பங்குவணிகமும் கமாடிட்டியும்!

போன வருடம் நான், பாஸ் கார்த்திக் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், ஒரு நண்பர் அவரது நண்பரை அழைத்து வந்திருந்தார் ஒரு உதவிக்காக. சொல்லுங்க சார் என்றோம். அவர் சொல்ல ஆரம்பித்தார், சார் நான் வீ.ஆர்.எஸ் வாங்கி அதில் வந்த பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் பண்ண போனேன். அந்த வங்கி மேலாளர் அந்த வங்கி பங்குகள் 1000 த்தை என் தலையில் கட்டிவிட்டார்(ஆம் அப்படியே தான் சொன்னார்), அது என்னாச்சுன்னு பாருங்க ப்ளீஸ்.

என்ன விலைக்கு சார் வாங்குனிங்க?

அப்ப தான் வெளியிட்டாங்க, ஒரு பங்கு பத்து ரூபாய் வீதம் 1000 பங்குகள், மொத்தம் பத்தாயிரம் புடுங்கிட்டார்.

ஒரு நிமிசம் பார்த்து சொல்றோம் இருங்க, சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்.........

என்னாங்க ஆச்சு?

இன்னைக்கு அந்த பங்கின் விலை 495 ரூபாய் சார்.

நிஜமாலுமா?

நீங்களே பாருங்க சார்!

*

முழுக்க முழுக்க நடந்த உண்மை, அதை விற்று கொடுக்கவும் பாஸ் கார்த்திக் தான் உதவி செய்தார், ஆனால் இன்னைக்கு வித்திருந்தா இன்னும் அவர் சந்தோசப்பட்டிருப்பார். ஏனென்றால் இன்று அந்த பங்கின் விலை 762 ரூபாய். சென்ற வருடம் இதே நேரம் 495. அந்த நிறுவனம் bank of baroda.

பங்கு வணிகம் என்பதை முழுமையாக அறியாமல் சிலர் அதை சூதாட்டம் என்கின்றனர், பத்து பேர் சேர்ந்து ஆரம்பிக்கும் ஒரு நிறுவனத்தில் சில வருடங்கள் கழித்து ஒருவர் மட்டும் தனது பங்கை எப்படி விற்றுவிட்டு வெளியேற முடியுமோ அதே போல் தான் இதுவும், சிறு நிறுவனங்கள் பத்து பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன, பெரு நிறுவனங்கள் பல்லாயிரம் பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன. தொழில் பற்றிய சிறிய அறிவு மற்றும் தினம் செய்திதாள் வாசிப்பே உங்களை பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற வைக்கும்!


பங்கு வணிகத்தின் மூலமே உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன வாரன் பப்ஃபெட்


**************************

பங்குவர்த்தகத்தை விட அதிகமாக விமர்சிக்கப்படுவது விலைபொருட்கள்(கமாடிட்டி) சந்தை. டோண்டுவின் இந்த பதிவில் ரமணா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கேயே பதிலும் சொல்லி விடுகிறேன்.

உங்கள் பாட்டியிடம் போய் உங்கள் காலத்தில் பவுன்(சவரன்) என்ன விலை என்று கேட்டு பாருங்கள், 300 என்பார். உங்கள் அம்மாவிடம் இதே கேள்வியை கேளுங்கள் 3000 என்பார். அப்படியானால் நம் காலத்தில் பவுன் 30000 தானே இருக்க வேண்டும், ஆனால் இல்லையே. காலம் காலமாக விலையேற்றம் மாற்ற முடியாத ஒன்று.(புதிய தலைமுறை பத்திரிக்கைக்காக லக்கி என்னிடம் விலையேற்றம் பற்றி பேட்டி எடுத்த போது நான் சொன்ன பதில் இது, எல்லாரும் ஆமாம் மாபெரும் விலையேற்றம்னு அம்மணமா ஓடுறாங்க, நீங்க மட்டும் கோவணம் கட்டினா எப்படின்னு அந்த பேட்டியை வெளியிடவில்லை ) ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விலையேறியது போன்ற கூற்றுகள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான்.

தங்கம் ஆபரணமாக மட்டுமில்லாமல் முதலீட்டுபொருளாகவும் மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது, முன்பெல்லாம் ஒரு நாட்டின் தங்க இருப்பை வைத்தே அவர்கள் பணம் வெளியிட வேண்டும். இன்று அவ்வாறு இல்லை இதுவே பணவீக்கத்திற்கு முதல் காரணம். பங்கு வணிகத்தில் சிறு சறுக்கல் ஏற்படும் போது முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு பொருளாக தேர்ந்தெடுப்பது தங்கத்தை தான், காரணம் விலைபொருட்கள் என்றும் கைவிடாது என்ற நம்பிக்கை.

தங்கம் விலையை நிர்ணயம் செய்ய பல கூறுகள் இருக்கின்றன, உலக பொருளாதாரநிலை, சப்ளை & டிமாண்ட், நாட்டின் பெரு வங்கிகள் இருப்பு பணத்தை தங்கமாக மாற்றி சேமித்து வைத்தல்(டன் கணக்கில்) மற்றும் போர் பதட்டம் போன்றவை மொத்தமாகவே விலைபொருட்களின் விலையை மாற்றும், ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விவசாய பொருட்கள் விலையேறுகிறது என்றால் ஆன்லைனில் இல்லாத பொருட்கள் ஏன் விலையேற வேண்டும்? ஒரு சிலர் சொல்வதை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள், ஆற்றில் இறங்காமல் நீச்சல் அடிக்க முடியாது, வர்த்தகத்தில் இறங்காமல் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

கமாடிடியில் 8 கிராம் தங்கம் வாங்கி உங்கள் வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.


வாரன் பற்றிய புத்தகம் கிழக்கு வெளியீட்டில் கிடைக்கிறது!


*************

இது தான் நான் வேலை செய்யும் நிறுவனம். விதிகளுக்கு உட்பட்டு செபியில் ரிஜிஸ்டர் செய்யபட்டது. நமது நிறுவனத்தில், ஷேர், கமாடிட்டி, கரன்சி ட்ரேடிங்கை ஒரே ப்ளாட்ஃபாரத்தில்(trading portal) செய்யலாம்.  இந்தியாவின் முன்னணி வங்கிகள் 17 ல் கணக்கு வைத்திருக்கிறார்கள், நீங்கள் அப்ளை செய்த ஒரே நாளில் உங்களது லாபப்பணம் உங்களது வங்கிக்கே ஆன்லைன் மூலம் ட்ரான்ஃபர் ஆகிவிடும் . இந்தியாவிலேயே மிக மிகக்குறைந்த ப்ரோக்ரேஜ்(கமிசன் தொகை)(இது என் பொறுப்பு).

தமிழகமெங்கும் சப்-ப்ரோக்கர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஷேர், கமாடிட்டி, கரன்சி மூன்றுக்குமாக சேர்த்து மிகக்குறைந்த திருப்பி கொடுக்கப்படும் முன்பணம்(refundable deposite). சிறந்த நிபுணர்களை கொண்டு  உங்கள் ஊரில் ஃப்ரீ செமினார் மற்றும் டெக்னிக்கல் வகுப்புகளை நாங்களே இலவசமாக எடுக்கிறோம் . சந்தை நிலவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு தினம் அனுப்பப்படும்.

முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்

அருண் - 9994500540


**********

இந்திய பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு பங்கு வணிகமே நிர்ணயம் செய்கிறது, முதலீடு செய்வோம், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்போம்!

!

Blog Widget by LinkWithin