உண்மை என்றால் என்ன!?

டிஸ்கி: மொழிநடை கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் அமைந்து விட்டது, தயைகூர்ந்து புரியாத பத்திகளை மீண்டும் ஒருமுறை படித்து கொள்ளவும்!

*********

”வாய்மையே வெல்லும்” என்று சொல்லித்தான் இந்தியாவில் வளர்க்கப்படுகிறோம். ஆனால், இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேற்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, ஒரு விடயம் உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பப்படுகிறது, அதாவது அந்த இரண்டு பரிமானத்தை(பரிணாமம் இல்ல) தாண்டி வேறு இல்லை என்று அர்த்தம்!

உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே,
அது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க படுவதே ஆதாரப்பொருள், முடிவில்லாது முடிக்கப்படும் விவாதங்கள் இரு தன்மையிலும் நிலை கொள்கிறது, அது வாதி, பிரதிவாதிகளின் நம்பிக்கை தன்மையின் அடிப்படையில் ”முடிவில்லாத முடிவிலியாக முடிவுசெய்யபடுகிறது”(இப்பவே கண்ண கட்டுதே), ஆனாலும் அது உண்மையா, பொய்யா என்பது முடிவில் முடியாது,(மூன்றாம் பரிமானம்!?)

வாதங்களில் வாதி, பிரதிவாதியின் முன்முடிவுகளே உண்மையாக நம்பபடுகிறது, இரண்டு வாதிகளாலும் சில நேரங்களில் விட்டுகொடுக்க பட்டாலும், வாதி/பிரதிவாதியின் நிலைபாடு மாறுவதே உண்மையான உண்மையின் வெற்றி, ஆனாலும் எல்லா வாதத்திலும் இது நடக்கிறதா என்பது கேள்விகுள்ளாக்கபடவேண்டிய உண்மை, அவரவர் நம்பிக்கையை உண்மையென நம்பும் போது, உண்மையான உண்மையை உண்மை என நம்ப உண்மையாகவே சிலருக்கு தயக்கமாக இருக்கிறது, (மூச்சு வாங்குதுடா டேய்)

உண்மையில் திட/திரவ/வாயு தன்மையுள்ள நிலைப்பாடுகள்(பொருள்கள்) மட்டுமே நிருபிக்க பட தகுதியுள்ள உண்மைகளாக உள்ளன, அதை நிருபிப்பது சுலபம். நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவை, என்றென்றும் இறுதி தன்மை இல்லாததாகவே இருக்கிறது, அவை அதிகபட்ச சாத்தியகூறுகளின் எண்ணிக்கையில் உண்மையை தக்க வைத்து கொள்ளும், சிலருக்கு குறைந்த பட்ச சாத்தியகூறுகளே போதுமானதாய் இருக்கிறது!


உண்மை, தனிமனித நம்பிக்கை மற்றும் தனிமனிதனை பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்க படுவது, ஒருவரின் முந்தய நம்பிக்கை மற்றும் அவரின் வாத நிலைப்பாட்டு தோற்றம் பற்றிய நிலைபாடு நமக்குள் ஒரு முன்முடிவுகளை தரும், அவரவர் நம்பிக்கையும், கருத்துக்களும், குணங்களை பற்றிய நம்பிக்கை தரும், ஆனால் அவையெல்லாம் உண்மை தானா?இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ஆல் இன் ஆல்ல இருக்குற இந்த பதிவை யாரும் நம்பாதிங்க நண்பர்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பரிணாமம் - ஆரம்பம்

டிஸ்கி 1:இவையனைத்தும் எனது சுய புரிதல்களே! சாத்தியகூறுகளின் அதிகபட்ச தன்மையை அறிந்து கொள்ள விவாத பொருளாக உங்கள் முன் வைக்கிறேன்!, தினந்தோறும் பரிணாமத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருக்க முடியாததால் குறிப்புகள் எடுத்து வைத்து அவ்வபோது தொடர்கிறேன்!

டிஸ்கி 2:பட்டாபட்டி, மங்குணி அமைச்சர், கரிசல்காரன் பின்னூட்டம் இடும் முன் எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்! arunero@gmail.com

*************************

தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!


பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!


ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!


குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!

கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன் என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!

இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!


மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!

முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!

தொடரும்!

தொடக்கமும் முடிவும்!

