2017

2017

மகிழ்ச்சி-
நான் வேலை செய்த கம்பெனியை இப்ப நான் தான் நடத்துறேன்

ரெண்டு வருசமா பேசாதவ திரும்ப அன்ப்ளாக் பண்ணி பேசினா

ஆச்சர்யம்-
திமுகன்னு ஒரு கட்சி ஆக்டிவா இருக்கா இல்லையா

அதிர்ச்சி
ஏற்கனவே டிமாண்டிடேசன்னு ஒரு அதிர்ச்சி கொடுத்தானுங்க, அடுத்து ஜி,எஸ்.டின்னு உன்னை போட்டு பொழப்பை கொடுத்தானுங்க

காமெடி-
முன்னெல்லாம் சீமான் பேசுனா தான் காமெடியா இருக்கும்., இந்த வருசம் பாஜககாரன் பேசுனதெல்லாம் காமெடி தான்

கோவம்-
வெட்கமே இல்லாமல் திரும்ப வைகோ திமுகவை ஆதரிச்சு பேசியது
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது வேறு. அதற்காக தொண்டர்களையும் சூடு, சொரணை இல்லாமல் இருக்க சொல்லும் தலைவன், தலைவனே இல்லையே
(நான் எந்த கட்சியிலும் இல்லை)

எதிர்பார்ப்பு-
ஆர்.கே நகரில் தினகரன் நிக்கலைனா திமுக ஜெயிக்கும்னு ஃப்ரெண்ட்கிட்ட சொன்னேன், அதே மாதிரி மக்கள் வாங்குன காசுக்கு வஞ்சனை வைக்காம குத்துனாங்க

சினிமா-
அறம், அருவி பற்றி நல்ல ரிவ்யூ படித்தேன் ஆனா பார்க்க முடியல. ஏற்கனவே வந்த 24 கோட்டையம் மலையாளபடம் இந்த வருசம் தான் பார்த்தேன், செமையா இருந்தது

பிடித்த பதிவர்-
Babu Pk
மீள் பதிவுகள் அதிகம் இருந்தாலும் எதுவுமே மிஸ் பண்ண முடியாத அறிவு தூண்டல்கள்.

என்னை போன்று மொழிபெயர்ப்பு செய்பவர்களை விட சுயமாக யோசிக்க தூண்டும் இவரது பதிவுகள் இந்த வருடத்தின் அறிவு தூண்டல்

சாதனை-
ப்ளாக் 2016ல படிக்க ஆரம்பிச்சு, கமெண்ட் போட்டு 2017ல ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். ஆனா இந்த வருசம் தான் அதிக பதிவுகள் எழுதினேன். அதில் பரிணாமம் மற்றும் சமூக கட்டுரைகள் புத்தகமா வெளியிட ஒப்பத்தம் போடப்பட்டுள்ளது, எடிட்டிங் வேலை நடந்துகிட்டு இருக்கு

அடுத்து-
கம்பெனியை மேம்படுத்தனும், கஸ்டமர் அதிகபடுத்தனும், கடனை அடைக்கனும். என்னை நம்பியவர்களுக்கு துணையா நிற்கனும், இன்னும் நிறைய படிக்கனும், நிறைய எழுதனும். இந்த வருசம் கார் வாங்கனும்

கேள்வி - பதில் (மரபணு)

கேள்வி:
ஓரே இனக்குழுவுக்குள் திருமணம் செய்தால் மரபணு குறைபாடு வரும் என்றால் யூதர்கள் மட்டுமே அதிக அளவில் அறிவாளிகளாக இருக்க காரணம் என்ன???

பதில்:
ஒரே இனக்குழுவுக்கள் அல்ல, நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து குழந்தை பெற்றால் அந்த குழந்தைகள் மேன்பட்ட உயிரினமாக வளராது.

மரபயிலியின் தந்தை என அழைக்கப்பட்ட கிரிக்கோரி மெண்டல் ஒரு விசயம் கண்டுபிடித்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த பூக்கள் வேறு வண்ணம் பெற்றிருப்பது(ரோஜா கூட) கனிகள் வெவ்வேறு சுவை பெற்றிருப்பது(எலும்பிச்சை, ஆரஞ்ச்) காரணம் குடும்பம் கடந்த மகரந்த சேர்க்கை.

ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றால் அவர்களின் டீ.என்.ஏ ஒற்றாகவே இருக்கும். அவற்றால் நோய் தடுப்பு, மேம்பட வேண்டும் என்ற பரிணாம உத்துதல் தோன்றாது. உலகில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்காவில் சில நாடுகள் மட்டுமே குடும்ப திருமணத்தை ஊக்குவிக்கிறது. அதான் நாம பின் தங்கியே இருக்கோம்.

நான் பல காலமாக சொல்லி வருவது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தன் கடமையாக நினைக்கக்கூடாது(எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்) நாம் பேச தெரிந்த விலங்கு அவ்வளவே. எல்லா விலங்கும் பொண்ணு, மாப்பிள்ளை பார்த்துட்டா இருக்கு. அவர்கள் தேர்வில் விடுவதே மேம்பட்ட குழந்தைகள் பெறவும். சமூகம் பிரிவினை இன்றி ஒன்றுபடவும் சாத்தியமாகும்.

யூதர்கள் இனமாக இருக்கலாம், ஆனால் சாதியாக பிரிந்து கிடக்கவில்லை.

அறிவு என்பது தொகுப்பு, நீங்கள் நிற்கும் படியில் இருந்து அடுத்த படிக்கு நகர்வது, நாம் எல்லாருமே அதை செய்யலாம், நமக்கு சாமி கும்பிடுவது. சகுனம் பார்ப்பது என ஏகப்பட்ட வேலைகள், அவன் அதெல்லாம் இல்லாம அறிவை தொகுத்து வாழ்வியலை மேம்படித்தினான். அம்புட்டு தான்


கேள்வி - பதில் (பேய்)

கேள்வி:
பேய் இருக்கா? இல்லையா ?
பதில்:
பேய் இல்ல
ஆனா பெரும்பான்மை மனிதன் பேய் இருக்கனும்னு ஆசை படுறான், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்குன்னு நம்பும் மனிதன் அந்த எதிலிருந்து நம்மை காப்பாத்துதுன்னு யோசிக்கிறேன், அதற்கு தீய சக்தி என்ற ஒன்று தேவை. அதை பேயாக உருவக படுத்துறான்
மறு பிறவி என்ற நம்பிக்கையே மனிதனுக்கு கனவில் இறந்த மனிதர்கள் வந்த பிறகு தான் தோன்றியது. கனவு என்பது மூளையின் செயல்பாட்டில் தோற்றும் காட்சிபிழை. அப்படி இறந்த மனிதர்கள் எங்கேயோ வாழ்வதா நம்பினா நமக்கு பேய் நம்பிக்கையும் வந்துரும்
எப்பவும் கூட நமக்கு பல வியாதிகளுக்கு என்ன காரணம். அதுக்கு சிகிச்சை என்னன்னு புரியல. ஆனா தேடிகிட்டு இருக்கோம். ஆதியில் மனநோயை எப்படி பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறிங்க? சம்பந்தம் இல்லாம பேசுறது. முறையற்ற செயல்கள் செய்வது மனநோயின் அறிகுறிகள். அதற்கு அர்த்தம் புரியாதவர்கள் அதற்கு பேய் பிடிச்சிருக்குன்னு பேர் வச்சிட்டாங்க.
மனசிதைவு நோய்க்கு ஆட்பட்டவர்கள் தாங்கள் கற்பனை செய்வது, கனவில் பார்ப்பதை உண்மையென்றே நம்புவார்கள். இல்யூசன் என சொல்லப்படும் மாயதோற்றங்களும் அவர்களுக்கு தோன்றும். அது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நீங்கள் தெளிவான ஆள் தான். ஆனால் என்றோ ஒருநாள் தனியா மனதுக்குள் நினைப்பதை வாய்விட்டு உங்களுக்கு நீங்களே பேசிகிட்டு போயிருப்பிங்க. மனம் செய்யும் கற்பனை உங்களை கேரக்டராவே மாத்திரும்
நிறைய பேய் கதைகள் பதிவு செய்யபட்ருக்கு. 2014ல அமெரிக்காவும் பேய் ஓட்டும் வேலை மட்டும் 50000க்கும் மேல். ஆனா நாம புரிஞ்சிக்க வேண்டியது வளரும் மக்கள் தொகை. நம் மன அழுத்தம் குழந்தைகளை சரியா கவனிக்கிறதில்ல. தனிமையில் கற்பனை உலகில் வாழும் அவர்கள் மிக எளிமையா மனநோயாளி ஆகிருவாங்க. இந்தியாவில் பெரும்பாலும் நாம் குழந்தைகளுடன் உறங்குவதால் அந்த பிரச்சனை குறைவு
நாம ஒன்றை தீவிரமா நம்புறோம், கடவுள் நம்பிக்கையாளர்கள் கடவுள் இருக்குன்னு நம்புவது. இல்லை என்று நம்புவது. இதெல்லாம் நார்மல் பிராஸஸ். அதை பகுத்தறிவுடன் பார்க்கக்கூடிய மூளை பகுதி வேலை செய்யலைன்னா என்னாகும், கடவுள் இல்லைன்னு சொல்றவனை கொலை செய்யக்கூட தோணும், அப்படி தான் பேய் பிடித்தலும். இருக்குன்னு நம்பியதால் அவர்களே எனக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொல்வாங்க
அவர்களுக்கு தேவை உளவியல் சிகிச்சை


