உலக பொருளாதாரம்!

சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக்ஸ் என்பதை வைத்தே கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் எப்படி டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய்க்கு வரும்னு உளரினாங்களோ அப்படி தான், ட்ரம்பிற்கும் விளம்பரம் செய்தார்கள்
மெக்ஸிகோவுக்கும், வட அமெரிக்காவுக்கும் குறுக்கே சுவர் கட்டுவேன் என்றது. பல முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை மாற்றியது, உலக நாடுகளை வம்பிழுத்து கொண்டே இருந்தது போன்றவவை நிச்சயம் தங்கம் விலை உயர்ந்தும்னு என்னை போல் பொருளாதாரத்தை கவனித்து கொண்டுயிருப்பவர்களுக்கு தெரியும்.
இந்திய பொருளாதாரம் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கையில் இருந்தாக நினைத்து கொண்டியிருக்கிறார்கள் அநேக பாஜகவினர், அது உண்மையில் கார்ப்ட்ரேட் கையில் இருக்கிறது. பாஜக தலைவர்கள் அறிக்கை விடுவார்களே தவிர அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தீர்மானிப்பது கார்ப்ட்ரேட் கம்பெனிகள் தான்.
போக அமெரிக்கா நம்மிடம் ஈரானில் கச்சா எண்ணைய் வாங்கக்கூடாது என சொன்னதற்கு மோடி தலை ஆட்டியது இந்திய பண மதிப்பை மேலும் மேலும் ஆழமாக குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.
வலதுசாரி சிந்தனை என்பது தனிமனித துதியை ஆதரிப்பது. முதலாளித்துவ சித்தாந்தத்தை பின்பற்றுவது. நல்லா கவனிங்க, டீவி விவாவத்தில் வலதுசாரி ஆதரவாளர் எல்லாரும் பாஜகவுக்கு ஆதரவா தான் பேசுவாங்க,அவர்களுக்கு அடிமட்ட மக்கள் மேல் துளியளவும் அக்கறை இல்லை

நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...

நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு

சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்தார்கள், அதற்கு காரணம் அதில் இரண்டு வங்கி நட்டத்தில் இயங்கியது. அதிலானென்ன தப்புன்னு கேட்கலாம். விவரம் புரிந்தவர்களுக்கு தெரியும், இந்திய அளவில் அதனால் எத்தனை வேலை இழப்புகள் ஏற்படும்னு

சமீபத்தில் அரசு பொது நிறுவனமான BSNL சம்பளம் கொடுக்க காசில்லாமல் நின்றது, அந்த சமயத்தில் தான் பொது வெளியில் தெரிய வந்தது, BSNL போல் சுமார் 8 அரசு பொது நிறுவனங்கள் வரை சம்பளம் கொடுக்க காசு இல்லாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது என்பது.

நேற்று வந்த செய்தி BSNL தனது பணியாளர்கள் 54000 பேரை கட்டாய ஒய்வு கொடுத்து வெளியே அனுப்புகிறது. அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியை பெற நடையா நடக்கனும், ஏன்னா போலியோ செட்டுமருந்து வாங்கவே கஜானாவில் காசு இல்லை.

பிறகு எப்படி விவசாயிகளுக்கு மட்டும் மோடி வருடம் 2000 ரூபாய் தரப்போறார். அது மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக செய்யும் மோசடி என்பதை அறியாதவனும், மோடியின் மலம் கூட உண்ண தகுந்தது என் நம்பிக்கொண்டிருக்கும் சங்கி மட்டுமே அதிலும் ராமர் கோயில் வந்தால் இந்தியா வல்லரசாகி விடும் என சத்தியம் செய்பவன் மட்டுமே அதை நம்புவான்

இன்று இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனம் லக்சுமி விலாஸ் வங்கியை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு நிறுவனத்தை ஒரு நிறுவனம் வாங்குவது சகஜம் தானே என்பதை ஒரு பொருளாதார நிபுணன் ஒத்துக்கொள்ள மாட்டான், பெரும் திமிங்கலம் ஒன்று எல்லா சிறு மீன்களையும் சாப்பிடுவதற்கு சமம்.காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சாத்தியமா? அதனால் தேசம் வளர்ச்சி பாதையில் செல்லுமா?
நல்ல கேள்வி தான்.. மாட்டுக்கு ஆதார் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? சாமியார்களுக்கு பென்சன் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? நல்ல கல்லூரிகளையும், சுகாதார கூடங்களையும் அமைக்காமல் ராமர் கோவில் கட்டுவது தான் தேசத்தின் வளர்ச்சியா? 3000 கோடியில் சிலை அமைப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா?

அந்த கூமுட்டைதனத்தை காங்கிரஸ் செய்யாது என நம்புவோம். ஆனால் காங்கிரஸ் யோக்கிய கட்சி இல்லையே. அதனால் தான் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக போன்றோர் காங்கிரஸையும், திமுகவை விமர்சித்துக்கொண்டு வருகிறோம், சரிப்பா காங்கிரஸ் வேண்டாம், சீமானோ, கமலோ, டிடிவியோ பிரதமர் நாற்காலியில் உட்கார முடியுமா? அவர்களுக்கு ஆதரவு என்று இந்தியா முழுக்க சில்லறைகளை சிதறவிட்டு கொண்டிருக்கிறார்களா?

நீங்கள் தான் சங்கிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறீர்கள். எங்கள் கொள்கை தான் பெருசு அதுவே உயிர் என மார் தட்டிக்கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் பெர்பெக்‌ஷனிசன் என்பது ஒரு மனநோய். சங்கிகள் கூட திருந்திவிடுவார்கள் போல., உங்கள் மனநோயை எப்படி சுகப்படுவதுன்னு எனக்கு தெரியல. நாளைக்கு நம்ம புள்ளகுட்டிங்க தெருவில் நிற்கும் போது உண்ர்வீர்களா இல்ல சீமானோ, கமலோ, டிடிவியோ உங்களுக்கு கோமணம் வாங்கி தருவார்கள் என நம்புக்கொண்டுயிருப்பீர்களா?

உங்கள் மனநோயை நீங்களே குணபடுத்திக்கொள்வது மட்டுமே ஒரே வழி. பாஜக தேசத்தை பாழ் செய்துவிட்டது, பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது. நம்மை கே.ஜி.எஃப் படத்தில் வரும் அடிமைகளை போல் நடத்த கார்ப்ரேட்டுகளை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறது. இனியும் இதன் அபாயத்தை நீங்கள் உணராமயிருந்தால். உங்கள் மனநோயை குணப்படுத்தவே முடியாமல் போகும்...

என்ன நடந்தால் நமக்கென்ன

ஒருவர் எதிர்மறையாக சிந்திப்பதை அவர் பாதுகாப்பாக கருதுவார் என்பதால் அது அவர் விரும்பம்னு விட்டலாம்., ஆனால் அந்த எதிர்மறை சிந்தனையை நம் மீது திணிக்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியும், பரிதாபமும் ஏற்படும். அவள் ஏன் அவன் கூப்டதும் போனா என்பது கூட தன்னை ஒழுக்கவாதி வட்டத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மனநிலை. போலயே சாதி வேண்டும் என்பவர்கள், மதம் வேண்டும் என்பவர்கள். கடவுள் நம்பிக்கையாளர்களை கூட விவாதத்தில் புரியவைக்க முடியும், குறைந்த பட்சம் 1%வது யோசிப்பார்கள்

ஆனால் இந்த எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் நம்மையும் சேர்த்து குழிக்குள் இழுப்பார்கள். பெரிய இவனாட்டும் எழுதுறியே நீ உலகை மாத்தியிருவா?  நீ எழுதினால்
சாதி ஒழிஞ்சிருமா?
மதம் அழிச்சிருமா?
கடவுள் இல்லைனு ஆயிருமா?
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துருவா?
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திருவா?

உனக்கு என்ன தாண்டா பிரச்சனை? என் எழுத்து மொக்கைன்னு நினைக்கிறியா, ஆமா மொக்கை தான், எல்லாரும் 2 வரி எழுதி 200 லைக்ஸ் வாங்கினா நான் 200 வரிகள் எழுதி 2 லைக்ஸ் வாங்குவேன். 5000 ஃப்ரெண்ட்ஸ். 10000 பாலோயர்ஸ் இருக்காங்க, ஏன் அவங்கல்லாம் படிக்கலன்னு நான் கவலை படலையே, உங்கிட்டயும் வந்து ஏண்டா என் கட்டுரைய படிக்கல, ஏண்டா லைக் போடலன்னு நான் கேட்க போறதும் இல்லயே.நான் எழுதுவது ஒரு முயற்சி, ஒரு முன்னெடுப்பு. என்னால் இமயமலையை நகர்த்த முடியாது, ஆனால் அதில் இருந்து ஒரு சின்ன கல்லை உடைக்க முடியும். கண்டிப்பாக முடியும். நான் தெரியாதுன்னு சொல்லுவேன், ஏன்னா அது எனக்கு உண்மையிலயே தெரியாது., ஆனா முடியாதுனு சொல்ல மாட்டேன், ஏன்னா என்னால் கத்துக்க முடியும், உலகில் யாரோ ஒருவரால் முடிகின்ற விசயம் நிச்சயம் என்னாலும் முடியும்

நான் எழுதி விட்டு, அதன் விளைச்சலை ரசித்து அறுவடை செய்ய அமர மாட்டேன், வேற என்ன எழுதலாம்னு யோசிக்க போயிருவேன். என் எழுத்து இந்த உலகில் 0.00000001% மாற்றத்தை ஏற்படுத்தினாலும் போதும், என் பேராசை ஒன்றே ஒன்று தான், நான் இந்த பூமியை விட்டு செல்லும்  பொழுது என் வருகையை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டாம், என் வருகை ஒரு சாதாரண மனிதனை போல் மறக்கப்பட கூடாது.

நீ முடியாது முடியாதுன்னு இப்படியே உட்காந்துகிட்டு இரு. நான் உருண்டாவது நகர முயற்சிப்பேன், நகர விரும்பும் நண்பர்கள் என்னுடன் பயணிப்பார்கள். என் எழுத்து சரியோ தவறோ, உண்மையோ பொய்யோ, ஆனால் எதையுமே செய்யாமல் இருப்பதற்கு அதையாவது செய்வது தான் என் பிறப்புக்கு நான் செய்யும் மரியாதை.

எங்கே செல்கிறது உலகம்?????

ஈகோவை தமிழ்படுத்தினால் நான் என்ற அகங்காரம் என்று புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் பல மருத்துவர்கள் அதன் உண்மையான அர்த்ததை புரிந்துகொள்ளவில்லை. உலகில் எல்லா மனிதர்களுகும் ஈகோ உண்டு. நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என்பதாக காட்ட அந்த உள்ளுணர்வு தூண்டிக்கொண்டே இருக்கும். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் எனக்கு அவனை தெரியும், இவனை தெரியும் என பேசுவதை கவனித்ததுண்டா. அதுகூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என காட்டுவது தான். நான் எந்த பழக்கமும் இல்லாத ஒழுக்கவாதியா காட்டிக்கொள்வதும் ஈகோ தான்.

மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை என சொன்னது. ஈகோ என்றாலே கோவமாக புரிந்துக்கொள்வது தான். ஆனால் ஈகோ அப்படியில்லை. அதீத அன்பில், அதீத காதலும் கூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன்/ள் என காட்டிக்கொள்ள முடியும். பெரும்பாலும் ஆண்கள் உடலாலும், பணத்தாலும், போட்டியிலும் தன் ஈகோவை காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு சில ஆண்கள் மட்டுமே அன்பில் தங்கள் ஈகோவை காட்டினார்கள், ஆனால் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை அழகு படுத்தி கொள்வதிலும்,அன்பிலும், காதலிலும் மட்டுமே தங்கள் ஈகோவை காட்டினார்கள். வேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனலாம். ஆண் எங்கேயோ, யாரிம் ஈகோவின் முன் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தன் ஈகோவையை பெண்ணிடம் காட்டினாலும் அவள் மாறாக காதலையே காட்டுவாள்

நாகரிகம் வளர வளர பொருள்முதல்வாத சிந்தனையில் இருந்து மனிதன் கருத்துமுதல்வாத சிந்தனைக்கு மாறினான். மனிதர்களில் ஏற்றதாழ்வு இல்லை என்றான். வர்க்கபேதத்தை சாடினான். அன்பே பிரதானம் என வாழ நினைத்தவர்கள் கருத்தியல் சிந்தனையை ஏற்று கலை, இலக்கியம், அறிவியல் என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நம்மால் சமூகத்துக்கு எதாவது செய்ய முடியுமா என யோசித்தார்கள். தங்கள் ஈகோவை விட மறுத்த கூட்டம், சாதி, மதம், வர்க்கம் என ஏற்றதாழ்வுகளில் வன்முறையை செலுத்தி தங்கள் ஈகோக்கு தீனி போட்டது

தனக்கு சமமாக அமர்வதா என்று இம்மானுசேகரன் என்பவர் கொல்லப்பட்ட கதை உங்களுக்கு தெரியுமா? சாதியம் என்னும் ஈகோ. உன் மதம் என்ன அவ்ளோ பெருசா என நாடு முழுவதுமே சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது. அதே வக்கிர ஈகோ தான் பெண்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆப்ஃப்ட்ரால் ஒரு பொம்பள எனக்கு ஐடியா கொடுக்கிறியா என்பதில் ஆரம்பித்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்துதல் வரைக்கும் தன் ஈகோவை காட்டும் முயற்சி தான்.

நான் எழுதும் பொழுது சகமனிதனை மனிதனாக மதியுங்கள் என்று எழுதுவேன். பெண்ணை மதின்னு எழுத மாட்டேன், அனைவர்களை மனிதர்களாக பார்க்க என்னால் முடிகிறது. இங்கே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே நாம் குழந்தைகளில் இருந்தே துவங்குகிறது. அவர்களுக்கு ஏற்றதாழ்வுகளை ஊட்டி விடுகிறோம். வர்ஷாவுக்கு 7.30க்கு கிளாஸ் முடியும், பெண் குழந்தைகளை பெற்றோர் வந்து கூட்டி செல்லனும், எல்லா குழந்தைகளையும் பெற்றோர் வந்து கூட்டி செல்லனும் என்பதே சரி, இந்த குழந்தை பருவத்திலே ஆணை உயர்த்தி விட்டால் அவன் பெண்ணை வீக்கர் செக்ஸா தானே பார்ப்பான்

பெண் குழந்தைகள் வெளியும் செல்லும் பொழுது உடை நேர்த்தியை கவனிக்கும் என்பதை பெற்றோர்கள் அதே கருத்தியலை ஆண் குழந்தைகளுக்கும் காட்டுகிறீர்கள். என் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் சாதி,மதம் என்ற இடத்தில் கோடுகள் தான் இருக்கும். இதனால் எதிர்காலத்தில் இடஒதுக்கிடு பெறுவதில் சிக்கல் வரும் என என் நண்பர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் சாதி,மத படிநிலைகளில் அவர்களை அமர வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு எல்லா சாதியிலும் நண்பர்கள் உண்டு என்பவன், எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் உண்டு என்பவன் உண்மையில் சமநிலையை உணரவில்லை, நண்பன் என்றால் நண்பன் மட்டுமே.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு அமைக்க தீர்மானிக்கிறீர்கள் என சிந்தித்ததுண்டா? நிம்மதியான வாழ்வா அல்லது வசதியான சொகுசான வாழ்வா? உண்மையில் சொகுசான வாழ்வுக்கு தான் அவர்களை பணம் சம்பாரிக்கும் இயந்திரமாக மாற்றிக்கொண்டியிருக்கிறீர்கள். அந்த போட்டியில் வர்க்கபேதத்தில் சிக்கி வசதி படைத்தவன் தன் ஈகோவை காட்ட வசதி இல்லாதவன் தன் ஈகோ தன்னை விட இயலாதவனிடம் போய் காட்டுவான். உண்மையில் இங்கே நடக்கும் எல்லா செயல்களும் பட்டாம்பூச்சியின் இறக்கை விளைவு தான். ”எல்லா தேவைகளுக்கு பின்னால் ஒரு காரணமும், எல்லா விளைவுக்கு பின்னால் ஒரு செயலும் இருக்கும்”

சாதிய படுகொலைகள், மதபடுகொலைகள், கூட்டுபாலியல் வன்முறைகள் அனைத்துக்கு பின்னும் பொருள்முதல்வாத கருத்தியல் சிந்தனையே உள்ளது. இது என் இடம், இது என் சொந்து, நீ என் அடிமை என்பதின் வெளிப்பாடே இத்தனை வன்முறைகளுக்கும் காரணம். நான் பிரச்சனைகளுக்கு தற்காலிய தீர்வை தேட மாட்டேன். பிரச்சனையின் அடி ஆழம் வரை யோசிப்பேன். இந்த மனிதன் வாழ ஒரே வழி பொதுயுடமை என்ற கருத்துமுதல்வாத சிந்தனை மட்டுமே

முதல் ரேங்க் எடுன்னு என படிக்க சொல்லாதீர்கள், இதில் எதுவோ இருக்கு அது என்னான்னு தெரிச்சுக்கோன்னு சொல்லுங்க.கற்பதை ஊக்கப்படுத்துங்கள் எந்த புத்தகமாக இருந்தாலும், ஒரு பூவை ரசிக்க கற்றுக்கொடுங்கள், ஓவியம் வரைய கற்றுக்கொடுங்கள், நடனம் ஆட கற்று கொடுங்கள், இயற்கையும் நாமும் வேறு வேறு அல்ல என கற்றுக்கொடுங்கள். இல்லாதவருகும், இயலாதவருக்கும் நாம் செய்வது உதவி அல்ல, அது மனிதத்தின் கடமை என கற்றுக்கொடுங்கள். நம் ஈகோவை நம்மால் ஒழிக்க முடியாது., ஆனால் நான் உன்னை விட அன்பானவன் என்பதில் கூட நம் ஈகோவை வெளிப்படுத்தலாம்

கிட்டதட்ட இரண்டரை லட்சம் வருடங்களாக இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருப்பது ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்ற மனிதர்களாகிய நாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அடுத்த பத்தாயிரம் வருடத்தில் மொத்த மனித இனமே அழித்து விடும் என்பதாகவே என் உள்ளுணர்வு உள்ளது. மனிதர்களின் போட்டி அரசியலில், வர்க்க பேதத்தில் தன் ஆழ்மன தூண்டுதலால் இந்த பூமியையும் அழிக்க போகிறோம். நம் சந்ததிக்கு கரிதுகள் மட்டுமே மிஞ்சம்.

மாறுங்கள். காதலாலும், அன்பாலும் உங்கள் ஈகோவை காட்டுங்கள்
மனிதம் வளர்ப்போம்


ரஃபேல் - நடந்தது என்ன?