இதை கேட்டுட்டு போங்களேன்!
அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது

*****************

அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.

***************

கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!

***************

மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!

****************

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!

*****************

இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”

லதானந்த் VS மதுரை பொண்ணு!

இந்த பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு என்னை தான் பதில் எழுத சொன்னாரு! எனக்கு ஆணி அதிகமா இருந்ததால என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!


****************

அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஆமாம், ஒருமுறை என்னுடய கல்லூரியில் கேரளா சுற்றுலா அழைத்து சென்றனர். உணவு விடுதியில் நிறுத்திய போது நாங்க அனைவரும் ஓடியது அங்கே தான்!, அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ், நாங்க இருந்தது 20 பேர், வேற வழியில்லாம ஜென்ஸ் ரூமையும் நாங்களே ஆக்ரமிச்சிகிட்டோம்!, பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!


யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.


எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?


ம்ம்ம்ம்.நெறய இருக்கு.நானும் என்னோட பிரண்டு கொடைகானல் போனோம்.நாங்க போனப்ப சீசன் டைம்.நல்ல கிளுகிளுன்னு குளிருச்சு.அத என்னால மறக்க முடியாது.அடுத்து முணாறு போனோம்.அங்க பார்த்தால் இன்னும் கிளுகிளுனு குளிருசு.இந்த மாதிரி நெறய கைவசம் இருக்கு.அடுத்து ஊட்டி போனோம்.. ஐயோ அடிக்க வர வேண்டாம்..(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)


நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.


இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(தப்பிச்சிகிட்டானோ)


சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

காலேஜ் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போலாம்னு கிளம்ப லேட்டாயி போய் நின்னா பயங்கர கூட்டம்! ஒரு ஃப்ரெண்டு பேச்சை கேட்டு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!

நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே,  எப்படி தான் சிஸ்டத்துல ப்ரோக்ராமை அழிச்சாலும் நாம எப்புடியும் பாத்து தான் எழுத போறோம்.முக்கியமா எவ்ளோ தான் படிச்சுட்டு போனாலும் டீச்சர் முகத்த ஒரு தடவ பார்த்தா போதும்.எல்லா ப்ரோக்ராமும் மறந்து போயிரும்.நான் பரீட்சைல பிட் அடிச்சது  தான் பெரிய சட்ட மீறல்.

அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

கமெண்ட் போடுறது வால்பையன் ப்ளாக்குல மட்டும் தான்,  ஒரு தடவை ஸ்மார்ட்ங்கிறவர் பதிவுல கமெண்ட் போட்டேன்! அனானி கமெண்டுனா எனக்கு என்னான்னு தெரியல


அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.


அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?டோண்டு!
don't do என்பதை தமிழில் டோண்டு என்றும் சொல்லலாம்!

குவியல்!..(16.04.10)

டிசம்பர் மாசம்னு நினைக்கிறேன் 500 பாலோயர் பூர்த்தியானதுக்காக நன்றி சொல்லியிருந்தேன் ஒரு குவியலில், இப்போ 600 முடிந்து 609 பாலோயர்ஸ், உங்களாலேயே இது சாத்தியமானது மிக்க நன்றி நண்பர்களே! 600 வந்த போதே பதிவு போடாததற்கு காரணம் ஆர்குட் நண்பர்களும் 600 எண்ணிக்கையை நெருங்கி கொண்டிருந்தார்கள், தற்பொது அதுவும் 600, என்னை ஆர்குட் நண்பனாக ஏற்று கொள்ள இங்கே கிளிக்கவும்!, நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியபடுத்தவும்!, அதே போல் எனக்கு பாலோயராக இருந்து என்னை பிடிக்காமல் வெளியேறிய நண்பர்கள் தளத்தில் இருந்தும் தேடி தேடி வெளி வந்து கொண்டிருக்கிறேன்! உருப்படியா முதலில் நமக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு நாம் செலுத்துவோம் என்ற எண்ணமே காரணம்!

உங்கள் ப்ளாக்கை அனுப்ப வேண்டிய முகவரி arunero@gmail.com

***********************

எனது பிறந்தநாளை தனது ப்ளாக்கில் பகிர்ந்து கொண்ட அய்யனார், கிருஷ்ணமூர்த்திசார், மோனி அவர்களுக்கும், போனிலும், சாட்டிலும், மெயிலும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி!, உலகெங்கும் நண்பர்கள் இருப்பது கொஞ்சம் கர்வமாக தான் இருக்கிறது!

