இறப்பை கொண்டாடும் சாதி வெறி!

பரமகுடி நிகழ்வின் போது நான் இணையம் பக்க வர இயலாததால் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சிக்கு எதிராக பத்திரிக்கை செய்தியையும் எதிர்பார்க்க முடியாததால் இணையத்தில் தேடி கொண்டிருந்தேன். ஒருவாறாக அறிய கிடைத்தபோது பங்காளி ராஜன் ஆல் இன் ஆல் தளத்தில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்!.

அச்சம்பவத்தின் நிகழ்வு, சூழல் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அது நிச்சயமாக சாதிக்கலவரம் இல்லை, காரணம் தாழ்த்தபட்ட சாதி என அழைக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. அது காவல்துறைக்கும், ஊர்வலம் வந்த மக்களுக்கும் நடந்த மறியல், மோதலாகி பின் கலவரமாகி கடைசியில் படுகொலையில் முடிந்திருக்கிறது, ஆனாலும் ஒரு சில ஆவணங்களை பார்க்கும்பொழுது இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தபட்ட படுகொலையோ என சந்தேகிக்க வைக்கிறது!

சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது, எதற்காக இருக்கும்? ஊர்வலத்தின் போது ரோடு பழுதுபட்டால் அதை சீரமைக்கவா?. அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும், பிற சாதியினர் வன்முறையை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை அங்கே அழைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வன்முறையை தூண்டியதே காவல்துறையை போலத்தானே தெரிகிறது!.இவ்விசயத்தில் சரியாக ஆராயப்பட்டு, படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையை சார்த்த உயர் அதிகாரி வரைக்கும் விசாரிக்கபட்டு, தக்க தண்டனை பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க!
இறந்து போன மனிதர்களுக்காக வருத்தப்படாமல் அதை கொண்டாடியிருக்கும் சாதி வெறி பிடித்த இழிபிறவிகளின் செயலை தான் இந்த பதிவில் உள்ள படத்தில் காண்கிறீர்கள், அத்தோடு நிற்காமல் அந்த பதிவின் பின்னூட்டத்திலும் தனது சாதி வெறியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!

இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.

முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், தேவர் அகமுடையார் தனிதனியா அல்லது ஒரே குழுமமா என சந்தேகமாக இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் இந்த கேடுகெட்ட சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. என் தாத்தா பெயர் மாயன், பெரியப்பா பெயர் பெரிய கருப்பன். சிறு வயதிலேயெ நகரத்துக்கு பெயர்ந்து விட்டதாலும், சுற்றிலுமான விளைவுகளால் ஊறிய பகுத்தறிவாலும் என்னால் சாதி என்ற ஒன்றை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன், மற்ற சாதியினர் அடையாளமாக பயன்படுத்துவதை போல இந்த சாதி இல்லை, இங்கே வெறி தலைவிரித்தாடுகிறது, தாழ்த்தபட்டவன் இறப்பை கொண்டாடும் கேடுகெட்ட செயலாக!.

சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!

இம்மானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத்திற்குடனான பகை இப்போது ஏற்பட்டதல்ல, அவர்கள் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம், இம்மானுவேல் தாழ்த்தபட்டவர்களின் தலைவன் ஆவதை ஆரம்பத்திலிருந்தே முத்துராமலிங்கம் விரும்பவில்லை என்பது அப்போதைய ஆவணங்கள் நமக்கு சொல்கின்றன. தலித்துகளையும் நாமே பார்த்து கொள்கிறேன், இம்மானுவேலை தலைவனாக ஏற்று கொள்ளமுடியாது என்றும், அவன் எப்படி எனக்கு சமமாக உட்காரலாம் என்றும் தமது சாதி திமிரை காட்டி பேசியவர் தான் முத்துராமலிங்கம்!

தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.
அசுரனின் இந்த பதிவில் உங்களுக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கும்!


