இது தான் இறுதி போராட்டமா?

ஈழத்தில் பிரச்சனை ஆரம்பித்தது இன்று நேற்றல்ல! பல ஆண்டுகள் ஆகிவிட்டது!
அங்கே போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே தமிழகத்தின் ஆதரவும் அதற்கு ஆரம்பித்தது.
தமிழகத்தில் தமிழிழத்திற்க்கான ஆதரவு எம்.ஜி.ஆர் காலத்தில் வெகு ஆளமாகவே இருந்தது.
ஏன் ராசிவ்காந்தியின் படுகொலைக்கு முன்னர் வரை அதற்கு எந்த மாற்று கருத்தும் இருந்ததில்லை. வன்முறையில்லாமல் பேசி முடிவுக்கு வரலாம் என்ற சிலரின் வாதங்களை தவிர. ஆனாலும் எல்லோரும் தமிழ்ஈழத்தில் ஆதரவுடன் தான் இருந்தனர்.

ராஜிவின் மறைவுக்கு பின்னர் தமிழிழத்திற்க்காக போராடும் புலிகளின் மீது சர்வதேசதடை வந்தது, இந்தியாவும் புலிகள் அமைப்புக்கு தடை விதித்தது. அதற்கு பின்னர் தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பிளவு பட்டு நிற்கிறது. ஈழத்தமிழர்களின் தற்போதய துர்பாக்கிய நிலைக்கு இதுவே முக்கிய காரணம் என்பேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தாலே அது புலிகளுக்கான ஆதரவாக திரிக்கப்படுகிறது.

இன்னோரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். புலிகள் ஒன்றும் பொழுது போகாமல் சண்டை போடவில்லை. அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒட்டுமொத்த ஈழதமிழர்களின் சார்பாக போராடுகிறார்கள். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாத சர்வதேச அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்பது எள்ளலவும் பயன் தராது. சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை. அருகிலிருந்தே ஈழதமிழர்களை நாள்தோறும் அகதிகளாக சந்தித்தி கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்குமா தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழர்கள் கூண்டோடு கொல்லப்படுவது இன்றைய மூன்றாம் தலைமுறை ஊடகத்தில் நமக்கு தெரியாமல் இல்லை. நம்மால் என்ன செய்ய முடிந்தது.
மனித சங்கிலி,உண்ணாவிரதம்,மெளனவிரதம் என ந்ம் உணர்வுகளை காட்ட வருத்தி கொண்டோமே தவிர அதை கவனிக்கவேண்டிய அரசியல் சிறிதும் வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.

வரிசையாக நடந்த போராட்டங்களினால் அரசின் கவனத்தை திருப்ப முடியவில்லை.
அதனால் தான் சகோதரர் முத்துகுமார் இந்த போராட்டதை கையில் எடுத்தாரோ?

ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!

முத்துகுமாரின் முடிவையும், அதன் பின் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும்.

அவரின் உயிருக்கு விலை பேசிகொண்டிருப்பார்கள் அரசியல்வாதிகள், ஒவ்வோரு கட்சியும் தன் சார்பாக பணம் கொடுக்கும், இதற்காகவா உயிர் துறந்தான் முத்துகுமார்.

ஈழத்தில் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் முத்துகுமாரின் தற்கொலைக்காக திருப்தியடையப் போவதில்லை, அதிலும் முக்கியம் இது சர்வதேச அரசியலிலின் கவனதை திருப்புமா என்பதும்!
முத்துகுமாரின் ஒரு உயிர் அரசின் கவனத்தை கவருமேயானால், இத்தனை வருடமாக ஈழத்தில் செத்து கொண்டிருப்பது உயிரில்லையா? இந்த கல்நெஞ்ச கயவர்களிம் மனதை கரைக்க முத்துகுமார் இட்டு கொண்ட தீ போதுமானாதா? இல்லை இன்னும் தேவைப்படுமா?

ந்மக்கு தேவை தியாகமா? போராட்டமா?

இந்த போராட்டங்கள் பத்தாது! உடனே தமிழக அரசை திரும்ப கோறுவோம். ஈழதமிழர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்க தயாராக இருப்பவர்களுக்கே ஆதரவு என குரல் கொடுப்போம். ஒன்றுமே செய்யமுடியவில்லையா! குறைந்த பட்சம் இடைக்காலமாக போரை நிறுத்தி அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழகதிற்கு வரவழைக்க சொல்லுவோம். நம் சகோதரர்களுக்கு நாம் இருக்க இடமும், உணவும் தருவோம்.

தய்வுசெய்து முத்துகுமாரின் மரணத்தை தியாகம் என்று சொல்லி பாராட்டாதீர்கள். அது மற்றொரு தமிழனின் உயிரை பறிக்கலாம். முத்துகுமாருக்கு வேண்டுமானால் அது இறுதி போராட்டமாக தோன்றியிருகலாம், ஆனால் அது தான் இறுதி என்றால் இங்கே உயிர் விடவேண்டாம், வாருங்கள் போகலாம் ஈழத்திற்கு நம்மால் முடிந்த அளவு எதிரிகளை கொன்றுவிட்டு நாமும் உயிர்விடலாம்.

இதற்கும் தயாராக இல்லாதவர்கள் தயவுசெய்து கேடுகெட்ட அரசியல்வாதிகள் போல் விளம்பர அறிக்கை அரசியல் செய்து முத்துகுமாரின் மரணதை கேலி செய்யாதீர்கள். காரணம் எப்படியும் ஒரு வாரத்தில் முத்துகுமாரை நீங்கள் மறந்துவிட போகிறீர்கள்.

தலைப்பு!

நாகரிகத்தின் ஆரம்பங்களில் மக்களின் பொழுதுபோக்காக புதினமும், நாடகமும் தான் பெரும்பங்கு வகித்தது. அதன் முதல் விளம்பரமாக அதன் தலைப்பே பிரதானப்படுத்தியது. என் நண்பர் சொல்லுவார், தலைப்பு என்பது அலங்காரம் செய்த பெண்ணை போல வசீகரம் அதிகமாக இருக்கவேண்டும் என்று. உடன்பாடு இல்லையென்றாலும் நாம் விளம்பர உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆரம்பங்களில் கதாப்பாத்திரத்தின் பெயரே தலைப்பாக இருந்தது, பின்னர் எதாவது பெருட்பெயர் அல்லது இடப்பெயர், ஆனால் தற்போது சினிமாவானாலும் சரி புதினங்கள் ஆனாலும் சரி தலைப்பு என்பது சுண்டி இழுக்கும் தூண்டிலை போல ஆகிவிட்டது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல!

