ASK!

மக்கள் போராட்டத்தை நான் இரண்டு காரணங்களுக்காக ஆதரிக்கிறேன்
ஒன்று. இனியும் மக்கள் நலன் சார்ந்தே இந்த அரசு இருக்கும் என்பதில் யாருக்கும் நம்பிக்கையில்லை. நாலரை லட்சம் கோடி தமிழகத்தின் கடனாம். நலதிட்ட பணிகள் அவ்ளோ நடந்திருக்கும்னு நம்புறீங்க. தனியாரிடம் நிலகரி வாங்குவது, மின்சாரம் வாங்குவது, எல்.ஈ.டி. பல்பு வாங்குவது என்று அனைத்திலும் கமிசன் ஊழல் நடந்துள்ளது போதமைக்கு அந்த கொள்ளையெல்லாம் அடித்த சசிகலா என்ற சின்னம்மா வழிகாட்டுதலில் தான் அரசு செயல்படுமாம். அந்த வழி எப்படி இருக்கும்னு சொல்லி தான் தெரியுமா என்ன? சரி சசிகலா தான் சிறைக்கு போய்டாரேன்னு நினைக்காதிங்க. கருப்பு பணம் வைத்திருந்த வழக்கில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாகவே அதிமுக என்றாலே ஊழலும், கொள்ளையும் தான்.

இரண்டாவது மக்களிடையே ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு குறித்தான விழிப்புணர்வு. மொழி செழுமைக்கும், இந்தளவு அறிவியல் வளர்ச்சிக்கும் தகவல் தொடர்பு மிக முக்கிய காரணம் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் இக்கால படித்த இளைஞர்கள் போதிய பகுத்தறிவு இல்லாமல் இருப்பது தான் பெரும்கவலை. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்புறாங்க. நெடுவாசம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதை சேது சமுத்திர திட்டத்தோட ஒப்பிட்டு அதை மட்டும் ஆதரிக்கிறிங்க எங்கிறார் ஒருவர்.

சேது சமுத்திர திட்டம் என்பது தங்க நாற்கர சாலை மாதிரி வழிபாதை. இங்கேயாச்சும் சில இடங்களில் வயலை அழித்து ரோடு போட்டாங்க. கடலில் அழிக்க எந்த விளைநிலம் இருக்கு. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் ரீஃப் பேரியர் போன்ற பவள பாறைகள் இங்கில்லை. இரண்டு நிலபகுதிகளுக்கு இடையே உள்ள கால்வாய் என்பதால் நீரோட்டமும் இல்லை. மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு மட்டும் செய்து கொடுத்தால் போதும் இது அருமையான திட்டம்.

வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கும் பனாமா கால்வாய் இதற்கு ஒரு உதாரணம். அந்த கால்வாய் மட்டும் இல்லையென்றால் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியா கடல் வழியாக செல்ல வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை சுற்றி ஆயிரகணக்காக கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டியிருக்கும். அதே போல் தான் சேது சமுத்திர திட்டமும். அது இல்லாததால் தற்சமயம் விசாகபட்டணித்தில் இருந்து மும்பை செல்ல இலங்கையை சுற்றி செல்கிறோம். வழியில் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பம் வேற. சில நூறு கிலோமீட்டர் என்றாலும் பயண செலவு குறையும் பொழுது பொருள் விலையும் குறையும் தானே. அது பொருள் வாங்கும் நம் போன்ற நுகர்வோருக்கு நல்லது தானே

சேது சமுத்திர திட்டம் நிறுத்தப்பட இயற்கை வள பாதுகாப்பு என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் இந்துதுவா நம்பிகையான ராமர் பாலத்தை காப்பாற்றும் முயற்சி. ராமர் பாலத்தை நீதிமன்றம் ஏற்றுகொள்ளாது என்பதினாலேயே இயற்கை வள பாதுகாப்பு என்று திருப்பி விட்டார்கள். வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு. அதை உண்மை என்று உங்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

ரொம்ப காலமெல்லாம் வேண்டாம். சமீபத்தில் ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட பொழுது ஒரு தொலைகாட்சியில் அய்யோ கொல்றாங்களே என்றும். இன்னொரு தொலைகாட்சியில் அமைதியாக அழைத்து சென்றது போலவும் காட்டப்பட்டது. அவர்களுக்கு எது செளகர்யமாக படுகிறதோ அதையே உண்மை என்று நம்மை நம்ப சொல்கிறார்கள். இந்த வரலாற்று கதைகள் எவ்ளோ பெரிய டுபாக்கூர் என்பதற்கு மற்றொரு உதாரணம் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் இந்தியா வந்து திரும்பிய பொழுது நெருப்பை கக்கும் ட்ராகனை பார்த்ததாக தன் குறிப்பில் எழுதியுள்ளார். வரலாறு எல்லாமே புலிகேசி தலையுடன் ஒரு வீரன் உடல் இணைத்த ஓவியம் போல் தான். அதிக பட்ச சாத்தியகூறுகள் இல்லாத எதையும் நம்புவது உங்கள் மூளையை கடைசி வரை ஃப்ரெஷ்சாவே வைத்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் காலம், டிஜிட்டல் இணைய புரட்சி காலம் எல்லாம் இருந்தும் என்ன செய்ய? இன்றும் இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் சம்பந்தபட்ட குழந்தைக்கு 10 பைசா போய் சேரும் என்று தகவல் பகிரப்பட்டுகொண்டு தான் இருக்கின்றது. இன்றைய இளைஞர்களுக்கு தேவை தெளிவான அரசியல் புரிதல். ஒரு பிரச்சனை குறித்து ஆழமாக விவாதிக்ககூடிய ஆர்வம். எதையும் அப்படியே நம்பாமல் எதிர் கேள்வி கேட்கும் துணிவு.


தமிழக அரசியல்!

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலுக்கு ஏற்படுத்தியுள்ள சாதக, பாதகங்களை அலசலாம்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி பெயர், சின்னம் தவிர்த்து நிற்பவர் நெருக்கமானவரா என்ற பார்வை உண்டு. அந்த அடிமட்ட நிர்வாகி தான் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு சொல்லி மேல் மட்ட அரசியல் வரை கொண்டு செல்வது. அதே போல் உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் காட்டும் மெத்தன போக்கு மேல்மட்ட அரசியல் வரை பாதிக்கும்.

