பெர்முடாவும் காலத்தின் குறுக்கு நெசவும்!

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!


வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது...............


கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!


சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.


1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!


சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,.... புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.


வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
எவ்வாறு இது சாத்தியமானது?

கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!


வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!


இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!


விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

இன்னும் செல்வோம்!


பெர்முடா முக்கோணம்

ரோக் அலைகள்

வார்ம்ஹோல்

ஏர் கரண்ட்

ப்ளாக் ஹோல்

வீணையடி நீ எனக்கு!!!!!!

எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!, படிச்சிட்டு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சுன்னு சொன்னா நான் பொறுப்பல்ல!

***********************கருவண்ணக் கூந்தல் காட்டிலிருந்து
சறுக்கி விழுந்த பனிமலையாய் நெற்றி
முழுதும் சொல்லும் உன்னைப்பற்றி....

தடம் பதிக்கும் முதல் முத்தம்
உயிருக்குள் கேட்கும் ஒரு சத்தம்
கருவண்ண இரு நிலவுக்குள் தொலைந்து
புன்னகையின் கன்னக்குழியில் தேடுகிறேன்

பிடரி முடியில் விரல் கோர்த்து தூக்குவேன்
கண்களுக்குள் கரைந்து செல்ல ஏங்குவேன்
சாய்நிலை சத்தத்தில் முத்தம் கொடுப்பேன்
உன் சிணுங்கலின் போது யுத்தம் எடுப்பேன்

இதழ் ஊற்றில் அமுதம் குடிப்பேன்
காதோரம் லேசாய் கடிப்பேன்
தோள் மீது சாய்ந்து இருக்கும் சிரம்
உனை காதலாய் வளைக்கும் என் கரம்

இடை வளைத்து இறுக்கும் போது
வளைந்து நிற்பாய் பெண்ணே.....
இடையில் வெளி குறையும் போது
வெட்கி குனிவாய்........

பூவில் ஊறும் தேனை சுவைக்க காத்திருக்கேன் -உன்
தேவை அறிந்து என் தேகம் தர பார்த்திருக்கேன்.....
தேன் குழைத்த திராட்சைகள் சொர்க்கத்தின் சாவியா?
சந்தோசத்தில் சாவது இதுதானா........
எனக்கதறுவது என் ஆவியா?

கைதேர்ந்த உழவனாய் உடம்பில் நான் ஏர் ஓட்ட
உன் பட்டு விரல்கள் என் மார்பில் தேர் ஓட்ட
இக்கணம் உலகம் நின்றாலும் சந்தோசமடி செல்லமே....

அடுத்த வாரிசு!

தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!

டாக்டர் அளித்திருந்த தேதி ஆகஸ்ட் 19! ஆனால் ஆகஸ்ட் 20 மதியம் வரை வலி என்ற சுவடே இல்லை, மூன்று மணியளவில் ப்ளாடர் உடைந்து விட்டதாக எனக்கு போன் வந்தது, அப்பா ஆட்டோவில் கூட்டிவரச்சொல்லி நான் முன்கூட்டியே மருத்துவமனை சென்று தயார் படுத்திவிட்டேன்!, அவர்கள் வரும்பொழது அனைத்தும் தயாராக இருந்தது, ஆனால் வந்திறங்கிய என் மனைவி சிரித்து கொண்டே இறங்கினாள்! துளியும் வலியில்லை! குழந்தை பிறப்பதற்குண்டான எந்தவித அறிகுறியும் அவளுக்கு தெரியவில்லை, பின் டாக்டர் சில மருத்துகள் கொடுத்து அறையில் தங்க வைத்து விட்டார், இரவு 11 மணிக்குள் பிரசவம் ஆகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தான் வழி என்று தகவலும் சொல்லிவிட்டார்!