குழந்தைகள் தினம்!

எவ்வித அடையாளங்களும் இல்லாமல்
ஒரு குழந்தை பிறந்தது
முதல் அடையாளமாக அதற்கொரு பெயரிட்டீர்கள்
அதில் முடிந்தவரை வலிந்து
உங்கள் மதத்தை திணித்தீர்கள்
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும்
மகிழ்ச்சி கொண்டீர்கள்
உங்களை உய்விக்க வந்த
தேவதையை போல் கொஞ்சினீர்கள்
வெற்று தாளாய் இருந்த குழந்தையின் மனதில்
உங்கள் கிறுக்கல்களால் மூச்சு திணற வைத்தீர்கள்
உங்கள் பயண சவாரிக்கு
குழந்தைகளை குதிரை ஆக்கினீர்கள்
நேர்மையாக வாழ் என்றீர்கள்
நீங்கள் நேர்மையற்று வாழ்ந்தீர்கள்
முரண்பாட்டால் விழி பிதுங்க வைத்தீர்கள்
உங்களுடன் முரண்படும் போதெல்லாம்
எனக்கு தான் பிறந்தாயா என சந்தேகித்தீர்கள்
என் பெயரை காப்பாற்று என்றீர்கள்
உங்கள் பெற்றோர் பெயரை மறந்தீர்கள்
கடமை என்ற பெயரில்
உங்கள் குழந்தைகளை கைதியாக்கினீர்கள்
முன்பின் அறியாதவருடன்
படுக்கையை பகிர சொன்னீர்கள்
உங்கள் கெளரவம் காப்பாற்றபட்டதாக நம்பினீர்கள்
நீங்கள் போகும் போது அந்த கத்தியை
உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து சென்றீர்கள்


அனுபவம்

எங்களுக்கு பெங்களூர், கோலார், கோலார் தங்கவயல் பகுதியில் கஸ்டமர்ஸ் இருக்காங்க. வருசம் ஒருக்கா அங்கே மீட்டிங் போவேன். போகும் போது ஆபிஸில் ட்ரெயின் டிக்கெட் போட்டு கொடுத்துருவாங்க, வரும் போது பஸ் தான். ஏன்னா வேலை முடிய டைம் சரியா சொல்ல முடியாது இல்லையா

ஒருநாள் பெங்களூர் முடிச்சிட்டு, தங்க வயல் முடிச்சிட்டு கோலாரில் ஒரு கிறுக்கன் கூட சண்டை போட்டு சரியான டென்சனில் சரக்கடிக்க வந்துட்டேன். அப்ப ஸ்மார்ட் போன் இருந்த மாதிரி ஞாபகம் இல்ல.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு, புது இடத்தில் சரக்கடிக்க போனா ஒரு புத்தகம் வாங்கிப்பேன், அதை படிச்சிகிட்டே தான் அடிப்பேன். நான் படித்து, ரசித்து, ருசித்து குடிப்பதை ஒருத்தர் பார்த்துகிட்டே இருந்தார். கர்நாடகா சரக்கா உடனே ஏறல, அதுனால இன்னொரு குவாட்டரும் போச்சு