The Hindu N.Ram அவர்களின் பேட்டி #BBC நடத்திய நேர்காணல்
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காணாமல் போனதாக சொன்ன ரஃபேல் ஆவணங்களை வெளியிட்டவர் N.ராம் தான் .
#கேள்வி: இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது?
#பதில்: இந்த விவகாரம் தொடர்பாக தி ஹிந்துவில் இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக சில ஆவணங்களை விளக்கியிருக்கிறோம். இதில் நாங்கள் கண்டுபிடித்தவற்றை சொல்கிறேன்.
முதலாவதாக ரஃபேல் விமானங்களின் விலை. இந்த விமானங்களை வாங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 2007லேயே துவங்கிவிட்டன.
2012ல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. 2016ல் திடீரென எல்லாவற்றையும் மாற்றி, 126 விமானங்களுக்குப் பதிலாக 36 வாங்கலாம் என முடிவுசெய்தார்கள்.
தவிர, #உள்நாட்டு உற்பத்தியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் மேற்கொள்ளும் என்பதும் ரத்துசெய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு விமானத்தின் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. அது ஏன் என்று பார்க்கலாம். அந்த விமானத்தில் இந்தியாவுக்குத் தேவையான 13 சிறப்பம்சங்களைச் செய்ய வேண்டும்.
இதற்காக அந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 1.4 பில்லியன் யூரோ தேவை என்றார்கள். பிறகு அது 1.3 பில்லியனாக குறைக்கப்பட்டது.
ஆனால், இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது ஒரு நிலையான செலவு. ஒரு விமானம் வாங்கினாலும் சரி, 100 விமானம் வாங்கினாலும் சரி - 1.3 பில்லியன் யூரோவைக் கொடுத்தாக வேண்டும்.
ஆனால், 126 வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால், ஒரு விமானத்தின் விலை மிகவும் ஏறிவிட்டது.
2007ல் பேசப்பட்ட விலையைவிட இது 41 சதவீதம் அதிகம். 2011ல் பேசப்பட்ட விலையை விட 14 சதவீதம் அதிகம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலரும் கேள்வியெழுப்பியபோதும் #அரசு இது குறித்து #பேச_மறுத்துவிட்டது.
ராணுவத்திற்கு ஆயுதங்கள், பிற பொருட்களை வாங்குவதற்கென விரிவான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு விற்பனை தொடர்பான பேரத்தைத் துவங்குவதற்கு முன்பாக, #நிபுணர் குழு அமைத்து நிறுவனங்களோடும் அரசுகளோடும் இவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படி தஸால் நிறுவனத்தோடு நடத்தும் போது அதற்கு இணையாக #அரசுத் தரப்பும் #பேச்சுவார்த்தை நடத்தியது என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கோப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.
கீழ் மட்டத்திலிருந்து துவங்கி, பாதுகாப்பு செயலர் வரை இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இணையான பேச்சுவார்த்தை நடத்தினால் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும்; அது இந்திய தரப்பின் வலிமையை குறைத்து #இந்தியநலன்களுக்கு_எதிராகஇருக்குமென்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கோப்பு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் #மனோகர் பாரிக்கருக்குச் செல்கிறது. வழக்கமாக இம்மாதிரி கோப்புகளை அவர் உடனடியாக பார்த்து அனுப்பிவிடுவார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பல வாரங்களாக அதை என்ன செய்வதெனத் தெரியாமல் வைத்திருந்தார் போலிருக்கிறது.
பிறகு ஒரு குறிப்பை அதில் எழுதுகிறார் பாரிக்கர்: '"இது ஓவர் ரியாக்ஷன், பிரதமரின் முதன்மைச் செயலருடன் பேசி இதைத் தீர்த்துக்கொள்ளவும்'."
இந்த விவகாரத்தில் அவருக்கு அப்போது ஏதும் நிலைப்பாடு இல்லை என்று அந்தக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது.
2016 செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்கள் முன்பாக, மேலும் சில விஷயங்கள் நடக்கின்றன.
அந்தத் தருணத்தில், தளவாடங்கள் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விதிகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன.
அவற்றில்
1) #ஊழலுக்கு எதிரான விதியும் விட்டுக் கொடுக்கப்படுகிறது. Penalty for undue influence என்பது நீக்கப்படுகிறது.
2)#கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தால், தண்டனை என்ற பிரிவு நீக்கப்படுகிறது.
3)#இந்த நிறுவனங்கள், நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றின் கணக்கு வழக்குகளை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என்ற விதியும் விட்டுக்கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் பிரமதர் அலுவலக தலையீட்டில் கடைசி நேரத்தில் நடக்கிறது.
ஊழலுக்கு எதிரான விதிகள், வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாம் இப்படி கைவிடப்பட்டது #மர்மமாகத்தான் படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த #நிதி_நிபுணரான_சுதான்ஷு_மொஹந்தி எழுதிய குறிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.
அதாவது #பாதுகாப்பு_அமைச்சர் திடீரென விதிகளை மாற்றி மொஹந்தியின் கருத்தைக் கேட்கிறார். அதை முழுமையாக படித்துப் பார்க்கக்கூட நேரம் அளிக்கப்படவில்லை.
இதனால் மொஹந்தி வேகவேகமாகப் பார்த்துவிட்டு, மூன்று குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது என்னவென்றால், #தஸால் நிதி நிலைமை குறித்து சந்தேகம் இருப்பதால், escrow account ஒன்றை உருவாக்கலாம்.
அதாவது
1)ஃபிரான்ஸ் அரசு ஒரு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும். 2)இந்தியா தஸாலுக்குத் தர வேண்டிய பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தும்.
3)தஸால், விமானங்களை ஒழுங்காக சப்ளை செய்தால், பணம் படிப்படியாக இந்திய ஒப்புதலுடன் தஸாலுக்குச் செல்லும்.
ஆனால், #மொஹந்தியின் #கோரிக்கை ஏற்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,
#விலை அதிகம்,
#ஒப்பந்தத்தின் ஷரத்துகள் முழுமையாக மாறிவிட்டது, #ராணுவத்திற்குத் தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானம்தான் கிடைக்கிறது என பாதகமான அம்சங்களே இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக #ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான விதி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு #பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் ஃபிரான்சிற்குச் செல்கிறார். அரசுத் தரப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறார்.
இந்தப் பேச்சு வார்த்தைகளில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றதாகத் தெரியவில்லை.
இந்த அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஸால் நிறுவனத்தின் #சிஇஓ எரிக் ட்ராப்பியர் "உள்நாட்டில் தயாரிக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கும் #HAL நிறுவனத்துடன் #95_சதவீதபேச்சுவார்த்தைகள் முடிந்தது "என்றார்.(அதாவது #HAL தான் உள்நாட்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்று உறுதி ஆன பிறகு தீடிரென அனில் அம்பானி க்கு இந்த வாய்ப்பு போகிறது)
பிரதமரின் அறிவிப்பில் HAL கைவிடப்படுகிறது. Make in India முழக்கம் கைவிடப்பட்டது. இது நிச்சயமாக தேசிய நலன்களைப் #பாதிக்கும் ஒரு #ஒப்பந்தம்தான்.
இப்போது ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை தெரியவில்லை. ஆனால், #அனில் அம்பானி #நிதி_நெருக்கடியில் இருக்கிறார் என்பது தெளிவு.
#கேள்வி. பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எழுதிய குறிப்பை முதல் நாள் வெளியிட்ட நீங்கள், அதற்குக் கீழே அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய குறிப்பை வெளியிடாதது ஏன்?
#ப. அன்றைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த நாள் அந்த ஆணவத்தை அவர்களே வெளியிட்டார்கள். நாங்கள் crop செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியேதும் நாங்கள் செய்யவில்லை. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்யும்போது முதலிலேயே எல்லா ஆவணங்களும் கிடைத்துவிடாது. படிப்படியாகத்தான் கிடைக்கும். படிப்படியாகத்தான் வெளியிடவும் முடியும்.
இந்த விவகாரத்தில் மனோகர் பரிக்கருக்குத் தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும் பிறகு, விதிகள் மாற்றம் போன்றவை அவருக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய கோப்பு அவருக்கு 2015 டிசம்பரில் அனுப்பப்படுகிறது.
வழக்கமாக விரைவில் முடிவெடுக்கும் அவர், மிகத் தாமதமாக 2016 ஜனவரி மாதம் பட்டுக்கொள்ளாமல் பதில் எழுதுகிறார். ஆனால், மாதங்கள் செல்லச்செல்ல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர் நேரடியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்.
#மனோகர் பாரிக்கர் இதில் தனக்கு #நேரடியாக தொடர்பில்லையென சொல்லலாம். ஆனால், வி.பி. சிங் போன்றவர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பார்கள்
#Sovereign guarantee அளிக்கப்படவில்லை. ஆனால் #Letter of comfort என்ற ஓர் ஆவணத்தை #ஃபிரான்ஸ் அளித்திருக்கிறது.
அதற்கு சட்ட ரீதியான எந்த அங்கீகாரமும் இல்லை. தஸால் நிறுவனம் வாக்குறுதி தவறினால், இந்த ஆவணம் எதற்கும் உதவாது.
#கேள்வி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அரசு மாறினால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுமா?
#பதில் ரஃபேல் நல்ல விமானம்தான். ஆனால், #யுரோ_ஃபைட் என்று ஒரு நிறுவனமும் இதில் போட்டியில் இருந்தது
யுரோ ஃபைட். அவர்கள் #20_சதவீதம் #தள்ளுபடி அளிக்க முன்வந்தார்கள். அந்த விமானத்தின் விலை, ரஃபேலைவிட குறைவு என நிதி நிபுணர்கள் குறிப்பெழுதியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த விமானத்தை வாங்கவில்லை. இனி இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முடியாது. ஆனால், விசாரணை நடத்த முடியும்
#கேள்வி : போஃபோர்ஸ் ஊழல் நீங்கள் தான் வெளியிட்டீர்கள் அது குறித்து கூறுங்கள்?
#பதில்: போஃபோர்ஸ் ஊழலை நாங்கள் வெளியிட்ட போது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது அந்த காலக்கட்டத்தில்.. இத்தனைக்கும் நானும் ராஜீவ் காந்தியும் நண்பர்கள்தான் .அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவோம் இலங்கை பிரச்சினை பற்றி எல்லாம் என்னிடம் கேட்பார் .போஃபோர்ஸ் பற்றி எதுவும் கேட்க மாட்டார் ஆனால் ஒரு சமயம் நேரில் சந்திக்கும் போது "அதில் ஊழல் நடந்தது என்றால் யார் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் ?"என்று கேட்டார் .நான் "மேலிடத்தின் சம்பந்தம் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை "என்றேன்
என்னை புன்னகையுடன் பார்த்து "எனக்கோ என் குடும்பத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் கிடையாது "என்றார்
ஆனால் ஒன்று ராஜிவ் மிகவும் கண்ணியமிக்கவர் .அதை மறுக்க முடியாது.
#கே. இந்த விவகாரத்தில் இன்னும் என்ன அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
#ப. இப்போது அதை சொல்ல முடியாது. ஆனால், ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
Thillakkarasi Sambath


தேர்தல் பயத்தில் மோடி....

சர்வதேச அரசியல் களத்தில் இம்ரான்கானின் இந்த முன்னெடுப்பு பாகிஸ்தான் பற்றிய முன் முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வைத்துள்ளது. நான் பல முறை சொல்லி வந்துள்ளேன், உலக அரங்கில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவது இந்தியா மட்டுமல்ல, அதற்கு நிகராக பாகிஸ்தானும் தான் என்று

இந்தியாவில் ராணுவ தளபதி ஆட்சியை பிடிக்க வழியில்லை, பாகிஸ்தானில் நடந்தது. பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் பெனாசீர் பூட்டோ(இஸ்லாமிய நாடுகளில் பெண் அரசியல் களத்தில் இருப்பதே பெரிய விசயம்) படுகொலை செய்யப்பட்டார்ஷீயா பிரிவு இஸ்லாமியர்கள், சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களில் வெடிகுண்டு வீசுவார்கள், மதம் என்பதே மடதனம் என்பது என் நிலைப்பாடு, மதம் பிடித்து விட்டால் குழந்தை, பெண் என்று கூட பார்க்காமல் கொலை வெறியோடு நோக்கும் சைக்கோதனம் வந்துவிடும்

இஸ்லாம் மட்டுமல்ல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின் நடந்த வன்முறையில் ஒரு கர்ப்பவதி பெண்ணில் கருவை உருவிய கொடுரம் இந்துதுவா தீவிரவாதிகளால் செய்யப்பட்டது. இந்த கொடூரங்களின் மூளையாக செயல்பட்டது அப்போதைய குஜராத் முதல்வர் மோடியும், இன்ன பிற ஆர்,எஸ்,எஸ் தலைவர்களும் தான், ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கை உடைத்துவிட்டார்கள்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்பு ப்டை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது துயரமான சம்பவம். கவனிக்க, இதே போன்ற வன்முறையில் தன் பாட்டியை, தந்தையை இழந்த ராகுல் அதை வைத்து அரசியல் செய்யவில்லை, ஆனால் மோடியோ இறந்த வீரர்களின் புகைபடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்நான் ஏழைதாயின் மகன், டீகடையில் டீ ஆத்திய டக்ளஸ் நான் தான் போன்ற உருட்டுகள் எடுபடாமல் போனதால் இப்படி கீழ்தரமான அரசியல் செய்வதோடு மட்டுமல்லாமல் இன்றைய பிரச்சாரத்தில் பாகிஸ்தானை நம்பாதீர்கள், இந்திய ராணுவத்தை நம்புங்கள் நாம் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என பேசியுள்ளார்

நான் ஹிட்லர் காலத்தில் பிறக்கவில்லை, ஆனால் ஹிட்லரின் பிரச்சாரம் எப்படி இருந்திருக்கும் என்பதை மோடியின் பிரச்சாரத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. மக்களிடம் அன்பை விதைக்காமல், சமத்துவத்தை விதைக்காமல், பிரிவினையை தூண்டி வன்முறை சம்பவத்தை ஏற்படுத்துவதே மோடியின் நோக்கமாக தெரிகிறது

,

தேர்தலில் வெற்றி பெற அமைதிபடை அம்மாவாசைக்கு நிகராக எல்லா வேலையும் மோடி செய்வார் என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகம் இல்லை, நான் மக்களை நம்புகிறேன், நிச்சயம் யோசிப்பார்கள், என் பக்கத்து வீட்டில் இருக்கும் இஸ்லாமிய சகோதரன் நிச்சயம் என்னை விரோத பார்வையில் பார்க்கவில்லை, அவனுக்கு ஆபத்தென்றால் அவனுக்கு பாதுகாப்பாக நான் நிற்பேன்

புழுகுமூட்டை பாஜக...

அமெரிக்க அரசு இந்தியா உட்பட ஆறு நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணைய் வாங்க தடை விதித்தது. கச்சா எண்ணைய் ஈரானில் மட்டும் இல்லையே, அங்கே வாங்க தடை இருந்தாலும் நம்மால் வேறு நாடுகளில் வாங்கலாமே என தோன்றும், இதில் பிரச்சனை என்னான்னா ஈரானில் மட்டும் நாம் நம் நாட்டு ரூபாயை கொடுத்து எண்ணைய் வாங்கலாம், மற்ற நாடுகளில் நாம் டாலர் கொடுத்து தான் வாங்கனும்,அதற்கு முதலில் நாம் டாலர் வாங்கனும், டாலர் அதிகம் வாங்கும் பொழுது அதற்கு டிமாண்ட் ஏற்படும், அப்படிதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்திய பண மதிப்பு 74 ரூபாய் வரை சரிந்தது

அதனால் பெட்ரோல் விலை உட்பட பல விலை பொருட்களின் அடிப்படை விலை உயரும் என்பது நாம் அறிந்தது, பெட்ரோல் விலை நூறை தொடும் என அனைவரும் எதிர் நோக்கிக்கொண்டிருக்க, ராஜ”தரித்திரன்” மோடி அமெரிக்கா சென்றார். தெய்வமே உன் கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுகிறேன் தெய்வமே. தேர்தல் முடியுற வரைக்கும் கருணை காட்டு தெய்வமே கெஞ்சி கூத்தாடி ஆறு மாதம் ஈரான் தடையில் இருந்து விலக்கு வாங்கிட்டு வந்தார்.