சூடாவது எப்படி?
ஜொள்ளு விடுவது தவறா?(ஆரம்பித்தது நானல்ல, இளையகவி)
பகிரங்க கடிதம்?

இன்னும் நிறைய கண்ணில் படாமல் போயிருக்கலாம், உங்கள் கண்ணை குத்தியிருக்கலாம்.

ஆனாலும் தலைப்பில், விசயத்தை தொட்டு காட்டி விட்டு பெரிய பெரிய ஜாம்பாவன்களுக்குச் சமமாக கட்டுரை எழுதுவதில் நமது வலையுலகினர் தற்போது முதலிடத்தில் நிற்கின்றனர்.
அவர்களிடம் சாட்டியது போது அவர்கள் சொன்ன தலைப்பும், கதை சுருக்கமும்.

அதிஷா
சனி பிடித்தலும், சாராயம் காய்ச்சுதலும்

கதையின் சுருக்கமாக அவர் சொன்னது ஒருவன் சாராயம் காய்ச்சியதால் சனி பிடித்து ஜெயிலுக்கு செல்கிறான், ஜெயிலுக்கு போன பின்பு தான் தெரிந்தது அவனுக்கு சனி பிடித்ததால் தான் சாராயம் காய்ச்சவே போகிறான். பல்வேறு திருப்பங்கள் இருக்கும் என்றும் கூறினார். படிக்கும் போது பார்த்து படியுங்கள்.


அய்யனார்
மெளன மொழியின் பிரஞ்சை வடிவம்

உரையாடிலினி, மெளன விரதம் இருந்த போது இவரிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு சைகையால் சொன்னதை சிறிது டக்கிலா வாசனையுடன் நமக்கு மொழி பெயர்ந்து தருகிறாராம், கண்டிப்பாக தாவூ தீரப்போவது உறுதி, வசதி படைத்தவர்கள் டக்கிலா ரெண்டு ஷாட்டும், வசதியில்லாதவர்கள் மானிட்டர் கட்டிங்கும் அடித்து விட்டு படிப்பது நலம்.

ஜ்யோவ்ராம் சுந்தர்
சதுரம்

மொழி மற்றும் வார்த்தைகள் ஒரே மாதிரியான நீள அகலங்களை கொண்டவை, அதனால் அதை சதுரத்துடன் ஒப்பிடலாம் என்று சொல்கிறார்.
”சதுரம் என்றும் மதுரம்” என்ற கவிதை ஆரம்பிக்கும் போதே எனக்கு குறட்டை வந்து விட்டதால் அனுஜன்யா அந்த கவிதையை பிரித்து எழுதும் போது படித்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறேன்.

ச்சின்னபையன்
ஒரு மென்பொருளாலர், மென்பொருளாலரானால்.

நான்:என்ன இது வித்தியாசமான தலைப்பா இருக்குது, சரி என்னா தான் செய்வாங்க
ச்சின்னபையன்: என்னத்த செய்யுறது, அதான் வரிசையா வீட்டுக்கு அனுப்புறாங்களே!
இனிமே சமையல், துணி துவைத்தல் தான்.

பரிசல்காரன்
நான்கு பேரும், நானுறு சிந்தனைகளும்

நான்: ரொம்ப பெரிய பதிவா இருக்கும் போலருக்கே
பரிசல்: எங்கே! இது வரைக்கும் நானுறு பேர்த்த பார்த்துட்டேன், நாலு மேட்டர் கூட அகப்படல
நான்: என்னாது உங்களுக்கே மேட்டர் பஞ்சமா? அப்போ நாங்கெல்லாம் எங்கே போறது?

அதிரை ஜமால்
திருடன புடிச்சாச்சுங்கோ!

சமீபகாலமாக சில ப்ளாக்குகள் காணாமல் போவது யாவரும் அறிந்ததே!
அந்த திருடர்களை எலிப்பொறி வைத்து எப்படி பிடிப்பது என்று அவரது வலைப்பூவான ”கற்போம் வாருங்கள்” வலையில் சொல்லி கொடுக்கிறார். இதில் முக்கியமாக திருட்டு பயம் உள்ள வலைப்பூ வைத்திருபவர்களுக்கு ஒரு ஊசிப்போன வடைப்படம் அனுபுவாராம் அதை உங்களது வலையில் வைத்து கொள்ள வேண்டும். திருட வரும் திருடன் ஊசிப்போன வடையின் நாற்றம் தாங்காமல் மயங்கி விழுந்து விடுவான் என அந்த வடை மேல் அடித்து சத்தியம் செய்கிறார்.

பூர்ணிமாசரண்
உன்னை காணாத கண்ணும்

ஊரிலிருந்து திரும்பி வந்த ரங்கமணியை வந்ததும் வராததுமாக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் படிக்க சொல்லி மிரட்டியதால், ஒரே ஒரு சின்ன வேலையை மறந்துட்டு வந்துட்டேன், இதோ முடிச்சிட்டு வந்துடுறேன் என்று திரும்பி சென்ற கணவரை நினைத்து எழுதிய சோக கவிதை தான் ”உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல!”


இன்னும் நிறைய பேரு நல்லா தான் தலைப்பு வச்சு எழுதுறாங்க!
ஆனா அவங்கெல்லாம் கொஞ்ச நாளா எங்கூட சாட் பண்றதில்லை,
அதனால அவுங்க பதிவுகள் விட்டு போச்சு.

அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்

விலைவாசி உயர்வின் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வே என ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். வேறு காரணங்கள் மற்றவர்கள் குறிப்பிட வந்தாலும் அதற்கும் பெட்ரோலிய பொருள்களே காரணம் என தெரிந்த போது அமைதியடைந்தார்கள். தற்பொழுதும் பெட்ரோலிய பொருள்கள் விலை பெரிதாக குறையாத நிலையிலும் நமது நாட்டின் பணவீக்கம் தவறாமல் குறைவது, கடைசியில் பூஜ்யத்தில் தான் போய் நிற்கும் போல.