**********************

சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமோ என ஒவ்வொரு வருடமும் தோன்றுகிறது!, பூமி வெப்பமயமாதல் பற்றி விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் காட்டுகத்து கத்தினாலும், இயற்கை நாம் அனுபவிக்க இறைவன் படைத்து இருக்கான் என வேத புத்தகத்தில் இருந்து எண்களுடன் வசனத்தை காட்டி இயற்கைவளத்தை கதற கதற கற்பழிக்கும் எடுப்பு கூட்டங்களுக்கு நண்டு நொரண்டு பதிவில் இருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கோள்கிறேன்!

"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "

-ஒரு செவ்விந்தியப்பாடல் .


பூமியில் முதல் உயிர் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை ஒருநாள் என கணக்கிட்டு கொண்டால் நாகரிக மனிதனின் பங்களிப்பு 10 நொடிகள் தான் இருக்கும், ஆனால் இன்னும் ஒரு நொடியில் அவன் மொத்த உயிரினங்களையும் அழித்து பூமிக்கு சமாதி கட்டிட்டு தான் மறு வேலை பார்ப்பான்! மொத்த மனித இனத்தையும் அழிக்க வேறு யாரும் வர வேண்டியதில்லை, மனிதனே போதும்! நீங்கள் சுவாசிக்க காற்று இயற்கை தருகிறது, உணவு இயற்கை தருகிறது, உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!

*********************


the hurt locker

நல்ல பிரிண்ட் கிடைத்தது, ஆறு ஆஸ்கார் விருதுகளில் முதல் பெண் இயக்குனருக்கான விருது அதில் முக்கியமானது, போர் என்பது போதை என படம் ஆரம்பித்தாலும் அடிப்படையில் வன்முறை என்பதே போதை தான் என்பது என் கருத்து!, பயம் என்னும் அடுத்தவர் தரும் அங்கிகாரமே நாட்டில் பல ரவுடிகளை உருவாக்கியுள்ளது!, சில நேரங்களில் அதீத பயம் உங்களையே ரவுடியாக்கக்கூடும்! அதெல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது!, இந்த படம் மற்ற போர் படங்களை போன்றே சராசரியாக தான் இருந்தது! மொத்தகமாக போர் கதைகளமாக கொள்ளாமல் குண்டுகளை செயலிலக்க வைப்பது மட்டும் கதையின் கருவாக கொண்டிருப்பது வித்தியாசம்!


இந்த படத்தில் நான் ரசித்தவை!

கதாநாயகனின் நடிப்பு,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு,எடிட்டிங்


***********************

குட்டி கவிதை(மாதிரி)

அகம்பாவம்

மழை பொழிந்தது,
நான் இருப்பதால் என்பது
தலைக்கனம்
நானும் இருப்பதால் என்பது
பெருந்தன்மை

பாம்புகள்! (snakes)

குளிர்ரத்த பிராணிகளாக அறியப்படும் பாம்புகள் பூமியில் இல்லாத இடங்கள் தான் அபூர்வம், பொதுவாக உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும் சமாளித்து வாழக்கூடிய விலங்கு பாம்பு!, பல்லி இனத்தின் கால் இல்லாத நீட்சியா, அல்லது கால் முளைத்த பாம்பு தான் பல்லியா என அவ்வபோது விவாதம் நடக்கும், ஆனாலும் அறிவியல், முதலில் காலுடன் இருந்த பல்லியினம் உயிர் பிழைக்க மண்ணுக்கு அடியில் வாழ வேண்டி பழகியது, அதனால் கூரிய கண் பார்வையையும், கால்களையும் இழந்து, அதற்கு பதிலாக நுகரும் சக்தியையும், தரையில் தெரியும் சிறிய அதிர்வுகளையும் அறியும் சக்தி பெற்றது என்கிறது!