அந்த கெடு வரும் தேர்தலோடு முடிந்து விடும், அதன் பிறகு மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும் தடைக்கு தடை வாங்க முடியாது, வெனிசுலா என்ற நாட்டை அழிக்க தன் ரெண்டு கண்ணையும் குத்திக்க தயாராய் இருக்கும் கூமுட்டை நாடு அமெரிக்கா. சுருக்கமா சொல்லனும்னா இந்தியாவுக்கு ஒரு மோடி மாதிரி அமெரிக்காவுக்கு ஒரு ட்ரம்புவேலை வாய்ப்பு எவ்ளோ உருவாக்குனிங்க, அந்த தகவலை கொடுங்கன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது, அந்த துறையிடன் இருந்து அரசுக்கு தகவல் கேட்டு கடிதம் போனது. இது நடந்தது 2016 கடைசியில் 2018 கடைசியில் பதில் கடிதம் வந்தது, அந்த தகவல் அடங்கிய கோப்பை காணோம், தேடிகிட்டு இருக்கோம்னு ஆனாலும் மூத்திரகுடிக்கிகள் மோடி வேலை வாய்ப்பை உருவாக்கிட்டார்னு அடுத்தவன் பிள்ளைக்கு இனிசியல் போட பார்த்தாங்க, அதை கிழிச்சி தொங்க விட்டது ஞாபகம் இருக்கலாம்

சரியா தேர்தலுக்கு ரெண்டு மாசம் இருக்குறப்ப.
விவசாயிகளுக்கு நேரடி மானியம் வருசம் 6000னு ஒரு அறிக்கை, அரசு நிதிநிலை அறிக்கைபடி ஜிடிபி உயர்ந்துள்ளாதாக காட்டப்பட்டுள்ளதும் பிராடு தனம் தான், உள்நாட்டு மொத்த உற்பத்தியை நேரடியா போய் கண்காணிக்க முடியாது, வரி வருவாய் கொண்டே கணிக்கிடப்படும், மத்திய, மாநில ரெண்டு வரிகளை ஒன்றாக இணைத்து விட்டு வரிவருவாய் அதிகரித்துள்ளதுன்னு எப்படி வெட்கம் இல்லாமல் இந்த மூத்திரகுடிக்கிகள் சொல்றாங்கன்னு எனக்கு புரியவேயில்ல

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உலகின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோகளை இது தான் தற்போதைய குஜராத், இதே குஜராத் மாடல் இந்தியா முழுக்க உருவாக மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னானுங்க, இதில் ஒரு மாபெரும் காமெடி, கம்பியூட்டர் மதர் போர்டை குளோஸா போட்டு எடுத்து வானுர்ந்த கட்டிடம்னு சொன்னாங்க, அதையும் நம்பி ஓட்டு போட்டது மூத்திரகுடிக்கிகள். இப்ப தமிழகத்துக்கு மோடி உருவி விட்டார், அதனால் தமிழகம் வளந்துருச்சுன்னு போட்டோஷாப் தூக்கிட்டு திரியிறானுங்க

மோடி வாஷ் அவுட் ஆகிட்டா விதவிதா பொண்ணுங்க போட்டோகளை கக்கத்தில் வச்சுகிட்டு பஸ் ஸ்டேண்ட் பஸ் ஸ்டேண்டா திரிவானுங்க போல பாவம். இவனுங்களுக்கு எவ்ளோ எடுத்து சொன்னாலும் அறிவும் வர மாட்டிங்குது, இந்தியாவின் மானத்தை காப்பாற்ற மூத்திரகுடிக்கிகளை மொத்தமா மும்பை அழைச்சிட்டு போய் அறுத்து விட்ரனும், அப்ப தான் அடுத்த தலைமுறையாவது சிந்தித்து செயல்படும் அறிவுசார் சமூகமா இருக்கும்

ஐ லவ் ஜாக்கிசான்......

நண்பர் பாலகணேசன் எழுதிய ஜாக்கிசான் பதிவு எனக்கு மலரும் நினைவுகளை தூண்டி விட்ருச்சு

நான் பிறக்கும் போது பார்ன் வித் சில்வர் ஸ்பூன் டைப் தான், எங்கப்பாவுக்கு தற்காப்பு கலைகள் மேல் ஆர்வம் அதிகம். ப்ரூஸ்லீ படம் எப்ப வந்தாலும் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஒரு ஆட்டோகாரரிடம் பணம் கொடுத்து என்னை வீட்டில் இருந்து கூட்டிட்டு வந்து அவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இண்டவெல்லில் முதல் ஒரு ஐஸ்கிரிம் திரும்ப படம் போட பெல் அடிச்சதும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்டில் கொண்டு போய் விடனும்.அப்ப ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் படங்களுக்கு மதுரை தங்கரீகல் தியேட்டர் ஃபேமஸ். சில வருடங்கள் கழித்து மாப்பிள்ளை விநாயகர் ஆங்கில பட இடத்தை பிடித்தது. ஜெட்லியோட த ரெபள் என்ற படம் அஙக் தான் பார்த்தேன், அதோட ஒரிஜினல் டைட்டில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனாதங்கரீகல் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் நிற்கும் போது செம காமெடியா இருக்கும், வண்ணதிரை, சினிகூத்தி பத்திரிக்கை தோத்துபோகும் அளவு சினிமா கிசு கிசு பேசிக்கொள்வார்கள். ப்ரூஸ்லீயோட அண்ணன் பையன் தான் ஜெட் லீ, ஜாக்கிசானோட வளர்ச்சி பிடிக்காம இறங்கி விட்ருக்காங்க, ப்ரூஸ்லீக்கு விசம் கொடுத்து கொன்னதே அவர் பொண்டாட்டி தான்னுஜாக்கிசான் காலத்தில் ஸ்டண்ட் அஸிஸ்டண்டுகளாக வந்தவர்களில் முக்கியமானவர்கள் samohung மற்றும் yuanbio இருவரும் ஜாக்கிசான் கூட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் சிறந்த நண்பர்களும் கூட, இதில் சமோஹங் இயற்கையாவே பெருத்த உருவம், அந்த உருவம் வச்சிகிட்டு பல்லி அடிச்சு ஃபைட் பண்றது ஆச்சர்யம், இப்மேன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 58. ஃபைட் செமையா இருக்கும்மார்சல் ஆர்ட்ஸ் சண்டை படங்களில் ஜாக்கி, சமோஹங், யிவான்ப்யோ மூன்று பேர் தவிர மற்ற அனைவருமே ரொம்ப சீரியஸா சண்டை போடுவாங்க, சண்டை காட்சிகளில் காமெடி புகுத்தியது முதலில் ஜாக்கி சான் தான், அவரு கூட ஆரம்பகால படங்கில் சீரியஸா தான் சண்டை போட்டுகிட்டு இருந்தார். த ட்ரங்கின் மங்கி படத்தில் எதேச்சையா சண்டையில் காமெடி அமைந்து அது ஹிட் ஆகி, அதே ஃபார்முலாவை கடை புடிக்க ஆரம்பித்தார்ப்ராஜெட் ஏ படம் வரை ஆரம்பகால சீன கதைகள் இருக்கும், அதன் பிறகு சமகாலத்துக்கு சீன சண்டை படங்கள் வந்தது, அதில் அவர் நண்பர்களை இணைத்துக்கொண்டார். இந்த மூவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள், இந்த மூவருமே படங்களை இயக்கியும் உள்ளார்கள். முக்கியமா இந்த மூவர் படங்களில் முதலில் வில்லனிடம் அடி வாங்கிட்டு கடுமையான பயிற்சிக்கு பின் வில்லனை ஜெயிப்பது போல் இருக்கும்

ஆனால் ஜெட்லீயின் வருகைக்கு பின் கள எதார்த்தமே மாறிப்போனது. மார்சல் ஆர்ஸ் சண்டை படங்கள் என்றாலே மேஜிக் ஷோ மாதிரி ஆகிருச்சு, முக்கியமா த ஒன் என்ற ஜெட்லி படம் பார்த்திங்கன்னா தெரியும், ஹார்லி டேவின்சன் ரெண்டு பைக்கை தூக்கி ஒருத்தனை அடித்தான், நிஜத்தில் ரெண்டு சைக்கிளை தூக்கி அடிப்பதே கஷ்டம்.ஆயிரம் குங்க்ஃபூ நடிகர்கள் வந்தாலும் ஆதிகால ஜாக்கிசான் படம் போட்டாலும் சரி, கடைசியா வந்த ப்ளீடிங்ஸ்டீல் படம் போட்டாலும் சரி, வேற சேனலே மாத்தாமல் பார்த்துட்டு இருப்பேன், ஆம்பளைகளையில் யாரையாவது லவ் பண்றியான்னு கேட்டா நான் ஜாக்கிசானை தான் சொல்வேன்

காதலர்தின ஸ்பெஷல் - 700வது பதிவு

உயிரற்ற ஒரு பொம்மையுடன் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும், கட்டிபிடித்து உறங்கும் பால்யத்தில் ஆரம்பித்தது நம் நிபந்தனையற்ற காதல்.
எது காதல்? அதன் எல்லை என்ன? அதன் வரையறை என்ன? போன்ற எந்த அளவுகோளுக்குளும் சிக்காமல் சாதி, மதம், மொழி, இனம் யாவும் கடந்து மனிதம் ஒன்றை மட்டும் பேசுவதே காதல். அது உணர்வுபூர்வமானதா அல்லது மூளையின் ரசாயன மாற்றமா? எதுவாக இருந்தால் என்ன? அந்த அனுபவம் கிடைக்குமா ஏங்கும் கோடி கணக்கான உயிர்களில் நானும் ஒருவன் தான்.

நாம் இல்லையென்று சொன்னாலும் உலகில் 99.99% காதல் தோற்றத்தின் ஈர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு 4 மாதங்களுக்கு மேலும் தொடர்ந்து இருந்தால் அதை காதல் எனலாம். ஈர்ப்பில் தோன்றிய காதலாக இருந்தாலும் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் ஆளுமை வேண்டும். அப்படி இல்லாத காதலில் ஒருபக்க ஆளுமை அதிகமாக இருக்கும். ஒருவர் ஆல்ஃபாவகவும். ஒருவர் ஃபீட்டாவகவும் இருப்பார்/. உலகில் முக்கால்வாசி தம்பதியர்கள் இப்படி தான். ஆனாலும் அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

காதலின் பாலபாடமே நிபந்தனையற்ற காதல் தான். ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும். தவறுகளோ, நிராகரிப்புகளோ பெரிதாக தோன்றாது. சிறிது நாட்கள் ஆனப்பின் ஆண்களுக்கு நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பொஸிசிவ்நெஸ்ஸும், பெண்களுக்கு குறை கண்டுபிடிக்கும் குணமும் வந்து விடும். காதலிக்கும் பொழுது வரும் சண்டை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு. மூணு முறைக்கு மேல் சண்டையின் போது உனக்கும் எனக்கும் ஒத்து வராது என சொல்வீர்களேயானல் நீங்கள் பிரிந்து விடுதலே நலம். இருவருக்கும் இருக்கும் காதலை விட உங்கள் ஈகோ தான் உங்களை ஆள்கிறது.

ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராபதி போன்ற சங்க காதலில் இருந்து சமீபத்தில் பார்த்த டைட்டானிக் காதலுக்கு வந்தாலும் ஒரு தனி மனிதன் தன் காதலே சிறந்தது என்பான். அந்த காதல் கல்யாணம் என்ற கமீட்மெண்டில் நுழையும் போது சாதல் ஆகிறது. அவனது சிறந்த காதல் தியாகமாக மாறிவிடும். விவாதத்தின் பொழுது நாம் காதலித்த பொழுதில் என்ற வார்த்தை வரும். அப்படியானால் அவர்கள் இப்பொழுது காதலிக்கவில்லை.

திருமண உறவுகள் உடைய காரணமே இதுதான். கல்யாணத்திற்கு பிறகு எங்க போயிடுவா கழுதை என்ற அலட்சியபோக்கு. நான் என்ன வேணும்னாலும் தெள்ளவாரிதனம் பண்ணுவேன். நீ அடங்கிதான் இருக்கனும் என்ற ஆணவ போக்கு பெண்களை வெளியே கொண்டு வருகிறது. காதலிக்கும் பொழுது நேரம் காலம் இல்லாமல் மணிக்கணக்காக பேசும் காதலன். கணவன் போஸ்டிங் வந்ததும் ஏன் சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ற எங்கிறான்.உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தார் அவரது தீஸிசை சப்மிட் பண்ணுவதற்கு முன்னரே அவருக்கு வாதம் வந்து கழுத்துக்கு கீழ் செயல் இழந்து போயிற்று. ஆயினும் அந்த பெண் அவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் முதல் குழந்தையின் ஆசியருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மூன்றாவது குழந்தை அந்த ஆசிரியருக்கு பிறந்ததாகவே சந்தேகப்பட்டனர். ஆனாலும் ஸ்டீபன் எதுவும் கேட்கவில்லை. அவரை கவனிக்க வந்த பெண் இவர் ஆளுமையில் காதல் கொள்ளவும் தன் மனைவியை அழைத்து இனி உன்னுடன் பயணிக்க முடியாது என விவாகரத்து வழங்கிவிடுவார். ஒரு வருடம் கழித்து அவர் அந்த ஆசிரியரை திருமணம் செய்து கொள்வார்.