அரசியல் கட்சிகளில் விதிவிலக்கில்லாமல் அனைவரும் பயன்படுத்துவது எதிர்ப்பு அரசியல்/ அதை ஆட்சி பொறுப்பில் இல்லாதவர்கள் செய்வதில் கூட ஒரு நியாயம் இருக்கும். ஆட்சியில் இருப்பவர்களும் அதையே தான் செய்வார்கள். அதிமுகவிடன் ஒரு கேள்வி கேட்டால் திமுக யோக்கியமா என்பார்கள். பாஜகவிடன் ஒரு கேள்வி கேட்டால் காங்கிரஸ் யோக்கியமா என்பார்கள். அவர்கள் யோக்கியம் இல்லைனு தான் உன்னை தேர்தெடுத்தோம் கூமுட்டைன்னு கேட்க தான் ஆள் இல்லை.ஜெயலலிதாவின் இழப்பு அதிமுகவிற்கு நிரப்பயியலா வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கி ஜெயலலிதா என்ற பெண்ணுக்கு இருந்த பெண்கள் வாக்கு, சரிபாதி திமுக எதிர்ப்பு வாக்கு. அதிமுக என்ற பெயருக்கும், சின்னத்திற்கும் இருந்த வாக்கு வங்கி கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டது. இது சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் காலம்.

இந்த இளைஞர்களை நம்புறதும் ரொம்ப கடினமான விசயம் தான். படிப்பு இருக்கும் அளவுக்கு பகுத்தறிவு இல்லை. வெகு சுலமாக மூளை சலவை செய்யபடுகிறார்கள். முதலில் யார் அவரை நெருங்கிறார்களோ அவர்கள் சொல்வதே உண்மை என்றாகிவிடுகிறது. அல்லது யார் எதை சொன்னாலும் கேள்வியே இல்லாமல் எல்லாவற்றையும் நம்பி தொலைக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் தடுப்பூசி எதிர்ப்பு அரசியல்.

அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு சிறிது வளர்ச்சியை தந்துள்ளது. அவர்கள் இருவர் செய்ததும் எதிர்ப்பு அரசியலும், இணைய ஊடுருவலும் தான். பாஜக அதில் முதல் இடம். அதிமுக திராவிட கட்சின்னு சொல்லிகிட்டாலும் அதற்கும் பாஜக கொள்கைக்கும் வித்தியாசமில்லைன்னு பாஜக பிரமுகம் செல்வாரு. அதிமுக சொல்ல மாட்டாங்க. ஆனா அப்படி தான் செய்வாங்க

அதிமுக தலைமையில் இருக்கும் குழப்பம் தொண்டர்களுக்கு சோர்வை கொடுத்துள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமையின் பலம் இப்பொழுது தான் கட்சிக்கே தெரிகிறது. அவர்கள் வேறு அணிக்கு மாறினாலும் ஓட்டு அவர்களுக்கு தான் போடுவார்கள் என சொல்லமுடியாது. ஏற்கனவே பொதுபுத்தியில் ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்னு அடம் பிடிப்பாங்க. தமிழகத்தில் பாஜக முகவரி இல்லாத கட்சின்னாலும் மத்தியில் ஆட்சியை பிடித்தது பொது புத்தி மக்களுக்கு பாஜக மேல் பார்வை விழுந்துள்ளது. அதிமுக அதிருப்தி தொண்டர்களும் பாஜக பக்கம் சாய வாய்புண்டு. அதான் லாஜிக்கல் பாயிண்டும் கூட.இன்னொரு கட்சி நாம் தமிழர். யோசிக்க வைக்கும் பிரச்சாரம் இவர்களின் பலம். சீமானின் அனல் தெறிக்கும் பேச்சை கேட்க கூட்டம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. கூட்டம் எல்லாம் ஓட்டு ஆகாது என்றாலும் பிற கட்சிகளின் பலவீனம் இவர்களுக்கு ஓட்டு சேர்க்கிறது. இவர்களின் கொள்கைகள் மக்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் அதை நடைமுறை படுத்த இருக்கும் திட்டவரைவு பற்றி இவர்களின் எந்த ஆதாரமும் இல்லை. உதாரணத்திற்கு கட்சதீவு என்பார்கள். எப்படி கொண்டு வருவிங்கன்னு கேட்டா வழக்கு போடுவோம் என்பார்கள்(வழக்கு ஏற்கனவே இருக்கு). எதிர்ப்பு அரசியல் மட்டுமே இவர்களுக்கு கூடுதல் பலம் சேர்கிறது.தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திமுக தலைமை வேறு மாநிலத்தில் நடப்பது போல் பார்த்துக்கொண்டு இருக்கிறது. நெடுவாசல் போராட்டத்திற்கு பேருக்கு ஒரு ஆதரவு. ஜக்கியின் அடாவடிதனத்திற்கு பலமான எதிர்ப்புகுரல் இல்லை. மறு தேர்தல் உடனே வரணும். அடுத்து நாமதான்னு மனபிராந்தியில் இருக்கிறார்கள். நிச்சயம் அதிமுக அதிருப்தி ஓட்டு இவர்களுக்கு வராது. திமுக வாக்கு வங்கி மட்டுமே அவர்களுக்கு. அதையும் பொருந்தாத வேட்பாளரை நிறுத்தி பல்பு வாங்குவது இவர்களின் வழக்கம்பாமக வாக்கு வங்கியில் மாற்றம் இல்லை.சாதிய ரீதியாக அதிமுக அதிருப்தி வாக்குகள் சில பகுதியில் பெற வாய்ப்புண்டு. அதுனால் உள்ளாட்சி தேர்தலில் அதிகாரம் பெற வாய்ப்புகள் உண்டு. ஆனால் இவர்கள் சாதியை விட்டு வெளியே வராமல் தமிழகத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த இணைய ஆதரவாளர்கள் வேகம். இப்பொழுது தூங்கிக்கொண்டு இருக்கிறது. சாதியை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் எந்த கட்சியும் உருபட்டதா சரித்திரம் இல்லை.


