திவால் ஆகுமா இந்தியா - பாகம்4

இந்த தொடரில் இது நான்காம் பாகம். எப்பவும் போக பாகத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்றேன், ஆனா போன பாகத்தை டாக்டர் மறந்துட்டதால எனக்கு எந்த கேள்வியும் வரல. போன பாகத்திலே இந்த பாகத்தில் இருந்து முதலீடு பற்றிய அறிவுரை வரும்னு சொல்லியிருந்தேன். அதை பகிர்கிறேன்

முதலீடு என்பது பணம் மட்டுமல்ல, நம் நேரம், அர்பணிப்பும் கூட, ஆக நாம் முதலீட்டிற்கு முன்னால் யோசிக்க வேண்டியது என்னவென்றால் நம் ஆயுள் காலம் 70 வயதென்றால் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது அதில் மீதியை தான். அதாவது உங்களுக்கு 40 வயதானால் நீங்கள் உங்கள் முதலீட்டில் 30% தான் ரிஸ்க் எடுக்கனும், மீதியை சேஃப் முதலீட்டில் தான் வைக்கனும்

இங்கே பெரும்பாலோர் நம்புவது மியூச்சுவல் ஃபண்ட், தவறில்லை. அதும் முதலீடு தான், ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால்....

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்குவார்கள். உங்களை அறிமுகபடுத்தும் ஏஜெண்டுக்கு கணிசமான தொகை போகும், மீதி தொகை கம்பெனிக்கு போகும், அங்கே என்னை போல் செக்டாருக்கு ஒருத்தர்னு அனலைசர் இருப்பார்ங்க, அதாவது பார்மா செக்டார், பேங்க் செக்டார் இந்த மாதிரி.

எதிர்கால ஊக வணிகத்தில் விற்று வங்கலாம். ஆனால் போர்ட்போலியோவிலோ, முயூச்சுவல் ஃபண்டிலோ விற்று வாங்க முடியாது, வாங்கி விற்கலாம். ஆக மொத்த மார்கெட்டும் இறக்கும் போது நாம வேடிக்கை தான் பார்க்கனும்



எனது இண்ட்ராடே கால் 85% சக்ஸஸா இருந்தாலும் நான் அனைவரையும் இழுத்து விடாமல் இருக்க காரணம் தயவுதெய்வு நாம் என்ன செய்கிறோம் என புரிந்து மார்கெட்டில் இருக்கனும்னு தான்

முயூச்சுவல் ஃப்ண்டில் நமக்கு லாபம் வரும். ஆனால் அதுக்கு நாம் குறைந்து முணு வருசம் காத்திருக்கனும், அதுக்கு முன்னாடியும் லாபம் வரும், அந்த பணம் அந்த கம்பெனி CEO யிருந்து வாட்ச்மேன் வரை சம்பளத்துக்கு போகும்

ஆனாலும் மார்கெட் முற்றேத்தை பொறுத்து நட்டம் வராமல் என் போல் அனலைசர் பார்த்து கொள்வார்கள். அம்மாதிரி சேவை தான் நமது போர்ட்போலியோவும்

இங்கே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒரே விசயம் தான்
ரிஸ்க் எடுப்பதை கவணத்தில் கொள்ளுங்கள். யாரையும் நம்பி அவர்கள் கையில் பணம் தாராதிர்கள். எதா இருந்தாலும் உங்கள் நேரடி மேற்பார்வையில் பாருங்கள்

#வால்பையன்

திவால் ஆகுமா இந்தியா - பாகம்3

இந்த தொடரில் இது மூணாவது கட்டுரை. இந்த கட்டுரை வரிசையில் முந்தைய கட்டுரையின் சந்தேகங்கள், விளக்கங்கள் தந்து விட்டு அடுத்த கட்டத்துக்கு போவது தான் சரியாக இருக்கும், போன கட்டுரையிலும் இதை செய்திருந்தேன்.

தொழிலாளர்கள் நல வைப்புநிதி பிடிப்பது நல்லது தான். அதை இன்னும் விரிவு படுத்தி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும், அவர்களின் சேமிப்புக்கு அதிக வட்டி கொடுத்து ஓய்வு பெறும் வயதில் அவர்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க உதவ வேண்டும் என்பது தான் என் விருப்பமும், அதிர்ஷ்டவசமாக மேலை நாடுகளில் இம்முறை உள்ளது. நம் நாட்டில் இருந்தாலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. போக வேலை வாய்ப்பை உருவாக்கினோம் என்பது மோசடி தானே.

சரி அப்படி பிடிப்பதாகவே வைத்துக்கொள்வோம், தமிழக அரசு நம் அரசு பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொழிலாளர் நல வைப்பு நிதியை உரிய நிறுவனத்தில் சேர்க்காமல் பிரச்சனை ஆனது தெரியுமா? போக்குவரத்து தொழிலாளர் பலருக்கு ஓய்வு பெறும் பொழுது கொடுக்க வேண்டிய தொகையை இன்னும் கொடுக்காமல் இருப்பது தெரியுமா? நிதி பற்றாகுறையில் ஏகப்பட்ட காலி பணியிடங்கள் நிரப்ப படாமல் இருக்கிறது, 8000க்கும் அதிகமான அங்கன்வாடிகள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது, அங்கன்வாடிகள் இந்தியாவிற்கு மிக மிக தேவையான ஒன்று.

சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விசயங்களும் சவுக்கு கட்டுரையில் வந்துள்ளது, போக அது வடநாட்டு பொருளாதார நிபுணரால் எழுதபட்டு தமிழில் மொழிபெயர்க்க பட்டது, எங்கே இருந்து பார்த்தாலும் உண்மை என்பது உண்மை தானே. சிறு தொகையை கடனாக கொடுத்து விட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளோம்னு சொல்வதனால் இந்தியாவின் பொருளாதார நிலை மாறி விடுமா என்ன?

நமது இந்திய ஜனாதிபதிகளில் ஜெயில்சிங் தவிர மற்ற அனைவரும் ரப்பர் ஸ்டாம்ப் போல் தான் செயல்பட்டார்கள், வெங்கட்ராமன் கொஞ்சம் பரவாயில்லை. பாஜக அரசு உயர்பதிவுகளில் யாரை நியமித்தாலும் அவர் அப்துல்கலாம் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். அவர்கள் ஆசையில் மண் அள்ளி போட்டார் ரகுராம்ராஜன், இவர் அமெரிக்காவின் முக்கிய வங்கியில் நிதி துறையை நிர்வகித்தவர், இவரையும் ரப்பர் ஸ்டாம்பா இருக்க சொன்னா எப்படி?

இந்தியாவில் சி.பி.ஐ, தேர்தல் ஆணையம், நீதிதுறை மற்றும் ரிசர்வ் வங்கி அரசு தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக நம்பப்படுகிறது!? முந்தைய ஆட்சி வரை ரிசர்வ் வங்கி அப்படி தான் இருந்தது. ஆனால் இந்த அரசு பொருளாதார கொள்கையில் ரகுராம்ராஜன் பேச்சை செவிமடுக்க தவறியது. பல முறை நேரடியாகவே எச்சரித்தும் மோடி தான் செய்வது சரி என்றே நம்பினார்

உலகில் பல நாடுகளில் ஒரே தேசம், ஒரே வரி என்ற ஜி.எஸ்.டி முறை உள்ளது. அவைகள் பெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடிக்கபடுபவை அல்லது முறைபடுத்தப்பட்டு போதிய பயிற்சி கொடுக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டவை. ஒரு நாட்டின் ரிசர்வ் அல்லது செண்ட்ரல் அல்லது ஃபெடரல் வங்கியின் முக்கிய பணி அந்த நாட்டின் பண வீக்கத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வட்டி விகிதத்தை சமன் செய்து பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பது

முன்னர் உற்பத்தி வரி, மொத்த வியாபார வரி, சில்லறை வர்த்தக வரி என்று தனி தனியாக இருந்த பொழுது நமது நாட்டின் உண்மையான ஜி.டி.பி கணக்கிட வசதியாக இருந்தது. தற்சமயம் ஜி.எஸ்.டிக்கு பிறகு வரி வருவாய் அதிகரித்திருப்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பண வீக்கமும் அதிகரித்துள்ளது. மோடி செய்ததில் பணமதிப்பிழப்பை விட பெரிய முட்டாள் தனம் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தியது.