ஊருக்கு வரணுமே, என்னை பார்த்தவரிடம் how can i get the bus to go to erodeனு கேட்டேன். நீங்க தமிழ்லயே கேளுங்கன்னு சொன்னாரு. இங்கிலீஸ் தெரியாது போலனு தழிழ்ல கேட்டேன். இன்னேரம் கோலார்ல இருந்து பஸ் இல்ல . ஆந்திரா பார்டர் பக்கம் போனா பஸ் கிடைக்கலாம், நான் அந்த பக்கம் தான் போறேன் வாங்கன்னு சொன்னார்

போனோம், போனோம், போய்கிட்டே இருந்தோம். எங்க போறிங்கன்னு கேட்டேன். என் வீட்டுக்குன்னு சொன்னார். என் கையில் கணிசமான ஆபிஸ் பணம் இருக்கு. அடிச்சு புடுங்கிருவானுன்னோ, என்னை கொன்றுவாங்கன்னோ எனக்கு பயம் இல்ல. அவர் ஹோமோவா இருந்தா என்ன பண்றதுன்னு பதட்டம்

நேரா அவர் வீட்டுக்கு போனார், அவர் மனைவி இரண்டு மகன்கள் இருந்தாங்க. இப்ப பஸ் இல்ல. காலையில் போலாம் என் வீட்டில் தங்குங்கன்னு சாப்பாடு போட்டாங்க. மொட்டை மாடியில் படுங்க பாய், தலகாணி கொடுத்தாங்க.

என் ட்ராவல் பேக்கில் ஒரு பிரஸ், பேஸ்ட், சிந்தால் சோப்பு எப்பவும் இருக்கும். காலையில் எழுந்ததும் பல்லு விளக்கிட்டு கவனிச்சிட்டேன். வீட்டில் தெலுங்கில் பேசிகிட்டு இருந்தாங்க. அவரை கூப்பிட்டு நீங்க தெலுங்கான்னு கேட்டா அவருக்கு தமிழ்,தெலுங்கு,கன்னடம் மூணும் தெரியுமாம், அவரை போய் இங்கிலீஷ் தெரியாதவர்னு மட்டமா நினைச்சிட்டேன்.

காலையில் இருந்து சாப்பிட்டு போங்கன்னு சொன்னார். வண்டி எடுங்க, இப்ப சரக்கு எங்க கிடைக்கும்னு கேட்டேன். பேக்கை எடுத்துகிட்டேன். அவரு ஒரு ஃப்ரெண்டை பார்க்க கூட்டிட்டு போனார். மூணு பேரும் ஒரு இடத்திற்கு போனோம், அவரு வேணாம் வேணாம்னு சொல்ல வலுகட்டாயமா அவருக்கு சரக்கு வாங்கி கொடுத்தேன். நல்லவங்க சந்தோசமா இருக்குறதை பார்ப்பது தான் சொர்க்கம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்

அப்ப என் பழைய நம்பர் 9994500540 இருந்தது( இப்ப ஒரு பொண்ணுகிட்ட இருக்காம்) எப்பவாவது போன் பண்ணி நல்லாயிருக்கிங்களான்னு நலம் விசாரிப்பார். அந்த நம்பர் தொலைந்ததில் இருந்து காண்டாக்ட் விட்டு போச்சு. அவர் பேரு கூட மறந்து போச்சு. அவர் பசங்களுக்கு அவளுக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்துட்டு வந்தேன், அதான் நான் பண்ண கைமாறு

இது தான் நடந்த உண்மை

ஒருவேளை வேற மாதிரி போய் அவரு எங்கிட்ட சப்ப கொடுக்க மாட்டிங்களான்னு கேட்டா என்ன பண்ணிருப்பேன்

சத்தியமா கொடுத்திருப்பேன்

ஆனா அவரு கதிரும் இல்ல, நான் லக்ஷ்மியும் இல்ல

மனிதம் காப்போம்....

