பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து சொல்றதும் ஒரு கலைன்னு எனக்கு நிருபிச்ச மனிதர்!
அவருக்கு நான் வாழ்த்து சொல்லலைன்னா நான் மனுசனே இல்ல!

தினமும் இரண்டு மணி நேரம் இறகுபந்தை வறுத்தெடுப்பதால், மிலிட்டரி உடம்புக்கு சொந்தகாரர்,
இவருக்கு வயசு இன்ன ஆவுதுன்னு அவரு சொன்னா தான் நமக்கே தெரியும்!

காதலியை விட புத்தகத்தை நான்கு மடங்கு காதலிப்பவர், மற்றவர்களுக்கும் காதலிக்க சொல்லி கொடுப்பவர், இலக்கியத்தில் இசங்கள் பார்க்காமல் அனைத்து தரப்பு புத்தகங்களும் இவருக்கு அத்துபடி, மேற்படி விசயமாக பேசவதென்றால் சோறு தண்ணி வேண்டாம் இவருக்கு.

பதிவர்களை உபசரிப்பதில் தற்சமயம் இவருக்கும், அப்துல்லாவுக்கும் தான் போட்டியாம்,

சமூக சிந்தனைகளை மூச்சு விடாமல் பேசக்கூடியவர்! எதிரில் இருப்பவருக்கு தக்க சமயம் வாய்ப்பு கொடுபவர், அளவில்லா நட்பைவிட அன்பான நட்புகளை சம்பாரித்து வைத்திருப்பவர்!

சக பதிவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மரியாதையே அதற்கு சான்று!இவ்வளவு பெருமைகளுக்கும் உரிய மனிதர் வேறு யாருமல்ல!

பின்னூட்ட புயல்,
கருத்து கனல்,

மதம் பிடித்த யானைகளுக்கு அல்வா கொடுக்கும் இவர்,
வலையுலகில் பலருடய கடிவாளமாகவும் இருக்க கூடியவர்

the one and only

கும்க்கி(காந்த்) (காந்தம் மாதிரி இருக்குறதால சும்மா சேர்த்துகிறது)

அண்ணாருக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்த வயதில்லையென்றாலும் ஆசிர்வாதம் வாங்குவது போல் செலவுக்கு துட்டு ரெடி பண்ணிட்டு எதாவது கடைக்கு போயிருக்கலாம், முடியலையே!

எல்லோரும் வந்து கோரஸா வாழ்த்திட்டு போங்க மக்களே!

உன்னநான் கட்டிக்கிட்டு!...

உன்னநான் கட்டிக்கிட்டு
என்னாத்த சுகங்கண்டேன்

நகையுண்டா நட்டுண்டா
காதலயும் கழுத்துலயும்

பேருண்டா பெருமையுண்டா
ஊருகுல்ல உலகத்தில

ஓடாத்தேஞ்சு போனேன் -அழுக்கு
துணி துவைச்சு போட்டே

மெழுகா உருகிப்போனேன் -கறியும்
சோறும் ஆக்கி போட்டே

ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
சிறுக்கின்னு வையுறியே

ஆயிரந்தான் வஞ்சாலும்
உன்போல ஆள் வருமா

ஊருள்ளே நடக்கையில
உனக்காரும் தோள் வருமா

சோலிக்கு போனேயே
தூக்கிசட்டி தூக்கிகிட்டு

ராவும் வந்துருச்சே
கீழ்வானம் இருண்டுருச்சே

இடி சத்தம் மேக்கால
தூறல் ஒண்ணு மார்மேலே

மீன் கொழம்பும் ஆறுது
என் உடம்பும் காயுது

கண்ண கட்டும் முன்னே
ஓடி வாயேன் என் ராசா

குவியல்!..(20.05.09)

முதலில் மகிழ்ச்சியான செய்தியிலிருந்து ஆரம்பிப்போம்!
நமது வலைப்பதிவர்கள் கிரீடத்தில் இன்னோரு வைரமாக அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனின் சிறுகதை இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது! சின்னபையன் மாதிரி ரேஸ் ஓட்டினாலும் டுவிஸ்ட் கொடுப்பதில் கிரைம் எழுத்தாளர்களுக்கு நிகராக இருக்கிறார்!

அடுத்து யாருங்கோ!