நோட்டு அடிப்பது, வட்டி விகிதத்தை தீர்மானிப்பது மட்டுமே ரிசர்வ் வங்கியின் வேலையில்லை, வங்கி துறையை பொறுத்த வரை ரிசர்வ் வங்கி ஒரு வாட்ச்டவர். நம் நாட்டில் உள்ள வங்கிகள் ஒரு குறிபிட்ட தொகை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளது. அந்த வங்கி திவால் ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ட பணமாவது போய் சேர வேண்டும் என்பதற்கான ஏற்பாடு, போக அந்த வங்கி உபரியாக இருக்கும் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைப்பு கணக்கில் வைத்து வட்டி பெறும், பணம் இல்லாத பொழுது ரிசர்வ் வங்கியிடம் பணம் பெற்று வட்டி கட்டும், இது ரிசர்வ் வங்கியின் முக்கிய வருமானம்

இம்மாதிரி வங்கிகள் டெபாசிட் தொகை ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர்கள் வசம் மட்டுமே உள்ளது. ஆனால் பாஜக அரசு ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் டெபாசிட் தொகையில் பாதியை அரசிடம் தருமாறு கேட்கிறது, (வட்டியும் கொடுத்த தயார்னு சொன்னதா தகவல்) மக்களின் நல திட்டங்களுக்கு!?(சிலை வைப்பது தான் நல திட்டம் போல) தேவைபடுகிறது என்பது அவர்கள் வாதம்.



ஒரு நாட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணபுழக்கம் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் ஜிம்பாப்வே நாட்டை போல் நூறு கோடிக்கெல்லாம் நோட்டு அடிக்கும் நிலை வரும், ஜிம்பாப்வேயில் ஒரு காப்பி  50000 டாலர் அந்த நாட்டு பண மதிப்பிற்கு, அதாவது அங்கே பணத்திற்கு மதிப்பே இல்லாமல் போனது, காரணம் அங்கேயும் மோடி மாதிரி ஒருத்தர் ஆட்சி செய்ததால். இதை உணர்ந்த ரகுராம்ராஜன் எச்சரிக்கையுடன் தனது பணியை ராஜினாமா செய்தார்

வழக்கம் போல் பக்தாஸ் தங்களது கற்பனை திறனால் கட்டுகதை அவிழ்த்துவிட்டார்கள், ரகுராம்ராஜனுக்கு கிரீன்கார்ட் காலம் முடிய போகிறது, அவர் உடனே அமெரிக்கா போகவில்லை என்றால் இனி அமெரிக்காவில் தங்க முடியாத நிலை ஏற்படும் என்று, என்னிடம் விவாதம் செய்த சங்கிகள் சிலர் கூட இது தான் உண்மையான காரணம் என நம்புகிறின்றனர். ஆனால் உர்ஜித்படேல் ஏன் ராஜினாமா செய்தார்? அவர் எந்த நாட்டு கிரீன்கார்ட் பெற போகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசின் பதட்டம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மொத்த வராகடன் 54 லட்சம் கோடி என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாஜக அரசு அதை முந்தைய அரசின் ஊழல் என காரணம் காட்டினாலும் அந்த வரா கடனை திரும்ப வசூலிக்க என்ன முயற்சி எடுத்தது என்ற கேள்விக்கு மோடியிடம் இருந்து வணக்கம் என்ற பதிலோ, எச்.ராஜாவிடமிருந்து யூ ஆர் ஆண்ட்டி இண்டியன் என்ற பதிலோ வரலாம்.

அடுத்த கட்டுரையில் இருந்து முதலீட்டு ஆலோசனைகள் தொடங்கும்

ஸ்மார்ட் ஒர்க்....

அதெல்லாம் ரொம்ப simple மச்சி என சொல்ல கேட்ருப்பிங்க, அதெல்லாம் ரொம்ப சுலபம் மச்சி என்பதாக அதை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம், இன்னைக்கு நாம பேசப்போவது. simplify அல்லது simplelize பற்றி அதாவது சுலபமாக்குதல்.

இந்த உலகில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் தேவையே காரணமாக இருக்கிறது, அந்த தேவையை ஆராய்ந்தால் சுலபமாக்குதல் பிரதானமாக இருக்கிறது

தூரத்தை கடக்க மனிதன் நடந்தான், உடல் உழைப்பையும், நேரத்தையும் மிச்சபடுத்த மிதிவண்டி கண்டுபிடித்தான், இன்னும் உடல் உழைப்பையும், நேரத்தையும் மிச்சபடுத்த மோட்டர் சைக்கிள் கண்டுபிடித்தான், அப்படியே கார், ட்ரெயின், விமானம், ராக்கெட்னு போயிட்டான்

சுலபமாக்குதல் மனிதனின் புத்தி கூர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது, மரம் வெட்டுபவர்கள் இரண்டு பேர் காட்டிற்கு மரம் வெட்ட சென்றனர். அதில் ஒருவர் ஒய்வே எடுக்காமல் மரம் வெட்டிக்கொண்டிருந்தார், ஒருவர் அடிக்கடி 5 நிமிசம் ஓய்வு எடுத்து மரம் வெட்டினார்

இறுதியில் ஓய்வு எடுத்தவரே அதிக மரம் வெட்டினார், காரணம் ஓய்வு எடுத்தது அல்ல, ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவர் தன் கோடாலியை தீட்டியது. முன்னவர் செய்தது ஹார்ட் ஒர்க் என்றால் ஒய்வு எடுத்தவர் செய்தது ஸ்மார்ட் ஒர்க்



இந்த ஸ்மார்ட் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும் தேவைபடுகிறது, அதை அலட்சிய படுத்துவதால் நாம் நம் அறிவை கூர்மைபடுத்தாது கடைசி வரை கடின வேலை செய்து கொண்டும், அதை பெருமையாக பேசிக்கொண்டும் இருக்கிறோம்

ஒரு ஸ்விட்ச் வேலை செய்யவில்லை என்றால் அதன் மேல் இது வேலை செய்தாது என எழுதி ஒட்டுவது ஸ்மார்ட் ஒர்க். திட்டமிடுதல் ஸ்மார்ட் ஒர்க், மாற்று கோணத்தை யோசிப்பது ஸ்மார்ட் ஒர்க். இதெல்லாம் கூட சிலருக்கு கஷ்டமா தெரியலாம். நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க தவறும் முக்கியமான ஸ்மார்ட் ஒர்க் ஒன்று இருக்கிறது

அது எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைப்பது.

பங்கு சந்தை - இன்றைய ஆலோசனை (2)

பங்கு வர்த்தகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களை விட பங்கு வர்த்தகத்தில் இருந்து கொண்டே என்ன நடக்கிறது என புரியாமல் இருப்பவர்கள் அதிகம், அந்த புரிதல் சிக்கலில் தான் பலருக்கு நட்டம் ஏற்படுகிறது, எந்த தொழிலாக இருந்தாலும் அதன் அடிப்படையை கொஞ்சமேணும் புரிந்துக்கொள்ள வேண்டியது மிக  அவசியம். பங்கு சந்தையை பொறுத்தவரை நிறுவத்திற்கு லாபம் வந்தால் தானே பங்கின் விலை உயர வேண்டும், ஆனால் தினம் எப்படி வர்தகம் ஏற்படுகிறது என்பது பலரது சந்தேகம்.