இஸ்லாத்தில் சாதி இருக்கா?(அவர்களில் சிலரே நம்புறாங்க) கிறிஸ்துவத்தில் சாதி இருக்கா? அவ்ளோ ஏன் இந்துவில் சாதி இருக்கா என்றால்... எதிலும் இல்லை. எல்லாம் நாம் பிடித்து தொங்குவது தான்

வாட் இஸ் த லாஜிக்கல் பாயிண்ட்

இந்த நாம வெளிநாடு வேலைக்கு போறோம். பல நாடுகளுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இப்படி பல நாடுகளுக்கு. அங்கே பல வருடங்கள் வேலை செய்தால் அங்கேயே குடியிரிமை தரப்படும். ஆக இனிமே நீங்க அங்க நாட்டுகாரங்க. ஆனா பாருங்க உங்க எல்லாருமே அங்கே வேலை செய்யும் நம்மவூர் காரங்ககிட்ட தான் நட்பு இருக்கும், ஏன்னா அதான் உங்களுக்கு சேஃப்

இப்படி தொழிலுக்காக, பிழைப்புக்காக நாடோடிகளா திரிந்தவர்கள் தான் மனிதர்கள், விவாசயம் கண்டுபிடித்தே 12000 வருடங்களுக்கும் குறைவாக தான் ஆகுது. ஆன ஒரு இடத்தில் தங்கிய, அல்லது பரவலாக இருந்த குழுவை பொது பெயராக அழைக்க ஆரம்பித்தார்கள், தமிழர்களை கேரளாவில் பாண்டீஸ்னு அழைக்க காரணம் அப்ப பாண்டி என்ற பேர் அதிகம், அது மாதிரி தான் மல்லூஸ், கொல்டீஸ் என்பதும்

இப்படி தனித்து பெயரிடப்பட்ட மக்கள் தங்களுக்குள் உறவுகளை ஏற்படித்துகொண்டார்கள். அதாவது பெண் கொடுத்து பெண் எடுப்பது போல். அதே நேரம் மற்ற குழுக்களையும் பாராட்டிக்கொண்டார்கள், அது சண்டை மறந்த நேரமா கூட இருக்கலாம். மனித இனம் அனைத்து உயிர்களையும் விட உணவு சங்கிலியில் மேலே இருக்க அதுவே முக்கிய காரணம்

அதன் பிறகு குழு பெருக்கம் அடைய அந்த குழு ஆதிக்கம் விரும்பியது, சொல்ல போனால் ஒவ்வொரு குழுவும் விரும்பியது. துணிந்து பேசியவன் தலைவன் ஆனான், வேட்டையில் சிறந்தவன் தலைவன் ஆனான். விவசாயம் பெருக நிலம் தேவை ஆக அண்டை நிலங்கள் பெற சண்டை நடந்தது, அதுவே நாளடைவில் போர் ஆனது.

இருப்பினும் நிலபகுதிக்குள் வாழ்ந்த மக்கள் ஏற்றுக்கொள்ளபட்டார்கள், அவர்கள் பெயர்கள் நிலைத்தது, அதுவே இன்று சாதியாகவும், பிரிவுகளாகவும், இனங்களாகவும் பார்க்கப்படுகிறது.

இங்கே தேவை புரிதல், நான் அனைவர்களும் மனிதர்கள்

இந்தியா பாக்கிஸ்தான் பிரிவின் போது லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தவறு, லட்சம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தவறு

இறந்தது இரண்டு லட்சம் மனிதர்கள்





செக்ஸ் கல்வி

பொதுவாக மனிதர்கள் அனைவரும் ஃபேண்டஸி பிரியர்கள். ஆனா உறவுக்குள் செக்ஸ் பற்றி நேரடியா 99% தம்பதிகள் பேசுவதில்லை. எதுவுமே பேசாம ஆண் தொட்டா பெண் அவனை நோக்கி திரும்பினா செக்ஸ்க்கு ரெடி என்பதான புரிதல் மட்டுமே. எதுவும் பேசாமல் அந்த கலவி முடியும்.