மக்கள் நல கூட்டணி இப்பொழுது இல்லை என்று இடதுசாரிகள் அறிவித்து விட்டார்கள். வைகோ கோமாளி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவை யாரும் அழிக்க விடுமாட்டேன்னு இவர் அறிக்கை கொடுத்த மறுநாள் அவர் கட்சியான மதிமுகவில் இருந்து 1000 பேர் பன்னீர் அணியில் இணைகிறார்கள். அதிமுக தான் மக்கள் கருத்து கேட்பதில்லை. இவர் தனக்கு சொந்தமாக ஒரு கட்சி இருப்பதையே மறந்து செயல் படுகிறார்

விடுதலை சிறுத்தைகள் தலித் ஓட்டுகளையும் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஓட்டுகளையும் மட்டுமே நம்பியுள்ளது. ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே நடக்கும் கட்டபஞ்சாயத்துகளில் இந்த கட்சி பொறுப்பினர் இருப்பது முற்போக்கு சிந்தனையாளர்களை யோசிக்க வைக்கின்றது. அவர்கள் குரல் கொடுக்க போனால் பரவாயில்லை. மிரட்டி பணம் பறிக்கும் வேலையெல்லாம் நடக்குது. பாமக மாதிரி சாதி அரசியல் முத்திரையில் சிக்கினால் தலித் வாக்குகளையும் இழக்க நேரிடம். தலித் முன்னேற்றம் என்பதை தவிர்த்து மக்கள் முன்னேற்றம் என்பதற்கு இவர்களின் எந்த திட்ட வரையரையும் இல்லை. இது இவர்கள் அரசியல் எதிர்காலத்திற்கு முன்னடைவு.நான் ஒரு காம்ரேட் என்று பெருமையான சொல்லிகொள்ளும் காலம் என் வாழ்நாளில் தமிழகத்தில் வராது போல. ஒரு சிலரை தவிர அனைவரும் சுயநல அரசியல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் நலன் காப்பதே இடதுசாரிகளின் முக்கிய கொள்கை. தமிழகத்தில் தொழில் நசிவு. தொழிலாளர் வேலை இழப்பு. விவசாயிகளின் தற்கொலை இதற்கு இவர் அழுத்தமாக இல்லை. பெரும்பான்மையை ஆதரித்து காலம் ஓட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். பெயரளவில் தான் கொள்கை இருக்கிறதோ என சந்தேகபட வைக்கிறார்கள். இது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

தேமுதிக இனி பிரேமலதா கையில் தான் இருக்கு. விஜயகாந்த பொது மேடைகளில் பேசாமல் இருப்பது நல்லது. விஜயகாந்தின் நிர்வாக திறன் குறைபாடு சமீபகாலமாக வெளிபடையாக தெரிகிறது. அதிமுக போலயே ஒரு சரிவை சந்தித்துள்ளது தேமுதிக.காங்கிரஸுக்கு யார் மீதாவது சவாரி செய்யலைனா நகர முடியாது. பாஜக எதிர்ப்பு அரசியலை சரியாக அறுவடை செய்ய தெரியவில்லை. பல மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி. உள்ளாட்சி தேர்தல் சொல்ல தகுந்த இடம். கட்சி தலைமையின் திட்டமிடமில் கோளாறு உள்ளது. தலையே அப்படி இருக்கும் போது கடைகோடி தலைமை வேறு எப்படி இருக்கும். சென்ற அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு பங்கு காங்கிரஸுக்கே அதிகம். இப்பொழுது யாரை ஆதரிப்பது என தெரியாமல் உள்கட்சி குழப்பத்தில் இருக்கிறார்கள்.நான் எப்பொழுதும் சொல்வது ஒன்றே ஒன்று தான்
ஒரு வேட்பாளருக்கான தகுதி அவரது கட்சியோ சின்னமோ அல்ல
அவரது பொதுநல பங்களிப்பு, சம்பந்தபட்ட ஊர் பிரச்சனைகளில் உள்ள தெளிவு. மக்கள் தகவல் தொடர்பு. தேவையான அறிவு இவைகள் தான். தவறு செய்வது மனித இயல்பு. அதிலிருந்து நம்மை மாற்றிக்கொள்வதே அறிவு. கடைசி வரை மாற்றிக்கொள்ள மாட்டோம். பணத்திற்கு ஓட்டை விற்போம் என்றால் உங்கள் வாழ்வாதாரம் கடைசி வரை உயரப்போவதில்லை.

யூனிவர்சல் டயட்!

புரோட்டின்+காய்கறி=எடை குறையும்

புரோட்டின்+கார்ப்(மாவுசத்து)=எடை கூடும்புரோட்டீன்+கொழுப்பு=எடை சமமாக இருக்கும்

இது தான் யூனிவர்சல் டயட் ஃபார்முலா
விவசாயத்தில் மனிதன் இறங்கி 10000 வருசம் ஆச்சு, இப்ப இருந்து கார்ப் எடுத்துகிறான். இன்னுமா உடம்புக்கு ஒத்துக்கலன்னு நானும் ஆராய்ச்சி பண்ணேன்.

கடந்த நூறு வருசத்துக்கு முன்னாடி வரை பெரிதாக நோய் நொடியில்லை. முதலில் குக்கர்னு ஒன்னை கண்டுபிடிச்சு ஸ்டார்சை வடிக்காமல் அப்படியே எடுத்து உடம்பில் குளுகோஸ் சேர்த்தது சர்க்கரை நோயின் முதல் அழைப்பு. கூடவே ஜங்க் புட்.தெரியாத சில விசயங்கள் டயட் பத்தி:

பொதுவா நாம கொழுப்பை எதிர்ப்போம். ஆனா கொழுப்பு எடுத்துக்கொள்வது செல்களுக்கு நல்லது. உடல் விட்டமின் டி தயாரிக்கவும். ஆண்களுக்கு டெஸ்ட்ரோன். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரக்கவும் உதவும்.