சில வார்தைகளை அப்படியே தமிழ் படுத்தினால் சுத்தமாக உங்களுக்கு புரியாமல் போகலாம், ஆகவே அந்த வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே தருகிறேன். பங்கு சந்தையை பொறுத்தவரை இரண்டு வகையில் பங்கு நிலை என்னவாகும் என முடிவு செய்வோம், ஃபண்டமெண்டல் என்னும் அடிப்படை, டெக்னிக்கல் அனலைஸ்.

டெக்னிகல் அனலைஸ் என்பது ஒரு விதமான செண்டிமெண்ட் விசயம், அதன் அடிப்படை resist (மேல் தடுப்பு), support (கீழ் தடுப்பு). ஒரு பங்கு 100 ரூபாயை தாண்டாமல் ரொம்ப நேரமாக அல்லது சில நாட்களாக ஆடிக்கொண்டிருந்தால் அது மேல் தடுப்பு. அதை தாண்டினால் மக்கள் மனநிலை இன்னும் அந்த பங்கு மேலே ஏறும் என்று வாங்க துவங்கும், அதே தான் கீழ் தடுப்பும். இதனை அறிய பல இண்டிகேட்டர்கள் இருக்கிறது. ஒவ்வொரு இண்டிகேட்டரும் ஒரு பொருளாதார அறிஞர்கள்களால் கண்டுபிடிக்கப்பட்டு பல அவர்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. டெக்னிக்கல் விசயத்தை பொறுத்தவரை ஆழ்ந்த ஆர்வமும், பொறுமையும், அனுபவமும் தேவை



ஃப்ண்டமெண்டல் என அழைக்கப்படுவது செய்திகளை அடிப்படையாக கொண்டது. மேலே குறிப்பிட்டு பங்கில் அதன் கீழ் தடுப்பு 80 ரூபாயாக உள்ளது என வைத்துக்கொள்வோம், அதை உடைக்காது என பலர் அங்கே வாங்கி 100ன் அருகில் விற்று அன்றாடம் வர்த்தகம் செய்து கொண்டிருப்பர். ஒரு வேளை அந்த நிறுவனத்தின் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டு அதனால் அரசு அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்தால் புதிய ஆர்டர்கள் கிடைக்காது என மக்கள் கீழ் தடுப்பையும் தாண்டி அந்த பங்குகளை விற்க தொடங்குவார்கள். சில நல்ல செய்திகள் மேல் தடுப்பை உடைக்க உதவும்

உதாரணத்திற்கு ஒரு விசயம் சொல்கிறேன். வளர்ந்த நாடுகளில் அனைத்துமே கணிணிமயம் ஆகிவிட்டதால் நாட்டின் பொருளாதாரம், எல்லா துறையின் அடிப்படையில் துல்லியமாக கணக்கிடப்படும், தற்சமயம் இந்தியாவிலும் பத்திர பதிவு, புதுமனைக்கான அனுமதி ஆகியவை துல்லியமாக நமக்கு கிடைக்கிறது. சென்ற மாதத்தை விட இந்த மாதத்தில் புதுமனைகளுக்கு அதிக அனுமதி கோரப்பட்டுகிறது என்றால் என்ன விளைவுகள் ஏற்படும். அடுத்த பத்திக்கு செல்லும் முன்னால் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்

கட்டுமான துறைக்கு அதில் பங்கு உண்டு, வீட்டு கட்ட கடன் தரும் நிறுவனத்திற்கு அதில் பங்கு உண்டு, வீடு கட்ட பயன்படும் கச்சா பொருளான சிமிண்ட்டிற்கு பங்கு உண்டு என்பதால் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பங்கு உண்டு, வீடு கட்டி முடிக்கப்பட்ட உடன் ஒயரிங், வீட்டிற்கு தேவையான ஹோம் அப்ளைன்ஸ், பெயிண்ட் என்று பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

ஆக அது சம்பந்தமான துறைகள் அனைத்திற்கும் மறைமுகமாக அதில் பங்கு பெற்று நேர்மறை வர்த்தகம் தொடங்கி விடுகிறது. இப்படி நமக்கு கிடைக்கும் புள்ளி விபரங்களை கொண்டும், பங்கு செல்லப்போகும் திசை யூகிக்கலாம். பங்கு வர்த்தகம் என்பது பூவா, தலையா போட்டு பார்ப்பதோ. 12 கட்டங்களில் எந்த கிரகம் எங்கே மாறுகிறது என தீர்மானிப்பதோ அல்ல. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சான்ற துறை. ஆர்வமும் பொறுமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதை கற்று கொள்ளாலாம்

எனது வாட்ஸ் அப் நம்பர் 9364151621
அழைக்க 9003063176   -   6379796050

#வால்பையன்
#பங்குசந்தை

திவால் ஆகுமா இந்தியா.. பாகம் - 2

நேற்று எழுதிய பதிவில் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு உதாரணம் சொல்லவே அமெரிக்காவை எழுதினேன். அதில் தங்கத்தை குறிப்பிட்டு இருந்ததால் எல்லாரும் உடனே தங்கம் வாங்கலாமா என கேட்கின்றனர், அமெரிக்காவின் USD Indexக்கும் தங்கத்துக்கும் தொடர்பு உண்டு, இண்டெக்ஸ் ஏறினால், தங்கம் இறங்கும், இண்டெக்ஸ் இறங்கினால் தங்கும் ஏறும், நேற்று இரவு அமெரிக்காவின் FED தனது வட்டியை 2.25 என்ற புள்ளியில் இருந்து 2.50 புள்ளிகளாக உயர்த்தியது, அதனால் காலையிலயே 15$ வரை தங்கம் குறைந்தது, இதையெல்லாம் கவனித்துக்கொண்டே இருப்பதால் வர்த்தகத்தில் பாதிப்பில்லை. இங்கே சொல்ல வருவது நம் பணத்தை சேமிக்க தங்கமும் ஒரு ஆப்சன், எல்லா பணத்தையும் தங்கத்திலே சேமியுங்கள் என அர்த்தமில்லை

இப்பொழுது இந்தியாவின் நிலைக்கு வருவோம். அன்னிய செலாவணி, மானிட்டரி டெபிட் போன்ற விசயத்தில் நுழைந்து குழப்ப விரும்பவில்லை, மேலும் எனது கட்டுரைகள் சாமான்யனுக்கும் புரியவேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஒரு நாட்டின் தனி மனித வருமானம் அந்த நாடு பொருளாதாரத்தில் உலக அரங்கில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை காட்டுவது, நமது நாடு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தாலும் இந்த தனிமனித வருமானம் எவ்வாறு கணக்கிடப்படகிறது என்பதை கவனிக்கனும், ஒரே அலுவலத்தில் மேனேஜர் 10000 சம்பளம் வாங்குவார் அவருக்கு கீழே வாட்ச்மேன் வரைக்கும் முறையே 10000 குறைந்து கொண்டே வருகிறது, வாட்ச் மேனுக்கு சம்பளம் 10000 ஆனால் அந்த அலுவலுகத்தின் சராசரி தனிநபர் வருமானம் 55000 என்றால் உங்களால் எப்படி அதை பார்க்கமுடிகிறது.

புள்ளிவிபரங்களின் ஏமாற்று வேலை இப்படி தான் நடக்கிறது. இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானியில் ஆரம்பித்து 10 ரூபாய் வரி கட்டும் நபரையும் வகுத்து தனிநபர் வருமானம் காட்டப்படுகிறது. இந்த புள்ளிவிபர கணக்கு தனிநபர் வருமானத்தில் மட்டும் இல்லை, நமது உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி. வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என எல்லா தளங்களிலும் இதே வகுத்தல் தான். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும் விலைவாசி கட்டுக்குள் இருப்பது போல் அரசு கணக்கு காட்டியது இப்படி தான்,

நமது நாட்டில் வேலையல்லாதோர் எண்ணிக்கை 30% மேல் இருக்கும் என்பது என் கணிப்பு, சமீபத்தில் ரயில்வே துறையில் 90000 பணி காலி இடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பிள்ளனர். ஒரு லட்சம் காலி இடங்கள் என்றாலும் இது 250 மடங்கு என்பதை கவனிக்க, ஆனால் அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்பதாக நமக்கு புள்ளி விபரம் கொடுக்கிறது, உண்மையில் நடந்தது என்ன?



ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 பணி ஆட்கள் இருந்தால் அவர்களிடம் EPF அதாவது employee provident fund ( தமிழ்ல என்ன) சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசிடம் கொடுக்க வேண்டும், பணி ஓய்வின் பொழுது நமக்கு வட்டியுடன் கிடைக்கும். இந்த அரசு வந்தவுடன் தொழிலாளர் நலதுறைக்கு ஒரு அறிக்கை விடுக்கிறது, அது என்னவென்றால் ஒரு நிறுவனத்தில் 10 பேர் பணி புரிந்தாலே அந்த நிறுவனம் EPF பிடித்தம் செய்ய வேண்டும் என்று, அதற்கு முன் 10 திலிருந்து 19 பேர் வரை பணி புரிந்த நிறுவனங்கள் அரசின் ஆணையால் அவர்களுக்கு வைப்பு நிதி கட்டியது, அப்படியானால் நிதி வருகை அதிகரிக்கும், அதை காட்டி வேலை வாய்ப்பை உருவாக்கியதாக அரசு கணக்கு காட்டியது, உண்மையில் அதிகரித்துள்ளதா?

அடுத்து முத்ரா வங்கி, சிறு/குறு தொழில் தொடங்க முத்ரா வங்கி மூலம் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல கோடி பேர் பலன் பெற்று சொந்த தொழில் ஆரம்பித்துள்ளாதகவும் கணக்கு சொன்னார்கள். அவர்கள் கொடுத்ததாக சொல்வது 3000 கோடி, அதில் 70% மேல் கடன் பெற்றவர்கள் பெற்றது வெறும் 50000 மட்டுமே, அதிகார மையத்தில் தொடர்பு இருந்தவர்கள் கோடிகளில் கடன் பெற்றனர். சரி 50000 கடன் பெற்றவர்கள் எத்தனை பேர் தொழில் தொடங்கி இருப்பர், நீங்களே யோசித்து சொல்லுங்கள் 50000 ரூபாயில் என்ன தான் தொழில் செய்ய முடியும்.

இந்த நாட்டின் நிலமையில் நாம் தமிழகத்தை சேர்க்கவே வேண்டாம், தமிழ்நாடு இந்தியாவின் அதிக வருவாய் பெறும் மாநிலமாக இருக்க காரணம் நாம் தற்சார்பு கொள்கை கொண்டவர்கள், அரசு வேலை தான் வேண்டும், ஒயிட் காலர் வேலை தான் வேண்டும் என்று காத்திருப்பதில்லை. ஒட்டகம் மேய்க்கக்கூட துபாய் போயிருவோம், அதே போல் நம் மாநிலத்தை முன்னால் ஆட்சி செய்தவர்கள் ஏற்படுத்திய கட்டுமானம் தேவையான வேலை வாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் கொடுத்துள்ளது

பெத்த மகன் சோறு போடாமல் கைவிட்டாலும் தெரு தெருவாக கீரை விற்று தன்னை காப்பாற்றிக்கொள்ளும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு, அதனால் நாடு பொருளாதார நெருக்கடியை சந்திந்தாலும் நம்மால் மீண்டு வர முடியும், எதில் எதில் முதலீடு செய்யலாம் என இப்பவே குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்கள் பணம் வங்கியில் இருப்பதால் தற்சமயம் எந்த ஆபத்தும் இல்லை. தொடர் முடியும் வரை நீங்கள் காத்திருக்கலாம்

திவால் ஆகுமா இந்தியா - பாகம் 1

ரெண்டு வருசமா இந்தியா பெரிய பொருளாதார நெருங்கடியை சந்திக்க போகுதுன்னு சொல்லிட்டு இருந்திங்க, நேத்து ரகுராம்ராஜன் இந்தியா திவால் ஆக போகுதுன்னு சொல்றார், நாங்க என்ன தான் பண்றது, எப்படி எங்களை காப்பாத்திக்கனும் என்பதற்கான பதில் கீழே

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேன்னு ஒரு பழமொழி கேட்டதுண்டா?
புரியலைல, நல்லா யோசிச்சு பாருங்க., ஒரு வருடங்களுக்கு முன்னால் வரைக்கும்

அம்மா சொன்னா கேட்க மாட்டிங்களா, ஆட்டிகா வாங்க, உங்க நகையெல்லாம் கொடுத்துட்டு போங்க.
ஜெயில் லாக்கர்ல இருக்கும் உங்க தங்கத்தையெல்லாம் எடுத்துட்டு வந்து முத்தூட்ல கொடுங்க
குழந்தைங்க தான் உங்க நகையெல்லாம் அந்த நிறுவனத்தில் வாங்குவாங்க
நமக்கு வீடு தான் முக்கியம், நகை இல்ல. கொண்டு போய் வித்துருங்க
இது சாம்பிள் தான், நான் நிறைய கம்பெனி பெயரை குறித்து வைக்கல.

ஏன் இந்த தீடீர் விளம்பரம்? போக போக புரியும்

இந்தியா திவால் ஆகுமா என்றால் ஒரு நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது போல் ஒரு நாடு கொடுக்க முடியாது. பொருளாதர நெருக்கடியை நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை வைத்து சொன்னால் உங்கள் எளிதல் புரியும்



உலகிலேயே பணக்கார நாடு எது என்று கேட்டால் அமெரிக்கா என அனைவருக்கும் தெரியும், அந்த நாடு 2009 ஆம் ஆண்டு சப்-ப்ரைம் கிரிஸிசிஸ் என்ற சிக்கலை சந்தித்தது. அது ஏன் நடந்தது என்பது எங்களை போல் உலக பொருளாதாரத்தை கவனிப்பவர்களுக்கு தான் தெரியும், சாமானியர்களை பொறுத்தவரை ஒரு சம்பவம் மட்டுமே

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு தவறான பொருளாதார கொள்கை முடிவு எடுத்தது, அதாவது வங்கிகளுக்காக வட்டியை குறைத்தது, அதை என் போன்றோர் FED RATE என்போம். அதிக பணப்புழக்கம் பெற வங்கிகள் வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்தது.

உள்நாடு, வெளிநாட்டில் இருந்து வந்தோர் என்றும் பாராமல் வீடு வாங்க, கார் வாங்க 90% கடன் கொடுத்தது. ஐடி கம்பெனியை பொறுத்தவரை அதில் வேலைபார்ப்போர் பாதி பேர் மங்குணிகள் என்பேன், இந்த வருமானம் நிரந்தம் தானே என எல்லா கடனையும் வாங்கி, வீடு, கார் என சொத்தாக்கி EMI கட்டுவார்கள்.

எங்களுக்கு வந்த காண்ட்ராக்ட் முடிந்தது. அடுத்து ஆர்டர் வந்தால் அழைக்கிறோம், இப்ப நீங்க வீட்டுக்கு போலாம் என்று உங்கள் அடையாள அட்டைய புடுங்கிட்டு வீட்டுக்கு அனுப்பிருவான் கம்பெனிகாரன், அப்புறம் எப்படி வீட்டுக்கும், காருக்கும் வட்டி கட்றது, அம்மாதிரி சொல்லாமல் கொல்லாமல் விட்டு போன வீடுகள் இன்றும் அமெரிக்காவில் உள்ளது., அனைவர்கள் வாழ்க்கை காரிலே தான்,



சொத்து தான் இருக்கே, வங்கிக்கு என்ன பிரச்சனைன்னு தோணுதா? எந்த பொருளையும் நாம் வாங்கிய விலைக்கு விக்க முடியுமா? வங்கிகள் தடுமாறின, பொதுமக்கள் பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டர். அன்றான பணப்புழக்கத்தே வங்கியில் பணம் இல்லை, ஊதாரி நாடு என பெயரெடுத்த அமெரிக்கா தலைகீழாக மாறியது

அன்னிய நாட்டு முதலீட்டார்கள், தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினர். உள்நாட்டு உற்பத்தி குறைந்தது, காரணம் வாங்க ஆள் இல்லை. பங்கு சந்தை பாதாளத்திற்கு இறங்கியது, எல்லா பணமும் தங்கம் மற்றும் வெள்ளீயில் முதலீடு செய்யப்பட்டது. ஒரு அவுன்ஸ் 960$ ஆக இருந்த தங்கம் 2000$ டாலராக உயர்ந்தது..