செலவை பற்றிக்கூட கவலையில்லை, தாயும் சேயும் நலமாக இருந்தால் போதும் என்பது தான் என் எண்ணம், சரியாக 11 மணிக்கு தான் வலியே தொடங்கியது, விட்டு விட்டு 12.30 வரை தொடர்ச்சியான வலி, அதற்கே எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது.... ம்ம் சொல்ல மறந்துட்டேனே! வர்ஷா பிறந்தது சென்னை RSRM அரசு மருத்துவமனை, அங்கே கூட, அட்டெண்டர் இருக்க அனுமதியில்லை, அதனால் எனக்கு பிரசவவலி என்றால் இந்த அளவுக்கு கடினமாக இருக்கும் எனத் தெரியாது!, 12.30 க்கு மேல் என்ன ஆச்சோ தெரியல, மொத்த மருத்துவமனையும் இடிந்து விழுபது போல் கத்தல்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! ஓடிப்போய் நர்ஸ்களை எழுப்பி வரச்சொன்னென், அவர்களோ வெகு அலட்சியமாக நல்லா வலிக்கட்டும் வர்றோம்னு சொன்னாங்க!செம கோவம் எனக்கு! அந்த கதறலை நேரில் பார்த்தவனுக்கு தான் தெரியும், ஒரு தாயின் பங்களிப்பு, ஆயுள் முழுவதும் உழைப்பது கூட அதற்கு சமமாக இருக்காது, அதுவும் என்னை போல் செய்யும் வேலையை கொண்டாட்டமாக செய்பவனுக்கு ஒரு ஆயுளே பத்தாது!, தொடர்ச்சியான நச்சரிப்புக்கு பின் நர்ஸ் எழுத்து வந்து, சிறிது பரிசோதனைக்கு பின் உள்ளே அழைத்து சென்று விட்டார், சிறுது நேரத்தில் டாக்டரும் வர நான் டென்ஷனில் வெளியே வந்து நின்று கொண்டேன்!, வர்ஷா பிறந்த போது இருந்ததை விட இம்முறை அடைமழை, அனுபவமிக்க தோழர் ஒருவர் எனக்க்ய் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்! 1.10 க்கு பெண் குழந்தை பிறந்தது, சுகப்பிரசவமாக! ஒரு இயற்கை விரும்பியின் மகள்களும் இயற்கை விரும்பியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!சமூகம் என்ற நாலு நாசக்கார பயல்களை உறுப்பினராக கொண்ட குப்பைதொட்டி வழக்கம் போல் தன் வேலையை ஆரம்பித்தது, திரும்பவும் பெண்குழந்தையா என்றவர்களிடம் என் விருப்பமும் அது தான் என்றேன், சிலர் அமைதியாக சென்றார்கள், சிலர் இருந்தாலும் என்று இழுத்தார்கள்!, ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ படிக்கும் வரை படிக்கவைப்பது என் கடமை! வரதட்சணை கொடுத்து கல்யாணம் செய்து வைக்க நினைப்பவன் தான் வருத்தப்படனும், நான் எப்படி வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டேனோ அதே போல் தான் என் மகள்கள் திருமணமும் நடக்கும், மேலும் நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் என்றேன்! மனதுக்குள் பைத்தியகாரன் என்று திட்டி செல்வது எனக்கு கேட்டது!சேனை வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட எனது அம்மாவை அழுத்தமாக நிராகரித்தேன், வேறு பழுத்தபழங்கள் எதுவும் அச்சமயத்தில் அருகில் இல்லாததால் பெரிதான டென்ஷனுக்கு வேலையில்லை, ராசி, நட்சத்திரம், லக்னம், நல்ல நேரம், ராகுகாலம் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது உங்களுக்கு தெரியும்! க,கே,கு என்ற எழுத்தில் பெயர் வர ஒன்று சொல்லுங்களேன் என எண்கணிதத்தில் நம்பிக்கையுடய நண்பர் ஒரு கேட்டதற்க்கு ”கே”வில் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தை ஒன்றைச்சொல்லி அவர் இன்று வரை என்னுடம் பேசுவதில்லை!, என் மகளுக்கு பெயர் தமிழில் தான் வைப்பேன் என்றில்லை, என் விருப்பத்திற்கு வைப்பேன், நிச்சயமாக வெட்டி நம்பிக்கைகள் இல்லாமல்!.


போனிலும்,டுவிட்டரிலும், மெயிலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!


இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?

உமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுகோளும்

உமாசங்கர் பற்றி முழுமையாக அறிய

ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!

இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.

சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!

நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தோழரும் உங்களது கண்டணங்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!, தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் தருமி ஐயாவிற்கும் நன்றி!

உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்
உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.

இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.

இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.

வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....பி.கு.
1.
அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.

2. //கார்த்திகைப் பாண்டியன் said... புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..// அப்படியானால், எல்லோரும் புதன் கிழமை ஒன்றுபோல் இப்பதிவை இடுவோம்.

3. கா.பா. போன்ற பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். Please ... மறு பதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.

4. பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...

5. நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.

6.ஒட்டு மொத்தக்குரல் அரசை அடையும்


(நன்றி:தருமி ஐயா)

குவியல்!..(16.08.10)

கண் சிமிட்டுன மாதிரி தான் இருக்கு, காலம் ரொம்ப வேகமா ஓடிருது, 700 பாலோயர்ஸ்க்கு நேத்து தான் நன்றி சொன்னா மாதிரி இருக்கு, இப்போ 809, இதுக்கு ஒவ்வொரு நொடியும் நன்றி சொன்னாலும் தப்பில்லை, உலகில் புளங்காகிதம் அடையச் செய்வது அங்கிகாரம் தானே! நன்றி நண்பர்களே!, இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு அதுக்கும் சேர்த்து பிரியாணி போட்டுக்கலாம், தயாரா இருங்க ஈரோடு ஃப்ரெண்ட்ஸ்

***************

பழைய நோக்கியா 5130 தொலைஞ்சு புதுசா மைக்ரோமேக்ஸ் கியூ7 வாங்கியிருக்கேன், வழக்கம் போல் பாஸ் கிரிடிட் கார்டில்!, தமிழ் படிக்க கஷ்டமாக இருந்தது, சென்னை நண்பர் ரிஷி உதவியால் தற்பொழுது தமிழ் படிக்க முடிகிறது, மைக்ரோமேக்ஸ் பயன்படுத்தும் நண்பர்கள் இதனை பாலோ செய்யலாம்!

