வாமு.கோமுவின் இரு புத்தகங்கள் வெளியீடு

எழுத்தாளர் வாமு.கோமுவின் இரண்டு சிறுகதை தொகுப்புகள் எதிர் வெளியீடு பதிப்பகத்தின் மூலமாக இந்த வருட ஈரோடு புத்தக திருவிழாவில் வெளியிடப்படுகிறது.

ஈரோடு வாசிப்பாளர்கள் குழுமம் என செயல்பட்டு அதில் தீவிரமாக வாசிப்பனுபவம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் அண்ணன் தாமோதர் சந்துரு மற்றும் பாரதி புத்தகாலயம் இளங்கோ அவர்களின் சீரிய முயற்சியில் வரும் ஞாயிறு (11.08.2013) ஆக்ஸ்போர்டு ஹோட்டல் மேல் தளத்தில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கி ஐந்து மணி வரை நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

 பிலோமி டீச்சர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு
மலைகள் இணைய இதழ் ஆசிரியர் சிபி செல்வம் அவர்கள் மதிப்புறையாற்றுகிறார்.

தவளைகள் குதிக்கும் வயிறு சிறுகதை தொகுப்பிற்கு
தோழர் விஜயராகவன் மதிப்புறை ஆற்றுகிறார்.

இறுதியாக ஏற்புரையும், நிகழ்ச்சி நல்ல படியாக நடத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே முழு முயற்சி எடுத்த அண்ணன் தாமோதர் சந்துரு மற்றும் பாரதி புத்தகலாயம் இளங்கோ அவர்களுக்கு நன்றியுரையும் பேசுவார்.

நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!


!

Blog Widget by LinkWithin