இப்ப தெரியுதா யானை வர்றதுக்கு முன்னாடி ஓசை ஏன் வருதுன்னு

பதிவு ரொம்ப பெருதா போகுது, இதை தொடராவே எழுதுறேன். கோவிச்சிக்காதிங்க

சோதிடம் என்னும் புருடா....

சோதிடம் அறிவியல் தான் என வாதிடுபவர்களுக்காக பிரபஞ்ச அறிவியலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
இந்த பூமியில் உள்ள உயிர்கள், இந்த பூமி, சூரியமண்டலம், மொத்த பிரபஞ்சமும் ஒற்றை புள்ளியில் இருந்து ஆரம்பித்தது தான். உலோகத்தை உடைத்தால் அது தனிமமாகும். தனிமத்தை உடைந்தால் அது எல்க்ட்ரான், புரோட்டான், நியூரான்ல போய் நிற்கும், உதாரணத்துக்கு நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு சோடியமும், குளோரைடும் இணைந்த உலோகம்.
ஒரு முன்னோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் மிண்ணுவை உடைத்து குவார்க் என்றார்கள். அதையும் உடைத்துப்பார்க்க தான் நியீட்ரினோ ஆராய்ச்சியெல்லாம். அது எதோ சக்லெட் கம்பெனிக்கு நினைச்சிக்காதிங்க, அந்த நியீட்ரனோ ஆராய்ச்சியில் அணுக்கள் வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு மொத்த பிரசஞ்மும் அழிவது தான் சிங்குலாரடி தியரி
நான் சொல்லும் மிண்ணனு எவ்வளவு சிறியது என நீங்கள் கற்பனை செய்ய வேண்டுமென்றால். கரு முட்டையில் சேரும் ஒரு விந்தணுவில் சுமார் 40எம்பி டேடா உள்ளது. நார்மல் மனிதனுக்கு வெளிவரும் விந்தணுவில் 15,875 ஜிபி டேடா உள்ளது, அது என் லேப்டாப் போல் 50 லேப்டாபுக்கு சமம். 70 கிலோ எடை கொண்ட ஒரு மனிதனை எரித்தால் 10 கிலோ கூட சாம்பல் கிடைக்காது, ஏன்?
நம் உடலில் 70% நீர் மூலகூறுகள் உள்ளது என படிச்சிருப்பீர்கள், அவை ஆவியாகி இந்த பிரபஞ்சத்தில் கலந்து மீண்டும் அணுக்கள் இணைந்து வேறு ஒன்றுக்கு உணவாகும்
பிரபஞ்ச அறிவியலின் படி. ஒரு கிரகம் ஒரு உயிரின் எதிர்காலத்தையோ, கூட இருப்பவர்களின் எதிர்காலத்தையோ தீர்மானிக்காது, ஒரு மனிதனின் குணம், அறிவு, உடல்மொழி, ஆர்வம் ஆகியவை நம் பெற்றோரின் ஜீன் வழியே கடத்தப்படுவதும், நம் வாழும் சூழலுமே ஆகும்,
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு விதி உள்ளது. அதை சோதிடம் சொல்கிறது என்பது தான் சோதிடர்களின் வாதம். மங்கோலியர்கள் வாழ்ந்த பொழுது பூமியின் 10% மனிதர்களை கொன்றுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஜாதகமா? முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் இறந்தவர்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் பிறந்தார்களா? ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்கள், ராஜபக்‌ஷேவால் கொல்லப்பட்ட தமிழர்களின் ஜாதகம் நமக்கு சொல்வது என்ன?


டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியின் ஒரு நாள் என்பது 22 மணி நேரம் என ஆராய்ச்சி குறிப்புகள் சொல்லுது. இருப்பதலெ சோம்பேறி கிரகம் புதன், அதன் ஒரு நாள், அதன் ஒரு வருடத்தை விட நீளம், பூமியின் ஒரு நாள் 24 மணி நேரம், ஒரு வருடம் 365 நாள். அந்த கிரகத்தை புத்தி கிரகம் எங்கிறார்கள். பூமியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம். 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருசம் கிடையாது. சோதிடர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பலன்களை மாற்றி கொள்கிறார்களா?
நெப்டியூன் கிரகத்தை தவிர மற்ற கோள்கள் நேர்கோட்டில் வர வல்லவை அப்படி நடக்கும் பொழுது அது சோதிடர்களுக்கு தெரியுமா? அதனால் இவர்கள் சொல்லும் கதிர் மறைக்கப்படுமே. அப்பொழுது இவர்கள் சொன்ன பலனுக்கு அர்த்தம் எங்கே போகும். புதனை விட பெரிய துணை கிரகங்கள் வியாழனுக்கு உண்டு, அந்த கதிர்கள் யாருக்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறது?
சோதிடம் ஒரு உளவியல். ஏனெனில் நீங்கள் திருப்தியாக வாழ்கிறார்களா என கேட்டால் ஆம் என்று சொல்வீர்கள் ஆனால் நமது உள்ளுணர்சி நம்மை அடுத்தப்படிக்கு தள்ளிகொண்டே இருக்கும், அதனால் அடுத்து என்ன நடக்கும் என அறிய ஆசைப்பட்ட மனிதன் அல்லது ஒரு குழுமம் தங்கள் வாழ்வியலை வைத்து உருவாக்கியதே இப்போதும் இவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சோதிடம்
இந்த பூமியில் முட்டாள் என்று யாரும் இல்லை, ஆனால் பொதுபுத்தியில் படித்து நல்ல மார்க் வாங்கினால் தான் புத்திசாலி இல்லையென்றால் முட்டாள் என அர்த்தம். நான் ஒம்பது வரை தான் படித்தேன். நமக்கு எதில் ஆர்வம், நமது தேடல் என்ன என்பதை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமை இங்கே பலருக்கு உண்டு. அதனால் பெற்றோர் திணிப்பில் ஆர்வம் இல்லாத துறைக்கு செல்கிறார்கள். தோல்வி அடைகிறார்கள். அதற்கு ஜாதகத்தை காரணம் காட்டுகிறார்கள்.
இந்த உலகம் எவ்வளவு பெரியது என ஏற்கனவே சொல்லியுள்ளேன், இங்கே நாகரிக மனிதன் கால்பதிக்காத இடங்கள் உண்டு, வெளி உலகம் அறியாத பழங்குடிகள் உண்டு, நாகரிக மனிதனை விட பழங்குடிகள் இயற்கையை நன்கு அறிவார்கள். எப்பொழுது மழை வரும், எப்பொழுது புயல் என்று. தரையில் காது வைத்து உயிரினங்கள் நிலநடுக்கத்தை முன்பே அறிவது போல் நம் முன்னோர்கள் இயற்கை சூழல் மாறுவதை கொண்டு மழை, புயலை கணித்தார்கள். வருடா வருடம் அதே பருவ சூழல் தொடர்வதால் அதை பஞ்சாங்கம் என கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். தெரியாம தனமா ஒன்னு ஹிட் ஆனா பார்த்தியானு படங்கள் பகிரப்படும், ஏம்பா மீதி நாளுக்கு ஒன்னுமே எழுதலையான்னு நீங்கள் கேட்காமல் இருக்கும் வரை ஜோதிடமும், சோதிடர்களும் வாழ்வார்கள்
சந்திரயான் என்பது சந்திரனுக்கு நாம் அணுப்பிய ராக்கெட், ஆனாலும் இன்றும் சந்திரபுத்தி இவர்களுக்கு ரொம்ப குஷ்டம் தான், மங்கள்யான் என்பது நாம் செவ்வாய்க்கு அனுப்பிய ராக்கெட். ஆனாலும் செவ்வாய் தோசம் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்காது என ஒதுக்கி வைக்கிறோம், வயோஜர்2 என்ற செயற்கைகோள் நம் சூரியமண்டலையே தாண்டி சென்று விட்டது. ஆனாலும் மனிதன் 12 கட்டத்திற்குள் தன் வாழ்க்கை தேடிக்கொண்டிருக்கிறான்

தேமுதிக - தேர்தல் முன்னோட்டம்

தேமுதிக ஆரம்பிப்பட்ட பொழுது விஜய்காந்த் மட்டுமே விருதாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். விஜயகாந்தின் ஒப்பனையற்ற பேச்சுக்கு அடிதட்டு ,மக்களிடம் வரவேற்பும் இருந்தது.