போனில் இருப்பது ஒபேராமினி 4.2 வெர்சன், அது பழசு, அதுக்கு பதிலா புது வெர்சன் போடனும், பாரில் டைப் பண்ன முடியாட்டியும் கூட m.opera.com என டைப் செய்து உள்ளே போங்க, லேட்டஸ்ட் வெர்ஷன் டவுன்லோடு பண்ணி பிறகு opera:config அழுத்தி உள்ளே போங்க, செட்டிங்ஸ் கடைசியில் font செலக்‌ஷன் இருக்கும் அதற்கு யெஸ் கொடுத்தால் போதும், தமிழ் தெரியும் தமிழ் டைப் பண்ணத்தான் முடியாது! நல்லாயிருக்கு மொபைல், தேங்க்ஸ் ரிஷி!

எல்லா போனுக்கும் இதே வழி உதவும்னு நினைக்கிறேன்!
****************

தற்பொழுது பஸ்ஸிலும் பயணம் செய்கிறேன், டுவிட்டர் மற்றும் ப்ளாக்கில் நேரம் சரியாக இருப்பதால் அங்கே கலாய்த்தல் மட்டும்! கலாய்க்கனும்னா தாராளமா கூப்பிடுங்க, இலக்கிய மொக்கைனா ஆளை விடுங்க!


******************

சென்ற வாரம் சாருநிவேதிதாவுக்கு valpaiyan@gmail.com என்ற முகவரியிலிருந்து அசிங்க அசிங்கமாக திட்டு ஒரு மெயில் போயிருக்கு! ஏற்கனவே நமக்கு அவருக்கும் வாய்க்கா தகராறு இருக்கு, ஆனாலும் நாம முதுகுல குத்துற ஆளில்லை அது அவருக்கு தெரியுமனுல்ல, நல்லவேளையாக அந்த மெயிலை அவர் லக்கிக்கு அனுப்பியுள்ளார், அது நானில்லைன்னு லக்கி சொன்னதால் அது சைபர்கிரைம் கேஸாகல! எந்த மதவெறி பிடிச்ச கம்முனாட்டியோ தான் அப்படி செஞ்சிருக்கனும்! நேருக்கு நேர் மோதனும், இப்படி குறுக்கு வழியில போறதுக்கு பதிலா வாய்க்கு பத்து வாங்கிட்டு பீச்சுல சுத்தலாம்! காசாவது தேறும்!


******************
predators

ரொம்ப நாள் கழிச்சு சினிமாவுக்கு போனேன்!, பிரிடேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பரவாயில்லை, அதன் பின் வந்த ஏலியன் வெஸ்ஸஸ் பிரிடேட்டர் ரொம்ப பிடிச்சது, இது என்னமோ என்னை இம்ப்ரெஸ் பண்ணல!, அதிக எதிர்பார்ப்பு காரணமாக இருக்கலாம்! நீங்களும் பாருங்க********************

சுஜாதாவின் கடவுள் படிச்சு முடிச்சிட்டேன், நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்! ஒரு நண்பர்கிட்ட அதை பற்றி விவாதிக்கும் போது தான் தெரியுது அவரவர் கோணங்களில் அதை எடுத்துகுவோம்னு, நான் அப்படியே தான் இருக்கேன்! நீங்களும் படிங்க கண்டிப்பா பிடிக்கும்! நிறைய விசயங்களை அலசியிருக்கார்!

********************

கவிதைக்காதலர், சிறுவனாக(என்னைச்சொன்னேன்) இருந்தாலும் அன்பாக என்னை குரு என்று அழைப்பவர், அன்பு அண்ணன் அனுஜன்யா சில நாட்களாக பதிவே எழுதுவதில்லை, நான் இது வரை எழுதிய எதிர்கவுஜயில் அவருக்கு எழுதியது தான் அதிகம்! திரும்பவும் எழுதுங்க தல ப்ளீஸ்!

********************

ரொம்ப நாளாச்சு எதிர்கவுஜ எழுதி, அன்னைக்கு நர்சிம் கவிதையை பார்த்ததும் எழுதனும்னு தோணுச்சு எழுதிட்டேன்!

ஒரிஜினல் இங்கே


காசில்லாத நேரமொன்றில்
பாரில் அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி வருகிறானொருவன்.
சீருடை இல்லையென்றாலும்
பார்மேனாய் இருப்பதற்கான
சாத்தியங்கள் நிறைய.
பேப்பர்களை கைகளில் மடித்திருந்தான்
தோள்கள் உயர்ந்திருக்கும் உடல்
மிக அருகில் வந்துவிட்டான்.
கைககள் பார்த்தேன்
பில்புக் இருந்தன.
வியந்தும் பயந்தும் எழுந்தேன்.
கையமர்த்தி அமரச்செய்தவனின்
கைகளில் காப்புகாய்த்த விரல்கள்.
30பாகையில் தலைசாய்த்துப் பார்த்தவனின்
உதடுகள் பிரிந்தன வார்த்தைகள் உதிர்ந்தன
“பில்லை கொடு,இல்லாட்டி நீ காலி”
சொல்லிச்சிரித்தவன் பில்பேப்பர்
ஒன்றை உருவிக்கொடுத்துவிட்டு
அருகில் இருக்கும் சாய்ந்து
நின்று கொண்டாள்
இன்னொருவனைப்போலவே.
இது கனவொன்றும் இல்லை,
கையிலிருக்கிறது பில்.
காலிபாட்டில்களும்,
காலி பிளேட்டுகளும்,
அடிகளும்
உதைகளும்.

