குவியல் (17.08.2013)

கடைசியா குவியல் எழுதுனது 28.01.2012, ஒரு வருடத்திற்கும் மேலாக இணையத்தில் சரியாக செயல்பட முடியாததால் பதிவுகள் கூட சரியாக எழுதவில்லை, இந்த மாதத்தில் இருந்து தான் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளேன். கடைசி குவியல் எழுதிய போது 1250 ஃபாலோயர்ஸ் கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆக்டிவா இல்லாவிட்டாலும் ஃபாலோயர்ஸ் இணைந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள் இப்பொழுது 1410 ஃபாலோயர்ஸ். அந்த நல்ல உள்ளங்களுக்காகவது எதாவது எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன்.

*********

சென்ற ஞாயிறு 11.08.2013 ஈரோடு புத்தக சந்தையில் தோழர் வா.மு.கோமுவின் இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளியிடப்பட்டது, மிக சிறப்பாக நடந்து முடிந்த விழாவில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது.
இரு புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கிய நண்பர்கள் 90% வா.மு.கோமு என்ற தனிமனிதனை பற்றி மட்டுமே பேசினார்கள். புத்தகம் வாங்க தூண்டும் அளவுக்கு போதுமானதாக இல்லை அது. அடுத்த புத்தக மதிப்புரையில் புத்தகத்தின் நிறை, குறைகளை சரியாக பேசுவார்கள் என நம்புகிறேன்.
அநேகமாக அடுத்த புத்தக வெளியீட்டு விழாவில் என் கையில் மைக்கை கொடுத்து விடுவார்கள் என நினைக்கிறேன்..*********

ஃபாளக் எழுதுவதை பெரும்பாலனவர்களுக்கு தடுத்தது ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் தான் என்றால் அது மிகையாகாது. ஒரு பத்தியாக இருந்தாலும் அதை அடித்து போஸ்ட் செய்து விட்டால் 100 லைக் 20 கமெண்ட் என சில மணிநேரங்களுக்கு போதை தலையில் நின்று விடுகிறது. ப்ளாக் எழுத நிச்சயம் விசயம் தேவை. ஃபேஸ்புக் போல் இரண்டு வரி மொக்கைகள் ப்ளாக்கில் வேலைக்காகது. ப்ளாக் நல்லதொரு எழுத்து பயிற்சிக்கூடம். நண்பர்கள் படிக்கிறாங்களோ இல்லையோ, எழுதிகொண்டே இருப்பது என முடிவு செய்திருக்கிறேன்.

********

வோல்வோரின் - 2

முந்தைய படங்களை மறந்து பார்க்கலாம் என்றால் இடையிடையே ஜீனை கொண்டு வந்து குழப்பி எடுத்து விடுகிறார்கள். காட்சிகள் எதற்கு முன்னால் எதற்கு பின்னால் என்று புரியாமல் நான் லீனியராக இருக்கிறது. சூப்பர் ஹீரோ படங்களில் உள்ள ஒரே சிக்கல் அந்த ஹீரோவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு ஒரு வில்லனை உருவாக்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவை டம்மியாக்கி முக்கால்வாசி படத்தை ஓட்டி விட்டார்கள். ஆக்‌ஷன் ஒகே. திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்********

இறுதியில் புரிதல்

விட்டொழி
தப்பி ஓடு
ஒளிந்து கொள்
கண்ணை இறுக்க மூடு
உலகம் இருண்டதாய்
நினைத்து கொள்
முடிவில்
யதார்த்தம் கண்டு
வீடு திரும்பு..

7 வாங்கிகட்டி கொண்டது:

Kandaswamy said...

வாழ்த்துக்கள் வால்..
மீண்டும் பழைய மாதிரி நிறைய எழுதுங்கோ...

Kandasamy - Coimbatore

Yaathoramani.blogspot.com said...

பதிவுகள் தொடர்ந்து எழுத முடிவெடுத்தது
நல்ல முடிவு
வாழ்த்துக்களுடன்....

rajamelaiyur said...

குவியல் அருமை. . .தொடர்ந்து கலக்குங்கள். . .

rajamelaiyur said...

பிளாக்கில் ஹிட்ஸ் போல முகனூலில் லைக். . . . ஆனாலும் தங்கள் கருத்து உண்மை

MADURAI NETBIRD said...

நீண்டநாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு தொடரட்டும்

அகல்விளக்கு said...

குட் மார்னிங் ப்ரோ...

Samy said...

Glad to see you again. Sathi

!

Blog Widget by LinkWithin