கவிதை உருவான கதை.....

உன்மத்த நிலை தவிர்த்து
மற்ற மனநிலைகளில்
சுருக்குப்போடும் சொல்லாடல்கள்
நீண்டு தொங்கும் வரிகள்
உடைய கவிதைகள்
படிக்கப்படுவதில்லை
படித்தாலும் ரசிக்கப்படுவதில்லை
இதை தவிர்க்கவே
நான் கவிதை எழுதுகிறேன்........

****

இயேசுவின் மறுபிரவேசம்
உண்மையென்றால்
எனக்கிருக்கும் சந்தேகம்
ஒன்றை தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்ன சந்தேகமா
வேறென்ன,
வலது கன்னத்தில் அறைந்து
இடது கன்னத்தை காட்டுகிறாரா
என பார்ப்பது தான்!

****

என் பூவில் இதழில்லை
மணமுமில்லை
நான் கேட்டு
எனக்கு முள் வரவில்லை
நானும் உங்களை குத்தவில்லை
நீங்களே தொட்டீர்கள்
உங்கள் ரத்தம் கண்டு
என்னை திட்டுகிறீர்கள்
நான் இன்னும்
பூவாகத்தான் இருக்கிறேன்
என்னை விட்டுவிடுங்கள்
நானாகவே ஒருநாள் மடிவேன்.



1 வாங்கிகட்டி கொண்டது:

Chandru said...

///இதை தவிர்க்கவே
நான் கவிதை எழுதுகிறேன்///
மொத்தத்தில் ஏதோ பொருளடர்த்தி அதிகமாக இருப்பதால் கவிதை பிடிக்கிறது
நான் இதற்காக மெனக்கெட்டு எவ்வளவு எழுதியிருக்கேன் இங்கே. http://chandroosblog.blogspot.in/2010/10/blog-post_25.html
///வலது கன்னத்தில் அறைந்து
இடது கன்னத்தை காட்டுகிறாரா
என பார்ப்பது தான்! ///
இன்று வலிமை இல்லாதவனின் நிலை இதுதானே அவனிடமே ஏசுவைக் காணலாம்.
///நான் இன்னும்
பூவாகத்தான் இருக்கிறேன்
என்னை விட்டுவிடுங்கள்
நானாகவே ஒருநாள் மடிவேன்.///
அப்படி விடமுடியாது மடிவதற்கு முன் மகரந்தச் சேர்க்கை நடை பெற வேண்டுமே

!

Blog Widget by LinkWithin