சில பாம்புகளுக்கு விஷம் இருப்பது படைப்பின் அற்புதம் என சிலர் சிலாகித்து கொண்டாலும், அவையும் பரிணாமவளர்ச்சியின் ஒரு அங்கம் என்பது அறிவியல் உண்மை! நமக்கு விஷமாக தெரியும் அவை பாம்புகளுக்கு ஊறும் என்சைம்!, நமக்கு இரைப்பையில் ஊறும் ஒரு என்சைம் சாதாரண தோலில் பட்டால் அதை முழுவதுமாக அரித்து விடும், அதே போல் தான் சில விலங்குகளின் விஷமும்!, ஒருமுறை குவியலில் venom மற்றும் poison க்கு உள்ள வித்தியாசம் கேட்டிருந்தேன், என்சைம்களால் அவை வேறுபட்டிருந்தாலும் , காமனான வித்தியாசம், வெனோம் என அழைக்கபடுவது ரத்தத்தில் ஏற்றப்படுவதால் உயிரிழப்பை ஏற்படுத்தும், பாய்ஷன் குடிப்பதால் ஏற்படுத்தும்!, பாம்பின் விஷம் உயிர்காக்கும் மருந்தாக பயன்படுவது பலரும் அறிந்ததே!, பாம்பின் விஷக்கடிக்கு அட்ரோபைன் என்னும் இன்னொரு தாவர விஷம் மருந்தாக தரப்படுகிறது!, விஷமுறிவுக்கு பரவலாக அறியப்பட்ட மருந்து அட்ரோபைன்!


துப்புவதால் விஷத்தை எதிரியின் மேல் இந்த பாம்பு தெளிக்கும், கோப்ரா(நாகம்)வகையை சேர்ந்தது, ஒரு துளி விஷம் கண் பார்வையை பறிக்கும்!

எது அதிக விஷமுள்ள பாம்பு என பலருக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்!, அளவில் அதிக விஷமுள்ளது ராஜநாகம், அதிலிருக்கும் விஷம் ஒரு யானையை கொல்வதற்க்கு போதுமானது, ஆனால் பொதுவாக ராஜநாகம் நகர்புறம் பக்கம் வருவதில்லை என்பதால் அதனால் உயிரிழப்புகள் குறைவு, சிறிது அளவானாலும் வீரியமிக்க விஷம் கொண்டது தைப்பேன் வகையை சேர்ந்த பாம்பு! கடித்த ஐந்து நிமிடத்திற்குள் உயிர் போய்விடும்! உலகில் வேகமான விஷமுள்ள பாம்பு, “ப்ளாக் மாம்பா” மணிக்கு 20 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது!, ஆனாலும் உலகம் மொத்தம் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாம்பு விரியன் வகைகளே!, இந்தியாவில் இருக்கும், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மற்றும் பாலைவன பாம்புகளாக அறியபட்ட கிளுகிளுப்பை பாம்பு அனைத்தும் விரியன் குடும்பத்தை சேர்ந்ததே!

உலகில் மிக புத்திசாலியாக அறியபட்ட பாம்பாக விரியன் வகைகளை தான் சொல்கிறார்கள்! சுற்றுவட்டாரம் 50 மீட்டர் சுற்றளவில் நடக்கும் அதிர்வுகளை அறிய கூடிய தன்மை உண்டு!, தனது பிளவுபட்ட நாக்குகள் மூலம் காற்றில் உள்ள வாசனையை உணர்ந்து எதிரியின் தன்மை, அவைகள் உணவுக்கு ஆகுமா என பகுத்தறியும் தன்மையும் உண்டு!, அமெரிக்க ராணுவம் தற்பொழுது இவ்வகை பாம்புகளை தான் ரேடாருக்கு மாற்று சக்தி கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது!

விஷமற்ற பாம்பாக இருந்தாலும் மனிதனை பயமுறுத்துவதில் அனகோண்டா பெரும்பேர் பெற்றது!,” ஆனைகொண்டான்” என்பதில் இருந்து மறுவிய பெயர் என சங்ககால இலக்கியங்களை காட்டினாலும், அவை மலைப்பாம்புகளையே குறிக்கும் என்பது அறிவியல் கூற்று! அனகோண்டா வகை பாம்புகள் தெனஅமெரிக்காவின் பிரேசில் காடுகளில் மட்டுமே காணப்படுவது இதற்கு சாட்சி! பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளில் மட்டும், பூமியில் நாம் அறிந்த உயிரினங்கள் அளவுக்கு அறியபடாத உயிரினங்கள் வாழ்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்!மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்கள், ஆனால் அது உண்மையல்ல! துணைதேடும் ஆண் ராஜநாகம், சரியான துணை கிடைக்காத பட்சத்தில் எதிர்படும் எந்த பெண் ராஜநாகமாக இருந்தாலும் கொன்று விடும்!, மேலும் ராஜநாகத்திற்கு பிரதான உணவே சாரைபாம்பு என அழைக்கப்படும்
“ரேட் ஸ்னேக்” தான்! கருவுற்ற ராஜநாகங்கள் பாம்பினத்திலேயே வித்தியாசமாக கீழே கிடக்கும் சருகுகளால் கூடு அமைத்து முட்டையிட்டு அடைகாக்கும் என்பது பாம்பின ஆச்சர்யம், 40 நாள் கழித்து முட்டையை உடைத்து வரும் குட்டி ராஜநாகம் அப்போது கடித்தாலும் விஷம் இருக்கும் என்பது எச்சரிக்கை!