****************************************

அப்படியே எனக்கு பாலோயர்ஸ் 200 தாண்டி போனதுக்கு எனக்கு நானே வாழ்த்திக்கிறேன்!

நமக்கு நாமே திட்டம் தலைவர் கலைஞர் கொண்டு வந்ததாக்கும்!

****************************************

பிரபல பதிவரான தோழி ரம்யாவுக்கு நேற்று பிறந்த நாள்!
முதல் ஆளாக வாழ்த்த வேண்டிய நானே கோட்டைவிட்டேன்! அதனால் மறுநாள் முதல் ஆளாக நான் வாழ்த்தி கொள்கிறேன்!
பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு பேரும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்!

ஜமால் எனக்கும் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்

*******************************************

சமீபத்தில்(ரெண்டு நாளைக்கு முன்னாடி) சில புது பதிவர்களின் ப்ளாக்குகள் காணாமல் போனதாக அறிந்தேன். Ntamil என்ற திரட்டியின் voting code சேர்த்ததால் வந்த வினை என்று சில பதிவர்கள் சொன்னார்கள்! தயவுசெய்து நண்பர்கள் வாரம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை சேமித்து வைத்து கொள்ளவும். அதன் முறை

dashboard -> layout -> Edit Html -> Download Full Template

இதை செய்து வைத்து கொண்டால் பின்னூட்டங்களுடன் உங்களது பழைய பதிவுகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்!

தற்சமயம் ப்ளாக் தொலைத்த நண்பர்கள் எனக்கு பாலோயராக இருப்பீர்களேயானால் நிச்சயமாக நானும் உங்களுக்கு பாலோயராக இருப்பேன்! உங்களது பழைய பதிவுகள் எனது ரீடரில் சேமிக்கப்படுள்ளன! எனக்கு மெயில் அனுப்பினால் அதை உங்களுக்கு அனுப்புகிறேன்! உங்களது புது ப்ளாக்கில் ஒவ்வொன்றாக போட்டு கொள்ளவும்!

***********************************

சென்னையில் வசிக்கும் வலைப்பதிவர் ஒருவருக்கு, கேரள பிரபல மந்திரவாதியை ஸாரி எழுத்தாளரை பற்றி எதாவது சொன்னால் மூக்கு மேல கோபம் வருகிறதாம்! மற்றவர்களை விமர்சிக்கும் காப்பிரைட்ஸ் இவர்கள் இருவருக்கு மட்டும் தான் உள்ளதென்றால் அதை ஒரு முறை அவர்களது தளத்தில் வெளியிட்டால் மற்றவர்கள் அமுக்கி கொண்டு இருப்பார்கள்!
மேலும் விசாரிக்கையில் இம்மாதிரி கோபப்பட காரணம் சென்னையில் அடிக்கும் அக்னிவெயில் தான் என்று தெரிய வந்திருக்கிறது. சென்னை வாழ் நண்பர்கள் யாராவது ஒரு பார் ஐஸ் வாங்கி அவர் சீட்டுக்கு(சீட்டுன்னா பைக் சீட்டு, எத சொன்னாலும் தப்பா அர்த்தம் பண்ணக்கூடாது) அடியில் வைத்தால் கொஞ்சம் சூடு தனிய வாய்ப்புண்டு!

***********************************

வரும் ஞாயிறு 24.05.09 அன்று மதுரையில் ஒரு வலைப்பதிவர்கள் கூட்டம் நடத்தலாம் என்று நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்! புதிய ப்ளாக்கர்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும், பழைய ப்ளாக்கர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுக்கவும் கண்டிப்பாக வர வேண்டுமென அன்பு கட்டளையிடப்படுகிறது!

தொடர்புக்கு
கார்த்திகைப்பாண்டியன் - 9841432763
தருமி -9952116112
அப்புறம் நானு -9994500540

***********************************

கவிதை எனக்கு சொந்தமா எழுத தெரியாது! அடுத்தவங்க கவிதையும் படிச்சா புரிய மாட்டிங்குது!
அதனால நான் இந்த விளையாட்டுக்கு வரல!

************************************

ஓர் எதிர்வினை!..

டியர் சார்!

சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் "குருதிகனல்" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும்!, மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க

இந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான்! உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன்! என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்

கம்மாகரை கண்ணன்
செவ்வாய்கிரகம்

**************************************

டியர் கண்ணன்

உங்களது கடிதம் பார்த்து சிரிப்பு தான் வந்தது! பாபாபுத்திரன் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை! குருதிகனல் படத்தை பொறுத்தவ்ரை தீவிரவாதம் தேவையற்றது என்பது தான் எனது முந்தைய கருத்தாக இருந்தது. பாபாபுத்திரன் சொன்ன பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன், அது அதிகாரமையத்திற்கு எதிரான விளிம்புநிலை மனிதர்களின் போராட்டம் என்று!
பதிமூனரை தடவை பார்த்தும் எனக்கு தெரியாதது பாபாபுத்திரன் சொல்லி தான் தெரிந்தது!
அந்த பதிமூனரை தடவையும் கொஞ்சம் ”தெளிவாக” பார்த்திருக்க வேண்டுமென இப்போது உணர்கிறேன்!

என்னை பத்திரமாக இருக்க சொல்லியிருக்கிறீர்கள்! உங்கள் அன்புக்கு நன்றி, மிஸ்டர் கம்மாகரை கண்ணன், இந்த உலகில் நாம் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் நான் சிலபேரை விமர்சிப்பதில்லை. அவர்களை கீழே வகைப்படுத்துகிறேன்

1.சரக்கு வாங்கி தருபவர்.

2.ஃபாரின் சரக்கு வாங்கி தருபவர்.

3.செலவுக்கு பணம் அனுப்புபவர்.

4.அக்கவுண்டில் பணம் போடுபவர்

5.எப்போ கேட்டாலும் பணம் தருபவர்.

ஒருமுறை இவர்களையே விமர்சித்து, அவர்கள் சட்டையை பிடித்து பணம் கேட்டது தனிக்கதை. அதை இன்னோரு நாள் சொல்கிறேன்.

இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறு விசயம். போன வாரம் ஜட்டி வாங்க காசு வைத்திருந்ததேன். சனிக்கிழமை ஒயின்ஷாப் முழுநாள் அடைப்பு என்பதால் ப்லாக்கில். வாங்கி பணம் செலவாகிவிட்டது! யாராவது அன்பர்கள் பணம் அனுப்பினால் உங்கள் புண்ணியத்தில் புது ஜட்டி போட்டு திரிவேன்.

அக்கவுண்ட் விபரம்

Name:வாலழகன்

Bank:IC UC VC Bank. டண்டணக்காபட்டி கிளை

A/C No:123456789
(இந்த ஒரு நம்பர் தான் இருக்கான்னு கேக்காத மூதேவி, அதான் ஒம்போது நம்பர் இருக்குல்ல)

எங்கள் கூட்டத்தில் இணைய உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அதை சொன்ன சிலேடையையும் ரசிக்கிறேன்! நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல! IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் என் கூட்டத்தில் சேருமாசையை இத்துடன் விடுங்கள்!

சனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி ”கொல்லுங்கள்”


10.15 PM
19.05.09
சிலுக்குவரமாட்டா பட்டி

இயக்குனர் கிம்-கி-டுக் என் பார்வையில்!..

Kim-ki-duk இதுவரை 16 படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அதில் அவர் இயக்கியது 15, அதில் எடிட்டராக பணிபுரிந்தது 6, சொந்தமாக தயாரித்தது 5, சிறு வேடங்களில் நடித்தது 2, இவையில்லாமல் கலை போன்ற துறைகளிலும் இவரது பங்களிப்பு இருக்கும்! அந்த அளவுக்கு சினிமாவை காதலிப்பவர். உணர்வுபூர்வமான சினிமாக்களில் மொத்த உலகத்தையும் கவர்ந்தவர்.
இவரை பற்றி, இவரது படங்களே சொல்லும்.

***************************

பயணங்களின் போது உடன் பயணம் செய்யும் முன்பின் பார்த்திராத ஒருவரை பார்த்து உங்களுக்கு காதல் தோன்றியிருக்கிறதா?.(இனக்கவர்ச்சி தான் காதலில் முதல்ப்படி). உரையாடல் இல்லாத அந்த சூழ்நிலையிலும் பார்வையிலேயே உணர்வின் ஆழம் வரை சென்றதுண்டா! அந்த நபர் நீங்கள் இறங்கும் போது உங்களுடனே வந்துவிட்டால்....

இவைகளெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லாதீர்கள்,
உங்களுக்கு சம்பவிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
அம்மாதிரியான ஒருப்படம் தான் 3IRON. இந்த இயக்குனரின் நான் பார்த்த முதல் படம்.
இந்த படத்தில் நாயகன் செய்யும் சேட்டைகளை தான் லாடம் என்ற தமிழ் படத்தில் நாயகி செய்கிறாளாம்!. இயக்குனரை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரங்கள் பேச வேண்டிய அவசியமில்லை என்பது அவரது கருத்து! அதற்காக அவர்கள் ஊமைகள் என்று நினைக்க வேண்டாம். இறுதியில் சில அமானுஷ்ய தன்மைகளுடன் முடித்திருந்தாலும், முடிவில் வரும் டிஸ்கி அவரது கற்பனை திறனை நமக்கு காட்டுகிறது.
அந்த டிஸ்கி:
நீங்கள் வாழ்வது நிஜமா, கற்பனையா என்று அறுதியிட்டு கூற இயலாது!நான் நிஜத்தில் மட்டுமே தான் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள் மூளை சரியாக வேலை செய்வதில்லை என்பது என் கணிப்பு!


**********************************

கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான் the Bow.

ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!ஆன்மா விரும்பியதை அடையாமல் விடாது என்பது போல் அவரது க்ளைமாக்ஸ் காட்சி இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு, இருப்பினும் உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாற்றமாக நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம்.

இப்படத்திலும் அந்த பெண் பேசுவதை காட்ட மாட்டார்!

********************************

பார்த்த முகங்களையே பார்ப்பதற்காக என்றாவது சலிப்படைந்திருக்கிறீர்களா?
ஒரே இடம், ஒரே வேலை, ஒரே மனிதர்கள் என சலித்து மாற்றம் தேடி உங்கள் மனம் ஏங்கியதுண்டா, ஒருவேளை இல்லையென்றால் உங்களுக்கும் இயந்திரத்துக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்காதலன் ஒருவேளை நம்மிடம் சலிப்படைந்து விட்டானோ! அவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ, என் முகம் அவனுக்கு எரிச்சலை தருகிறதோ என்று தன்னளவில் மன உளைச்சலால் தனது முகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி கொள்கிறாள் நாயகி, சலிப்படைவது காலம் சம்பந்தப்பட்டதால் எனவோ இந்த படத்திற்கு the Time என பெயரிட்டு இருக்கிறார்!

முகம் மாற்றி கொண்ட காதலி, காதலன் இன்னும் பழைய காதலியை தான் நினைத்து கொண்டிருக்கிறான் என அறிகிறாள், சுயத்தை இழந்தவளாய் தன் மீதே கோபம் கொள்கிறாள்.
அவசரப்பட்டுவிட்டோம் என்பதை விட இந்த முகத்துக்கு என்ன குறைச்சல் என்னும் ஏக்கமே அதிகமாகிறது. தான் தான் அவனுடய பழைய காதலி என சொல்லிவிடுகிறாள். கோபமடைந்த காதலன் தானும் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான். மீண்டும் அவனை எங்கேயும் காண முடியாதவளாக அவள் மாறுவதே இப்படத்தின் கதை!

இப்படத்தில் அனைவரும் பேசி கொண்டாலும், முகம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காதலன் அமானுஷ்ய தன்மையுடன் இவளையே கண்காணித்து கொண்டிருப்பது அமானுஷ்யத்தின் மேல் இவருக்கு பற்றை காட்டுகிறது.

*******************************

the Isle என்ற படம் மடிக்கணிணியில் பத்து நாளாக தூக்கி கொண்டிருக்கிறது! இனிமேல் தான் பார்க்கவேண்டும்!


நான் ஏற்கனவே சொன்னது போல் இதில் இரண்டாவது இறுதிகாட்சி தவிர மற்ற படங்கள் மனித உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாக பார்க்கிறேனே தவிர, சாத்தியமில்லை என்ற வார்த்தையை இங்கே நிராகரிக்கிறேன்! வெகு அழகாக மெளனத்திலேயே உணர்வுகளை புரியவைப்பதில் வல்லவர் இந்த இயக்குனர்! உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் மற்ற படங்களையும் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்

மீண்டும் ஒரு முறை!!....

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.
சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.

எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனையும் தாண்டி உள்ளே செல்லவேண்டும் அவன் உதைக்கும் பந்து. பெனால்டி ஷாட்டில் அவனது திறமை அறிந்தே மொத்த அணியினரும் அவனை தேர்வு செய்திருந்தனர். அந்த கோலை போடவில்லை என்றால் அந்த தகுதி சுற்றிலேயே அந்த அணி வெளியேற வேண்டும்.

நொடிப்பொழுதில் சில கணக்குகள் போட்டான் அவன். பொதுவாக மனிதர்கள் வலது பக்கத்தில் உறுதியானவர்கள். கீப்பரின் இடது பக்கத்தை பயன்படுத்தி கொண்டால் இந்த கோலை போட்டுவிடலாம். இருப்பினும் அவனை திசை திருப்ப அந்த வலது பக்கத்தில் அடிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். அவன் அறிந்த பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.

கோல் கீப்பர் பாலை தடுக்க அவனது வலது பக்கத்தில் பறந்தான்.

பந்து அவனுக்கு போக்கு காட்டி விட்டு இடது பக்கத்தில் பறந்தது.

அது கண்டிப்பாக கோல் தான் என்று எதிர்பார்த்து அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர்.

பந்து பறந்து சென்று இடது பக்க கோல் போஸ்டில் அடித்தது

பந்து உள்ளே செல்லாமல் வெளியே பாய்ந்தது.

எல்லோரும் அவனை பூச்சியை பார்ப்பது போல் பார்த்து சென்றனர்.
அவனால் அவமானத்தில் அங்கே நிற்க முடியவில்லை.
எந்நேரமும் கண்ணில் அணை ஒடிந்து வெள்ளம் பெருக்கேடலாம் என்பதை உணர்ந்தான்.

தனி அறையில் வாய் விட்டே கதறினான்.

கடவுளே உன்னை எவ்வளவு நம்பினேன். என்னை கை விட்டு விட்டாயே.

உணர்ச்சி பெருக்கில் அருகில் இருந்த கத்தியை எடுத்து கை வெட்டி கொள்ள போனான்.

தீடிரென்று அந்த குரல்

"மகனே"

யார் அது?

நான் தான் கடவுள்!

எதற்காக வந்தீர்கள், நான் சாவதை பார்ப்பதற்கா!

இல்லை, இன்னும் வாழ்வு உண்டு என்று சொல்வதற்காக!

இனிமேல் என்ன வாழ்க்கை, எல்லாம் தொலைந்து விட்டதே!

அப்படி நினைக்காதே, வேண்டியதை கேள்!

மீண்டும் நான் அங்கே செல்ல வேண்டும்!

எங்கே?

அந்த கோலை நான் மறுபடியும் போட வேண்டும்!.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

என்ன?

ஏற்கனவே நீ அந்த முயற்சியை செய்திருக்கிறாய் எனற ஞாபகம் உனக்கு இருக்காது!

பரவாயில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும்!

சரி உன் ஆசை படியே நடக்கும்!


இப்போது மீண்டும் நீங்கள் பதிவின் முதல் பத்திக்கு செல்லலாம்

*************************************

டிஸ்கி: சென்ற வருட அக்டோபர் மாதம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்தபோது எழுதியது!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

வலையுலக மார்க்கண்டேயன்!

அண்ணன் பரிசல்காரனுக்கு இன்று பிறந்த நாள்!அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!இப்பெல்லாம் தம்பிகளும் வாழ்த்துவது தான் லேட்டஸ் ட்ரெண்ட்

குவியல்!....(07.05.09)

நேற்று நண்பனின் திருமணத்திற்காக ஆழயார் சென்றிருந்தேன்! மங்கி ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்! மலை பிரதேசம் என்பதால் வெயில் அவ்வளவாக இல்லை. குடிக்க தென்னங்கள்ளு கிடைக்கிறது! தேர்தல் களை கட்டவில்லை! மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்!