கருவளரச்சிக்கு கொழுப்பு சத்து மிக அவசியம். கொழுப்பு சத்து குறைபாட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்

உங்கள் உடம்பில் கொழுப்பே இல்லைனா உங்க உடல் செல்கள் அழிந்துவிடும். அதுக்கு சாப்பாடே அதுவும். புரதமும் தான்

இதய ஆரோக்கிய ஆராய்ச்சி செய்த அமெரிக்க மருத்துவ குழு ஒன்று நாளொன்றுக்கு குறைந்தது 300 மில்லிகிராம் கொழுப்பு மனிதனுக்கு தேவை என்கிறது. நன்கு வளர்ந்த கோழி முட்டையில் 185 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது

கடல் வாழ் உயிரினங்கள் மனித உடலுக்கு நல்லது. அதில் தேவையான கொழுப்பு சத்துகள் உள்ளன.

குறைய அளவு கொழுப்பு எடுத்துக்கொள்ள பிராய்லர் கோழி சாப்பிடுவார்கள். தேவையான அளவுக்கு தோலுடன் சாப்பிடுங்கள்

விலங்குகளின் ஈரலில் இரும்புசத்தும், கொழுப்பும் நிறைந்துள்ளது. விலங்குகளின் ஆர்கனில் தான் அதிக கொழுப்பும் புரதமும் உள்ளது. 100 கிராம் ஈரலில் 331 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது.

கெட்ட கொழுப்பும் உள்ளது. அது பதபடுத்தப்பட்ட ரிபைண்ட் ஆயிலில் தான் அதிகம் உள்ளது. 200mg/Dl அளவிற்கு மேல் இருப்பது ஆபத்து. இயற்கை எண்ணைய்களை பயன்படுத்த வேண்டும்

நார்சத்து உடலுக்கு அத்தியாவிசய உணவு அல்ல. உடல் அதை எடுத்துக்கொள்ளவும் செய்யாது.ஆனால் பிற கசடுகளை வெளியே கொண்டு வரும் மலமிழக்கியாக அது மட்டுமே பயன்படும்

நமது உணவு செரிமான மண்டலம் 28 அடி நீளமானது. அதில் பிற உணவுகள் இலகுவாக பயணம் செய்ய நார்சத்து உதவுகிறது.

25 திருந்து 35 கிராம் வரை நார்சத்து உடலுக்கு எடுத்துக்கொள்வது நல்லது.
நார்சத்து காய்கறிகளில் மட்டுமே உள்ளது.

காய்கறிகளும், புரதமுமே மனிதர்களுக்கு முக்கிய உணவு. இருந்தாலும் பசிக்கு கிடைக்கிறதை சாப்பிடுங்க. நானும் அப்படிதான். மிதமான உடற்பயிற்சியாவது செய்து உடலில் குளுகோஸ் சேருவதை தவிருங்கள்


சுதந்திரம் என்றால் என்ன?

MEL B ஸ்பைஸ் கேர்ஸ் இசை குழுவில் முக்கிய உறுப்பினர்.
அட்வெஞ்சர் வித் செலிபிரட்டிஸ் நிகழ்ச்சியில் பியர் கிரில்லுடன் கலந்துகொண்டார். நான் அம்மாதிரி பார்த்த நிகழ்ச்சியில் இது தான் பெஸ்ட் என்பேன். காரணம் அவுங்க பண்ண அட்வெஞ்சர் இல்ல. மெல்பி பகிர்ந்துகிட்ட சில விசயங்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க வரும் முன் தன் அம்மாவை சில வருடங்கள் கழித்து சென்று பார்த்ததாக கூறினார். அம்மாக்கள் பெண் குழந்தைகள் மேல் குற்றம் கண்டுபிடுத்துக்கொண்டே இருப்பார்கள். என் அம்மாவும் அப்படி தான். ஒருநாள் வாக்குவாதம் முற்றி வெளியே வந்தவள் இன்று தான் சந்திந்தேன் என்றார்.

உங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் தானே. ஒவ்வொருக்கும் ஒரு அப்பா இல்லையா!? அவர்களை பற்றி சொல்லுங்கள் என்றார் பியர்கிர்ல்ஸ்.
மூன்று பெண்களுக்கும் ஒரே பார்வை கொடுக்கும், அதிக நேரம் ஒதுக்கனும் என்றதில் ஒரு தாயாக முதிர்ச்சி தெரிந்தது.

முதல் குழந்தையின் அப்பா ஸ்பைஸ் கேர்ல்ஸ் இசைகுழுவில் இருந்தவர். இரண்டாவது குழந்தையின் அப்பா புகழ்பெற்ற ஹாலிவுட் காமெடி நடிகர் எடி மர்ஃபி. டாக்டர் டூலிட்டில், த நட்டி புரபசர் படத்தில் நாயகனாக நடித்தவர். தன்னை விட அதிக வயது மூத்தவர். அவருடன் இருந்த ரிலேசன்ஷிப் ஒரு அட்வெஞ்சர் மாதிரின்னு சிலாகிச்சார். மூன்றாவது குழந்தை இப்பொழது ரிலேஷன்ஷிப்பில் இருப்பவருக்கு பிறந்தது.

அந்த ரிலேசன்ஷிப் பற்றி பேசும் போது. அய்யோ தவறான ஆளுடன் ரிலேசன்ஷிப் வச்சுகிட்டமேன்னு பேச்சில் எந்த அருவருப்பும் இல்லை. அதெல்லாம் எனக்கு கிடைத்த அனுபவம் என்பது போல் ஒரு தெளிவு. நான் வாழ்வது என் வாழ்க்கை அதை எனக்காக வாழுறேன் என்ற தெளிவு.மேலைநாட்டு கலாச்சாரம் என்று ஒதுக்குவது. ஒரு பெண்ணின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள இயலா ஆணாதிக்க மனபான்மையால் தான் முடியும். இயற்கையில் அவளும் ஒரு பெண். ஸ்பைஸ் கேர்ல்ஸ் அனைவரும் ஒரே லட்சியத்துடன் இருந்தோம். அதை விட முக்கியம் நாங்கள் அனைவரும் இந்த உலகத்தால் நிராகரிக்கபட்டோம் என்றார்.

சுயமாக முடிவு எடுக்கக்கூட அனுமதிக்காத சமூகத்தை கலாச்சாரம் என்ற கம்பளி போர்த்தி பெண்களை வேக வைத்து அதில் பெருமை அடையும் சமூகம் இது. கல்வி, வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் இல்லை. இதையெல்லாம் விட பெரிதாக இருக்கும் பிரச்சனை குழு மனபான்மை. நீ பாட்டுக்கு அவனை போய் கல்யாணம் பண்ணிகிட்டியே. இனி நம்ம சாதி ஜனங்க முகத்தில் நான் எப்படி முழிப்பேன்னு கொலை பண்ணிட்டு அதை நியாயபடுத்தும் சீழ்பிடித்த சமூகம்.