ஆனந்தவிகடன்மேனியா!
இந்த வார தலையங்கம்: பிஞ்சுக்குள் செலுத்துவதா நஞ்சு!

அப்படி என்ன தான் இருக்கோ அந்த சாதிமயிருல, ஒரு இழவும் புரியல! தேனி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் சென்ற வாரம் ஒரு சாதி மோதல் ஏற்பட தெரிந்ததாம், கவனிக்க அது கல்லூரி கூட கிடையாது பள்ளி, இப்போது தான் சென்னை சட்ட கல்லூரி ரகளையை பார்த்து வெறுத்து போய் அமர்ந்திருக்கிறோம், திரும்பவும் சாதிப்பிரச்சனையா? அதில் எதாவது நன்மை இருக்கா? சுயமரியாதையை இழக்க செய்யும் சாதி தேவை தானா? பலமுறை சண்டை போட்டிருக்கிறேன், ஒரு மதவெறிபிடுச்ச நற்குடி நாதமாணிக்கம், உன் புள்ளை உனக்கு பிறக்கல,  அதோட சாதி தெரியலன்னு நீ சாதி சான்றிதழ் பள்ளியில கொடுக்க மாட்டிங்கிறேன்னு அவரோட மதகொள்கைகளையும், கடவுள் சொல்லி கொடுத்ததையும் கக்கிட்டு போயிருக்கார், ஆல் இன் ஆல் பதிவில்! அவனுங்களை மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் நாட்டில் எங்கிருந்து சாதி ஒழியப்போகிறது! வெட்கக்கேடாக இருக்கிறது இந்த தலைமுறையில் நான் வாழ்வதற்கு!


************

ஆறாம் பக்கம்!

தமிழ்நாட்டில் தற்பொழுது பா.ம.க ஆட்சி அமைக்கும் சூழல் இல்லையாம்! சாதிவெறி பிடிச்சு திரிஞ்சா சூழ்நிலை வராது! தமிழ்நாட்டுக்கு சீழ்பிடிக்கும் நிலை தான் வரும்!


************

பதினாறாம் பக்கம்

”பலகோடி” செலவு செய்து, வரலாறு காணாத ”வெற்றி பெற்று”, டெல்லியில் சண்டை போட்டு ”மந்திரி பதவி” வாங்கி,. இப்படி பல வீக்கங்கள் கண்ட அழகிரி கடைசியில் நாடாளுமன்றத்தில் பேசிவிட்டார்!
அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161” (தமிழ் வளர்க்க தலைகீழாய் நிற்போம்)


*********

ஹாய்-மதன் கேள்வி பதிலில்

பறவைகளுக்கு ஆண் உறுப்பு உண்டா என்று கேள்விக்கு மதன் அளித்திருக்கும் பதில், அடுத்த பரிணாமம் பதிவுக்கு தகவல் தேடும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது, விரைவில் பதிவிடுகிறேன்.


**********


மனம் கொத்தி பறவை

சாருவுக்கு தமிழ்நாட்டை தவிர எல்லா ஊர்களையும், நாடுகளையும் பிடிச்சிருக்கு, யாராவது ஒரு புண்ணியவான் காசு கொடுத்து சாருவை நாடு கடத்திவிட்டால் பரவாயில்லைன்னு தோணுது, ஆறுதலான விசயம் ”மனம் கொத்தி பறவை” ஆரம்பத்துக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை, சுயமா சொறிஞ்சிகிறது கொஞ்சம் குறைஞ்சிருக்கு! சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!


**********

36 ஆம் பக்கம்:படித்த புத்தகம்

இயக்குனர் ஜனநாதன், தான் படித்த புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார், ஜான் பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” தமிழில் படித்திருக்கிறேன், இந்த புத்தகமும் படிக்க வேண்டும்! முதலாளித்துவத்துக்கும், காலனி ஆதிக்கத்துக்கும் எதிரான ஜனநாதனின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!


************

அமைச்சர் பூங்கோதை

ஒரு பெருமழைக்கு பின்னரே சாக்கடையில் தெளிந்த நீரை பார்க்க முடியும், அதுவரை அது சாக்கடையாக தான் இருக்கும்! அதனால் நான் சொல்ல ஒன்றுமில்லை, நீங்களே படிச்சிகோங்க!
பெருமழைக்காக காத்திருக்கலாமா இல்லை பெருமழையை நாமே உருவாக்கலாமான்னு பிறகு பேசி முடிவு பண்ணிக்கலாம்!