அச்சம்பவத்திற்கு பிறகு பத்ரி எழுதிய பதிவு ஒன்றில் மற்றொரு சாதி வெறியர் தமது பதிவை இணைத்திருந்தார், அதில் இம்மானுவேல் ஒரு பொம்பளபொறுக்கி என்ற ரேஞ்சுக்கு குற்றசாட்டுகள் இருந்தன மேலும் ஒரு இடத்தில்

//காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். //

காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.

//ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிளிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர்//

வரிசையா சொல்லிட்டு இன்னொனு சொல்றார் பாருங்க, தேவர் ஐயாவின் அடைமொழிகளாம், என்னமோ அந்த வார்த்தைகளோ அந்த முத்துராமலிங்கத்திற்காக தான் உருவாக்கபட்டது போல!

புத்தகம் வெளியிட்டார்கள், என்ன இருந்தது அதில், தேவர் சாதி அழிய வேண்டுமென்றா எழுதியிருந்தது, தாழ்த்தபட்டோர் எழ வேண்டுமென்று தானே இருந்தது, சமுதாய விடிவெள்ளி என்றழைத்தால் உன் வீட்டு சூரியன் காணாமல் போய் விடுமா என்ன?, என்ன ஒரு சாதி வெறி, தாம் ஒரு ஆதிக்க சாதி என்பதை மறைக்கக்கூட தெரியாத வெள்ளந்தி போல இந்த நண்பர், அநேகமாக பலமுறை மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும், அதனால் தான் எதோ நடுநிலைவாதி போல் தம்மை அடையாளபடுத்தி கொள்ள அவர் முயச்சித்திருப்பது தெரிகிறது, ஆனாலும் பார்ப்பனியம் மறைய முடியா விசமாச்சே அய்யா!

இங்கே ஏன் பார்பனீயம் வந்தது!?

சாதிய கட்டமைப்பு, வர்ணாசிரம அடுக்கு எல்லாம் பார்பனீயத்தின் கொள்கைகள் தான். நிறவெறியை நாம் ரேஷிசம் என அழைப்பது போல் உயர்சாதி திமிரை பார்பனீயம் என்று அழைக்கிறோம். அதை முதன் முதல் பிராமணர்கள் கொண்டு வந்ததால் அவர்கள் பாப்பான் ஆனார்கள், உயர்சாதிய எண்ணம் இல்லாதவர்கள் பார்பனீயம் என்ற வார்த்தையை கேட்டு தம்மை தான் சொல்வது போல் நினைப்பதில்லை, மனதில் கொஞ்சமேனும் உயர்சாதிய திமிர் இருந்தாலும் உங்களால் தாங்கி கொள்ள முடியாது. தாம் விஷ்ணுவின் நெற்றியில் இருந்தவர்கள், பிறகு நெஞ்சிலுருந்து என வகைப்படுத்தி தம்மை மேல் சாதியாகவும் பின் வருபவனற்றை தமது அடிமை சாதியாகவும் கட்டமைத்து தமது வர்ணாசிரம சுவற்றை எழுப்பினான் பார்ப்ப்பனன்!

கீழே ஒரு தாழ்த்தபட்டவன் நிற்கிறான். அவன் தோளின் மேல், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவன், அவன் தோளின் மேல் ஒரு பிற்படுத்தப்பட்டவன் இப்படி ஒவ்வொரு அடுக்காக அமைத்து உச்சாணி கொம்பில் தம்மை அமர்த்தி கொண்டதை தான் பார்பனீயம் என்கிறோம்!, இந்த சாதிய அடுக்கை உடைத்து விட்டால் அங்கே எப்படி இருக்கும் பார்பனீயம், தம்மை உயர்சாதியாக நினைத்து கொள்ளும் மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!

தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.

”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”

எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!

அடமுட்டாப்பதருகளா, இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள். வாயில உன்னை வாந்தி எடுக்கலையே, என் எப்படி வந்தது இந்த உயர்சாதி திமிர்?

பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்!

2 ஜியும், தி.மு.கவின் பங்களிப்பும்!