சுதந்திரம் என்பது அனைவரும் சமமாக ஒரே போல் இருக்க வேண்டும். ஆண், பெண் பாகுபாடு, சாதிய வித்தியாசங்கள். மத பெரும்பான்மைகள் பார்க்கும் நாட்டை தயவுசெய்து சுதந்திர நாடு என சொல்லாதீர்கள்

(பியர் கிரில்ஸை ஜெல்லிமீன் கொட்டியதும் அவருக்கு அவசர சிகிச்சையாக கொட்டிய இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். பியர் கிரில்ஸிடம் ஸ்டாக் இல்லைன்னு மெல்பி உதவி செய்தார். அந்த விடியோ இது. முழு விடியோ முதல் கமெண்டில் இருக்கு)

https://www.youtube.com/watch?v=GWBnoLFYdcU

அது ஒரு அழகிய கனாகாலம்!

Blog எழுத தொடங்கிய காலம் வசந்த காலம்னே சொல்லலாம். தருமி, கல்வெட்டு போன்றவர்கள் பதிவுகளில் விவாதித்து தான் வால்பையன் ப்ளாக்கே பேமஸ் ஆச்சு. நான், பங்காளி ராஜன், செந்தழல் ரவி, கும்மி நாலு பேரும் சேர்ந்து ஆள் இன் ஆள் அழகுராஜா ப்ளாக் நடத்தினோம். ஒரு மதம் விடாம கலாய்ப்போம்.

தமிழ் ஓவியான்னு ஒருத்தர், ஆதியில் பெரியார் எழுதியதை மட்டுமே காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருப்பார். ஏன் பெரியார் கண்ணில் உலகை பாக்குறிங்க. உங்க கண்ணில் உலகை பாருங்கன்னு அவரையும் கலாய்ச்சிட்டு வருவேன். அந்த காலத்தில்(இப்ப ஓப்பன் ஆகுதா தெரியல) என் ப்ளாக்கை அரபுநாடுகளில் தடை பண்ணியிருந்தாங்க (மாமியார் சிவகாமி மேல சத்தியமா)

இஸ்லாம் பத்தி எழுதினா நான் காவின்னு நினைச்சிகிட்டு கமெண்ட் போடுவானுங்க. அடுத்த கமெண்டில் ஆமாங்க விஷ்ணுவும் சிவனும் டொக்கு போட்டு அய்யப்பனை பெத்தாங்கலாம். அவனை பார்க்க விரதம் இருந்து கும்பிட போறாங்களாம் கிறுக்கு பயலுகன்னு கலாய்ப்பேன்இஸ்லாத்தையும், காவியையும் ஒருத்தன் கலாய்ச்சிட்டா அவனுங்க லிஸ்டில் பெரியாரிஸ்டா தான் இருக்கனும். அடுத்த கமெண்ட் மணியம்மைன்னு எழுதுவானுங்க. நல்லவேளை மணியம்மைக்கு குழந்தையில்ல இருந்திருந்தா குடை எடுத்துட்டு போய் கொக்கு சுட்ட கிழவன் கதையாயிருக்கும்னு பதில் போடுவேன்.

யார்றா இவன்னு தெறிக்கவிட்டுகிட்டு இருந்தேன். இங்க என்னடான்னா ஃபாஸ்ட் புட் மாதிரி ரெண்டு வரியில் நூடுல்ஸ் சமைச்சிகிட்டு இருக்கோம். ஆரம்பத்திலாவது சிலர் விவாவத்திற்கு வந்தாங்க. இப்பல்லாம் யாரையும் காணோம். அப்படியே யாராவது ஒரு கமெண்ட் கருத்து மோதலா போட்டுட்டாலும் ஜன்னல் வழியா ஒருக்கா கையை நீட்டி தம்பி, அவண்ட்ட வச்சுக்காத, ஓடிருன்னு அபாய சங்கு ஊதிருது.

என்ன தாண்டா பண்றது. வெளிநாட்டுக்கு எதும் போயிரலாமான்னு பார்த்தா எங்கிட்ட பாஸ்போர்ட் கூட இல்ல. கிஷோர்லாம் பாருங்க. ்ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டி கமெண்ட் போட்டாலும். அப்புறம் சார் நேத்து அடிக்க வர்றேன்னு சொன்னிங்க, வரவேயில்லன்னு தொடைச்சு போட்டு போய்ட்டே இருக்கான். இந்த சூடு, சொரணை, மான , ரோசத்தோடு வாழ எவ்ளோ இழக்க வேண்டியிருக்கு தெரியுமா?

காதல்!

உயிரற்ற ஒரு பொம்மையுடன் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும், கட்டிபிடித்து உறங்கும் பால்யத்தில் ஆரம்பித்தது நம் நிபந்தனையற்ற காதல்.
எது காதல்? அதன் எல்லை என்ன? அதன் வரையறை என்ன? போன்ற எந்த அளவுகோளுக்குளும் சிக்காமல் சாதி, மதம், மொழி, இனம் யாவும் கடந்து மனிதம் ஒன்றை மட்டும் பேசுவதே காதல். அது உணர்வுபூர்வமானதா அல்லது மூளையின் ரசாயன மாற்றமா? எதுவாக இருந்தால் என்ன? அந்த அனுபவம் கிடைக்குமா ஏங்கும் கோடி கணக்கான உயிர்களில் நானும் ஒருவன் தான்.