*********************************

நண்பர் அதிஷாவின் ”கனாகண்டேன்” என்ற ஒருபக்க கதை, நண்பர் நர்சிம்மின் “இன்னொமொரு காதல் கதை” என்ற சிறுகதை (சற்றே பெருசு) இந்த வார ஆனந்தவிகடனில் வந்துருக்கு. நண்பர்கள் மறக்காமல் வாங்கி படித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்

**********************************

நண்பர் விக்னேஷ்வரன் என்னையும் மனுசனா மதிச்சி 25 கேள்விகளை அனுப்பி அதக்கு பதில் வாங்கி அதை ஒரு பதிவா போட்டிருக்கார். ”சுண்டக்கஞ்சி வித் வால்பையன்” என்ற தலைப்பில், நண்பர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!

***********************************

கோடை வெயில் கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது!
மதிய நேரம் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. ஆப்ஃபாயில் ஆகி விடுவோம் என்று!
நண்பர்கள் வெயில் நேரங்களில் உப்பு கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து கொள்வது நல்லது!
நம் உடலில் இருந்து வியர்வையுடன் சேர்ந்து வெளியேறும் உப்புக்கு அது ஈடு கொடுக்கும்! இல்லையென்றால் லோ பிரசர் வர வாய்ப்புண்டு!

*************************************

நண்பர் அப்த்துல்லா அன்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இனிமையான குரல் கொண்டவர் என்பது அவரை பாட சொல்லி கேட்டால் தான் தெரியும். அவர் ”சொல்ல சொல்ல இனிக்குதே” என்ற படத்தில் நமக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்! நண்பர் குசும்பனின் வலைபூவிற்கு சென்றால் பாடலை முழுதாக கேட்கலாம்

**************************************

அனுஜன்யாவின் இந்த கவிதைக்கு எழுதிய எதிர்கவுஜ தான் இன்னைக்கு உங்களுக்கு தண்டனை!

ஏறவில்லை என்றும்
போதை ஏற வாய்ப்புமில்லை என்றும்
சால்னா கடையில்
முறுக்கு கொரித்தபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.

FROM HELL!!!! சினிமா பார்வை!

நான் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதில்லைன்னு நண்பர்களுக்கு தெரியும்!
உலக சினிமாக்கள் டீ.வீ.டீ வாயிலாக, ஆனால் உலக சினிமாக்களை முழுமையாக புரிந்து பதிவிட அதை மூன்று முறையாவது பார்க்க வேண்டும். அதனால் அந்த பக்கம் ஒதுங்குவதில்லை!, மற்றபடி இரவு ஒரு மணிக்கு மேலே ஸ்டார் மூவீஸில் போடும் திரைப்படங்கள் விளம்பரமேயில்லாமல் வரும், அதனால் அதை விரும்பி பார்ப்பேன்! அதில் பார்த்த படம் தான் இது!

மேலும் அதிகார மையத்தை சாடுவது போல் வரும் படங்கள் நல்ல ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறி என்பது என் அவதானிப்பு! அவ்வகையில் அமெரிக்க ஆவணப்படமான 9/11 குறிப்பிடதக்கது! இரட்டை கோபுர தாக்குதலின் போது அதிபர் புஷ் ஒரு நர்சரியில் குழந்தைகளுடன் ரைம்ஸ் பாடி கொண்டிருந்தார் என அந்த ஆவணப்படம் நேரத்துடன் விளக்கியது!. அதே போல் இந்தப்படம் இங்கிலாந்து அரசவையின் அதிகாரத்தையும் அதனுடய அடிவருடிகள் செய்யும் அட்டூழியங்களையும் விவரித்திருக்கிறது!

இந்த படத்தை நான் விரும்பி பார்க்க மற்றொரு காரணம் நடிகர் ”ஜானி தெப்”.
”பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படம் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட இவரை முதன் முதலாக நான் அறிந்தது, ”எட்வர்டு சிசர் ஹேண்ட்ஸ்” படம் மூலமாக, 1990-ல் வெளிவந்த இந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது!முன்னோட்டங்கள் போதும் படத்துக்கு செல்வோம்!
**************************************

ஆயிரத்தி எட்நூத்தி சொச்சத்தில் நடப்பது போன்ற கதை!
நகரத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொலையை விசாரிக்கும் பணி இன்ஸ்பெக்டருக்கு(ஜானி தெப்) வழங்கப்படுகிறது. விசாரனையில் இறங்கும் போதே மற்றொரு கொலை, அதே போல் பெண் இருவருக்கும் உள்ள ஒற்றுமை ஒருவருமே தெருவோரத்தில் விபச்சார தொழில் செய்பவர்கள், இரண்டு பேருமே கழத்தறுபட்டு, வயிற்றை கிழித்து உடல் பாகம் எதோ ஒன்று எடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்!