ஒரு காதல் பயணிக்க தோற்றமும், ஆளுமையும் மட்டுமே போதாது. புரிதலும், அர்பணிப்பும், தேவைகளும் பூர்த்தியும் தேவைபடும் என்பதை உணர்த்தியது அவரது வாழ்க்கை. அவர் சமாதானம் செய்திருக்கலாம். அல்லது அந்த ஆசிரியருடன் தொடர்பை துண்டிக்க செய்திருக்கலாம். ஆனால் ஸ்டீபன் அவர் மனைவி மேல் வைத்திருந்த காதலே அவருக்கு விவாகரத்து கொடுக்க வைத்தது. துணைக்கு தெரியாமல் செய்வது கள்ளகாதல் என்றால் உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வதும் கள்ளகாதல் தான். சமூகம் ஒழுக்கசீலர்கள் வேசம் போடும். ஆனால் அவர்களுக்கும் தெரியும். இது இயற்கையான உணர்வு. நமக்கும் ஏற்பட்டுள்ளது என்று.

தனி மனித உணர்வுகள் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த உங்களுக்கு சில தோல்விகள் தேவையென்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுகொள்ளப்படாத தோல்வி உங்களுக்கு இயலாமையை ஏற்படுத்தும். காதலே போலிதனம் என்பீர்கள். உலகில் இருக்கும் பெண்களெல்லாம் சாபம் என்பீர்கள். நம்மை சுயபரிசோதனை செய்தும், மறுசீரமைக்க வாய்ப்பு கிடைத்தும். தம்மை நியாயபடுத்தி பிறர் மேல் எப்போதும் குறை சொல்லிகொண்டிருக்கும் மனிதம் அடுத்த படிக்கு நகரவே நகராது. மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்னுடம் பயணித்த பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தேன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

பெண்ணுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டியதில்லை. அது அவர்களிடமே உள்ளது. அதை நீங்கள் பறிக்காமல் இருந்தாலே போதும். ஆனாலும் பெண்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதிலேயே வாழ்வை செலவிடுகின்றனர். நீங்கள் ஆண் என்பதை உங்கள் தோற்றம் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. ஒரு பெண் உங்களிடம் பாதுகாப்பை உணராமல் உங்கள் ஆண்மை முழுமையடையாது. பெண்ணின் சுதந்திரபோக்கு சில வலிகளை தருவது போல் இருக்கலாம். ஆனால் எனக்கு நேர்ந்த ப்ரேக் அப் என் திமிரையும் ஆணவத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து எரிந்தது.

காதல் அழகான உணர்வு. அங்கிகாரம், நம்பிக்கை. நீ பேசினாலே போதும் எதையும் செய்வேன் என்று யானை பலம் தரும். நிபந்தனையற்ற காதலை செலுத்துங்கள். நீங்கள் என்ன பெற்றாலும் அன்பொன்றை மட்டுமே பதிலாக திருப்பி கொடுங்கள். கற்காலம், இரும்பு யுகம் தாண்டி நாம் காதல் காலத்தில் வாழ்துக்கொண்டிருக்கிறோம். அன்பு ஒன்றே வன்முறைக்கு மாற்று. இந்த உலகம் அன்பினால் இயங்கப்படவேண்டும். ஆதலினால் காதல் செய்வீர்

இனிய அவளும் நானும் தினவாழ்த்துகள்

ஒரு கதை சொல்லட்டா சார்.......

மெமரீஸில் ஷேர் பண்ணப்பட்ட ஒரு போட்டோவுக்கு இயேசுவின் மேல் அன்பு கொண்டு, ட்ராபிக்ல மாட்டுகிட்டார் இல்லைனா இந்நேரம் வந்துருப்பார் என வாஞ்சையுடன் போஸ்டர் ஒட்டும் நல்லுள்ளங்கள். அதெப்படி படைப்பாளி இல்லாமல் படைப்பு உருவாகும் என்ற கேள்வியை வைக்கும் அறிவாளிகள், உலகை படைத்தது கடவுள்னா கடவுளை படைத்தது என்ற கேள்விக்கு அப்பாலே போ சாத்தானே என கொஞ்சும் பாசக்காரர்கள் முட்டு கொடுக்குறாங்க சாலையோரம் இருக்கும் குப்பை தொட்டியை கிளரினால் எப்படி விதவிதமான குப்பைகள் வருமோ அத்தனை பிரிவுகள் இருக்கும் மதத்தில் கிறிஸ்தவமும் ஒன்று, அத்தனை பிரிவுகளில் ஒன்றில் கூட பழைய ஏற்பாட்டை புறக்கணிக்கிறோம் என்று ஒருவரும் சொன்னதில்லை. வாகனத்தில்/ சர்ச் சுவற்றில் கூட பெரும்பாலும் பழைய ஏற்பாடு வசனங்களே எழுதப்பட்டுள்ளன. ((நான் கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும்)- (அதுக்கு தான் இப்ப உன்னை வச்சு செய்றேன்)) ஆனா இவர்கள் பழைய ஏற்பாட்டை 90% மக்கள் புறக்கணிப்பதா சொல்றாங்க இயேசு பிறப்பால் ஒரு யூதர், அவரது காலத்தில் சிலை வழிபாடும், கடவுளுக்கு பலி கொடுக்கும் பழக்கமும் இருந்தது. நிச்சயமாக கடவுள் அதை விரும்ப மாட்டார் என்றார். இயேசு தனிமையில் தியானத்தில் இருந்த பொழுது தான் சாத்தனை பார்த்ததாக கூறீயுள்ளார், மனசிதைவு நோயாளிகள் பலரும் அப்படி சொல்லியுள்ளார்கள். கண்ணு கொடுத்தது, உயிர் கொடுத்தது அவரது சீடர்களின் செய்திகள், நித்தியானந்தா சீடர்களுக்கு/ ஜக்கி சீடர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை விட அதை விட அறிவியலில் பின் தங்கியவர்கள் என்பதை மறுக்க முடியாது, இயேசு உயிர்தொழுந்ததாக சொல்லப்படுவது கூட பொதுமக்கள் யாரும் பார்த்ததா குறிப்புகள் இல்லை.

ஆக இயேசு காலத்தில் பின் தங்கி இருந்த சமூகம் இயேசுவின் சீர்திருத்தற்க்கு பின் எவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்த முட்டாபதர்கள் செய்தது என்ன? பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்றால் வீட்டு சிறை, பூமி தட்டை அல்ல, உருண்டை என்றால் உயிரோடு எரிப்பு. இதுல காமெடி என்னான்னு இன்னும் கூட அறிவியலை ஏற்றுக்கொள்ளாத மடமதவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்ப நான் ஒரு கதை சொல்றேன், உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும், ஒரு ஊரில் ஒரு சர்ச் ஒன்று இருந்தது, அந்த சர்ச்சில் எதிரில் அரசு அனுமதியுடன் ஒருவர் பார் ஓப்பன் பண்றார், உடனே சர்ச் பாதிரியார் என்ன பண்றார், ஊர்ல இருக்கும் எல்லா மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார், எல்லாரும் வாங்க, நாம கூட்டு பிரார்த்தனை பண்ணி, அந்த பாரை அங்கியிருந்து அகற்றுவோம்னு, பிரார்த்தனை முடிந்து அன்று இரவு ஒரு மீன்னல் தாங்கி பார் சேதமடைந்தது. பார் ஓனர் கோர்ட்டில் வழக்கு போடுறார், சர்ச் பாதிரியாரி கூட்டு பிரார்த்தனையால் என் பார் சேதமடைந்தது, எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வழக்கு விசாரணையில் பாதிரியார் சொன்னார், பிரார்த்தனையினால் கேட்டது நடக்கும்னா நாட்ல எவ்ளோ மாற்றங்கள் வந்துருக்கும், பிரார்த்தனையினால் அம்மாதிரி நடந்ததா குறிப்புகள் இல்லை, இது தற்செயலாக நடந்தது, எங்க பிரார்த்தனைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு. சுருக்கமா சொல்லனும்னா. கன்னிமேரியை நம்புவானுங்க, கலவி கொள்ளாமல் கர்ப்பம் ஆனேன்னு அவங்க பொண்ணு சொன்னா நம்ப மாட்டாங்க, டிசைன்ல இருக்காம்

இந்தி சினிமாவும், தமிழகமும்,,,...

போன் எடுத்துட்டு போனா சரியா முள் எடுத்து மீன் சாப்பிட முடிவதில்லைன்னு இன்னைக்கு போனை வீட்லயே வச்சிட்டு போனேன், ஆனாலும் கை சும்மா இருக்காதே, அங்கே பார்சல் மடிக்க வைத்திருந்த பழைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பேப்பரை எடுத்து புரட்டினேன், அதில் நான் படித்த கட்டுரையின் சுருக்கம் இது

breaking language barriers என்ற தலைப்பு தான் அந்த கட்டுரை படிக்கத்தூண்டியது. கட்டுரை ஆசிரியர் வட இந்தியர் என்பது பெயரை பார்க்கும் பொழுதே தெரிந்து, அவர் சொல்றார்.

2001-2011 நடந்த கணக்கெடுப்பில் அதாவது உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்ற பகுதியில் அதற்கு முன்பை விட 50%க்கும் அதிகமானோர் இந்தி தெரியும் என குறிப்பிட்டுள்ளனர், அதனால் இந்த ஆட்சி தான் இந்தியை திணிக்கிறது என சொல்லமுடியாது

1968 ஆம் ஆண்டு ராஜ்கபூர், வைஜெயந்திமாலா நடிந்த சங்கம் என்ற திரைபடம் சென்னை சாந்தி தியேட்டரில் 188 நாட்கள் ஓடியது, 1969 ஆம் ஆண்டு வெளியான ஆராதனா(ருப்புதரா மஸ்தானா பாட்டு) என்ற திரைபடமும் மாஸ் ஹிட்.ஆரம்பத்தில் இருந்து சமீபத்தில் வந்த dangal படம் வரை தமிழகத்தில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது, dangal திரைப்படம் தமிழகத்தில் 153 திரையங்களில் திரையிடப்பட்டது எங்கிறார்

மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன் அவ்ளோ ஏன் இளம் நடிகர் தனுஷ் கூட இந்தியில் நடிப்பதை பெருமையாக கருதிகிறார், ஆனால் இந்தி நடிகைகளை தவிர ஆண் நடிகர்கள் தமிழ் படங்களில் லீடிங் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றது இந்தி என முடிக்கிறார்.மறுத்து பேசும் திரைதுறை பிரமுகர் சொல்கிறார். நகரமயமாக்கலின் காரணமாக மக்கள் CBSE மற்றும் ISBE!?(அப்படி ஒன்னு இருக்கா) பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்கிறார்கள், அங்கே ஹிந்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

ஆதியில் இருந்தே சென்னையில் மார்வாடிகள் அதிகம், மேலும் மேல் சொல்லப்பட்ட படங்கள் தமிழகத்தில் ரிபீட் ஆடியன்ஸை பெற காரணம் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். dangal  திரைபடம் நேரடி இந்தியில் 24 திரையரங்களில் மட்டுமே திரையிடப்பட்டது, தமிழில் டப் செய்யப்பட்டது தான் 153 திரையிரங்களில் வெளியிடப்பட்டது.

