வாட்ஸ் அப் அலப்பறைகள்!

நாங்கள் திமுகவிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை; வெளியேறவும் இல்லை. -திருமா
# ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்! பூசாத மாதிரியும் இருக்கணும்!

தமிழக அரசு என் பார்வையில் சரியாக இருக்கிறது.-சரத்குமார்
# எதுக்கும் பார்வைய வாசன் ஐகேர்ல செக் பண்ணி பாருங்கண்ணே!

வங்கதேசத்திற்கு 12,600 கோடி கடன்.-மோடி
# யோவ் டூரிஸ்ட்டு! கருப்புப்பணத்தை மீட்கலான்னாலும் பரவால்ல! இருக்கிற பணத்தையாவது விட்டுவையா!!

இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே சுற்றுப்பயணம் செல்கிறேன் -மோடி 
# கண்ணாடிய திருப்புனா எப்டி பாஸ் ஆட்டோ ஓடும்?

கருணாநிதி இல்லத் திருமணத்தில் திருட்டு.
# பழக்கத்தோஷத்துல தலீவரு வேலைய காட்டிருப்பாரோ?

காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக ஆகியவையில்லாத அணியில் இடம்பெறுவோம்-தமிழருவி
# எதுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்களேன்

ஏழைகளுக்காக எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கத் தயார். -ராகுல் காந்தி
# தம்பி! அங்குட்டு ஓரமா போய் விளையாடுப்பா!!

மீனவர்வீட்டில் மீன்குழம்பை ரசித்து சாப்பிட்டார் ராகுல்- காங்கிரசார் 
# மீன் குழம்புனா ரசிச்சுதான் சாப்பிடுவாங்க, இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?

மோடியின் ஓராண்டு ஆட்சியில் ஊழலே இல்லை -அருண் ஜெட்லி
# நான் ஊரி்லே இல்லைன்னு படிச்சிட்டேன்!!

இலங்கையில் ஆட்சி மாறியும்கூட காட்சி மாறவில்லை. -கருணாநிதி
# தலீவரு எலக்ஷன் டைமு! பீல் ஆயிட்டாப்புள்ள! எலக்ஷன் முடிஞ்சா கூல் ஆயிடுவாப்புள்ள!!

மாற்றுத்துணி எடுக்கத்தான் இந்தியாவுக்கு வருகிறார் மோடி -துரைமுருகன்
# கரடியே காரித்துப்பிடுச்சு!!

சாதிவெறி அலப்பறைகள்!

முக்குலத்துபிரசாத் சண்டியர்
vanakam

வால் பையன்
வணக்கம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க கதை எழுதுபவரா

வால் பையன்
கதையும் எழுதுவேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்ப தலித் தேவர் சமூகத்த பத்தியும் எழூதுவிங்களோ

வால் பையன்
எல்லாத்த பத்தியும்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க என்ன சமூகம்னு தெரிஞ்சுகளாமா

வால் பையன்
நான் சாதி, மத மறுப்பாளன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க தேவர் இனத்தை இழிவு படுத்தி பேசியபோல் உள்ளதே

வால் பையன்
தேவர் இனத்தை மட்டுமல்ல, பிறரை மதிக்காத யாரையும் விமர்சிப்பேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நாங்கள் யாரை மதிக்க வில்லை எங்கள் மேல் தான் முழு தப்புமா

வால் பையன்
தப்பு பண்றவங்களை விமர்சிப்பேன்னு சொன்னேன், என் எழுத்தை எங்கயாவது பார்த்திருந்தால் அதிலேயே விளக்கம் இருக்கும்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்கள் தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்துள்ளீர்கள் அது எவ்விதத்தில் நீங்கள் கூறலாம்

வால் பையன்
சாதி வெறியோட இருக்குறவங்களை வேற எப்படி சொல்றது?

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்டி பாத்தா எல்லோரும் சாதி வெறியர் தான் இருக்காங்க நாங்க என்ன சாதி பெயர சொல்லி ஆட்டமா போடுறோம் வரூஷம் ஒருமுறை ஆட்டம் போடுவது தப்பா

வால் பையன்
தனது பெயருடன் சாதி சேர்த்து கொள்வதே நான் உன்னை விட பெரியாள்டா என காட்டும் ஆணவம் தான். இதுல வருசத்துக்கு ஒருக்கா தனியா வேற ஆடனுமா
பெயருடன் சாதி சேர்த்திருக்கும் யாரும் சாதி வெறியர் தான் என்னை பொறுத்தவரை