பாம்புகளை பற்றிய மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை! இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல தேசங்களில் பாம்புகள் தெய்வமாக வணக்கபடுகிறது, ஆபிரஹாம மதங்களில் பாம்பு சைத்தானின் குறியீடு, அவையல்லாது சாரை பாம்பின் வாலை தடவினால் சாம்பார் ருசியாக இருக்கும் என பத்து ருபாயில் ஆரம்பித்து, ராஜ மாணிக்ககல் பல லட்சம் மதிப்புள்ளது என கல்லுக்கு அடியில் LED லைட் வைத்து படம் காட்டி ஏமாற்றும் கூட்டமும் நிறைய உள்ளது! அதில் ஏமாந்தவர்கள் கடைசி வரை அபபடி ஒன்னு இருக்கு, ஆனா இவன் வேற கல்லை காட்டி என்னை ஏமாத்திட்டான்னு சொல்லும் போது பாவமாக இருக்கும்!, சமீபகாலமாக மண்ணூளி பாம்பு என்ற வகை மருத்துவ குணங்களுக்காக சீனாவிற்கு கடத்தபடுவதாக சொல்கிறார்கள்! இதுவரை அவற்றால் எந்த ஒரு பயனும் இருப்பதாக அறிவியல் சொல்லவில்லை! ஆனால் மூட நம்பிக்கைகள் மனிதனின் பிரதான குணம் என்று ஆகிவிட்ட படியால் அறிவியல் கூற்றுகள் அவர்களுக்கு உளரலாக தன் தெரியும்!


பாம்புகள் பற்றிய தமிழ் விக்கிபீடியா தகவல்

பாம்புகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்

விஷபாம்புகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்

அட்ரோபைன் பற்றிய ஆங்கில விக்கிபீடியா தகவல்


நண்பர்கள் பாம்புகள் பற்றி எழுதியிருப்பின் சுட்டி கொடுத்தால் பதிவில் இணைத்து விடலாம்!

தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்!

முதலில் வெளிநாட்டிலிருந்து அழைத்த நண்பருக்கு!

உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே! யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்! மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்!


வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு தொடர்பு இல்லாதவர்களை என்கிறார்! மேலும் சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார், அந்த வார்த்தை நிச்சயமாக முகமூடி அணிந்த பார்பனீயவாதிகளையும், அவர்களது அல்லக்கைகளையும் மட்டுமே குறிக்கும், நன்றாக பாருங்கள் அந்த பதிவின் தலைப்பு ”புதிதாக எச்சக்கலை” என்று தான் குறிப்பிட்டுள்ளார்!

நன்றி:குமுதம்

இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்

*****

அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே! நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்


****


அசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு!

அதில் முதல் சர்ச்சைகுறிய பின்னூட்டம்

dondu(#11168674346665545885) said...

//என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்?//
ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்அந்த பதிவை முதலில் ராஜன் படித்ததால் முன்னாடியே பின்னூட்டம் இட்டுள்ளார்!


ராஜன் said...

பதிவு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது ! அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா ? அதுவும் தெரியாது ! இங்க பின்னூட்ட அரசியலும் மைனஸ் ஒட்டு போட்டு எதிர்க்கும் பெரியமனுசத் தனமும் வியக்க வைக்கிறது ! கோவம் வந்தால் பின்னூட்டத்தில் காட்டலாம்... இங்கு குழையவும் அங்கு உதைக்கவும் எப்படி கூடுகிறது ?


இதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே!
அவரது கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக இருந்ததால் “போட்டு தாக்கே” என்ற பின்னூட்டம் மட்டும் நான் போட்டேன்!