நான் இல்லையென்று சொன்னாலும் உலகில் 99.99% காதல் தோற்றத்தின் ஈர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு 4 மாதங்களுக்கு மேலும் தொடர்ந்து இருந்தால் அதை காதல் எனலாம். ஈர்ப்பில் தோன்றிய காதலாக இருந்தாலும் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் ஆளுமை வேண்டும். அப்படி இல்லாத காதலில் ஒருபக்க ஆளுமை அதிகமாக இருக்கும். ஒருவர் ஆல்ஃபாவகவும். ஒருவர் ஃபீட்டாவகவும் இருப்பார்/. உலகில் முக்கால்வாசி தம்பதியர்கள் இப்படி தான். ஆனாலும் அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

காதலின் பாலபாடமே நிபந்தனையற்ற காதல் தான். ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும். தவறுகளோ, நிராகரிப்புகளோ பெரிதாக தோன்றாது. சிறிது நாட்கள் ஆனப்பின் ஆண்களுக்கு நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பொஸிசிவ்நெஸ்ஸும், பெண்களுக்கு குறை கண்டுபிடிக்கும் குணமும் வந்து விடும். காதலிக்கும் பொழுது வரும் சண்டை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு. மூணு முறைக்கு மேல் சண்டையின் போது உனக்கும் எனக்கும் ஒத்து வராது என சொல்வீர்களேயானல் நீங்கள் பிரிந்து விடதலே நலம். இருவருக்கும் இருக்கும் காதலை விட உங்கள் ஈகோ தான் உங்களை ஆள்கிறது.

ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராபதி போன்ற சங்க காதலில் இருந்து சமீபத்தில் பார்த்த டைட்டானிக் காதலுக்கு வந்தாலும் ஒரு தனி மனிதன் தன் காதலே சிறந்தது என்பான். அந்த காதல் கல்யாணம் என்ற கமீட்மெண்டில் நுழையும் போது சாதல் ஆகிறது. அவனது சிறந்த காதல் தியாகமாக மாறிவிடும். விவாதத்தின் பொழுது நாம் காதலித்த பொழுதில் என்ற வார்த்தை வரும். அப்படியானால் அவர்கள் இப்பொழுது காதலிக்கவில்லை.

திருமண உறவுகள் உடையகாரணமே இதுதான். கல்யாணத்திற்கு பிறகு எங்க போயிடுவா கழுதை என்ற அலட்சியபோக்கு. நான் என்ன வேணும்னாலும் தெள்ளவாரிதனம் பண்ணுவேன். நீ அடங்கிதான் இருக்கனும் என்ற ஆணவ போக்கு பெண்களை வெளியே கொண்டு வருகிறது. காதலிக்கும் பொழுது நேரம் காலம் இல்லாமல் மணிக்கணக்காக பேசும் காதலன். கணவன் போஸ்டிங் வந்ததும் ஏன் சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ற எங்கிறான்.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தார்/ அவரது தீஸிசை சப்மிட் பண்ணுவதற்கு முன்னரே அவருக்கு வாதம் வந்து கழுத்துக்கு கீழ் செயல் இழந்து போயிற்று. ஆயினும் அந்த பெண் அவரை திருமணம் செய்துக்கொண்டார்.  அவர்களுக்கு மூன்று குழந்தைகள் முதல் குழந்தையின் ஆசியருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மூன்றாவது குழந்தை அந்த ஆசிரியருக்கு பிறந்ததாகவே சந்தேகப்பட்டனர். ஆனாலும் ஸ்டீபன் எதுவும் கேட்கவில்லை.  அவரை கவனிக்க வந்த பெண் இவர் ஆளுமையில் காதல் கொள்ளவும் தன் மனைவியை அழைத்து இனி உன்னுடன் பயணிக்க முடியாது என விவாகரத்து வழங்கிவிடுவார். ஒரு வருடம் கழித்து அவர் அந்த ஆசிரியரை திருமணம் செய்து கொள்வார்.ஒரு காதல் பயணிக்க தோற்றமும், ஆளுமையும் மட்டுமே போதாது. புரிதலும், அர்பணிப்பும், தேவைகளும் பூர்த்தியும் தேவைபடும் என்பதை உணர்த்தியது அவரது வாழ்க்கை. அவர் சமாதானம் செய்திருக்கலாம். அல்லது அந்த ஆசிரியருடன் தொடர்பை துண்டிக்க செய்திருக்கலாம். ஆனால் ஸ்டீபன் அவர் மனைவி மேல் வைத்திருந்த காதலே அவருக்கு விவாகரத்து கொடுக்கவந்தது. துணைக்கு தெரியாமல் செய்வது கள்ளகாதல் என்றால் உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வதும் கள்ளகாதல் தான். சமூகம் ஒழுக்கசீலர்கள் வேசம் போடும். ஆனால் அவர்களுக்கும் தெரியும். இது இயற்கையான உணர்வு. நமக்கும் ஏற்பட்டுள்ளது என்று.

தனி மனித உணர்வுகள் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த உங்களுக்கு சில தோல்விகள் தேவையென்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுகொள்ளப்படாத தோல்வி உங்களுக்கு இயலாமையை ஏற்படுத்தும். காதலே போலிதனம் என்பீர்கள். உலகில் இருக்கும் பெண்களெல்லாம் சாபம் என்பீர்கள். நம்மை சுயபரிசோதனை செய்தும், மறுசீரமைக்க வாய்ப்பு கிடைத்தும். தம்மை நியாயபடுத்தி பிறர் மேல் எப்போதும் குறை சொல்லிகொண்டிருக்கும் மனிதம் அடுத்த படிக்கு நகரவே நகராது. மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்னுடம் பயணித்த பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தேன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

பெண்ணுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டியதில்லை. அது அவர்களிடமே உள்ளது. அதை நீங்கள் பறிக்காமல் இருந்தாலே போதும். ஆனாலும் பெண்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதிலேயே வாழ்வை செலவிடுகின்றனர். நீங்கள் ஆண் என்பதை உங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. ஒரு பெண் உங்களிடம் பாதுகாப்பை உணராமல் உங்கள் ஆண்மை முழுமையடையாது. பெண்ணின் சுதந்திரபோக்கு சில வலிகளை தருவது போல் இருக்கலாம். ஆனால் எனக்கு நேர்ந்த ப்ரேக் அப் என் திமிரையும் ஆணவத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து எரிந்தது.