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்ப நீங்க எங்கள அந்த தலித் இனத்தோட சேர்த்து அவர்களை நாங்கள் இழிவு படுத்துவது போல் எழுதி இருக்கிறீர்கள்

வால் பையன்
இழிவு படுத்திய போதெல்லாம் எழுதியிருக்கேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா

வால் பையன்
எழுதக்கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போடல

முக்குலத்துபிரசாத் சண்டியர்
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா

வால் பையன்
எழுதக்கூடாதுன்னு சொன்னா தானே உத்தரவு வாங்கனும். விட்டா நான் கக்கூஸ் போறதுக்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்க சொல்விங்க போலயே. இது ஜனநாயக நாடு சார்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அவர்கள் எங்களுக்கு கொடுமைகள் பண்ணும் போது அதை எழுத உங்கள் கை கோணி எழுத முடியவில்லயா

வால் பையன்
உங்களுக்கு யார் கெடுத்தல் பண்ணாலும் நிச்சயம் எழுதுவேன். எழுதியிருக்கேன். அது உங்க கண்ணில் படல போல

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்கள் தெய்வீக திருமகனார் தேவர் ஐயாவை இழிவு படுத்தி பேசியது போல் உள்ளதே

வால் பையன்
அவரு உங்களுக்கு தெய்வம், எனக்கு நம்மை போன்ற சக மனிதர். அவர் பிறரை பற்றி தவறாக பேசியதை விமர்சித்திருக்கலாம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
சுந்திர நாட்டில் அடுத்தவர்கள் மனம் புண்படும் படி பேசுவது கண்டிக்க தக்க ஒன்று

வால் பையன்
நான் பேசுவது உங்கள் மனதை புண்படுத்தினால் உங்கள் நம்பிக்கையில் பிசிறு
உங்களுக்கு தெய்வமா இருக்குறவரு, உங்களை காப்பாற்றுவாருன்னு நம்புங்க. அவரை காப்பாத்த எங்கிட்ட பேச
வேண்டியதில்லையே

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அவர நாங்க காப்பாற்ற வேண்டியதில்லை ஒரு காலத்தில் இந்த தமிழ்நாடயே அவர் தான் காப்பத்துனாரு அவரின் பிச்சையில் தான் இன்னும் சிலர் வாழ்கின்றனர்

வால் பையன்
அவ்வாறு நீங்கள் நம்பலாம், அதையே நானும் நம்பனும்னு அரசாங்கம் சட்டம் போட்டால் பார்க்கலாம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
சாதி வெறியர்கள் என்று எங்களை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது

வால் பையன்
சாதி வெறியோட இருக்குறவங்களை வேற எப்படி சொல்லனும்?

முக்குலத்துபிரசாத் சண்டியர்
பெருமை பட கூடிய இனத்தில் பிறந்து எங்கள் பெருமையை உரைத்து எங்கள் வரலாறை போற்றுவது சாதி வெறி ஆகுமா

வால் பையன்
எல்லாரும் மனுசனா தான் பிறக்குறாங்க? அதுல பெருமை என்ன வேண்டிகிடக்கு? மத்தவங்களை விட உங்களுக்கு ரெண்டு கை எக்ஸ்ட்ரா இருந்தா தாராளமா பெருமை பட்டுக்கோங்க
Seen 5:04pm 

ஆஷ்துரையும் வாஞ்சிநாதனும்..

ஆஷ்துரைக்கு வீரவணக்கம் சொல்வதா என்று ஒரு பதிவு. நேத்தே இது சம்பந்தமா பேசப்போயி என்னை வெள்ளைகாரனுக்கு குண்டி கழுவ சொல்லிட்டானுங்க. கண்ணை கட்டிய குதிரைங்க அப்படித்தான் சொல்லும். நாம எழுதுறது லட்சத்தில் ஒருவருக்கு புரிந்தாலும் போதும், நீ எழுதுடா வாலுன்னு மனசாட்சி சொல்லுச்சு. அதுக்கு தான் இது.

500 வருசத்துக்கு இந்தியான்னு இப்ப இருக்குற நாடு இருந்ததா? அதாவது வெள்ளைகாரனின் வருகைக்கு முன். இஸ்லாமியர்கள் கூட இந்தியாவில் பல பகுதிகளை ஆளவில்லை. குறிப்பாக தமிழ்நாடு.