அதற்கு அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகள் வெற்றி பெற்றது தேமுதிக. எதிர்கட்சியாக இருந்தபொழுதே அருண்பாண்டியன், மாஃபா பண்டியராஜன் போன்றவர்களை அதிமுக இழுத்துக்கொண்டதால் அதிருப்தி அடைந்தார்.

அடுத்த தேர்தலில் திமுகவிடன் ஏகப்பட்ட டிமாண்ட் வைத்தார் விஜயகாந்த் அதில் துணை முதல்வர் பதவியும் இருந்தது. திமுக மறுத்து விட மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். அந்த சயமத்திலே விஜயகாந்துக்கு உடல்நல குறைவு இருந்தது, கோர்வையற்ற பேச்சு, தெளிவில்லாத பேச்சு என சொதப்பினார்

மக்கள் நல கூட்டணி வாக்குகளை சிதறிடிக்க திமுக நிறைய தொகுதிகள் 2000+ வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.தேமுதிகவில் அதிருப்தியில் இருந்தவர்கள் திமுக சீட் கொடுத்து பெரும் தவறும் செய்தது. முத்துசாமி போன்றவர்கள் தோற்க அது ஒரு காரணம்



இப்பொழுது விஜயகாந்த் உடநலகுறைவால் ஓய்வில் இருக்கிறார். அவர் மனைவியும், மச்சானும் கட்சியை நிர்வகிக்கின்றனர். அவர்கள் சுணக்கம் காரனமாக கட்சி இருக்குதா இல்லையான்னு தெரியாத அளவு அவர்கள் செயல்பாடுகள் உள்ளது. கமல், ரஜினி போன்றவர்களின் அரசியல் வருகை பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களை மடை மாற்றிவிட்டது

என்னதான் நாங்க போர்கப்பல், பீர்கப்பல்னு அதிமுக சொல்லிகிட்டு இருந்தாலும் தூத்துகுடி படுகொலை, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் விடுதலை. நீட் பிரச்சனை, கஜா புயல், 8 எட்டுவழி சாலை. நிர்வாக திறன்மின்மை அதிமுகவுக்க பலந்த பின்னடைவை கொண்டு வந்துள்ளது. அதனால் பாஜக கூட அதிமுகவுடன் வைக்க யோசிக்கிறது., பாஜக ரஜினி போன்ற தலைவர்களை தான் குறிவைக்கிறது. அதனால் அதிமுக,, தேமுதிகவை கூட்டணிக்கு அழைக்கலாம் என்பது என் கணிப்பு

திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் இருப்பதால் தேமுதிகவை சீண்ட போவதில்லை. மக்கள் நல கூட்டணியும் கலைந்துவிட்டது. இடதுசாரிகளுடன் திமுக கூட்டணி உறுதிசெய்யப்படவில்லை., அவர்கள் தேமுதிகவை அணுகலாம். ஆனால் தேமுதிக யாருடம் கூட்டணி வைத்தாலும் அது ஓட்டை பிரிக்கும் வேலை.

தேமுதிக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் வாய்புண்டு

கேள்வி-பதில் (ஆன்மீகம்)

கேள்வி:
ஆன்மீகம் என்றாலே ஏன் உங்களுக்கு எட்டிகாய் மாதிரி கசக்குது?

பதில்:
ஆன்மீகம் என்றால் என்னன்னு நான் ஒரு கட்டுரையே எழுதியிருக்கேன், என்னோட ப்ளாக்கில் ஆன்மீகம்னு டைப் பண்ணி தேடினா கிடைக்கும், ஆன்மீகம், ஜோதிடம் ரெண்டுமே உளவியல் ரீதியான தற்காலிக ஆற்றுபடுத்தும் ஒரு விசயம்.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஆறு மாசத்துக்கு டைம் சரியில்லன்னு ஜோதிடம் சொன்னா, பல்லை கடிச்சிட்டு ஆறு மாசத்தை ஓட்டிருவோம்னு செயல்படுவிங்க, ஆனா ஆறு மாதம் கழித்தும் உங்க நிலை அப்படியே தான் இருக்கும், ஆனாலும் அந்த ஆறு மாசம் மன உளைச்சல் அதிகம் ஆகாம பார்த்துகுவது தான் இந்த உளவியல்

ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை கூட அப்படி தான். வாழ்க்கை என்பது நீர்வழி பயணம் மாதிரி, அதில் முயற்சி என்பது துடுப்பு, உங்கள் பயணத்தை என் போல் துடுப்பு போட்டு நான் போக வேண்டிய பாதையை நான் தீர்மானிக்கனுமா அல்லது அது போற போக்கில் போகட்டும்னு விட்றனுமா. கடவுள் நம்பிக்கை என்பது எல்லா பாரத்தையும் உன் தலையில் வச்சிட்டேன் நீ பார்த்துக்க கடவுளே என்பதாகும்

ஐந்து கிலோ எடை கொண்ட ஒரு பொருளை உங்கள் வலது கரத்தால் தூக்குறிங்க, அதே பொருளை உங்கள் இடது கரத்தால் தூக்குறிங்க, ஐந்து கிலோ இடது கரத்தால் தூக்கும் பொழுது அதிகமாகிருமா என்ன? ஆனால் ஏன் அதே பொருள் எடை அதிகமா தெரியுது. வலது கரத்தின் பழக்கம்  உங்களுக்கு இலகுவா தெரிந்த ஒன்று அதிகம் பயன்படுத்தாத இடது கரத்தில் எடை அதிகமா தெரியுது

வலது கரம் என்ற பழக்கம் தான் உங்களுக்கு திணிக்கப்பட்ட நம்பிக்கை, இடதுகரம் தான் ரியாலிடி. ஆன்மீகமோ, கடவுள் நம்பிக்கையோ, ஜோதிடமோ உங்களுக்கு தற்கால ஆற்றுபடுத்துனராக இருக்கலாமே ஒழிய அது நிரந்தமில்லை, இல்லை நான் இப்படியே தான் இருப்பேன்னா நான் உங்கள் மேல் வழக்கெல்லாம் போட முடியாது. உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்னு நீங்க தான் தீர்மானிக்கனும்



நீ கடவுளை நம்புறியான்னு ஒருத்தன்கிட்ட கேட்டாங்களாம், அவன் ஆமாம்னு சொன்னானாம், நீ ஒற்றை கொம்புள்ள யூனிகார்ன் குதிரையை நம்புறியான்னு கேட்டாங்களாம், அவன் இல்லைன்னு சொன்னானான், ஏன்னு கேட்டதுக்கு அவன் நான் அந்த குதிரையை பார்த்ததில்லைன்னு சொன்னானாம்

இந்த கதையில் நீங்கள் யாருன்னு நீங்களே சிந்தியுங்கள்

ஆரா என்னும் புது புரளி........