காதல் அழகான உணர்வு. அங்கிகாரம், நம்பிக்கை. நீ பேசினாலே போதும் எதையும் செய்வேன் என்று யானை பலம் தரும். நிபந்தனையற்ற காதலை செலுத்துங்கள். நீங்கள் என்ன பெற்றாலும் அன்பொன்றை மட்டுமே பதிலாக திருப்பி கொடுங்கள். கற்காலம், இரும்பு யுகம் தாண்டி நாம் காதல் காலத்தில் வாழ்துக்கொண்டிருக்கிறோம். அன்பு ஒன்றே வன்முறைக்கு மாற்று. இந்த உலகம் அன்பினால் இயங்கப்படவேண்டும். ஆதலினால் காதல் செய்வீர்

இனிய அவளும் நானும் தினவாழ்த்துகள்

D-16

முதல் படத்திலேயே நல்லதொரு கதை களத்தை தேர்வு செய்ததிற்கும், அலுப்பு தட்டாத திரை கதை அமைத்ததற்கும் கார்திக் நரேனுக்கு பாராட்டுகள்.

ஸ்டேண்ட்லி குப்ரிப்னு ஒரு டைரக்டர். 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயக்குனர். இவரோட கிளாக் ஒர்க் ஆரஞ்ச் படம் மிக நுண்ணிய உளவியல் நுணர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. டாம் குரூஸ் நடித்த ஐஸ் வைட் ஷட் என்ற படமும் இவர் எடுத்தார். இவர் படங்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற நாவலை படமாக்கியது தான்.

ஐஸ் வைட் ஷட். போகிற போக்கில் இலுமினாட்டிகள் வாழ்க்கையை தொட்டு செல்வது போல இருக்கும். 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு காட்சி முடியும் போது எதோ சஸ்பென்ஸ் வைப்பது போல் காட்சியை முடிப்பார். அடுத்த காட்சியில் அந்த சஸ்பென்ஸ் என்னான்னு கூட சொல்ல மாட்டாங்க. படிக்கும் நாவலை சுவாரஸ்யபடுத்த அந்த எழுத்தாளர் எழுதியதை அப்படியே காட்சி படுத்தி சொதப்பினார்னே சொல்லலாம். இதை அந்த படம் பார்க்கும் போதே எழுதினேன்.

துருவங்கள் 16 படமும் அம்மாதிரியான காட்சிகள் நிறைந்தது. எல்லார் மீதும் சந்தேகம் வரும்னு காட்டப்பட்ட காட்சியில் அனைத்தும் ரகுமானின் பார்வைன்னு கடைசியில் சொன்னாலும் லாஜிக்கலி அது செட்டாகல. ஆரம்பத்தில் காரில் இருந்து முகமூடி அணிந்து செல்லும் கொலைகாரனை காட்ட தேவையில்லை. அது குழப்ப முடிச்சு. அதை அவிழ்க்கவும் இல்லை.ரகுமானின் மகன் தான் கொலைகாரன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். மனோ தானாக முன்வந்து விபத்து பற்றியும்,, பிணம் காணமல் போனது பற்றியும் சொல்லுவான். விபத்து மோட்டார் வாகன சட்டப்படி அபராதத்தில் முடியலாம். குற்றத்தை மறைத்ததிற்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால் ஒரு போலீஸாக ரகுமான் நினைத்திருந்தால் விபத்தில் சிக்கிய கிரிஷின் நண்பனை கொலையாளி ஆக்கியிருக்கலாம். அவன் உடம்பு குளத்தில் தான் கிடக்கு. விபத்து நடத்ததற்கு அவர்களை ப்ளாக் மெயில் பண்ணிய பேப்பர் போடும் ஆள் சாட்சி போதும்.

கடைசி வரை கொலையாளி கிடைக்கவேயில்லை என்று பெரும்பாலும் கோப்புகள் விடப்படாது. எதாவது ஒருவகையில் கேஸை முடிக்கத்தான் பார்ப்பாங்க. அதை முடிக்க அருமையான லூப்ஹோல் கிடைத்தபோதும் ஏன் ரகுமான் அதை செய்யாமல் கடைசி வரை குற்ற உணர்வோடு வாழ்ந்த் சாகனும்.

-நான் இப்படியெல்லாம் ஒரு படத்தை விமர்ச்சிக்க மாட்டேன். ஆனாலும் எழுதனும்னு தோணுச்சு

கோள்களும், மோதல்களும்

நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!, பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில்  சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை  சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே

சுய இன்பம்- தவறான புரிதலும் விளக்கமும்

கேள்விகள் தான் அறிவின் ஆரம்பம். அதும் யாரும் பேசதுணியா விசயத்தில் சந்தேகம் கேட்ட நண்பரை முதலில் பாராட்டுகிறேன்.

நானும் உங்கள் வயசை கடந்து வந்தவன் தான் அல்லது தொடபோகிறவன் தான். என்னிடம் உள்ள வித்தியாசம், எதை சரின்னு சொன்னாலும் அது ஏன் சரின்னு யோசிப்பேன், தப்புன்னு சொன்னாலும் அது ஏன் தப்புன்னு யோசிப்பேன். அந்த புரிதலில் உங்களுக்கு சில விளக்கங்கள். இது சுய இன்பத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கொடுக்கும் விளக்கமல்ல. உங்கள் குற்ற உணர்ச்சியை கலையும் முயற்சி.

கேள்வி
matha mirugangala vida humans ku sex mela athiga aarvam iruka karanam enna thala?

மற்ற விலங்குகளுக்கு(சிம்பன்சி விதிவிலக்கு) செக்ஸ் இனப்பெருக்கத்திற்காக மட்டும். மனிதன் அதில் பல நிவாரணங்களை கற்றான். பல பேண்டஸிகளை புகுத்தினான். செக்ஸ் சிறந்த யோகா மற்றும் தியானமும் கூட. தியானம் என்றால் வேறு சிந்தனையில்லாமல் இருப்பது. செக்ஸின் போது ஆபிஸ்ல நாளைக்கு என்ன வேலையோன்னு யோசிப்பிங்களா?

negative side of masterbation pathi solluinga thala

தவறான நம்பிக்கைகள் தான் அதோட நெகடிவ் பக்கம்.
பெண்ணுடன் உடல் உறவுக்கும், சுய இன்பத்திற்கும் உங்கள் ஆண்குறி அதே ஆக்சனை தான் கொடுக்கப்போகுது. ஆனால் சுய இன்பத்தில் மட்டும் எப்படி உடலுக்கு கெடுதியாகும். எதோ மருந்து சாப்பிட்டு பெண்ணுடன் 5 நிமிசம் இயக்குவது பெருமையான விசயம். ஒரு நிமிடம் சுயமைதுனம் செய்வது எப்படி கெடிதியாகும்?