வெள்ளையனின் வருகை யாருக்கு பெரும் இழுப்பு என யோசித்து பாருங்கள். நம்மை போன்ற சாமான்யர்களுக்கா அல்லது நிலபிரபுக்களுக்கா? அப்போதும் இப்போதும் மக்களின் நிலை ராமன் ஆண்டாலென்ன, ராணுவன் ஆண்டானெல்ல என்பது தான்

இப்போது இருப்பது போலவே உயர்சாதிய திமிர்பிடித்த பரதேசி நாய்கள் அரசர்களுக்கும், நிலபிரபுகளுக்கும் காலை நக்கி ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழ்ந்தனர். அதிகாரதிமிருடன் தாழ்ந்தபட்ட மக்களை இப்போது இருப்பதை விட கேவலாக நடத்தினர்.

சில குறிப்பிட்ட இனத்து பெண்கள் ஜாக்கெட் அணிய தடை. பார்பன குடியிருப்பு பகுதிகளில் நுழையவே தடை. ஆதிக்கசாதியினர் பகுதிகளில் செருப்பு அணிந்தோ, தோளில் துண்டு போட்டோ நடக்க தடை. படிக்க தடை. பொது இடங்களில் புழங்க தடை. எல்லாவர்றிக்கும் தடை.

அந்த காலக்கட்டத்தில் தான் நெல்லை மாவட்ட கலைக்ட்ராக வந்தான் ஆஷ்துரை. ஆஷ்துரையின் அப்பா மனநலகாப்பகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் போது ஒரு மனநோயாளி கடுமையாக தாக்கி உயிர்நீத்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இப்போதெல்லாம் அதே மனநல காப்பகத்தில் கட்டி வைத்து கொழுத்துறானுங்க.

வெள்ளையர்கள் மீது பரவலாக வைக்கும் குற்றசாட்டு அவன் நம்மை கருப்பன் என ஒதுக்கினான் என்பதே. மற்றபடி அவனிடம் வேலை செய்ததை போலவே  தான் அரசர்கள் காலத்தில் நம் மக்கள் இருந்தனர். வெள்ளையர்கள் காலத்தில் பொது பெயராக கருப்பர்கள் என்றான். அரசர்கள் காலத்தில் சாதியை வைத்து கேவலப்படுத்தினான். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்.

ஆனால் ஆஷ்துரை அந்த மாதிரி ஆளில்ல. இயற்கை மனிதர்களுக்கு சமமானது என்றான். பிறப்பில் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்றான். நிறைமாத கர்ப்பனியை உயர்சாதி பரதேசிகள் தங்கள் தெருவில் விட மறுத்தப்போது தனது வாகனத்தில் ஏற்றி அதே தெருவுக்குள் கொண்டுசென்று மருத்துவமனையில் சேர்த்தான்.குற்றாலத்தில் உயர்சாதிய பரதேசிகள் மட்டுமே குளிக்கமுடியும் என்ற முறையை மாற்றி அனைவரும் குளிக்கலாம் என்று ஆணை பிறப்பித்தான். சனாதான தர்மத்தை சீர்குலைத்துவிட்டான் என்று கையில் துப்பாக்கி எடுத்த வாஞ்சிநாதன் இந்திய சுதந்திரத்திற்காக ஆஷ்துரையை சுடவில்லை. மாட்டுகறி சாப்பிடுபவன் நம்மோடு குளிக்கவைப்பதா என கடுப்பில் சுட்டான்.

நேத்து தான் உயர்சாதி பரதேசி நாய் ஒருவன் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அடித்ததை எழுதியிருப்பேன். 2015 ஆம் ஆண்டே இந்த கதியென்றால் அந்த காலத்தை நினைத்து பாருங்கள். ஆதி தமிழர் பேரவையும், தலித் அமைப்புகளுக்கும் ஆஷ்துரைக்கு வீர வணக்கம் செய்வதில் என்ன தப்பு?

இந்தியன் படத்தில் சொல்வது போல் போஸ்ட்பாக்ஸில் நெருப்பள்ளி போட்டவனெல்லாம் தியாகின்னா வாஞ்சிநாதனையும் தியாகின்னு சொல்லிக்கலாம். வாஞ்சிநாதனுக்கு தியாகி பட்டம் கொடுக்கும் இந்திய உணர்வாளர்களுக்கு கேக்குறேன். எந்த வெகுஜன ஊடகமாகவது வாஞ்சிநாதன் சட்டைபையில் வைத்திருந்த கடிதத்தின் முழு சாரத்தையும் வெளியிட திராணி இருக்கா? ஏன் கடிதத்தின் சுருக்கம் மட்டும் வருது?