கச்சா எண்ணையின் விலை 40 டாலருக்கும் குறைந்து வந்த போதும், பெட்ரோல் விலையை ஏற்றிய போது அரசுக்கு இருந்த ஆர்வம், குறைக்க ஏன் இல்லை என்பது தெரியவில்லை.
எனது அலுவலகம் அருகிலிருக்கும் டீக்கடைகாரர்(இவர் தி.மு.க காரர்)சொல்கிறார், கச்சா எண்ணையின் உற்பத்தியை குறைத்துவிட்டார்கள் தெரியாதா? அது மீண்டும் விலை உயரும், அப்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த முடியாது. அதனால் அரசு விலையை குறைக்க யோசிக்கிறது என்கிறார். அவருக்கு புரிய வைப்பதை விட இதே மனநிலையில் இருக்கும் வேறு சில நண்பர்களுக்கு புரியவைத்தால் போதும் என்பதால் இந்த பதிவு.
காரணம் செக்கு மாடுகளுக்கு ரோட்டில் போக தெரியாது.

பெரும்பாலோனர் நினைத்து கொண்டிருப்பது அமெரிக்கா மற்றும் உலகநாடுகளின் பொருளாதார சரிவே கச்சா எண்ணை விலை சரிவுக்கு காரணம் என்று, அதுவும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணமல்ல! தீடிரென ஏற்பட்ட பொருளாதார சரிவை முன்கூட்டியே கணிக்கமுடியாதா என கொஞ்சம் யோசித்து பாருங்கள், பொருளாதார சரிவின் அடிப்படை காரணமே வராகடன்கள் தான். அது முன் கூட்டியே தெரியாதா?. அந்த அளவுக்கு வங்கியை நடத்துபவர்கள் கூமுட்டைகளா?. மளிகைகடை அண்ணாச்சி கூட ஒரு பில் வரவில்லையென்றால் அடுத்து பொருள் தரமாட்டார். இந்த பொருளாதார சரிவை பயன்படுத்தி பல கோடிகள் சம்பாரித்த முதலைகள் பற்றி ஏன் ஒரு தகவலும் இல்லை. அந்த முதலைகளில் ஒன்று தான் ஒபெக் என அழைக்கப்படும் கச்சா எண்ணை தயாரிக்கும் நாடுகளின் அமைப்பு.

கச்சாஎண்ணை 150 டாலர் வரை சென்றதிற்கு காரணமும் அமெரிக்கா தான். இன்று, இருந்த இடம் தெரியாமல் இருக்கும் லெஹ்மன், மோர்கன் ஸ்டேன்லி நிறுவனங்களின் யூக முதலீடே கச்சாஎண்ணையின் விலை உயர்வுக்கு காரணம், அதை பயன்படுத்தி ஒபெக் அமைப்பு உற்பத்தியை பெருக்கி நன்றாக காசு பார்த்து கொண்டது. பொருளாதார சரிவு ஏற்ப்பட்டவுடன் விலை சரிவை எதிர்பார்த்த நிறுவனங்கள் தனது முதலீட்டை பணமாக்கி கொண்டன.(அந்த பணம் எங்கே?) இரண்டே மாதத்தில் 150 டாலரிலிருந்து 50 டாலருக்கு வந்து விட்டது கச்சாஎண்னை. உண்மையில் இப்போது அதன் விலை வெறும் 36 டாலர்கள் மட்டுமே! கிட்டதட்ட 5 வருடங்களுக்கு முன் இருந்த விலை! அதே ஐந்து வருடதிற்கு முன் பெட்ரோல்,டீசலின் விலை என்ன?

விலை சரிய ஆரம்பித்தவுடன் சர்வதேச யூகவணிக அமைப்பு கச்சாஎண்ணை வியாபாரம் செய்ய குறைந்த பட்சம் 50 சதவிகதம் பணம் தேவை என்று அறிக்கை விட்டது. அத்ற்கு முன் ஒருலட்சம் பெருமானமுள்ள பொருளுக்கு வெறும் பத்தாயிரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள், இனி 50000 தேவை என்றவுடன் கச்சாஎண்ணை முதலீட்டை திரும்பபெற்றனர். பின் அந்த முதலீடு தங்கம் மற்றும் வெள்ளிக்கு திரும்பியது. இதுவும் கச்சாஎண்ணையின் விலை சரிவிற்கு ஒரு காரணம்.

கச்சாஎண்ணையின் உற்பத்தியை குறைத்து விட்டார்களே, அதனால் விலைஉயருமே என்று நினைப்பவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், அது விலை உச்சத்தில் இருந்த போது அவர்கள் உற்பத்தியை பெருக்கியது, இப்போது அவர்கள் குறைத்துள்ளது அதிகப்படுத்திய உற்பத்தியை மட்டுமே! மேலும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரசரிவினால் மோட்டார் வாகனங்களின் பயன்பாடு பாதிக்கு மேல் குறைந்து விட்டது. தேவை அதிகமில்லாத போது விலை எப்படி உயரும்?

முக்கியமாக இந்த பதிவு எழுத காரணம் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம். அவர்கள் மீண்டும் லாரிகளை இயக்க ஆரம்பித்த பிறகும் பெட்ரோலிய பொருள்கள் விலை இறங்கவில்லை. காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. உரிமை பறிக்கப்படும் என நமது ஜனநாயக!? நாட்டில் சொல்லிய வேண்டுகோளே அதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது.
அவர்களது கோரிக்கையில் டீசல் விலை குறைப்பு மட்டும் இல்லை, அதனுடன் சேர்த்து வரியையும் குறைக்கசொல்லி கோரிக்கை வைத்தனர். எனது நண்பரின் டாரஸில்(10 சக்கர லாரி)கிளினராக ஒரு வருடம் சென்றவன் என்ற முறையில் அதில் நடக்கும் முறைகேடுகளும் எனது அத்துப்படி. அது பற்றி பத்து பதிவு எழுதலாம்


லாரி ஸ்ட்ரைக்கால் காய்கறிகளின் விலை உயர்ந்தது. அத்யாவிசய பொருள்கள் கிடைக்கவில்லை. முக்கியமாக போக்குவரத்துக்கு தேவையான பெட்ரோல்,டீசல். ஆனால் ஒரே ஒரு வண்டி மட்டும் எங்கும் நிற்க்காமல் ஓடியது, அதன் முன் கன்ணாடியில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்தவுடன் அனைவரும் ஒதுங்கி நின்றனர். அந்த வண்டி எது என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.