பெண்களுக்கு செக்ஸ்க்கு தயாராக லூப்ரிகண்ட் ஆகும். தொடர்ச்சியா 5 நிமிசமெல்லாம் செயற்கையாக தயாரிக்கப்பட்ட செக்ஸ் விடீயோக்கள் மட்டுமே சாத்தியம். ஒரு சில நிமிடங்களில் பெண்களுக்கு அங்கே வலியும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சும். அதிக நேரம் எடுத்துக்கொள்வது ஆண்மையல்ல. அதிக காதலை காட்டுவதே ஆண்மை.

விந்து வெளிப்படும் போது உடலில் இருந்து புரதமும் வெளிவரும். மீண்டும் விந்து பையில் விந்தணுவை பாதுகாக்க உடலில் இருந்து புரதத்தை எடுக்கும். (பெண்களுக்கு விட்டிமின் சி எடுக்கும். அவர்கள் கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்) அது தொடரும் போது உடலில் புரத இழப்பு ஏற்பட்டு சோர்வாகும். அதற்கு நீங்கள் புரதம் எடுத்துக்கொண்டாலே போதும். உங்களுக்கு எதிர்மறை நம்பிக்கைகள் மூலம் பயம் ஏற்படுத்தி அந்த பயத்தை பயன்படுத்தி சம்பாரிப்பவர்கள் நான் சொல்வது பொய் என்று அறிவியல் பூர்வமாக நிரூப்பித்தால் நான் அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி தர்றேன்.

psychological ah problems varum nu solranga ?

விலங்குகள் பருவம் அடைந்தவுடன் தன் துணையுடன் சேர உங்களையோ, என்னையோ கேட்ட வேண்டியதில்லை. அது தன் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் மனிதன் என்ற சமூக விலங்குக்கு பல சட்டதிட்டங்களும், ஒழுக்க விதிகளும் உள்ளன. ஆக மனிதன் தன் செக்ஸ் உணர்வுகளை மறைத்தே வைக்க வேண்டியுள்ளது. சுய இன்பமும் தவறு என்று சொல்லப்பட்டிருப்பதால் அதை செய்தால் பெரும் தவறு செய்து விட்டது போல் மன உளைச்சலுக்கு ஆளாவான். நிறைய மன அழுத்தம் சமூக கோவமாக திரும்பும். தனக்கு கிடைக்காத செக்ஸ்க்காக அவன் வன்முறையில் இறக்குவான். சமூகத்தில் நடக்கும் முக்கால்வாசி பாலியல் வன்முறைக்கு காரணம் பாலியல் வறட்சியும், புரிதலின்மையுமே.

முதலில் குற்ற உணர்வை கலையுங்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கும் பைபிள் பழைய ஏற்பாடு ஆதிகயாமம் 29 அதிகாரம் ஒரு வசனம் சொல்லுது. நீ இறந்து போன உன் சகோதரனின் மனைவி திருமணம் செய்து கொள். உன் விதைகள் மண்ணில் விரயம் செய்யாதேன்னு(படிக்கிறது இப்படியெல்லாம் யூஸ் ஆகுது) அதற்கு முன்பே கிரேக்க நாகரிகத்தில் டீன் ஏஜ் பையன்கள் பாட்டி முன்னாடி சுய மைதுனம் செய்துட்டு தான் போய் படுக்கனும். அப்ப தான் தூக்கம் வரும்னு ஒரு நம்பிக்கை.

தவறான நம்பிக்கைகளை தருவதும், பயத்தை ஏற்படுத்துவதும் அதை வைத்து காசு பார்க்கும் தவறான மனிதர்கள் மட்டுமே. உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மருத்துவர்களின் கேட்டுபாருங்க. அதெல்லாம் உண்மையில்லைன்னு தான் சொல்வாங்க.

sex addiction pathium konjam solluinga

செக்ஸ் ஆர்வம்னு சொல்லுங்க அதை. செக்ஸ் அடிமைன்னு சொல்லாதிங்க. மனிதன் எதோ விசயத்தில் ஆர்வமா தான் இருக்கான். எனக்கு கூட படிப்பதிலும் அதை புரியும்படி எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அதை அடிமைதனம்னு சொல்விங்களா?
சரியா புரியாத, தெரியாத ஒன்றின் மேல் ஆர்வம் ஏற்படுவது இயற்கை தான். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசி உங்கள் விருப்பங்களை சொல்லி அதை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை. ஒரு விசயம் தெரியாத வரை அது உங்கள் மண்டைய குடைஞ்சிகிட்டே தான் இருக்கும்

athanala body ku yentha problem uh illaiya thala

நம்மால் தூங்கிகிட்டே இருக்க முடியுமா?
சாப்பிட்டுகிட்டே இருக்க முடியுமா?
நம் உடலில் உள்ள பயாலாஜிகல் மெக்கானிசம் மிக அருமையானது. அதற்கு என்ன தேவை என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். பசிச்சா சாப்பிடுங்க. யூரின் வந்தா போங்க. செக்ஸ் பண்ணனும்னு தோணுனா பண்ணுங்க. சிறு வயதில் இருக்கும் ஆர்வம் போக போக புரிதலுடன் நடக்க ஆரம்பிக்கும்.
புரூஸ்லீ சொல்லுவார். ஐ டோண்ட் வாண்ட் ப்ராக்டீஸ் 1000 பஞ்ச்ஸ்
ஐ வாண்ட் பஞ்ச் குட் ஒன் அது ,மாதிரி தான் உறவும் இருக்கனும். புரிதலுடன் நடக்கும் ஒரே ஒரு உடலறவு ஏற்படுத்தும் காதல் பிணைப்பிற்கு குறுக்கே எதுவும் வர முடியாது. பல தம்பதியர்கள் இன்றும் அதே காதலோடு இருக்க காரணம் அது தான்

#கேள்விபதில்
கேள்விகளை இன்பாக்ஸில் கேட்கலாம்

!

Blog Widget by LinkWithin