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ் என்ற நண்பர், தி.மு.க ஒரு தப்பும் பண்ணல, அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்துள்ளார், அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின் வாதத்தின் படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 7000 கோடி லாபம் தான், அதனால் நட்டம் ஒன்றுமில்லை, ஆகவே தி.மு.க நிரபராதி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்த மகான்களை கொண்ட கழகம் அது.

காசுக்கு கூட்டத்தில் கத்துபவன் கூட இந்த அளவு குரல் கொடுக்க மாட்டான் என்றால் இவர்கள் எந்த அளவு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை நண்பர்கள் அறிக!, 2ஜி ஊழல் ராசாவிலிருந்து ஆரம்பிக்கபட்டதல்ல, அது தயாநிதி மாறனில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம், ஆனால் தயாநிதி மாறன் இந்தியாவின் தொலைதொடர்பு துறையை தூக்கி நிறுத்தியவர் போல் பேசி கொண்டிருக்கிறார்கள் நமது சொம்புதூக்கிகள்!

இந்தியா முழுவதும் பேச ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தயாநிதிமாறன், ஆனால் உண்மையென்ன?

அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், இழப்பீட்டை விட அதிக அளவு லாபம் பார்த்து மக்களை ஏமாற்றியர் தான் இந்த ஹைடெக் ஏமாற்றுக்காரர், இந்தியாவை போன்ற பல நாடுகள் S.T.D முறையை ஒழித்து விட்டது, அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், இந்தியாவில் தான் பக்கத்துக்கு ஊருக்கு பேசினாலும் S.T.D. இதில் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக்(unplug) பண்ணினார் என தெரியவில்லை!?அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.

சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்திடம் விற்க மிரட்டினார் என சிவசங்கரனே வாக்குமூலம் கொடுத்த பிறகும், சி.பி.ஜ தயாநிதிமாறனை சும்மா ஒப்புக்கு விசாரித்து கொண்டிருப்பது அதிகாரவர்க்கத்தின் பணம் எது வரை பாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இங்கணம் இருக்க திரும்ப திரும்ப கழக கண்மணிகளால் தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை, ஊழலின் மொத்த உருவமான தி.மு.க மற்றும் காங்கிரஸை இன்னும் ஒரு கட்சியாக இந்தியாவில் வைத்து கொண்டிருப்பது இந்திய மக்களின் பொறுமைக்கு ஒரு சாட்சி என்பேன்!இன்னும் முடியல!

என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான்.

நீங்களே சொல்லுங்கள் ஐயா, இந்த வேலையை செய்ய எனக்கு எதற்கு அந்த படித்த அன்ப்ளக், என் கடைக்கு, அதை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு லாபம் பெற்று தர முடியுமோ அதை விட்டு விட்டு, நானும் லாபத்தில் விற்றேன் பார் என்று ஒரு விளக்கம், அதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டு ஒரு கூட்டம்.

வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................

ஜெயலலிதா ஆட்சி!

அ.தி.மு.க ஆட்சிக்கு வர மிகமுக்கிய காரணமே தி.மு.க அரசின் அதிபயங்கர ஊழல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவையல்லாமல் ஜெயலலிதா எதிர்கட்சியாக செயலாற்றிய விதமே அவருக்கு இம்முறை முதல்வர் பதவியை வாங்கி தந்ததென அ.தி.மு.க தொண்டன் கூட சொல்ல மாட்டான். அந்த அளவு ஊழல் சாக்கடையில் தமிழகத்தை நனைய விட்டது தி.மு.க ஆட்சி.

ஆனால் இன்னும் கழக கண்மணிகள், அப்படியெல்லாம் இல்லை ஸ்பெக்ட்ரம் வெளீயிட்டால் அரசுக்கு 7000 கோடி லாபம் என பதிவு எழுதி சரிந்து போன தமது தி.மு.க தொண்டன் இமேஜை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார், வயாகராவால் கூட இனிமேல் அதை தூக்கி நிறுத்த முடியாதென்பதை எப்போது தான் உணர்ந்து கொள்வாரோ தெரியவில்லை.