ஏன்னா, பார்ப்பானுங்களுக்கு குண்டி கழுவி விட்டு பழக்கபட்டவன் தான் இன்னைக்கு சாதி வெறி பிடிச்சு திரியிறான். அவனை அழுக்கை சுட்டி காட்டினால் நம்மை வெள்ளைகாரனுக்கு குண்டிகழுவி விட சொல்றான். அரசர் காலத்தில் இருந்தே இப்போது வரை அவர்களது சாதிவெறி அப்படியே தான் இருக்கின்றது. இடையில் கிடைத்த சிறு நிவாரணம் ஆஷ்துரை.

கார்ப்ரேட் கைகூலிகள்!

இதுவரைக்கும் நடந்த விவாதத்தில் ஒரு பாஜக அடிமையும் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் ஒரு நியாயமான காரணம் கூட சொல்லல.
என்ன கேட்டாலும் குவாத்ரோசி, ஆண்ட்சரன்னு காங்கிரஸ் மேல தான் எதிர்கேள்வி வைக்கிறாங்க.

காங்கிரஸ் சரியில்லைன்னு தான் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டாங்க, இவிங்களும் அதையே பண்ணறதுக்கு எதுக்கு மண்ணாகட்டி தேர்தல். கார்ப்ரேட்டுக்கு சொம்பு தூக்க எதுக்கு மக்கள் வரி பணத்தில் செலவு.
இதுல இன்னொரு காமெடி, பாஜக ஆட்சிக்கு வர கையில் எடுத்த ஆயுதம் காங்கிரஸின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை கொண்டுவருவோம்னு.


ஊழல் பண்ண லலித்மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரிக்காமல் வெளிநாட்டிலயே இருக்க உதவி பண்ணா அது ஊழலுக்கு ஆதரவு தானே. இவனுங்க எங்கிருந்து கருப்பு பணத்தை கொண்டு வரப்போறானுங்க.
இணைய பாஜக ஆதரவாளர்களுக்கு இப்பவே அடியில் ஐஸ் சொருக்குன மாதிரி இருக்காம். இனிமே தான் மதவெறி குப்பலின் ஆட்டம் ஆரம்பிக்க போகுதுன்னு வேற தகவல் வருது.
தீர்க்கதரிசி அத்வானி இன்னைக்கு சொல்லிட்டார்.
இந்தியாவில் இன்னொரு எமஎஜென்ஸி வர வாய்ப்பிருக்கிறது.
எல்லாரும் டவுசரை கெட்டியா பிடிச்சிக்கோங்க..

இங்கே உத்தமர் என்று எவருமில்லை!

ஊழல் வழக்கில் சிக்கி ஒரே ஒரு விசாரணைக்கு மட்டும் ஆஜராகி லண்டன் ஓடிப்போட லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் செய்த உதவி சட்டப்படி தவறு.அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் அதை காங்கிரஸ் அரசியல் பண்ணுவது தான் சகிக்கல.

லலித் மோடி நிதி மோசடி செய்தவர். அவரால் இந்திய பொருளாதாரத்திற்கு இழப்பு ஆனால் உயிர் இழப்பு இல்லை.

போபாலில் விசவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றும் அங்கே குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா. அந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பதில் சொல்ல வேண்டியது காங்கிரஸ். அந்த நிறுவனத்தின் தலைவரை பத்திரமாக அனுப்பி வைத்தது காங்கிரஸ், சென்ற வருசம் தான் ஆண்டர்சன் அமெரிக்காவில் உயிர் இழந்தார்.

பணம் படைத்தவர்களுக்கு சொம்பு தூக்குவதில் காங்கிரஸ் பாஜகவிற்கு வித்தியாசம் இல்லை.

என்னை போன்ற கடவுள் மறுப்பாளர்களையும், மாற்று மத சிறுபான்மையினரையும் உங்களை எங்களுக்கு பிடிக்காது என வெளிப்படையாக சொல்வதால் நமக்கு பாஜக எதிரி. நம்மால் பாஜகவின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டு இருக்க முடியும். எச்சரிக்கையுடனும்.ஆனால் காங்கிரஸ் அப்படியல்ல, நாங்க தான் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு கதை பேசிகிட்டே பெரிய வாழப்பழமா வாயில் திணிச்சிட்டு போகும் துரோகி.

ஒன்றை விதவையின் பழிவாங்கும் நோக்கிற்காக லட்சம் பெண்களை விதவையாக்க உதவி செய்த பஞ்சாமாபாதகர்கள்.