******

பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன! புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா!? அதிலேயே தெரியவேணாம் அவர்களின் சார்புநிலை!, பலிகடா ஆகாதீர்கள்! பிரியமுடன் வசந்தின் இந்த பதிவை பாருங்கள், அதற்கும் சரியான விளக்கம் இல்லை, அதில் ஒருவர் அதிலென்ன தப்பு என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்!

பெரியாரிஷ்ட் என்றால் என்ன?

பெரியாரின் கொள்கைகளான பெண்விடுதலை, வர்ணாசிர எதிர்ப்பு, குலதொழில் எதிர்ப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்!

பார்பனிஷ்ட் என்றால் என்ன?

ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி!

மேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள் தான், நான் பார்ப்பான், நீ என்னை தான் சொல்ர என்றால் அதுக்கு நாங்க ஒன்னும் பண்ணமுடியாது, கவுண்டனிஷ்ட், தேவரிஷ்ட் என்பது போல் அழைக்க வேண்டுமென்றால் உங்களை அய்யரிஷ்ட், அய்யாங்காரிஷ்ட் என்று அழைக்கும் போது எங்களுக்கு உத்தரவிடுங்கள், உங்கள் பார்பனீய தனத்தை மறைக்க உயர்சாதியியம் என ஈயம் பூசி, தப்பி கொள்ள நினைக்கலாகாது, நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்!


******


இவ்விடத்தில் நிச்சயமாக இதை சொல்லியே ஆகவேண்டும்!

பெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை,


நாங்கள் ஆளுக்கொரு ஊராக இருக்கிறோம் தனிமரமாக, உங்களோட சேர்ந்து செயல்படலாமே எனலாம், வீரமணி வந்தால் சலாம் போடு, கொளத்தூர் மணி வந்தால் கும்பிடு போடுன்னு பெரியாரின் அதி முக்கிய கொள்கையான சுயமரியாதை என்றால் என்னவிலை என கேட்க வைத்து விடுவீர்கள்!, தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி!, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

முரளி

மச்சான் இந்த கிளைமேட்ல சிகரெட் அடிக்கிறது தாண்டா சொகமே! ஆயிரம் சொல்லு சிகரெட் மாதிரி ஒரு டென்ஷன் ரிலீவர் எதுவுமேயில்ல! அதுவுமில்லாம சிகரெட் பிடிச்சிட்டு புகையை ஊதும் போது அப்படியே எதையோ சாதிச்சிட்டா மாதிரி ஒரு ஃபீலிங், சிகரெட் பிடிக்கிற ஸ்டையிலில் இருக்குற ஒருத்தனோட ஆம்பளைதனம்!


விமலா

சீ, எத வேணும்னாலும் தாங்கிகிலாம், ஆனா இந்த சிகரெட் நாத்தம் மட்டும் தாங்க முடியல, கொடலபொரட்டிகிட்டு வாந்தி வருது, சனியனுங்க அந்த பக்கம் தள்ளி போகுதுங்களா, கூட்டமா இருக்குற இடத்துல புகைபிடிக்க கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டாலும் திருந்தாத ஜென்மங்க, இந்த உலகத்துல நான் யாரையாவது வெறுக்குறேன்னா அது சிகரெட் பிடிக்கிற ஆண்களை தான்!

முரளி

மச்சான் நேத்து போன படத்துல விஜயோட டான்ஸ் பாத்தியா, என்னா ஸ்டெப்ஸ்ரா, இனி ஒருபய இந்த மாதிரி ஆட முடியாது, டான்ஸ்ல விஜயை அடிச்சிக்க இனி ஆளே கிடையாதுடா, அதே மாதிரி ஃபைட்டும் எப்படி பண்ணினார் பார்த்தியா, நான் அடிச்சு சொல்றேன் அது எதுவுமே டூப் இல்ல, விஜய்னா ரிஸ்க்கு, ரிஸ்க்குனா விஜய்டா!, எந்த தருதலையும் எங்க ஆளு முன்னாடி நிக்கமுடியாது!