சென்னை, வேலூர் பகுதிகளில் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களும், நாகை, கோவை பகுதியில் மலையாளப்படங்கள் வெளியிடுவதும் இயல்பான ஒன்று, அங்கே அந்த மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருப்பதால். மற்றப்படி மக்கள் சினிமாவில் மொழியை தேடுவதில்லை என முடிக்கிறார்

இந்த கட்டுரை வெளிவந்தது நவம்பர் 2018 ஆம் ஆண்டு. எங்க இழுத்து எதுல கொண்டு போய் முடிச்சி போடுறான் பாருங்க, இவனுங்க மொழி வன்புணர்வுக்கு தமிழ் தான் கிடைச்சதா கிறுக்கு கூவைங்க.

கடமை தவறுகின்றார்களா ஆசிரியர்கள்?......

என் கட்டுரைக்கு வந்த கேள்விகளுக்கு என்னால் முடிந்த விளக்கத்தை கொடுக்க முயற்சிகிறேன்

ஆசிரியர்கள் மட்டுமே போராடவில்லை, அரசு பணியாளர்கள் அனைத்து துறையில் இருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது கோரிக்கை, மத்திய அரசு 7வது ஊதிய கமிசன் சொன்ன படி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 21 மாதங்களாக அரசு அந்த ஊதிய கமிசன் பரிந்துரையை மதிக்கவேயில்லை, சரி யாருக்குமே தான் தரவில்லை, ஏன் போராட்டம் என்ற கேள்வி எழுகிறதா? அது தான் இல்லை, ஏழாவது ஊதிய கமிசன் பரிந்துரையின் படி ஐ,ஏ,எஸ்/ ஐ.பி,எஸ் மற்றும் நீதிதுறையில் அனைவர்களுக்கும் சம்பளம் உயர்த்தி நிலுவை தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது. ஏமாற்றப்படுவது இடை மற்றும் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே. அந்த நிலுவை தொகையை தான் கேட்கிறார்கள், யாரும் பிச்சை கேட்க வில்லை,

மத்திய அரசின் புதிய பென்சன் திட்டம் நாடு முழுவதும் உள்ளதே, ஏன் தமிழகம் மட்டும் எதிர்க்க வேண்டும் என்பது அடுத்த வாதம்.

நாடு முழுவதும் உள்ளது என்பது ஏற்புடையதல்ல. பல மாநிலங்கள் அதை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறன.,  காரணம் என்ன?
பங்கு வணிக ஆலோகரகான நான் பரிந்துரைப்பது உங்கள் வயதுக்கு தகுந்தாற்போல் ரிஸ்க் எடுங்கள் என்று, ஆனால் அரசோ இவர்களிடம் பணத்தை வாங்கி அதை பங்கு வணிகத்தில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் இவர்களுக்கு பென்சன் தருவார்களாம். தற்போது இருக்கும் அரசின் பொருளாதார கொள்கை என்பது நீண்டகால பலனளிக்கும் திட்டமாக தெரியவில்லை, இவர்கள் திட்டமிடதலும் மக்களுக்கு சிக்கலை உருவாக்குவதாகவே இருக்கிறது. மேலும் ஊழியர்களின் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. அதன் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். அவர்கள் பணம் என்னானது என கேட்பதில் என்ன தவறு கண்டீர்கள்?

நீட் தேர்வை ஏன் அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்க்கவில்லை?

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நுழைவு தேர்வு இருந்தது. ஆனால் அது சமூக நீதிக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசி வரை சமநிலைக்கு வர வாய்ப்பை நுழைவு தேர்வு தரபோவதில்லை என்பதை அறிந்து சமூகநீதியின் மேல் அக்கறை கொண்ட அன்றைய ஆட்சியாளர்கள் நுழைவுதேர்வை ரத்து செய்து இடஒதுக்கீட்டிற்கு மதிப்பளித்து கட்-ஆஃப் மார்க் முறையில் மருத்துவபடிப்பிற்கு வாய்ப்பளித்தனர், ஆனால் இட ஒதுக்கீடு என்றாலே ஒவ்வாமை அடையும் உயர்சாதி மற்றும் உயர்சாதியின் பால் பற்று கொண்ட ஆட்சியாளர்கள் நீட் தேர்வை கொண்டு வரும் பொழுது இது தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில ஆகும் செலவை குறைக்கும் என்றார்கள்., ஆனால் சமூக நீதியை மறந்தார்கள். அனிதாவை யாரும் மறக்க முடியாது

நுழைவு தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது, அப்போதும் ஆசிரியர்கள் எதுவும் கருத்து சொல்ல வில்லை. நீட் தேர்வுக்கும் அவர்கள் கருத்து கூற முடியாது, இது தானா உங்கள் கல்வியின் தரம், போட்டி தேர்வுக்கு கூட உங்களால் தயார் செய்யமுடியாதா என்ற கேள்வி தான் திருப்பி வரும், நியாயமாக இதை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டியது தமிழக மக்களும் சமூகநீதியை காக்க வேண்டிய தமிழக அரசும் தான், ஆனால் தற்போது தமிழக அரசின் நிலை உங்களுக்கே தெரியும், ஜெயலலிதா இருந்தபொழுது கூட நீட்டில் இருந்து விலக்கு வாங்கி வைத்திருந்தார், இவர்கள் மத்திய அரசு வீட்டிற்கு ஒருவரை கொன்று விடுங்கள் என்றாலும் சரின்னு தலையாட்டுவார்கள் போல...பள்ளிகளில் அடிப்படை வசதிக்காக ஏன் போராடவில்லை?

மத்திய அரசும், மாநில அரசும் தனது பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது, ஆனால் அது முழுமையாக தேவைப்படும் பள்ளிகளுக்கு போய் சேருகிறதா என்பதே இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும், அடிப்படை தேவைகளுக்கு நிதி கேட்டால், அரசிடம் பணம் இல்லை, பள்ளியை மூடிவிடலாம் என சொல்லும் அரசிடம் என்ன கேட்க முடியும், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் நிதி திரட்டி அரசு பள்ளிகள் அடிப்படை வசதியை செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஆசிரியர் தனது நகைகளை விற்று பள்ளி கட்டுமானத்திற்கு உதவினார், சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தனக்கு வந்த பணத்தை அந்த பள்ளிக்கே செலவு செய்தார், கொடுமை என்ன தெரியுமா? அந்த ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்

குறைந்த மாணவர்கள், ஒரு ஆசிரியர் பள்ளி தேவையா? மூடுவதில் என்ன தப்பு?

நீங்கள் ஒரு பேருந்தில் வெளீயூர் சென்று கொண்டிருக்கிறீர்கள், பாதி வழியில் அனைவரும் இறங்கி நீங்கள் மட்டுமே பேருந்தில் இருக்கிறீர்கள், ஒரு ஆளுக்காக ஓட்ட முடியாது, இறங்கி போயான்னு சொன்னா உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அவர் சொல்வதும் நியாயம் தானேன்னு இறங்கி நடந்து போவிங்களா?
கல்வி என்பது அடிப்படை உரிமை. மேல்தட்டு வர்க்க சிந்தனையால் அடிதட்டு மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதிலிருந்து தெரிகிறது.

மக்கள் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கிராமபுறங்களில் இருக்கும் பள்ளிகள் சும்மா வரவில்லை, இங்கே வசிக்கும் அடிதட்டு மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டவை, அதை மூடிவிட்டால் அவர்கள் அரசு பள்ளிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் அல்லது கடன் வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் ஒரு பொழுதும் மூடிய பள்ளிகளை அரசு திரும்ப திறக்காது, ஏனெனில் அவர்களுக்கு அடிதட்டு என்றல்ல, மக்களை பற்றியே எந்த கவலையும் இல்லை

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் எஜுகேசனல் செஸ் என்ற பெயரில் வரி கட்டி வந்தோம், அடிதட்டு மக்களும் தான். கல்வி நமது உரிமை, அதை தரமாக தர வேண்டும் என நாம் தான் கேட்க வேண்டுமே ஒழிய எவன் எப்படி போனா எனகென்ன என்ற மனநிலை, நாளை உங்களை நிச்சயமாக பாதிக்கும், உங்களால் தப்பிக்க முடிந்தாலும் உங்கள் தலைமுறையை பாதிக்கும், நம் உரிமையை கேட்டு பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. மூடி விடலாம் என சுலமாக சொல்லி விடலாம், இன்று அரசுக்கு நாம் தரும் உரிமை நாளைக்கு அனைத்து பொது துறைகளும் நட்டத்தில் இயங்குகின்றன என சொல்லி மூடிவிடுவார்கள், நாடே தனியார்மயாகி நிற்கும், இது தான் உங்கள் ஆசை என்றால். அதை தான் மேல்தட்டு வர்க்க சிந்தனை எங்கிறேன்

அரசு பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்பு வரும் பொழுது அங்கன்வாடிகள் எதற்கு?

கிண்டர் கார்டன் வகுப்புகளை குழந்தைகளுக்கான வதைக்கூடம் என்பேன் நான், கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டில் ஏழு வயதில் தான் பள்ளியில் சேர்கிறார்கள், நாம் தான் ஓட்டபந்தயம் போல் நம் குழந்தை முதலாவதாக வர வேண்டும் என்று அவர்களின் சிறு வயதிலேயே மன அழுத்ததை கொடுக்கிறோம், ஆனால் அங்கன்வாடிகள் அப்படி அல்ல. வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் தம்பதியினர் குழந்தைகள் காப்பகத்தில் விடுவது போல் தான் செயல்படும்

பல குழந்தைகளுக்கு மத்தியில் விளையாட்டாகவே அவர்களின் சமூக பிணைப்பு வளரும், அங்கன்வாடியில் பரிட்சை இல்லை, அதனால் அங்கே ஓட்டபந்தயமும் இல்லை, சிறந்த ஊட்டசத்து மிகுந்த உணவு கொடுக்கப்படுகிறது. படித்த ஒரு ஆசிரியருக்கும், படிக்காத ஒரு சமையல் அம்மாவிற்கும் வேலை கிடைக்கிறது, அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, வருவாய் இல்லையென்றால் மதுபானத்தின் விலையை பத்து மடங்கு உயர்ந்துங்கள். ஆடம்பர பொருள்களுக்கு வரியை கூட்டுங்கள். குழந்தைகள் வாழ்வில் ஏன் விளையாடுகிறீர்கள். மேலும் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரை பச்சிளம் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கச்சொல்வது வேடிக்கையாக இல்லையா?

குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தனியார் பள்ளி ஆசிரியர்கள் தயாராய் இருக்கும் பொழுது இவர்களை ஏன் தொங்க வேண்டும்?

உலகில் உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர யாராலும் தடுக்கமுடியாது, உங்களை தடுப்பது உங்கள் பொறாமை தான். உங்கள் குறிக்கோளை நோக்கி ஓடாமல் அடுத்தவன் எப்படி ஓடுறான்னு பார்த்துகிட்டு ஒரே இடத்தில் நிற்கிறீர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு என்பது யார் தவறு

அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஒவ்வொரு பள்ளியின் செலவு கணக்குகளை கேட்டது, அவர்கள் கொடுத்த கணக்கு படி கிண்டர் கார்டன் வகுப்பு ஆசிரியருக்கே 20000 சம்பளம் கொடுக்க வேண்டும், அதை கேட்டு சண்டை போட அந்த ஆசிரியர்கள் தயாராய் இல்லை, வேலை இல்லாமல் இருப்பதற்கு இதுவாவது கிடைக்குதே என்று இருக்கிறார்கள்., ஆக உங்கள் கோவம் தனியார் துறையின் மீதோ, அதை கண்டுகொள்ளாத அரசின் மீதோ வராது, அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தான் வரும், தமிழகத்தில் ஆசிரியர்கள் தவிர பல அரசு துறைகள் இருக்கின்றது, அவர்களெல்லாம் எதுக்கு இவ்வளவு என்று கூட சொல்வதில்லை நீங்கள், ஆசிரியர் பணி என்பது உங்களுக்கு அவ்வளவு எளிமையானதாக தெரியிகிறது போல....