எதிரி நேருக்கு நேர் சண்டையிடுவான், அவனை சமாளிக்கலாம். துரோகி முதுகில் கத்தி ஏத்துவான். அவனிடம் தான் எச்சரிக்கையாக இருக்கனும்.

தமிழகத்தின் சாபம் திமுக,அதிமுக
இந்தியாவின் சாபம் காங்கிரஸ், பாஜக

தெளிவான மனிதன் இரண்டையும் ஒதுக்க வேண்டும்.

எது வேண்டும் உங்களுக்கு!?

எட்டு மாதங்களுக்கு முன் எனக்கு விபத்து ஏற்பட்டு இடது காலில் அடிபட்ட போது தலையில் சிறு ரத்தகாயம் கூட இல்லை. பிறகு பத்து நாள் இயல்பாக தான் இருந்தேன். ஒருநாள் இரவு மாடிபடி ஏறும் போது மயங்கி விழுந்தேன்.

அன்றிரவே எனக்கு முகத்தில் வலதுபக்கம் மற்றும் வலது கரம் இயங்கவில்லை. பேசமுடியவில்லை. எழுதிக்கூட காட்ட முடியவில்லை.

ஈரோடு ஜி.ஹெச்சில் நரம்பு மண்டலம் தொடர்பான வைத்தியம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. இங்கே அந்த துறையே இல்லை.

தனியார் மருத்துவமனையில் இரண்டு மாசம் சிகிச்சை பெற்ற பிறகு தான் முகமே பார்க்குற மாதிரி ஆச்சு. அதுவரைக்கும் ஒரு பக்கமா இழுத்துகிட்டு இருந்தது.
தனியார்னா செலவை பத்தி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

இதை எதுக்கு சொல்றேன்னா.

ஹெல்மெட் ஒரு சுமை அல்ல. அது நம்மை பாதுகாக்கவே. பெரிய காயம் கூட இல்லாம எனக்கு லட்ச கணக்கில் செலவு வச்சிருச்சு. இன்னும் கூட முழுசா பேச்சு வரல்.

இதில் அரசியல் பாராமல் தயவுசெய்து ஹெல்மெட் அணிய பழங்குங்கள். ஹெல்மெட் போட்டால் சொட்டை வரும் என்பதும். எர்வாமார்டின் போட்டால் முடி வளரும் என்பதும் ஒன்னு தான். சரி அப்படியே போகுதுன்னே வச்சுகுவேன்.

என்ன வேணும் உங்களுக்கு?

உசுரா, மசுரா?

விலங்குகளின் பாலியலுயும், மனித காதலும்!

பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்திருக்கும் ஒரே கட்டளை தங்களது மரபணுக்களை பரப்பி எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்பதே. தாவரங்களும், மீன் இனங்களும் தவிர மற்ற விலங்குகள் உடலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இயற்கையாகவே நம் உடலில் இனப்பெருக்கதிற்கான உந்திசக்தி உள்ளது.

விலங்குகளை பொறுத்தவரை பெரும்பான்மைகளுக்கு துணையை தேர்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் தங்களை கம்பீரமாகவும்/அழகாகவும் காட்டிக்கொள்ளுவதன் மூலம் பெண்களை கவர பார்க்கின்றது. ஆண்களின் வீரத்தை வைத்து பெண்கள் தேர்வு செய்ய காரணம். தங்கள் குட்டிகளை எதிர்களிடம் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பு.

சில வேட்டை விலங்குகள் பருவமடைந்தவுடன் புது துணையை தேடும்போது அவர்களுக்கு ஏற்கனவே குட்டிகள் இருந்தால் கொன்றுவிடும். தனது மரபணுக்களை பரப்பவேண்டும் என்பதே இயற்கை அதற்கு அளித்திருக்கும் கட்டளை. சில புத்திசாலி விலங்குகள் பாலியல் தாராள கொள்கையின் மூலம் குட்டிகளை பராமரிக்க பல துணைகளை உருவாக்கிக்கொள்கிறது. முக்கியமாக குரங்கினங்கள்..

