் சரிவர இயங்க முடியாத வேலைபளுவினால் என்னிடம் பேச வந்த போது என்னால் பேச முடியவில்லை. இதை கூகுள் பஸ்ஸிலும், எங்களது ஆல் இன் ஆல் தளத்திலும் சொல்லிய போதும் யாரும் நம்பவில்லை.

அதிலும் ஒருவர், எழுத்தாளர் மொழிக்கு கிடைத்த கொடை, அவர் என்ன செய்தாலும் பொறுத்துகொண்டு தான் போக வேண்டும் என்றாரே பார்க்கலாம்!, அவ்வளவு மொழி பற்று உள்ளவர் இன்னேரம் தீக்குளித்திருக்க வேண்டும். தமிழன் என்ற காரணத்திற்காக கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அண்ணாரின் ஆஸ்தான மொழிவளர்ப்பு சிந்தனையாளர் சாருவுக்கு குப்பி கொடுத்தாரா அல்லது குப்பி வாங்கினாரா என தெரியவில்லை, அது அவர் விருப்பமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த கேடுகெட்ட எழுத்தாளான் செய்வதெல்லாம் சரி தான் என்று வாதிடும் அளவுக்கா மூளை மலுங்கிவிட்டது!

மெத்த படித்த ஒருவர், சமூகத்தில் பெண்களின் நிலையை பற்றி அவருக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை காரணம் அவரும் ஒரு பெண் தான், அவர் சொல்கிறார் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்று! இதைச்சொல்லி உலகில் கற்பழிப்பு கேஸே இல்லாமல் செய்து விடலாமா?, ஆண்டுக்கணக்காக வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் கூட வன்கொடுமைக்கு உட்பட்ட பெண்ணின் பெயரை மாற்றி தான் வெளியிடுகிறார்கள், அந்த பெண்ணின் எதிர்காலம் குறித்து, இவர்களுக்கு அந்த பெண்ணின் பயோடேட்டா கொடுத்தால் தான் சாருவை ஏன் அப்படி செய்தாய் என கேட்பார்களாம்!


கனிமொழிக்கு அருகில் அமர்ந்திருக்கும் போண்டாகோழி தான் சாரு!
(கனிமொழி பார்ப்பதை பார்த்தால் உன்னையெல்லாம் எவண்டா பக்கத்துல உட்கார வச்சது என்பது போலத்தானே இருக்கு)

தோழர் அக்னிபார்வை அவரது பதிவில் சொல்லியிருந்தார், சைக்கோவை விட அவனுக்கு துணை இருப்பவர்கள் மேலும் ஆபத்தானவர்கள் என்று, கண்மூடித்தனமாக தலைவனை ஆதரிக்கும் முன் பாதிக்கபட்ட பெண்ணின் நிலையை யோசிக்க முடியாத அளவுக்கு அவர்களது பகுத்தறிவு வேலை செய்து கொண்டிருக்கிறது, இதில் பலர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்தவர்களாம். வெட்கக்கேடு, பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!

சாருவை சிக்க வைப்பதற்காக இதை ப்ளான் பண்ணி செய்திருக்கிறோம் என குற்றசாட்டு அவரது அடிவருடிகளிடம் இருந்து!, நித்தியானந்தா விசயத்தில் தனக்கு தானே மலக்குளியல் செய்து கொண்ட சாருவை சிக்க வைக்க தனியாக வேறு யோசிக்க வேண்டுமா என்ன!?, நித்தியானந்தா விசயம் நடந்தவுடன் ஏன் எழுதவில்லை என கேட்டதற்கு சாருவின் பதில் என்ன தெரியுமா?

”அப்பொழுது என் மனைவி ஆசிரமத்தில் இருந்தார், அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென நான் எழுதவில்லை”

அதற்கு முன்னர் ஒரு பதிவில், என் மனைவிக்கு அனைத்துமே முன்னரே தெரிந்திருக்கிறது, அவரது உருவில் அம்மனை பார்க்கிறேன் என்று எழுதியிருந்தார், தன் மனைவி ”அம்மன்” மற்ற பெண்கள் ”ஜீனத் அம்மன்” என்ற நினைப்பு போல சாருவுக்கு!

திட்டமிட்டு உருவாக்கபட்ட உரையாடல் என சப்பைகட்டு கட்டியவர்களுக்காக வினவு தளத்தில் முழு உரையாடலும் கொடுக்கபட்டுள்ளது, உங்களது மனைவியின் நம்பர் கொடுங்க, நான் பேசனும் என கேட்டதற்கு சாரு தரவில்லை, அவர்ஹு மனைவியை கணீணியில் அமர அனுமதிப்பாரா என்பதே சந்தேகம் தான், சாருவெல்லாம் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுது சூத்தாம்பட்டை எரிகிறது.

இப்படி பேச வேண்டாம், உங்களை நண்பனாக தான் நினைக்கிறேன் என சொல்லும் பெண்ணிடம் உன் மார்பு சைஸ் என்ன?, ஈரமாச்சா இல்லையா என கேட்க மனபிறழ்ந்தவர்களால் மட்டுமே முடியும்!, இவ்விசயத்தில் மக்களவௌ உறுப்பினர் கனிமொழி பெயரும் அடிபட்டிருப்பது தான் சிறப்பு, அனைத்து மீடியாக்களும் இதை அடுத்த சிக்ஸராக வெளியிட காத்து கொண்டிருக்கிறார்கள், அரசியலுக்கு முன்னர் காதலித்தோம் என்றாலும், சாருவும் ஒரு பினாமியாக இருக்கலாம் எனக்கூட விசராணை நடக்கலாம் என ஒரு வக்கில் நண்பர் சொல்கிறார்!

சாருவிற்கு அழிவு வேறு யாராலும் வரப்போவதில்லை, சாருவின் பதிவில் இன்றைய மனுஷ்யபுத்திரனின் கடிதத்தை பார்த்தாலே தெரியும், வாய்ப்பளித்து கொண்டிருந்த ஒருவரையும் பகைத்துவிட்டு தான் பார்பனபத்திரிக்கைக்கு அடிவருட போய்விட்டார் போல!, இனி இணையத்தில் பிச்சை எடுக்க முடியாத நிலை வந்து விட்டது, சாருவும், அவரது அடிவருடிகளும் அடுத்த குப்பி பாகத்துக்கு ரெடியாகிவிட்டதாக ஏஜென்ஸி தகவல்கள் சொல்கின்றன, அப்பாவி சாரு வாசகர்களின் பின்புலம் பத்திரம்!

****

அவசரத்தில் எழுதியது, எழுத்துபிழையை நேரம் கிடைக்கும்பொழுது திருத்துகிறேன்!

!

Blog Widget by LinkWithin