வழக்கம் போல பெட்ரோலிய பொருள்களின் விலை குறைப்பை தடை செய்து கொண்டிருக்கும் முதலாளி(ரிலையன்ஸ்)வர்க்கத்தின் ஆதரவாளர்கள் வந்து திட்டிவிட்டு போங்கள்

சிறு தவறும் பல கோடி செலவு வைக்கும்!

கற்காலத்திலிருந்து மனிதனின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் நமது நாகரீகத்தின் அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்து சென்றன. வெறும் பூமியையே சுற்றி சுற்றி வந்த மனிதனுக்கு டெலஸ்கோப் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, அதற்கு முன்னர் எல்லாம் சூரியன் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது, நட்சத்திரம் இரவில் நாம் ரசிப்பதற்காக, அதீத கற்பனையுடயவர்கள்! கவிதை எழுதுவதற்காக என்று தான் நினைத்து கொண்டிருந்தோம். டெலஸ்கோப்பின் வருகைக்கு பிறகு தான் ஒவ்வொரு நட்சத்திரமும், ஒரு சூரியன் என்பதை அறிந்தார்கள்.

ஆனாலும் இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தில் நாம் பார்த்தது அணு அளவே! தெரிந்து கொள்ளும் ஆர்வமே மனிதனை இந்த அளவு நாகரீகமாக மாற்றியது அனைவரும் அறிந்ததே!
டெலஸ்கோப் விசயத்தில் இதுவரை சிறப்பான கண்டுபிடிப்பாக இருப்பது ஹப்பிள் டெலஸ்கோப்.
அதன் பணியை எழுத எனது ஆயுள் பத்தாது. ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட ஒரு நிகழ்வை எழுதவே இந்த பதிவு.ஹப்பிள் டெலஸ்கோப்பை சிறப்பாக வடிவமைத்து பல கோடி ரூபாய் செலவில் வானில் அதை சுத்த விட்டார்கள், அதுவும் படம் எடுக்க ஆரம்பித்தது, ஆனால் எதுவும் தெளிவாக இல்லை, ஆராய்ச்சியாலர்கள் மண்டையை பிய்த்து கொள்கிறார்கள், தரையில் முதலில் நடந்த சோதனையில் எல்லாம் சரியாக தான் இருந்தது, பிறகு எப்படி.கிட்டதட்ட ஒரு பல்கலைகழகமே நடத்திய ஆராய்ச்சியில் ஒரு சிறு வாசர் அதிகமாக போனதே படம் அவுட் ஆஃப் போகஸ்சாக வருவதற்க்கு காரணம் என அறிந்தனர். 8 பேர் அடங்கிய விண்வெளி குழு சிறப்பு பயிற்சி பெற்று டெலஸ்கோப்பை சரி செய்ய தயாரானார்கள். ஒரு செண்டு(cent) பெறாத வாசரால் மீண்டும் பல கோடி செலவு செய்ய தயாரானது நாசாநீருக்கடியில் டெலஸ்கோப் போல் செட் அமைத்து அவர்கள் வானில் செய்ய வேண்டிய வேலையை செய்து பார்த்தார்கள். பல பயிற்சிகளுக்கு பின் அவர்கள் வானில் செலுத்தப்பட்டார்கள். கொஞ்சம் கூட ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில் வெற்றிகரமாக மீண்டும் ஹப்பிள் டெலஸ்கோப் இயங்க செய்தார்கள்.
இன்றும் வானில் இருக்கும் பல அதிசயங்களை நமக்கு படமாக அனுப்பி கொண்டிருக்கும் ஹப்பிளுக்கு பின்னால் பல ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. அவற்றிலிருந்து வரும் படங்கள் அண்டவெளியின் புதிர் முடிச்சுகளை தினமும் நமக்கு அனுப்பி கொண்டிருக்கிறது.

அவற்றிலிருந்து வந்த சில படங்கள்

சாதாரண டெலஸ்கோப்பில் எடுத்ததுஹப்பிள் டெலஸ்கோப்பில் எடுத்தது

சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!

நண்பர் நர்சிம் குமுதத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவிட்டிருந்தார்.
கடவுள்,மத,சாதி மறுப்பு கொள்கையுடயவன் என்ற முறையில் அவருக்கு என் முழு ஆதரவு.
ஆனால் நர்சிம்மின் கொள்கைகளை குறை சொல்லும் வகையில் இளையநண்பர் டோண்டு அவர்கள் ஒரு பதிவிட்டிருக்கிறார். அங்கேயே நான் எனது கருத்துகளை வாதித்து கொண்டிருந்தாலும், பின்னூட்ட புயலில் எனது கருத்துகள் காணாமல் போக வாய்ப்புண்டு.
அதனால் தனிப்பதிவு. இனி வாதங்களை இங்கே தொடராலாம்.
தொடர்புடைய என்னுடய பழைய பதிவு


டோண்டுவின் கொள்கைகளில் அவர் உறுதியாக இருப்பது அவரது உரிமை, ஆனால் அவைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று விவாதிக்க வேண்டியது கட்டாயம். சரி டோண்டுவின் கொள்கைகள் என்ன?

சாதிகள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது!அதை அழிக்க முடியாது!

இரட்டைகுவளை முறை உள்ள கடையில் தலித்துகள் டீ குடிக்க வேண்டாம், தனியாக டீக்கடை வைக்கட்டும்.

சாதிகள் இல்லையென்றால் தலித்துகள் முன்னேற வாய்ப்பில்லாமல் போகும்.

சாதிகளை மறுப்புவன் என்ற முறையில் நான் இதற்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.

சாதிகள் பல நூற்றாண்டுகளாக இருந்தன,அதனால் தான் நாம் எப்போதும் பின் தங்கி இருக்கிறோம். மனிதர்களிடையே ஒற்றுமை வேண்டுமென்றால் அவர் சாதியினர் ஒற்றுமையை பற்றி பேசுகிறார்.

