புவியின் தோற்றம்!-1

இக்கட்டுரையில் வரும் அனைத்தும் அதிகப்பட்ட சாத்தியகூறுகள் அடிப்படையில் என் புரிதல்கள் மட்டுமே. இதுவே இறுதி முடிவல்ல.

எனது பரிணாமம் தொடர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரமுடியாமல் போயிற்று. மீண்டும் அதை தூசிதட்டும் முயற்சி இது,

பெருவெடிப்பு அதன் பின்னான நெபுலாவின் கூட்டமைப்பு இணைந்து சூரியனாக உருவெடுப்பது பற்றியெல்லாம் வேறு ஒரு கட்டுரையில் படிக்கலாம். இதில் பூமியை பற்றி மட்டுமே விவாதிக்கலாம்.

நாம் வாழும் இப்பூமியின் வயது தோராயமாக 450 கோடி ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர். அதன் பின் பூமி அதன் நிலையான தோற்றத்தை பெற கிண்டதட்ட 100 கோடி ஆண்டுகள் வரை காத்திருந்தது. இந்த 350 கோடி ஆண்டுகள் என்ற கணகெடுப்பு பூமியின் பாறைகளை கார்பன் டேடா கருவி மூலம் ஆராய்வதின் மூலமும். ஆற்று நீர் பூமியிலிருந்து உப்பை கரைத்து எடுத்து கொண்டு போய் கடலின் சேர்ப்பதன் மூலம் அதின் உப்பின் அளவை கொண்டும் கணக்கிடப்பட்டது.

450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி முழுவதும் ஒரு நெருப்பு பந்து அப்பொழுது முழுமையான கோளவடிவமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் சூரிய மண்டலத்தில் எல்லா கோள்களும் முழுமையடையவில்லை. தற்பொழுது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் சுற்றி வரும் அஸ்ட்ராய்டு பெல்ட் என அழைக்கப்படும் குறுங்கோள்கள் ஒரு பெரிய கோளாக உருவெடுக்க வேண்டியது, இணைய முடியாமல் சிறு சிறு கற்களாக சுற்றி வருகின்றது என்ற ஒரு கூற்றூ உண்டு.


என் புரிதலின் படி சூரிய மண்டலத்தின் பெரிய கோளான வியாழனின் துணை கோளாகவோ அல்லது செவ்வாய்க்கு அடுத்து மற்றொரு தனிக்கோளாகவோ தான் அது இருந்திருந்த வேண்டும். அதற்கு தற்போதைக்கு யனி என பெயர் வைத்து கொள்வோம். யனிக்கோளின் மீது வியாழனின் மற்றொரு துணைக்கோளோ அல்லது சூரியனை சுற்றிவரும் எதோ ஒரு வால்நட்சந்திரமோ பயங்கராக மோதியுள்ளது. அப்பொழுது சுக்குநூறாக உடைந்தது யனிக்கோளே தற்பொழுது அஸ்ட்ராய்டு பெல்டாக சுற்றி வருகிறது.இந்த விபத்தின் போது செவ்வாய் பூமிக்கும் அப்பால் சூரியனை சுற்றி வந்துக்கொண்டிருந்த வேண்டும் என்பது என் புரியல். இல்லையேல் பூமியின் மீது நடந்திருக்க வேண்டியது விபத்து செவ்வாய் கிரகத்தை தாக்கியிருக்கும். யனி மீது ஏற்பட்ட தாக்குதல் நேரடியாக முழுமையடையாமல் இருந்த பூமியை வந்து தாக்கியது. பெரும் விபந்து அது. அந்த விபத்து மட்டும் இல்லையெற்றால் பூமியில் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படவே சாத்தியமில்லை என்பது என் புரிதல்.