ஆரா பற்றி நான் நேற்று பதிவிட்ட பேப்பர் கட்டிங் ஏன், எதற்கு, எப்படி என்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களால் சொல்லப்பட்ட பதில். சுஜாதா அறிவுஜீவியா என்பதல்ல இங்கே பிரச்சனை ஆனால் ஒரு கேள்விக்கு தான்தோன்றிதனமா சுஜாதா பதில் சொல்லமாட்டார் என நம்புகிறேன்

மனிதர்கள் வெப்ப இரத்த பிராணிகள், அவர்கள் உடலுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம் நிலையாக இருக்க வேண்டும், அதனால் தான் அதிக வெப்பத்தில் நம் உடல் வியர்த்து வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக குளிரில் நம் உடல் நடக்கி வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக வெப்பத்தை தாங்க முடியவில்லையென்றால் உடல் டிஹைட்ரேட் ஆகி ஹீட்ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறக்கக்கூடும், அதிக குளிரை தாங்க முடியவில்லையென்றால் ஹைப்போதெர்மியா ஏற்பட்டு இறக்கக்கூடும்

நம் உடல் வெப்பத்தை அல்ட்ராவயலட் கேமரா அல்லது ஹீட் சென்சார் மூலம் பார்த்தால் புறசூழலுக்கு தனியே நம் உடல் தெரியும், அவ்வாறு வெப்பமாக இருக்கும் நம் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பகதிர்களை தான் ஆரா என பெயரிட்டு வைத்துள்ளார்கள் ஆன்மீகவாதிகள். ஆரா என்பதை 100% டுபாக்கூர்னு சொல்றதுக்கு முக்கிய காரணமே அதை ஆன்மா, ஆன்மீகம்னு இணைத்தது தான்.

ஏன் ஆன்மீகம் இருக்கக்கூடாதா? நான் உணர்ந்தேன் என்று கூட சிலர் சொல்கிறார்களே என்றால், ஆம் நான் கடவுளை பார்த்தேன் என்று கூட தான் சிலர் சொல்கிறார்கள். பேயை பார்த்தேன் என்று கூடத்தான் சிலர் சொல்கிறார்கள். உங்கள் மண்டையில் இது தான் உண்மை என நம்பவைத்து விட்டால் உங்களால் அதை ஆராயமுடியாது, முன்முடிவுகள் அதை அப்படியே நம்ப வைக்கும்



மருத்துவ குறிப்புகளை பொறுத்தவரை ஆரா என்பது ஒரு உள்ளுணர்வு. ஒரு வித எச்சரிக்கை உணர்வு. இதை பண்ணாதே, அங்கே போகாதே என உங்கள் உள்ளுணர்வு எச்சரிப்பதே ஆரா என மருத்துவம் அழைக்கிறது. அதை ஆன்மீகத்தோடு சிலர் இணைத்து கல்லா கட்டுகிறார்கள், அந்த எச்சரிக்கை உணர்வு நம் மூளையில் பல செயல்களுடன் ஒப்பிட்டு தரும் முடிவு, நம் மூளையின் வேகம் பல ஆயிரம் கணிணிகளுக்கு இணை என்பதால் நம்மால் உணரும் முன்பே முடிவு வந்து நிற்கும்

நம் ஆராவால் பிறர் பிரச்சனைகளை உணரமுடியுமா? நாம் போனில் பேசும் விதத்தை வைத்தே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை நம் நெருங்கிய நண்பர்களால் உணர முடியும், நம் உடல்மொழியை கொண்டே நம் உடலுக்கு எதோ பிரச்சனை என்பதை உணரமுடியும், மருத்துவர்கள் சோதிக்கும் பொழுது கண்ணை நன்றாக விரித்து பார்ப்பது, நாக்கை வெளியே நீட்ட சொல்லி பார்ப்பது கூட உடலில் என்ன பிரச்சனை என்பதை அறியும் வழி தான்.

யோகா என்பது ஒரு உடற்பயிற்சி, ஆனால் அதில் குண்டலினி, குஷ்பு இட்லி என கல்லா கட்டும் சாமியார்கள் கல்லா கட்ட வைத்திருக்கும் இன்னொரு சப்ஜெக்ட் தான் ஆரா, தீவிர ஆன்மீகவாதிகள் அதன் உண்மை தன்மையை அறிய முடியாது, ஏன்னா கடவுள்னு ஒன்னு இல்லைன்னு சொன்னா நம்மை பைத்தியகாரன் மாதிரி தான் பார்ப்பார்கள், அப்படி தான் இதுவும்

பெருவெடிப்பு எப்படி தோன்றியிருக்கும் என சிந்திக்கும் போது இறுதியில் என் உடல் ஆர்கஸம் அடைந்தது போல் உணர்ந்தது, அது ஒன்றை கண்டுபிடித்தேன், அதை கற்பனையில் உணர்ந்தேன் என்ற எல்லையில்லா மகிழ்ச்சி உணர்வு, அதுக்காக நானும் சாமியார்மடம் ஆரம்பித்தால் என்னை விட ஏமாற்றுகாரன் யாரும் இருக்கமுடியாது. நீங்கள் உணர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் ஆரா அப்படி ஒரு நிலை தான், பகுத்தறிவு கொண்டு ஆராயாமல் எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்

லைக்கினால் என்ன பயன்?.....

உங்கள் பதிவுக்கு ஒருவர் லைக்கிட்டாலோ, கமெண்ட் செய்தாலோ அந்த பதிவு உங்கள் நண்பர்களின் டைம்லைனில் முன்னால் வந்து நிற்கும், உதாரணத்திற்கு இரண்டு வருடத்திற்கு முன் நீங்க பதிவிட்ட எதாவது ஒரு பதிவிற்கோ, போட்டோவிற்கோ யாராவது லைக்கோ, கமெண்ட்டோ இட்டால் அது உங்கள் நண்பர்களின் டைம்லைனில் வந்து நிற்கும்

இதில் இன்னொரு விசயம் இருக்கு, அந்த பதிவிற்கு யாரெல்லாம் லைக் இடவில்லையோ அவர்கள் டைம்லைனில் தான் வந்து நிற்கும், உங்களின் ஒரு பதிவிற்கு நான் லைக் இட்டுருந்தால் உங்கள் டைம்லைனில் வந்து தேடினாலும் நான் லைக் இடாத பதிவுகளை மட்டுமே காட்டும், அதுவே கமெண்ட் செய்திருந்தால் என் கமெண்ட்டுக்கு அடுத்து வரும் கமெண்டுகள் அனைத்தும் எனக்கு நோடிபிகேசன் காட்டும், (பெரும்பாலும் நான் பெண்களுக்கு கமெண்ட் போடாமல் இருக்க காரணம் இந்த நோடிபிகேசன் அலர்ஜி தான்)



தெரிந்தோ, தெரியாமலோ அதிக லைக் வாங்குவது பிரபலம் ஆக ஒரு தகுதியாக பெரும்பாலான முகநூல் பதிவர்களால் பார்க்கப்படுகிறது. அதனால் தன் பதிவுக்கே தானே லைக் போடும் பதிவர்களும் இருக்கிறார்கள், என்னை எனக்கே பிடிக்கலைனா எப்படின்னு என்ற லாஜிக் பதிலும் வைத்துள்ளார்கள். (நான் இதுவரை என் பதிவுக்கோ, என் கமெண்டுக்கோ லைக் இட்டுக்கொண்டதில்லை)

அதிக லைக் வாங்குவது எப்படி?

முகநூல் மட்டுமல்ல, இந்த மொத்த சமூகமும் கண்ணாடி மாதிரி தான், நீங்க கண்ணாடியை பார்த்து சிரித்தால் அது உங்களை பார்த்து சிரிப்பது போல் இந்த சமூகமும் எதிர்வினை ஆற்றும் அதனால் உங்கள் டைம்லைனில் நீங்கள் கடக்கும் பதிவுகளுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் லைக் போட்டு விடுங்க, கூடவே நல்ல பதிவுகளுக்கு கமெண்டும் போடுங்க, நானெல்லாம் கமெண்ட்டாலே இத்தனை நண்பர்களை சேர்த்தேன் ப்ளாக் காலத்தில் இருந்து.