இரட்டை குவளை முறை:
சாதியால் என்ன நன்மை என்று கேட்டிருந்தேன், அதற்கு அவரது பதில் நாடார் என்ற சாதி ஒன்று சேர்ந்து போராடி முன்னேறியதாம். கொஞ்சம் நுண்ணரசியலோடு பாருங்கள் நண்பர்களே முன்னேறியது என்றால் அது பின்னால் இருந்து முன்னால் வந்திருக்கிறது, அதை பின்னால் தள்ளியது யார்? உயர்சாதியினர் என்று அழைக்கபடுபவர்கள். சரி அவர்கள் முன்னேறி விட்டதால் நாடார்சாதி உயர்சாதி ஆகிவிட்டதா? சரி தானும் கீழிருந்து தான் மேலேவந்தோம் என்பதற்க்காக நாடார் சாதி,தலித்துகளுக்கு சகமரியாதை தருகிறதா?

டோண்டு என்ன சொல்கிறார், தலித்துகள் தனியாக டீக்கடை வையுங்கள், நீங்களே முன்னேறுங்கள்,

இங்கேயுள்ள நுண்ணரசியலை கவனிப்போம்,அதாவது தலித்துகள் முன்னேறுங்கள் ஆனால் தலித்துகளாகவே இருங்கள்,நாங்கள் உயர்சாதினராகவே இருந்து கொள்கிறோம்.
என்ன தான் பொருளாதரத்தில் முன்னேறி இருந்தாலும் நீ தலித் தான், நான் கூலி வேலைக்கு சென்றாலும் உயர்சாதி தான் மனப்பான்மை தானே இது!

சாதிமுறை ஒழிந்தால் எப்படி தலித்துகளுக்கு முன்னேற்றம் கிடைக்காது.
சாதியால் தானே அவர்களை பின் தங்கியவர்களாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.
சாதி இல்லையென்றாலே அவர்களும் சமம் தானே!

பார்ப்பன ஏழையும் இருக்கிறான்,தலித் கோடீஸ்வரனும் இருக்கிறான்,நான் சொல்வது சமத்துவம், சாதியற்ற சமத்துவம்.

தலித்துகளுக்காக பேசுகிறேன் என்று எப்போதும் பார்பனர்களை தாக்கி கொண்டிருப்பதையும் கண்டிக்கிறேன். அவர்கள் சும்மா இருந்தாலும் நீங்களே அவர்களை உயர்சாதி என்று கட்டம் கட்டிவிடுகிறீர்கள்.

நான் உட்கார்ந்து கொண்டே தான் இருப்பேன்.நீ என்னை தேடிவந்து சலுகைகளை கொடு என்று சோம்பேறிகளாக இருக்கும் தலித்துகளையும் கண்டிக்கிறேன். உழைப்பு இல்லாமல் நிரந்தர உயர்வு எப்போதும் கிடைக்காது.

என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்,
சாதி வன்முறைகளையும்,கலவரத்தையும் மட்டுமே கொடுக்கும்.
கூடவே அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வாங்கி கொடுக்கும்.
வேண்டாம் நண்பர்களே சக மனிதனை சாதிமுறையில் பார்ப்பது கேவலமானது!
யாராக இருந்தாலும் அவர்களையும் மனிதர்களாக நேசிப்போம்.
சாதி இல்லையென்றால் மனிதம் தானாக உயரும்.

என் கொள்கையில் உடன்பாடு உள்ளவர்கள் உங்கள் வருகையை பதிவிட்டு செல்லுங்கள்!
உடன்பாடு இல்லாதவர்களும் உங்கள் கருத்துகளை பதிவிட்டு செல்லுங்கள்

அன்புள்ள நண்பர் நர்சிம் அவர்களுக்கு!

உங்கள் மேல் என்றும் மாறாத அன்பு வைத்திருக்கும் வால்பையன் எழுதும் மடல்,

தங்களின் கடைசி பதிவில் பாலா,அமீர் மற்றும் சசியின் படங்களை பற்றி சிலாகித்து எழுதியிருந்தீர்கள், நானும் பின்னூட்டம் இட்டிருந்தேன், அடி மனதின் வன்மங்களை நினைவுக்கு கொண்டு வரும் படங்கள் அவை என்று, என் மீது உள்ள அன்பின் காரணமாக முதலில் என்னுடன் ஒத்து போகிறேன் என்று சொன்னாலும், பின்னாள் ஒரு பின்னூட்டதில் நாம் இந்த இயக்குனர்களை பாராட்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

எதை பாராட்டவேண்டும், பாராட்ட அதிலிருந்து நாம் எதை எடுத்து கொள்வது,
பழிவாங்குதலையா, துரோகத்தையா, காதலுக்காக உயிர்விடுவதையா?
உண்மையில் இது தான் தமிழ் சமூகதின் நிலை என்றால் இதற்காக நாம் வெட்கம் தானே படவேண்டும். ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா?
**************

ஒரு குடும்பம், கணவன், மனைவி மூன்று பெண் குழந்தைகள்.
குடும்ப தலைவன் புட்பால் விளையாட்டு வீரன். ஒரு விபத்தில் அவன் கோமா நிலைக்கு செல்கிறான். 6 மாத சிகிச்சைக்கு பின் அவனுக்கு நினைவு திரும்புகிறது, ஆனால் அவன் யார் என்பதை மறந்து விடுகிறான். அவன் உடனிருந்து பார்த்து கொண்ட மனைவியோ, அவனுக்கு நினைவு வரும் நான் பார்த்து கொள்கிறேன் என்று வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.

வீட்டில் அவனால் எதையும் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை,
அவனது மகள்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறான். அவனது மனைவியோ குழந்தைகளை சமாதானப்படுத்தி வைக்கிறாள். தினம் பிரச்சனை, ஒருநாள் அது முற்றி ஒரு மகளை அடித்து விடுகிறான். அவனது மனைவி மருத்துவமனையில் பேசி மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பி விடுகிறாள்.

சிறிது நாட்களுக்கு பின் வீடு திரும்புகிறான் கணவன், குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொஞ்சுகிறான், மனையிடம் அன்பாக நடந்து கொள்கிறான். இன்றிரவு மனைவி அவனது உடைகளை தற்செயலாக சோதனையிடும் பொழுது அவன் அனைத்தையும் எழுதி வைத்து செய்கிறான் என்பதை அறிகிறாள். முழுமையாக குணமடையாத கணவனுடன் தான் குடும்பம் நடத்துகிறோம் என்பதை அறிகிறாள்.