***********

உயிர்மொழி

உளவியல் என்றால் கீழே கிடக்கும் காகிதத்தை கூட விட மாட்டேன் நான், இந்த தொடரை விட முடியுமா? என்ன சென்ற வாரம் ”ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்” பற்றி எழுதியதற்கு எதாவது ஒரு கலாச்சார காவல் பன்னி பாயை பிறாண்டும்னு எதிர்பார்த்தேன், சத்தத்தையே காணோம்! பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஷாலினி மூலமாக அறிவியலுடன் விளக்கப்படுகிறது. மிஸ் பண்ணிறாதிங்க!


***********


பிரகாஷ்ராஜ் பேட்டி

புதிய படம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள், கடைசியில் விவாகரத்து, புதுதோழி, மறுமணம் என்று தாவுகிறார்கள்! செலிபிரட்டிகளுக்கு கக்கா வரலைன்னா ஓடிபோய் இனிமா தூக்கி பிடிக்கிற வேலையை எப்போ தான் நிறுத்துவாங்களோ தெரியல, பிரகாஷ்ராஜுக்கு கல்யாணம் ஆனா என்ன ஆவாட்டி என்ன? தமிழ்நாட்டில் பஞ்சமா வந்துறப்போவுது. அது பல்சுவை பத்திரிக்கையா, ”பலான சுவை பத்திரிக்கையா”?


************

ஓ!.. பாவம் ஒபாமா!

ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!


************


எளிமையின் சின்னம்

அரசியலில் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர் கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!


************

பழங்குடிகளுக்கு பாரபட்சம்.. கம்பெனிகளுக்கு கருணை!


உண்மையில் அந்த பழங்குடிகளுக்கு மாவோ என்றால் யாருன்னு தெரியுமா? அவரது கொள்கைகள் தெரியுமா?. தன் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருக்கும் முதலாளித்துவ சொம்புதூக்கி அரசுக்கு எதிராக, கையில் கட்டையை பிடித்திருக்கும் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி கொல்லப்படுகிறார்கள்!, அவர்களுக்கு உதவும் மாவோயிஸ்டுகள் அதற்கு பழிவாங்க காவல்துறையினரை கொல்லுகிறார்கள், இது வடமாநிலங்களில் மட்டும் தான் நடக்கும் நமக்கெல்லாம் அந்த பிரச்சனை வராது என்று நினைக்கும் தமிழக தூங்குமூஞ்சிகளே!, ஏற்கனவே அரசு உன்னையும் என்னையும் சுரண்ட ஆரம்பித்து விட்டது, அடுத்த முழக்கசத்தம் தமிழகத்தில் தான் கேட்கப்போவுது பாரேன்!


***********

காமன் வெல்த் களவாணிகள்!

ஒரு ட்ரட் மில்லின் விலை நான்கு லட்சம்!
ஆனால் 9.75 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை ”புணர”மைக்க 961 கோடி, இந்திராகாந்தி ஸ்டேடியத்தை மறுசீரமைக்க 669 கோடி! எவண்டா சொன்னது இந்தியா ஏழை நாடுன்னு, போய் வாயை கழுவு, நாமெல்லாம் காமன்வெல்த் போட்டிகளை பார்த்து களிப்படையனும்னு ஒவ்வொரு அரசியல்வாதியும் அங்கே கஷ்டப்பட்டுக்
கொ(ள்ளையடித்துகொ)ண்டிருக்கிறான், நாமெல்லாம் இனி வரும் தேர்தலில் எல்லாம் அவர்களுக்கே ஓட்டு போட்டு நாம எவ்ளோ நல்லவங்கன்னு நாட்டுக்கு காட்டனும்!, இல்லையா பின்ன நம்மை என்ன அடிச்சா ஓட்டு கேட்டானுங்க, காசு கொடுத்து தானே, காசு கொடுத்தா தான் நாம மண்டிபோட்டு ........வோமே!


***********

வலைபாயுதே

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்து என்ன செய்தார், எதை மாற்றினார் என்ற கேள்வியை வைத்திருக்கிறார் ஒரு நண்பர், அந்த டவுட்டு எனக்கே ரொம்ப நாளா இருக்கு? நாலு பள்ளிக்கும், கல்லூரிக்கும் போய் கனவு காணுங்கள்னு சொல்வதில் அவரது பொழுது போகுது. நமெக்கெல்லாம் எதுக்கு ஜனாதிபதி. சினிமா விருது கொடுக்குறதுக்கும், விழாக்களில் போஸ் கொடுப்பதற்கும், அதுக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமுல்ல? ஒன்னரை லட்சம்!

***********

மேனியா தொடரலாம்!

சுடும் நிலவு, சுடாத சூரியன்!

அமைதிப்புயல்
ஆர்பாட்டமில்லாத பூகம்பம்
அக்கினிச்சாரல்
பெருமழைக்காதல்
ஒரு துளி பெருங்கடல்
கைக்குட்டை வானம்
பனிமலைச் சூரியன்
நடமாடும் சிலை
நீலவண்ணக் கவிதை
சிறகில்லா தேவதை
நீ
என்னைக் கண்டெடுத்தவள்
நான்
உன்னில் தொலைந்தவன்!