என்ன தான் சமூக ஒழுக்கம், சுய கட்டுபாடு பேசினாலும் அவை அனைத்தும் இந்த சமூகம் கற்று கொடுத்த கற்பிதங்கள் தான் என்பதை மறந்துர்றோம், நமக்குள் இருக்கும் அடிப்படை உயிரியல் அதற்கான சந்தர்பம் வாய்க்கும் பொழுது விழிக்கும்.

புதிய மனிதர்களுடன் பழகுவது, செக்ஸ் வைத்து கொள்வது எல்லாமே நம் ஆழ்மன தூண்டுதல் தான். பிரச்சனை என்னான்னா சமூகம் அதன் பின் நமக்கு கொடுக்கும் பட்டங்களும், குற்ற உணர்வும் பெரும்பான்மையை தடுத்து வைக்கிறது. ஆனாலும் மறைமுகமாக ஆணும், பெண்ணும் செக்ஸ் விடியோ மூலமா அதை செய்துகொண்டு தான் இருக்காங்க

சில உண்மைகள் சட்டுட்டு ஏத்துக்க முடியாது தான், ஏன்னா இதெல்லாம் தப்புன்னு சமூகம் உடல் பசியான செக்ஸை புனிதபடுத்தி வச்சிருக்கு. தீண்டாமை போலவே புனித படுத்தலும் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒன்று


தப்பித்தல்!...

ஆழ்கடலில்
கட்டவிழ்த்து விடப்பட்ட‌
ஒரு உயிரின்
தப்பித்தலுக்கான திணறலுக்கு
ஒப்பானது
பிரியமில்லாத‌
ஒரு கலவியின்
முடிவை எதிர்நோக்கம்
ஆசுவாசம்!

லக்ஷ்மி - குறும்பட விமர்சனம்

முதல் விசயம்

தன் கணவணுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என தெரிந்த பிறகே லக்ஷ்மிக்கு தப்பு பண்ணலாம் என தோன்றுகிறது என்பதே பொது புத்தி கட்டமைத்துள்ள கிளிஷே தனம்

ஏன்னா உயிர்கள் அனைத்துகுமே தனக்கு பிடித்த தோற்றத்தையோ, ஆளுமையையோ பார்க்கும் போதே உடலில் பெரோமோன் சுரந்து உறவுக்கு தயாராகிவிடும். அதாவது உங்கள் மனம் அறியாமலயே உடல் தயாராகி விடும்.

அடுத்து கதிர் செய்யும் பாராட்டுகள், நீங்க ஒரு இண்ட்ஸ்ட்ரிங் கேரக்டர் என்பது இரு பாலரும் விரும்பும் ஒரு வார்த்தை. தன்னை தனியாக காட்டி கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு உயிருக்குள் இருக்கும் ஈகோ விரும்பும்.

கணவனுக்காக காத்திருக்கிறேன் என்பது பெண்களுக்கு இருக்கும் இயற்கை பாதுகாப்பு உணர்வு. தெரியாத ஆளை சட்டுன்னு நம்ப மாட்டார்கள். ஏன்னா பெண்கள் உறவு கொள்ள நம்பிக்கை தேவை, ஆண்கள் உறவு கொள்ள இடம் மட்டுமே தேவை.

12 நிமிசம் வரைக்கும் தான் பார்த்தேன். பொது புத்தி கட்டமைத்துள்ள சமூக விதிகளான இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறு என்ற விதிக்குள்ளேயே பலர் இந்த குறும்படத்தை பார்த்திருப்பது தெரியுது. அதை கொண்டே ஒரு கதாபாத்திரத்தை அவ ஆள் இல்லடா ஐட்டம் என விமிர்சிக்க முடிகிறது.

லக்ஷ்மியின் கணவன் இதை விட ஆயிரம் தேர்வுகள் செய்தாலும் அதை இந்த சமூகம் பொருட்படுத்துவதில்லை. ஏன்னா ஆண் அப்படி தான் என ஏற்றுக்கொள்கிறது. அதுவே ஒரு பெண் செய்யும் பொழுது அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறது.

இந்த குறும்படத்தில் ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது. உங்கள் துணைக்கான நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் நட்புடன் இருங்கள்.

அம்புட்டு தான் என் ரெண்டணா

#லக்ஷ்மி

https://www.youtube.com/watch?v=vP5dOY42DKI&t=2s

!

Blog Widget by LinkWithin