மனிதனின் ஆதியும் அவ்வாறே இருந்தது. பாலியல் தூண்டலே பல வன்முறைகளுக்கு காரணம். ரெட்பெல்லி ஃப்ராக் என்னும் தவளையினம் இணை சேரும் பருவத்தில் கண்ணில் படும் எதையும் புணர நினைக்கும். மனித கால்விரல்களில் கூட. சிக்கும் பெண் தவளைக்காக சண்டையிட்டு இறுதியில் பெண்ணையே கொன்று விடும். சிறு தவளை முதல் மதம் பிடிக்கும் யானை வரை காரணம் பாலியல் தூண்டலாகவே இருக்கின்றது.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் தானே உணவை உற்பத்தி செய்துக்கொள்ள ஆரம்பித்தான். அதனை நான் விவசாயம் என்கிறோம். நாடோடியாக திரிந்த மனிதன் ஒரே இடத்தில் காலணி சமூகத்தை நிறுவினான். தன் உடமை, தன் நிலம், தன் கால்நடைகள் என்ற பொருள்முதல் வாத சமூகம் உருவாகியது. அவற்றோட பெண்ணையும் தனது உடமை என அறிவித்துக்கொண்டான்..

நிலபிரபுத்துவம் உருவானது. தன்னிசையாக இயங்கும் ஆட்களை கட்டுபடுத்த ஒழுங்குவிதி கோட்பாடுகள் உருவானது. வலிமையான ஆண் பல பெண்களை விரும்பிய போது பெண்ணை கற்பு என்னும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டான். இன்றும் நாடோடிகள் சமூகத்தில் பெண்ணுக்கு இந்த பாலியல் விதிமுறைகள் இல்லை. தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் ஒரு நாடோடி குழுவினர் அந்த குடும்பத்தில் இருக்கும் மொத்த சகோதர்களையும் திருமணம் செய்துக்கொள்ள முடியும்.

சமூக அமைப்பில் கணவன், மனைவி முறை இனத்திற்கு செய்த நன்மை தனது சந்ததினயினரை ஆபத்திற்றியும், திறனுடனும் வளர்க்க முடிந்தது என்பதை சொல்லலும். ஆதியில் இருந்தே அனைத்து பெண் விலங்குகளின் கோட்பாடும் அதுவே தான்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலியல் தேவையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண் ஒருமுறை கருவுற்றால் குட்டி ஈனும் வரை உடலறவு என்பது இயற்கையில் தேவையற்றாகிவிடுகிறது ஆனால் ஆண் வரிசையாக பல பெண்களுக்கு கர்ப்பம் ஊட்டமுடியும். இன்று அனைத்து விலங்குகளின் இயல்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.

ஆண் தான் பார்க்கும் அனைத்து பெண்களையும் காதலியாக்கிக்கொள்ள நினைப்பேன். பெண் இவனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பார்ப்பாள். மரியாதைகுரிய பெண்ணை சந்திக்க நேர்ந்தாலும் ஆணுக்கு 10 சதமாவது பாலியல் உணர்வு தூண்டப்படும் என அறிவியல் சொல்கிறது. சிக்மண்ட் ப்ராய்டின் ”ஈடிபஸ் காம்ப்ளஸ்” கோட்பாட்டை நினைவு கூறுகிறேன்.

இது பொதுவான உணர்வும் கூட, இதே போல் உணர்வு பெண்களுக்கும் ஏற்படும். சமூக கட்டமைப்பு, ஒழுங்கவிதி இவைகளுக்குள் ஒழிந்துக்கொண்டாலும் அவர்களை ஏமாற்றிக்கொண்டோ அல்லது சமூகத்தை ஏமாற்றிக்கொண்டோ தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

ஆயினும் இந்த சமூக கட்டமைப்பை பாதுகாப்பதில் காதலுக்கு முக்கிய பங்குண்டு. காதல் என்பது இருபாலனரின் புரிதல் பொறுத்தது. ஒருவனுக்கு ஒருத்தி போல, ஒரே காதல் மட்டுமே என்ற புனித பட்டமெல்லாம் காதலுக்கு தேவையில்லாதது. தன் துணை தான் விரும்பும் காதலை அளிக்காத பட்சத்தில் காதல் கிடைக்கும் இடத்தில் மனித சமூகம் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.

பாலியல் என்பது மற்ற விலங்குகளுக்கு இனபெருக்க தேவைக்காக மட்டும் இருக்க, மனிதனுக்கு அது ஒரு அங்கிகாரமாகவும். தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கின்றது. காதல் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புரிதல் இருக்கின்றது. காதல் சமூகத்தில் ஒரு மதம். தன் துணையே கடவுள். தன் காதலே உலகத்தில் சிறந்தது.

காதல் மனித இனத்தின் வரமும், சாபமும்.

ஆம் இரண்டுமே!


!

Blog Widget by LinkWithin