ஒருமுறை வீட்டில் யாருமில்லாத சமயம் அவனது மூத்த மகளின் காதலன் வருகிறான்.
அவனிடம் பேசுவதை அவன் மூத்த மகள் மறைந்திருந்து பார்க்கிறாள். தந்தையின் அணுகுமுறை அவளுக்கு பிடித்திருக்கிறது, தன் தந்தை மீண்டும் கிடைத்து விட்டதாக நம்புகிறாள். அவளின் பள்ளியிலிருந்து ”கோமாவிலிருந்து தன்நம்பிக்கையுடன் திரும்பிய மனிதர்” என்னும் தலைப்பில் பேச அழைப்பு வருகிறது. மனைவிக்கோ இவனால் பேச முடியும் என நம்பிக்கை இல்லை. அவனும் எழுதி வைத்து கொண்டு தான் பேசுகிறான்.
ஒரு இடத்தில் பேப்பர்கள் சிதற, எங்கே பேச்சை நிறுத்தினோம் என அவனுக்கு மறக்கிறது. பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறான்.

மனைவிக்கோ மனபுழக்கம் அதிகமாகிறது, குழந்தைகள் அவனை நம்புகிறார்கள்,
அவனுடய பழைய புட்பால் டீமிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் விளையாடும் விளையாட்டுக்கு இவனுக்கு அழைப்பு வருகிறது. மனைவி வேண்டாம் என்கிறாள், குழந்தைகள் அவனுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கிறார்கள்,

விளையாட்டு மைதானம், முதலில் சிறிது சொதப்பினாலும், விளையாட்டின் விதிமுறைகளை அறிந்து கொண்டு, தனது ஆழ்மனதில் இருக்கும் விளையாட்டு திறமைகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறான். குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மனைவி அப்போதும் நம்ப மறுக்கிறாள்.

தனது நிலையை கணவன் உணர்த்த முயற்சிக்கிறான்.
”அவன் இறந்து விட்டான், என்னில் அவனை தேடாதே, என்னை நானாக வாழவிடு”
என்கிறான்.
மனைவியோ தான் மற்றோரு ஆணுடன் வாழ்வது போல் உணர்வதாக சொல்கிறாள்.
கணவன் வீட்டை விட்டு செல்கிறான், எங்களை விட்டு தனியாக வாழ முடியாது என்று சொல்கிறாளே தவிர அவனை தடுக்கவில்லை மனைவி. அவன் சென்ற பிறகு பாத்ரூமில் தண்ணீரை திறந்து விட்டு வாய் விட்டு அழுகிறாள்.

மூத்த மகளின் நிச்சியம் வருகிறது, மகள் தந்தையையும் அழைக்கிறாள்,
வருகிறான் , எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொள்கிறான், அவனது நிலையை தெரிந்து கொள்ள விரும்பிய மனைவி நாம் டேட்டிங் போகலாம் என்கிறாள்.
போகிறார்கள், தனது கடந்த காலதை முழுவதும் மறந்த அவன் தனது மனையிடமே அதை கேட்கிறான். இரவு வீட்டிற்கு வந்து விட்டு செல்கிறான்.

மகளின் திருமணம் வருகிறது, இவனும் வருகிறான். திருமணம் முடிந்து பார்டியில் பேசுகிறான்.
“சிறுது நாட்களுக்கு முன் எனது மகளை எனக்கு யாரென்று தெரியாது, ஏன் உங்களை கூட தெரியாது, இருந்த போதிலும் என் மீது அன்பு செலுத்தி என்னை பராமரித்தது என் அன்பு மனைவி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றாள், அதே போல் எனது மகளும் அவளது கணவனிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்”

இரவு கிளம்புகிறான். மனையிடம் இன்னொரு நாள் எனக்கு டேட்டிங் தருவாயா என்று கேட்கிறான்.

கதை முடிவடைகிறது
the stranger, i married the movie
*************************

இந்த கதையில் எங்கேயேனும் வன்முறை வருகிறதா?
துப்பாக்கி சத்தம் கேட்கிறதா? இரத்தவாடை அடிக்கிறதா?

பொறுக்கி போட்டாலும் பத்தே கேரக்டர்கள் தான்!
மற்றவர்கள் எல்லாம் சில வினாடிகளே வருபவர்கள்!

ஒரு போஸ்ட்கார்டில் எழுதிவிடலாம் மொத்த வசனதையும், உணர்வுகளே பேசுகிறது,
யாரும் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை, யாரிடமும் யாருக்கும் கோபம் இல்லை,
மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள், ஹீரோயிசம் இல்லை, காமெடி இடைசொருகல் இல்லை, சோகத்தை காட்ட பாடல்கள் இல்லை, நம் கண்முண்ணே வாழ்வது போன்ற காட்சியமைப்புகள். இவை மற்ற மொழிகளுக்கும் சாத்தியமற்ற தன்மை இல்லையே!

தவறு எங்கே நடக்கிறது, கோமா ஸ்டேஜில் இருக்கிறான் என்பது கரு,
அந்த புள்ளியை மட்டும் வைத்து ஃப்ரெண்ட்ஸ் என்னும் ஒரு குப்பை வந்தது,
இன்னும் நிறைய குப்பைகள் வந்திருக்கலாம். இந்த குப்பைகளை கொட்டும் இயக்குனர்களை நாம் பாராட்டவேண்டுமா, மன்னிக்கவேண்டும் கடுமையான சொல்லுக்கு குப்பை பொறுக்கிகள் தான் அவர்களை பாராட்ட வேண்டும்,

ஒரு ஆங்கில படத்தை சிலாகித்து சொல்கிறேன் என நினைக்க வேண்டாம்,
நமது பாராட்டுகளுக்கு உண்மையில் அவர்கள் தகுதியானவர்களா என யோசிக்க மட்டும் சொல்கிறேன். இயக்குனர்களை ஊக்கப்படுத்துவோம் நல்ல சினிமா தருவதற்காக, அரைத்தமாவையே அரைப்பதற்கு வேண்டாம்

வயதுக்கு மூத்தவ்ர் என்ற முறையில் இந்த சிறுவன் எதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
தமிழச்சியிடம் ஜொள்ளு விடுவது தவறா!