அந்த விபத்தின் மோது தான் பூமியின் ஒரு துண்டு உடைந்து நிலவாக உருவெடுத்துத்தது. இப்பொழுது பூமியில் இருக்கும் பசிபிக் கடலின் ஆழத்தில் நிலவை முழுதாக மறைக்கமுடியும் என்பது அதற்கான சாட்சி. மேலும் இந்த விபத்தின் மூலமே பூமி தன் அச்சில் இருத்து 23.5 டிகரி சாய்ந்தது. நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் பூமியில் பருவகாலங்கள் நான்கு விதமாக மாறி வர அது தான் காரணாம். பூமி ஒரே அச்சில் இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குளிர் காலமும், வெயில் காலமும் மாறி மாறி வந்திருக்கும்.


அந்த விபத்தின் போது பூமியில் இருந்து தாதுக்கள் பிய்த்து எரியப்பட்டன, பல ஆவியாகி தனிதனி மூலக்கூறுகளாக சுற்றின. எடை அதிகமான மூலகூறுகள் மீண்டும் பூமியை அடைந்தது. எடை குறைந்த மூலகூறுகள் பூமியை சுற்றி வந்தது. பூமியை சுற்றி அமைந்த வளி அல்லது பெரும் புகை மண்டலம் சூரிய ஓளி பூமியை அடையாமல் செய்தது. பூமி கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பித்தது.


அந்த காலக்கட்டத்தில் பூமியில் நீர் ஆதாரம் உருவானது. ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஆக்ஜிசன் மூலக்கூறும் சேரும் போது தான் நீர் உருவாகிறது என படித்திருப்போம். பூமியை புதிதாக உருவான வளிமண்டத்திலிருந்து நீர் உருவாகி பெரும்மழை பூமியை அடைந்தது. மழை, மழை, மழையை தவிர வேறொன்றூம் இல்லை என்ற நிலை உருவானது.


பூமியின் தற்போதைய தோற்றத்திற்கும் மேலும் பூமியின் மேல் தட்டுகள் இடம் மாறி பூகம்பம் ஏற்படவும் அந்த தொடர் மழை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? பூமியை தவிர பிற கோள்களை பாருங்கள். எவ்வளவு வட்டமாக அழகாக இருக்கின்றது. பூமியில் நீர் இல்லாமல் பூமியை கற்பனை செய்து பாருங்கள். கோள வடிவத்தில் இருக்குமா? ஒழுங்கன்று இருக்குமா?

தொடரும்!


டியர் டம்ப்ளர் பாய்ஸ்!

வன்னியர்கள் எப்படி தங்களை பேண்ட பரம்பரைன்னு சொல்லிகிறாங்களோ அதே போல் நீங்களும் என் முப்பாட்டன் முருகன்னு சொல்லிகளாம். ஆனா அதுக்கு வீரதமிழர் முண்ணனினு பேரு எதுக்கு? தமிழன் எல்லாருக்குமே முப்பாட்டன் முருகன் தான்னு ஏன் கதை விடனும்?

உங்களுக்கும் இந்தியாவில் எல்லாரும் ராமர் பிள்ளைகள்னு சொன்ன காவிக்கும் என்ன வித்தியாசம். ஒ அவுங்க காவி, நீங்க பச்சையா?

திராவிட கட்சிகள் முன்னாடி நாத்திகம் பேசிட்டு கொல்லைபக்கம் வழியா கோவிலுக்கு போனதா படம் போட்டு காட்டுறிங்க, தமிழக திராவிட கட்சிகளின் பகுத்தறிவு பல்லிளித்து பல ஆண்டுகள் ஆகின்றது. அவுங்க திருட்டுதனமா பண்றதை நீங்க ஓப்பனா பண்றிங்க. நீங்க உங்க முப்பாட்டனை வணக்க என்னாத்துக்கு திராவிட கட்சிகளை துணைத்து கூப்பிடுறீங்க. நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்கே தெரியவதால் தானே!