ஆசிரியர்கள் ஏன் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை?

இந்த விசயத்தில் எனக்கும் வருத்தம் உண்டு, ஆனால் அதனால் மட்டுமே தனியார் கொடுக்கும் லேப் வசதி, ப்ராக்டிகல் வசதி, தொழில் சார்ந்த சுற்றுலா வசதி வந்து விடுமா என்றால் நிச்சயம் வராது, நியாயமாக முதலில் அரசியல்வாதிகள் அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், கல்வி துறை அமைச்சர், செயலர் என முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் அரசு பள்ளிக்கு தேவையான நிதியை ஒதுக்குவார்கள், தேவையான வசதியை செய்து கொடுப்பார்கள்.

இந்த போராட்டத்தின் ஆணிவேரும், முக்கிய பிரச்சனையும் அரசின் மெத்தனமும், ஆவண போக்கும் தான், ஆனால் ஊதிய உயர்வு என்ற பொய்யை சொல்லி, ஆசிரியர்கள் அனைவரையும் சோம்பேறிகள், சும்மா உட்காந்து சம்பளம் வாங்குபவர்கள் போல் சித்தரித்து, அரசு தனது நோக்கத்ததை நிறைவேற்றிக்கொண்டது, தமிழகம் முழுக்க 50000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 40 பேர் படிக்க வேண்டிய வகுப்பில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள், ஆனால் அரசோ காலி பணியிடங்களை நிரப்பவோ, பள்ளிகளுக்கு வசதி செய்து தரவோ தயாராய் இல்லை, மாறாக பள்ளிகளை மூடவே எத்தனிக்கிறது,

திரும்பவும் சொல்றேன், இது முழுக்க முழுக்க உங்கள் தலைமுறையை பாதிக்கும், உங்கள் குழந்தை தனியார் பள்ளியில் படிக்கலாம், ஆனால் அரசு வேலை வாய்ப்பிற்கு போட்டி போடும் பொழுது அங்கே வேலையே இருக்காது, எல்லாம் தனியார்மயம் ஆகிவிடும், இன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன கதியோ அதுவே உங்கள் குழந்தையின் நிலையாகலாம்,

அரசின் மிரட்டலுக்கு பயந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வில்லை, ஜாக்டோ ஜியோ போராட்டம் பல அரசு துறை ஊழியர்கள் முன் நின்று நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்., ஜோக்கர் படத்தில் ஒரு வசனம் வரும், நாம யாருக்காக போராடுறமோ அவர்களே நம்மை பைத்தியம்னு சொல்றாங்கன்னு, அவர்கள் பணிக்கு திரும்ப காரணம் நீங்கள் தான், உங்கள் புரிதலின்மை தான். உங்கள் மேல்தட்டு வர்க்க சிந்தனை மாறாமல் உங்களால் மனிதம் குறித்து சிந்திக்கவே முடியாது, பொதுநலன் குறித்து ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க மாட்டீர்கள், ஒரு நாள் இந்த சமூகத்தில் தனித்து நிற்பீர்கள், அன்றாவது உணர்வீர்கள் என நம்புகிறேன்

#வால்பையன்
#ஜாக்டோஜியோ

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

சில வருடங்களுக்கு முன்னால் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் ஆன காலம் அது. ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனம் அமெரிக்க அரசியல்வாதிகளுடன் ஒரு மறைமுக ஒப்பத்தம் போட்டுக்கொண்டது. அதன் சாராம்சம் பொது போக்குவரத்தை குறையுங்கள் என்பது. பொது மக்கள் பொது போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்ட பொழுது ஆங்காங்கே விளம்பர பலகைகள் தென்பட்டது. குறைந்த முன் பணத்தில் சொந்த வாகனம், குறைந்த மாத தவணை என்று. அமெரிக்காவில் இன்றும் பொது போக்குவரத்து உண்டு(ஸ்பீட் படம் பாருங்க)  ஆனால் மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப அவர்கள் போக்குவரத்தை உயர்த்தவில்லை, தரத்தை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்

மேல் உள்ள பத்தி ஒரு உதாரணம், இப்பொழுது ஆதாரம், உங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் எங்கேயேனும் 1001 ரூபாய் முன் பணத்தில் சொந்த வாகனத்தை ஓட்டிச்சொல்லுங்கள் என்ற விளம்பர பாதகை உள்ளதா? ஓய்வு பெறும் பணியார்களுக்கேற்ப புது பணியாளர்கள் சேர்க்கபடுகிறாரா? மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பேருந்துகள் அதிகமாக்கப்பட்டுள்ளனவா? அரசு தன் பொறுப்பில் இருந்து நழுவுவதும், நம்மை தனியார் பக்கம் தள்ளுவதும் உங்களால் உணர முடிகிறதா? சரி இதற்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த போராட்டத்தை வெறும் ஊதிய உயர்வுக்காக என அரசு பொது மக்களிடம் பரப்பி விட்டு அரசின் பக்கம் நல்ல பெயர் எடுக்க பார்க்கிறது, ஆனால் அரசு செய்வது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை மறைக்கிறது. பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுவது தான் அந்த செயல். இதனால் மக்களுக்கு என்ன கெடுதல் என்பதை உணராமல் மக்கள் ஊதியத்தை மட்டுமே பேசிக்கொண்டு வருகின்றனர்

நான் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தேன், அங்கே ஒன்றிலிருந்து ஐந்து வரை தான். 1-2 வகுப்புகள் ஒரு டீச்சர், 3-4 தலைமை ஆசிரியர், 5 ஆம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். இதுவாவது 30 வருசம் முன்னால். இப்போதும் ஒரு ஆசிரியர் பள்ளி உள்ளது. ஐந்து வகுப்பிற்கும் அவர் ஒருவரே ஆசிரியர்.  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு சொலவடை  கூடஉண்டு. சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வது. பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்குவது என குழந்தைகள் பெற்றோர்கள் அருகில் இருப்பதை விட ஆசிரியர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். கல்லாக இருக்கும் ஒரு மாணவனை சிலையாக செதுக்குகிறார்கள். ஆசிரியர் பணி மட்டுமே லஞ்சம் வாங்காத ஒரே அரசு பணி

சரி பள்ளிகளை மூடுவதால் என்னாக போகுது என கேட்கும் மேல்தட்டு வர்க்க சிந்தனையுள்ள சக நண்பர்களுக்கு. காலை 7 மணிக்கு உங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். அங்கே உள்ள மக்கள் கூட்டம் எல்லாம் ஏன் அங்கே வந்துள்ளார்கள்? அவர்களுக்கு வசதியில்லை. அவர்களுக்கு என்ன வியாதி என்பதே அவர்கள் உணர்ந்து கொள்ளும் கல்வி அறிவு இல்லை. அந்த கல்வியை அவர்கள் ஆக்ஃபோர்டில் போய் எடுக்க முடியுமா? யார் கொடுக்கவேண்டும் மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, சுகாதாரம், பட்டினியில்லாத உணவு?இந்த போராட்டத்தில் மொத்தம் 53 துறைகள் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அரசு ஆசிரியர்களை மட்டுமே குறி வைத்து வதந்தியை பரப்பி வருகிறது. பொது மக்களிடையே அரசு பள்ளி ஆசிரியர்கள் மேல் அவபெயர் ஏற்படுத்தி தனியார் பக்கம் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்பதே இந்த கார்ப்ரேட் சதியின் நோக்கம், ஏன் காவிரி மேலான்மை  வாரியம் அமைத்தார்கள் தெரியுமா? அப்ப தான் காவிரியில் தண்ணி வராது., டெல்டா பகுதி விவசாயிகள் இனி விவசாயம் வேண்டாம் என வடநாட்டு பக்கம் பிழைக்க செல்வார்கள், இந்த கார்ப்ரேட் சார்பு அரசிடம் அனுமதி பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பூமியில் ஹைட்ரோ கார்பன் எடுத்து அரசிடம் விற்கும்!?.

அரசு பள்ளிகள் என்பது தான் அடித்தளம், கல்வி முக்கியம் என்பதால் தான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்படி 60 வருடங்களாக பாமர மக்களுக்கும் கல்வி கொடுத்து, அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்த தமிழகத்தில் தற்சமயம் 5000 அரசு பள்ளிகளை மூட போகிறார்கள். அடிதளத்தை இடிக்க பார்க்கிறார்கள்., நாம் கட்டிவைத்த சமூகநீதி, சமூக முன்னேற்றம் என்ற அனைத்தையும் அடித்தளத்தை இடிப்பதன் மூலம் மீண்டும் சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்கிறார்கள்

அடிதட்டு மக்களை பற்றிய கவலை அரசுக்கு துளியும் இல்லை. சமகாலத்தில் நம்மால் சமாளிக்க முடியலாம், நம் அவசரத்துக்கு நண்பர்கள் உதவி செய்யலாம், ஆனால் நம் வருமானத்தையும் மீறி செலவு செய்ய வேண்டிய நெருக்கடி இருப்பின் குடும்ப சூழலுக்காக அதை தவிர்க்க முடியாத நிலையில் நீங்கள் கடன்காரன் தான் ஆவீர்கள். பள்ளிகள் மூடபடுவதால், பேருந்துகள் குறைக்கப்படுவதால் நாளை மக்கள் தொகைகேற்ப அரசு பணி இருக்காது, நம் குழந்தைகள், பேர குழந்தைகள் தனியாரை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்,எல்லாமே தனியார் மயம் என்றால் பின் எதற்கு அரசு என்ற இயந்திரம்?

மத்திய அரசின் சரி, மாநில அரசின் சரி, அடிதட்டு, நடுதட்டு மக்களின் மேல் துளியும் அக்கறை இல்லை. சம்பளம் கொடுக்க பணம் இல்லைன்னு சொல்லும் மாநில அரசு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் 1000 ரூபாய் பணம் கொடுக்கிறது பொங்கலுக்கு. போலியோ சொட்டுமருந்து வாங்க பணம் இல்லை என சொல்லும் மத்திய அரசை யாராவது பார்த்ததுண்டா? இரண்டு அரசுக்குமே பொருளாதாரத்தில் அரிச்சுவடி கூட தெரியவில்லை, எது அவசியம், எது அத்தியாவிசயம் என்ற பொது மக்களின் பார்வையில் பார்ப்பதில்லை

ஆசிரியர்களின் போராட்டம் மக்களுக்கான போராட்டம். அதை கொச்சை படுத்துவது நம் விரலால் நம் கண்ணை நாமே குத்திக்கொள்வது. அவர்களின் தனிபட்ட ஊதிய கோரிக்கை, ஓய்வூதிய கோரிக்கை. பற்றி பேசுவதற்கு முன்னால் அரசு பள்ளிகளை மூடாதீர்கள் என்று ஒவ்வொரு பொது மக்களும் போராட வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டான உரிமை அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப்புரிமை, இரண்டு அரசுகளும் தமிழர்கள் அறிவு சார்ந்த சமூகமாக இருப்பது பிடிப்பதில்லை, நீங்கள் அதில் ஒருவர் என்றால் அரசு பள்ளிகளை மூடாதே என்ற கோஷத்தை வையுங்கள். அரசு விரும்புவது போல் கேள்வி கூட கேட்க தெரியாத பிற்போக்கு சமூகத்தின் அங்கத்தினர் ஆக விருப்பமென்றால், ஆசிரியர்களுக்கு எதுக்கு இவ்ளோ சம்பளம்னு கேட்டுகிட்டே இருங்க

#வால்பையன்
#ஜாக்டோஜியோ


ஏன் மாத்திரை சாப்பிடுறோம்!.....

கேள்வி:
முழுங்கற மாத்திரைக்கு எப்படி தெரியும் அத நான் பல் வலிக்குதான் சாப்பிட்டேன்னு 🤔??