இது அக்மார்க் புனைவாக கூட இருக்கலாம்,
யாரும் முயற்சி செய்து அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல


4:58 PM tamizachi: vanakkam
me: வணக்கம்
4:59 PM tamizachi: பதிவுகள் படிக்க முடியுதா?
5:02 PM me: இன்னும் பார்க்கல
tamizachi: சரி
5:03 PM me: பார்த்துட்டு சொல்றேன்
tamizachi: சரி
5:07 PM me: படிக்கமுடியவில்லை
tamizachi: :(
5:09 PM me: :(
5:10 PM tamizachi: x-(
5:11 PM me: சரி செய்யுங்கள் தோழி
tamizachi: :-/
5:12 PM me: என் மேல் கோபபட்டு என்ன செய்யிரது
tamizachi: மெயில் பாருப்பா
me: பார்க்கிறேன்
8 minutes
5:21 PM tamizachi: நான் போறேன்
me: see you honey
5:22 PM tamizachi: <3
me: take care
tamizachi: :(
5:23 PM me: என்னாச்சுமா செல்லம்?? :)
tamizachi: ;)
me: தினமும் எழுதும் பதுவுகளை எனக்கு மெயிலில் அனுப்பிவிடவும்
5:24 PM tamizachi: தாவூ தீந்திடும்
me: எவ்ளோ நேரம் ஆகபோவுது
முன்னை மாதிரி ப்ளாக்கில் இருந்தாலும் ரீடரில் வைத்து படிக்கலாம்
5:25 PM tamizachi: நக்கலு கூடிப்போச்சி
me: அன்பு அதிகமாகும் போது அதுவும் கூடுமாம்
5:26 PM tamizachi: அடிங் :-o
me: அது என்ன கெட்ட வார்த்தையா?
5:27 PM tamizachi: எனக்கு நிறைய வார்த்தைகள் பின்னூட்டம் வரும். கெட்டதா நல்லதா தெரியாது
5:28 PM me: அதை கூட அனுப்புங்க படிச்சா சிரிப்பா வரும்
5:29 PM tamizachi: அட இப்ப இல்லப்பா. முன்பு வந்தது.
5:30 PM me: ஒக்கே ஒக்கே
tamizachi: சரி போட்டா
me: சென்று வா என் செல்லமே!
5:31 PM tamizachi: போய்யா லூசு
5:32 PM me: என்னாச்சு அன்பே
தலையை வலிக்கிறதா?
tamizachi: கொல விழப்போது பாரு
me: நான் வேண்டுமானால் பிடித்து விடட்டுமா?
5:33 PM tamizachi: டாய் டவுசற கழட்டுவேன்
5:34 PM me: ச்சி இப்படியா அசிங்கமா பேசுரது
tamizachi: ச்சீய் எல்லாமே டபிள் மீனிங் இதுக்கு
5:35 PM me: நினைப்பு எங்கிருக்கோ அங்க தானே மீனிங் போகும்
tamizachi: எனக்கு தான் எல்லாம் டவுளா தெரியுதா
5:36 PM me: கிகிகிகிகி
tamizachi: வேல கிடக்குப்பா
5:37 PM me: இதுவும் வேலை தான்
tamizachi: உண்மையிலே வேலப்பா
me: சரி அன்பே பிறகு சந்திப்போம்!


8:55 PM tamizachi: வால் ஆன் லைனில் ரவி இருக்கார். என்னுடைய தளத்தில் எழுத்து தெரியவில்லை என்றாயே கேள்.
me: எனக்கு ஆன்லைனில் இல்லையே
8:56 PM tamizachi: சும்மா கிண்டல் வேனாம். எனக்கு தெரிது
8:57 PM me: கேட்டிருக்கிறேன்
8:58 PM tamizachi: சரி நான் வீட்டுக்கு போறேன்
me: அதுகுள்ளயா
ஏன்
8:59 PM tamizachi: என்ன அதுக்குள்ளவா? எதுக்குள்ள போறேன் இப்படி வயிறொpயற
me: வீட்டுகுள்ள தான்
tamizachi: வெளிய ஒரே பனி கொட்டுகிறது
9:00 PM யோவ் நான் என்ன வேலை செய்றேன்னு இருக்கிற நீ
me: அட ஜூப்பர் க்ளைமேட்
அப்படியே ஒரு டூயட் போடலாம்
9:01 PM tamizachi: அட போய்யா அடிக்கிற குளிர்ல கார கூட ஓட்ட முடியாது
me: ரெண்டு பெக்கு போட்டா லாரியே ஓட்டலாம்
9:02 PM tamizachi: அட பாவி என்னையும் குடிக்காரியா ஆக்கப் பாக்கிறீயா? உன் சவகாசமே வானாம்
me: கிகிகிகி
கோவிச்சுகாதிங்க மேடம்
9:04 PM நல்ல க்ளைமேட் யூஸ் பண்ணிக்கமுடியலைன்னு வருத்தம் தான்
6 minutes
9:10 PM me: போறாளே பொன்னுதாயி வால்பையனை டீல்ல விட்டு
இந்த படத்தை பார்த்த பிறகும் ஜொள்ளுவிட நினைப்பவர்கள்,
மருத்துவமனையில் முன்பதிவு செய்து கொள்ளவும்

பெரிய படங்களுடன் புதிய திரட்டி!!புதிய பதிவர்கள் வருவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவுக்கு புதிய திரட்டிகள் வரும்போதும் மகிழ்ச்சியடைய வேண்டும், ஒவ்வொரு புதிய திரட்டியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு மேம்பட்ட வசதிகளுடன் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அவ்வகையில் புதிதாக வந்திருக்கும் நெல்லைதமிழ்.காம் நன்றாக இருக்கிறது.


இது தான் முகப்பு பக்கம், கிட்டதட்ட தமிலீஷ் மாதிரியே தான் இணைப்பதெல்லாம் அதற்கு முன் நீங்கள் அதில் மெம்பர் ஆகவேண்டும், இன்னும் பல மேம்பட்ட வசதிகள் அதில் இணைக்கபோவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
பாருங்கள் படங்கள் எவ்வளவு பெரிதாகவும், தெளிவாகவும் தெரிகிறது.
வெறும் படங்கள் மட்டும் பதிவிடும் பதிவர்களுக்கு இந்த திரட்டி ஒரு வரப்பிரசாதம்

அந்த திரட்டிக்கு செல்ல இதை சொடுக்கவும்


தமிலீஷ் ஓனர் யாரு?