உளவியல் ரீதியாக மனிதர்களின் பலவீனம் கடவுள் நம்பிக்கை, அதை அறிவியல் ரீதியாக உடைத்தது பகுத்தறிவு, ஆனால் நீங்கள் மனிதர்களின்(தமிழர்களின்) பலவீனத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைக்கிறீர்கள். அதை விமர்சிக்க கூடாது என கோவம் வேற வருது.

முருகன் உங்க முப்பாட்டனாவே இருக்கட்டும். என்னாத்துக்கு அவனுக்கு மொட்டை போடனும். என்னாத்துக்கு காவடி தூக்கனும். வேல தூக்கனும். உங்களுக்கே கோமாளிதனமா தெரியல.

உங்களால் மக்கள் பிரச்சனை குறித்து பேசி களத்தில் அரசியல் செய்யமுடியாது என்பது அப்பட்டமாக தெரிகிறது, இன்று மக்களிடன் பிரச்சனை யார் எங்கள் முப்பாட்டன் என்பதா அல்லது அடிப்படை தேவைகளா? வேற எதோ கோவிலில் போடும் பணத்தை கொண்டுவந்து முருக்ன் கோவிலில் போட்டுட்டா தமிழகம் செழித்திடுமா?

நிஜமாகவே சந்தேகபட்டு தான் கேட்டுகிறேன். உங்களுக்கு இந்த கோமளிதனமான ஐடியாவெல்லாம் யார் கொடுக்குறா 


டெல்லி தேர்தல்!

2013 ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 28 தொகுதிகள் வென்றது. அதை விட நாலு தொகுதிகள் அதிகமாக பெற்று 32 தொகுதிகள் வென்றது பாஜக.

ஆனால் கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்னு என்று ஓடி ஒழிந்தது பாஜக செய்த முதல் தவறு. இப்போ வாங்குன அடிக்கு அச்சாரம் அதுதான்.

28 சீட்டுகள் மற்றும் காங்கிரஸீன் 8 சீட்டு ஆதரவோட தைரியமாக களம் இறங்கிட ஆம் ஆத்மி ஆரம்பத்தில் சில சிறுபிள்ளை தனமான போராட்டங்கள் செய்தது உணமை தான் ஆனால் அதுவே மக்களிடயே அவர்களை கொண்டு சென்றது. டெல்லியில் காவல்துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் விசயமே பலருக்கு அப்பொழுது தான் தெரியும்.

ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று ஜன்லோக்பால். இன்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கொள்கை என்றால் அது ஊழல் எதிர்ப்பு. கட்சியில் பெரும்பான்மை இல்லாத போது மசோதாக்களை நிறைவேற்றுவதில் உள்ள சிரமம் தெரியாத புது கட்சி தானே ஆம் ஆத்மி. விளைவு 49 நாட்களில் ராஜினமா செய்தார் முதல்வர்.

ஆனாலும் அந்த நேர்மை மக்களுக்கு பிடிந்திருந்ததே. இன்று 67 சீட்டுகள் பெற்று மாபெரும் கட்சியாக வளர்ந்து நின்றதுற்கு காரணமாவே அரவிந்த் கெஜ்வரிவாலின் தைரியமான முடிவுகள் தான் என்பேன்.

சாத்தியமில்லாத வாக்குறுதிகள் பற்றீ பாஜக பேசுவது மல்லாக்க படுத்துகொண்டு காறி துப்புவதுக்கு சமம். ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தர்றேன்னு ஆம் ஆத்மி சொல்லல. காலேஜ் கட்டி தர்றோம். மின் கட்டணத்தை குறைக்கிறோம். பயன்பாட்டுக்கு தண்ணீர் தர்றோம் என்று தான் சொன்னார்கள். இதுவே சாத்தியமில்லாத வாக்குறுதிகளாக பாஜக கருதினால் பாஜக மத்தியில் ஆளக்கூட தகுதி இல்லாத கட்சி என்பேன் நான்.

இளைஞர்களின் எழுச்சியே ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஏற்பட்ட மாற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு சமான்யம் நான்!

!

Blog Widget by LinkWithin