0*0


வண்ணங்கள் குழைத்து
வடித்த சிலையொன்று
சமுத்திரத்திற்கு நிழலாய்
வானில் வலம் வருகிறது
நிலவொளியில் மின்னும்
சிறகுகள் வான்வெளி
முழுதும் மறைக்கிறது
தினம் ஒருமுறை வந்தாலும்
தினம் தினம் வானம் பார்த்த
சிறுவனாய் கெஞ்சுகிறேன்
போகும் முன்
என் தேவை கேட்டுப்போ


0*0


தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.


0*0


ஒரு கவிதை சமைக்க ஆசைப்பட்டேன்
கொஞ்சம் நீரும்
வண்ணக்கலவையும்
உயிர் வழிந்த காதலையும் சேர்த்து
சமைத்த கவிதையை
பொதுவில் வைத்தால்
ஒருத்தன் சாம்பார் என்கிறான்,
ஒருத்தி ரசம் என்கிறாள்,
தோழி இது தான் கவிதையா என கேட்கிறாள்,
ஒருவன் ஒருபடி மேலேபோய்
கவிதையில் சுவையில்லை
வண்ணம் மட்டும் உண்டு என்கிறான்,
தயவுசெய்து யாராவது
என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!


0*0


இழப்பதற்கு எதுவுமில்லை
எனும் பொழுது தான்
முடிவு செய்தேன்,
இனி நான் முழுதும்
உன்னவன்.


0*0


போன் மாத்திருக்கேன், நம்பர் எல்லாம் மிஸ்ஸாயிருச்சு, உங்க நம்பரை எஸ்.எம்.எஸ்ஸோ, மெயிலோ பண்ணுங்களேன் ப்ளீஸ்! என்னது அதே பழைய நம்பர் தான் 9994500540 arunero@gmail.com

மைக்ரோ பைனான்ஸ் = கந்துவட்டி!

சில வருடங்களுக்கு முன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் போது நான் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறேன், அப்பொழுதெல்லாம் 1000 ருபாய்க்கு 100 தான் எடுத்து கொள்வார்கள், மீதி 900த்தை வாரம் 100 அல்லது தினம் 10 என்ற கணக்கில் மீண்டும் ஆயிரமாக கொடுக்க வேண்டும்! மாதம் 30 வட்டி என்றாலும் 3% தொடர்வட்டியாக தோன்றும், பின்னாளில் ஆயிரத்துக்கு 150 என்று மாறி, தற்பொழுது 250 எடுத்து கொள்வதாக கேள்விபட்டேன். 150 இருக்கும் பொழுது நானும் ஒரு பத்தாயிரத்துடன் களம் இறங்கினேன், அதில் 5000 கூட ஒழுங்காக வசூல் செய்திருக்க மாட்டேன், யாராவது ரொம்ப கஷ்டம்னு புலம்பினால் இருக்கும் போது கொடுங்கன்னு வந்துருவேன். ஒரு படத்தில் கரண், வடிவேலுவை பார்த்து சொல்வது போல் எனக்கு பிஞ்சுமூஞ்சின்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு!

ஈரோடு சுத்துவட்டாரத்தில் விசைத்தறி தொழில் தான் பிரசித்தம், தொழில் கற்று கொண்ட ஒருவர் 10000 முன்பணமாக பெற்று ஒரு பட்டறையில் வேலைக்கு சேருவார். வேறு இடம் மாற வேண்டுமென்றால் அந்த முன்பணத்தை திரும்பத் தர வேண்டும், அதை வேறொரு பட்டறை 20000 ஆக கொடுத்து அவரை அங்கே அழைத்துக்கொள்ளும், ஒருவருடம் கழித்து மற்றொரு பட்டறை 30000 கொடுத்து கிட்டதட்ட கொத்தடிமை ஆக்கும், அப்படியே 50000 அவரை அவர்களுக்குத் தரப்படும். அவர்களால் பணம் தரமுடியாமல் போய் அவர்களது உடமைகள் பிடுக்கபட்டு கடைசியில் அவர்களது கிட்னி வரை களவாடபட்டது தமிழகம் அறியும்!