அந்த பதிவு

பின்னூட்டத்திலேயே பலர் வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள், நண்பர் வெகு சுலபமாக தரவுகளின் அடிப்படையில் எழுதிய பதிவு இது என பின் வாங்குகிறார், ஏற்கனவே ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழல் (கவனிக்க, அவரே அது ஊழல் என ஒப்பு கொள்கிறார்) நகரத்தை தாண்டி கிராமங்களுக்கு போய் சேராது என எழுதியவர் தான் அவர். இப்படி மக்களை முட்டாளாக நினைத்து தான் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தமது அதிகாரத்தை செலுத்தி நாடெங்கும் ஊழலால் மக்களை வதத்தது அந்த அரசு!
ஸ்பெக்ட்ரம் ஊழலை பொறுத்தவரை முதல் கேள்வியே அவ்வளவு பெரிய டெண்டரை ஏன் ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு என ஒதுக்கப்பட்டது என்பது தான், அப்படி கொடுக்க முடியுமென்றால் நாட்டிற்கு எதற்கு பல கோடி செலவில் தேர்தல், யார் முதலில் ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார்களோ அவர்களே M.L.A, M.P என பதவி அளித்துவிட்டு போகலாமே, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் ஓட்டளித்து ஏமாறும் நிலை(மட்டுமா)யாவது மாறுமே!

தமிழகத்தில் ஆளும்கட்சியின் அராஜகமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழிவாங்கும் விதமாக நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள் என அனுதாபம் தேடும் கழகத்திற்கும் அவரது கண்மணிகளுக்கும் மனசாட்சி என்றால் என்னவென்றே தெரியாது போல, ஈரோடு முன்னாள் அமைச்சர் ராஜா எப்படியெல்லாம் ஆடினார் என்று உள்ளூரிலேயே இருந்து பார்த்தவன் நான், முதன்முறை சட்டமன்ற உறிப்பினர் ஆகி, முதன்முறை அமைச்சர் ஆகிய அந்த குட்டிபாப்பாவே அந்த போடு போடுதுன்னா, கழகத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெருந்தலைகள் எவ்வளவு சுருட்டியிருக்கும்.

ஜெயலலிதா ஆட்சி ஒன்றும் பொற்கால ஆட்சி கிடையாது என்பது வந்த சில நாட்களில் சமச்சீர் கல்வி விசயத்தில் உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே சொல்லி விட்டது!, சென்ற வார ஆனந்தவிகடனில் ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் தனிபட்ட செயல்முறைகளால் அந்த அளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறார் என அவரது பலவீனங்களை சுட்டிகாட்டி எழுதியிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும்!
தற்பொழுது அரசு கேபிள் வேறு இல்லத்தரசிகளின் சாபத்தை வாங்கி கொண்டிருக்கிறது, விலை குறைப்பிற்கான பேச்சுவார்த்தை என்றாலும் நெடுந்தொடர் மிஸ்ஸாகும் கவலையில் பல அவாள்கள் வீட்டிலிருந்து கூட வசவுகள் வருவதாக செய்தி!, அதற்காக அரசு கேபிளை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன் என அர்த்தமில்லை, முன்கூட்டிய திட்டமிடல் இல்லாத செயல் ஜெயலலிதாவிற்கு பழக்கமான ஒன்று என குறிப்பிடவே இதை சொல்கிறேன்!

பல கோடி மக்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் தமது சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக செய்யும் செயல் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புகளை அலசவே சொல்கிறேன்!, ஜெயலலிதா தம்மை மாற்றி கொள்ளவில்லை என்றால் மிக குறுகிய காலத்தில் சர்வாதிகாரி பட்டம் அரசியல் விமர்சகர்களிடம் வாங்கி கொள்வார்!

அப்போதும் சோ, ஜெவுக்கு சொம்பு தூக்குவார் என்பது வேறு விசயம்!


**********************

இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!

!

Blog Widget by LinkWithin