விமலா

ஹீரோன்னா அதுக்கு கொஞ்சமாவது தகுதி வேணாம், அந்த தகுதி அஜித்துக்கு மட்டும் தாண்டி இருக்கு, சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு தளபதி பட்டம் போட்டுகிரானுங்க, காக்காவலிப்பு வந்த மாதிரி ஒரு டான்ஸ் வேற, ஸ்டைல்னா அது அஜித் தான், அப்படியே சிரிக்கும் போது கண்ணுல ஒரு காதல் தெரியும் பாரு, ம்ம்ம்மாஆஆஆ, ஹீ இஸ் த மேன்!


முரளி

மச்சான் காதல்ங்கிறது சுத்த பேத்தல்றா, நீ விழுந்து விழுந்து காதலிப்ப, அவ கடைசியில வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கட்டிகிட்டு உன்னைய தாடியோட அழைய விடுவா, நீ தண்ணிய போட்டுகிட்டு உலகே மாயம், வாழ்வே மாயம்னு திரிவ, அதுக்கு தான் நான் சொல்ற டெக்னிக், ஜாலியா சந்தோசமா இரு, எந்த கமீட்மெண்டுகுள்ளும் சிக்கிக்காத!


விமலா

காதல் பூ மாதிரியான உணர்வுடீ, அது மென்மையான மனசு இருக்குறவங்களுக்கு தான் புரியும், எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருந்தா ஒன்னும் புரியாது! காதல் ஒரு அழகு, ரசனை, கலை. ஆனா சில ஆண்களுக்கு அது டைம்பாஸ், எப்படி தான் இந்த மாதிரி ஆம்பளைகளை இந்த பெண்ணுங்க நம்புறாங்களோ, ஐ காண்ட் பிலிவ் தட்! என்னைய கேட்டா உண்மையா காதலிக்க தெரிஞ்ச ஆம்பளை தான் முழுமையான ஆம்பளைன்னு சொல்வேன்!


*******
விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!டிஸ்கி:இது புனைவு!

ஏன் முட்டாள்கள் தினம்!?

ஒரு விசயத்தை செய்யுறதுக்கு முன்னாடி நம்ம மக்கள் அதை ஏன் செய்யுறோம் என்று யோசிப்பதேயில்லை, அவன் செஞ்சான், நானும் செஞ்சேன், எங்க தாத்தா செஞ்சார், நானும் செஞ்சேன் என்பதே அனைவரின் பதிலும், சரி அவர் ஏனப்பா செஞ்சார் என்றால் அதுக்கு எதாவது அறிவியல் காரணம் இருக்கும் என்பார்கள், காதலனர் தினத்திற்கு ஒவ்வொரு வருடமும் வேலெண்டின் பெயர் ஞாபக படுத்தப்படுவதால் இன்னும் வரலாறு திரிக்கப்படாமல் இருக்கு, இன்னும் சில வருடங்களில் அம்பிகாபதி, அமராவதி மாதிரி அமரக்காதல் கொண்ட பாதிரியார் சட்டத்தால் தண்டிக்கபட்ட தினம் தான் காதலர் தினம் என்பார்கள்!, நம் மக்களுக்கு புரளியை கிளப்பி விடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி!

பெரும்பாலான தினங்கள்(days) இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!, கொண்டாட்டத்திற்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல பெரும்பாலான விழாக்கள் கூட அங்கே தான் ஆரம்பித்திருக்கின்றன!, முற்காலத்தில் ராஜாவுக்கு மலச்சிக்கல் இல்லாமல் கக்கா போனால் கூட விழாவாக கொண்டாடுவார்களாம், நல்ல வேளை தமிழ்நாட்டில் ”பாராட்டு விழா” என்ற பெயரில் நடப்பதால் உண்மையான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!, கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு, அங்கே அடிமட்டத்தில் இருப்பவன் பெருசு, ஜனநாயகத்தில் மட்டும் என்றுமே மக்கள் தான் முட்டாள்கள்!, ஐந்து வருடத்திற்கொரு முறை பெரிய முட்டாளாக ஆக வருடா வருடம் நாம் எடுக்கும் ட்ரைனிங்க் தான் ஏப்ரல் ஒன்னு என்று சென்னையில் வசிக்கும் ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!
முட்டாள்கள் தினம் கதையை சொல்ல வந்து நாம் முட்டாளான கதையை சொல்லி கொண்டிருக்கிறேன் பாருங்கள், வாங்க நாம முதல்ல அந்த கதையை பார்த்துட்டு வரலாம்!.

1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!


அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!


டிஸ்கி:சும்மா லுலுலாயி

!

Blog Widget by LinkWithin