தினமும் உங்கள் நட்பு வட்டத்தில் யாருக்கு பிறந்தநாள் என்று பார்த்து வாழ்த்து சொல்லுங்கள்., அப்படியே அவர்கள் ஆக்டிவா இருக்காங்களா அல்லது அவரது நண்பர்கள் டேக் பண்ண பதிவு மட்டும் அவர் டைம் லைனில் இருக்கா, அதுக்கு அவர் லைக்காவது போட்டு வைத்திருக்காரான்னு பார்த்து ஆக்டிவா இல்லைனா அவரை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிடுங்கள், ஆக்டிவா இருக்கும் புது நண்பர்களை சேருங்கள்

அதிக லைக் வேண்டுமென்றால் பெரும்பான்மைக்கு சொறிந்து கொடுக்கும் மானக்கேடான செயலையெல்லாம் நாம் செய்ய வேண்டியிருக்கும், அதனால் உங்கள் எழுத்து உங்கள் ஆளுமையின் வெளிப்பாடா இருக்கனும்னு மட்டும் நினையுங்கள் ஆட்டோமெடிக்கா லைக் மேல் இருக்கும் மோகம் போய்விடும்.

எனக்கு 4800 நண்பர்கள், 8000 ஃபாலோர்ஸ் இருக்காங்க, அதில் 98% ஸ்லீப்பர் செல்ஸ் தான், லைக் போட்டா எங்க இவன் கூட சேர்த்து நம்மையும் களி திண்ண வச்சிருவானோன்னு பயந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் 😂😂😂😂💪💪💪💪💪💪

சினிமா, நட்டம் யாருக்கு?

பொதுவா சினிமா வெற்றியா, தோல்வியா என்பதை அதன் கலைக்சன் வைத்தெ கணிக்கிடுகிறார்கள். படம் வெளிவந்த மறுநாளே வெற்றிவிழா கொண்டாடுவது போல் சில படங்களுக்கு போலியாக ஒரு கலைக்சன் தொகையும் காட்டப்படுவதும் நடக்கிறது. சினிமாவில் நட்டம் யாருக்கு என பார்ப்பதற்கு முன் சினிமாவை பற்றி ஒரு பார்வை பார்க்கலாம்

மிக பெரிய பட்ஜெட் கொண்ட ஹாலிவுட் படங்களை கூட ஒரே நிறுவனம் எடுப்பதில்லை, நாலைந்து பேர் கூட்டு சேர்ந்து தான் எடுக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்கள் வட்டிக்கு கடன் வாங்கி தயாரிப்பாளரால் எடுக்கப்படுகிறது, அல்லது எடுக்கும் பொழுதே வேறு பெரிய நிறுவனத்துக்கு விலை பேசி அட்வான்ஸ் வாங்கி படத்தை எடுத்து முடிக்கப்படுகிறது

ஒரு சினிமாவுக்கு மிக மிக முக்கியம் திரைகதை. இயக்குனர் பாக்யராஜ் திரைகதை மன்னன் என பெயரெடுத்தவர், கதை என்பது எப்படியோ தப்பினான் என்பதாகவும், திரைகதை என்பது எப்படி தப்பினான்னு காட்டுவதாகும், அதுமட்டுமல்ல, ஒரு படத்திற்கு முழுமையாக திரைகதை எழுதி வைத்திருந்தால் மொத்த படத்தையும் ஒரே மாதத்தில் எடுத்து முடிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு நடிகர் முதல் காட்சியும், கடைசி காட்சியும் வருகிறார் என்றால் இரண்டு காட்சியையும் ஒரே நாளில் படம் பிடித்து ஒரு நாள் சம்பளத்தில் அந்த நடிகரின் வேலையை முடித்து விடலாம்

இவ்வாறு மிச்சம் பண்ணி கொடுக்கும் இயக்குனர்களை தான் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். நல்லகதையும் திரைகதையும் இருந்தால் காஸ்டிங் அதாவது பெரிய நடிகர்களை வைத்து அதிக சம்பளம் கொடுத்து எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இன்று சினிமா நட்டமடைய பெரிய காரணமே மொத்த படத்தின் செலவில் கணிசமான அளவு நடிகரின் சம்பளத்துக்கு போவது தான்



புதிய இயக்குனர்களின் படங்கள் எடுத்து முடித்தபின் விநியோகிஸ்தர்களுக்கு போட்டு காட்டப்படும், மாவட்டவாரியாக விலை பேசப்படும். படத்தின் தன்மை பொறுத்து விலை படியும், பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்களின் படங்கள் பூஜை போடும் போதே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் பண்ணிருவாங்க. அப்படி நட்டம் அடைந்தவர்கள் தான் ஏராளம்

விநியோகிஸ்தர்கள், தியேட்டர் பேசுவார்கள், பெரிய நடிகர் படம் என்றால் டிக்கெட் விலையில் 60% விநியோகிஸ்தர்களுக்கு 40% தியேட்டருக்கு, வளர்ந்து வரும் நடிகர் என்றால் 50%-50%. ஒன்னுத்துக்கும் ஆகாது என்றால் ஒருநாளைக்கு இவ்ளோ வாடகை என்ற கணக்கில் அவர்களுக்கு உரிமை அளிக்கப்படும். ஆக தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், தொலைகாட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை என விற்றதன் மூலம் லாபத்துடன் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள்

முன்பெல்லாம் ஒரு படம் ஒன்று அல்லது இரண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகும், இப்பெல்லாம் ஈரோடு மாதிரியான குட்டி நகரத்தில் கூட பத்து திரையரங்கில் ரிலீஸ் ஆகுது, அதனால் முடிந்த வரை லாபம் பார்க்க டிக்கெட் விலை அதிகம் விற்கப்படுகிறது, அல்லது மொத்தமாக ரசிகர்மன்றத்துக்கு கூடுதல் கட்டணத்துடன் விற்கப்படுகிறது.

இதில் யாருக்கு நட்டம்?
தியேட்டர் கலைக்சனில் பாதி கொடுத்தால் போதும், விநியோகிஸ்தரின் பிரதிநிதி ஒருவர் தியேட்டரில் டிக்கெட் நம்பர் குறிக்க இருப்பார், ஆக தியேட்டருக்கு நட்டம் இல்லை. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் பெற்றுவிடுவர், அவர்களுக்கும் நட்டமில்லை. தயாரிப்பாளர் விநியோகிஸ்தருக்கு லாபத்திற்கு விற்றுவிட்டார் அதனால் அவருக்கும் நட்டமில்லை,



படம் திரையரங்கில் நல்ல வசூலை பெறாவிட்டால் நட்டம் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகிஸ்தருக்கு தான், ஆனால் அவர்கள் தயாரிப்பாளரிடன் செல்லாமல் உங்களை நம்பி தான் அதிக விலை கொடுத்து வாங்கினோம் என்று நடிகர்களிடம் செல்கிறார்கள். சில சமயங்கள் தயாரிப்பாளரே விநியோகிஸ்தராக மாறுவார் அதாவது நேரடியாக ரீலிஸ் செய்வார், அப்படி செய்து ஊத்திகிட்டா அவருக்கு தான் நட்டம்

எனக்கு நினைவு தெரிந்து இதுவரை நான் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை, முதல் நாள் முதல் ஷோ பார்க்கனும்னு அவதிபட்டதில்லை. என்னை பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு, களைப்பில் இருந்தால் சின்ன டைவர்ஷன் அவ்ளோ தான், அதுக்காக அடிச்சிகிறது, என் ஆள் தான் பெருசுன்னு சண்டை போடுவதெல்லாம் சிறுகுழந்தைகளை விட கேவலாக நடக்கும் செயல்.



அவனவன் அவன் வேலைய பார்க்குறான், நாம நம்ம வேலைய பார்ப்போம்

!

Blog Widget by LinkWithin