விசாரனையில் அவர்கள் 6 பேர் குழுக்கலாக இருந்தார்கள் என தெரியவருகிறது. மீதி இருந்த நான்கு பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஒரு பெணிடம்(மேரி) பேசி விசாரணைக்கு ஒத்துழைக்க வைக்கிறார் ஜானி. விசாரணையின் போது அவர்கள் ஏழு பேர் சேர்ந்த குழு என்றும் ஒருவள் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவள் ஒரு ஓவியனுக்கு மாடலாக சென்ற பொழுது அவனுக்கு பிடித்து போய் மணம் செய்து கொண்டதாகவும் அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது எனவும் சொல்கிறாள். அவளது நிலைக்கு காரணம் மர்மமாகவே இருக்கிறது.மீதி இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் வரிசையாக கொல்லப்படுகிறார்கள் அதே போல். இந்த கொலையை செய்தது கண்டிப்பாக ஒரு அறுவை சிகிச்சை தெரிந்த ஒரு மருத்துவராக தான் இருக்கும் என சந்தேகப்படும் இன்ஸ்பெக்டர் மருத்துவ அகடாமிக்கு சென்று விசாரிக்கிறார்.
அனைவரும் ஒத்துழைக்காத பொழுது ஒரு வயதானவர் அழைத்து செல்கிறார். தான் ஒரு ஒரு அரசாங்க மருத்துவராக இருந்ததாகவும் தற்பொழுது ராஜகுடும்பத்துக்கு மருத்துவ ஆலோசகராக இருப்பதாகவும் சொல்கிறார்!. ஜானியின் சந்தேகங்களுக்கு பதிலளித்த அவர், இந்த கொலைகளை ஒரு மருத்துவர் தான் செய்திருக்க முடியும் என சொல்கிறார்!

ஜானி மேரியை ஒரு ஓவிய கண்காட்சிக்கு அழைத்து செல்கிறார், அங்கிருந்த ஒரு படத்தை பார்த்து ஆச்சர்யத்துடன் நிற்கிறாள் மேரி. படத்தின் கீழே இளவரசர் என பெயரிடப்பட்டுள்ளது, அவர் தான் தனது தோழியை மணம் முடித்தவர் எனவும், அவள் மனநல மருத்துவமனைக்கு வரும் வரை இவருடன் தான் குடும்பம் நடத்தியதாகவும் சொல்கிறாள்! ராஜகுடும்ப மருத்துவ ஆலோசகரிடம் விசாரிக்கையில் அந்த இளவரசரும் தற்பொழுது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிகிறார்!

ஆக இந்த கொலைகளுக்கெல்லாம் மூலக்காரணம் அந்த திருமணம் தான் என அறிகிறார் ஜானி!
இளவரசருக்கு திருமணம் ஆனது அந்த ஆறு பேருக்கு தான் தெரியும், அவர்களை கொன்று விட்டால் இளவரசரின் அந்த வாரிசு செல்லாது! என அரசகுடும்பமே திட்டம் போட்டு இந்த கொலைகளை செய்கிறது! அவர்களுக்காக இந்த கொலைகளை செய்வது கண்டிப்பாக ஒரு மருத்துவர்! எஞ்சி இருப்பது மேரியும் அவளது தோழியும், தோழியும் கொல்லப்பட மேரியை காப்பாற்றி ராஜகுடும்ப மருத்தவ ஆலோசகர் தான் குற்றவாளி என நிறுப்பிக்கிறார் ஜானி!

விறுவிறுப்பாக செல்லும் இந்த கதையில் பல திருப்புமுனைகள் திரைக்கதையில் சொருகப்பட்டிருக்கும், இடையில் ஒரு போலிஸ் அதிகாரி கொலைகளுக்கு காரணம் ஒரு யூதர் என புரளியை கிளப்பிவிட பிரச்சனை பெரிதாகும், ஜானி மற்ற அதிகாரிகளால் தாக்கப்படுவார்.
இவைகலெல்லாம் நமக்கு பலபேர் மேல் சந்தேகத்தை உருவாக்கும்! இறுதி அரைமணி நேரப்படம் நகர்வதே தெரியாது!

!

Blog Widget by LinkWithin