திரட்டி ஒன்று புதிதாக ஆரம்பித்தாலே பதிவுலக மக்களுக்கு இந்த சந்தேகம் வந்துவிடும்!
ஒருவேளை அவராக இருப்பாரோ, இல்லை இவராக இருப்பாரோ என்று, அவரவர்க்கு ஒரு நம்பிக்கை நிலை கொள்ளும் நேரத்தில் நம் பங்குக்கு இம்மாதிரியான திரியை கொழுத்தி போடுதல் பதிவுலகை கொஞ்சம் அயற்சியடையாமல் கொண்டு செல்லும்.

சரி விசயதிற்கு வருவோம், தமிலீஷ் தொடங்கப்பட்ட போது அதற்காக லட்சகணக்கில் விளம்பரம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா? ஆம் நடந்தது. ஆக இது ஒரு சாதாரண ஆள் செய்திருக்க முடியாது! பணபுழக்கதிலும், பதிவர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்த ஒருவரால் தான் இது சாத்தியப்படும், யார் அந்த ஒருவர்? பின் வரும் சாத்திய கூறுகளை ஆராய்வோம்.

இது சமீபத்தில் செந்தழல் ரவி அவர்கள் தமிலீஷ்க்கு நன்றி சொல்லி எழுதிய பதிவு.
சரி அவர் நன்றி தானே சொல்லியிருக்கிறார், பிறகு எப்படி அது அவருக்கு சொந்தமாகும் என கேள்வி வரலாம். இங்கே தான் அரசியல் இருக்கிறது. ஒரு திரட்டியின் நிர்வாகிகளே தங்களது முகத்தை காட்ட தயங்கும் போது அதன் உரிமையாளர் எப்படி தான் தான் உரிமையாளர் என ஒத்து கொள்வார். மேலும் சமிபகாலமாக செந்தழல் ரவி தமிழ்மணத்திலிருந்து ஓரங்கட்டப்படுவது அனைவரும் அறிந்ததே! அதற்கு இதுவும் ஒரு காரண்மாக இருக்கலாம் என ஏஜென்சி செய்தி சொல்லுகிறது. ஆக இவருக்கும் ஒரு சீட்டு போட்டு வைப்போம்.


இரண்டாவது ஓசை செல்லா! இவர் முன்பை போல பதிவுகள் எழுதுவதில்லை என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில், அந்த பதிவு அவருது தான் , இந்த பதிவு அவருது தான் என சர்ச்சைகள் கிளம்பியது. அவரும் அதை ஒத்து கொண்ட போது இவருக்கு முன்பை விட பதிவுகள் எழுத அதிக நேரமிருப்பது தெரிய வந்தது. (இப்போதும் என்ன பெயரில் எழுதி கொண்டிருக்கிறாரோ), சரி இந்த சர்ச்சைக்கும், தமிலீஷ்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. செல்லா தொழில் முறையில் ஒரு இணைய பக்க வடிவமைப்பாளர். அவரை போன்ற திறமைசாலிகளுக்கு இம்மாதிரியான திரட்டிகளை வடிவமைக்க அதிக பட்சம் ஒரு மாதம் போதும், ஆக ஓசை செல்லாவையும் ஒரு சீட்டில் அமர வைப்போம்.


அடுத்தது காசி, இவர் ஏற்கனவே இப்போது பிரபலமாக இருக்கும் தமிழ்மணம் என்னும் திரட்டியை உருவாக்கியவர், ஆக இவரையும் சந்தேக லிஸ்டில் சேர்த்து விசாரித்தால்,
”ஒரு திரட்டியை ஆரம்பித்து தாவூ தீர்ந்தது போதும், போதும் நீங்களும் உங்கள் அரசியலும்” என்று ஒதுங்கி விட்டதாக தெரிகிறது. தற்சமயம் நாம் வீட்டிலேயே சேவை(சேமியா) செய்யும் குக்கர் செய்து அதை மார்கெட் செய்து கொண்டிருக்கிறாராம்.
ஆக இவர் இதில் சம்பந்த பட்டிருப்பார் என்ற சந்தேகதை மூட்டை கட்டுவோம்.

தமிழச்சி, பல பிரபல பதிவர்களையே சில நாட்களில் கவனிப்பாரற்று கிடக்க செய்தவர்.
சில சர்ச்சைகளுக்கு பிறகு தமிழ்மணத்தில் இருந்து விலகி கொண்டார். அப்பொழுது தானும் இதை விட ஒரு பிரபல திரட்டியை உருவாக்குவேன் என சூளுரைத்ததாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தழல் ரவி மற்றும் ஓசை செல்லாவும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆக இவர்களின் துணையுடன் ஒரு திரட்டியை ஆரம்பிப்பது ஒரு கடினமான வேலையே இல்லை தமிழச்சிக்கு! ஆக இவருக்கும் ஒரு சீட்டு போட்டு உட்கார வைப்போம்!


ஆரம்பத்தில் தமிலீஷில் சேர்ந்தவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம், உங்களது பதிவு அங்கே பாப்புலர் ஆகும் பொழுது உங்களுக்கு ஒரு மெயில் வரும் உங்கள் பதிவு பாப்புலர் ஆகிவிட்டது என்று, அதன் கீழே இப்படிக்கு என்று பெயர் வருமே அதை கவனித்திருக்கிறீர்களா? ஆம் அங்கே அருண் என்று தான் இருக்கும். செந்தழல் ரவி, ஓசை செல்லா மற்றும் தமிழச்சிக்கும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் வால்பையன் என்ற அருணையும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு திரட்டியை நிர்வாகிக்கும் அளவுக்கு வாலுக்கு மண்டையில் மசாலா இல்லை என்பதால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்.

ஆக அலசி ஆராய்ந்து பார்த்ததில் தமிழச்சி இதற்கு உரிமையாளராக இருப்பார் என தெரிகிறது,

உங்களது சந்தேகங்களையும் தெரிவிக்கலாம்.

சர்தார்ஜி ஜோக்ஸ்!!

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
திட்டவதாக இருந்தால் இதை மெயிலில் எனக்கு அனுப்பிய மாதேஷ் அவர்களை திட்டுங்கள்

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?


----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

--------------------------------------------------------------------------------------------------

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்...!


நன்றி மாதேஷ் த கிரேட்

!

Blog Widget by LinkWithin