அமெரிக்காவில் இருந்து ஒரு நண்பர் தொடர்பு கொண்டு கல்கத்தாவில் இருந்த கிராமவிடியல் போன்று ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கலாம் என்றார். சனி,ஞாயிறு விடுமுறை மற்றும் ஏராளமான நண்பர்கள் இருந்த நம்பிக்கையில் நானும் ஒப்பு கொண்டேன், வெளிநாட்டு பணம் இந்தியா வர இருந்த சட்டச்சிக்கலை தீர்க்க பார்த்த ஆடிட்டர் ஒருவரும் எனக்கு சரியாக அமையவில்லை என்பதால் என் தோல்வியை ஒப்பு கொண்டேன், தற்சமயம் அந்த நண்பர் வடமாநிலங்களில் முதலில் ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார், உதவி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அம்மாதிரியான மைக்ரோ பைனான்ஸ்கள் நிச்சயம் நலிவடைந்த மக்களுக்கு தேவை, ஆனால் வெறும் வியாபார நோக்கில் மக்கள் பணத்தை உறிஞ்சும் சக்திகள் பற்றி கேள்விபட்ட போது மனம் பதறிவிட்டது.முதலில் அவர்கள் அணுகுவது மகளிர் குழுவினரை, அவர்கள் ஏற்கனவே பணம் சேர்ந்து வங்கியில் கட்டி அதன் மூலம் ஒவ்வொருவராக கணிசமான தொகையை கடனாக பெற்று பிறகு மாதாமாதம் அடைக்கலாம், வங்கியில் வட்டி மிகவும் குறைவு! ஆனால் வியாபார நோக்கில் வரும் மைக்ரோ பைனான்ஸ்கள் முதலில் முன்பணமாக ஆயிரம் பெறுகிறது, பின் பத்தாயிரம் வழங்க டாக்குமெண்ட்!? சார்ஜ் என்று ஒரு ஐநூறு, வாரம் 300 வீதம் 48 வாரத்திற்கு கட்ட வேண்டும், கொடுமையை பாருங்கள் அதுவே 14400 ஆகிவிட்டது, முன்பணம் திரும்ப வருவதற்கு உத்திரவாதம் இல்லை, டாக்குமெண்ட் சார்ஜ் எதுக்குன்னு தெரியல.

கந்துவட்டிக்கு சமமாக ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அந்த நிறுவனங்கள் ஒன்றும் சாதாரணமானதல்ல. உதாரணமாக எங்கள் ஏரியாவில் எல்&டி நிறுவனம் மைக்ரோ பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறது, அவர்களுக்கு சம்பாரிக்க வேறு வழியே தெரியவில்லையா என்ன? என் அப்பா ஓட்டும் ஒரு ஓட்டை ஆட்டோவை ரிப்பேர் செய்ய என் அம்மா மூலம் அங்கே பணம் வாங்கி இப்போ தவிடு தின்னு கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாமல் என் மனைவி பணம் வாங்கி வாராவாரம் என் பாக்கெட்டில் ஆட்டைய போட்டு கொண்டிருக்கிறாள், எதுக்குன்னு விசாரிக்க போய் எனக்கு இந்த விசயமெல்லாம் தெரிந்தது! வீட்டில் இருக்கும் பெண்கள் பணத்தை கையாளுவதில் மிகவும் திறமைசாலிகள் தான், ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லா நேரமும் சரியா அமைவதில்லை என்பதற்கு இந்த மைக்ரோ பைனான்ஸின் அபரித வளர்ச்சி ஒரு உதாரணம், உங்கள் அருகில் அப்படி எதுவும் இருந்தால் முதலில் அதிலுள்ள சிக்கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நான் சென்ற வாரமே ஆரம்பித்துவிட்டேன்!

தோழா தோழா!

என்னுரை: என் மீது உள்ள நட்பினால் சில இடங்களில் வெகு உயரத்துக்கு என்னை தூக்கியிருக்கிறார்! எதாவது மிகையாக தெரிந்தால் பொருத்தருள்க!, நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இன்று பதிவை வெளியிடுகிறேன்!

தமிழரசியின் ப்ளாக்


"அருண், உங்க வலைப்பூவில் நான் எழுதனும்" என்றேன்!...

"ஓ.. தாராளமா" என்றார் சிரித்து கொண்டே, ....

என்னை யாரேனும் கேட்டிருந்தால் சிரித்து மழுப்பி மறுத்திருப்பேன்.இவரிடம் சம்மதம் வாங்கியும் நான் எடுத்துக் கொண்ட காலவரையறை ஓராண்டுக்கும் மேல், என்ன தான் நானொரு புதுமைப்பெண் , தைரியசாலி என என்னைக் காட்டிகொண்டாலும் ஒரு நட்பைப் பகிர எனக்கு துணிவு வர எனக்கு இத்தனை கால தாமதம் ஆனதன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை.


இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. நட்பு ரீதியாக பார்த்தால் எப்போதாவது சாட்டில் ஹாய் சொல்வதும் "நலமா? சாப்பிட்டீங்களா?" இத்தோடு முடிந்து போகும். அதிகபட்சம், சுயநலமாய், நான் பதிவு போட்டால், நானாக, "போய்ப் படிங்க! அருண்" என சொல்லுவேன், மேலும் இவர் பதிவுகள் வெகுவாக கவரும் போது ஒரு மிஸ்டுகால் கொடுப்பேன், இவர் அழைத்தால் பாராட்டி சற்று நேரம் பேசுவோம். அதுவும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே!

முதலில் இவரை சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்தபொழுது இப்படியும் எளிமையும், எதார்த்தமுமாய் போலியில்லாத பேச்சுநடை இருக்க முடியுமா எனத் தோன்றியது. "ஒன்பதாவது மட்டுமே படித்திருக்கிறேன்" எனச் சொல்லும் இவரின் புத்தகம் படிக்கும் ஆர்வமும் பதிவுகளை சிறப்பாய், தெளிவாய், உறுதியாய் எழுதுவதும் நம்மை வியக்கச் செய்வது உண்மை தானே!