பதில்:
வலி என்பது குறிப்பிட்ட பகுதியில் இருந்து மூளைக்கு அனுப்பப்படும் செய்தி. அந்த பகுதியில் நரம்பு மண்டலத்தின் நியூரான் படு வேகத்தில் இருக்கும், ஏனெனில் வலி என்பதே என்னை கவனி என்னை கவனி என நம்மை உசுப்பேத்துவது தான். நாம் சாப்பிடும் மாத்திரை வயிற்றில் கரைந்து குடல் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்படும் பொழுது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் வந்துடுச்சுன்னா நமக்கான ஆயுதம் அதை தூக்கிக்கொண்டு வலி உள்ள பகுதிக்கு ஒடி மூளைக்கு செய்திகளை எடுத்துசெல்லும் நியூரான்களின் செயல்பாட்டை மட்டு படுத்தும்

ஒன்னு தெரியுமா? வலி நிவாரணி எடுத்துக்கொள்வதால் மட்டுமே பல் வலியோ அல்லது உடல் வலியோ, காயங்களோ ஆறுவதில்லை, நம் உடலெ ஒரு ஆச்சர்யமான பயோ மெக்கானிசம், நம் மூளை பல ஆயிரம் மடங்கு கம்பியூட்டர் அதாவது பயோ கம்பியூட்டர். கரையான் புற்றில் ஒரு ஓட்டை போட்டால் உடனே போராளி கரையான்கள் வேறு இடத்தில் இருந்து மண்ணை தின்று வந்து ஓட்டை விழந்த இடத்தை அடைக்கும்நம்மை கேட்டா இதயம் துடிக்குது, நம்மை கேட்டா நுரையீரல் சுவாசிக்குது, நம்மை கேட்டா செரிமாண மண்டலம் வேலை செய்யுது. அது மாதிரி தான் நம் உடலின் வெள்ளை அணுக்களும். தட்ப வெப்ப சூழலில் ஏற்படும் உடல் மாற்றம், உணவால் உடலில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை சரி செய்யும், ஆனால் மருத்துவத்தின் துணையோட தான் சரி செய்ய முடியும் என் நிலையும் உடலுக்கு ஏற்படும்

நோய் தொற்று அதிகமாக இருத்தல். நம் உடலை நாமே சில பழக்கங்களால் கெடுத்துக்கொள்ளுதல். இந்த உடல் உபாத்தைக்கு இதை செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் அதை செய்தல் போன்றவை நோயை அதிகப்படுத்தும், உங்களுக்கே தெரியும், நமக்கு அறிகுறிகள் அதிகமானால் தான் டாக்டரிடம் போறோம், அதை அதிக படுத்துவதே நாம் தான்

அதிமுக உண்மையில் யார் கையில்?...

இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்துள்ளது, இதுவும் அப்படி ஒன்று தான் என்ற புகழ் பெற்ற வசனத்தை யாரும் மறக்க முடியாது, நான் சொல்ல போவதும் அப்படி ஒன்று தான், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் ஜெயலலிதா மரணம் தான் அந்த வழக்கு.

இது வரை நடந்த விசாரணைகளை கோர்த்து பார்த்தால் பயங்கர இடியாப்ப சிக்கலாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதிமுகவில் எவனும் யோக்கியன் இல்லை. மக்கள் அனைவரும் முட்டாள் ஆக்கப்பட்டுள்ளோம். இன்னும் அதுவே தான் நடக்கிறது, உண்மையில் அதிமுக மூன்று அணி, தினகரனை இணைத்துகொள்ள வேண்டும் அல்லது அங்கே போய் சேர வேண்டும் என்பது ஒரு அணி, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு அணி, யாரும் வேண்டும், அதிமுக என்ற பெயரை கெடுக்காமல் இருப்போம் என்பது ஒரு அணி.

இந்த மூன்று அணிக்களுக்கும் உள்ள சண்டையில் ஜெயலலிதா மரணத்தின் உண்மை காரணம் அம்பலமாக உள்ளது. இந்த ஆணையத்தின் விசாரிப்பு மே மாதத்திற்கு மேல் நீடித்தால் கண்டிப்பா ஆகும், ஒருவேளை அதன் முன் வெளியிடப்பட்டால் என்னாகும்னு உங்களுக்கே தெரியும்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது ஒ.பி.எஸ் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே இரு முறை ஜெயலலிதாவால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதால் எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் போர் கொடி தூக்க வில்லை, மன்னார்குடியும் வாய் திறக்கவில்லை.அம்மா நலமுடன் உள்ளார், இட்லி சாப்பிட்டார் என ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டிருந்த பொழுதே ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் அப்பல்லோவுக்குள் நுழைந்தனர், இங்கே நீங்க யோசிக்கவேண்டிய ஒரு விசயம் இருக்கிறது, அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ரத்த உறவான தீவாவோ அவரது தம்பியோ அனுமதிக்கப்படவில்லை

ஜெயலலிதா இறந்ததும் அல்லது இப்பொழுது தான் இறந்தார் என சொல்லப்பட்ட பொழுது தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. சசிகலா பொது செயலாளர் ஆக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பி.எஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு சசிகலா முதல்வர் ஆவது பிடிக்கவில்லை. மேலும் சொத்துகுவிப்பு வழக்கை இறுக்கி சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தனர்.

சசிகலா சிறை செல்லும் முன் தனக்கு தான் முதல்வர் பதவி என எதிர்பார்த்தார் ஓ.பி.எஸ். ஆனால் காட்சி மாற்றத்தில் செங்கோட்டையனுக்கு கூட கிடைக்காமல் அது ஈ.பி,எஸ் கைக்கு சென்றது. உள்வட்டாரத்தில் ஓ.பி.எஸ் ஜெயலலிதாவுக்கு பணிவாக இருந்துள்ளார். ஈ.பி.எஸ் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்கு பணிவாக இருந்துள்ளார். என்ற பேச்சுகள் உண்டுசசிகலா சிறை சென்ற பின் ஓ.பி.எஸ் தன் தர்மயுத்ததை ஆரம்பிக்கிறார். அம்மா சாவில் மர்மம் உள்ளது. அப்போதும், இப்போதும் இருக்கும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி  எங்கிறார். அது ஊழல் அரசு அகற்றியே ஆக வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் கூவந்தூர் கூத்து நடக்குது. அங்கிருந்து மாஃபா பாண்டியராஜன் தப்பித்து வருகிறார்.

இங்கே ஒரு ப்ளாஷ்பேக், பாண்டியராஜன் ஒரு பக்கா இந்துதுவாவாதி, முன்னாள் பாஜக உறுப்பினர், அப்புறம் தான் தேமுதிக, அதிமுக என ஆடுறா ராமா கதை நடந்தது. அப்போதும் தினகரன் பிடியில் அதிமுக இருக்கவே பாஜக பன்னீர் அணியை மறைமுகமாக ஆதரிக்க ஆரம்பித்தது. அதன் பிண்ணனியில் இருந்தது குருமூர்த்தி. அந்த சமயத்தில் கே.சி.பழனிசாமி என்னும் முன்னாள் எம்.பி பொதுசெயலாளர் மொத்த கட்சியின் உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என குட்டைய குழப்ப. பாஜகவை அதிமுக ஆதரிக்காது என டீவி பேட்டியில் பேசியதற்காக கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்

ஆர்.கே.நகர் தேர்தலை மறந்தே விட்டேன். முதல் முறை தொப்பி சின்னத்தில் தினகரனை ஆதரிக்கும் பொழுது ஓ.பி.எஸ் பதவியில் தான் இருக்கிறார். ஜெயலலிதா பிணம் போல் செட் செய்து ஓட்டெல்லாம் கேட்டார்கள். அதன் பின் தான் ஓ.பி.எஸ் ராஜினாமா செய்கிறார். பாஜக பார்வையில் ஆட்சியில் இருக்கும் ஈ.பி.எஸ் அணியையும் விட மனமில்லை, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு குதிரை வேண்டும். அவர்கள் தூண்டுதலால் ஈ.பி.எஸ் குழப்பத்தில் இருக்கிறார்

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த வழக்கினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது. சின்னத்தை பெற தினகரன் முயற்சி செய்ய திகாரில் தள்ளப்படுகிறார். அந்த சமயத்தில் மன்னார்குடியை ஓரம் கட்ட பேரம் நடத்தப்படுகிறது. ஆக ஈ.பி,எஸ் பாஜக வலைக்குள் சிக்குகிறார். தினகரன் எம்.எல்.ஏ ஆனது.  ஒன்று சேராமல் இருந்தாலும் தினகரனை தனியே சென்று ஓ.பி.எஸ் சென்று சந்திந்தது என பல கதைகள் இருந்தாலும் நாம் ஜெயலலிதா மரணத்திற்கு வருவோம்

மன்னார்குடியை ஓரம் கட்ட வேண்டும் என முடிவெடுத்த பின் அது வரை இட்லி ஊட்டி விட்டவர்கள் மாற்றி பேசினர்., திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடையில் மக்களே நாங்கள் பொய் சொல்லி விட்டோம், எங்களை யாரையுமெ மன்னார்குடி பார்க்க அனுமதிக்கவில்லை என்றார். மேலும் அம்மாவை ஸ்லோபாய்சன் கொடுத்து கொன்றூ விட்டார்கள் என்றார்

அப்பவே தினகரன் சொல்லி கொண்டிருப்பார். அதிமுகவுக்குள் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் உள்ளது என்று. இந்த ஆணைய விசாரனையில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாங்கள் அனைவரும் அம்மாவை பார்த்தோம், ஒரு டாக்டர் என்ற முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் தலைமைசெயலர் ராம்மோகன்ரெட்டி சில ஆணவங்களை தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்துள்ளார்

ஆனால் பொன்னையனும், விஜயபாஸ்கரும் அப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கவில்லை என்று ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.  ஜெயலலிதாவிற்கு வைத்தியம் பார்த்த அப்பல்லோ டாக்டர் தான் பன்னிர்செல்லம் தம்பிக்கு வைத்தியம் பார்த்தது. இதுவல்லாது நாடாளுமன்ற துணை சபாநாயகர் லண்டன் டாக்டர் பீலெவை சென்று சந்திந்துள்ளார். கேட்டால் தன் உடல்நலம் குறித்து ஆலோசனை பெற எங்கிறார், ஆனால் தர்மயுத்தம் சமயத்தில் அந்த டாக்டர் மேல் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றனர் அதிமுகவினர்இதில் மொத்தமாக விழிபிதிக்கி நிற்பது பன்னிர்செல்வன் தான். அப்போதைய முதல்வருக்கு என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியும், அவரே நேரில் பார்த்தார்னு அப்போதைய சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார். தலைமை செயலர் நேரில் பார்த்ததாகவும் ஜெயலலிதா கட்டைவிரலை தூக்கி காட்டியதாகவும் பதிவு செய்த்துள்ளார்.

இப்போ கேள்வி என்னான்னா ஜெயலலிதா மரணத்திற்கு முன் எங்களை பார்க்க அனுமதிக்க வில்லை என பாடியவர்கள் இன்று அதற்கு எதிராக நிற்கின்றனர், தர்மயுத்தம் நடத்தி மன்னார்குடியை ஓரம்கட்டிய ஓ.பி.எஸ் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஈ.பி.எஸ்க்கு கொடநாடு பிரச்சனை.

நிச்சயமாக ஜெயலலிதா மரணம் பெரும் சர்ச்சை வாய்ந்தது, ஆனால் அதை வைத்து அரசியல் செய்யபோவது அதிமுக அல்ல. இவர்கள் குடுமியை கையில் வைத்திருப்பவர்கள். முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அதிமுக தலைமை முழிக்கிறது. பத்தாததுக்கு எடபாடி மேல் ஊழல் குற்றசாட்டு விசாரணை வேறு நடக்கிறது.

குடுமிகள் எலக்ட்ரானிக் மிசினில் தான் கைவைப்பார்கள்னு நினைச்சேன், ஆனால் ஜெயலலிதா இறந்தபொழுது சசிகலாவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொன்னது ஞாகபம் வந்த பொழுது புரிந்துவிட்டது. அவர்களுக்கு செக் பாயிண்ட் எதுவென்று

இதையெல்லாம் பாமர மக்களுக்கு எப்படி கொண்டு செல்வது???

!

Blog Widget by LinkWithin