"எப்படி இப்படி எழுதுறிங்க?" என்றால், "நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க" என்கிறார். கம்ப்யுட்டர் ஆன் பண்ணி கீபோர்டுல நடந்த நிகழ்வுகளுக்கும், கற்பனைகளுக்கும் உருவம் கொடுப்பதாய் எண்ணி கவிதை என எழுதி வரும் எனக்கு இவரது பதில் ஆச்சர்யமாக இருந்தது, இவரது எழுத்துக்களின் ஆளுமையின் ரகசியம் புரிந்தது எனக்கு!


ஒரு சராசரி மனிதனின் இயல்பான குணங்களான சரி, தவறு இவற்றிற்கு அப்பாற்பட்டு இவரிடம் நான்
தேர்ந்தெடுத்தது நட்பு. பல ஆண்டு உடன் இருந்து பேசிப் பழகி வந்த உறவுகளையும் தாண்டி இவர் நட்பு ஏனோ பிடித்திருக்கிறது. தினமும் நான்கு எஸ்.எம்.எஸ். காலை, மாலை தொலைபேசி உரையாடல், வாரமோ, மாதமோ சந்திக்க வேண்டும் என எதுவுமே தோன்றாமல்...

“தங்கம் விலை போல்” கிடுகிடுவென உயரும் இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வியந்து புருவம் உயர்ந்த வைக்கும். மனசெல்லாம் பொறாமையை சுமந்து கொண்டு, "எப்படிங்க இது சாத்தியம்?" என கேட்பேன். "எல்லாம் அன்பால் வந்தவங்க" எனச்சொல்லுவார். "இப்படி அபாரமா எழுதுவது எப்படி?" என்றால் "உங்களைப் போன்றவர்களின் அன்பால் தான்" என்பார். பதிவுகளையும் அதற்கு இடும் கருத்துக்களையும் நட்புக்கு சம்பந்தம் இல்லாமல் என்றும் பார்த்துக் கொள்வார் அது வேறு இது வேறு என்று.... மெதுவாய் புரிந்தது எனக்கு நட்பின் ரகசியம். "இவர் பதிவுகளை பார்வையிட்டு நட்பாய் பழகி வருபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தொடுவது இப்படித்தானோ ! " என.

நெருங்கிய நண்பர், எனது மிகச்சிறந்த நண்பர் என்ற இப்படிப்பட்ட கூற்றை தாண்டி இவரது தெளிவான நோக்கு, மனித இயல்பின் யதார்த்தத்தை இவர் எடுத்துக் கையாளும் விதம், எதையும் மனித உணர்வில் அணுகுவது என இவை, இவரிடம் என்னை ஈர்த்த விசயங்கள். என் எழுத்துகளில் நிஜம் எது? கற்பனை எது? என மிகச்சரியாக படித்த கணம் கணிப்பார். நான் வருத்தப்படாத அளவுக்கு ஒரே வரியில் எடுத்துச் சொல்லி புரியவும் வைப்பார்

ஆனாலும் எனக்கு இவர் மேல் கோபம் உண்டு, அது ஆதங்கமா என்று கூட தெரியவில்லை. இந்த கல்லுளிமங்கன் இதுவரை என் எழுத்துக்களை பாராட்டியதேயில்லை, ஒரு கனிவுக்காக கூட.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சொல்லுவார். " நீங்க கவிதை எழுதுபவர் இல்லை, கவிதையாகவே வாழ்பவர்" என்று.... வசிஷ்டர் வாழ்த்தியது போல் மகிழ்ச்சியாக இருக்கும்!


ஒருவர் பற்றி பலருக்கு பல்வேறு கருத்துகள் இருக்கும். இவர் வலைப்பூவில் எழுதுகிறேன் என்பதால் இவரை பாராட்டியே எழுதுறேயே என்று முழிச்சிகிட்ட என் மனசாட்சி கேட்டது, அதற்கு மனசு சொன்னது அவரு எப்பவாவது உன்னிடம் தன்னை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ வந்து சொன்னாரா? அவர் நிறைகளை மட்டும் எடுத்து கொள், குறைகள் உன்னை ஒன்னும் செய்யாது என்று! உணர்ந்தேன் இது தானே இவரிடம் நம்மை நட்பாக இருக்க செய்தது என. இது இலக்கு இல்லா இலக்கணம் கொண்டது, இவரை என் வலைப்பூவில் எழுதி சிறப்பிக்க நினைத்தேன். என்னை அறிந்தவர்களின் இலக்கு வெறும் நூறுகளில் தான். இங்கே எழுதினால் ஆயிரக்கணக்கான நண்பர்களால் எங்கள் நட்பு வாழ்த்தப்படட்டும் என்றே இங்கு எழுத நினைத்தேன். மதம், இனம், மொழி, வயது, நிறம், ஆண், பெண் என்ற அனைத்து கோட்பாட்டிற்கும் அப்பாற்பட்டது நட்பு. நண்பர்கள் தினத்தில் இதை இங்கு எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன், என் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகூறி என் நண்பனுக்கு சின்ன சிரிப்பை பரிசாக தந்து விடைபெறுகிறேன்!

தமிழரசி

!

Blog Widget by LinkWithin